Jump to content

70/80 களில்  யாழ்ப்பாணத்தில் இருந்த  Restaurant களின் பெயர் விபரமும், விலைப் பட்டியலும்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

அது சரி உதிலை ரெலிபோனை நோண்டிக்கொண்டு நிக்கிறது நீங்களோ?

சத்தியமாய் இல்லை குசா. இந்தப் படம் முகநூலில் கிடைத்தது..

Link to comment
Share on other sites

  • Replies 56
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, MEERA said:

சத்தியமாய் இல்லை குசா. இந்தப் படம் முகநூலில் கிடைத்தது..

இதுக்கு ஏன் பிரதர் பெரிசாய் சத்தியம் எல்லாம் பண்ணிக்கொண்டு....அவ்வளவுத்துக்கு நான் என்ன நம்பாச்சாதியே? 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

இதுக்கு ஏன் பிரதர் பெரிசாய் சத்தியம் எல்லாம் பண்ணிக்கொண்டு....அவ்வளவுத்துக்கு நான் என்ன நம்பாச்சாதியே? 😂

அவருடைய படம் தான் யாழில் இருக்குதே😆  ஏன் பதறுறார் என்று தெரியவில்லை 
 

Link to comment
Share on other sites

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

60 வருடமாக இருக்கோ இந்த வெதுப்பகம்..?

👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவை தவிர எமது ஊரைச் சேர்ந்த பலரின் உணவகங்களும் இருந்தன.  சிங்கப்பூர் போசனசாலை, அருமை போசனசாலை, (சுபாஷ்  கூல்பாருக்கு பக்கத்தில் 2 உணவகங்கள் பெயர் வருகுதில்லை) மலேயன் கபே.... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 17/6/2020 at 08:25, MEERA said:

9-CEDA46-D-CA99-4119-91-D0-11390-E8467-A
 

2019 இல்

நான் எப்போ மலாயன் கபே போனாலும் உந்த மாடு முன்னுக்கு நிக்கும். மீராவின் படத்திலும் நிக்குது. 

கோயில் காளை போல, கபே காளையோ?

Link to comment
Share on other sites

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

முகப்புத்தகத்தில் நண்பர் நட்சத்திரன் செவ்விந்தியன் பகிர்ந்திருந்தார். 

 

#யாழ்ப்பாண_மொக்கங்கடையைத்தேடி
யாழ் பட்டினம் திடமிடப்படாத நகரம். அதுவாய் அமைந்த Organic city. திட்டமிட்ட நகரங்களிலில்லாத ஒரு ஐந்து சந்தி யாழில் உண்டு. அதுதான் யாழ்ப்பாண முஸ்லீம்களின் ஏரியா. 

1✍யாழ்ப்பாணத்தில், அஞ்சு லாம்படிச் சந்திக்குக் கிட்ட ' ஹமீதியா கபே' எண்டு ஒண்டு இருந்தது!
ஹமீதியா கபே எண்டு கேட்டால் ஒருத்தருக்கும் தெரியாது!  மொக்கன் கடை எண்டால், தெரியாத இளம் தலைமுறையே இருக்காது!

அங்க சில பேர் ' ஆட்டு மூளை' ஓடர் பண்ணுவினம்!
அபப, முதலாளி 'மொக்கன்' ஒரு கத்துக் கத்துவார்!

தம்பி... ஐயாவுக்கு ஒரு ' மூளை' கொடு!

 அதே போல தம்பி..  இரண்டு ' பிஸ்டேக்' கொண்டோடி வா எண்டும் சொல்லுவார்!

 பிஸ்டேக்' எண்டால் என்ன எண்டு எல்லாரிட்டையும் கேட்டுத் திரிஞ்சால்... பெரிய ஆக்களின்ர மறு மொழியும் .... அது 'பிஸ்டேக்' தான்!

அது '  Beef Stake'  எண்டு தெரிய வர ... இன்னும் இரண்டு வருசங்கள் எனக்குத் தேவைப்பட்டது! 😄
 - புங்கையூரான்.

2✍1970ல் மொக்கன் கடை புட்டு, மாட்டு ரோஸ் உண்ண மருதடிப்பிள்ளையார் ஊரான மானிப்பாயில் இருந்து நாம் செல்லும் வேளையில், கந்தன் ஆளும் நல்லூர் இந்துப் பெருமக்கள் ஆளுக்கு ஒரு குழல் புட்டை, மாட்டு ரோஸில் ஊற வைத்ருப்பர். கடைக்குள் நுழையும் போதே நெற்றியில் பூசிய நீறும் சந்தண பொட்டும் விடை பெற்றுவிடும்.
- மாதவன் சஞ்சயன்

3✍மொக்கன் கடை புட்டும் ஆட்டிறைச்சிக் கறியும் குடிக்கவும் விட்டுச் சாப்பிடவும் எலும்பு ரசமும் என்றிருந்த காலம் மாறி கொத்து ரொட்டியும் கொக்கோ கோலாவும் என இளைஞர்கள் மாற்றமடையப்பட வைக்கப்பட்டுள்ளனர்.
- nanvanthan blogspot

4✍யாழ்ப்பாணத்திலிருந்த கொழும்பு றெஸ்ரோறன்ரில் ஸ்ரவுட் பியர் பருகி நன்கு ஏறியதும் மொக்கன் கடைபோய் ரொட்டியும் றோஸ்ற்ம் புசித்து
  - கவிஞர் ஆனந்த பிரசாத் 

 5✍1970´ களில்...  "மொக்கன் கடை" யில், கோதம்ப மாவில்... 
தேங்காய்ப் பூ,  கலந்து  அவிக்கும் புட்டும், அவர்கள் வைக்கும்....
கறி, குழம்பு, சொதி.... எல்லாமே... பிரபல்யமாக இருந்தது.
அதனை... இப்ப, நினைத்தாலும்... நாக்கில், ஜலம்  ஊறும்.  மொக்கன் கடையில்.. புட்டு, சாப்பிட வென்றே...  
சனம், பின்னேரம் 7 மணியிலிருந்து, "கியூ" வரிசையில்... காத்து இருப்பார்கள். 
- தமிழ் சிறி

6(A)✍மீன்கடைகளை பார்ப்பதற்கு யாழ்ப்பாணம் நகரைக் கடந்து போகவேண்டும். அவை எமக்குத் தூரமானது . எமக்கு அருகிலே இஸ்லாமியர்கள் நடத்திக்கொண்டிருந்த கடைகளே நடந்து போய் சாப்பிட்டு வர உதவியது . அதிலும் ஒரு கடை அக்காலத்தில் ஐந்து லாம்படி பகுதியில் இருந்தது.ஆரம்பத்தில் ஹமீதியா கபேயாக இருந்தது .அதனை மொக்கங் கடை என்போம். ஏதோ ஒரு நாள் அங்கு பணத்தை குறைத்து வாங்கியதால் அந்தப்பெயர்ச் சொல்லில் அழைத்து, அந்தப் பெயரே பிற்காலத்தில் அதன் விளம்பரப் பலகையிலும் வந்தது . அங்கு தரப்பட்ட மாட்டுக் குருமா மூளை மற்றும் பிஸ்ரேக் என்பன எமது வாழ்கையில் கண்டதும் தின்றதும் அக்காலத்திலேதான்.
- Dr. Noel Nadesan 

6(B)✍நான் பதினொராவது வகுப்பில் இந்துக்கல்லூரியில் படித்தகாலத்தில் எனது காதல் தொடங்கியது. எனது காதலியை பார்த்துவிட்டு எனது நண்பனுடன் மொக்கன் கடை எனப்படும் பிரசித்தி பெற்ற கடையில் அன்று இரவு சாப்பிட்டேன். நான் மட்டும் பிஸ்கேக் எனப்படும் பெரிய மாட்டிறச்சி துண்டை சாப்பிட்டேன். சாப்பிடும்போதே அந்த இறைச்சி வெண்டைக்காயின் பசைபோல் இழுபட்டதும் எனக்கு அது பழைய இறைச்சி என்பதை உணர்த்தினாலும் அந்த இறைச்சியின் சுவையால் அதனைத் தவிர்க்காமல் சாப்பிட்டேன்.

ஒரு கிழமையில் எனக்கு காய்ச்சல் வாந்தி என்று தொடங்கி கடுமையானதால் அக்காலத்தில் மூளாய் வைத்தியராக இருந்து ஓட்டுமடத்தில புதிதாக நேர்சிங்ஹோம் நடத்திய டொக்டர் கெங்காதரனது வைத்தியசாலையில் சேர்கப்பட்டேன். தைபோயிட்- சல்மனல்லா கிருமியால் உருவாகியதாக கண்டுபிடிக்கப்பட்டது. மொக்கன்கடை சாப்பாடே அந்த கிருமியின் உறைவிடம். நான் இரண்டு கிழமைகள் வைத்தியசாலையில் வைத்து பராமரிக்கப்பட்டேன்.
 - Dr.Noel Nadesan

7✍“மொக்கன்” கடையா? “மொக்கங்” கடையா? ஹமீதியா கபேயா? என்பதே கேள்வியாக இருந்தது. சிறீ லங்கா ஒலிபரப்புக் கூட்டு ஸ்தாபன வானொலியின் பிரபல அறிவிப்பாளர் அப்துல் ஹமீட் கூறும் பாணியில் “மொக்கொங் (Mokong)” கடை என்பதே சரியான பதில்.

கிரிதரனின் தனது கூகுள் தேடலில் பெற்ற விடயங்களை ஆகஸ்ட் 11, 2017 பகிர்வின் மூலம் தெரிவித்த சில விடயங்கள் இந்தக் கடையின் பெயரை நிலைநிறுத்தும் விடயங்களைக் கொணர்ந்தது. தேனீ இணையத்தளத்தில், தாயகம் (கனடா) ஆசிரியர் குருஷ்ஷேவ் “மொக்கங்” எனப் பாவித்தார் எனக் கூறப்பட்டது.  அதேவேளை புங்கையூரன் “ஹமீதியா கபே” என ஒரு கடை இருந்தது என்றாலும், அப்பெயரைச் சொன்னால் எவருக்கும் தெரியாது, “மொக்கன்” கடையென்றால் தெரியாத இளம் தலைமுறையே கிடையாது என்று அடித்துச் சொல்லியிருந்தார். அவர் மேலும் சில கருத்துக்களைத் தொடர்ந்து கூறியிருந்தார். அதையிட்டு அந்தக் கடையிலே ஆட்டு மூளை ஓடர் பண்ணி உண்பவர்கள் செல்வதால் மொக்கன் கடை எனப் பெயர் வந்திருக்கலாம், அங்கு மொக்கன்கள் சென்று மூளை வாங்கி உண்டு தம்மை புத்திசாலி ஆக்கியிருக்கலாம் என்றெல்லாம் விளையாட்டான கருத்துப் பரிமாற்றங்கள் ஏற்பட்டன. சுவி என்பவர் யாழ் இணையத்தளக் கருத்துக்களத்தில், அஞ்சுமுச்சந்தியில் ரொட்டி ரோஸ் என்றால் பிளவ்ஸ், பிட்டும் ஆனமும் என்றால் மொக்கங் கடை என்று கூறியிருந்தாராம். அந்த உணவகத்தின் பெயர் மொக்கன் கடை அல்ல என உடன்பட்ட வேளையில், பெயர் “மொக்கிங்” இல்லை “மொக்கங்” என்றெல்லாம் கருத்துப் பரிமாறப்பட்டது. “மொக்கங்” என்பதை அந்தக் கடையின் கொத்து ரொட்டிக்காகச் சென்ற கிரிதரன், பெயர்ப் பலகையில் பார்த்ததாக நினைவில் இருக்கறதென தனது பகிர்வில் கூறியிருந்தார். இருந்த போதும் கலை மாக்ஸ் (Kalai Marx) எனும் புத்திசாலி, பல நம்பத் தகுந்த விபரங்களைப் பரிமாறியிருந்தார். அவரது புத்திசாலித்தனம் அவர் பெயரிலிருந்துதான் வந்திருக்குமெனப் புரிந்து கொண்டேன். அவரது கருத்துப் பரிமாற்றத்தை வாசித்ததும், சந்தியின் பெயர் அஞ்சுமுச்சந்தி என நிலைநிறுத்திக் கொண்ட எனக்கு, “மொக்கங்” என்ற பெயருடன் அப்படியே நிலைநிறுத்திக் கொள்ள உடன்பாடில்லை. நான் வேறோர் நண்பர் மூலம் சிறீ லங்காவின் மலேய் இனத்தவர் பற்றி பெற்றுக் கொண்ட மின்னஞ்சலில் அறிந்த தகவல்களுக்கு ஒப்பீடான சில தகவல்களை கலை மாக்ஸ் பகிர்ந்திருந்தார். இத்தகவல்கள் சில சிறீ லங்காவின் மலேய் இனத்தவர் பற்றிய விபரங்களுடன் குறிப்பிடப்பட்டதுடன் சிறீ லங்காவின் முஸ்லிம்களுக்கும் மலேய் இனத்தவருக்கும் நெருங்கிய தொடர்பு இருந்திருக்குமெனத் தோற்றியது. ஆனால் கலை மாக்ஸ் அந்தக் குறிப்பிட்ட கடையின் பெயர் இந்தோனேஷியாவில் ஒரு இடத்தைச் சார்ந்தது எனக் கூறியது, என்னை கூகுள் தேடலுக்கு உந்தியது. அதன் விளைவு இந்தோனேஷியாவில் ஜகற்றா (Jakarta) எனும் அதன் தலைநகரிலிருந்து 1197 கிலோமீட்டர் கிழக்கே “மொக்கொங் (Mokong)” என்றோர் இடமுள்ளது என அறிய உதவியது. “மொக்கொங்” எனும் பெயர் தமிழ் மொழிபெயர்ப்பில் “மொக்கங்” என்று மருவியிருக்கிறது எனத் திடமாகக் கூறலாம்.
 - ஜானகி கதிரேசன்

8✍யாழ் நகரில் மானிப்பாய் வீதி வழியாகச் செல்லும் போது ஐந்து சந்தி வருகிறது.
அவ் இடத்தில் ஐந்து வீதிகள் ஒன்றாகச் சந்திக்கிறது.

அந்தச் சந்தியை ஐந்துமுச் சந்தி எனத் தவறான சொல் பிரயோகத்தில் அழைக்கும் மூத்த தலைமுறையினர் சிலரும் உள்ளனர்.

அதாவது ஐந்து மூன்று சந்திகள் எனும் சொல் தவறானது. ஐந்து முகச்சந்தி என்றால் சரியான கருத்தைத் தரும்.
- வேதநாயகம் தபேந்திரன்

https://www.facebook.com/100002317331150/posts/3557862810967595/?d=n

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.