Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தேசிய முச்சக்கரவண்டி சங்க தலைவர் படுகொலை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தேசிய முச்சக்கரவண்டி சங்க தலைவர் படுகொலை

PSX_20200611_105543-960x539.jpg?189db0&189db0

 

கொழும்பு – மிரிஹான பகுதியில் வைத்து நேற்று (10) இரவு நாடாளுமன்ற வேட்பாளரும், இலங்கை சுய தொழிலாளர் தேசிய முச்சக்கரவண்டி சங்கத்தின் தலைவருமான சுனில் ஜயவர்த்தன (53-வயது) குழு ஒன்றினால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

மிரிஹான பகுதியிலுள்ள வாகனங்களை குத்தகைக்கு விடும் நிறுவனமொன்றில் முச்சக்கரவண்டி ஒன்றை விடுவிப்பது தொடர்பில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் இந்த படுகொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரான இவர், முச்சக்கரவண்டி சாரதிகளை பாதிக்கும் “லீசிங் மாபியா” தொடர்பில் பல்வேறு விமர்சன காணொளிகளை வெளியிட்டு வந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இவரது கொலை சம்பவம் தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

https://newuthayan.com/தேசிய-முச்சக்கரவண்டி-சங்/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தேசிய முச்சக்கரவண்டி சங்கத்தின் தலைவர் கொல்லப்பட்டது ஏன்? காரணத்தை விளக்கும் சஜித்

கொரோனா காலத்தில் அரசாங்கம் வழங்குவதாக அறிவித்த லீசிங் கட்டண சலுகை உரிய வகையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இன்று (11) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.

அந்த சலுகை உரிய வகையில் நடைமுறைப்படுத்தப்படாமையின் காரணமாகவே லீசிங் நிறுவனங்கள் இன்று வாகனங்களை கையகப்படுத்தும் நிலைமை உருவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதற்கு எதிராக குரல் கொடுத்தமையாலேயே இன்று இலங்கை தேசிய முச்சக்கரவண்டி சங்கத்தின் தலைவர் சுனில் ஜயவர்தனவின் உயிர் பிரிந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் வழங்குவதாக அறிவித்த லீசிங் கட்டண சலுகை உரிய வகையில் நடைமுறைப்படுத்தப்படாமையே சுனில் ஜயவர்தனவின் உயிரிழப்புக்கு பிரதான காரணமாக அமைந்தாகவும் அவர் கூறினார்.

லீசிங் கட்டண சலுகை வழங்கப்படும் என அரசாங்கம் தெரிவித்திருந்தாலும் அது குறித்த தெளிவுபடுத்தல் லீசிங் நிறுவனங்களுக்கு வழங்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

அரசாங்கம் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு கனவு உலகத்தை காண்பித்து அரசியல் இலாபம் பெற்றுக்கொள்ள முயற்சித்தாகவும் அவர் கூறினார்.

இவ்வாறு ஒருவரை வெட்டவெளியில் கொலை செய்ய முடியுமா? மக்களுக்குள்ள பாதுகாப்புக்கு என்னவாயிற்று? எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

இன்று ஆர்பாட்டங்களை நடத்தினால் தாக்குதல்கள் நடத்தப்படுவதோடு பெண்கள் துஸ்பிரயோக சம்பவங்களும் அதிகரித்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.

https://www.ibctamil.com/srilanka/80/145012?ref=home-imp-parsely

 

  • கருத்துக்கள உறவுகள்

லீசிங் மாபியாக்களால் கொல்லப்படும் முன், சுனில் இறுதியாக கூறியது என்ன..?

- ஹரிணி செல்வராஜ் -
 
இலங்கையிலுள்ள அப்பாவி மக்களை மாபியா அல்லது பாதாள உலக கோஷ்டிகளிடமிருந்து காப்பாற்றுமாறு இலங்கை சுயதொழிலாளர்களின் தேசிய முச்சக்கரவண்டி சங்கத்தின் தலைவர் சுனில் ஜயவர்தன இறுதியாக முகநூல் நேரடி ஒளிபரப்பு ஊடாக ஜனாதிபதியிடம் வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.
 
அதேநேரம், இந்த முகநூல் ஊடாக சுனில் ஜயவர்தன என்ன கூறினார்? இதோ விபரம்..
 
'கொரோனா பிரச்சினையிலிருந்து நாடு விடுபட்டு , முச்சக்கரவண்டியொன்றை பயன்படுத்துவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னரே சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. பிக் மீ, ஊபர் போன்றவற்றிற்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டது. அரசாங்கமும் பிக் மீ, ஊபர் ஆகியவற்றில் செல்லுமாறு கூறுகின்றது. ஜனாதிபதி அவர்களுக்கு இது தெரியவில்லையா?
 
கௌரவத்திற்குரிய ஜனாதிபதி அவர்களே!... நீங்கள் மக்களுக்கு லீசிங் நிவாரணமொன்றை வழங்குவதாக ஏமாற்றி, அந்த ஏமாற்றத்திற்கு மக்கள் சிக்குண்டுள்ளனர். மிரிஹான பகுதியில் உங்கள் வீட்டிற்கு முன்பாக இந்த நிறுவனம் உள்ளது.
 
முச்சக்கரவண்டியை செலுத்துவதற்கான அனுமதி வழங்கப்பட்டு ஒரு வார காலம் கூட கிடையாது. சிறு தொகையை கூட உழைக்க முடியாத நிலையில் இவர்கள் உள்ளனர். 50 அல்லது 100 ரூபா என உழைத்து தமது குடும்பத்தை நடத்தி செல்லும் இந்த சந்தர்ப்பத்தில் இந்த இடத்தில் அப்பாவி ஒருவரின் வாகனம் சூறையாடப்பட்டுள்ளது. பாதாள உலக கோஷ்டி உறுப்பினர்களை பயன்படுத்தி, அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தி வாகனங்களை சூறையாடிச் செல்கின்றனர். அந்த நடைமுறையொன்று தற்போது செயற்பட்டு வருகின்றது. நீங்கள்
 
பாதாள உலக நடவடிக்கைகளை இல்லாது செய்ய முயற்சிக்கின்றீர்கள். பாதாள உலக செயற்பாடுகள் லீசிங் நிறுவனத்திற்குள்ளேயே செயற்படுகின்றன. லீசிங் செயற்பாடுகளை முன்னெடுப்பவர்களே பாதாள உலக கோஷ்டித் தலைவர்கள். சிறு அளவில் செயற்படுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுத்து போதுமானதாக இருக்காது. இவ்வாறானவர்கள் மீதே நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறானவர்களை கொலை செய்து, தொங்க விட வேண்டும். பாதாள உலக நடவடிக்கைகளே அப்பாவி மக்களை சூறையாடுகின்றது.
 
கௌரவத்திற்குரிய ஜனாதிபதி அவர்களே! போதைப்பொருள் பாதாள நடவடிக்கைகளை விடவும், அப்பாவி மக்களை சூறையாடும் பாதாள உலக செயற்பாடுகளே மோசமானது. இந்த நபருக்கு குடும்பத்தை கொண்டு செல்ல முடியாதுள்ளது. பாடசாலை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப முடியாதுள்ளது. இவர்களுக்கு உணவு உட்கொள்ள முடியாதுள்ளது. இந்த நாட்டிற்குள் இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. உங்களின் லீசிங் நிவாரணத்திற்கும், அவர்களுக்கும் தொடர்பு கிடையாதாம். இவர்களுக்கு பல்வேறு கட்டளைகள் இருக்கின்றனவாம். அவற்றையே இவர்கள் செயற்படுத்துகின்றார்களாம்.
 
ஜனாதிபதி அவர்களே. நாம் தற்போது ஜனாதிபதி செயலகத்துடன் கதைத்தோம். அங்குள்ள விடயத்திற்கு பொறுப்பான அதிகாரியை தெளிவூட்டினோம். அவர் மீண்டும் எனக்கு அழைப்பை மேற்கொண்டு, ஜனாதிபதி செயற்பாடுகளை முன்னெடுக்கும்
 
குழுவிற்கு இந்த விடயத்தை தெளிவூட்டுவதாக அவர் உறுதியளித்தார். இவ்வாறான முறையற்ற விடயங்கள் இந்த நாட்டிற்குள் செயற்படுத்தப்படுகின்றன. நாடு தற்போதே திறக்கப்பட்டுள்ளது. அதேநேரம் பாதாள உலக செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படுகின்றன. வாகனங்களை சூறையாடப்படும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன.
 
மதிப்பிற்குரிய ஜனாதிபதி அவர்களே, இந்த விடயம் தொடர்பில் உடனடியாக தலையீடு செய்யுங்கள். அப்பாவி மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் உடனடியாக தலையீடு செய்யுங்கள். இல்லையென்றால், இந்த நாட்டிலுள்ள எட்டு லட்சத்து 50 ஆயிரம் வாகனங்கள் உள்ளன. அவற்றில் 99 வீதமானவை லீசிங் மூலம் பெற்றுகொள்ளப்பட்டுள்ளன. இந்த லீசிங் செய்த அனைவரும் இந்த பிரச்சினையை தற்போது எதிர்நோக்கி வருகின்றனர். இந்த மூன்று மாத காலத்தில் இலங்கையிலுள்ள அனைவருக்கும் லீசிங் கொடுப்பனவு செலுத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. பணம் செலுத்த முடியாத நிலையிலுள்ள வாகனங்களே இன்று இலங்கையில் உள்ளன. இந்த அனைத்து வாகனங்களையும் லீசிங் நிறுவனங்களிடம் ஒப்படைத்தால் பிரச்சினை முடிவடையும். தயவு செய்து ஜனாதிபதி இந்த விடயத்தில் தலையீடு செய்யுங்கள். இந்த மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் தொடர்பில் அவதானம் செலுத்துங்கள். செல்வந்தர்களின் வாகனங்களின் மீது இவர்கள் கை வைக்க மாட்டார்கள். முச்சக்கரவண்டி போன்ற சிறு வாகனங்களின் மீதே கை வைக்க ஆரம்பித்துள்ளார்கள். மக்கள் மீது தாக்குதல் நடத்தி, திட்டி, வாகனங்களை கையகப்படுத்துகின்றனர்.
 
இந்த விடயம் தொடர்பில் உங்களின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளேன். இன்று அல்லது நாளை இந்த பிரச்சினைக்கு தீர்வை காணுங்கள். இந்த தகவலை நாம் எடுத்துகொண்டு நாளை ஜனாதிபதி, உங்களின் வீட்டு முற்றத்திற்கு வர போகின்றோம். இந்த நிறுவனம் உங்களின் வீட்டுக்கு அருகிலேயே உள்ளது. உங்களின் வீட்டு முற்றத்திற்கு குழுவாக நாம் நாளை வருகைத் தந்து எதிர்ப்பை வெளியிடவுள்ளோம். மிக்க நன்றி.
- என்று கூறியிருந்தார் சுனில்

  தமிழன்
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொல்லப்பட்ட சுனிலுக்கு வவுனியாவில் அஞ்சலி!

 

Sunil-Jeyawardena-Obituary-Event-in-Vavuniya-2-768x576-1.jpg?189db0&189db0

படுகொலை செய்யப்பட்ட சுயதொழில் முயற்சியாளர்களின் தேசிய முச்சக்கரவண்டி சங்கத் தலைவர் சுனில் ஜயவர்தனவிற்கு வவுனியாவில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

வவுனியா முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் ரவீந்திரன் தலைமையில் இன்று (13) இடம்பெற்ற குறித்த அஞ்சலி நிகழ்வில் சுனிலின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி, சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த அஞ்சலி நிகழ்வில் முச்சக்கர வண்டிகள் சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

அத்துடன் வவுனியா மாவட்டத்தில் உள்ள ஏனைய முச்சக்கரவண்டி தரிப்பு நிலையங்களிலும் குறித்த அஞ்சலி நிகழ்வு இன்று மாலை அனுஷ்டிக்கப்பட்டிருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த குடும்ப ஆட்சியில்.. மனிதப் படுகொலைகள் இல்லையென்றால் தான் ஆச்சரியப்படனும். இதெல்லாம் சகஜமப்பா அவிங்களுக்கு. இனப்படுகொலையையே செய்தவங்களுக்கு... இது யுயுபி. 

  • கருத்துக்கள உறவுகள்

சுதந்திர சதுக்கத்தில் ஒன்று, இது இரண்டாவது. வெள்ளை வான் டிரிப் எல்லாம் வேஸ்ட். முடிவே பண்ணிடாங்க... ஆனாலும் தேர்தலுக்கு முன்னர், அவசரப்பட்டு.... ம்...ம்... அண்ணன் மகந்தாவுக்கும் ஆப்படிக்காட்டி, மூன்றில் இரண்டு கிடைச்சோன்ன, தம்பியை வீட்ட அனுப்பி, நாமலை கொண்டு வர அலுவல் பார்த்துடுவார்.

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, விவசாயி விக் said:

நாமல் உண்மையில் இப்படியான அலுவல் செய்ய உகந்தவர்.  அவருக்கு தமிழ் மக்களிடம் குறிப்பாக இளையோரிடம் நன்மதிப்பு உள்ளது.  ராஜபக்சவும் ஒரு ராஜதந்திரி குடும்பத்திற்குள் ஒப்பிடும்போது நல்லவர்.  

இவர்களால் தான் சித்தப்பா பதவிக்கு வந்தவர்.  சித்தப்பா போனை தூக்கி வைத்துவிட்டு இரவு இரவா கொலை செய்யும் ஒரு சைக்கோ!  அதுவும் சின்ன சித்தப்பாவின் கூட்டாளிகள் சுத்தமாக சரியில்லை.  பெரியப்பா கூட்டம் அவரை முடக்க பார்க்கிறார்கள்.  

இன்னும் நிறைய சூப்பர் சுட சுட பூராயம் வரப்போகிறது.  

மீண்டும்.... கொலை யுதிர் காலம்...

இம்முறை சிங்கள பகுதிகளில் மட்டும்....

சிலவேளைகளில் முஸ்லீம் பகுதிகளிலும் நடக்கும்...

நமக்குத்தான் இழப்பதற்கு எதுவும் இல்லை... கோவணத்தை கழட்டி கொடுத்து விட்டு போய் கிட்டே இருப்பமில்ல. :grin:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Nathamuni said:

மீண்டும்.... கொலை யுதிர் காலம்...

இம்முறை சிங்கள பகுதிகளில் மட்டும்....

சிலவேளைகளில் முஸ்லீம் பகுதிகளிலும் நடக்கும்...

நமக்குத்தான் இழப்பதற்கு எதுவும் இல்லை... கோவணத்தை கழட்டி கொடுத்து விட்டு போய் கிட்டே இருப்பமில்ல. :grin:

சரியாக சென்னீர்கள், கோவணத்தையும் விடமாட்டார்கள்

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, உடையார் said:

சரியாக சென்னீர்கள், கோவணத்தையும் விடமாட்டார்கள்

மூன்றாவது கொலை நடந்துள்ளது.

கொழும்பில் உள்ள தேசிய வைத்திய சாலையில், பெரும் கொள்ளை ஒன்றை கண்டு பிடித்த, போலீஸ்க்காரர் வாகனத்தினால் மோதுண்ட நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, இன்று மரணமானார்.

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு மருத்துவமனையில் இடம்பெற்ற 79 இலட்ச கொள்ளையை முறியடித்த போலீஸ் கான்ஸ்டபிள் வாகன விபத்தில் உயிரிழப்பு.

PSX_20200614_110347.jpg

கடந்த வாரம் கொழும்பு தேசிய மருத்துவமனையில் இருந்து 7.9 மில்லியன் கொள்ளையடிதத நபரை விரட்டி சென்று பிடித்த போலீஸ் கான்ஸ்டபிள் , 11 ஆம் திகதி இடம்பெற்ற டிபண்டர் விபததில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்தார்.

 

 

22 வயதுடைய சித்தும் அழகப்பெரும எனப்படும் குறிப்பிட்ட போலீஸ் கான்ஸ்டபிள் குறிப்பிட்ட கொள்ளை சம்பவத்தின் போது தைரியமாக செயற்பட்டு அதனை முறியடித்து அதில் முக்கிய பங்கு வகித்த ஒருவர்.

https://www.madawalaenews.com/2020/06/79_14.html

மைத்திரி காலத்தில் விபத்து என்று போட்டுத்தள்ளினார்கள் இவரின் காலத்தில் அடையாளம் தெரியாத நபரினால் கொலை அவ்வளவுதான் வித்தியாசம்.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, colomban said:

22 வயதுடைய சித்தும் அழகப்பெரும எனப்படும் குறிப்பிட்ட போலீஸ் கான்ஸ்டபிள் குறிப்பிட்ட கொள்ளை சம்பவத்தின் போது தைரியமாக செயற்பட்டு அதனை முறியடித்து அதில் முக்கிய பங்கு வகித்த ஒருவர்.

இவரை வளர விட்டால் தங்கள் கொள்ளைகளையும் ஒருநாள் முறியடித்து விடுவார் என்று சம்பந்தப்பட்டவர்கள் நினைத்திருக்கலாம். மங்களவோடு சேர்ந்து கோத்தாவுக்கு எதிராக அதிருப்தியை வெளியிட்ட ஒரு அரசியல்வாதி; பெயர் மறந்து போச்சு. பின்னாளில்  வாகன விபத்தில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.