Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

த‌மிழ‌ர்க‌ளின் க‌லாச்சார‌ம் எத‌ நோக்கி போகுது , யாழ் க‌ள‌ உற‌வுக‌ளின் ப‌தில‌ எதிர் பார்த்து

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சாமானியன் said:

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று யாரோ வேலை வெட்டி இல்லாத எவரோ சொல்லி சென்றதை சிறிய வயதில் படித்த ஞாபகம் .

🤣

எனது நண்பர் ஒருவர் இது பற்றி அர்த்தம் சொல்வார் உலகம் முழுவதும் குடியேறுவோம் குடியேறும் இடம் எல்லாம் கோயில்கள் கட்டுவோம்.

  • Replies 161
  • Views 13.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

விடுதலைப்புலிகளின் கட்டுப்பாடுகள்,ஒழுங்கங்கள்மற்றும் குற்றச்செயல் தண்டனைகளை சகிக்க முடியாதவர்கள் அவர்களையும் தலிபான்கள் என்றார்கள்

புலிகள் பெண்களின் ஆளுமைகளை ஊக்குவித்து பெண்களையும் ஆண்களுக்கு நிகராக பல சாதனைகளைச் செய்ய ஊக்குவித்தவர்கள் தனியே போர்க்களத்தில் மட்டும் இல்லாமல் எல்லா துறைகளிலும் பெண்கள் புலிகள் காலத்தில் மிளிர்ந்தார்கள். எனவே புலிகளையும், பெண்கள் படிப்பதையே தடுத்து, வீட்டுக்குள் அடைத்துவைத்து பிள்ளைபெறும் இயந்திரங்களாக மாத்திரம் பார்க்கும் தலிபான்களையும் குழப்பிக்கொள்ளவேண்டாம்.

30 - 40 வருடங்களாக மேற்கத்தைய நாடுகளில் இருந்து, மேற்கத்தைய நாடுகளின் கலாச்சாரம், வரலாறு எல்லாம் தெரியும் என்று நினைத்துக்கொண்டு, பெண்களை ஆண்களுக்கு அடங்கி ஒடுங்கவும், பெண்களை ஆளுமையற்றவர்களாக நினைக்கும் சிந்தனைகொண்டவர்களும்தான் தமிழ் தலிபான்கள். ஆனால் இப்படி நினைப்பவர்களின் சகோதரிகள், பெண்குழந்தைகளே தமது ஆளுமையைக் கண்டுகொள்வார்கள். தமிழ் தலிபான்களிடம் இருந்து தம்மை விடுவித்துக்கொள்வார்கள்.

தாயகத்தில் போனாலும் அங்கு 80களுக்கு முன்னைய கட்டுப்பெட்டிக் கலாச்சாரம் காணாமல்போய்விட்டதை அறிந்துகொள்ளலாம். ஆனால் தமிழ்த் தலிபான்கள் அங்கு போனாலும் புறுபுறுக்க மட்டுமே முடியும். அதனால்தான் இந்த தமிழ்த் தலிபான்கள் காலவோட்டத்தில் கரைந்துபோவார்கள் என்று சொன்னேன்.

12 hours ago, கிருபன் said:

நான் கூறவந்த அதே போன்ற கருத்தைக் கூறியுள்ளீர்கள் கிருபன் .

விடுதலைப் புலிகளின் மகளீர் பிரிவின் வெளியீடான “சுதந்திப் பறவைகள்” ஏட்டில்  தமிழ்ப் பெண்கள் கலாச்சார சமய ரீதியில் ஒடுக்கப்பட்ட நிலைகள் பற்றியும் அதிலிருந்து மீண்டெடுவது குறித்தும் பல கட்டுரைகள் வெளிவந்தன. ஆனால் இங்கு தீவிர புலிகள் ஆதரவு என்று பெரிதாக படம் காட்டிக்கொள்ளும் பலர் பெண்களை பற்றி  பழைய காலத்துக்கு  ஒவ்வாத  பத்தாம் பசலி கொள்கையோடு இருப்பது பெரிய முரண்பாடுதான்.  

அவரவருக்கு உரிய அறிவையும் விழிப்புணர்வையும்  கொடுத்தால் போதும் அவர்கள்  தங்களைப் பாதுகாக்கும் வல்லமையை தாங்களாகவே வளர்ததுக கொள்ளுவார்கள்.  

  • கருத்துக்கள உறவுகள்
On 20/6/2020 at 12:56, பையன்26 said:

விசுகு அண்ண‌ , அந்த‌ பாட‌க‌ர் க‌ண் மூடி விட்டார் இனி அவ‌ரை ப‌ற்றி எழுத‌ வேண்டாம் , அவ‌ர் பாடின‌ பாட‌ல்க‌ளை சின்ன‌னில் நேரில் பார்த்து இருக்கிறேன் ,

யூட் ஜ‌யா ம‌ற்றும் ர‌தி அக்கா சொல்லித் தான் என‌க்கே தெரியும் ,

அவ‌ர் பாடிய‌ பாட‌ல் ( எம்மை நினைத்து யாரும் க‌ல‌ங்க‌க் கூடாது )

பின்னாளில் ம‌கிந்தாவுக்கும் பாட்டு பாடினார் என்று நினைக்கும் போது வேத‌னையாய் இருக்கு 

அவர் மகிந்தவுக்கு பாடவில்லை 
தேவாவின் கானங்கள் என்று டக்லஸுக்கு பாடினார்....... என்று கூற முடியாது 
அவர்களை அவமானம் செய்ய இப்படியான கேவலம் எல்லாம் 
தமிழ் துரோகிகள் செய்து சுய இன்பம் கண்டு மகிழ்ந்தனர். 

  • கருத்துக்கள உறவுகள்
On 19/6/2020 at 08:56, tulpen said:

பல்தேசிய இனங்கள் சேர்ந்து வாழும் நாடுகளில் கலாச்சார பரம்பல் ஏற்படுவது இயற்கை. இந்த உலகில் வாழும் மற்றய மனிதர்களைபோல சாதாரண மனிதர்களான தமிழர்களிலும் அந்த பரம்பல் ஏற்பட தான் செய்யும். இந்த இயல்பு என்ற ஜதாரத்தத்தை மறுத்து எனது கலாச்சாரம் தான் உயர்ந்த‍து மற்றதெல்லாம் தாழ்ந்ந்து என்று கூறும் அறிவிலிகள் எல்லா சமூகத்திலும் உள்ளார்கள் தான். குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டும் சிலர் எமது  கலாச்சாரம் தான் உசத்தி என்று கூறி மற்றயவர்களை தாழ்த்துவதும் அதை வாசித்தது மற்றவர்கள் புளகாங்கிதம் அடைவதும் அதையே எல்லோரும் கூறவேண்டும் என்று எதிர்பார்ப்பதும்  இந்த பாடலை ஞாபகப்படுத்தகிறது

 "ஒரு பொய்யாவது சொல் கண்ணே உன் காதலன் நான் தான் என்று அந்த சொல்லில் உயிர்வாழ்வேன்".

இப்படியே எனது கலாச்சாரம் தான் உலகில் உயர்ந்தது என்ற பொய்யை கேட்டு மாயையில் வாழவேண்டியது தான். 

ஆனால் மனித வாழ்வுக்கு எது மேம்பானது? எது கேடுகள் ஆனது?
என்று ஒரு புள்ளி இருக்கிறது அல்லவா? 

"மேலை நாட்டு கலாச்சாரம்" இதுவே என்னை பொறுத்தவரை கேள்விக்கு உள்ளளனது 
கலாச்சாரமே இல்லாததுதான் மேலைநாடு 

ஜனநாயக அரசில் என்றாலும் 
ஒரு பழம்பெரும் கலாச்சாரம் என்றாலும் 
அதை தன்னகத்தே கொண்டவர்கள் கீழை நாடவர்கள்தான் 
அமெரிக்க என்றே நாடே 17ஆம் நூற்றாண்டு பின்னானது 
ஐரோப்பா அமெரிக்க சினிமா ஊடாக உட்புகுவதை உள்வாங்கியது 

ரோம ராஜ்ஜியம் கத்தோலிக்க மதம் சார்ந்து பழமை பட்டு இருந்ததே தவிர 
குறிப்பிட்டு ஒரு கலாச்சார பின்னணியை கொண்டிருக்கவில்லை.

தமிழர்கள் இப்போ குழப்பவாதிகளாக இருப்பதுதான் பிரச்சனை தவிர 
கலாச்சாரத்தில் மேன்மை கொண்டவர்கள் என்பது என் தனிப்பட்ட எண்ணம் 
மாற்று கருத்து இருப்பின் அது ஆக்கபூர்வன்மைத்தாக இருந்தால் ஏற்றுக்கொள்வதில் எனக்கு 
எந்த சிக்கலும் இல்லை.

எம்மை பொறுத்தவரை எமக்கு தமிழே தெரியாது 
இப்படியான ஒரு நிலையில் நாம் வாதிடுவதுதான் தவறு 
ஆனால் மொழிகளில் தமிழுக்கு நிகராக வேறு மொழி இல்லை என்பது 
தற்பெருமை இல்லை ..........இது உலக மெய்.  ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் முன்பு 
சங்கம் வைத்து வளர்ந்த மொழி தமிழ் .....ஒவ்வரு வார்த்தையும் இலக்கணம் உடையது 
நாம் படிக்கவில்லை என்பதால் அதை மறுக்க முடியாது.
மற்ற மொழிகளை நாம் தளத்துவதுதான் மடமை ........ ஆனாலும் தமிழ் உறவானது என்று 
கற்று அறிவதில் தவறு இல்லையே?  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Maruthankerny said:

அவர் மகிந்தவுக்கு பாடவில்லை 
தேவாவின் கானங்கள் என்று டக்லஸுக்கு பாடினார்....... என்று கூற முடியாது 
அவர்களை அவமானம் செய்ய இப்படியான கேவலம் எல்லாம் 
தமிழ் துரோகிகள் செய்து சுய இன்பம் கண்டு மகிழ்ந்தனர். 

நீங்க‌ள் சொல்லுவ‌து ச‌ரி என்று ப‌டுது அண்ணா ,

யூட் ஜ‌யா தான் எழுதி இருந்தார் ம‌கிந்தாவுக்கும் பாட்டு பாடினார் என்று ,

எம் தாய‌க‌ பாட‌ல்க‌ளுக்கு இசை அமைத்த‌ இள‌ம் இசை அமைப்பாள‌ர் ( இசைப்பிரிய‌ன் அண்ணா கூட‌ பாட‌க‌ர் சாந்த‌ன் அண்ணாவுக்கு ஒரு சில‌ பாட‌ல்க‌ளை த‌ன் இசை மூல‌ம் வெளியிட்டு இருந்தார் , 

நான் பார்த்த‌ ம‌ட்டில் ஈழ‌ த‌மிழ‌ர் ம‌ன‌ங்க‌ளில் சாந்த‌ன் அண்ணா ந‌ல்ல‌வ‌ர் போல் தான் இட‌ம் பிடித்து இருக்கிறார் , அவ‌ர் இற‌ந்த‌ போதும் அவ‌ரின் பாட‌ல்க‌ள் ப‌ற்றி தான் அதிக‌ம்  பேச‌ப் ப‌ட்ட‌து 🙏

1993ம் ஆண்டு எங்க‌ளின் பாட‌சாலையில் வ‌ந்து தாய‌க‌ பாட‌லை பாடினார் , அப்ப‌ தான் சாந்த‌ அண்ணாவை நேரில் பார்த்தேன் ,

பிற‌க்கு 1996ம் ஆண்டு மீசாலையில் பாடும் போது பார்த்தேன் , 

மீசாலையில் பாடும் போது எம் போராட்ட‌த்துக்கு ஆட்க‌ள் தேவை என்று சொல்லித் தான் பாடினார் , 
அப்ப‌ நான் சின்ன‌ பெடிய‌ன் தானே பாட்டை கேட்டு விட்டு அந்த‌ இட‌த்தை விட்டு கில‌ம்பி விட்டேன் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எம்மை நினைத்து யாரும் க‌ல‌ங்க‌க் கூடாது 🙏💪

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்
On 21/6/2020 at 01:05, குமாரசாமி said:

உலகத்தில் இருக்கும் எல்லா மனித இனங்களும் கோவணத்துடன் தான் காடுகள் மலைகளில் வாழ்ந்து படிப்படியாக முன்னேறினார்கள். தமிழன் மட்டுமல்ல. தமிழனுக்கு மட்டும் கோவணம் சொந்தமல்ல. உங்கள் கருத்தின் படி பார்த்தால் வெள்ளைக்காரன் பிறக்கும் போதே நாகரிகமாக கோட்டு சூட்டுடன் பிறந்த மாதிரி அல்லவா இருக்கின்றது.

ஒவ்வொரு மனித இனங்களும் வளர்ந்த பின் நாட்டுக்கு நாடு இது தான் தமது கலாச்சாரம் என நிறுவி விட்ட வேளையில் தமிழினம் மட்டும் இன்னமும் பிற கலாச்சாரங்களை பொறுக்கிக்கொண்டிருக்க வேண்டும் என்கிறீர்களா?

கு சா அண்ணை

திருமண நிகழ்வுகள், சடங்குகள் என்பன அன்றிலிருந்து இன்றுவரை மாற்றம் பெற்று வருகின்றன. ஆடல்கள், பாடல்கள் அன்றும் இருந்தது இனியும் இருக்கும்.உணவு, உடை என்பனவற்றில் மாற்றம் ஏற்படுவது புலம்பெயர்ந்தவர்களிடம் இயல்பாகவே இருக்கும்.

காலனித்துவத்திற்கு முன்னர் தமிழ் மக்கள் இலங்கையில் எப்படியான கலாச்சாரத்துடன் வாழ்ந்தார்கள்.

காலனித்துவத்திற்கு பின்னர் அதே மக்கள் எப்படி எதற்காக

வேறு கலாச்சாரத்திற்கு மாற ஆரம்பித்தார்கள்

அதே நிலையில் தான் நாம் இன்றும் நிற்கின்றோம்

அன்று மேலைத்தேயக் கலாச்சாரம் எங்கள் மக்கள் மீது திணிக்கப்பட்டது .

இன்று மேலைத்தேயங்களில் வாழும் நாங்கள்

அவர்களின் கலாச்சார மாயைக்குள் சிக்கியுள்ளோம் .

எங்கள் தலைமுறையினருக்கு தமிழ் மொழியை

கற்பிக்க வேண்டும்

அந்த மொழி ஒன்றினால் மட்டுமே நாம் எம் கலாச்சாரத்தை

சிதைக்காமல் காக்க முடியும் .

பெண்கள் உடன்கட்டை ஏறுதல்

பெண்களுக்கு மறுமண மறுப்பு

தீண்டாமை

குலம் கோத்திரம்

இவையும் நமது முன்னோர்கள் எமக்கு விட்டுச் சென்ற கலாச்சாரம் தானே.....

அன்று....

முதியோர் இல்லம் என்றால் அது எங்கள் பரம்பரையின் மூத்தவர்கள் வாழ்ந்த வீடாக இருந்தது. அது அவர்களுடைய சொத்தாகவே இருந்தது.

இன்று....

முதியோர் இல்லம் என்றால் என்ன என்பது யாவர்க்கும் தெரியும்

பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோர்கள் வாழுமிடம்

தம் உடலை வருத்தி இரத்தத்தை வியர்வையாக்கி உழைத்த தந்தையும்

தனது இரத்தத்தை பாலாக்கி ஊட்டிய தாயும்

யாரோ ஒருவரின் பார்வையில் இருக்க

பிள்ளைகள் அந்தப் பெற்றோரின் உழைப்பின் மீது ஆட்சி செலுத்துகின்றனர்.

ஒரு சமூகம் சிறந்து விளங்க வேண்டுமெனில், துறை தோறும் வளர்ச்சி ஏற்பட வேண்டும். சமுதாயம் பொருளாதாரம், கல்வி, கலை முதலிய அனைத்துத் துறைகளிலும் காலத்தின் தேவைக்கேற்ப மாற்றங்கள் ஏற்பட்டு வளர்ச்சி அடையவேண்டும்.

சமுதாயத்தில் ஏற்படும் மாற்றமும் வளர்ச்சியும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த வேண்டும். மக்களின் வாழ்க்கைத்தரத்நை உயர்த்தாத வளர்ச்சியினால் என்ன பயன்?

ஒன்றே குலம் ஒருவனே தேவன்

அன்பே மனிதம்

கல்வியே கண்கள்

உயர்வே வாழ்வு

பிறரையும் மதி

உண்டு கொடு

தர்மம் செய்

பெரியோரை தொடர்

நம்பியவரைக் கைவிடேல்

தீண்டாமை ஒழி

பசியாற்றல்

இவை போன்ற விடயங்கள்தான் தமிழர்களின் கலாச்சாரத்தை வேற்று இனக்கலாச்சாரத்திலிருந்து மாறுபடுத்திக் காட்டுகின்றன.

இப்படியான பல நல்ல விடயங்களை பின்பற்றினாலே போதும்

எமது பண்பாடு கலாச்சாரம் காக்கப்படும்

அதைவிடுத்து போகும் இடமெல்லாம் ஆலயங்கள் கட்டி சாதி பார்த்து பெண் எடுத்து....

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, வாத்தியார் said:

ஏற்று கொள்கின்றேன் - ஆனால் பலர் பாராட்டும்படியாக இருக்கவேண்டும், கோமாளிதனமாக இருக்க கூடாது; அதுதான் எங்கள் பலரின் கவலை, இதுதானா தமிழரின் கலாச்சாரம், வேற்று இனத்தவர்களே சிரிக்குமளவுக்கு நாம் போக வேண்டுமா???

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Maruthankerny said:

அவர் மகிந்தவுக்கு பாடவில்லை 
தேவாவின் கானங்கள் என்று டக்லஸுக்கு பாடினார்....... என்று கூற முடியாது 
அவர்களை அவமானம் செய்ய இப்படியான கேவலம் எல்லாம் 
தமிழ் துரோகிகள் செய்து சுய இன்பம் கண்டு மகிழ்ந்தனர். 

முள்ளிவாய்க்காலிலே

இயக்கம் ஆயுதத்தை மௌனிக்கும் முன்

சொன்ன அறிவித்தல்

இயக்கம்  ஆயுதத்தை மௌனிக்கப்போகிறது

நீங்கள் உங்கள் அடுத்த  கட்ட முடிவுகளை 

தனித்தனியே நீங்களே எடுத்துக்கொள்ளுங்கள்  என்று...

அதன் அர்த்தம்  கோடி........

மகிந்தவை  பாடுவதும் அதில் அடக்கம்?

ஈழத்துக்காக

இயக்கத்துக்காக

அதன் இந்த அறிவித்தல் வரும்வரை நின்ற எவரையும் பார்த்து  என்  சுட்டுவிரல் நீளாது.

On 21/6/2020 at 23:14, Maruthankerny said:

ஆனால் மனித வாழ்வுக்கு எது மேம்பானது? எது கேடுகள் ஆனது?
என்று ஒரு புள்ளி இருக்கிறது அல்லவா? 

"மேலை நாட்டு கலாச்சாரம்" இதுவே என்னை பொறுத்தவரை கேள்விக்கு உள்ளளனது 
கலாச்சாரமே இல்லாததுதான் மேலைநாடு 

ஜனநாயக அரசில் என்றாலும் 
ஒரு பழம்பெரும் கலாச்சாரம் என்றாலும் 
அதை தன்னகத்தே கொண்டவர்கள் கீழை நாடவர்கள்தான் 
அமெரிக்க என்றே நாடே 17ஆம் நூற்றாண்டு பின்னானது 
ஐரோப்பா அமெரிக்க சினிமா ஊடாக உட்புகுவதை உள்வாங்கியது 

ரோம ராஜ்ஜியம் கத்தோலிக்க மதம் சார்ந்து பழமை பட்டு இருந்ததே தவிர 
குறிப்பிட்டு ஒரு கலாச்சார பின்னணியை கொண்டிருக்கவில்லை.

தமிழர்கள் இப்போ குழப்பவாதிகளாக இருப்பதுதான் பிரச்சனை தவிர 
கலாச்சாரத்தில் மேன்மை கொண்டவர்கள் என்பது என் தனிப்பட்ட எண்ணம் 
மாற்று கருத்து இருப்பின் அது ஆக்கபூர்வன்மைத்தாக இருந்தால் ஏற்றுக்கொள்வதில் எனக்கு 
எந்த சிக்கலும் இல்லை.

எம்மை பொறுத்தவரை எமக்கு தமிழே தெரியாது 
இப்படியான ஒரு நிலையில் நாம் வாதிடுவதுதான் தவறு 
ஆனால் மொழிகளில் தமிழுக்கு நிகராக வேறு மொழி இல்லை என்பது 
தற்பெருமை இல்லை ..........இது உலக மெய்.  ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் முன்பு 
சங்கம் வைத்து வளர்ந்த மொழி தமிழ் .....ஒவ்வரு வார்த்தையும் இலக்கணம் உடையது 
நாம் படிக்கவில்லை என்பதால் அதை மறுக்க முடியாது.
மற்ற மொழிகளை நாம் தளத்துவதுதான் மடமை ........ ஆனாலும் தமிழ் உறவானது என்று 
கற்று அறிவதில் தவறு இல்லையே?  

மருதங்கேணி,

நாம் இப்போது விவாதித்து கொண்டிருப்பது உலகின் கலாச்சார தொன்மைகள் பற்றியல்ல.கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட எமது  தமிழ் கலாச்சார் தொன்மைகளை பற்றி அல்ல.

நடைமுறையில் எமது கலாச்சாரம் என்ற போர்வையில் எமம்மிடம் உள்ள பத்தாம் பசலிதனங்களை பற்றி தான். அது பற்றி தான் பையனுடன் நான் விவாதித்தேன்.  பையன் தனது பதிவுகளில் எல்லாம் கலாச்சார தொன்மைகளை பற்றி  எதுவுமே கூறவில்லை. எமது முன்னோர்களுக்கு இடையில்  திணிக்கபட்ட பத்தாம் பசலிதனங்கள் தான் எமது கலாச்சாரம் என்று  அவர் நம்புகிறார் அவர் கருத்து தெரிவித்திருந்தார்.  அவை  இல்லாமல் போகிறதே என்ற கவலையை தான் அவர் தெரிவித்திருந்தார்.   

பையனுக்கு நான் கேட்ட  கேள்விகளை வாசியுங்கள். அதற்கான பதிலை பையன் தராமல்  தந்திரமாக கடந்து சென்றுவிட்டார். 

அதை விட தமிழ் மொழி பற்றியோ அதன் சிறப்பு பற்றியோ எனக்கு எந்த கருத்து வேறுபாடும் இல்லை.  சிறப்பான தமிழ் மொழியில் புராண இதிகாச புரட்டுகளை  புறம் தள்ளி பல அறிவியல் நூல்கள் வரவேண்டும் என்பதுடன் பல பிறமொழி நூல்கள் தமிழில் மொழி பெயர்க்கபட்டு வெளிவரவேண்டும் என்ற  விரும்புபவன் நான்.  அப்படிப்பட்ட நான் தமிழ் மொழியை குறை கூறியது போன்ற பாவனையில் நீங்கள் எனக்கு பதிலளித்துள்ளீர்கள்.   எனது கேள்விகளுக்கு பதில் எழுத முடியாதவர்கள் ஒரு சிலர் திசைதிருப்புவதற்காக  நான்தமிழ்மொழியை குறை கூறுவதாக  ஒரு கற்பித‍த்தை உருவாக்க அதை நம்பி நீங்கள் பதிலிட்டுள்ளீர்கள் என்றே நான் நம்புகிறேன். 

  ஐரோப்பாவில் கலாசாரம் என்று ஒன்று இல்லை என்றும் ஹொலவூட் திரைப்படங்களை பார்த்து உள்வாங்கிகொள்ளபட்டதுதான் ஐரோப்பிய கலாச்சாரம் என்று நீங்கள் தெரிவித்த கருத்து நீங்கள் சீரியஸாக தெரிவித்த கருத்து அல்லமால் இங்கு சிலரை குஷிபடுத்துவதற்காக ஜோக்காக தெரிவித்த கருத்தாகவே நான் பார்க்கிறேன். நிச்சயமாக உங்களால் சீரியஸாக அப்படியான கருத்தை தெரிவிக்க முடியாது என்றே நான் நம்புகிறேன். 

நீங்கள் ஐரோப்பா வந்தால் ஐரோப்பிய நகரங்கள் எங்கும் இருக்கும் கலாச்சார, கலை மியூசியங்களுக்கு சென்று பாருங்கள்.  முதலாம் நூற்றாண்டில் ஏற்பட்ட மாபெரும் எரிமலையால் மண்ணில் புதையுண்ட இத்தாலிய பொம்பே (Pompeii)  நகரம் எவ்வளவு நேர்த்தியாக கட்டி எழுப்ப‍ப்படுள்ளது என்பதை பாருங்கள். வியன்னா நகரில் மத்தியில் கிமு காலத்து நகரம் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கபட்டு  மக்கள் பார்வைக்கு உள்ளது. அதை விட வியன்னா நகரின் பிரமாண்டமாக பல கட்ட‍ங்களின் தொன்மையையும் அதன் நேர்த்தியையும் பாருங்கள். 

கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் உள்ள புடா பெஸ்ட். பிராக், ஸாகிறப் போன்ற நகரங்களையும், ஸ்கொட்லாந்தில் எடின்பரோ, கிளாஸ்கோ போன்ற நகர பழமைவாய்ந்த கட்டங்களையும் பார்த்தபின்னர் நாம் அது பற்றி விவாதிக்கலாம் என்று நினைக்கிறேன். 

அமெரிக்கா 17 ்ம் நூற்றாண்டின் பின்னர் உருவான  ஒன்று என்றது உலகறிந்த உண்மை. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.