Jump to content

குளிர் நாடுகளில் கருவேற்பிள்ளை வளர்க்கும் முறை.

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

கருவேற்பிள்ளை வளருதே இல்லை எண்டு புலம்பிக்கொண்டிருந்தார் எங்கண்ட பெருமாள்.

இங்க ஒரு வெள்ளயம்மாவை திருத்தி  பிடித்து கொண்டுவந்திருக்கிறேன். எல்லாம் விலாவாரியா புட்டு, புட்டு வைக்கிறா.

மிக அதிகமாக தண்ணீர் விடுவதே, வளராமல் போவதற்கு காரணம் என்கிறார். அக்டோபர் முதல், பிப்ரவரி வரை ஒரு சொட்டு தண்ணீர் காட்டப்படாதாம். 

வீட்டுக்குள்ள, பொட்ல தான் வளர்க்க வேண்டுமாம். குறைந்தது 10 டிகிரி வெக்கை வேணுமாம்.

தேவையான ஆக்கள், இவோவிண்ட கம்பெனில ஆர்டர் பண்ணலாம் போலை கிடக்குது. (https://plants4presents.co.uk/curry-leaf-plant) - இப்ப Out of Stock 

நீங்கள் ஆச்சு, கருவேற்பிள்ளை ஆச்சு, வெள்ளயம்மா ஆச்சு.

பின்ன வாறன் போட்டு...

  • Replies 64
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இங்கும் இப்ப வெள்ளையல் வளர்க்க தொடங்கிவிட்டினம், வல்லாரை, கருவேப்பிலை...

36 minutes ago, Nathamuni said:

தேவையான ஆக்கள், இவோவிண்ட கம்பெனில ஆர்டர் பண்ணலாம் போலை கிடக்குது. (https://plants4presents.co.uk/curry-leaf-plant) - இப்ப Out of Stock 

இங்கும் இப்ப வெள்ளையல் வளர்க்க தொடங்கிவிட்டினம், வல்லாரை, கருவேப்பிலை...

விதைகள் வேணுமென்றால் சொல்லுங்கள் அடுத்தமுறை பழுத்ததும் பதப்படுத்தி தேவையான அளவு அனுப்பிவிடுகின்றேன்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
26 minutes ago, விவசாயி விக் said:

வடகிழக்கு மாகாண அரச அதிகாரிகளுடன் சேர்ந்து ஒரு புத்தகம் எழுதுகிறேன் இன்னும் 6 மாதத்தில் எந்த செடியும் வளர்க்கலாம். (கனடாக்காரர் என்ன யோசிக்கினம் என்று தெரியும் . கேட்க்காதைங்கோ)

என்ன நாதமுனி களத்தில் விவசாயி இருக்கும்போது வெள்ளை பொம்பிளை சொல்லி தரோணுமோ? 😁

வெள்ளையம்மா மாதிரி பக்குவமா சொல்லி தருவியளே? 😜

அதுசரி அதென்ன புத்தகம்? புத்தகங்களிலும் பார்க்க வீடியோ நல்லது.

ஊர்ல, புகையிலையினை தடை செய்தாச்சு. ஆகவே புகையிலை விவசாயிகள், புது பயிர் செய்ய வெளிக்கிடினம். அனேகமா மிளகாய் பக்கம் போவினம்.

இந்த பெரிய சந்தை, உலகம் முழுவதும் உள்ளது. (நம்மை தான் சொல்கிறேன்).

ஆனாலும், தமிழ் நாடு என்றாலும் பரவாயில்லை. ஆந்திராவில் இருந்து தானே, மிளகாயும், மிளகாய்த் தூளும் வருகின்றது.

உந்த அதிகாரிகளின் காதில் போட்டு ஏதும் செய்யேலாதோ? 🤔

அங்க இருக்கிற அரசியல்வாதிகள், முதல் வியாபாரிகள் வரை.... செம்மலி ஆட்டு கூட்டம்.... போன ஒரே பக்கம் தான். இப்ப மத்திய கிழக்குக்கு ஆட்களை ஏத்துறது எண்டெல்லே அரசாங்கம் நிக்குது. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இப்போதெல்லாம் லண்டனில் கஞ்சா கூட வாங்கிடலாம்😜 கறிவேப்பிலை வாங்குவது ரொம்ப கஷ்ரமான விடயம் நல்ல பிரயோசனமான பதிவு நன்றி நாதமுனி :)  

  • கருத்துக்கள உறவுகள்
Posted
54 minutes ago, விவசாயி விக் said:

என்ன நாதமுனி களத்தில் விவசாயி இருக்கும்போது வெள்ளை பொம்பிளை சொல்லி தரோணுமோ? 😁

விவசாயி......  நாதமுனிக்கு,

சிங்கள நோனா, வெள்ளைக்கார லேடி என்றால்... ஒரு இது. 😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, தமிழரசு said:

இப்போதெல்லாம் லண்டனில் கஞ்சா கூட வாங்கிடலாம்😜 கறிவேப்பிலை வாங்குவது ரொம்ப கஷ்ரமான விடயம் நல்ல பிரயோசனமான பதிவு நன்றி நாதமுனி :)  

எதுக்கு நம்ம பெருமாள், வளர்க்க நினைக்கிறார் எண்டால்... இப்ப லண்டனில 25 கிராம் கறிவேப்பிலை £1.49. கஞ்சாவிலும் பார்க்க இது வளர்ப்பது பிரயோசனம். பயமும் இல்லை.

கனடா பக்கம், ஊருக்கு போய் வர்ற ஆக்கள் பைக்கில போட்டு, 10, 20 கிலோ எண்டு கொண்டு வர தொடங்கீட்டினம். அங்கையே, சின்ன பாக்குல பொதி செய்து கொண்டு வருகினம். கடைக்கு ஸ்ட்ராயிட் டெலிவரி.

இது கடைக்காரர்கள் வேண்டுமென்றே உருவாக்கி வைத்திருக்கும் தட்டுப்பாடு.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நானும் யோசிப்பதுண்டு

இங்க  பிரான்சில ஓரமாக ஒதுங்கி  கொஞ்ச  ஏக்கர் நிலத்தை  வாங்கி

கறிவேப்பிலை மட்டும்  நட்டால் பவுணில் கூட இப்படி  வருமானம் வராது என்று😜.

ஆனால் வளர  வளர வெட்டுறதால 

எத்தனை மாதத்துக்கு ஒரு முறை சந்தைப்படுத்தமுடியும்????🤔

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, தமிழ் சிறி said:

விவசாயி......  நாதமுனிக்கு,

சிங்கள நோனா, வெள்ளைக்கார லேடி என்றால்... ஒரு இது. 😂

தமிழரசுக்கு 'சிக்கின்' விசயத்தில் கண்டனம் தெரிவித்த கையோட, வெள்ளையம்மாவை, வெள்ளைக்கார லேடி என்று சொன்ன உங்களுக்கு தமிழரசு சார்பில், கடும் கண்டனத்தை தெரிவிக்கிறேன். 😜

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, Nathamuni said:

கருவேற்பிள்ளை வளருதே இல்லை எண்டு புலம்பிக்கொண்டிருந்தார் எங்கண்ட பெருமாள்.

இந்த கறிவேப்பிலை சிட்ரஸ் குடும்பத்தை சேர்ந்தவை அதுக்கு உரம் போன்றவை சிட்ரஸ் கொம்போஸ் என்று.

விக் முறையின்படி ஒருபக்கம் அடுத்தது சிட்ரஸ் முறையின்படி குளிர் காலநிலை தொடருது இரவில் 12 என்றாலும் பீலிங் 6 கீழ் உள்ளதால் விக்கின் முறையில் உள்ளவை  முளையை  காணவில்லை சிட்ரஸ் பரவாயில்லை .

4 hours ago, விவசாயி விக் said:

10 டிகிரிக்கு பின் தான் பொஸ்போரஸ், பொட்டாஷ் (மா மற்றும் புரதம்)நிலத்தில் பிரிந்து வேர்களுக்கு சத்து கிடைக்கும்.

சிட்ரஸ் கொம்போசில்  நீங்கள்  சொல்வதுதானா  உள்ளது ?

1 hour ago, விசுகு said:

நானும் யோசிப்பதுண்டு

இங்க  பிரான்சில ஓரமாக ஒதுங்கி  கொஞ்ச  ஏக்கர் நிலத்தை  வாங்கி

கறிவேப்பிலை மட்டும்  நட்டால் பவுணில் கூட இப்படி  வருமானம் வராது என்று😜.

ஆனால் வளர  வளர வெட்டுறதால 

எத்தனை மாதத்துக்கு ஒரு முறை சந்தைப்படுத்தமுடியும்????🤔

பொண்ட் சுவா எனும் இடத்தில் பரிசுக்கு அருகாமையில் சமரில் வந்தால் ஊர் காய்கறிகள் அங்குள்ள பண்ணையொன்றில் பச்சை மிளகாய் தொடக்கம் வாங்கி சமைப்பது உண்டு அந்த விவசயிகளிடம் சோதனை முயட்சியாக வளர்த்து பாருங்கள் லண்டனை விட பாரிஸ் ,கனடா  வெக்கை கூடின இடம்கள் அதாவது நீண்ட வெயில்காலம் கொண்டவை லண்டன் மூன்று நாள் வெக்கை ஐந்து நாள் விண்டர் குளிர் போல் பயித்தியம் ஆடும் வெதர் .

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 minutes ago, பெருமாள் said:

கொஞ்சம் இறங்கிப் போய், ஸ்பெயின், போர்த்துக்கல்.... இன்னும் கொஞ்சம் போனால் கிரீஸ்.... நல்ல விவசாயம் செய்யலாம்.

வல்வெட்டித்துறை ஆட்கள் இருவர், ஐரோப்பா பக்கத்தில், கானாவில், விவசாயம் செய்து இங்கே அனுப்புகிறார்கள். அவர்களுக்கு சிறந்த ஏற்றுமதியாளர் விருது கானா அரசால் கொடுக்கப்படட விபரம், யாழில்  வந்தது.

மிகுந்த நீர்வளம் கொண்ட ருவாண்டா நாட்டில், ஏக்கர் கணக்கில் அரசிடம் இருந்து காணிகள் வாடகைக்கு எடுக்கலாம். விவசாயம் செய்யலாம்.

அங்கே IT வேலைக்கு போன கர்நாடக காரர்கள் பலர், IT வேலையினை விட்டு, பெரு விவசாயம் செய்கின்றனர். பெரு விவசாயத்துக்கு அந்தநாட்டு அரசு மானியம் கொடுக்கிறதாம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, Nathamuni said:

கொஞ்சம் இறங்கிப் போய், ஸ்பெயின், போர்த்துக்கல்.... இன்னும் கொஞ்சம் போனால் கிரீஸ்.... நல்ல விவசாயம் செய்யலாம்.

வல்வெட்டித்துறை ஆட்கள் இருவர், ஐரோப்பா பக்கத்தில், கானாவில், விவசாயம் செய்து இங்கே அனுப்புகிறார்கள். அவர்களுக்கு சிறந்த ஏற்றுமதியாளர் விருது கானா அரசால் கொடுக்கப்படட விபரம், யாழில்  வந்தது.

இதையெல்லாவற்றையும் விட  எனது  ஊர் தரமானதும் திறமானதும்

ஆனால்?????

  • கருத்துக்கள உறவுகள்
Posted
38 minutes ago, விசுகு said:

இதையெல்லாவற்றையும் விட  எனது  ஊர் தரமானதும் திறமானதும்

ஆனால்?????

தூரம்??

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நான் வாழும் நாட்டிலும் என்னுடன் நட்புவட்டத்திலுள்ள பலருடனும் நான் கேட்டேன் ஒரு கிறீன் கவுஸ் வாடகைக்கோ சொந்தமாகவோ வாங்கி கீரை கறிவேப்பிலை இவைகளை உற்பத்திசெய்யலாம் என ஒருத்தருக்கும் அக்கறை இல்லை என்னால் தனியாகத் தொடங்கமுடியாது காரணம் பொருளாதாரம் அடுத்தது முழுமையாக இதே வேலையாய் இருந்தால் வருமானம் பிழைச்சால் வீட்டை கடந்தந்தவன் புடுங்கிக்கொண்டு போயிடுவான்.அதுக்குப்பிறகு பொஞ்ச்சதிக்காரி இந்தாளுக்கு ஒரு அறுப்பும் தெரியாது பிழைக்கத்தெரியாத மனிசன் எனப் புறுபுறுத்து பிரசரை ஏத்திவிடும் அதுக்குப்பிறகு மல்லாக்காப் படுக்கவேண்டியதுதான்.

இப்போதைய எனது நோக்கம் குடாநாட்டிலோ அல்லது வேறெங்கேயாவதோ ஒரு நூறுபரப்புக்காணி வாங்கி ஒருங்கிணைந்த விவசாயப் பண்ணை அமைப்பது தவிர நீண்டகாலத்தில் பயன்தரக்கூடிய காட்டு மரங்கள் வளர்ப்பது. கூடிய விரைவில் இங்குள்ள பிக்கல் பிடுங்கல்கள் முடியட்டும் கெலிம யாழ்ப்பாணய தான்.

வெள்ளை வானில ஏத்திக்கொண்டுபோய் மண்டையில போட்டாலும் பறுவாயில்லை. ஆனால் அப்படி மண்டையில போடுற அளவுக்கு நான் ஒன்றும் முன்னாள் பின்னாள் போராளியோ அல்லது புலம்பெயர் புலி வாலோ இல்லை என்ன விடையம் கண்ட இடங்களில தேவையில்லாமல் கண்டபடி கதைக்கிறது அவ்வளவுதான்.

ஒர் ஒருங்கிணைந்த விவசாயக் கூட்டுப்பண்ணையை அமைத்த்ச்சுப்போட்டு சாவதே என ஆசை.

அதைவிட இன்னுமொறு விடையம் ஸ்பெயின் நாட்டில் உள்பகுதியில் ஸ்பெயின்மக்களால்  காலப்போக்கில் கைவிடப்பட்ட கிராமங்கள் நிறைய விற்பனைக்கு வந்திருக்கு அக்கிராமங்களில் இப்போதும் நல்லநிலையில் ஓரிரண்டு வீடுகள் சிலவற்றில் பாடசாலை கீர்நிலை மற்றும் கைவிடப்பட்ட பண்ணைவீடுகள் ஆகியனவும் உள்ளடக்கம் அந்தப்பிரதேசத்தின் நகரபிதா வாங்கோ மீண்டும் யாராவது வந்து இந்த இடங்களை வளப்படுத்துங்கோ எங்களால் செய்யக்கூடுய எல்லா உதவியும் செய்கிறம் என கூறும் ஒரு காணொளியப் பார்த்தேன் பிசாசுக் கிராமங்கள் (கோஸ்ற் கவுஸ்) என பெயரிடபட்ட காணொளிகள் இப்போதும் யூ ரியூப்பில் இருக்கு. நல்ல காலநிலை என்ன விடையம் போய் மினக்கடவேணும். சரிப்பண்ணி எடுத்தைட்டால் புலம்பெயர் தேச உறவுகள் வந்து தங்கி விடுமுறையக் களிக்கும் ஒரு இடமாக மாற்றினால் சீசனுக்குச் சிறீ லங்கா போகும் பலரை அங்கு திருப்பிவிடலாம் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

3 minutes ago, Nathamuni said:

தூரம்??

இல்லை ஐயா

உடையவன் இல்லாவிட்டால்  ஒரு முளம்   கட்டைதானே??

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, Elugnajiru said:

நான் வாழும் நாட்டிலும் என்னுடன் நட்புவட்டத்திலுள்ள பலருடனும் நான் கேட்டேன் ஒரு கிறீன் கவுஸ் வாடகைக்கோ சொந்தமாகவோ வாங்கி கீரை கறிவேப்பிலை இவைகளை உற்பத்திசெய்யலாம் என ஒருத்தருக்கும் அக்கறை இல்லை என்னால் தனியாகத் தொடங்கமுடியாது காரணம் பொருளாதாரம்

உங்கட வீட்டுக்குள்ள நாலு, ஐந்து பூந்தொட்டியை வைத்து தொடங்குவதற்கு நண்பர்கள் எதுக்கு? இதிலே வெற்றி அடைந்தால், உங்கள் மனைவியின் முழு ஒத்துழைப்பும் கிடைக்குமே.

முதலில் நடவுங்கோ, பிறகு ஓடலாம்.
 
பிழையா விளக்காதீங்கோ.... நான் நாளை ஊருக்கு போய் அப்படி செய்வேன் என்று ஒரு பெரிய எதிர்கால கனவை காரணம் சொல்லி, நிகழ்கால நிதர்சனத்தை மறுக்கிறீர்கள். வெள்ளை வான் ஓடுதோ, இல்லையோ, ஊர் போவதும், பண்ணை போடுவதும் இலகுவானது அல்ல. 

சுவைப்பிரியர் அனுபவத்தில் சொல்லுவார். இங்கே ஒருவர் வந்து போனார், இப்ப காணவில்லை. பாலபத்திர ஓணாண்டி... அவரும் இப்படி செய்து அனுபவப்பட்டவர் தான்.

4 minutes ago, விசுகு said:

இல்லை ஐயா

உடையவன் இல்லாவிட்டால்  ஒரு முளம்   கட்டைதானே??

உடையவன் அங்கே இருந்தாலும் கட்டை தான். 

நமது ஆசை வேறு, உடல் ஒத்துழைப்பு வேறு. சும்மா ஸ்ப்ரிங் மாதிரி, ஒரு இடத்தில இராமல் ஓடி ஆடி வேலை செய்பவர்களுக்கு, விவசாயம் சரி வரும்.

ஏனையோர் இழந்த கட்டையினை முளமா, மயிலா என்று அளக்கதான் நேரம் சரி.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 minutes ago, Nathamuni said:

உங்கட வீட்டுக்குள்ள நாலு, ஐந்து பூந்தொட்டியை வைத்து தொடங்குவதற்கு நண்பர்கள் எதுக்கு? இதிலே வெற்றி அடைந்தால், உங்கள் மனைவியின் முழு ஒத்துழைப்பும் கிடைக்குமே.

முதலில் நடவுங்கோ, பிறகு ஓடலாம்.
 
பிழையா விளக்காதீங்கோ.... நான் நாளை ஊருக்கு போய் அப்படி செய்வேன் என்று ஒரு பெரிய எதிர்கால கனவை காரணம் சொல்லி, நிகழ்கால நிதர்சனத்தை மறுக்கிறீர்கள். வெள்ளை வான் ஓடுதோ, இல்லையோ, ஊர் போவதும், பண்ணை போடுவதும் இலகுவானது அல்ல. 

சுவைப்பிரியர் அனுபவத்தில் சொல்லுவார். இங்கே ஒருவர் வந்து போனார், இப்ப காணவில்லை. பாலபத்திர ஓணாண்டி... அவரும் இப்படி செய்து அனுபவப்பட்டவர் தான்.

உடையவன் அங்கே இருந்தாலும் கட்டை தான். 

நமது ஆசை வேறு, உடல் ஒத்துழைப்பு வேறு. சும்மா ஸ்ப்ரிங் மாதிரி, ஒரு இடத்தில இராமல் ஓடி ஆடி வேலை செய்பவர்களுக்கு, விவசாயம் சரி வரும்.

ஏனையோர் இழந்த கட்டையினை முளமா, மயிலா என்று அளக்கதான் நேரம் சரி.

ஊரில இருக்கிற  காணியை உழுது 

மரங்களை நட்டு சோலையாகவேனும்  மாத்துவம்  என்று கதைக்கவே

எனது மூத்த அக்கா  சொன்னது தம்பி சரி  வராதிடா??

நீ நினைக்கிற ஊரும்  இப்ப  இல்லை

ஆட்களும்  இல்லை  என்று.

இருந்தாலும்  கனவு அப்படியே தான்  இருக்கு

  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 minutes ago, விசுகு said:

ஊரில இருக்கிற  காணியை உழுது 

மரங்களை நட்டு சோலையாகவேனும்  மாத்துவம்  என்று கதைக்கவே

எனது மூத்த அக்கா  சொன்னது தம்பி சரி  வராதிடா??

நீ நினைக்கிற ஊரும்  இப்ப  இல்லை

ஆட்களும்  இல்லை  என்று.

இருந்தாலும்  கனவு அப்படியே தான்  இருக்கு

நானும் ஊரிலை போய் இப்படி கதைக்க, ஊர் கோவில் தர்மகத்தா சொன்னார், தம்பி... முந்தி... நெல்லை போட்டுடு... கிளி...பறவை துரத்தினோம். இப்ப கள்வர் துரத்தவே காலம் போயிடும்.... அவர்களுடன் மோதி, உயிர், உடல் காயம் இல்லாமல் தப்பி இருப்பதே பெரும் வேலை என்றார்.

காலையில வேலைக்கு வந்தவரே, பின்னேரம் களவுக்கும் வருவார் எண்டார்.

அதுக்காக செய்ய முடியாது இல்லை. CCTV கேமரா போட்டு, போலீஸ் கையில வைத்து பயம் கட்டினால்... செய்யலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, Nathamuni said:

இப்படி ஒருத்தர் இங்க  இருந்து போய் பல கோடிகளைக்கொட்டி செய்தார்

இப்ப மருந்துக்கு கூட காணியை  விட்டு வெளியில கால்  வைக்கமுடியவில்லை என்று  அழுகிறார்

தேய்காயை ஏத்துங்க சாப்பிட்டு வாறன் என்று போட்டு

சாப்பிட்டு விட்டு வந்து  பார்த்தா

தேங்காயோட லொறியையும்  காணலையாம்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Curry Leaves – Basket 4 Home

கரு வேப்பிலையை.... எப்படி, எழுதுவது.. சரியானது?
ஏனென்றால் பலரும்...  பல மாதிரி அழைக்கின்றார்கள்.
கீழே உள்ளவற்றில்... எது சரி?  

1)  கருவேற்பிள்ளை.     (நாதமுனி)
2)  கருவேப்பிலை.     (உடையார், விவசாயி விக், தமிழ் சிறி)
3)  கறிவேப்பிலை.     (தமிழரசு, விசுகு, பெருமாள், எழுஞாயிறு)

தயவு செய்து பிழை பிடிக்கின்றேன் என்று... தவறாக விளங்கிக் கொள்ளாதீர்கள்.
கேள்விகளின் மூலம், பலரும் அறிந்து கொள்ளக் கூடிய... நல்ல பதில்கள் கிடைக்கும்.  :)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

என் வீட்டில் ஏழு ஆண்டுகளாக கறிவேப்பிலை வளர்க்கிறேன். மூன்றுகண்டுகள் வந்தது. எனது நண்பர்களுக்கு கொடுத்தேன். அதன்பின் மூன்று ஆண்டுகளாகக் கன்றுகள் வராமல் இப்பதான் ஒன்று வருது. கடந்த ஆண்டு பங்கஸ் போல் பிடித்தது. பின் மஞ்சள் தெளித்து தண்டுகளுக்கு எல்லாம் பூசி ஒருவாறு தப்பிவிட்டது. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, தமிழ் சிறி said:

Curry Leaves – Basket 4 Home

கரு வேப்பிலையை.... எப்படி, எழுதுவது.. சரியானது?
ஏனென்றால் பலரும்...  பல மாதிரி அழைக்கின்றார்கள்.
கீழே உள்ளவற்றில்... எது சரி?  

1)  கருவேற்பிள்ளை.     (நாதமுனி)
2)  கருவேப்பிலை.     (உடையார், விவசாயி விக், தமிழ் சிறி)
3)  கறிவேப்பிலை.     (தமிழரசு, விசுகு, பெருமாள், எழுஞாயிறு)

தயவு செய்து பிழை பிடிக்கின்றேன் என்று... தவறாக விளங்கிக் கொள்ளாதீர்கள்.
கேள்விகளின் மூலம், பலரும் அறிந்து கொள்ளக் கூடிய... நல்ல பதில்கள் கிடைக்கும்.  :)

1. சரியான தமிழ்

2. பேச்சுத்தமிழ்

3. காரணப்பெயர்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, உடையார் said:

இங்கும் இப்ப வெள்ளையல் வளர்க்க தொடங்கிவிட்டினம், வல்லாரை, கருவேப்பிலை...

இங்கும் இப்ப வெள்ளையல் வளர்க்க தொடங்கிவிட்டினம், வல்லாரை, கருவேப்பிலை...

விதைகள் வேணுமென்றால் சொல்லுங்கள் அடுத்தமுறை பழுத்ததும் பதப்படுத்தி தேவையான அளவு அனுப்பிவிடுகின்றேன்

Amazon இல், ebay இல் கறிவேப்பிலைக் கன்று, விதைகள் எல்லாம் விற்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, Nathamuni said:

உங்கட வீட்டுக்குள்ள நாலு, ஐந்து பூந்தொட்டியை வைத்து தொடங்குவதற்கு நண்பர்கள் எதுக்கு? இதிலே வெற்றி அடைந்தால், உங்கள் மனைவியின் முழு ஒத்துழைப்பும் கிடைக்குமே.

முதலில் நடவுங்கோ, பிறகு ஓடலாம்.
 
பிழையா விளக்காதீங்கோ.... நான் நாளை ஊருக்கு போய் அப்படி செய்வேன் என்று ஒரு பெரிய எதிர்கால கனவை காரணம் சொல்லி, நிகழ்கால நிதர்சனத்தை மறுக்கிறீர்கள். வெள்ளை வான் ஓடுதோ, இல்லையோ, ஊர் போவதும், பண்ணை போடுவதும் இலகுவானது அல்ல. 

சுவைப்பிரியர் அனுபவத்தில் சொல்லுவார். இங்கே ஒருவர் வந்து போனார், இப்ப காணவில்லை. பாலபத்திர ஓணாண்டி... அவரும் இப்படி செய்து அனுபவப்பட்டவர் தான்.

உடையவன் அங்கே இருந்தாலும் கட்டை தான். 

நமது ஆசை வேறு, உடல் ஒத்துழைப்பு வேறு. சும்மா ஸ்ப்ரிங் மாதிரி, ஒரு இடத்தில இராமல் ஓடி ஆடி வேலை செய்பவர்களுக்கு, விவசாயம் சரி வரும்.

ஏனையோர் இழந்த கட்டையினை முளமா, மயிலா என்று அளக்கதான் நேரம் சரி.

நீங்கள் நினைக்கிறதுபோல இல்லை நான் எனது வீட்டுக்குப் பின்னால் உள்ள சிறிய நிலத்தில் என்னால் ஆன அளவுக்குக் காய் கறிப்பயிர் வைத்திருக்கிறேன் ஆனால் என்ன அசப்பில் நான் ஒரு பூங்கன்றுப் பிரியன் ஆகவே நிறையக் காய்கறிகளை வீட்டு முற்றத்தில் வளர்க்கமுடியாது.

ஆனால் இன்னுமொரு இடத்தில் பத்து மீற்றருக்குப் பத்துமீற்றர் அளவில் ஒரு காணியை வருட வாடகைக்கு எடுத்து காய்கறிப்பயிர் செய்கிறேன் அனைத்தும் இயற்கைசார் விவசாயமே வீட்டில் சேர்கின்ற எந்தவொரு சமையறைக் கழிவுகளையும் குப்பைத் தொட்டிக்குள் போடுவதில்லை அனைத்தும் அதற்கென உள்ள கொம்போஸ் உரக் கழிவுக்குட்டையில் போட்டுவுடுவேன் இம்முறையும் கோடைகாத்தில் தோட்டம் செய்கிறேன் வீட்டுக்கழிவுகள் கொம்போஸ் உரமாக மாற பின்லாந்தின் காலநிலைக்கு இரண்டு வருடமாகும் இம்முறையும் கிட்டத்தட்ட ஒரு லன்ட்மாஸ்ரர் அளவுக்கு கொம்போஸ் எடுத்தேன் அது வீட்டுக்கழிவு மாதிரமல்ல பிடுங்கப்படும் களை மற்றும் புல் தோட்டத்தில் சேரும் குப்பை அனைத்தும் கொம்போஸ் பெட்டிக்குள்தான்.

கீரை உள்ளிப்பூண்டு மற்றும் போஞ்சி வெங்காயம் ஊரில் சின்ன வெங்காயம் (வெங்காயத் தண்டுக்காக) கொத்தமல்லி பூசனி மற்றும் காரட் பீற்றூட் தவிர இலைகோவா பூக்கோவா முட்டைக்கோவா அங்கேயும் நிறையப் பூக்கண்டுகள் இவை அனைத்தையும் நான் பயிரிடுகிறேன்.

ஆனால் என்ன பின்லாந்தின் காலநிலை மிகவும் குளிர் நிறைந்தது கோடைகாலத்திலும் பெரிதாக எங்களது காய்கறிகள் பயன் தருவதற்கான வெப்பம் இல்லை சூழலுக்கு ஏற்றர்போல் ஏதோ செய்கிறேன் ஆனால் ஒருவித திருப்தியும் நட்பு வட்டத்துக்கு பகிந்துகொடுக்கும்போது சந்தோசமுமே  மிச்சம்.

இங்கு காற்றின் ஈரப்பதம் மிகவும் குறைவு ஆகவே நாங்கள் எதிர்பார்பதுபோல் பயந்தரமாட்டாது. 

சின்ன வெங்காயத்தாள் இந்தமுறை துவையலுக்குப் பிடுங்கியாச்சு இன்னமும் நாலைந்துமுறை புடுங்களாம் நாஙந்து நாளில் கீர பருவத்துக்கு வந்துவிடும் இன்னுமொரு கீரைமேடை ரெடியாகிவிட்டது.  

திருப்தி என்பது சில விடையங்களில் இருக்கக்கூடாது அதுபோல் எனது அனுபவங்களை ஊரில்போய்ப் பரீட்சித்துப்பார்க்கவேண்டும் எனும் ஆவலே மேலே கூறிய விடையங்கள்.
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Nathamuni said:

1. சரியான தமிழ்

2. பேச்சுத்தமிழ்

3. காரணப்பெயர்

நாதமுனி நீங்கள்,  ஒரு சொல்லில்... விளக்கம் சொல்லி விட்டு, போவது சரியல்ல. 

முக்கியமாக.... முதலாவது  "சரியான தமிழுக்கு", 
நீங்கள், பதில் சொல்லியே ஆக வேண்டும். .இல்லாவிடில்...  
தமிழ் நாட்டிலிருந்து,  பேராசிரியர்  சுப. சோமசுந்தரம் அவர்களை,
கூப்பிட்டு... விளக்கம் கேட்பேன். :) 

உங்களது.... இரண்டாவது, மூன்றாவது  பதில்கள்,  100  வீதம் உண்மை.  

  • கருத்துக்கள உறவுகள்
Posted
59 minutes ago, தமிழ் சிறி said:

நாதமுனி நீங்கள்,  ஒரு சொல்லில்... விளக்கம் சொல்லி விட்டு, போவது சரியல்ல. 

முக்கியமாக.... முதலாவது சரியான தமிழுக்கு, 
நீங்கள், பதில் சொல்லியே ஆக வேண்டும். .இல்லாவிடில்...  
தமிழ் நாட்டிலிருந்து,  பேராசிரியர்  சுப.சோமசுந்தரம் அவர்களை,
கூப்பிட்டு... விளக்கம் கேட்பேன். :)

உங்களது.... இரண்டாவது, மூன்றாவது  பதில்கள்,  100  வீதம் உண்மை.  

Close Match and Related Words
curry leaves : கறி வேப்பிலை , கருவேப்பிலை .
curry : கறி-குழம்பு-கூட்டுவகை , துணை உணவு , கறி கூட்டு , குழம்புப்பொடி கலந்து சுவையூட்டு , துணை உணவு ஆக்கு .
curry : குழம்பு , கறி .
curry leaf : கருவேப்பிலை , கறி வேப்பிலை .
curry leaves : கறி வேப்பிலை , கருவேப்பிலை .

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.