Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கணபதியே ஓம் கணபதியே

 

  • Replies 2.9k
  • Views 225.5k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • உடையார்
    உடையார்

  • Maruthankerny
    Maruthankerny

    இணைப்புக்கு நன்றி உடையாரண்ணா  இவரின் குரலில் சில இஸ்லாமிய பாடல்கள்  மனதையே கொள்ளை கொண்டுவிடும்  சில வருடங்கள் முன்பு ஒரு யூஸ்பி யில் பதிந்து வைத்திருந்தேன்  எங்கோ தவற விட்டுவிட்ட்டேன் ... ம

  • உடையார்
    உடையார்

    யேசுவே எனக்கு என்று யாருமேயில்லை   

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திருமறையின் அருள் மொழியில் விளைந்திருப்பது என்ன

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

துணையின்றி

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தந்தையும் தாயும் போல் அவனிருப்பான் சென்னிமலையினிலே

சந்தனம் பன்னீரில் தினம் குளிப்பான் வேலவனே

குன்றிருக்கும் இடமெல்லாம் குடியிருப்பான் ஆ... ஆ... ஆ...

சென்னிமலை குமரா சிரகிரி வேலவனே

முருகா. . . குமரா. . . கந்தா. . . முருகா . . .

பங்குனி உத்திரத்தில் பால்குடம் ஆ... ஆ... ஆ...

பாங்குடன் ஏந்துவர் பல்லாயிரம் ஆ... ஆ... ஆ...

வாடாத பூமாலை அலங்காரம்

பாடாத நாவும் திருப்புகழ் பாடும்

கொக்கரக்கோ சேவலும் குன்றினில் கூவும்

சென்னிமலை மேலே மயிலாடும்

தேவியரின் திருக்கோயில் மலையிலே ஆ... ஆ... ஆ...

தீபங்கள் ஏற்றினால் குறைவில்லையே ஆ... ஆ... ஆ...

வேலும் மயிலும் துணையிருக்க ஆ... ஆ... ஆ...

வேதனைகள் தீர்க்க குகனிருக்க ஆ... ஆ... ஆ...

நம்பினோர் வாழ்வில் நலம்பல பெருக

முருகாவெனும் நாமம் எதிரொலிக்க

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மாணிக்க வீணையுடன் ஞானாட்சியாய்
மனையில் குடியிருப்பாள் சரஸ்வதி நீயே

காலைக் கண்டால் வித்யா காயத்ரி நீ
மாலை வந்தால் சந்தியா சாவித்ரி நீ

ஆயுத மெய்யா உயிர்மெய்யா அறியா வயதில் நெல்மீது
அப்பா சொல்ல அன்போடு எழுதிப் பாத்தோம் உன் பேரு

வாய்மொழியாகும் தாய்மொழி சங்கீதம்
வளர்மதி உன்னாலே வளரும் சந்தோஷம்

பண்டித பிரகஸ்பதி பண்வளர் சரஸ்வதி
அம்மா வருவாய் நவராத்திரி இதுதான் எமக்கு சுபராத்திரி

பாவலர் கவிகேட்டு பாடிடுவோம் தமிழ் பாட்டு
பாமகள் விழிக்கூட்டு பாரினில் வழி காட்டு

புத்தகம் பூஜை இட்டு அச்சத்தை பூப்போட்டு
பக்தியாய் துவங்கும் சுபயோகமே வெற்றியாய் பெருகும் மென்மெலுமே

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காக்கைச் சிறகினிலே நந்த லாலா! - நின்றன்
கரியநிறம் தோன்று தையே, நந்த லாலா!

பார்க்கும் மரங்கள் எல்லாம் நந்த லாலா! - நின்றன்
பச்சை நிறம் தோன்று தையே, நந்த லாலா!

கேட்கும் ஒலியில் எல்லாம் நந்த லாலா! - நின்றன்
கீதம் இசைக்குதடா, நந்த லாலா!

தீக்குள் விரலை வைத்தால் நந்த லாலா! - நின்னைத்
தீண்டும் இன்பம் தோன்றுதடா, நந்த லாலா!

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி
வித்யாரம்பம் கரிஷ்யாமி சித்திர்பவது மே சதா

நாத கலாபாரதி . . நாத கலாபாரதி நவராத்ரி கொலு நாயகி
அம்ப நாத கலாபாரதி நவராத்ரி கொலு நாயகி . . அம்ப நாத கலாபாரதி

விரிஞ்சன் திருநாவில் உறையும் கலைவாணி
விதிமாற்றாதோ சரஸ்வதி எழுத்தாணி

நாத கலா பாரதி நவராத்ரி கொலு நாயகி
அம்ப நாத கலா பாரதி

மிச்சமோ சொக்கனும் சொக்கிய மீன்விழி
தக்ஷிண மதுரையின் வீணா மாதங்கி

வெற்றிலை எச்சிலை பெற்றவன் கவியாய்
வெகுமதி அளித்தாயே சாமளை நீயே

ஸ்ருதியுடன் தருவேன் சாருகேசியே
வாசவி என்மனை வா கலைவாணியே

சகலகலாவல்லியே சாராதஹாசியே
தருவாய் நிறையும் ஆயுத பூஜையே

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கோயில் திரு அகவல் - 3

பால்கடல் கடையப் படுங்கடு வெண்ணெயைத்
திருமிடற்று அடக்கிய சிவனே அடைக்கலம்!
அடங்கலும் அடக்கிடும் கடுங்கொலைக் காலனைக்
கால்எடுத் தடக்கிய கடவுள் நின் அடைக்கலம்
உலகு அடங் கலும்படைத்து உடையவன் தலைபறித்து

இடக்கையில் அடக்கிய இறைவ! நின் அடைக்கலம்!
செய்யபொன் னம்பலச் செல்வ! நின் அடைக்கலம்;
ஐய! நின் அடைக்கலம்; அடியன் நின் அடைக்கலம்;
மனவழி அலைத்திடும் கனவெனும் வாழ்க்கையும்;
விழுப்பொருள் அறியா வழுக்குமறு மனனும்;

ஆணவ மலத்துதித்து அளைந்ததில் உளைந்திடும்
நிணவைப் புழுவென நெளிந்திடு சிந்தையும்;
படிறும் பாவமும் பழிப்புறு நினைப்பும்,
தவறும் அழுக்காறும் இவறுபொச் சாப்பும்
கவடும் பொய்யும் சுவடும் பெருஞ்சின

இகலும், கொலையும், இழிப்புறு புன்மையும்,
பகையும், அச்சமும், துணிவும், பனிப்பும்,
முக்குண மடமையும், ஐம்பொறி முயக்கமும்,
இடும்பையும் பிணியும் இடுக்கிய ஆக்கையை;
உயிர் எனுங் குருகுவிட்டு ஓடும் குரம்பையை

எலும்பொடு நரம்புகொண்டு இடையில் பிணித்துக்
கொழுந்தசை வேய்ந்தும் ஒழுக்கு விழுங் குடிலைச்
செழும்பெழு உதிரச் சிறுபுழுக் குரம்பையை,
மலவுடல் குடத்தைப் பலவுடல் புட்டிலைத்
தொலைவிலாச் சோற்றுத் துன்பக் குழியைக்


கொலை படைக் கலம்பல கிடைக்கும் கூட்டைச்
சலிப்புறு வினைப் பலசரக்குக் குப்பையைக்
கோள்சரக்கு ஒழுகும் பீற்றல் கோணியைக்
கோபத்தீ மூட்டுங் கொல்லன் துருத்தியை,
ஐம்புலப் பறவை அடையும்பஞ் சரத்தை.

புலராக் கவலை விளைமரப் பொதும்பை,
ஆசைக் கயிற்றில் ஆடும்பம் பரத்தைக்
காசிற் பணத்திற் சுழலுங் காற்றாடியை,
மக்கள் வினையின் மயக்குந் திகிரியைக்,
கடுவெளி உருட்டிய சகடக் காலைப்


பாவச் சரக்கொடு பவக்கடல் புக்குக்
காமக் காற்றெடுத்து அலைப்பக்
கெடுவழிக் கரைசேர் கொடுமரக் கலத்தை
இருவினை விலங்கொடும் இயங்குபுற் கலனைக்
நடுவன்வந் தழைத்திட நடுங்கும் யாக்கையைப்

பிணமெனப் படுத்தியான் புறப்படும் பொழுதுநின்
அடிமலர்க் கமலத்துக்கு அபயம்நின் அடைக்கலம்;
வெளியிடை உரும்இடி இடித்தென வெறித்தெழுங்
கடுநடை வெள்விடைக் கடவுள்நின் அடைக்கலம்;
இமையா நாட்டத்து இறையே! அடைக்கலம்;


அடியார்க்கு எளியாய்! அடைக்கலம் அடைக்கலம்;
மறையவர் தில்லை மன்றுள்நின் றாடிக்
கருணை மொண்டு அலையெறி கடலே! அடைக்கலம்,
தேவரும் முனிவரும் சென்றுநின் றேத்தப்
பாசிழைக் கொடியொடு பரிந்து அருள் புரியும்

எம்பெரு மானின் இணையடிக்கு அபயம்
அம்பலத் தரசே அடைக்கலம் உனக்கே!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருணைக் கடலாம்... காதர் வலியின் காரண சரிதம் || E.M.நாகூர் ஹனிபா | நாகூர் கச்சேரி 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆ..ஆ..ஆ..ஆ….ஆ..ஆ
ஆ..ஆ..ஆ..ஆ….ஆ..ஆ
ஆ..ஆ..ஆ..ஆ….ஆ..ஆ
ஆ..ஆ..ஆ..ஆ….ஆ..ஆ
ஆ..ஆ..ஆ..ஆ….ஆ..ஆ

தரிசனம் தரவேண்டும் இயேசையா
என் மேல் கரிசனம் உள்ளவர் நீரே ஐயா
தரிசனம் தரவேண்டும் இயேசையா
என் மேல் கரிசனம் உள்ளவர் நீரே ஐயா
பாவ உலகில் என் வாழ்வோ கொஞ்சம்
தேவ துணையின்றி துன்பம்தான் மிஞ்சும்
பாவ உலகில் என் வாழ்வோ கொஞ்சம்
தேவ துணையின்றி துன்பம்தான் மிஞ்சும்
ஊரோடும் உறவோடும் வளமோடு வாழ்ந்தாலும்
காலம் காலமாக என்னைக்காக்கும்
திருக்குமரா.
தரிசனம் தரவேண்டும் இயேசையா
என் மேல் கரிசனம் உள்ளவர் நீரே ஐயா

நாளும் பொழுதும் உம் நினைவோடுதான்
வாழும் நல்வாழ்வு தரவேண்டுமே..
கபதகரி ரிகநிகச பதபதசபதசகா..
ரிகநிகச தததப கரிபம நிசகரி ரிதபரி சகமா..
நாளும் பொழுதும் உம் நினைவோடுதான்
வாழும் நல்வாழ்வு தரவேண்டுமே
காணும் உயிர் யாவும் தேவன் அருளாலே
காணும் உயிர் யாவும் தேவன் அருளாலே
தேனின் சுவையோடு..ஆ..ஆ..ஆ..ஆ
-இயெசையா
தேனின் சுவையோடு கீதம் பாடிடுமே
ராக தாள பாவ தாள நயமுடனே
நயமுடனே
தரிசனம் தரவேண்டும் இயேசையா
என் மேல் கரிசனம் உள்ளவர் நீரே ஐயா

வானும் வின்மீனும் உலகோடுதான்
யாவும் உம் சாயல் தெளிவாகுதே
ஆ..ஆ..ஆ..ஆ….ஆ..ஆ
ஆ..ஆ..ஆ..ஆ….ஆ..ஆ
வானும் வின்மீனும் உலகோடுதான்
யாவும் உம் சாயல் தெளிவாகுதே
பாரில் எமக்காக தேவசுதனாக
பாரில் எமக்காக தேவசுதனாக
நாதர் கனிவோடு ஆ..ஆ..ஆ..ஆ….ஆ
-இயெசையா
நாதர் கனிவோடு தாமே நாடினீரே
பாவ நாச தேவ பாலன் தயவுடனே
தயவுடனே
தரிசனம் தரவேண்டும் இயேசையா
என் மேல் கரிசனம் உள்ளவர் நீரே ஐயா
தரிசனம் தரவேண்டும் இயேசையா
என் மேல் கரிசனம் உள்ளவர் நீரே ஐயா
பாவ உலகில் என் வாழ்வோ கொஞ்சம்
தேவ துணையின்றி துன்பம்தான் மிஞ்சும்
பாவ உலகில் என் வாழ்வோ கொஞ்சம்
தேவ துணையின்றி துன்பம்தான் மிஞ்சும்
ஊரோடும் உறவோடும் வளமோடு வாழ்ந்தாலும்
காலம் காலமாக என்னைக்காக்கும்
திருக்குமரா.
தரிசனம் தரவேண்டும் இயேசையா
என் மேல் கரிசனம் உள்ளவர் நீரே ஐயா

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆனந்த கொலு இருப்பாள் அஷ்ட லக்ஷ்மியே
அன்னலக்ஷ்மி ஸ்வர்ணலட்சுமி ஆதிலக்ஷ்மியே

கன்றோடு கறவை தரும் கருடவாஹினி
ஸ்ரீதரன் தேவியே ஸ்ரீதேவியே

அம்மா ஸ்ரீதரன் தேவியே ஸ்ரீ தேவியே

ஒன்பது நாளும் ஒவ்வொரு கோலத் திருக்காட்சியே
மங்கையர் நாங்கள் கண்டுமகிழ்ந்தோம் பங்கஜமாலினியே

ஆனந்தம் . . . ஆனந்தம் . . .

இந்திரன் வழிபடவே இளமையைத் தந்தாய் ஆதி பாற்கடல் தேவி
சந்திரன் சோதரியே என்மனை வாராய் முந்தி பொன்மழைத் தூவ

கொஞ்சம் பார்த்திடம்மா குசேலன் கூட செல்வா குபேரன் ஆக கோமள
வள்ளியே ஆசிகள் போட கோவிந்த மாதவன் கூட ஆந்த ஊஞ்சலில் ஆட

வேதங்கள் வழிகாட்ட இல்லம் வரணும் ராஜ கஜலக்ஷ்மிதேவி
தாழை விளக்கேற்ற தயவினைத் தரணும் தான்ய தனலக்ஷ்மிதேவி

பேதைக்குதவிடம்மா வீரலக்ஷ்மியே என்னை ஊரார் மெச்சவே
மேதையாக்கிடம்மா வித்யாலக்ஷ்மியே சீதாலக்ஷ்மியே ஸ்ரீவரலக்ஷ்மியே

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஓம் க்லீம்  குமாராய குங்கும வர்ணாய
மஹா மோஹனாய மகா ஸ்தம்பனாய
பேராசைஞ விக்ரம்ச காய
வள்ளி தேவ சேனா பதையே நமோ நமஹ
சுப்ரமண்யோகம் சுப்ரமண்யோகம் சுப்ரமண்யோஹோ
தத்புருஷாய வித்மஹே மஹாஸேனாய தீமஹி
தந்ன சண்முக ப்ரசோதயாத்

வைகறை பொழுதின் வாசலிலே
திருக்காட்சி தந்தான் மலையினிலே

கந்தனின் அழகை காண்கையிலே
என் கண்களும் குளிர்ந்தது காலையிலே

கண்களும் குளிர்ந்தது காலையிலே

காக்க காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியில் நோக்க

தாக்க தாக்க தடையற தாக்க
பார்க்க பார்க்க பாவம் பொடிபட

மலையினிலே . . . சென்னிமலையினிலே . . .

முருகா முருகா முருகையா
உருகாதோ உந்தன் மனமய்யா

கண்களில் நீரும் கசியுதய்யா
என் கண்களில் நீரும் கசியுதய்யா

உன்னை கண்டதும் கவலைகள் பறந்தய்யா

கண்களில் நீரும் கசியுதய்யா
உன்னை கண்டதும் கவலைகள் பறந்தய்யா

கண்டதும் கவலைகள் பறந்தய்யா

மலையினிலே . . . ஆதி பழநியிலே . . .

காலடி ஓசையை கேட்டேனம்மா
வருவது குகனென்று அறிந்தேனம்மா

மெல்ல நகைத்து என்னை அழைத்தானம்மா

மெல்ல நகைத்து என்னை அழைத்தானம்மா
என் நினைவும் அவன் பின்னே சென்றதம்மா

நினைவும் அவன் பின்னே சென்றதம்மா

அலங்கார தீபம் அழைக்கின்றதே
அந்த சிங்கார சென்னிமலையினிலே

ஓங்கார மணியோசை ஒலிக்கின்றதே

ஓங்கார மணியோசை ஒலிக்கின்றதே
அந்த ரீங்காரம் செவியில் ஓம் என்றதே

ரீங்காரம் செவியில் ஓம் என்றதே

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இருளில் நிலவாக பிறந்தார்...|| இசை முரசு E.M.நாகூர் ஹனிபா | நாகூர் கச்சேரி

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திருவிருந்து பாடல்
உன்னை நாடி நாடி வரும் நேரம்
உயிர் நாடி உருகிப்பாடும் 
சொந்தம் தேடித்தேடி வரும் வேளை 
சொல்லாமல் சோகம் போகும் 
உன்னில் என்னை என்னில் உன்னை 
என்றும் அன்பில் ஒன்றி வாழ 
வாழ்த்தும் உந்தன் வார்த்தை 

வாழ்வில் ஒளி உன் வார்த்தை 
வழியை விலக விழுந்தேன் 
வாழ்வே உன்னில் சரணாக 
வரங்கள் சுரந்தாய் மழையாக 
வானம்போன்ற உந்தன் அன்பில் வாழும் ஜீவன் நான் 
உன் வள்ளல் உள்ளம் வார்த்தை வளமை தந்தது 

தனிமை இருளில் சிறையில் 
தவித்து என்னை இழந்தேன் 
இறையே உன்னை உயிராக 
இதயம் தந்தாய் உணர்வாக 
எந்தன் வாழ்வு உந்தன் உறவில் சொந்தம் காண்கிறதே என் 
நெஞ்சில் என்றும் சந்தோசந்தான் சந்தோசந்தானே

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மாலை சாற்றினாள்
கோதை மாலை மாற்றினாள்
மாலை சாற்றினாள்
கோதை மாலை மாற்றினாள்
மாலடைந்து மதிலரங்கன்
மாலை அவர்தன் மார்பிலே
மாலை சாற்றினாள்
கோதை மாலை மாற்றினாள்
மாலடைந்து மதிலரங்கன்
மாலை அவர்தன் மார்பிலே
மையலாய் தையலாள் மாமலர் கரத்தினால்
மையலாய் தையலாள் மாமலர் கரத்தினால்
மாலை சாற்றினாள்
கோதை மாலை மாற்றினாள்

ரங்கராஜனை அன்பர் தங்கள் நேசனை
ரங்கராஜனை அன்பர் தங்கள் நேசனை
ஆசி கூறி பூசுரர்கள் பேசி மிக்க வாழ்த்திட
ரங்கராஜனை அன்பர் தங்கள் நேசனை
ஆசி கூறி பூசுரர்கள் பேசி மிக்க வாழ்த்திட
அன்புடன் இன்பமாய் ஆண்டாள் கரத்தினால்
அன்புடன் இன்பமாய் ஆண்டாள் கரத்தினால்
பூ மாலை சாற்றினாள்
கோதை மாலை மாற்றினாள்
மாலை சாற்றினாள்
கோதை மாலை மாற்றினாள்
பூ மாலை சாற்றினாள்
கோதை மாலை மாற்றினாள்
சீதா மாலை சாற்றினாள்
கோதை மாலை மாற்றினாள்
மாலை சாற்றினாள்
கோதை மாலை மாற்றினாள்
துளசி மாலை சாற்றினாள்
கோதை மாலை மாற்றினாள்
மாலை சாற்றினாள்
கோதை மாலை மாற்றினாள்
பூ மாலை சாற்றினாள்
கோதை மாலை மாற்றினாள்
பூ மாலை சாற்றினாள்
கோதை மாலை மாற்றினாள்

ராகம்: சங்கராபரணம்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இறைவா முருகா வேல் அழகா

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திருமலைக் கோடி தங்கக் கோயில் நாராயணி அம்மா
உன் குருவடி பாதம் சரணமடைந்தேன் குறைகள் இல்லையம்மா

வேல்விழியாளே நானுனைக் காண வேலூர் வந்தேனே
உன் காலடி கண்டே நீண்ட காலம் சுகமாய் வாழ்வேனே

நாராயணி நமோ நாராயணி நாராயணி லக்ஷ்மி நாராயணி
நாராயணி நமோ நாராயணி நாராயணி லக்ஷ்மி நாராயணி

தாமரைப்பூவில் வாழும் காமனின் தாயே
தயை செய்ய நேரமில்லையோ

பூ மகளே பொன்னருளே நானும் உன் மகள்தானம்மா
ஸ்ரீ மஹா லக்ஷ்மியே கண் பாராயம்மா

ஸ்ரீதர கேசவன் மாதவன் மார்பில் வாழும் ஸ்ரீமதியே
உன் திருவிளக்கேற்றி வணங்குகின்றேன் நற்றாரும் மாநிதியே

திருமகளே வரமருளே காலடியின் ஓரத்திலே நான் வாழ

ஆனந்த யோகம் நாளும் அளித்திடும் மாயே
அடியேனை மறந்தனையோ

ஸ்ரீபுரமே வாழ்பவளே ஸ்ரீரங்கன் மகிழ் தேவியே
நான் உன்னை பூஜித்தேன் மலர்த் தூவியே

ஜோதி அண்ணாமலை ஆதி திருமலை
இடையினில் வாழ்பவளே

உன் திருமலைக் கோடி வருபவர் கோடி
தருவாய்த் திருவருளே

பொன்மகளே மண்மகளே
யோகா சுப மங்களங்கள் எனை சேர

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ராஜாதி ராஜாய ப்ரஸஹ்ய ஸாஹினே
நமோ வயம் வைஸ்ரவணாய குர்மஹே
ஸமே காமாந் காம காமா ய மஹ்யம்
காமேஸ்வரோ வைஸ்ரவணோத தாது
குபேராய வைஸ்ரவணாய மஹாராஜாய நம:

வருக வருக திருமகளே வருக
தனம் தருக தருக மங்களங்கள் பெருக

குபேர லக்ஷ்மியே வருக
எங்கள் குலம் விளங்க குங்குமமே தருக

எங்கள் குலம் விளங்க குங்குமமே தருக

யக்ஷ ராஜன் மெச்சும் மோஹினி
பக்ஷி ராணி எனை ரக்ஷிப்பாய் நீ

கட்சி வரதனின் கனகவல்லியே
கச்சவ கர்வநிதி தாரும் அன்னையே

மட்சயவதாரனின் பாற்கடல் தன்னையே
துளியும் பிரியாத மட்சியகன்னியே

குறையா செல்வமே கோடி உண்டு உன்வசம்
வருகை தருவதற்கு அன்பு உண்டு என்னிடம்

அளிக்க சுமங்கலியே வா
மஹா பத்மநிதி பதுமநிதி தா

கோலக் கண்ணனின் கோதை ராதையே
குந்தமுகுந்தநிதி சிந்து பாவையே

எழவர் குழலே அலர்மேல் மங்கையே
ஏழு பிறவிக்கும் நீங்காது என்னையே

கோசை சங்கநிதி மஹாலக்ஷ்மி சீதனம்
ஆச குழந்தை மீது பார்வை வீசு சீக்கிரம்

நீல நிதியும் நீயே நித்தய ஸ்ரீநிதியே சிந்தாமணியே

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உத்ரா உன்னிகிருஷ்ணனின் தேனான குரலில் மஹாலக்ஷ்மி வருவாயே

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கச்சித் திரு அகவல்

திருமால் பயந்த திசைமுகன் அமைத்து
வரும் ஏழ் பிறவியும் மானுடத் துதித்து
மலைமகள் கோமான் மலர் அடி இறைஞ்சிக்
குலவிய சிவபதங் குறுகாது அவமே
மாதரை மகிழ்ந்து காதல் கொண்டாடும்


மானிடர்க் கெல்லாம் யானெடுத் துரைப்பேன்
விழிவெளி மாக்கள் தெளிவுறக் கேண்மின்;
முள்ளும் கல்லும் முயன்று நடக்கும்
உள்ளங் காலைப் பஞ்சென உரைத்தும்,
வெள்ளெலும் பாலே மேவிய கணைக்கால்

துள்ளும் வரால் எனச் சொல்லித் துதித்தும்,
தசையும் எலும்புந் தக்கபுன் குறங்கை
இசையுங் கதலித் தண்டென இயம்பியும்
நெடும் உடல் தாங்கி நின்றிடும் இடையைத்
துடிபிடி யென்று சொல்லித் துதித்தும்,


மலமும் சலமும் வழும்புந் திரையும்
அலையும் வயிற்றை ஆலிலை யென்றும்,
சிலந்தி போலக் கிளைத்துமுன் னெழுந்து
திரண்டு விம்மிச் சீப்பாய்ந்து ஏறி
உகிரால் கீறல் உலர்ந்து உள் உருகி


நகுவார்க்கு இடமாய் நான்று வற்றும்
முலையைப் பார்த்து முளரிமொட் டென்றும்,
குலையும் காமக் குருடர்க்கு உரைப்பேன்;
நீட்டவும் முடக்கவும் நெடும் பொருள் வாங்கவும்
ஊட்டவும் பிசையவும் உதவி இங் கியற்றும்

அலங்கையைப் பார்த்துக் காந்தள் என்றுரைத்தும்,
வேர்வையும் அழுக்கும் மேவிய கழுத்தைப்
பாரினில் இனிய கமுகெனப் பகர்ந்தும்,
வெப்பும் ஊத்தையும் மேவிய வாயைத்
துப்பு முருக்கின் தூய்மலர் என்றும்,


அன்ன முங் கறியும் அசைவிட்டிறக்கும்
முன்னிய பல்லை முத்தென மொழிந்தும்
நீரும் சளியும் நின்று நின்று ஒழுகும்
கூறிய மூக்கைக் குமிழ் எனக் கூறியும்
தண்ணீர் பீளை தவிராது ஒழுகும்


கண்ணைப் பார்த்துக் கழுநீர் என்றும்
உள்ளுங் குறும்பி ஒழுகுங் காதை
வள்ளைத் தண்டின் வளம் என வாழ்த்தியும்
கையும் எண்ணெயும் கலவாது ஒழியில்
வெய்ய அதரும் பேனும் விளையத்


தக்க தலை யோட்டில் முளைத்து எழுந்த
சிக்கின் மயிரைத் திரள் முகி லென்றும்
சொற்பல பேசித் துதித்து நீங்கள்
நச்சிச் செல்லும் நரக வாயில்
தோலும் இறைச்சியும் துதைந்து சீப்பாயும்


காமப் பாழி; கருவிளை கழனி;
தூமைக் கடவழி; தொளைபெறு வாயில்;
எண்சாண் உடம்பும் இழியும் பெருவழி!
மண்பால் காமம் கழிக்கும் மறைவிடம்;
நச்சிக் காமுக நாய்தான் என்றும்


இச்சித் திருக்கும் இடைகழி வாயில்;
திங்கள் சடையோன் திருவருள் இல்லார்
தங்கித் திரியும் சவலைப் பெருவழி;
புண் இது என்று புடவையை மூடி
உள் நீர் பாயும் ஓசைச் செழும்புண்


மால்கொண்டு அறியா மாந்தர் புகும்வழி;
நோய் கொண்டு ஒழியார் நுண்ணியர் போம்வழி;
தருக்கிய காமுகர் சாரும் படுகுழி;
செருக்கிய காமுகர் சேருஞ் சிறுகுழி;
பெண்ணும் ஆணும் பிறக்கும் பெருவழி;


மலம் சொரிந்து இழியும் வாயிற்கு அருகே
சலம்சொரிந்து இழியும் தண்ணீர் வாயில்;
இத்தை நீங்கள் இனிது என வேண்டா;
பச்சிலை இடினும் பத்தர்க்கு இரங்கி
மெச்சிச் சிவபத வீடருள் பவனை


முத்தி நாதனை மூவா முதல்வனை
அண்டர் அண்டமும் அனைத்துள புவனமும்
கண்ட அண்ணலைக் கச்சியிற் கடவுளை
ஏக நாதனை இணையடி இறைஞ்சுமின்
போக மாதரைப் போற்றுதல் ஒழிந்தே!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அருள் மழை பொழிவாய் ரஹ்மானே || இசை முரசு E.M.நாகூர் ஹனிபா | இசை நிகழ்ச்சி

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எப்படி உமை துதிப்பேன்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா..
பாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா..

முன்னோர்கள் செய்த பாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா
என் அன்னையே சௌபாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா
என் இல்லமே சௌபாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா

நித்தில கொலுசுகள் கட்டியம் படிக்க
நித்தில கொலுசுகள் கட்டியம் படிக்க
உத்தமி வருகையை மெட்டிகள் ஒலிக்க
நித்தில கொலுசுகள் கட்டியம் படிக்க
உத்தமி வருகையை மெட்டிகள் ஒலிக்க
நித்ய சுமங்கலி பூஜையில் அழைக்க
மத்துறு தயிரினை வெண்ணையாய் ஜொலிக்க

பாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா..
என் அன்னையே சௌபாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா..

கனக வ்ருக்க்ஷமாய் தனமழை தருக
மணைகள் எங்கிலும் திரவியம் பெறுக
கனக வ்ருக்க்ஷமாய் தனமழை தருக
மணைகள் எங்கிலும் திரவியம் பெறுக
தினகரன் கோடி உன் மேனியில் உருக
ஜனகராஜன் திரு கண்மணி வருக

பாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா..
என் இல்லமே சௌபாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா..

சங்கநிதி முதல் நவநிதி தாராய்
கங்கண கையால் மங்களம் செய்தாய்
சங்கநிதி முதல் நவநிதி தாராய்
கங்கண கையால் மங்களம் செய்தாய்
குங்கும பூவாய் பங்கயப் பாவை
வேங்கடரமனின் பூங்கொடி வாராய்

பாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா..
என் இல்லமே சௌபாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா..

அத்திகள் சொரியும் மனையில் ஐஸ்வர்யம்
நித்தம் மஹோத்சவம் நித்திய மங்களம்
அத்திகள் சொரியும் மனையில் ஐஸ்வர்யம்
நித்தம் மஹோத்சவம் நித்திய மங்களம்
சக்திக் ஏத்தபடி சாது போஜனம்
சாப்பிட்டு தருவாய் அக்க்ஷதை சீதனம்

பாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா..
என் அன்னையே சௌபாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா..

சர்க்கரை பாயசம் சுமங்கலி அருந்த
சுக்கிர வார பூஜையில் இருந்து
சர்க்கரை பாயசம் சுமங்கலி அருந்த
சுக்கிர வார பூஜையில் இருந்து
அக்கறையோடு சந்தனம் குழைத்து
சாற்றிட புரந்தர விட்டலனை அழைத்து

பாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா..
என் இல்லமே சௌபாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா..

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பொன்னழகு திருமார்பில் பூமாலை
திருப்புகழோடு ஓம் என்னும் இசைமாலை
கண்குளிர தாங்கிநின்றாய் வடிவேலை
உன்னை கைகூப்பித் தொழுவதுதான் என் வேலை
தேவானை வள்ளியுடன் திருக்காட்சி
எழில்திருச்செந்தூர் கோவிலில் உன் அருளாட்சி
நாவார உனைப்பாட எனக்காசை
இசை நலம்கூட்டும் உன்கோவில் மணியோசை
கற்பூரம் உன்வீட்டில் சுடராகும்
மனம் கமழ்கின்ற சந்தனம் உன் பரிசாகும்
நற்பேறு எல்லாமும் தருவோனே
எங்கள் நாயகனே கதிர்வேலா முருகோனே
குமரா உன்திருநீறு மருந்தல்லவோ
உன் குங்குமமே மங்களமாம் விருந்தல்லவோ
அமையும் ஓம் மந்திரமே உனதல்லவோ
நின் அருளொன்றே இவ்வுலகில் பெரிதல்லவோ

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திக்குத்திகந்தமும் கொண்டாடிய வந்து... தீன் கூறி நிற்பர் | இசை முரசு E.M.நாகூர் ஹனிபா

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.