Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சாத்தான்குளத்தில் தடையை மீறி கடையை திறந்ததாக கைது: சிறையில் அடைக்கப்பட்ட தந்தை-மகன் சாவு

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாத்தான்குளம் வியாபாரி-மகன் உயிரிழந்த சம்பவம்; சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரை - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சாத்தான்குளம் வியாபாரி-மகன் உயிரிழந்த சம்பவம்; சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரை - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சாத்தான்குளம் போலீசாரால் கைது செய்யப்பட்ட வியாபாரியும், அவரது மகனும் உயிரிழந்த சம்பவம் பற்றி சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார்.
பதிவு: ஜூன் 29,  2020 05:45 AM
சேலம்,

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்தவர் ஜெயராஜ். கடந்த 19-ந் தேதி இரவில் ஜெயராஜிடம் போலீசார் கடையை அடைக்கச் சொன்னதால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, போலீசார் அவரை விசாரணைக் காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இதனால் ஜெயராஜை தேடி அவரது மகன் பென்னிக்சும் அங்கு சென்றார். அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார், பின்னர் கோவில்பட்டி சப்-ஜெயில் அடைத்தனர். அங்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் தந்தை-மகன் இருவரும் இறந்துவிட்டனர்.


போலீசார் தாக்கியதில் தந்தையும், மகனும் இறந்ததாக கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கண்டனம்

வியாபாரியும், அவரது மகனும் சிறையில் மரணம் அடைந்தது தொடர்பாக அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தங்கள் கண்டனத்தை தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர், 2 சப்-இன்ஸ்பெக்டர்கள், 2 ஏட்டுகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். மற்ற போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணத்துக்கு நீதி கேட்கும் வகையில் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் நடத்தினார்கள்.

ஜெயராஜ் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிவாரண உதவி வழங்கியுள்ள தமிழக அரசு, அவர்களுடைய குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று அறிவித்து உள்ளது.

மதுரை ஐகோர்ட்டில் வழக்கு

இதற்கிடையே, இந்த சம்பவம் தொடர்பாக ஜெயராஜின் மனைவி செல்வராணி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். மேலும் ஐகோர்ட்டும் இந்த சம்பவம் குறித்து தாமாக முன்வந்து விசாரிக்க முடிவு செய்தது. கோவில்பட்டி முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு பாரதிதாசன் சாத்தான்குளத்தில் தங்கி இருந்து சாட்சிகளிடமும், கோவில்பட்டி சிறையிலும் நேரடியாக விசாரணை நடத்த ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

அதன்பேரில் மாஜிஸ்திரேட்டு பாரதிதாசன், தூத்துக்குடி தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு ஹேமா ஆகியோர் நேற்று முன்தினம் கோவில்பட்டி சிறைக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் சிறையில் இருந்த ஆவணங்களையும், கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

இந்த நிலையில், தந்தை- மகன் இறந்தது பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்த பரிந்துரை செய்யப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார்.

சேலம் மாவட்டம் தலைவாசலில் ஆசியாவிலேயே பெரிய அளவில் அமைக்கப்படும் நவீன கால்நடை பூங்கா கட்டுமான பணிகளை நேற்று பார்வையிட்ட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்தவர்கள் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ். செல்போன் கடையை மூடுவதில் ஏற்பட்ட பிரச்சினையில் இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கோவில்பட்டி கிளைச்சிறையில் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர். அப்போது, இருவரும் கோவில்பட்டி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்து உள்ளனர்.

சி.பி.ஐ. விசாரணை

இதுகுறித்து ஐகோர்ட்டு மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டு உள்ளது. இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரைக்க அரசு முடிவு செய்து உள்ளது. இந்த வழக்கு மதுரை ஐகோர்ட்டு கிளையில் விசாரணைக்கு வரும் போது இதை தெரிவித்து, கோர்ட்டு அனுமதி பெற்று சி.பி.ஐ.யிடம் இந்த வழக்கு ஒப்படைக்கப்படும்.

ஏற்கனவே காவல்துறைக்கு அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்களிடம், வியாபாரிகளிடம் அன்பாக நடந்து கொள்ள வேண்டும். பிரச்சினை என்றால் வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே நேரத்தில் தேவையில்லாமல் பொதுமக்களுக்கு தொந்தரவு கொடுக்கக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/06/28235158/Sathankulam-fatherson-fatal-incident-CBI-inquiry-Recommendation.vpf

 

  • Replies 82
  • Views 7.5k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

CBI-க்கு மாத்தினா கேள்வி கேட்க கூடாதா?- Kasturi-ன் சரமாரி கேள்விகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜெயராஜ்-பென்னிக்ஸ் கைதின் போது என்ன நடந்தது? போலீசாரின் நடவடிக்கைகளை அம்பலப்படுத்தும் சி.சி.டி.வி காட்சிகள்

ஜெயராஜ்-பென்னிக்ஸ் கைதின் போது என்ன நடந்தது? போலீசாரின் நடவடிக்கைகளை அம்பலப்படுத்தும் சி.சி.டி.வி காட்சிகள்

சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரிகள் ஜெயராஜ்-பென்னிக்ஸ் கைதின் போது உயிரிழப்பில் காவல்துறை நடவடிக்கைகளை அம்பலப்படுத்தும் சி.சி.டி.வி காட்சிகள்.
பதிவு: ஜூன் 30,  2020 07:05 AM

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த  வியாபாரி ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மதுரை ஐகோர்ட் கிளை தாமாகவே முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரித்தது. ஐகோர்ட் உத்தரவின்பேரில் மாஜிஸ்திரேட் விசாரணை நடந்து வருகிறது.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட போலீஸ்  அதிகாரிகளை விடுவிக்க முயற்சி நடப்பதாக புகார் எழுந்தது. மேலும் அதிகாரிகள் தரப்பில், தந்தை, மகனுக்கு உடல் நலக்குறைவு, மூச்சு திணறலால் உயிரிழந்ததாக மாற்று கருத்துகள் வந்ததாலும்  மக்களுக்கு குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து வணிகர்கள் சங்கத்தினர், அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் வழக்கை சி.பி.சி.ஐ.டி. பிரிவுக்கு மாற்றி விசாரிக்க வலியுறுத்தினர். 

இதற்கிடையே, சேலம் மாவட்டம் தலைவாசலில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது, சாத்தான்குளம் வியாபாரிகள் மரணம் தொடர்பான  வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற அரசு முடிவு செய்துள்ளது. மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு விசாரணைக்கு வரும்போது, இதனை தெரிவித்து, அனுமதி பெற்று சி.பி.ஐ.யிடம் இவ்வழக்கு ஒப்படைக்கப்படும் என்றார். 

இந்நிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது, சாத்தான்குளத்தில் தந்தை - மகன் மரணம் அடைந்த சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றம் செய்ய அனுமதி கேட்டு தமிழக அரசு சார்பில் முறையீடு செய்யப்பட்டது. இதைக் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றுவது தமிழக அரசின் கொள்கை முடிவு. அரசின் கொள்கை முடிவுக்கு நீதிமன்ற அனுமதி தேவையில்லை என்று கருத்துத் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து தற்போது இந்த வழக்கு குறித்த விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. 

இந்த நிலையில் ஜெயராஜ், பென்னிக்ஸ் மீது காவல்துறை பதிவுசெய்த முதல்தகவல் அறிக்கையில் உள்ள விவரங்களையும் மறுக்கும் வகையில் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகியுள்ளது அது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

சிசிடிவி காட்சியில், போலீசார் அழைத்ததும் செல்போன் கடை அருகில் இருந்து ஜெயராஜ் போலீஸ் வாகனத்தை நோக்கி செல்வதும், தொடர்ந்து சிறிது நேரத்தில் தனது தந்தையை போலீசார் அழைத்து செல்வதை அறிந்து பென்னிக்ஸ் கடையில் இருந்து வெளியே வருவதும், பின்னர் அவர் கடையை பூட்டி விட்டு, நண்பருடன் மோட்டார் சைக்கிளில் போலீஸ் நிலையத்துக்கு புறப்பட்டு செல்வதும் பதிவாகி இருந்தது.

மேலும், அப்போது பக்கத்து கடைகள் திறந்து இருந்ததும், செல்போன் கடை முன்பு கூட்டமும், எந்தவித தகராறும் நடைபெறவில்லை என்பதும் பதிவாகி உள்ளது. இது போலீசாரின் முதல் தகவல் அறிக்கைக்கு முற்றிலும் மாறாக உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

முன்னதாக, ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவர் மீதும் காவல்துறையினர் வழக்கு ஒன்றை பதிவுசெய்திருந்தனர். இது தொடர்பாக பதிவுசெய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில்,

ஏபிஜெ மொபைல்ஸ் கடை அரசு அனுமதியளித்துள்ள நேரத்திற்கு பிறகு, அரசு உத்தரவை மீறி திறந்திருந்தது. கடையின் முன்பு கடையின் உரிமையாளர் ஜெயராஜும் அவரது மகன் பென்னிக்ஸ் என்பவரும் அவரது நண்பர்களும் நின்று கொண்டிருந்தனர். நாங்கள் அவர்களைக் கூட்டம் போட வேண்டாம், அமைதியான முறையில் செல்லுங்கள் என்று சொன்னோம். அதற்கு மற்றவர்கள் கலைந்து சென்றுவிட்டார்கள். மேற்படி ஜெயராஜூம் அவரது மகன் பென்னிக்சும் தரையில் அமர்ந்து கொண்டு போக முடியாது என்று சொல்லி தரையில் உருண்டார்கள். அதில் அவர்களுக்கு ஊமைக்காயம் ஏற்பட்டது" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

சாத்தான்குளத்தில் தந்தை-மகன் உயிரிழந்த விவகாரத்தில் போலீசாரின் முதல் தகவல் அறிக்கைக்கு மாறாக வெளியான சி.சி.டி.வி. கேமரா காட்சி இந்த வழக்கில் திடீர் திருப்பத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

https://www.dailythanthi.com/News/TopNews/2020/06/30070521/What-Happened-During-JeyarajBeniks-Arrests-CCTV-Footage.vpf

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் 3,949 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 2,167 பேர் பாதிப்பு: மீண்டும் 2-ம் இடத்தில் தமிழகம் 

3-949-cases-of-coronavirus-in-tamil-nadu-2167-affected-in-chennai-tamil-nadu-again-2nd-place  

சென்னை

தமிழகத்தில் இன்று 3,949 பேருக்குக் கரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 86,224 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் 2167 பேருக்குத் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னை தொற்று எண்ணிக்கை 55,969 ஆக அதிகரித்துள்ளது.

3,949 என்கிற மொத்த தொற்று எண்ணிக்கையில் 54.8 சதவீதத் தொற்று சென்னையில் (2,167 ) உள்ளது. தமிழகத்தின் மொத்த எண்ணிக்கை 86,224-ல் சென்னையில் மட்டும் 55,969 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மொத்த தமிழக எண்ணிக்கையில் 64.9 சதவீதம் ஆகும். 47,749 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் மொத்த எண்ணிக்கையில் டிஸ்சார்ஜ் சதவீதம் 55.3 சதவீதமாக உள்ளது

நாளுக்கு நாள் தமிழ்நாட்டின் மொத்த எண்ணிக்கை, மற்ற மாநிலங்களின் ஒவ்வொரு நாள் எண்ணிக்கையையும் முறியடித்து 85 ஆயிரத்தைக் கடந்து 90 ஆயிரத்தை நோக்கிச் செல்கிறது. இந்திய அளவில் மகாராஷ்டிரா, டெல்லிக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் தமிழகம் இருந்து வருகிறது.

தமிழகம் 86 ஆயிரம் தொற்று எண்ணிக்கையைத் தொட்ட நிலையில், இன்று சென்னையும் 55 ஆயிரத்தைக் கடந்துவிட்டது. புலம்பெயர் தொழிலாளர்கள், அண்டை மாநிலங்களிலிருந்து தமிழகம் திரும்புவோர் தொற்றுடன் வருகின்றனர். 3,500 பேர் இதுவரை திரும்பியுள்ளனர். ஆனால், தமிழகத்தில் குறிப்பாக சென்னைக்குள் நெரிசல் காரணமாக தொற்று கணிசமாக அதிகரித்து வருகிறது. இது தமிழகத்துக்குப் பெரிய சவாலாக உள்ளது. பொதுமக்கள் தங்களைக் கட்டுப்பாடாக வைத்துக்கொள்வதே நோய்த்தொற்றிலிருந்து காக்கும்.

இன்று மட்டும் வெளி மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு வந்தவர்களில் 108 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரசு அனுமதி அளித்தபின் அண்டை மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து விமானம், ரயில், சாலை மார்க்கமாக வந்தவர்கள் இன்றைய தேதி வரை மொத்த எண்ணிக்கை 2,79,866.

சென்னையின் தொற்று எண்ணிக்கையே தினமும் தமிழகத் தொற்று எண்ணிக்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. தமிழகத்தில் உயிரிழப்பு 1100-ஐக் கடந்துள்ளது. உயிரிழந்த 1,141 பேரில் சென்னையில் மட்டுமே 846 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று ஒருநாள் சென்னையில் மட்டும் 37 பேர் உயிரிழந்துள்ளனர்.

மொத்த உயிரிழப்பில் சென்னையில் உயிரிழந்தவர்கள் மட்டும் 74.1 சதவீதமாகும். சென்னையின் மொத்த எண்ணிக்கையான 55,969-ல் 846 பேர் உயிரிழந்திருப்பதன் மூலம் மரண விகிதம் சென்னையில் 1.5% ஆக உள்ளது. தமிழக மொத்த எண்ணிக்கையில் தமிழகத்தின் மரண விகிதம் 1.3% ஆக உள்ளது.

சென்னையில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தனிக்கவனம் செலுத்தப்படுகிறது. சென்னை மாநகராட்சி சார்பில் சென்னையில் குடிசைப் பகுதி, வருமானத்தில் பிற்பட்ட நிலையில் உள்ள பகுதி மக்கள் 28 லட்சம் மக்களைக் குறிவைத்து சமுதாய முன்னெடுப்பு திட்டத்தை சென்னை மாநகராட்சி அமல்படுத்துகிறது. மருத்துவ முகாம்கள் மூலம் நாளொன்றுக்கு 30,000 பேருக்குச் சோதனை செய்யப்படுவதாக ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

சென்னையில் ஜூன் 19-ம் தேதி முதல் முழு ஊரடங்கு போடப்பட்டு பொதுமக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் வீடு வீடாகச் சோதனை நடத்தவும், பல்ஸ் ஆக்சி மீட்டர் மூலம் சோதனை நடத்தவும், 580 மருத்துவ மையங்களை மாநகராட்சி நடத்தி வருகிறது. சென்னையில் ஒரு நாளைக்கு 10 ஆயிரம் பேருக்குச் சோதனை நடத்தப்படுவதாகவும் அதில் 3,500 பேர் நோய் அறிகுறியுடன் உள்ளதாகவும் ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார்.

அகில இந்திய அளவில் மகாராஷ்டிரா ஒன்றரை லட்சத்தைக் கடந்துவிட்டது. அங்கு 1,64,626 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் அதிக அளவில் தொற்று எண்ணிக்கை காரணமாக மூன்றாம் இடத்திலிருந்து இரண்டாம் இடத்திற்கு மீண்டும் வந்துள்ளது. இன்றைய எண்ணிக்கை 86,224. அதற்கு அடுத்த இடத்தில் டெல்லி 83,077 என்ற எண்ணிக்கையுடன் இன்று உள்ளது. குஜராத்தில் கரோனா தொற்று எண்ணிக்கை 31,320 ஆக உள்ளது.

இன்று சென்னை உள்ளிட்ட 36 மாவட்டங்களிலும் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் தவிர 35 மாவட்டங்களில் 1,782 பேருக்குத் தொற்று உள்ளது. இதில் சென்னையைத் தவிர வேறு சில மாவட்டங்களிலும் நான்கு இலக்கத்தில் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

சென்னையில் 4 மண்டலங்கள் 5,000 என்கிற எண்ணிக்கையைக் கடந்துவிட்டன. 1 மண்டலம் 4,000 என்கிற எண்ணிக்கையைக் கடந்துள்ளது. ராயபுரம் மண்டலம் 7,000 என்ற எண்ணிக்கையைக் கடந்துள்ளது. மொத்தம் 15 மண்டலங்களில் 13 மண்டலங்கள் 4 இலக்க எண்களைக் கடந்துள்ளன.

* தற்போது 47 அரசு ஆய்வகங்கள், 43 தனியார் ஆய்வகங்கள் என 90 ஆய்வகங்கள் உள்ளன.

இந்த நிலையில் பொது சுகாதாரத்துறை தமிழகத்தில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று வெளியிட்ட அறிவிப்பு:

* டிஸ்சார்ஜ் ஆனவர்கள் போக தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 47,749 .

* மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 11,40,441.

* இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 30,039.

* மொத்தம் 100 பேரில் உறுதிப்படுத்தப்படும் நோயாளிகள் எண்ணிக்கை 13.1 சதவீதம்.

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 86,224 .

* இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 3,949 .

* மொத்தம் (86,224 ) தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 53,124 (61.6 %) / பெண்கள் 33,079 (38.3%)/ மூன்றாம் பாலினத்தவர் 21 பேர் ( .05 %)

* தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 2,379 (60.2 %) பேர். பெண்கள் 1,570 (39.8 %) பேர்.

* இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 2,212 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 47,749 பேர் (55.3 %).

* இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 62 பேர் உயிரிழந்தனர். இதில் 18 பேர் தனியார் மருத்துவமனையிலும், 44 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 1,141 ஆக உள்ளது. அதில் சென்னையில் மட்டுமே 846 பேர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழப்புகள் அதிக அளவில் கவலை ஏற்படுத்தும் வண்ணம் உள்ளன. உயிரிழப்புகளில் இளவயது மரண விகிதம் அதிக அளவில் உள்ளன. உயிரிழந்த 54 பேரில் 50 வயதுக்கு உட்பட்டோர் 15 பேர் ஆவர். இது 20.5 சதவீதம் ஆகும். 40 வயதுக்கு உட்பட்டவர்கள் 9 பேர் ஆவர். இதில் 13 வயதுச் சிறுவனும், 23 மற்றும் 25 வயது இளைஞர்களும் அடக்கம். உயிரிழந்ததில் ஆண்கள் 45 பேர் (83 %). பெண்கள் 9 (17 %) பேர் ஆவர்.

முக்கியப் பிரச்சினையாக சுவாசப் பிரச்சினை, மாரடைப்பு, கோவிட் நிமோனியா அதிக அளவு மரணத்துக்குக் காரணமாக உள்ளது. நீண்டகால நோய் பாதிப்பால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் 51 பேர், எவ்விதப் பாதிப்பும் இல்லாதவர்கள் 11 பேர்.

தமிழகத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. இன்று அதிகபட்சமாக 2,167 பேருக்குத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் சென்னையில் தொற்று எண்ணிக்கை 55,969 ஆக அதிகரித்துள்ளது. சென்னையின் மொத்த எண்ணிக்கை தமிழகத்தின் மொத்த மாவட்ட எண்ணிக்கையை விட அதிகம்.

இந்திய அளவில் மும்பை போன்ற சில பெருநகரங்களின் தொற்று எண்ணிக்கைக்கு இணையாக சென்னை செல்கிறது. தமிழகத்தின் மொத்த நோய்த்தொற்று உள்ளவர்களில் சென்னையில் மட்டும் 64.9 சதவீதத்தினர் உள்ளனர். மற்ற 36 மாவட்டங்களில் 35.1 சதவீதத்தினர் உள்ளனர்.

தமிழகத்தில் இன்று தொற்று கண்டறியப்பட்ட 36 மாவட்டங்களில் சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு 5,242, திருவள்ளூர் 3,656, மதுரை 2,302, காஞ்சிபுரம் 1,876, திருவண்ணாமலை 1,808, வேலூர் 1,241, கடலூர் 1,007, தூத்துக்குடி 903, விழுப்புரம் 867, திருநெல்வேலி 751, ராணிப்பேட்டை 730, ராமநாதபுரம் 803, சேலம் 753, கள்ளக்குறிச்சி 764, தேனி 626, திருச்சி 636,கோவை 528 ஆகியவை 500 எண்ணிக்கைக்கு மேல் உள்ள மாவட்டங்கள் ஆகும்.

37 மாவட்டங்களில் 3 மாவட்டங்களில் மட்டுமே தொற்று எண்ணிக்கை 100க்குள் உள்ளது. 28 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை 3 இலக்கத்தைத் தாண்டியுள்ளது. 7 மாவட்டங்கள் 4 இலக்கத்தைத் தாண்டியுள்ளன. சென்னை 5 இலக்கத்தைத் தாண்டியுள்ளது. இன்று தமிழகத்தில் 36 மாவட்டங்களில் தொற்று உறுதியாகியுள்ளது.

அனைத்து மாவட்டங்களிலும் தொற்று எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதுதவிர வெளிநாடுகள், வெளி மாநிலங்களிலிருந்து வந்தவர்களில் இன்று 108 பேருக்குத் தொற்று உறுதியாகியுள்ளது. மொத்தமாக இதுவரை வெளி மாநிலங்களிலிருந்து தொற்றுடன் வந்தவர்கள் 3,385 பேர்.

நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில், 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 4,225 பேர் (5.0 %). இதில் ஆண் குழந்தைகள் 2,170 பேர் (51.3 %) . பெண் குழந்தைகள் 2,055 பேர் (48.2 %).

13 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் 71,728 பேர் (83.1 %). இதில் ஆண்கள் 44,615 பேர். (62.2%) பெண்கள் 27,092 பேர் (37.7 %). மூன்றாம் பாலினத்தவர் 21 பேர் (.04 %).

60 வயதுக்கு மேற்பட்டோர் 10,271 பேர் (11.9 %). இதில் ஆண்கள் 6,339 பேர் (61.7 %). பெண்கள் 3,932 பேர் (38.2 %).

இவ்வாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

https://www.hindutamil.in/news/tamilnadu/561779-3-949-cases-of-coronavirus-in-tamil-nadu-2167-affected-in-chennai-tamil-nadu-again-2nd-place-7.html

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜெயராஜ், பென்னிக்சை போலீசார் விடிய, விடிய அடித்தனர்" -மாஜிஸ்திரேட் அறிக்கையில் தகவல்

ஜெயராஜ், பென்னிக்சை போலீசார் விடிய, விடிய அடித்தனர்"  -மாஜிஸ்திரேட் அறிக்கையில் தகவல்

ஜெயராஜ், பென்னிக்சை போலீசார் விடிய, விடிய அடித்தனர்" என்று மாஜிஸ்திரேட் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதிவு: ஜூன் 30,  2020 13:44 PM
மதுரை,

ஜெயராஜ், பென்னிக்சை போலீசார் விடிய, விடிய அடித்தனர் என்று  மாஜிஸ்திரேட் பாரதிதாசன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாஜிஸ்திரேட்டு அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:- "லத்தி மற்றும் டேபிளில் ரத்தக்கறைகள் படிந்துள்ளன - அவற்றை அழிக்க நேரிடும். 

நீண்ட நேரம் கழித்து குமார் என்பவர் சக ஊழியர்களை ஒருமையில் பேசி அதட்டும் தொனியில் குறிப்பேடுகளை கேட்டார். அன்று ஒரு மணி அளவில் தான் என்னால் விசாரணையை தொடக்க முடிந்தது.  19.6.2000 முதல் எவ்வித காணொலி பதிவுகளும் கணினியில் இல்லை .

எல்லாம் அழிக்கப்பட்ட நிலையில் இருந்தன. காவல் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் அந்தந்த தினம் தானாகவே அழிந்து போகும் வகையில் உருவாக்கப்பட்டிருந்தது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/06/30134439/jeyaraj-bennix-beaten-by-full-night-Magistrate.vpf

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம்: ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் கண்டனம் 

death-of-sathankulam-jayaraj-pennix-ips-officers-association-condemns  

சென்னை

சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் மரண விவகாரத்தில் நாடு முழுவதும் கண்டனம் வலுத்து வரும் நிலையில் அகில இந்திய ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கமும் கண்டனம் தெரிவித்து உரிய விசாரணை நடத்தி நியாயம் கிடைக்கச் செய்யவேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

தூத்துக்குடி சாத்தான்குளத்தில் பென்னிக்ஸும் அவரது தந்தை ஜெயராஜும் செல்போன் கடையைத் திறந்து வைத்திருந்ததால் வந்த விவகாரத்தில் போலீஸாரால் கைது செய்யப்பட்டு காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர் காயங்களுடன் கோவில்பட்டி கிளைச்சிறையில் அனுமதிக்கப்பட்டதில் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். போலீஸாரால் கடுமையாகத் தாக்கப்பட்டதில் இருவரும் உயிரிழந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த இருவர் மரணத்தை எதிர்க்கட்சிகள் கடுமையாகக் கண்டித்தன. தூத்துக்குடி மக்கள் வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்தினர். சம்பந்தப்பட்ட போலீஸார் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய அனைவரும் கோரிக்கை வைத்தனர். உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன் வந்து வழக்கைக் கையில் எடுத்து விசாரித்து வருகிறது.

மாநில மனித உரிமை ஆணையமும் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் வழக்கு விசாரணைக்குச் சென்ற குற்றவியல் நடுவர் பாரதிதாசனை மிரட்டியதாகப் புகார் எழுந்தது. இதையடுத்து எஸ்.பி. பாலகோபாலன், ஏஎஸ்பி குமார், டிஎஸ்பி பிரதாபன் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டது.

மாஜிஸ்திரேட் விசாரணைக்கு போலீஸ் ஒத்துழைப்பு தரவில்லை என்ற புகாரில் நடவடிக்கை எடுக்க மதுரை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. சாத்தான்குளம் காவல் நிலையத்தை வருவாய்த்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையாக வட்டாட்சியர் செந்தூர்ராஜன் நியமிக்கப்பட்டார்.

இந்த நிகழ்வு காவல்துறையில் பெரிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. அகில இந்திய அளவில் இந்த வழக்கு போகும் தன்மையை உன்னிப்பாகக் கவனிக்கிறார்கள் அதனால் பலரும் இதன் மீது கருத்து தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் அகில இந்திய ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் இந்த விவகாரத்தில் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.

ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவு:

“போலீஸ் காவலில் உள்ள குடிமக்களுக்கு எதிரான வன்முறைச் செயல்களை நாங்கள் கண்டிக்கிறோம். தூத்துக்குடி மாவட்டத்தின் வழக்கை விரைவாகவும் நியாயமாகவும் விசாரிக்க விசாரணை நிறுவனங்களுக்கு நாங்கள் அறிவுறுத்துகிறோம்”.

 

இவ்வாறு ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

 

 

 

Edited by உடையார்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
சாத்தான்குளம் சம்பவம்; மாஜிஸ்திரேட்டின் அதிர்ச்சி அறிக்கை வெளியான நிலையில் தீவிரமடையும் விசாரணை
 
சாத்தான்குளம் சம்பவம்; மாஜிஸ்திரேட்டின் அதிர்ச்சி அறிக்கை வெளியான நிலையில் தீவிரமடையும் விசாரணை
 

மாஜிஸ்திரேட்டின் அதிர்ச்சி அறிக்கை வெளியான நிலையில் விசாரணை திவீரம் அடைந்துள்ளது.
பதிவு: ஜூலை 01,  2020 09:58 AM
தூத்துக்குடி,

தூத்துக்குடி சாத்தான்குளத்தில் பென்னிக்ஸும் அவரது தந்தை ஜெயராஜும் செல்போன் கடையைத் திறந்து வைத்திருந்ததால் வந்த விவகாரத்தில் போலீஸாரால் கைது செய்யப்பட்டு காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர் காயங்களுடன் கோவில்பட்டி கிளைச்சிறையில் அனுமதிக்கப்பட்டதில் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். போலீஸாரால் கடுமையாகத் தாக்கப்பட்டதில் இருவரும் உயிரிழந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த இருவர் மரணத்தை எதிர்க்கட்சிகள் கடுமையாகக் கண்டித்தன. இந்த சம்பவம் தொடர்பாக மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவின் படி, சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளது. 

அரசு கட்டுப்பாட்டிலிருந்த நிலையில் சந்தேக மரணம் என சிபிசிஐடி வழக்கு பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளது. ஐ.ஜி. தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் சிபிசிஐடி எஸ்.பி. விஜயகுமார், டிஎஸ்பி அனில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பான அனைத்து இடங்களுக்கும் சென்று சிபிசிஐடி அதிகாரிகள் இன்று விசாரணை நடத்த உள்ளனர்(சாத்தான்குளம் காவல்நிலையத்தில் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் இன்று காலை மீண்டும் விசாரணை நடத்துகிறார்.  சாத்தான்குளம் காவல் நிலையத்தில் 2ஆவது நாளாக தடய அறிவியல் துறை நிபுணர்கள் தடயங்களைச் சேகரித்து வருகின்றனர்.
 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/07/01095810/Thoothukudi-custodial-death--CBCID-police-begains.vpf

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

15 நாட்கள் நீதிமன்ற காவல் - சிறையில் அடைக்கப்பட்டார் எஸ்.ஐ. ரகு கணேஷ்

15 நாட்கள் நீதிமன்ற காவல் - சிறையில் அடைக்கப்பட்டார் எஸ்.ஐ. ரகு கணேஷ்

சென்னை:

சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் விசாரணை காவலில் மரணமடைந்தனர். இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின் படி சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நேற்று பல்வேறு குழுக்களாக சென்று விசாரணை நடத்தி சிபிசிஐடி அதிகாரிகள் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மரணத்தை கொலைவழக்காக பதிவு செய்தனர். 4 போலீசார் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


 
மேலும், இந்த விவகாரத்தில் சாத்தான்குளம் எஸ்.ஐ.யாக பணியாற்றிய ரகு கணேஷை நேற்று இரவு சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.

இதையடுத்து கைது செய்யப்பட்ட ரகு கணேஷ் மருத்துவ பரிசோதனைக்கு பின் (இரவு 1 மணியளவில்) தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். 

இந்த வழக்கு குறித்து விசாரணை மேற்கொண்ட நீதிபதி எஸ்.ஐ. ரகு கணேஷை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

மேலும், இந்த வழக்கு தொடர்பாக அடுத்த விசாரணை வரும் 16 ஆம் தேதி நடைபெறும் எனவும் அப்போது ரகு கணேஷை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

இதையடுத்து கைது செய்யப்பட்ட எஸ்.ஐ. ரகு கணேஷ் தூத்துக்குடி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

https://www.maalaimalar.com/news/topnews/2020/07/02055641/1661160/SI-Raghu-Ganesh-sent-to-15-days-Judicial-Custody.vpf

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தந்தை-மகன் கொலை வழக்கு: முக்கிய நபர்கள் அனைவரும் கைது- சிபிசிஐடி ஐஜி சங்கர்

தந்தை-மகன் கொலை வழக்கு:   முக்கிய  நபர்கள் அனைவரும் கைது- சிபிசிஐடி ஐஜி சங்கர்

 

சாத்தான்குளம் தந்தை- மகன் கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய போலீசார் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக சிபிசிஐடி தெரிவித்துள்ளது.
பதிவு: ஜூலை 02,  2020 09:27 AM
தூத்துக்குடி,

சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டு, கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இது தொடர்பாக கோவில்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  இந்த சம்பவம் தொடர்பாக மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவின் படி சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய 2 பேர் மீதும் தவறான வழக்குப்பதிவு செய்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரகு கணேஷ் மற்றும் தந்தை-மகனை போலீஸ் விசாரணைக்கு அழைத்து சென்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீஸ்காரர்கள் முருகன், முத்துராஜ், மகாராஜா உள்ளிட்ட 6 பேர் மீதும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் இந்திய தண்டனை சட்டம் 302-வது பிரிவின்படி கொலை வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து,  நேற்று இரவு எஸ்.ஐ ரகுகணேஷ் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டார். இன்று காலை மற்றொரு எஸ்.ஐ பாலகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார். மேலும் 2 காவலர்களும் கைது செய்யப்பட்டனர். அதேபோல், சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளராக இருந்த ஸ்ரீதரும் இன்று காலை விசாரணைக்கு பின்னர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் 2 காவலர்கள், 2 எஸ்.ஐ.க்கள், ஒரு காவல் ஆய்வாளர் என 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய போலீசார் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக சிபிசிஐடி ஐஜி சங்கர் தெரிவித்துள்ளார். 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/07/02092709/Sathankulam-Custodial-death-Prime-accused-arrested.vpf

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீதி நிலைநாட்டப்படும் என்ற நம்பிக்கையை சிபிசிஐடி உருவாக்கியுள்ளது: நீதிபதிகள் பாராட்டு

நீதி நிலைநாட்டப்படும் என்ற நம்பிக்கையை சிபிசிஐடி உருவாக்கியுள்ளது: நீதிபதிகள் பாராட்டு

 

நீதி நிலைநாட்டப்படும் என்ற நம்பிக்கையை சிபிசிஐடி உருவாக்கியுள்ளது என்று மதுரை ஐகோர்ட் கிளை தெரிவித்துள்ளது.
பதிவு: ஜூலை 02,  2020 11:32 AM
மதுரை,

சாத்தான்குளம் சம்பவம் தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில்  இன்று காலை விசாரணைக்கு வந்தது.  இந்த வழக்கு விசாரணையின் போது, சம்பவம் தொடர்பாக சாட்சி அளித்த  காவலர் ரேவதியை தொடர்பு கொண்டு நாங்கள் பேச இருக்கிறோம்  என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும்,  காவலர் ரேவதிக்கு உரிய பாதுகாப்பும், வேலைக்கான சம்பளமும் வழங்க வேண்டும்" என்று  தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்தது.

தொடர்ந்து விசாரணையின் போது,  கைது செய்தவர்களை எந்த நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த உள்ளீர்கள் எனவும்
சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமாரிடம் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் எத்தனை பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது?  என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். நீதி நிலை நாட்டப்படும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் சிபிசிஐடி போலீசாரின் நடவடிக்கை உள்ளது எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

https://www.dailythanthi.com/News/TopNews/2020/07/02113208/Give-enough-protection-to-Constable-Revathy-Madurai.vpf

 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, உடையார் said:

இதையடுத்து கைது செய்யப்பட்ட எஸ்.ஐ. ரகு கணேஷ் தூத்துக்குடி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

ஊருக்கே இலவச மாவு கட்டு சேவை செய்தவை.. மல சல கூடத்தில் வழுக்கி விழுவினமா ?.. ஓ.. மை !

  • கருத்துக்கள உறவுகள்

சமூகவலைத்தளங்களின் சக்தித்திறன் அப்படி! அடுத்த நிமிடமே உலகம் முழுவதும் பரவுகிறது. பிரிட்டன் ஸகை நீயுசில் இந்த செய்தி வந்தது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு விசாரணை; சி.பி.சி.ஐ.டி. போலீசார் அதிரடி நடவடிக்கை - இன்ஸ்பெக்டர் உள்பட மேலும் 3 பேர் கைது

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு விசாரணை; சி.பி.சி.ஐ.டி. போலீசார் அதிரடி நடவடிக்கை - இன்ஸ்பெக்டர் உள்பட மேலும் 3 பேர் கைது

 

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், ஏட்டு முருகன் ஆகிய மேலும் 3 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர்கள் தூத்துக்குடி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
பதிவு: ஜூலை 03,  2020 05:45 AM
தூத்துக்குடி,

சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் ஊரடங்கை மீறி, தங்களது செல்போன் கடையை திறந்து வைத்து இருந்ததாக கூறி, சாத்தான்குளம் போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்று தாக்கி உள்ளனர்.

மாஜிஸ்திரேட்டு விசாரணை

இதில் பலத்த காயம் அடைந்த 2 பேரும் கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதுகுறித்து தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய மதுரை ஐகோர்ட்டு, இந்த சம்பவம் பற்றி கோவில்பட்டி முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு பாரதிதாசன் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டது.

அதன்பேரில், மாஜிஸ்திரேட்டு பாரதிதாசன் கோவில்பட்டி கிளை சிறை மற்றும் சாத்தான்குளம் போலீஸ் நிலையத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். இதில் சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் சம்பவத்தின்போது பணியில் இருந்த பெண் போலீஸ் ஏட்டு ரேவதி, தந்தை-மகன் இருவரையும் போலீசார் விடிய, விடிய தாக்கியதாக சாட்சியம் அளித்தார்.

சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்

அதே நேரத்தில், விசாரணையின் போது போலீசார் உரிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று மாஜிஸ்திரேட்டு ஐகோர்ட்டில் புகார் அளித்தார். இதனால் சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தை வருவாய் துறை கட்டுப்பாட்டில் கொண்டு வர உத்தரவிட்ட ஐகோர்ட்டு, இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது.

அதன்பேரில், சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்கு ஆவணங்களை பெற்றுக் கொண்டு தூத்துக்குடி சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் இரண்டு வழக்குகளை பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

6 பேர் மீது கொலை வழக்கு

அதன் அடிப்படையில், ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய 2 பேரும் அரசு கட்டுப்பாட்டில் இருந்தபோது, மரணம் அடைந்ததாக பதிவு செய்யப்பட்டு இருந்த வழக்கை, சி.பி.சி.ஐ.டி. போலீசார் கொலை வழக்காக மாற்றி பதிவு செய்தனர்.

அதன்படி, இந்திய தண்டனை சட்டம் 302(கொலை), 341(அடைத்து வைத்தல்), 201(தடயங்களை அழித்தல்) ஆகிய பிரிவுகளின்கீழ் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், போலீஸ் ஏட்டு முருகன், போலீஸ்காரர் முத்துராஜ் உள்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

சிறையில் அடைப்பு

முதலில் சப்-இன்ஸ்பெக்டர் ரகுகணேசை நேற்று முன்தினம் இரவு கைது செய்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் அவரை தூத்துக்குடியில் உள்ள அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பதிவு செய்தனர். நேற்று முன்தினம் நள்ளிரவு 12.30 மணி அளவில் சப்-இன்ஸ்பெக்டர் ரகுகணேசை தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் சென்றனர்.

அதன்பிறகு நேற்று அதிகாலை 3.30 மணி அளவில் தூத்துக்குடி தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு ஹேமா முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அவரை வருகிற 16-ந் தேதி வரை காவலில் வைக்க தலைமை மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து ரகுகணேஷ் பேரூரணியில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.

இன்ஸ்பெக்டர் உள்பட மேலும் 3 பேர் கைது

இதற்கிடையே, ஆத்தூரில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் புதியம்புத்தூரில் இருந்த போலீஸ் ஏட்டு முருகன் ஆகியோரையும் நேற்று முன்தினம் நள்ளிரவில் தனிப்படையினர் அடுத்தடுத்து மடக்கி பிடித்து கைது செய்தனர்.

போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் நெல்லையில் இருப்பதாக தகவல் கிடைத்ததால் தனிப்படையினர் அங்கு விரைந்தனர். இதை அறிந்த இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் நேற்று அதிகாலையில் அங்கிருந்து கார் மூலம் மதுரை நோக்கி சென்றதாக கூறப்படுகிறது

இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக உள்ளூர் போலீசார் உதவியுடன் கங்கைகொண்டான் சோதனைச்சாவடியில் வைத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரை மடக்கி பிடித்து கைது செய்து தூத்துக்குடியில் உள்ள தங்கள் அலுவலகத்துக்கு கொண்டு வந்தனர்.

தூத்துக்குடி கோர்ட்டில் ஆஜர்

அங்கு 3 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், ஏட்டு முருகன் ஆகிய 3 பேரையும் நேற்று மாலை தூத்துக்குடி தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு ஹேமா முன்னிலையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஆஜர்படுத்தினர்.

கைதான மூவரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு ஹேமா உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், ஏட்டு முருகன் ஆகிய 3 பேரும் பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டனர்.

தேடுதல் வேட்டை

இந்த வழக்கில் தொடர்புடைய போலீஸ்காரர் முத்துராஜ் உள்ளிட்ட மேலும் 2 பேரை கைது செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர். போலீஸ்காரர் முத்துராஜின் சொந்த ஊர் கோவில்பட்டி ஆகும். அங்கு பூரணம்மாள் காலனியில் உள்ள அவரது உறவினர்களின் வீடுகளுக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் இந்த வழக்கில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் அவர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தந்தை-மகன் உயிரிழந்த வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் அதிரடி நடவடிக்கையில், போலீஸ் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்டவர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/07/03033050/Sattankulam-fatherson-murder-trial-CBI-action--3-others.vpf

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாத்தான்குளம் தந்தை- மகன் கொலை வழக்கு: காவலர் முத்துராஜ் தேடப்படும் நபராக அறிவிப்பு

சாத்தான்குளம் தந்தை- மகன் கொலை வழக்கு: காவலர் முத்துராஜ் தேடப்படும் நபராக அறிவிப்பு

 

சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில் காவலர் முத்துராஜ் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
பதிவு: ஜூலை 03,  2020 10:56 AM
தூத்துக்குடி,

சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் ஊரடங்கை மீறி, தங்களது செல்போன் கடையை திறந்து வைத்து இருந்ததாக கூறி, சாத்தான்குளம் போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்று தாக்கி உள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த 2 பேரும் கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மதுரை ஐகோர்ட் உத்தரவின் படி, இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது. தந்தை மகன் கொலை வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ்  ஆகியோர்  கைது செய்யப்பட்டுள்ளனர்.  

சிபிசிஐடி நடவடிக்கையை தொடர்ந்து காவலர் முத்துராஜ் தப்பிச்சென்று தலைமறைவாக உள்ளார். இதையடுத்து, அவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்,  காவலர் முத்துராஜ்ஜை தேடப்படும் நபராக சிபிசிஐடி அறிவித்துள்ளது. மேலும், இந்த சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக யாரும் அப்ரூவர் ஆகவில்லை என்று சிபிசிஐடி  ஐஜி சங்கர் அறிவித்துள்ளார்

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/07/03105633/Sathankulam-fatherson-murder-case--Muthuraj-notified.vpf

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, சண்டமாருதன் said:

 

சேவாபாரதி இப்படி செய்திருக்குமா  🤔 

https://ta.wikipedia.org/wiki/பயனர்:சேவாபாரதி_தமிழ்நாடு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாத்தன்குளம் சம்பவம் போல் மற்றொரு சம்பவம்.. வீடியோவுக்கு ரூ.2 கோடி வரை பேரம்...! சுசித்ரா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

சாத்தன்குளம் சம்பவம் போல் மற்றொரு சம்பவம்.. வீடியோவுக்கு  ரூ.2 கோடி வரை பேரம்...! சுசித்ரா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

சாத்தான்குளம் சம்பவம் வீடியோ தொடர்பாக தன்னிடம் ₹2 கோடி ரூபாய் பேரம் பேசினார்கள் என்று பாடகி சுசித்ரா டுவீட் செய்துள்ளார்.
பதிவு: ஜூலை 03,  2020 16:38 PM

சென்னை

சாத்தான்குளம் வியாபாரிகள் தந்தை, மகன் உயிரிழப்பு சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்ய வேண்டும், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் இணையத்தில் ஹேஷ்டேக் டிரெண்டானது


நாட்டையே உலுக்கிய இந்த வழக்கை இரட்டை கொலை வழக்காக பதிவு செய்த சிபிசிஐடி போலீசார் 5 காவலர்களை கைது செய்து நீதிமன்ற காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக பாடகி சுசித்தரா தனது டுவிட்டரில் வீடியோ வெளியிட்டு இருந்தார்.

அதுமட்டுமின்றி சாத்தான்குளத்தில் நடந்த சம்பவத்தை விரிவாக ஆங்கிலத்தில் பதிவிட்டிருந்தார். பாடகி சுசித்தராவின் வீடியோ மற்றும் கருத்துகள் ஆங்கில ஊடங்களிலும் பேசப்பட்டது. அதை தொடர்ந்து கிரிக்கெட் வீரர்கள், திரையுலக பிரபலங்கள் என்றும் பலரும் இந்த சம்பவத்திற்கு எதிராக தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர்.

பாடகி சுசித்ராவின் டுவீட் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ள நிலையில் தற்போது இந்த விவகாரம் குறித்து  அதிர்ச்சி தகவல் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், முந்தைய ஆட்சியில் (எதிர்க்கட்சி ஆட்சியில் இருந்தபோது) போலீஸ் அட்டூழியங்களை முன்னிலைப்படுத்தும் வீடியோவுக்கு ரூ. 2 கோடி பேரம் பேசப்பட்டது. அன்றிலிருந்து தூக்கத்தை இழந்தேன். சத்தான்குளம் சம்பவத்தை விட குறைவானதாக இல்லை.கவனம் செலுத்துங்கள்  
என கூறி உள்ளார்.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/07/03163850/Been-offered-2C-to-put-up-a-video-highlighting-police.vpf

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிறையில் அடைக்கபட்டவர்களை அடுத்த வாரம் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு-சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி. சங்கர் பேட்டி

சிறையில் அடைக்கபட்டவர்களை அடுத்த வாரம் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு-சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி. சங்கர் பேட்டி

சாத்தான்குளம் சம்பவத்தில் சிறையில் அடைக்கபட்டவர்களை அடுத்த வாரம் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளதாக சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி. சங்கர் தெரிவித்துள்ளார்.
பதிவு: ஜூலை 04,  2020 12:21 PM
தூத்துக்குடி,

சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று போலீசார் தாக்கினர். இதைத் தொடர்ந்து அவர்கள் 2 பேரும் உயிரிழந்தனர். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.  

இந்த விசாரணை அடிப்படையில் வழக்கை கொலை வழக்காக மாற்றி, சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், ஏட்டு முருகன், காவலர் முத்துராஜ்  ஆகிய 5 பேரை கைது செய்தனர். தொடர்ந்து அவர்களை தூத்துக்குடி தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு ஹேமா முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த சிபிசிஐடி ஐஜி சங்கர் கூறுகையில்,  சாத்தான்குளம்  "சம்பவத்தில் மேலும் யாருக்கும் தொடர்பு இருந்தால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். தடயங்கள், ஆவணங்களை தொடர்ந்து ஆராய்ந்து வருகிறோம்.  சிறையில் அடைக்கபட்டவர்களை அடுத்த வாரம் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளோம்” என்றார். 

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/07/04122146/Will-take-accused-in-Custody-by-Next-week-says-CBCID.vpf

 

 

  • கருத்துக்கள உறவுகள்

சாத்தான் குள சாத்தான்கள் கெதறள்..👌

 

  • கருத்துக்கள உறவுகள்

 

 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

கொம்பன்ஸ் பரிதாபங்கள்..👍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

2 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

கொம்பன்ஸ் பரிதாபங்கள்..👍

👍👍

நெல்லை சரகத்தில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் குழுவுக்கு கட்டுப்பாடு

நெல்லை சரகத்தில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் குழுவுக்கு கட்டுப்பாடு

 

காவல்துறையினர் பிரண்ட் ஆப் போலீசை பயன்படுத்த வேண்டாம்" என்று நெல்லை சரக டிஐஜி பிரவீன்குமார் அபிநபு உத்தரவிட்டுள்ளார்.
பதிவு: ஜூலை 05,  2020 10:49 AM
நெல்லை,

சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகிய 2 பேரும் போலீசாரின் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு தாக்கப்பட்டதில் உயிரிழந்தனர்.

இது தொடர்பாக, மதுரை ஐகோர்ட்டு உத்தரவின்பேரில், சி.பி.சி.ஐ.டி. போலீசார், கொலை வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இதையடுத்து சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், போலீஸ் ஏட்டு முருகன், காவலர் முத்துராஜ்  ஆகிய 5 பேரை  அதிரடியாக கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

தந்தை - மகன் கொலை வழக்கில்  பிரண்ட் ஆப் போலீஸ் குழுவைச் சேர்ந்த சிலருக்கும் தொடர்பு இருப்பதாக சர்ச்சை எழுந்தது. இந்த நிலையில், "காவல்துறையினர் பிரண்ட் ஆப் போலீசை பயன்படுத்த வேண்டாம் என்று  நெல்லை சரக டிஐஜி பிரவீன்குமார் அபிநபு உத்தரவிட்டுள்ளார். 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/07/05104910/Control-of-Friends-Group-of-Police--in-nellai.vpf

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றிய காவலர்களிடம் விசாரணை
.சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றிய காவலர்களிடம் விசாரணை
 

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றிய காவலர்களிடம் இன்று விசாரணை நடத்தப்பட்டது.
பதிவு: ஜூலை 06,  2020 15:55 PM
தூத்துக்குடி,


சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று போலீசார் தாக்கியதில் அவர்கள் 2 பேரும் உயிரிழந்தது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விசாரணை அடிப்படையில் வழக்கை கொலை வழக்காக மாற்றி, சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், ஏட்டு முருகன் மற்றும் காவலர் முத்துராஜ் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக உயிரிழந்த பென்னிக்ஸின் நண்பர்களிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர். இதனை தொடர்ந்து காவல்நிலையத்தில் சம்பவம் நடந்த தினத்தில் பணியில் இருந்த காவலர்கள் அனைவரிடமும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர்.

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றிய அனைவரும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது தட்டார்மடம் காவல்நிலையத்தில் பணியாற்றி வரும் பெண் காவலர் பியூலா மற்றும் காவலர் தாமஸ் ஆகியோர் இன்று விசாரணைக்கு ஆஜரானார்கள். இதனையடுத்து மேலும் 6 காவலர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

அவர்களிடம் விசாரணை நடத்திய சி.பி.சி.ஐ.டி. போலீசார், மேற்கொண்டு சில காவலர்கள் மற்றும் அன்று காவல்நிலையத்தில் இருந்த கொரோனா தடுப்பு பணி தன்னார்வலர்களிடமும் விசாரணை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/07/06155542/Investigations-with-the-police-who-worked-at-the-sathankulam.vpf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.