Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மச்சாளோடு ஒரு நாள்...!

Featured Replies

எனது பாடசாலை நாட்களில் எழுதிய சிறுகதை (பாடசாலை மலர் ஒன்றில் வெளிவந்தது) கதையும் பாத்திரங்களும் முழுக்க முழுக்க கற்பனையே என்று நான் சொல்லுவேன் என்று எதிர்பார்காதீங்க.... :blink: (அப்ப... ???)

-------------------------------------------------------------------------------------------

கண்களை கட்டிப் போட்டுவிட்டு கருத்தினுள் போதையை வார்த்துக் கொண்டிருந்தாள் இயற்கை நல்லாள். இதுவரை நாளும் செயற்கைத் தனத்தின் செழிப்பைச் செம்பு செம்பாக பருகிய எனக்கு இயற்க்கைத் தனத்தின் அந்தக் குறும்பு... புட்டி புட்டியாக மது கிடைத்தது போல் போதையை ஊட்டியது. கொழும்பு பஸ் சற்று முன் தான் கம்பளைக்கு வந்து சேர்ந்திருந்தது. ஒரு வித உற்சாகமும்... ஒரு வித குறும்புத்தனமும் பள பளக்க என் கண்கள் மின்னின. பக்கத்தில் அப்பா, இந்த இடம் எப்படி இருந்தது... இப்போது அடியோடு மாறிவிட்டதே... என்று அங்கலாய்த்த வண்ணம் ஒவ்வொரு இடமும் தனக்கு எப்படிப் பரிட்சயம்... யார் யார் இருந்தார்கள்... வரலாறு... என்று இன்னும் நிறையவே சொல்லிக் கொண்டு உற்சாகமாய் நடந்தார். எனது கவனம் அவரது பேச்சில் முழு ஈடுபாடு காட்டவில்லை. கணநேரத்தில் மாமி வீட்டை அடையப் போகின்றோம்... ஆசையோடு அழகெல்லாம் குழுங்கி நிற்கும் மச்சாளைக் காணப் போகின்றோம் என்று இன்னும் எத்தனை எத்தனையோ கற்பனையில் கவனம் திரும்பியிருந்தது.

மாமி வீடு... இயற்கையோடு கரம் கோர்த்து புது அழகு காட்டியது. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எங்கும் பச்சை நதியெனப் பாயும் இயற்கையின் இன்பலோகம். ஆசையாய்க் காதோரம் கதை பேசுகின்ற காற்றின் சுகப் பாட்டு. கச்சிதமான வீடு. கரைச்சல் இல்லாத இடம். பார்க்க பார்க்க பரவசமாய் இருந்தது. விழிகளை விரியவிட்டு எங்கு தேடியும் இவளைக் காணோமே... எங்கு சென்றிருப்பாள்... ? 'மருமோள் இப்ப வந்திடுவள், கண்டிக்கு டிசனுக்குப் போனவள் இப்ப வாற நேரம் தான்' அப்பாவிடம் மாமி சொன்னாள். அன்றிரவு அங்கு தங்கிவிட்டு அடுத்தநாள் புறப்பட நினைத்திருந்தோம். நான் கோலில் இருந்த புத்தகங்கள் ஒவ்வொன்றையும் புரட்டிய வண்ணம் இருந்தேன். இடையில் ஒரு டீ வந்தது. உறிஞ்சியபடி, புத்தகத்தில் புதைந்து விட்டேன். ஒரு மணி... சுவர்க் கடிகாரம் செல்லமாய் சிணுங்கியது. நான் அந்த அறையில் குட்டித் தூக்கம் போட்டுவிட்டு அசதியாய் நெளிவெடுத்தேன்.

'கண்ணன்... கண்ணன்... எழும்பியாச்சா?' என்றபடி அருகில் வந்தாள் மச்சாள் மதிவதனி. 'இவள் தான் எவ்வளவு மாறிவிட்டாள். முன்பு நோஞ்சானாய்... கன்னங்கள் ஒடுங்கி... தசை போடாமல் இருந்த அதே மதிவதனியா இவள்? இந்த ஐந்து வருடத்தில் இத்தனை மாற்றங்களா...?' விரிந்து சென்ற நினைவுகளை அவளின் 'என்ன அப்படிப் பார்க்கிறியள்?' என்ற கேள்வி கலைத்தது. ஒன்றுமில்லை...

'நீ இப்பதான் வந்தாயாக்கும் ரீயூசனால'

'இல்ல, ஆறு மணிக்கே வந்திட்டன். வந்ததும் மாமாவைப் பார்த்து சொக்காயிட்டன். மாமாவுடன் நீங்க வந்ததும் தெரிந்தது. இங்கு வந்து பார்த்தேன் நீங்க நித்திரை'

நளினமாக வார்த்தைகள் வந்தன. வாடாமல், வதங்காமல், அழகுகாட்டி நிற்கும் இந்த மலர் என் மேனி மேல் படாமல் போய்விடுமோ? ஏனோ இந்த நினைப்பு அப்போது மனதை அரித்தது.

'என்ன கண்ணன் அப்படி பலமாய் யோசிக்கிறியள்? நான் எவ்வளவு ஆசையோடு பேசவந்தன் தெரியுமா?'

'நீ பெண்மகள் ஆசையோடு பேசவந்தன் என்று சொல்கிறாய் நீ துணிச்சல்காரி! ஆனால் நான்...? எனக்கும் உன்னோடு பேச வேண்டும், சிரிக்க வேண்டும் என்று ஆசை இருக்காதா? ஆனால் ஏதோ ஒன்று என் வார்த்தைகளுக்கு வரம்பு போடுகிறதே! அது என்ன? கூச்சமா? அச்சமா?' இப்படி ஒரு மனிதன் உள்ளுக்குள் புலம்பிக்கொண்டிருக்க, 'இதென்னடா அச்சம், கூச்சம் என்று புலம்பிகிட்டு ஒரு பொட்டச்சிக்குள்ள துணிச்சல் கூடவா உன்னட்ட இல்லை...? அடே நீ ஆண்பிள்ளையடா!' இது அடுத்தவன். 'உனக்கு இராமாயணத்தில் வரும் சூர்ப்பனகையைத் தெரியுமா?' 'தெரியும் இப்ப ஏன் சூர்ப்பனகை ஞாபகம் வந்தது.?' 'கம்பர், சூர்ப்பனகையின் அழகைச் சொல்லவரும் போது ஆயிரம் அமாவாசைகளை வடிகட்டினால் அந்த வர்ணம் சூர்ப்பனகையின் வர்ணம் என்று சொல்லுராரில்ல...' 'அவரது கற்பனை அபாரம்! இராமன் மேல் சூர்ப்பனகைக்கு ஆசை ஏற்படத் தகுதியில்ல.' 'அதே தான்! கம்பர் சூர்ப்பனகையைப் பார்த்துச் சொன்னால் என்ன...? அது எனக்கும் பொருந்தும் தானே...?' புதிர் ஒன்றுக்கு விடை காண்பதாய் உடைந்த குரலில் வார்த்தைகள் தடுமாறிப் பிறந்தன. நெஞ்சில் இனம்புரியாத பயம். பேன் காற்றிலும் வேர்வைத் துளிகள் அரும்பவே செய்தன. கண்களில் நீர் முட்டிக் கொண்டு நின்றது. எங்கே அழுதுவிடுவேனோ என்று பயந்து இதழ்களை மடித்து உள் இழுத்துக் கொண்டேன். ஒருவாறு அவளை கூர்ந்து பார்க்க முயற்சித்தேன். அவள் கண்கள் மின்னின. இதழ்கள் படபடப்பைக் காட்டின. ஹோவென்று அழுதுவிடுவாள் போல் தோன்றினாள். நல்லவேளை! அழவில்லை விசும்பலுடன் பேசத் தொடங்கினாள். 'இனி ஒருபோதும் அப்படிப் பேசாதீங்க கண்ணன் தாங்கமுடியலை. கிருஷ்ணன், அருச்சுனன் எல்லோரும் கறுப்புத்தானே! அவர்களைச் சுற்றி பல பெண்கள் வரலையா? அழகென்பது நிறத்தில இல்ல கண்ணன். குணத்தில... ஆமா குணத்தில தான்! எனக்கு உங்களிட்ட ஏதோ ஒன்று இருப்பதா தோணுது. ஏதோ ஒன்று தான்... அது அன்போ... பாசமோ... எனக்குத் தெரியாது... அதுதான் என்னைக் கவர்ந்திருக்கு.|

எனக்கு மெய்சிலிர்த்தது! விடாமல் கேட்டு வைக்க விரும்பினேன். 'அப்ப... அந்த ஏதோ ஒன்று இல்லாட்டி... ? ' சொற்களை வேண்டுமென்றே இழுத்தேன். 'ஏதோ ஒன்ற இல்லாட்டி மற்றொன்று எதிலையும் ஏதோ ஒன்று இருப்பது தானே நியதி' அவள் பேச்சு என்னை என்னமோ செய்தது. அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவளும் என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள். எனது கரங்களைப் பற்றி தனது இதழ்களைப் பதித்தாள். பின்பு கனிவாக தலைமுடியை கோதினாள். 'என்னை மறக்கமாட்டீங்களே...?' 'இல்லை' என்றேன். 'நாளைக்கு நீங்க போகும் போது நான் நிக்கமாட்டன் அதனால இப்பவே பிரியாவிடை கூறுகிறேன்.' தெளிவான குரலில் பேசினாள். பின்பு சென்றாள். மறைந்தாள். அவளது செய்கை எனக்குப் பிரமிப்பை ஊட்டியது. நானும் அது போல் செய்ய ஏதோ ஒன்று தடுத்துவிட்டது. இப்போது அப்படிச் செய்ய வேண்டும் என்று தோன்றியது. கைவிட்டுப் போனபின் யாது செய்வது?

அடுத்தநாள், அவசரமாக எம்மை வழியனுப்ப விடிந்து பொழுதைக் குறைத்து மாமி குடும்பத்திடமிருந்து பிரியாவிடை தந்து அனுப்பியது. வாழ்க்கைக் கணக்கிற்கு சரியான விடையை அது தர மறுத்துச் சிணுங்கியது. மனம் எல்லாம் மச்சாளிடம். வெறும் உடல் மட்டும் பஸ்சில் ஏறி அமர்ந்து எதையெதையோ சிந்தித்தது. அதற்கு எங்கே தெரியப் போகின்றது நடக்கப் போகும் நாடகம்!

'நடக்கப் போகும் நாடகம் நல்லதாக நடக்கட்டும்...' பாட்டில் லயித்திருந்த என்னை 'டே கண்ணா எத்தனை தரம் கூப்பிடறது இந்தா பிடி கடிதம் வந்திருக்கு' 'யாரம்மா கடிதம் எழுதினது?' 'உன்ர கம்பளை மாமி தான்! அவள் வதனிக்கு வாறமாசம் நிச்சியார்த்தமாம். நேற்று விரல் சூப்பிக் கொண்டு நின்ட பெட்டை விரல் பிடிக்கப் போகுது. ம்... பெட்டைகள் வளர்ரதே தெரியுறேலே... தம்பி உனக்கும் காலாகாலத்தில கலியாணம் காட்சியென்று பார்த்தால் எனக்கு நிம்மதியடா... ஏதோ ஆண்டவன் விட்ட வழி... '

'ஐயோ அம்மா' என்று வாய் விட்டு அழவேண்டும் போல் தோன்றியது. 'இதற்கு அவள் எப்படிச் சம்மதித்தாள்?' யோசித்து யோசித்து மண்டை வெடித்தது. 'எங்கிருந்தாலும் வாழ்க... என்று வாழ்த்துவது தான் விதியா? ஐயோ! இறைவா! இது கனவாய் இருக்கக் கூடாதா?' கனவாய் இருந்ததே 'என்னடா பிசத்துகிறாய்...' என்று அம்மா பதறினபடி வந்தபோது!

கதை கற்பனை என்றால்... நல்லா இருக்கு. பாராட்டுக்கள்!

கற்பனை இல்லையேல்... கதை கந்தல்தான் போங்க.. ஆழ்ந்த அனுதாபங்கள். :blink: :P :P

  • தொடங்கியவர்

கதை கந்தலாகி கன காலாமாகி விட்டது நண்பரே ....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கதை கந்தலாகும் மட்டும் நீங்கள் என்ன செய்திட்டு இருந்தீங்கள் :rolleyes:

மச்சாள் என்றாலே இப்படிதான் கவி

உங்களுக்கும், உங்களைப் போல் இன்னும் முகம் தெரியாத

பலருக்கும்

எனது சொந்த அனுபவம் வாய்ந்த அனுதாபங்கள்.

  • தொடங்கியவர்

அது ஒரு இளவேனிற் காலம்.....

இலையுதிர் காலமாகி பின்

மீண்டும் துளிர்விட்டு

இன்னொரு இளவேனிலுக்காய்....

மாமிமாருக்கு உங்களைப் போல மருமகன்களின் மனசு புரிஞ்சால் நல்லது.... :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மச்சாளுக்காக எழுதிய கதை நல்லா இருக்கு கவி ரூபன்.

  • தொடங்கியவர்

நன்றி ஜனனி... (ரசிக்கிறமாதிரி இருந்ததா? )

எனது மச்சாள்களை விட உங்கள் மச்சாள் நல்லவள் போல தெரிகிறது.... இந்தப் பாழாய்ப் போன தமிழ்ப் படங்கள்தான் நாமளும் மச்சாள்களின் மயக்கத்தில் அவர்கள் பின்னால் நாய்க்குட்டி போல் ஓடித்திரிவதற்கு காரணமாக இருக்கின்றன...

அது ஏன் என்று தெரியவில்லை... மச்சாள்மார் எல்லாம் பெயர் சொல்லிக் கூப்பிடும்போது அண்ணா என்ற பதத்தையும் சேர்த்துக்கொள்வார்கள்... மரியாதையா அல்லது என்னுடன் லொள்ளுப் பண்ணாதே என்று எச்சரிக்கையா என்று தெரியவில்லை...

நல்ல காலம் தப்பிவிட்டோம்... குட்டிச்சாத்தான்கள் எல்லாம் சிறீ லங்காவில்....

ரூபண் அண்ணா கதை நல்லா இருக்கு அந்த நேரத்திலே நான் மட்டும் இல்லை இருந்திருந்தா நடக்கிறதே வேற :P

மாப்பி சொல்லுற மதிரி எல்லாரு ஏன் அண்ணாவின்டு கூப்பிடினம் எனக்கு பிடிக்கவில்லை :angry:

  • தொடங்கியவர்

ஜம்மு, நீங்களும் அண்ணா என்று கூப்பிடுறீங்க... கண்ணாடிக்கு முன்னால நின்று கேளுங்க ஏன் என்று .... (ஓ நீங்க மச்சாள் மார் அண்ணா என்று ஏன் கூப்பிடுகினம் என்று சொல்லுறீங்களா? )சரி .... சரி... அதுவென்ன அந்த நேரத்தில் நீங்க இருந்தா என்ன செய்வீங்க....? நடக்கிறதே வேற என்று கதை விடுறீங்க.... கன்னா பின்னா என்று அடிச்சிருப்பீங்களோ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி ஜனனி... (ரசிக்கிறமாதிரி இருந்ததா? )

ஓம்...ரூபன் ரசிக்கிற மாதிரி இருந்த படியால்தான் பொறுமையா முழுசா இருந்து வாசிச்சேன்... :P

.

மாமிமாருக்கு உங்களைப் போல மருமகன்களின் மனசு புரிஞ்சால் நல்லது.... :lol:

மாமி போய் கனகாலம்

மச்சாள் போய் சிலகாலம்

இனி போய் என் எதிர் காலம்..............

வேண்டாம் கவி-ரூபன்

இத்துடன் நிறுத்துகிறேன்

மீண்டும் நல்ல கவி,கதைகளுடன்

வாருங்கள்.ஏதோ பழசை நினைவூட்டியதற்கு

நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கதை எனக்கு பிடிக்கல்ல,, ஏனெண்டால் தமிழிழ எனக்கு பிடிக்காத ஒரே ஒரு வார்த்தை.... மச்சாள்ள்ள்ள்ள்ள்... :angry: :angry: :angry: :angry:

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கதை எனக்கு பிடிக்கல்ல,, ஏனெண்டால் தமிழிழ எனக்கு பிடிக்காத ஒரே ஒரு வார்த்தை.... மச்சாள்ள்ள்ள்ள்ள்... :angry: :angry: :angry: :angry:

ஒய் உம்மடை மச்சாளை உமக்கு பிடிக்காட்டிமற்றவர்களிற்கு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த கதை எனக்கு பிடிக்கல்ல,, ஏனெண்டால் தமிழிழ எனக்கு பிடிக்காத ஒரே ஒரு வார்த்தை.... மச்சாள்ள்ள்ள்ள்ள்... :angry: :angry: :angry: :angry:

ஏனெண்டால் சின்னவயதிலேயிருந்து மச்சாள்மாரோடை தொடர்ந்து மாரடிச்சாலும் உந்த வெறுப்புணர்ச்சிதானே வரும் B) .இல்லாட்டி மச்சாள்மாரோடை என்ன சொறிச்சேட்டை விட்டீரோ??? :lol: எல்லாம் ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்??? :lol:

  • கருத்துக்கள உறவுகள்
ஒய் உம்மடை மச்சாளை உமக்கு பிடிக்காட்டிமற்றவர்களிற்கு

Edited by Danklas

ஜம்மு, நீங்களும் அண்ணா என்று கூப்பிடுறீங்க... கண்ணாடிக்கு முன்னால நின்று கேளுங்க ஏன் என்று .... (ஓ நீங்க மச்சாள் மார் அண்ணா என்று ஏன் கூப்பிடுகினம் என்று சொல்லுறீங்களா? )சரி .... சரி... அதுவென்ன அந்த நேரத்தில் நீங்க இருந்தா என்ன செய்வீங்க....? நடக்கிறதே வேற என்று கதை விடுறீங்க.... கன்னா பின்னா என்று அடிச்சிருப்பீங்களோ?

ரூபன் அண்ணா 2பேரின் கையையும் சேத்து வைத்திருப்பேன் என்று சொல்ல வந்தனான் அதுகுள்ள நீங்க சென்சன் ஆயிட்டீங்க

:P

எனக்கு மச்சான்கள் என்றால் ரொம்ப விருப்பம் ஆனால் ஒருத்தரும் எனக்கு இல்லை :icon_idea::(

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு மச்சான்கள் என்றால் ரொம்ப விருப்பம் ஆனால் ஒருத்தரும் எனக்கு இல்லை :unsure::lol:

சா.... என்ன கொடுமை சார் இது...... :o:icon_idea: சரி சரி கவலைப்படாதேங்க, நாங்க ஏதுக்கு இருக்கிறோம்..... <_< (அட உதவி செய்வம் பயப்படாதேங்க எண்டு சொல்லவந்தனாக்கும்) :(

சா.... என்ன கொடுமை சார் இது...... :D:lol: சரி சரி கவலைப்படாதேங்க, நாங்க ஏதுக்கு இருக்கிறோம்..... :D (அட உதவி செய்வம் பயப்படாதேங்க எண்டு சொல்லவந்தனாக்கும்) :lol:

டங்கு உது நல்லா இல்லை உதவி என்றா நானும் வருவன் தானே

:P

சா.... என்ன கொடுமை சார் இது...... :lol::rolleyes: சரி சரி கவலைப்படாதேங்க, நாங்க ஏதுக்கு இருக்கிறோம்..... :D (அட உதவி செய்வம் பயப்படாதேங்க எண்டு சொல்லவந்தனாக்கும்) <_<

சரி டங்கு மாமா உங்களுக்கு மகன் இருந்தா சரி :o

  • கருத்துக்கள உறவுகள்

சரி டங்கு மாமா உங்களுக்கு மகன் இருந்தா சரி :lol:

கள நிர்வாகத்துக்கு!

15 வருசம் 293 நாட்கள், 10 மணித்தியாலங்கள், 20 நிமிசங்கள், 2 செக்கன் நிரம்பிய சிறுவனிடம் மன்னிக்கவும் அப்பாவி சிறுவனிடம் ஒரு கள உறுப்பினர் இப்படியான கேள்விகளை கேட்க அனுமதிப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. றோயல் பமிலி சட்டம் 1.2.3 படி இவரை 2 நிமிடம் 49 செக்கன் யாழ்களத்தில் தடை செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறேன். :angry: :angry: :angry:

Edited by Danklas

கள நிர்வாகத்துக்கு!

15 வருசம் 293 நாட்கள், 10 மணித்தியாலங்கள், 20 நிமிசங்கள், 2 செக்கன் நிரம்பிய சிறுவனிடம் மன்னிக்கவும் அப்பாவி சிறுவனிடம் ஒரு கள உறுப்பினர் இப்படியான கேள்விகளை கேட்க அனுமதிப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. றோயல் பமிலி சட்டம் 1.2.3 படி இவரை 2 நிமிடம் 49 செக்கன் யாழ்களத்தில் தடை செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறேன். :angry: :angry: :angry:

இப்ப டைகர் பமிலி சட்டம் தான் யாழ் கள வழக்கில் உள்ளதால்...

இந்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளது :P

எனினும் டைகர் பமிலி டை.ப.ச. 345.4 .1 சமவுரிமை சட்டப்படி.. யாரும் யாரையும் கேள்விகேப்பது அனுமதிக்கப் பட்டுள்ளதை யாழ் களம் சுட்டிக்காட்டியுள்ளது :lol:

இப்ப டைகர் பமிலி சட்டம் தான் யாழ் கள வழக்கில் உள்ளதால்...

இந்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளது :P

எனினும் டைகர் பமிலி டை.ப.ச. 345.4 .1 சமவுரிமை சட்டப்படி.. யாரும் யாரையும் கேள்விகேப்பது அனுமதிக்கப் பட்டுள்ளதை யாழ் களம் சுட்டிக்காட்டியுள்ளது :lol:

வெரிகுட் குட்டி இப்படி தான் கடமையில கண்ணும் கருத்துமா இருக்க வேண்டும்

:P

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.