Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமைச்சர் பதவி பெறுவது குறித்து நான் சொன்னது என்ன? சுமந்திரன் பேட்டி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமைச்சர் பதவி பெறுவது குறித்து நான் சொன்னது என்ன? சுமந்திரன் பேட்டி

July 25, 2020

sumanthiran-25.png
 

“பொதுத் தேர்தலின் பின்னர் ஆட்சி அமைக்கக்கூடிய அரசுடன் பேரம் பேசுவதற்கன தந்திரோபாயங்கள் எல்லாவற்றையும் முன்கூட்டியே பொது வெளியில் சொல்ல முடியாது. ஆனால் 2/3 பெரும்பான்மையை தேடி நிற்கிற அரசோடு பேரம் பேசுவதற்கான சந்தர்ப்பங்கள் நிச்சயமாக வரும்” எனக் கூறுகின்றார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன்.

அண்மைக்காலத்தில் சர்ச்சைக்குள்ளாக்கப்படும் பல்வேறு விடயங்கள் குறித்தும் தினக்குரலுக்கு அளித்த பிரத்தியேக நேர்காணலிலேயே சுமந்திரன் இதனைத் தெரிவித்தார். அவரது நேர்காணலின் விபரம் வருமாறு;

கேள்வி: “பாராளுமன்றத்தில் பலமாக இருந்தால்தான் முக்கியமான அமைச்சுப் பதவிகளைப் பேரம் பேசிப் பெற்றுக்கொள்ள முடியும்” என நீங்கள் தெரிவித்தது கடுமையான விமர்சனங்களுக்குள்ளாகியிருக்கின்றது. நீங்கள் சார்ந்த கட்சித் தலைவர்களே அதனை ஏற்க மறுத்துவிட்டார்கள். உங்களுடைய கருத்தை எவ்வாறு நீங்கள் நியாயப்படுத்துவீர்கள்?

பதில்: இதுவும் நான் சொன்ன கருத்து அரை குறையாகவும் தவறான தலைப்புக்களோடும் வெளியிடப்பட்டதன் விளைவே! இந்த முறை பல இடங்களில் இளைஞர்கள் எம்மோடு பேசும் போது, நாங்கள் அமைச்சுப் பதவிகள் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள். அவர்களுக்கு நாம் ஏன் மத்திய அரசில் சேர்வதில்லை என்ற கொள்கையை கடைப்பிடிக்கிறோம் என்பதை விளக்கி வருகிறேன்: கூட்டுப் பொறுப்பு, பேரம் பேசும் சக்தி குறையும் என்ற காரணங்களை இந்த இடத்திலும் கூறியிருந்தேன்.

அதோடு நான் மேலதிகமாகச் சொன்னது என்னவெனில், “முதலில் நீங்கள் செய்ய வேண்டியது, எங்களை ஒரு பலமான அணியாக அனுப்புவதே. ஏனெனில், நீங்கள் சொல்லுவதைப் போல அமைச்சுப் பதவிகளை எடுப்பதாக இருந்தாலும் கூட, என்ன அமைச்சுக்கள், எத்தனை அமைச்சுக்கள், எந்த அதிகாரங்கள் என்பதை பற்றி பேரம் பேசுவதற்கும் பலமான ஒரு அணி தேவை. அப்படி இல்லாமல் எதிர்க் கட்சியில் இருந்தாலும் வாக்களிப்பு நேரங்களில் பேரம் பேசுவதற்கு பலமான அணி தேவை. ஆகவே, தற்போது நீங்கள் செய்ய வேண்டியது, எம்மை ஒரு பலமான அணியாக அனுப்புவது தான்”.

இதற்கு மேலதிகமாக தற்போதுள்ள அரசாங்கத்தில் ஏன் சேர முடியாது என்பதையும் எடுத்துச் சொன்னேன். ஆனால் வழமை போல, ஊடகங்கள் முற்றிலும் மாறான கருத்தைப் பிரதிபலித்து செய்தியாக வெளியிட்டிருந்தன.

கேள்வி: வடக்கு கிழக்கின் அனைத்துப் பகுதிகளுக்கும் அண்மைக்காலத்தில் சென்று வந்திருக்கின்றீர்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கான ஆதரவு “அப்படியே” உள்ளதா? 2015 இல் பெற்ற வெற்றியை இப்போதும் உங்களால் தக்கவைக்க முடியுமா?

பதில்: ஆம். எமது ஆதரவுத் தளத்தில் எள்ளளவும் குறைவு கிடையாது.

கேள்வி: பொதுத் தேர்தலின் பின்னர் ஆட்சி அமைக்கப்போவது யார் என்பது இப்போதே பெரும்பாலும் உறுதியாகியிருக்கின்றது. ‘அந்த’ அரசிடமிருந்து தீர்வு ஒன்றை கூட்டமைப்பினால் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்குமா? அதற்கான உங்களுடைய தந்திரோபாயம் என்ன?

பதில்: தந்திரோபாயங்கள் எல்லாவற்றையும் முன்கூட்டியே பொது வெளியில் சொல்ல முடியாது. ஆனால் 2/3 பெரும்பான்மையை தேடி நிற்கிற அரசோடு பேரம் பேசுவதற்கான சந்தர்ப்பங்கள் நிச்சயமாக வரும்.

கேள்வி: “நல்லாட்சி அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கினீர்கள்” என்பது உங்கள் மீதான பிரதான குற்றச்சாட்டு. அதற்கு உங்களிடமுள்ள பதில் என்ன?

பதில்: அரசு அமைக்கப்படுவதற்கு முன்னர் நாம் எமக்குள் ஏற்பட்டிருந்த புரிந்துணர்வை எழுத்தில் பெற்றிருக்கவில்லை என்பது உண்மை. ஆனால் அப்படியாக புரிந்துணர்வு ஒன்று இருந்ததை ஜனாதிபதி சிரிசேன யாழ்ப்பாணத்தில் வைத்தே பகிரங்கமாக உறுதிப்படுத்தினார். அதற்கும் மேலாக அந்த புரிந்துணர்வின் அடிப்படையிலேயே அரசியலமைப்பு பேரவை உருவாக்கப்பட்டு புது யாப்பிற்கான வரைபு வரைக்கும் நாங்கள் முன்னேறினோம். அது நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் அரசாங்கம் பெரும்பான்மை இழப்பதை எம்மால் தடுக்க முடியவில்லை. ஆனால், நாம் எழுத்தில் எதைப் பெற்றிருந்தாலும் அதைத் தடுத்திருக்க முடியாது. ஆகவே அந்தக் குற்றச்சாட்டை ஏற்க முடியாது.

கேள்வி: மாற்றுத் தலைமை அல்லது மாற்று அணி குறித்து உங்கள் கருத்து என்ன?

பதில்: மாற்றுத்தலைமை என்றால் அது கட்சிக்குள் செய்யப்பட வேண்டியது. கட்சியை விட்டு வெளியேறி தலைமையை மாற்ற முடியாது. மாற்று அணி என்றால் எம்மை விலக்கி விட்டு எமது இடத்தை இன்னொரு அணி பிடிக்க வேண்டும். இன்றைய சூழ்நிலையில் பாராளுமன்றத்துக்கு குறைந்தது 15 பேரையாவது அனுப்பக்கூடிய திரானி, தமிழ் தேசியக் கூட்டமைப்பை விட வேறு எவருக்கும் கிடையாது. அவர்களால் 5 பேரைக் கூட அனுப்ப முடியாது. அப்படியிருக்க தங்களை மாற்று அணி என்று அவர்கள் வர்ணிப்பது வேடிக்கையானது!
 

http://thinakkural.lk/article/57893

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

தந்திரோபாயங்கள் எல்லாவற்றையும் முன்கூட்டியே பொது வெளியில் சொல்ல முடியாது.

 போனமுறையும்  சொன்ன நொண்டி சாட்டு அப்ப  போனமுறை பொதுவெளியில் சொல்ல முடியாத அந்த விடயத்தை இப்ப சொல்லலாமே ?

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, பெருமாள் said:

 போனமுறையும்  சொன்ன நொண்டி சாட்டு அப்ப  போனமுறை பொதுவெளியில் சொல்ல முடியாத அந்த விடயத்தை இப்ப சொல்லலாமே ?

யாழ்பாணம் பக்கம் போனைப் போட்டு கதைக்க, விக்கியர் தான் தன்ற தேர்வு எண்டுறார் ஒருவர். உங்கள் பார்வை எப்படி?

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

அரசு அமைக்கப்படுவதற்கு முன்னர் நாம் எமக்குள் ஏற்பட்டிருந்த புரிந்துணர்வை எழுத்தில் பெற்றிருக்கவில்லை என்பது உண்மை.

எழுபது வருட அரசியல் வாழ்வின் அனுபவம், ராஜதந்திரம் எதைக் கற்றறிந்தார்கள்? பட்டறிந்தார்கள்.

 

4 hours ago, கிருபன் said:

மாற்றுத்தலைமை என்றால் அது கட்சிக்குள் செய்யப்பட வேண்டியது. கட்சியை விட்டு வெளியேறி தலைமையை மாற்ற முடியாது.

 கட்சிக்குள் வாய்பொத்தி, எல்லாவற்றுக்கும் தலையாட்டிக்கொண்டு, 
சுயலாபத்தை மட்டும் பாத்துக்கொண்டிருந்தால் இருக்கலாம். ஏதாவது எதிர்த்துக் கூறினால், நல்லது செய்ய முயற்சித்தால் ஒதுக்கப்பட்டு, ஓரம் கட்டப்பட்டு, அவர் மேல் பழிகளை சுமத்தி, பணி செய்யவிடாமல் தடைகளை உண்டாக்கி, ஒத்துழைப்பு அளிக்காமல் ஓடி ஓடி, பறந்து பறந்து அவர் பதவி விலக வேண்டும் என்று கட்சியின் கொள்கைகளுக்கு மாறாக அறிக்கை விட்டுக் கொண்டிருப்பவர்களுடன் இருந்து எதைச் சாதிக்க முடியும்? கதிரைக்கு பாரமாகவும், பதவியில் சுகமாகவும் இருந்து கொண்டு  தன் நற்பெயரை கெடுக்க மட்டுமே முடியும், அல்லது நிரந்தர ஊமையாக வேண்டும். அதுதான் சுரேன் ராகவன் இவரைப்பற்றி சொல்லியுள்ளாரே. இதோடு தப்பினேன் என்று ராகவன் தள்ளியிருந்து ஏதாவது நல்லது தமிழருக்கு செய்ய விரும்பினால் செய்வது, இலையென்றால் இவர்களை விட்டு விலத்தி தன் பெயரை காத்துக்கொள்ளட்டும். பந்தயம் பிடி கெடுகிறேன் என்று அடம் பிடித்தால் நாம் ஒன்றும் செய்ய முடியாது. 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Nathamuni said:

யாழ்பாணம் பக்கம் போனைப் போட்டு கதைக்க, விக்கியர் தான் தன்ற தேர்வு எண்டுறார் ஒருவர். உங்கள் பார்வை எப்படி?

116096866_4446316922046875_1314906567452368159_o.jpg?_nc_cat=100&_nc_sid=8bfeb9&_nc_ohc=qtW5CdA7m3EAX88gSbJ&_nc_ht=scontent-lht6-1.xx&oh=c6b1243f3bc9e484ddb99e3cbf39dc15&oe=5F42E82A

 

தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது இல்லத்தை தரிசித்த தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் நீதியரசர் விக்னேஸ்வரனும் அவரது அணி வேட்பாளர்களும்.
நிச்சயம் தேசியத் தலைவரின் முன்னெடுத்த தமிழினத்திற்கான பணியை நாட்டின் சட்டதிட்டங்களுக்கு அமைவாக சட்ட ரீதியாக அணுகி பெற முயற்சிப்பார் நீதியரசர் விக்னேஸ்வரன் என்பதில் ஐயமில்லை.

கடைசி நேரம் மட்டும் எதுவும் நடக்கலாம் நாதமுனி .

ஆனால் தமிழ்நாடுபோல் இங்கும் கனடா கணக்கில் இல்லா காசு தராளமாக பாய்கிறது என்று கேள்வி.

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 6 people, people sitting and crowd

மேலே விக்கியருக்கு கூடும் மக்களின்  ஒரு பகுதி .

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப் பொறுத்த வரையில், இந்த தேர்தலில் பெரிய ஆர்வம் இல்லை.

ஊரில் வேறு விடயமாக கதைத்த போது அரசியலும் வந்தது. அவர் சொன்னார்;

விக்கியர் ஏதும் பெரிசா செய்யவில்லை தான். ஆனாலும் ஆரம்பத்தில் இருந்து ஒரு விசயத்தில் உறுதியாக இருக்கிறார்.

அபிவிருத்திக்கு முன் தீர்வு வேண்டும் என்று. அது இல்லாத விடத்து, தமிழருக்கு சுஜநிர்ணய உரிமை உண்டு என்று.

இதை மக்கள் ரசிக்கிறார்கள் என்றார்.

அதுதான் உங்கள் அபிப்பிராயம் கேட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

என்னைப் பொறுத்த வரையில், இந்த தேர்தலில் பெரிய ஆர்வம் இல்லை.

ஊரில் வேறு விடயமாக கதைத்த போது அரசியலும் வந்தது. அவர் சொன்னார்;

விக்கியர் ஏதும் பெரிசா செய்யவில்லை தான். ஆனாலும் ஆரம்பத்தில் இருந்து ஒரு விசயத்தில் உறுதியாக இருக்கிறார்.

அபிவிருத்திக்கு முன் தீர்வு வேண்டும் என்று. அது இல்லாத விடத்து, தமிழருக்கு சுஜநிர்ணய உரிமை உண்டு என்று.

இதை மக்கள் ரசிக்கிறார்கள் என்றார்.

அதுதான் உங்கள் அபிப்பிராயம் கேட்டேன்.

அங்கு யார் வந்தாலும் எப்போ வந்தாலும் விடிவு கிடையாது இலங்கை இந்திய நாடுகளின்  எதிர்ப்புக்கு மத்தியில் எந்த கட்சியும் தமிழருக்கு தீர்வை வேண்டிதரப்போவதில்லை விக்கியர்  கணக்க  கதைத்தால் ஏதாவது விபத்து ஒன்றில் போட்டுத்தள்ளப்படுவார் இவற்றுக்கு இடையே சுளித்து ஓடக்கூடிய தலைவர் ஈழத்தில் சமீபத்தில் இல்லை .

ஆனால் வடகிழக்கில் உள்ள தமிழரையும் அங்குள்ள படித்த அறிவாளிகளையும்  வெளிநாடுகளில் உள்ள புலம்பெயர் தமிழரையும் படு முட்டாள்கள் என்று எண்ணி கடந்த 30 வருட போராட்டத்தையும் சேர்த்தே கொச்சை படுத்தியபடி ஒன்று அரசியல் செய்கிறேன்  என்று  சொல்லிக்கொண்டு ஒட்டுக்குழு அரசியல் செய்யும் சுமத்திரன் போன்றவர்கள் அரசியலை விட்டு ஒதுங்க வைக்கணும் முதுகெலும்பு உள்ள யோசப் போன்றவர்களை போட்டு தள்ளி இந்த கூனல் தலைவர்களை இரு நாடுகளும் உருவாக்கி வைத்துள்ளது தங்கடை  தேவைக்கென்றால் தமிழ் மக்களுக்கும் யார்வந்தும் கிடைக்கப்போவதில்லை அப்ப  சுமத்திரன் போன்ற இருநாட்டுக்கும் ஜால்றா அடிக்கும் கூட்டமும் அரசியலில்  இருந்து ஒதுக்கி விடுவது நல்லது  எப்பவாவது  ஒரு வீரியமிக்க தலைமை பிறக்கும் அது பிக்கு வடகிழக்கில்  இரத்த ஆறு ஓடுமென்றால் உனக்கும்  மத்தியவங்கிபகுதியிலும் கட்டு நாயக்காவிலும் சிங்கள இரத்தமும் சேர்ந்தே மறுபடியும் ஓடும் வேணுமா திரும்பவும் என்று அரசியல் பக்குவமா  கேட்கதெரிந்த  ஆளாய் இருப்பார் .

தமிழ் தேசிய கூட்டணியின் தேர்தல் அறிக்கை வரும்காலம் தொடக்கம் அதை என்னவென்று படித்து பார்க்காமலே  பிக்குகள் வடகிழக்கில் இரத்த ஆறு அது இது என்று கத்துவது  வழமையானது அதுக்கு பதில் விளக்க  அறிக்கையாக  எங்கடை அரசியல்வாதிகளில் யார் சரியான  விளக்கம் குடுத்தது என்பதை கேள்வியாக உங்கள் சிந்தனைக்கு விட்டு செல்கிறேன் .

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Nathamuni said:

அபிவிருத்திக்கு முன் தீர்வு வேண்டும் என்று. அது இல்லாத விடத்து, தமிழருக்கு சுஜநிர்ணய உரிமை உண்டு என்று.

இதை மக்கள் ரசிக்கிறார்கள் என்றார்.

அதுதான் உங்கள் அபிப்பிராயம் கேட்டேன்.

இன்னுமா இதை மக்கள் ரசிக்கிறார்கள்.அப்ப உருப்பட்ட மாதிரித்தான்.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, சுவைப்பிரியன் said:

இன்னுமா இதை மக்கள் ரசிக்கிறார்கள்.அப்ப உருப்பட்ட மாதிரித்தான்.

விக்கியர், மாகாணசபை நிர்வாகத்தில், அமைச்சர் ஆக இருந்து ஊழல் செய்து, விலக்கப்பட்ட, ஜங்கரநேசனும் தனக்கும் கூட்டம் வருகுது. வாக்கு விழும்.வெல்லுவேன் எண்டு சொல்லுறார்.

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Nathamuni said:

விக்கியர், மாகாணசபை நிர்வாகத்தில், அமைச்சர் ஆக இருந்து ஊழல் செய்து, விலக்கப்பட்ட, ஜங்கரநேசனும் தனக்கும் கூட்டம் வருகுது. வாக்கு விழும்.வெல்லுவேன் எண்டு சொல்லுறார்.

கூட்டத்தை வைத்து முடிவை சொல்ல ஏலாதுதான்.ஆனாலும் எதுவும் நடக்கலாம்.எமது மக்களின் அரசியல் அறிவு சம்பந்தப்பட்டது.உதாரனத்துக்கு வன்னியில் கதைத்த போது சஜித்துக்கு போடப் போவதாக.அவர்கள் கடந்த ஜனாதிபதி தேர்தலில் இருந்து இன்னும் வெளி வரவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

கேள்வி: வடக்கு கிழக்கின் அனைத்துப் பகுதிகளுக்கும் அண்மைக்காலத்தில் சென்று வந்திருக்கின்றீர்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கான ஆதரவு “அப்படியே” உள்ளதா? 2015 இல் பெற்ற வெற்றியை இப்போதும் உங்களால் தக்கவைக்க முடியுமா?

பதில்: ஆம். எமது ஆதரவுத் தளத்தில் எள்ளளவும் குறைவு கிடையாது.

இந்த பதிலை சிரிக்காமல் கூறியிருப்பாரா😂😂

 

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20200726-223800.jpg சத்தியமாக எனக்கு  அமைச்சு பதவி மீது ஆசை இல்லை .. இல்லை.. ஆனால் மக்கள் முடிவு செய்தால் , கட்சி தலைமை முடிவெடுத்தால் அதை திறம்பட செய்குவேன்..👍

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

IMG-20200726-223800.jpg சத்தியமாக எனக்கு  அமைச்சு பதவி மீது ஆசை இல்லை .. இல்லை.. ஆனால் மக்கள் முடிவு செய்தால் , கட்சி தலைமை முடிவெடுத்தால் அதை திறம்பட செய்குவேன்..👍

இந்த திரைப்படத்தை சில நாட்களுக்கு முன்னர் பார்த்துக் கொண்டிருந்த போது சும்மை நினைத்து சிரித்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, MEERA said:

கேள்வி: வடக்கு கிழக்கின் அனைத்துப் பகுதிகளுக்கும் அண்மைக்காலத்தில் சென்று வந்திருக்கின்றீர்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கான ஆதரவு “அப்படியே” உள்ளதா? 2015 இல் பெற்ற வெற்றியை இப்போதும் உங்களால் தக்கவைக்க முடியுமா?

பதில்: ஆம். எமது ஆதரவுத் தளத்தில் எள்ளளவும் குறைவு கிடையாது.

இந்த பதிலை சிரிக்காமல் கூறியிருப்பாரா😂😂

 

விசேட அதிரடிப்படை பாதுகாப்பு இல்லாமல் மக்களை சந்தித்து இருந்தால் தெரிந்து இருக்கும் கட்டியிருக்கிற வேட்டி  அவிழ  கலைபாடு  நடந்து இருக்கும் .சுழிபுரத்தில் போன வெள்ளி இரவு செம சாத்து வாங்கினம்  பார்க்க மனதுக்குள் இதுக்காகவா  தலை இதுகளை உருவாக்கினது  போன்ற கேள்விகளை தவிர்க்க முடியலை .

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.