Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மக்களின் எதிர்பார்ப்புக்கள் நிறைவேறும் வகையில் பணி தொடரும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மக்களின் எதிர்பார்ப்புக்கள் நிறைவேறும் வகையில் பணி தொடரும்

மக்களின் எதிர்பார்ப்புக்கள் நிறைவேறும் வகையில் பணி தொடரும்

அரசியல்வாதி என்ற அடிப்படையிலும் அமைச்சர் என்ற வகையிலும் இரண்டு வகையான பொறுப்புக்கள் தன்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவை இரண்டையும் நிறைவேற்றுவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சு அலுவலகத்தில் இன்று (13) கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இதனைத் தெரிவித்தார்.

இதன்போது அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், அமைச்சர் என்கின்ற வகையில் நாடளாவிய ரீதியில் சுமார் 15 மாவட்டங்களில் வாழ்ந்து வருகின்ற கடற்றொழிலாளர்கள் தொடர்பான விவகாரங்களில் அவதானம் செலுத்த வேண்டியிருப்பதுடன், நன்னீர் நிலைகளில் நீர் வேளாண்மையை விருத்தி செய்வது தொடர்பிலும் அவதானம் செலுத்த வேண்டிய பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் பாரிய எதிர்பார்ப்புடன் குறித்த அமைச்சினை வழங்கியுள்ள நிலையில், அவர்களின் நம்பிக்கையையும் மக்களின் எதிர்பார்ப்பினையும் நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார்.

அதேபோன்று, ஒரு அரிசியல்வாதி என்ற வகையில் எதிர்பார்ப்புக்களுடன் மக்களினால் தெரிவு செய்யப்பட்ட தான் தமிழ் பேசும் மக்கள் எதிர்கொள்ளுகின்ற அன்றாடப் பிரச்சினை,அபிவிருத்தி, அரசியல் தீர்வு ஆகிய விடயங்களுக்கும் தீர்வினை பெற்றுக் கொடுக்க வேண்டிய பொறுப்பில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

எனவே, தற்போது நாட்டில் அமைந்துள்ள நிலையான அரசாங்கத்தின் ஊடாக, பொருத்தமான சூழலை உருவாக்குதல் மற்றம் உருவாகின்ற சூழலை பயன்படுத்துதல் என்ற தன்னுடைய நீண்ட நாள் கோட்பாட்டின் அடிப்படையில் தென்னிலங்கை கட்சிகளுடன் கட்டியெழுப்பியுள்ள தேசிய நல்லிணக்கத்தின் ஊடாகவும் தன்னிடம் வழங்கப்பட்டுள்ள பொறுப்புக்கள் அனைத்தும் நிறைவேற்றப்படும் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் உறவுகளுக்கு டக்ளஸ் தேவானந்தா அழைப்பு

August 13, 2020

dacy-1024x683.jpg

நாட்டில் நிலையான அரசாங்கம் உருவாகியுள்ள நிலையில் புலம்பெயர் மக்;கள் தங்களுடைய தாயக பிரதேசங்களில் முதலீடுகளை மேற்கொள்ள முன்வர வேண்டும் என்றும் அதற்காக உத்தரவாத்தினை தான் வழங்குவதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அழைப்பு விடுத்துள்ளார்.

மாளிகாவத்;தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சில் இன்று(13.08.2020) கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே கடற்றொழில் அமைச்சர் டகளஸ் தேவானந்தா இதனைத் தெரிவித்தார்.

இதன்போது அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்> பொருத்தமான சூழலை உருவாக்குவதல் மற்றும் உருவாகின்ற சூழலை பயன்படுத்துதல் என்ற தன்னுடைய நீண்ட கால கோட்பாட்டின் அடிப்படையில்> தற்போது உருவாகியுள்ள அரசியல் சூழலை தமிழ் மக்களும் தமிழ் தரப்புக்களும் பயன்படுத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் புலம்பெயர் தேசங்களில் வாழ்ந்து வருகின்ற தமிழ் மக்கள் கடந்த காலங்களில் பல்வேறு முதலீடுகளை மேற்கொள்வதற்கு ஆர்வம் செலுத்திய போதிலும் தமிழ் தலைமைகள் என்று சொல்லிக் கொண்டோர் அவற்றை சரியாக கையாளவில்லை எனவும் இடைத் தரகர்கள் சிலர் தங்களுடைய குறுகிய நலன்களுக்காக புலம்பெயர் முதலீட்டாளர்களை தவறாக பயன்படுத்த முயற்சித்திருந்தனர் அமைச்சரினால் குற்றஞ்சாட்டப்பட்டது.

மேலும் தற்போது நிலையான அரசாங்கம் உருவாகியுள்ள நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஆகியோர் தவறான செயற்பாடுகள் எவற்றையும் அனுமதிப்பது இல்லை என்பதில் உறுதியாக இருக்கின்ற நிலையில் அதற்கான உத்தரவாதத்தினை தன்னால் வழங்க முடியும் எனவும் தெரிவித்;தார்.

அத்துடன் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் புலம்பெயர் முதலீடுகள் அதிகரிக்கும் பட்சத்தில்> தமிழ் மக்கள் எதிர்கொள்ளுகின்ற அபிவிருத்தி மற்றும் அன்றாடப் பிரச்சினைகளை விரைவாகத் தீர்த்துக் கொள்ள முடியும் எனவும் புலம்பெயர் முதலீட்டாளர்கள் தமக்கிருக்கும் தார்மீக கடமையை உணர்ந்து முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்தள்ளமை குறிப்பிடத்தக்கது. #புலம்பெயர் #டக்ளஸ்தேவானந்தா #அழைப்பு #முதலீடு
 
https://globaltamilnews.net/2020/148653/

நம்புகிறோம். ஐந்து வருடங்கள்தான். எனவே உங்கள் செய்கைகள் மக்கள் எட்கும்படியாக இருக்கவேண்டும். சந்தர்ப்பத்தை பயன்படுத்துவதும் , இல்லாமல் செய்வதும் உங்களை பொறுத்தது.

  • கருத்துக்கள உறவுகள்

இவர் கடந்த மகிந்த ஆட்சியில் அடித்த கொள்ளைகளுக்கு முதலில் விளக்கம் சொல்ல வேண்டும். அதற்கு பின் மக்கள் மண்ணாங்கட்டி என்று கொண்டு வரலாம். 

யார்தான் கொள்ளையடிக்கவில்லை? கொள்ளையடித்தாலும் மக்களுக்கு சேவை செய்தால் சரிதான்.ஏமாத்து அரசியல் செய்யாத வரைக்கும் , மக்களை இன்னும் கொஞ்ச காலம் தியாகம் செய்யுங்கள் எண்டு கேட்க்காதவரைக்கும் பிரச்சினை இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, nunavilan said:

அரசியல் தீர்வு

பிறகு என்ன மாநிலத்தில் சுயாட்சிதான்

3 hours ago, putthan said:

பிறகு என்ன மாநிலத்தில் சுயாட்சிதான்

மத்தியில் கூடடாட்சி, மாநிலத்தில் சுயாட்சி. இப்பதானே மத்தியில் கூடடாட்சி தொடங்கி இருக்கிறார். கொஞ்சம் பொறுங்கள். அடுத்தது மாநில சுயாட்சிதான். 70 வருடம் பொறுத்த நமக்கு இன்னும் 5 வருடம் பொறுக்க முடியாதா.

அப்படி இல்லாவிடடாலும் என்ன? இனி  நமக்கு வடக்கு கிழக்கு இணைந்த சமஷடி  கிடைக்கும்தானே. இன்னும் ஒரு 5 வருடம்தான். இரண்டில் ஒன்று.

அதட்கு அப்புறம் நீங்கள் எல்லோரும் இங்கு வந்து ஜாலியாக இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Robinson cruso said:

யார்தான் கொள்ளையடிக்கவில்லை? கொள்ளையடித்தாலும் மக்களுக்கு சேவை செய்தால் சரிதான்.ஏமாத்து அரசியல் செய்யாத வரைக்கும் , மக்களை இன்னும் கொஞ்ச காலம் தியாகம் செய்யுங்கள் எண்டு கேட்க்காதவரைக்கும் பிரச்சினை இல்லை.

அதற்காக மகா கொள்ளைக்காரனிடம்.. மணலைக் கூட விட்டதில்லை..  போய் அபிவிருத்தி பண்ணுன்னு காலில விழுகிறது.. எவ்வளவு முட்டாள் தனம் என்பதை அறியாத முட்டாள் தமிழர்கள் உள்ளவரை.. தாடியர் காட்டில் தூறல் நின்று போகாது. நீங்க நல்லா ஒத்தூதுங்கோ. 

எனி எங்க மணல் காணாமல் போகப் போகுதோ..??! 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Robinson cruso said:

மத்தியில் கூடடாட்சி, மாநிலத்தில் சுயாட்சி. இப்பதானே மத்தியில் கூடடாட்சி தொடங்கி இருக்கிறார். கொஞ்சம் பொறுங்கள். அடுத்தது மாநில சுயாட்சிதான். 70 வருடம் பொறுத்த நமக்கு இன்னும் 5 வருடம் பொறுக்க முடியாதா.

அப்படி இல்லாவிடடாலும் என்ன? இனி  நமக்கு வடக்கு கிழக்கு இணைந்த சமஷடி  கிடைக்கும்தானே. இன்னும் ஒரு 5 வருடம்தான். இரண்டில் ஒன்று.

அதட்கு அப்புறம் நீங்கள் எல்லோரும் இங்கு வந்து ஜாலியாக இருக்கலாம்.

அப்படி ஒரு தீர்வை  அவர் எடுத்து கொடுப்பாரென்றால்  நிச்சயம் அவருக்காக யாழில் பிரச்சாரம் செய்ய தயார்....இன்றைய காலகட்டத்தில் அரசுடன் இணைந்து செயல்படும் ஒர் தமிழ் அரசியல்வாதி அரசியல் தீர்வு என சொன்னதே துணிச்சலான விடயமாக தான் பார்க்க வேண்டும்....தமிழருக்கு அரசியல் பிரச்சனை இல்லை அபிவிருத்தி தான் முக்கியம் என சொல்லும் சிங்கள இனவாதிகள் மத்தியில் இந்த ஆக்கபூர்வமான அறிக்கை .வரவேற்க்கப்பட வேண்டியது..

எனக்கு நம்பிக்கையில்லை இருந்தாலும் .....பார்ப்போம்...இன்னும் ஐந்து வருடம் 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Robinson cruso said:

மத்தியில் கூடடாட்சி, மாநிலத்தில் சுயாட்சி. இப்பதானே மத்தியில் கூடடாட்சி தொடங்கி இருக்கிறார். கொஞ்சம் பொறுங்கள். அடுத்தது மாநில சுயாட்சிதான். 70 வருடம் பொறுத்த நமக்கு இன்னும் 5 வருடம் பொறுக்க முடியாதா.

அப்படி இல்லாவிடடாலும் என்ன? இனி  நமக்கு வடக்கு கிழக்கு இணைந்த சமஷடி  கிடைக்கும்தானே. இன்னும் ஒரு 5 வருடம்தான். இரண்டில் ஒன்று.

அதட்கு அப்புறம் நீங்கள் எல்லோரும் இங்கு வந்து ஜாலியாக இருக்கலாம்.

அப்ப 1990 இல் இருந்து இவரது ஆவியா.. மத்தியில் கூட்டாட்சியில் இருக்குது. அதுவும் இவற்ற மாநிலம் சுருங்கி.. மாகாணம் ஆகி.. அது சுருகி.. மாவட்டம் ஆகி நிற்குது.

எதுக்கண்ணே அடுத்த 5 ஆண்டு. உள்ளது எல்லாத்தையும் சுருட்டிக்கிட்டு ஓடவா. இவருடன் கூட இருந்தவர்களையும் போட்டுத்தள்ளிட்டார்.. இல்ல துரத்தி விட்டிட்டார். இப்ப தானும்.. சகோதரனுமாய்.. ஊரைக்கொள்ளையடிக்க.. இன்னும் ஒரு 5 வருசம் என்ன போனஸ் வருடங்களா.. கேட்கிறீர்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் இவரை நம்பி வாக்குப் போடும் தீவக வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கு ஒரு உருப்படியான குடிநீர் வழங்கலை செய்யச் சொல்லுங்கள். குடிசை வீடுகளில் வசிக்கும் மக்களுக்கு நிரந்த கல்வீடுகளையாவது அமைச்சுக் கொடுக்கச் சொல்லுங்கள். கோவில்களை கட்டி பெயின்ட் அடிச்சு விடுறது மட்டும் அபிவிருத்தி அல்ல. அல்லது கடற்படையும் இராணுவமும் போக்குவரத்துச் செய்ய காப்பட் வீதி போடுவது மட்டும் அபிவிருத்தி அல்ல. இன்னும் தீவகத்தில் எத்தனையோ வீதிகள் தார் கண்டு 30 வருசமாச்சு. அதுகளை திருத்தவாவது சொல்லுங்கள். 

779, 780 பேரூந்து போக்குவரத்துக்கான காப்பட் வீதி போட்டு கடந்த 10 வருடங்களாக அரைகுறையில் கிடக்குது. அதை முதலில் போட்டு முடிக்கச் சொல்லுங்கள். அகல வீதி போடுறன் என்று சனத்தின்ர காணியை பறிச்சதுக்கு ஒரு நட்ட ஈடும் கொடுக்கப்படவில்லை. அதையும் கொடுக்கச் சொல்லுங்கள். அகல வீதிக்காக சரிக்கப்பட்ட மதில்கள்.. கேட்கள்.. வேலிகளை மீள இருந்த வகைக்கு அமைத்துக் கொடுப்பதும் இவரின் கடமை ஆகும். 

மேலும் அனலைதீவில்.. ஒரு வங்கிக் கிளை கூட இல்லை. ஒரு சீரான படகுப் போக்குவரத்தில்லை. வைத்தியர் இல்லை. அவசர சிகிச்சைக்கு வெளியேற படகோ.. ஒரு அம்புலஸ் ஹெலிக்கொப்டரோ கிடையாது. ஆனால் அங்கிள்ள மக்களின் வீட்டுக்கு வீடு வீணையை வரைஞ்சு வைச்சு வாக்குக் கேட்கிறாரே அது எந்த வகைக்கு அபிவிருத்தி ஆகும்..??!

ஒரு தடவை சனத்தை ஏமாற்றலாம்.. 1990 இல் இருந்து தொடர்ச்சியா ஏமாற்றிட்டே வாறார்.. இவரை இன்னும் நம்பச் சொல்லுவது போல் கேவலம் வேறேதும் இல்லை. 

3 hours ago, nedukkalapoovan said:

5 வருடங்கள் இல்லை. இப்போது 10 வருடங்கள் ஆக்க திடடமிட்டுள்ளார்கள். அதாவது 2 /3 கிடைத்தபடியால் பாரளுமன்றத்தை நீட்டிக்க ஒப்புதல் கிடைக்குமாம். ஒரு சர்வசன வாக்கெடுப்பு. அவ்வளவுதான். இலகுவாக 51 % கிடைக்கும். அறிந்ததை சொன்னேன்.

எனவே அடுத்த பத்து வருடங்களுக்கு தேர்தல் இல்லை. இந்த பத்து வருடத்தில் இவரால் ஒரு தீர்வு வரும், அல்லது மாற்றுதலைமைகளால் ஒரு தீர்வு வரும். கூட்ட்டமைப்பு நோ யூஸ்.

  • கருத்துக்கள உறவுகள்

அத்தியடி குத்தியனின் படத்தை கடந்த 26 ஆண்டுகளாக நாங்கள் பாக்கிறம் தானே.
புதுசா என்னதை காட்டப்போகின்றார்.
புதிய மொந்தையில் பழைய கள்

24 minutes ago, zuma said:

அத்தியடி குத்தியனின் படத்தை கடந்த 26 ஆண்டுகளாக நாங்கள் பாக்கிறம் தானே.
புதுசா என்னதை காட்டப்போகின்றார்.
 
 70 years பார்த்த படத்தை விடவா?

3 hours ago, nedukkalapoovan said:

முதலில் இவரை நம்பி வாக்குப் போடும் தீவக வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கு ஒரு உருப்படியான குடிநீர் வழங்கலை செய்யச் சொல்லுங்கள். குடிசை வீடுகளில் வசிக்கும் மக்களுக்கு நிரந்த கல்வீடுகளையாவது அமைச்சுக் கொடுக்கச் சொல்லுங்கள். கோவில்களை கட்டி பெயின்ட் அடிச்சு விடுறது மட்டும் அபிவிருத்தி அல்ல. அல்லது கடற்படையும் இராணுவமும் போக்குவரத்துச் செய்ய காப்பட் வீதி போடுவது மட்டும் அபிவிருத்தி அல்ல. இன்னும் தீவகத்தில் எத்தனையோ வீதிகள் தார் கண்டு 30 வருசமாச்சு. அதுகளை திருத்தவாவது சொல்லுங்கள். 

779, 780 பேரூந்து போக்குவரத்துக்கான காப்பட் வீதி போட்டு கடந்த 10 வருடங்களாக அரைகுறையில் கிடக்குது. அதை முதலில் போட்டு முடிக்கச் சொல்லுங்கள். அகல வீதி போடுறன் என்று சனத்தின்ர காணியை பறிச்சதுக்கு ஒரு நட்ட ஈடும் கொடுக்கப்படவில்லை. அதையும் கொடுக்கச் சொல்லுங்கள். அகல வீதிக்காக சரிக்கப்பட்ட மதில்கள்.. கேட்கள்.. வேலிகளை மீள இருந்த வகைக்கு அமைத்துக் கொடுப்பதும் இவரின் கடமை ஆகும். 

மேலும் அனலைதீவில்.. ஒரு வங்கிக் கிளை கூட இல்லை. ஒரு சீரான படகுப் போக்குவரத்தில்லை. வைத்தியர் இல்லை. அவசர சிகிச்சைக்கு வெளியேற படகோ.. ஒரு அம்புலஸ் ஹெலிக்கொப்டரோ கிடையாது. ஆனால் அங்கிள்ள மக்களின் வீட்டுக்கு வீடு வீணையை வரைஞ்சு வைச்சு வாக்குக் கேட்கிறாரே அது எந்த வகைக்கு அபிவிருத்தி ஆகும்..??!

ஒரு தடவை சனத்தை ஏமாற்றலாம்.. 1990 இல் இருந்து தொடர்ச்சியா ஏமாற்றிட்டே வாறார்.. இவரை இன்னும் நம்பச் சொல்லுவது போல் கேவலம் வேறேதும் இல்லை. 

நான் ஈபிடிபி ஆதரவாளன் இல்லை. டக்ளஸ் உண்மையை கூறித்தான் இந்த தேர்தலில் வெற்றி பெற்றார். கொள்ளையடிக்கவில்லை என்று சொல்லவில்லை. அப்படி என்றால் மக்களின் ஆதரவு அதிகரிக்க காரணமென்ன? மாற்று தலைமைகள் இருந்தும் அந்தப்பக்கம் மக்கள் செல்ல காரணமென்ன?

இருந்தாலும் சில கேள்விகள். கடந்த 70 வருடங்களில் தமிழ் தேசியம் என்னத்தை செய்தது? இனி என்ன செய்ய போகிறார்கள்?

அதிகாரமற்ற 13 வதையாவது காப்பாற்றுவார்களா? தமிழனை பிச்சைக்காரர்களாக மாற்றினார்களா இல்லையா?

தமிழர்கள் வெளிநாடுகளுக்கு புலம் பெயர்ந்தது எதட்காக? பணத்துக்காகவா, யுத்தத்திலிருந்து தப்புவதட்காகவா, மரண பயத்தினாலா?

அப்படி என்றால் இங்குள்ள தமிழர்கள் அவற்றை எதிர்த்து இந்த மண்ணிலேயே இருக்க தீர்மானித்தார்கள் என்று எடுத்துக்கொள்ளலாமா?

அப்படி என்றால் வெளி நாடு சென்ற அவர்களால் தமிழ் தேசியம் குறித்து பேச முடியுமா?

இன்னும் நிறைய கேள்விகள் இருக்குகின்றன. தேவைப்படடால் எழுதுகின்றேன். 

  • கருத்துக்கள உறவுகள்

றொபின்சன்...  நீங்கள், இன்னும் கனக்க.. ✍️  எழுத வேண்டும்.  :)

55 minutes ago, தமிழ் சிறி said:

றொபின்சன்...  நீங்கள், இன்னும் கனக்க.. ✍️  எழுத வேண்டும்.  :)

எழுதுவேன், எழுதுவேன். தமிழ் தேசியவாதிகள் எண்டு சொல்லிக்கொண்டு மக்களை ஏமாத்தும் பேர்  வழிகள் இருக்கும்வரை எழுதுவேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு காலமும்,
நீங்கள்  எழுதாமல் இருந்ததன்... மர்மம் என்னவோ....

Just now, தமிழ் சிறி said:

இவ்வளவு காலமும்,
நீங்கள்  எழுதாமல் இருந்ததன்... மர்மம் என்னவோ....

தனிப்படட விடயம். எங்கே எழுதாமல் இருந்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

இவ்வளவு காலமும்,
நீங்கள்  எழுதாமல் இருந்ததன்... மர்மம் என்னவோ....

   பெயர் மாற்றம் செய்து பத்திரம் வரும்வரை காத்திருந்தார் 

On 15/8/2020 at 16:29, satan said:

   பெயர் மாற்றம் செய்து பத்திரம் வரும்வரை காத்திருந்தார் 

சாத்தான், நான் ஒரு நாளும் வேதம் ஓதுவதில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.