Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கமலா ஹாரிஸ் துணை ஜனாதிபதியாக பதவி வகிப்பதற்கு தகுதியற்றவரா? ட்ரம்ப் மறைமுக தகவல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

kamala-harris-joe-biden-gt-img-720x450.jpg

கமலா ஹாரிஸ் துணை ஜனாதிபதியாக பதவி வகிப்பதற்கு தகுதியற்றவரா? ட்ரம்ப் மறைமுக தகவல்

அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளரான கமலா ஹாரிஸ், துணை ஜனாதிபதியாக பதவி வகிப்பதற்கு தகுதியற்றவர் என்று தான் கேள்விப்பட்டுள்ளதாக விமர்சகர் ஒருவரின் கருத்தை மேற்கோள் காட்டி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கருத்து வெளியிட்டுள்ளார்.

அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான ஜோ பைடன் செனட்டர் கமலா ஹாரிஸை துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் கமலா ஹாரிசுக்கு பல்வேறு தரப்பிலும் இருந்து ஆதரவும் எதிர்ப்பும் பெருகி வருகின்றன.

இதனிடையே நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவித்த ட்ரம்ப்,

‘கமலா ஹாரிஸ் அமெரிக்க துணை ஜனாதிபதியாவதற்கான தேவைகளைப் பூர்த்தி செய்யவில்லை என்று மிகவும் திறமை வாய்ந்த வழக்கறிஞர் ஒருவர் கட்டுரையொன்று எழுதியுள்ளதாக நான் இன்று அறிந்தேன். அது சரியான கருத்தா என்று எனக்கு தெரியாது.

ஆனால், அவரை துணை குடியரசுத் தலைவருக்கான வேட்பாளராக அறிவிப்பதற்கு முன்னர் இதுகுறித்து ஜனநாயக கட்சியினர் பரிசோதித்து இருப்பார்கள் என்று கருதுகிறேன். எனினும், அவர் இந்த நாட்டில் பிறக்கவில்லை என்பதால் அவருக்கு போட்டியிட தகுதியில்லை என்று கூறப்படுவதால் இதுவொரு தீவிரமான விவகாரம்’ என கூறினார்.

கமலா ஹாரிஸ் பிறக்கும்போது அவரது பெற்றோர்கள் அமெரிக்காவில் மாணவர்களுக்கான விசாவில் இருந்திருந்தால், அவரது பிறப்பு அமெரிக்காவின் அதிகார எல்லைக்குட்பட்டதாக இல்லாமல் இருக்கலாம் என்று பேராசிரியர் ஈஸ்ட்மேன் வாதிடுகிறார்.

துணை ஜனாதிபதி பதவிக்கு அறிவிக்கப்பட்டுள்ள முதல் கருப்பின பெண் மற்றும் முதல் ஆசிய அமெரிக்க பெண் கமலா ஹாரிஸ் ஆவார்.

http://athavannews.com/கமலா-ஹாரிஸ்-துணை-ஜனாதிபத/

இவர் இந்த போராட்டத்தில் வெல்லுவர் என்று எதிர்பார்ப்போம்.இவர் தனது Chief  of Staff ஆக இலங்கையை பூர்விகமாக கொண்ட ரோகினி கோசோக்குழு என்பவரை நியமித்திருக்கிறார். இவரது பெற்றோர்கள் யாழ்ப்பாணத்தை சேர்ந்த Dr ரவீந்திரன், சோபனா ஆவர். வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
17 hours ago, தமிழ் சிறி said:

kamala-harris-joe-biden-gt-img-720x450.jpg

கமலா ஹாரிஸ் துணை ஜனாதிபதியாக பதவி வகிப்பதற்கு தகுதியற்றவரா? ட்ரம்ப் மறைமுக தகவல்

நான் பிற மொழி செய்திகளை வாசித்தளவில் டொனால்ட் ட்ரம்ப் யாருக்கும் பயப்பிடாவிட்டாலும் கமலா ஹாரிஸ்சிற்கு நன்றாகவே பயப்பிடுகின்றார் போல் தெரிகின்றது. 😁

  • கருத்துக்கள உறவுகள்
On 15/8/2020 at 18:45, குமாரசாமி said:

நான் பிற மொழி செய்திகளை வாசித்தளவில் டொனால்ட் ட்ரம்ப் யாருக்கும் பயப்பிடாவிட்டாலும் கமலா ஹாரிஸ்சிற்கு நன்றாகவே பயப்பிடுகின்றார் போல் தெரிகின்றது. 😁

விவாதங்களில் மிகத்திறமையானர். அது தான் டொன்னுக்கு வயித்தை கலக்குகிறது.😆

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, nunavilan said:

விவாதங்களில் மிகத்திறமையானர். அது தான் டொன்னுக்கு வயித்தை கலக்குகிறது.😆

கூடுதலான உலக நாடுகள் ஜோ பைடனுக்குத்தான் ஆதரவு போல தெரியுது.
ஜேர்மனியிலை ஒரு முக்கிய அரசியல்வாதி நேரடியாகவே சொல்லீட்டார். 😄

 

SPD nach der Hamburg-Wahl: Und so kommt Scholz zurück ins Spiel ...

 

https://www.regio-journal.info/scholz-drueckt-joe-biden-die-daumen/

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்

 

 

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப ஆளப் போறான் தமிழன்.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, சுவைப்பிரியன் said:

அப்ப ஆளப் போறான் தமிழன்.

நீங்கள் ஆடறுக்க முதல் …….😋

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, nunavilan said:

நீங்கள் ஆடறுக்க முதல் …….😋

:grin: 😄 🤣

america%2Bjanathipathi%2Bmurugesan.jpg

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஐயர் கூட்டம் உலகத்தில் யாருடனும் சேருவினம்  தங்கடை  இனத்துக்குள் எடுபாடு  காட்டுவினம் பிள்ளை பிறந்த இரண்டு கிழமைக்குள் ஐயர்  என்றதை தேவி என்று மாத்தி விட்டுருக்கினம் .என்ன காரணமாய் இருக்கும் ?

வழக்கம்போல் எங்கடையலும்  கனவு கானதொடங்கி விட்டினம் போதாக்குறைக்கு யாழ் பெண்தான் ஆலோசகராம் இங்கு தமிழ்த்தேசியத்தை பிடிக்காது என்று சொல்பவர்கள் தான் முன்னுக்கு வந்து ரெட் கார்பெர்ட் போடுனம் .

22 hours ago, பெருமாள் said:

 

வழக்கம்போல் எங்கடையலும்  கனவு கானதொடங்கி விட்டினம் போதாக்குறைக்கு யாழ் பெண்தான் ஆலோசகராம் இங்கு தமிழ்த்தேசியத்தை பிடிக்காது என்று சொல்பவர்கள் தான் முன்னுக்கு வந்து ரெட் கார்பெர்ட் போடுனம் .

தமிழ் தேசியம் பிடிக்கும். போலி தமிழ் தேசியம் பிடிக்காது பெருமாளே.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பவுன் லொட்டரி  வாங்கி ஒரு பில்லியன் பவுன்சை அடைவது  கூட நடக்கும்  ஆனால் *** சுமத்திரன் போன்றவர்கள் உங்களின் மூளையை கழட்டி பின்பக்கத்தில் செருகிவிட்டார் போல் தென்படுது. எப்ப பார்த்தாலும் உங்கள் தீர்வுகளுக்கு மற்றவன் வந்து தீர்வு தருவார்கள் என்று நம்பும் குணம் மோசமான படுபயங்கரமானது இதைத்தான் 80களில்  ஆயுதப்போராட்டம் தொடங்கும்போது மக்களுக்கு சண்டை போட்டுகொண்டு இருக்க இந்தியன் வந்து நாட்டை பிரித்து ஈழம் தருவான் .கடைசியில் நந்திக்கடலில் செய்தது மறந்து போயிட்டுது அங்கும் சும்மா இல்ல அமெரிக்கன் நீர் மூழ்கி கப்பலில் வருவான் காப்பாற்றுவான் இப்படி பலகதைகளை  கண்டவர்கள் ஆனால் இந்த *** சுமத்திரன்  தனது  விசுவாசிகளை இன்னும் நம்பும் படி மாற்றி வைத்துள்ளது அதிசயம் .மேலும் பிறந்து இரண்டு கிழமைகூட ஆகவில்லை தன்னுடைய குலப்பெயரை கூட பிறப்பு செர்டிபிக்கற்றில் வைத்திருக்க முடியாத ஆளினால் தன்னுடைய வம்சாவளியினரின் அயல் நாட்டில் விடிவு கொண்டுவரமுடியும் என்று நம்புவது .

  • கருத்துக்கள உறவுகள்

 

 

  • கருத்துக்கள உறவுகள்
அமெரிக்க துணை ஜனாதிபதி வேட்பாளராக கமலா ஹாரிஸ் அதிகாரபூர்வமாக அறிவிப்பு
அமெரிக்க துணை ஜனாதிபதி வேட்பாளராக கமலா ஹாரிஸ் அதிகாரபூர்வமாக அறிவிப்பு
 

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 3-ந் தேதி நடைபெற உள்ளது. குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் 2-வது முறையாகப் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடன் போட்டியிடுகிறார். அதேபோல் ஜனநாயக கட்சி சார்பில் துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அதிகாரபூர்வமாக அறிவிக்கும் ஜனநாயக கட்சி தேசிய மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது. காணொலி காட்சி வழியாக நடந்து வரும் இந்த மாநாட்டில் நேற்று முன்தினம் ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக ஜோ பைடன் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து நேற்று நடந்த மாநாட்டில் ஜனநாயக கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக கமலா ஹாரிஸ் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார். இதனை கமலா ஹாரிஸ் முறைப்படி ஏற்றுக்கொண்டார். இதன் மூலம் அமெரிக்க துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் முதல் தெற்காசிய, இந்தியாவை பூர்வீகமாக கொண்ட, ஆப்பிரிக்க அமெரிக்க பெண் எனும் புதிய வரலாற்றை கமலா ஹாரிஸ் படைத்துள்ளார். இந்த மாநாட்டில் கமலா ஹாரிஸ் பேசியதாவது:-

ஜனநாயக கட்சி என்னை துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்ததை நான் ஏற்கிறேன். இந்த அறிவிப்பை நான் அனைத்து கறுப்பின பெண்களுக்கும் உரிமைக்காக போராடும் பெண்களுக்காக சமர்ப்பிக்கிறேன். இனிமேல் தீர்மானத்துடன் போரிடுவோம், நம்பிக்கையுடன் போரிடுவோம், ஒருவொருக்குள் பரஸ்பர நம்பிக்கையை ஏற்படுத்திக்கொண்டு உறுதியுடன் போராடுவோம்.

அமெரிக்காவில் ஜனாதிபதி டிரம்ப்பின் தலைமை தோல்வி அடைந்த தலைமை. அமெரிக்காவில் நடக்கும் உயிரிழப்புகளை, சோகங்களை அரசியல் ஆயுதங்களாக டிரம்ப் பயன்படுத்துகிறார். டிரம்ப்பின் தலைமை தோல்வியால்தான் கொரோனாவில் லட்சக்கணக்கான உயிர்களை இழந்தோம், வாழ்வாதாரத்தை இழந்தோம்.

தேசத்துக்கு முக்கியமான பணிகளை, வித்தியாசமாக, சிறந்ததாகச் செய்யும் வேட்பாளரைத் தான் ஜனாதிபதியாக தேர்வு செய்யவேண்டும். கறுப்பினத்தவர், வெள்ளையினத்தவர், லத்தீன்அமெரிக்கர், ஆசியர்கள் என அனைவரையும் பிரிக்காமல் ஒன்றாக இணைப்பவராக அந்த ஜனாதிபதி இருக்க வேண்டும். தேசத்தின் எதிர்காலத்தை அனைவரையும் சேர்ந்து கட்டமைக்க முயல்பவராக ஜனாதிபதியாக இருக்க வேண்டும். அந்த சிறந்த ஜனாதிபதியாக நாம் ஜோ பைடனை தேர்வு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/08/21043725/Kamala-Harris-officially-announced-as-US-Vice-Presidential.vpf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.