Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான போராட்டத்துக்கு ஆதரவு கோரல்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, goshan_che said:

மட்டகளப்புத்தானே என்று ஊடகங்கள் அதை செய்தியாகமல் விட்டதோ அல்லது, இங்கே இணத்தவர்கள் இணைக்காமல் விட்டார்களோ தெரியவில்லை. 

எனது விருப்பத்தளங்களில் பற்றிநாதம் இருக்கின்றது. ஆனால் அது பல மாதங்களாக இயங்கவில்லை என்பதால் கிழக்கு செய்திகளை காண்பது குறைவு. 

நம்பிக்கையான கட்சிசாராத கிழக்கு செய்தி தளம் இருந்தால் சொல்லுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, உடையார் said:

 

33 minutes ago, கற்பகதரு said:

 

சாணக்கியனும் சம்பந்தனும் நிற்கிறார்கள். விக்னேஸ்வரனும் கஜேந்திரகுமாரும் நின்றதை காணவில்லையே?

 

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, கற்பகதரு said:

சாணக்கியனும் சம்பந்தனும் நிற்கிறார்கள். விக்னேஸ்வரனும் கஜேந்திரகுமாரும் நின்றதை காணவில்லையே?

தங்களுக்கு பார்வையும் தேடலும் சமீப காலமாக குறுகிவிட்டது. 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, உடையார் said:

நீங்கள் செய்வது அப்பட்டமான பிரதேசவாதம்தான் - எனென்றால் ஒன்றை விளங்கி கொள்ள முதல், இப்படி பதிகின்றீர்கள்.

கீழே உள்ள தளத்தில் போய் பாருங்கள்,

http://www.ilakku.org/

முதலில் போட்டது யாழில் நடந்த போராட்டம். அவற்களுக்கு மற்ற செய்திகள் போக முதல், யாழின் செய்தி கிடைத்திருக்கலாம். யாழின் செய்தி இணைத்தபின் எந்த செய்தியும் நான் இணைக்கவில்லை, நித்தா கொள்ள போய்விட்டேன்.

இதில் செய்திகள் இணைத்திருப்பது நானும் கிருபனும் - இப்ப சொல்லுங்கள் யாரை நினைத்து பதிவிட்டீர்கள் என்று.

இங்கு யாரும் பிரதேசத்தை வைத்து யாழில் செய்திகள் இணைப்பதில்லை.

நீங்கள்தான் இப்ப பல புதிய கோணங்களில் கிளறுகின்ற மாதிரி இருக்கு. 

நான் ஏதையும் மூடி மறைக்க தேவையில்லை, அப்படிப்பட்டவனுமில்லை

 நான் தந்து எடுத்து வளர்ப்பதும் மட்டகளப்பிலிருந்துதான்,  இன்னும் எடுக்க இருக்கின்றேன்.

கொரோணா கலத்தில் யாழ் இன்னுமொரு உறவுடன் இணைத்து உதவி செய்ததும் மட்டகளப்பிற்குதான், 02/09/20 நினைவுதினமாக சாப்பாடு கொடுக்கப்போவதும் மட்டகளப்பில்தான்....

ஒரு சிறு வட்டம்போட்டுவிட்டு எல்லாதையும் ஒரே மாதிரி எடை போடாதீர்கள்

 இந்த பிரதேச வாத த்தை கொஞ்சம் அடக்கி வாசியுங்கள், இப்ப சிதைந்து போயிருக்கு அதை இன்னும் சிதைக்க வேண்டாம், இப்படி நஞ்சூட்டி 🙏

 

 

உடையார்,

1. நீங்கள் செய்யும் உதவிகள் போற்றுதலுக்குரியன.

2. நான் இங்கே பதிந்ததை திரும்பி வாசியுங்கள். நான் முதலில் செய்திதளங்கள் இதை போடவில்லையா? அல்லது இணத்தவர்கள் இணைக்கவில்லையா என்றே கேட்டேன். கிட்டதட்ட லைவ்வாக மட்டகளப்பு போராட்டங்கள் பற்றிய செய்திகள் சமூகவலை எங்கும் வந்த போது, ஒரு தளம் தனியே யாழ் செய்திகளை மட்டும் இணைத்தது என்றால் அது நிச்சயமாக “இச்சையின்றிய” மையாவாத சிந்தனையே.

3. செய்தி இணைப்போர் யாரென்று நான் உண்மையில் பார்க்கவில்லை. தலைப்புக்களில் கிழக்கு மட்டும் விடுபட்டிருப்பது தெரிந்தது. அதைதான் ஏன் என்று கேட்டேன்.

4. நான் “இச்சை இன்றிய” என்ற பதத்தையும் அதற்கான ஆங்கில பதத்தையும் அறிந்தே பயன்படுத்தினேன். சிலர் இச்சையுடன் யாழ் மையவாதிகளாக இல்லாதவிடத்தும், நமக்கே தெரியாமல் இந்த மையவாதம் தலைகாட்டலாம் அதையே சொன்னேன்.

3 hours ago, ரஞ்சித் said:

அதுசரி, இந்தப் போராட்டங்களில் கருணா அம்மானும், பிள்ளையானும், வியாழேந்திரனும், ஜெயனந்த மூர்த்தியும், டக்கிளஸும், அங்கஜனும் திலீபனும் செலுத்திய பங்களிப்பு என்ன? 

என்ன ஐயா இப்படி கேட்டு விட்டீர்கள்

காணாமல் ஆக்கியவர்களே அவர்கள்தானே?

தமக்கு எதிராகவே போராட முடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, கிருபன் said:

எனது விருப்பத்தளங்களில் பற்றிநாதம் இருக்கின்றது. ஆனால் அது பல மாதங்களாக இயங்கவில்லை என்பதால் கிழக்கு செய்திகளை காண்பது குறைவு. 

நம்பிக்கையான கட்சிசாராத கிழக்கு செய்தி தளம் இருந்தால் சொல்லுங்கள்.

கிருபன்,

எனது பதிவின் கருத்தை என் மேல் பிரதேசவாத பட்டம் கட்டாமல் உள்வாங்கியமைக்கு நன்றி.

பக்கசார்பின்மை பற்றிய உத்தரவாதம் தரமுடியாது. ஆனால்

Meenagam . Com

battineews . Com

என்பன நான் பார்ப்பவை.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

இன்னொன்றையும் நினைவில் கொள்ளுங்கள்.

ஏனப்பா மட்டகளப்பு செய்திகளை இணைக்கவில்லை என கேட்ட எனக்கு கிடைத்த பட்டம் பிரதேசவாதி, தமிழ் தேசியத்தின் எதிரி.

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான பொது அமைப்பு நடத்திய போராட்டத்தை தவிர்த்து, தனியே ஆவர்த்தனம் ஒரு மாவட்டத்தில் மாத்திரம் வாசித்த கட்சிக்கு கிடைக்கும் பெயர் - தமிழ் தேசியத்தின் தூண்கள்.

கஜேந்திரனுக்கு எம்பி சீட் கொடுத்தாலும் அவர் அம்பாறை எம்பி போலவே செயற்படுவார் என்றார்களே?

அம்பாறையில் போய் கஜன் ஏன் இன்னும் தனது மக்களை சந்திக்கவில்லை?

அலுவலகம் போடவில்லை ?

அல்லது அவர்கள் கட்சியின் பெயரிலும் பேச்சிலும் “தேசியம்” வளர்ப்பது - கிழக்கில் உபரி வாக்குகளை பெற்று, வடக்கில் இருந்து ஒருவரை தேசியபட்டியலில் அனுப்ப மட்டும்தானா?

இதை கேட்டால் என்னை பிரதேசவாதி என திட்ட தோணுமே?

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தன் ஐயாவும் ஒரு மாதிரி களத்தில இறங்கிற்றார்!

சிவனே என்று இருந்த மனிசனை களத்தில இறங்க வைச்ச வாக்காளப் பெருமக்களை நினைக்க கோபம் கோபமா வருது.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஏராளன் said:

சம்பந்தன் ஐயாவும் ஒரு மாதிரி களத்தில இறங்கிற்றார்!

சிவனே என்று இருந்த மனிசனை களத்தில இறங்க வைச்ச வாக்காளப் பெருமக்களை நினைக்க கோபம் கோபமா வருது.

அடி உதவுகிறது போல் எதுவும் உதவாது இந்த முறை தேர்தலில் கிடைத்த அடி இவர்களை இனி நகர்த்தும். இந்த 11 வருடங்களாக இவர்கள் விட்ட பிழைகள் தான் இன்றைய தமிழினத்தின் இழி நிலைக்கு காரணம். 

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, விசுகு said:

அடி உதவுகிறது போல் எதுவும் உதவாது இந்த முறை தேர்தலில் கிடைத்த அடி இவர்களை இனி நகர்த்தும். இந்த 11 வருடங்களாக இவர்கள் விட்ட பிழைகள் தான் இன்றைய தமிழினத்தின் இழி நிலைக்கு காரணம். 

நூற்றில் ஒரு வார்த்தை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, goshan_che said:

3. செய்தி இணைப்போர் யாரென்று நான் உண்மையில் பார்க்கவில்லை. தலைப்புக்களில் கிழக்கு மட்டும் விடுபட்டிருப்பது தெரிந்தது. அதைதான் ஏன் என்று கேட்டேன்.

நன்றி கோஷன்- நீங்கள் அப்படி நினைந்திருக்காவிட்டால் 🙏

 என் வாழ்கையில் நான் இதுவரை பார்த்தில்லை, இனிமேலும் இல்லை அந்த குறுகிய வட்டத்திற்குள்

 

11 minutes ago, விசுகு said:

அடி உதவுகிறது போல் எதுவும் உதவாது இந்த முறை தேர்தலில் கிடைத்த அடி இவர்களை இனி நகர்த்தும். இந்த 11 வருடங்களாக இவர்கள் விட்ட பிழைகள் தான் இன்றைய தமிழினத்தின் இழி நிலைக்கு காரணம். 

ஐயா நொந்து நூலாகி இருக்கின்றார் 😆

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, உடையார் said:

 

ஐயா நொந்து நூலாகி இருக்கின்றார் 😆

அதைவிட முக்கியம் இவர்களது தலைக்கனம். 

தங்களை விட்டால் தமிழர்களுக்கு வேறு நாதியில்லை என்ற முடிவுக்கு இவர்கள் வந்திருந்தது இந்த முறை தேர்தல் பிரச்சாரத்தின் போது தெளிவாக தெரிந்தது. முக்கியமாக சுமேந்திரன் சம்பந்தர் மற்றும் சிறீதரன் பேச்சுக்களில் பேட்டிகளில். லட்சக்கணக்கில் வாக்குகள் வித்தியாசத்தில் வெல்வோம் என்ற மமதையில் இருந்தார்கள். அடி மிக மிக பலமானது. 

Edited by விசுகு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விசுகு said:

அதைவிட முக்கியம் இவர்களது தலைக்கனம். 

தங்களை விட்டால் தமிழர்களுக்கு வேறு நாதியில்லை என்ற முடிவுக்கு இவர்கள் வந்திருந்தது இந்த முறை தேர்தல் பிரச்சாரத்தின் போது தெளிவாக தெரிந்தது. முக்கியமாக சுமேந்திரன் சம்பந்தர் மற்றும் சிறீதரன் பேச்சுக்களில் பேட்டிகளில். லட்சக்கணக்கில் வாக்குகள் வித்தியாசத்தில் வெல்வோம் என்ற மமதையில் இருந்தார்கள். அடி மிக மிக பலமானது. 

சுமேக்கு அடிக்குமேல் அடி, அவரின் செருக்கை காணவில்லை கூட்டத்தில் கதைக்கும் போது 😆

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: one or more people, people standing and outdoor

Image may contain: ‎16 people, ‎text that says "‎சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் (30.08.2020] இிங்கை கராறுவுத்தால் டத்தப்பட்ட தங்கள் குழந்தைகளைத் தேடும் போது சாவடைந்த தப்மார்களுக்கு வணக்கம் சலுத்துகிறோம். இந்த தாய்மார்கள் தங்கள் சாவிற்கு அச்சமின்றி திருந்தனர், அதே நரத்தில் அவர்கள் கடத்தப்பட்ட குழந்தைகளைக் கண்டுபிடிக்க தொடர்ந்து போராடி வந்தனர். We salute the mothers who died while they were searching for their children were abducted were fearless the Sri ankan army. These mothers their death, while they continued to struggle to find their abducted children. Death of these mational mothere อรนาร தமறகா שוาה are Criminal forcing Court. us g0‎"‎‎

 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, உடையார் said:

சுமேக்கு அடிக்குமேல் அடி, அவரின் செருக்கை காணவில்லை கூட்டத்தில் கதைக்கும் போது 😆

அதே.  ஆனால் தமிழரின் பிளவுகள் எமக்கு பெரும் பலவீனம். அதை இனியாவது இவர்கள் உணர்ந்து எல்லோரையும் உள்வாங்கி தலைவரின் தூர நோக்கை புரிந்து கொண்டு செயல்படட்டும். அண்மையில் கயேந்திரகுமாரின் பேச்சு ஒன்று பார்த்தேன். எங்களுக்குள் பிரச்சினை இருக்கலாம் ஆனால் கூட்டமைப்பு தமிழரின் பலம் என்பதை நாங்கள் மறக்க மாட்டோம் மறக்க முடியாது என்று குறிப்பிட்டிருந்தார். நல்லதொரு முன்மாதிரி. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மன்னாரில் இன்று மாபெரும் போராட்டம்!missing-person-mannar-2-720x480-1.jpg?189db0&189db0

 

சர்வதேச காணாமலாக்கப்பட்டோர் தினம் நேற்று (30) அனுஷ்டிக்கப்பட்ட நிலையில், மன்னாரில் இன்று (31) கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்தப் போராட்டம் மன்னார் பிரஜைகள் குழுவின் அனுசரனையுடன், மன்னார் மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் அமைப்பின் ஏற்பாட்டில் இன்று காலை 9.30 மணியளவில் மன்னார் பஸார் பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.

இந்த போராட்டத்தில் கலந்துகொண்ட காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் சர்வதேசமே மௌனம் காப்பது ஏன், இலங்கை அரசே உண்மையை மறைக்காதே ஒரு நாள் நிச்சயம் வெளிவரும், காணாமலாக்கப்பட்ட உறவுகள் எங்கே, சர்வதேசமே புதிய அரசாங்கத்திடம் நீதியை பெற்றுத்தாருங்கள் உள்ளிட்ட பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அத்தோடு, காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கு நினைவகம் ஒன்றை அமைப்பதற்கு இடம் கோரி கையெழுத்துக்களும் பெற்றுக்கொள்ளப்பட்டன.

அதேநேரம் காணாமலாக்கப்பட்ட உறவுகளைத் தேடும் குடும்பங்களின் அமைப்பினால் ஜனாதிபதிக்கு எழுதிய மகஜர் போராட்டம் இடம்பெற்ற இடத்திற்கு வருகைதந்த மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.குணபலனிடம் கையளிக்கப்பட்டது.

குறித்த போராட்டத்தில் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள், மத தலைவர்கள், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன், நானாட்டான் பிரதேச சபையின் தலைவர் திருச்செல்வம் பரஞ்சோதி, உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டனர்.

  • missing-person-mannar-4-720x480-1.jpg?18
  • missing-person-mannar-6-720x480-1.jpg?18
  • missing-person-mannar-1-720x480-1.jpg?18
  • missing-person-mannar-2-720x480-1.jpg?18
 
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.