Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லடாக்கில் மீண்டும் பதற்றம்: சீனாவுடன் நீண்டகால மோதலுக்கு தயார் – இந்தியா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Chinese-army-that-continues-to-move-out-of-the-Ladakh-border.jpg

லடாக்கில் மீண்டும் பதற்றம்: சீனாவுடன் நீண்டகால மோதலுக்கு தயார் – இந்தியா

லடாக் பகுதியில் சீனாவுடன் நீண்டகால மோதலுக்கு இந்தியா தயாராக இருப்பதாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் இராணுவ அதிகாரிகள் நடத்திய ஆலோசனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு லடாக் எல்லையில் பாங்காங்சோ ஏரியின் தென்கரையில் சீன வீரர்கள் கடந்த 29ஆம் திகதி இரவு மீண்டும் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் அதை இந்திய வீரர்கள் முறியடித்ததாகவும் இந்திய இராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் அமன் ஆனந்த் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையில் உயர்மட்டக் கூட்டம் நடத்தப்பட்டது.

இதில் மூத்த இராணுவ அதிகாரிகள் தவிர, உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் புலனாய்வு செய்யும் அதிகாரிகள், உளவுத்துறை இயக்குநர் அரவிந்த் குமார், ரா அமைப்பின் செயலாளர் சமந்த் கோயல் மற்றும் மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லாவும் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் கட்டுப்பாட்டு எல்லைப் பகுதியில் அடுத்ததாக சீனா எடுக்கவிருக்கும் நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் இதுவரை நடந்த முயற்சிகளை முறியடித்திருந்தாலும் இனிவரும் காலங்களில் எவ்வாறான நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டத்தில் ஆராயப்பட்டதாக இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

லடாக் பகுதியைத் தவிர வேறு இடங்களில் சீனா தனது விஷமத்தனத்தைக் காட்டினாலும் அதற்கும் எவ்வாறு பதிலடி கொடுப்பது என்று கருத்துக்கள் பரிமாறப்பட்டதாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

மேலும் லடாக் பகுதியில் சீனாவுடன் நீண்டகால மோதலுக்கு இராணுவம் தயாராக இருப்பதாக அஜித் தோவலிடம் தெரிவித்தாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

http://athavannews.com/லடாக்கில்-மீண்டும்-பதற்ற/

  • கருத்துக்கள உறவுகள்

வாய்ச் சொல்லில் வீரரடி கிளியே....

 

😜😜

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Kapithan said:

வாய்ச் சொல்லில் வீரரடி கிளியே....

 

😜😜

யுத்தத்தை மிகவும் தவிர்க்க விரும்புவது சீனாவே.

சீன இறங்குமாயின், அதை விட முட்டாள் தனம் வேறு ஒன்றும் இருக்க முடியாது.

எனவே கிந்தியா வாய்ச் சொல் வீரம் கட்டலாம்.

ஆயினும் கிந்தியா ஆயத்தப்படுத்தி விட்டுத் தான் அழைக்கிறது.

குறிப்பாக, தென் சீன கடலில், கிந்தியா கடற்படை வளங்களை  நிறுத்தி வைத்து உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kadancha said:

யுத்தத்தை மிகவும் தவிர்க்க விரும்புவது சீனாவே.

சீன இறங்குமாயின், அதை விட முட்டாள் தனம் வேறு ஒன்றும் இருக்க முடியாது.

எனவே கிந்தியா வாய்ச் சொல் வீரம் கட்டலாம்.

ஆயினும் கிந்தியா ஆயத்தப்படுத்தி விட்டுத் தான் அழைக்கிறது.

குறிப்பாக, தென் சீன கடலில், கிந்தியா கடற்படை வளங்களை  நிறுத்தி வைத்து உள்ளது.

நாரதா...

இந்திய பிற்பாட்டை நன்றாகப் பாடுகிறீர்கள் பிரபோ... ம்.ம்.. பட்டையக் கிளப்புங்கள்..ம்..ம்..😂😂

சீனனைப்பற்றி எனக்கென்ன கவலை  😂 இந்திக்கு திரும்பவும் சீனன் தலையில கட்டையாலேயே  அடித்துக் கொல்வான். அவன் பி.......வரிசையாக அடிக்கி வைத்திருப்பதை பார்க்கத்தானே போகிறேன். 😂😂

அன்னாள் என் பொன்னாள் 😂😂

  • கருத்துக்கள உறவுகள்

உப்பிடியே பேசிகிட்டு இருந்தா எப்படி சட்டுபுட்டுன்னு அடிச்சு ஆர் பெரிய ஆள் எண்டு காட்டுங்கோ.....

உந்த அடிபாட்டில பேரினவாததின் மண்டையும் உடைஞ்சா நல்லம்.

 

  • கருத்துக்கள உறவுகள்

மலைப் பகுதியை ஆக்கிரமிக்க முயன்ற சீனா படைகளை இந்திய படைகள் எவ்வாறு விரட்டி அடித்தது...?

மலைப் பகுதியை ஆக்கிரமிக்க முயன்ற சீனா படைகளை இந்திய படைகள் எவ்வாறு விரட்டி அடித்தது...?

லடாக்கின் கிழக்கு உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் அத்துமீறிய சீன ராணுவ வீரர்களுக்கும், இந்திய வீரர்களுக்கும் கடந்த மாதம் 15-ந் தேதி ஏற்பட்ட மோதலில் இந்திய தரப்பில் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பில் 35 பேர் உயிர் இழந்தனர். ஆனால் சீன தரப்பில் உயிரிழப்பு விவரங்களை வெளியிடவில்லை


கால்வான் பள்ளத்தாக்கு மற்றும் ரோந்து புள்ளி 15 இல் ஆரம்ப படைகள் விலகி கொண்டாலும் பாங்கோங் ஏரி மற்றும் ரோந்து புள்ளி 17 ஏ என அழைக்கப்படும் கோக்ரா-ஹாட் ஸ்பிரிங்ஸ் பகுதியிலிருந்து செல்ல சீனா தயக்கம் காட்டுகிறது.

லடாக் எல்லையில் நேற்று சீன ராணுவம் மீண்டும் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளது.  பாங்காங்க் ஏரியின் தெற்கு கரை பகுதியில் சீன படையினர் அத்துமீறலில் ஈடுபட்டனர். சீன ராணுவத்தினரை இந்திய ராணுவம் விரட்டியடித்துள்ளது. 

ஆனால் இந்த குற்றச்சாட்டை சீனா ராணுவம்  மறுத்து உள்ளது. நாங்கள் ஒருபோதும் மற்ற நாட்டின் ஒரு அங்குல நிலத்தை கூட ஆக்கிரமிக்கவில்லை என்று சீனா கூறியுள்ளது. 

செய்தி நிறுவனமான ஐஏஎன்எஸ் குறிப்பிட்டுள்ள ஆதாரங்களின்படி, சீன ராணுவம் கயிறுகள் மற்றும் பிற ஏறும் கருவிகளின் உதவியுடன் பங்கோங் த்சோவின் தென் கரையில் பிளாக் டாப் மற்றும் தாகுங் ஹைட்ஸ் இடையே ஒரு மலைப்பகுதியில் பகுதியில் ஏறத் தொடங்கினர். குழப்பத்தை உணர்ந்த இந்திய ராணுவம் விரைவில் நடவடிக்கையில் இறங்கியது.

செயலற்ற உயரத்திற்கு அருகில் இந்திய நடவடிக்கைகளை கண்காணிக்க சீன இராணுவம் மேம்பட்ட கேமராக்கள் மற்றும் கண்காணிப்பு உபகரணங்களை நிறுத்தியுள்ளது, ஆனால் அதையும் மீறி, இந்திய படை  அங்கு உயரத்திற்கு சென்று ஆக்கிரமிக்க முடிந்தது.

குறிப்பாக, இந்திய நடவடிக்கைகளை கண்காணிக்கும் பொருட்டு, சீன இராணுவம் அத்தகைய உபகரணங்களை உண்மையான கட்டுப்பாட்டு வரிசையில் நிறுவியுள்ளது. ஆதாரங்களின்படி, இந்தியப் பகுதி தனது எல்லைக்குள் மலை உயரத்தை ஆக்கிரமித்த பின்னர் சீனர்கள் கேமராக்கள் மற்றும் கண்காணிப்பு உபகரணங்களை அகற்றியுள்ளனர்.

சீனா மலை உயரத்தின் மீது தனது அதிகாரத்தை கோருகிறது மற்றும் பாங்கோங் ஏரி பகுதியின் தென் கரையிலும் அருகிலுள்ள ஸ்பாங்கூர் இடைவெளியிலும் சாதகமான நிலையைப் பெறுவதற்கான முயற்சியில் அதைப் பிடிக்க முயல்கிறது.

சமீபத்திய தகவல் படி கிழக்கு லடாக்கின் பாங்காங் ஏரியில் புதிய மோதல் தொடர்பான விஷயத்தை தீர்க்க இந்திய மற்றும் சீன வீரர்கள் இன்று சுஷூலில் மற்றொரு சுற்று பேச்சுவார்த்தைகளைத் தொடங்கினர்.

"இந்தியப் பக்கத்தில் சுஷூலில் காலை 10 மணிக்கு ஒரு படைப்பிரிவு தளபதி பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டார் என்று ஒரு வட்டாரம் தெரிவித்தது.

பாங்கோங் ஏரியின் தென் கரையில் மூன்று சர்ச்சைக்குரிய இடங்களில் சமீபத்தில் பேச்சுவார்த்தைகளில் கவனம் செலுத்துவதாக கூறப்படுகிறது. பிளாக் டாப் மற்றும் ஹெல்மெட் டாப் அருகிலுள்ள பகுதிகளில் சீனர்களை நிறுத்துவது குறித்தும் இந்தியா கவலை தெரிவித்துள்ளது...

https://www.dailythanthi.com/News/TopNews/2020/09/01172835/How-India-outsmarted-China-and-claimed-strategic-unoccupied.vpf

 

..

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, Kapithan said:

இந்திய பிற்பாட்டை நன்றாகப் பாடுகிறீர்கள்

ஒன்றையும் உணர்ச்சி வசமாக பார்ப்பதில்லை.

 அறியக் கூடிய யதார்த்தத்தின் நிலைமைகளேயே ஆராய்ந்து எழுதுகிறேன்.

decoupling ஐ தவிர்க்க கடுமையாக முயதர்சி செய்யும் சீன, யுத்தம் தொடங்குவது தானே தனக்கு வெட்டும் குளியாகும்.

அமெரிக்காவையே பொருளாதாரத்தினால் சுண்டி விழுத்தும் நிலைக்கு வந்து கொண்டு இருக்கும் சீனா, இந்தியாவோடு யுத்தத்தை தொடங்குவது, அமெரிக்கா இற்கு பொல்லு கொடுத்தது போல் ஆகும்.   

அது மட்டுமல்ல, தாய்வானின் நிலைமையில் கூட சீனாவின் கணிப்பு அமெரிக்கா தன்னை முதல் வேட்டை தீர்ப்பதற்கு தூண்டுகிறது என்பதே.

மற்றது கடற்பலத்தில், ஒட்டு மொத்த பலம் (offensive & defensive) கிந்தியாவுக்கு வாய்ப்பாக உள்ளது.

ஆனாலும், உண்மையான யுத்தத்தை எவருமே எதிர்வு கூற முடியாது என்பததும் யதார்த்தமாகும்.  

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

உப்பிடியே பேசிகிட்டு இருந்தா எப்படி சட்டுபுட்டுன்னு அடிச்சு ஆர் பெரிய ஆள் எண்டு காட்டுங்கோ....

 

Screenshot-2020-09-01-19-50-42-736-org-m

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

Screenshot-2020-09-01-19-50-42-736-org-m

அவசரத்துக்கு template கிடைக்கல்ல தோழர். அள்ளீட்டீங்க🙏🏾

  • கருத்துக்கள உறவுகள்

ராஜ்நாத் சிங்குடன் ராணுவ தளபதி திடீர் சந்திப்பு; கிழக்கு லடாக்கில் சீன அத்துமீறலால் நிலவும் பதற்றம் குறித்து விளக்கம்+

ராஜ்நாத் சிங்குடன் ராணுவ தளபதி திடீர் சந்திப்பு; கிழக்கு லடாக்கில் சீன அத்துமீறலால் நிலவும் பதற்றம் குறித்து விளக்கம்

 

இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே எல்லை பிரச்சினை தொடர்ந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில், கடந்த ஜூன் மாதம் 15-ந் தேதி லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் அத்துமீற முயன்ற சீன துருப்புகளுக்கும், இந்திய படை வீரர்களுக்கும் இடையே நடந்த மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். எல்லையில் பதற்றத்தை தடுக்க இரு தரப்பு பேச்சு வார்த்தைகள் நடந்தன. அதன் பலனாக எல்லையில் பிரச்சினைக்குரிய பகுதிகளில் இருந்து சீனா படைகளை திரும்பப்பெற்றது. பதற்றம் கொஞ்சம் தணிந்தது.

இருப்பினும், கிழக்கு லடாக்கில் அசல் கட்டுப்பாட்டு கோடு (எல்.ஏ.சி) பகுதியில் சீன வான்வெளி நடவடிக்கைகள் அதிகரித்து இருப்பதால், அதற்கு ஏற்ற வகையில் இந்தியாவும் விமானப்படை தனது கண்காணிப்பை தீவிரப்படுத்தும்படி உத்தரவிட்டது. சீனாவை பொறுத்தமட்டில், ஜே-20 ரக நீண்ட தூர போர் விமானங்களையும், முக்கிய தளவாடங்களையும் கிழக்கு லடாக்கில் இருந்து 310 கி.மீ. தொலைவில் உள்ள ஹோட்டன் விமானப்படை தளத்தில் குவித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

இந்திய விமானப்படையும், கிழக்கு லடாக்கில் முக்கிய விமான தளங்களில் அனைத்து முன்னணி போர் விமானங்களையும், சுகோய் 30 எம்.கே.ஐ., ஜாகுவார் மற்றும் மிராஜ்-2000 ரக விமானங்களையும் நிறுத்தி வைத்துள்ளது.

இந்த நிலையில் மறுபடியும், கடந்த 29-ந் தேதி இரவு கிழக்கு லடாக்கில், பங்கோங் சோ ஏரி பகுதியில் சீன துருப்புகள் அத்துமீற முயன்றனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. சீனாவின் அத்துமீறல் முயற்சியை இந்திய படைவீரர்கள் வெற்றிகரமாக முறியடித்தனர். அத்துடன் பங்கோங் ஏரியைச் சுற்றியுள்ள பகுதிகளில் இந்திய ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு எல்லை படையின் ஒரு பட்டாலியனும் அங்கு களம் இறக்கப்பட்டுள்ளது.

ராணுவ தலைமையகத்தில் ராணுவ தளபதி எம்.எம்.நரவனே, கிழக்கு லடாக் நிலவரம் குறித்து உயர் மட்ட அளவிலான ஆலோசனை ஒன்றையும் நடத்தினார். இதற்கு மத்தியில் பாரீசில் கடந்த 31-ந் தேதி பிரெஞ்சு சர்வதேச உறவுகள் நிறுவனத்தில் கலந்துரையாடிய சீன வெளியுறவு மந்திரி வாங் யி, லடாக் மோதல்கள் பற்றி, சில கருத்துகளை கூறினார்.

அப்போது அவர், “சீனாவுக்கும், இந்தியாவுக்கும் இடையேயான எல்லை இன்னும் வரையறுக்கப்படவில்லை; எனவே எப்போதும் இந்த வகையான பிரச்சினைகள் இருக்கும். இந்திய தரப்புடன் பேச்சு வார்த்தை மூலம் அனைத்து வகையான பிரச்சினைகளையும் நிர்வகிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்” என குறிப்பிட்டார். இது தொடர்பாக பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் பல முறை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தி இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதே நாளில் (31-ந் தேதி), லடாக் விவகாரத்தில் இந்திய, சீன தரப்பு ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் பேச்சு வார்த்தை நடத்தினர். 6 மணி நேரம் நடந்த பேச்சு வார்த்தையில் உறுதியான எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறின.

கிழக்கு லடாக்கில் அசல் கட்டுப்பாட்டு கோடு பகுதியின் இந்திய தரப்பில் அமைந்துள்ள சுசூலில், இந்திய, சீன தரப்பு ராணுவ பிராந்திய தளபதிகள் (பிரிகேட் கமாண்டர்கள்) மட்டத்தில் நேற்று காலை 10 மணிக்கு மீண்டும் பேச்சு வார்த்தை நடந்தது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் டெல்லியில் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங்கை ராணுவ தளபதி நரவனே நேற்று திடீரென சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பின்போது, கிழக்கு லடாக்கில் பங்கோங் சோ ஏரி பகுதியில் மீண்டும் சீன துருப்புகள் அத்துமீற முயற்சித்ததால், இரு தரப்பினர் இடையே நடந்த மோதல் பற்றியும், அத்துமீறலை வெற்றிகரமாக முறியடித்தது குறித்தும் ராணுவ தளபதி நரவனே விளக்கினார். மேலும், தற்போது அந்த பகுதியில் நிலவும் பதற்றம் குறித்தும், இரு தரப்பு ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் நடந்துள்ள பேச்சு வார்த்தை குறித்தும் எடுத்துக்கூறினார் என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

https://www.dailythanthi.com/News/TopNews/2020/09/02042339/Army-chief-meets-Rajnath-Singh-Explanation-of-the.vpf

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.