Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செப்டம்பர் 2 - உலக தேங்காய் தினம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலக தேங்காய் தின நல்வாழ்த்துக்கள்.

World Coconut Day 2019 | உலக தேங்காய் தினம் 2019 - YouTube

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, குமாரசாமி said:

உலக தேங்காய் தின நல்வாழ்த்துக்கள்.

World Coconut Day 2019 | உலக தேங்காய் தினம் 2019 - YouTube

வாழ்த்துக்கள் தோழர் ..👍

IMG-20200902-175301.jpg 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல கொழுப்பை அதிகரிக்கும் தேங்காய்!

தென்னையை ‘பூலோகக் கற்பகவிருட்சம்’ என்பார்கள். தருவதில் தாயைப் போன்ற தயாள குணம்கொண்டது தென்னை. தென்னம் பாளை, குருத்து, இளநீர், தேங்காய், தேங்காய் எண்ணெய் என ஒவ்வொரு நிலையிலும் மனிதருக்கு உணவாகவும் மருந்தாகவும் பயன்படுகிறது. தென்னை ஓலைகளில் பட்டு வரும் குளிர்ச்சியான காற்று, நம் உடலில் உள்ள சுரப்பிகளைத் தூண்டி நலம் சேர்க்கும். தென்னை ஓலையில் கூரை வேய்வது இதனால்தான்.

தேங்காய்

தேங்காய், இனிப்புச் சுவை உடையது. பாதாம், முந்திரி, பிஸ்தா போன்ற நட்ஸ் வகைகளுக்கு இணையான ஊட்டச்சத்து நிறைந்தது. தேங்காய் ஓட்டுக்கும் பருப்புக்கும் இடையே உள்ள தோல் போன்ற பகுதி, கொழுப்பைக் கரைக்கும் தன்மை உடையது. குடலில் உள்ள புழுக்களை நீக்கவும் மலச்சிக்கலைப் போக்கவும் பயன்படும். அல்சைமர் எனும் ஞாபக மறதி நோயைப்போக்கும். தேள், நட்டுவாக்கலி கொட்டினால் அதன் விஷம், கடுப்பு நீங்கவும் தேங்காய் பயன்படுத்தப்படுகிறது. ஆயுர்வேத மருத்துவத்தில் `சைந்தவலாவனம்’ என்ற மருந்து செய்வதற்கு தேங்காய் முழுமையாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த மருந்து வயிறு உப்புசம், வயிற்றுப்புண், வயிற்றுவலியைக் குணப்படுத்தும்.

இளநீர்

குளிர்ச்சியைத் தரவல்லது; தாகத்தைத் தணித்து செரிமானத்தைச் சீராக்கும். சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீரகப் பாதையைச் சுத்தப்படுத்தும். சிறுநீரகக்கல் பிரச்னை, சின்னம்மை, பெரியம்மை நோய்கள் வராமல் தடுக்கும். கர்ப்பக் காலத்தில் ஏற்படும் அம்னியோட்டிக் திரவ     (Amniotic fluid) குறைபாட்டை, தொடர்ந்து இளநீர்  அருந்துவதன் மூலம் சரிசெய்யலாம். ரத்தத்தில் உள்ள பிளாஸ்மா குறைபாட்டைச் சரிசெய்ய இளநீர் உதவுகிறது.

நல்ல கொழுப்பை அதிகரிக்கும் தேங்காய்!
 

தேங்காய்ப் பூ

தென்னையில் இருந்து வரும் பூவைப் பயன்படுத்தி கஷாயம் செய்து அருந்தினால், அதீத ரத்தப்போக்கு, வெள்ளைப்படுதல் குணமடையும். ஆயுர்வேத மருத்துவத்தில் லேகியம் செய்யப் பயன்படுகிறது.

தேங்காய்ப்பால்

பசும்பாலுக்கு நிகரான குணம் உடையது. ஆண்மையைப் பெருக்க வல்லது. வயிற்றுப்புண், வாய்ப்புண்ணைக் குணப்படுத்தும். செரிமானத்தைத் தூண்டும். தாய்ப்பால் சுரப்புக்கு உதவும். வாதத்தைத் குறைத்து, கபத்தைக் கூட்டும். உடலுக்கு மிகுந்த பலத்தைக் கொடுக்கும். சருமத்தின் அழகைக் கூட்டும். தேங்காய்ப்பாலைக் காய்ச்சி வடித்து எடுப்பது ‘உருக்கு தேங்காய் எண்ணெய்’ ஆகும். இதைப் பயன்படுத்தி, ஆயுர்வேத மருத்துவத்தில் ‘நீலிபிருங்காதி கேர தைலம்’ தயாரிக்கப்படுகிறது. இது, முடி கருமையாகவும் அடர்த்தியாகவும் வளர உதவும்.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெயில் அதிக அளவில் சேச்சுரேட்டட் கொழுப்பு உள்ளது. இதனால், மிகவும் ஆபத்தானது என்று ஒதுக்கப்பட்டது. தேங்காய் எண்ணெய், இதய ரத்தக்குழாயில் அடைப்பை ஏற்படுத்துகிறது என்பது இதுவரை  நிரூபிக்கப்பட்டுள்ளது. தேங்காய் எண்ணெய் ரத்தத்தில் கெட்ட கொழுப்பு அளவைக் குறைத்து, நல்ல கொழுப்பு அளவை அதிகரிக்கச் செய்கிறது. தற்போது வெளியாகும் ஆராய்ச்சிகளில், தேங்காய் எண்ணெய் நல்ல சமையல் எண்ணெய் எனக் கண்டறிந்துள்ளனர்.

‘இந்தியாவில் இதயநோய் குறைவாக உள்ள மாநிலம் கேரளா’ என்று மருத்துவ அறிக்கை தெரிவிக்கிறது. இதற்குக் காரணம், அங்கு சமையலில் பிரதானமாக தேங்காய் எண்ணெய் பயன்படுத்தப்படுவதுதான்.

தலைமுடி வளர்ச்சிக்கும், ஆரோக்கியம், உறுதியை மேம்படுத்தவும் உதவுகிறது. தலைமுடியில் பாக்டீரியா கிருமி வளர்ச்சியைத் தடுக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

Hawaii GIF - Find on GIFER

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

100 Best Good Morning Images, Videos In 2020 | Good Morning App Good M  Whatsapp Group, Facebook Group, Telegram Group

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
36 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

வாழ்த்துக்கள் தோழர் ..👍

IMG-20200902-175301.jpg 

 

22 minutes ago, suvy said:

Hawaii GIF - Find on GIFER

இரண்டையும் பாக்கவே புல்லரிக்குது......😃

  • கருத்துக்கள உறவுகள்

நான் கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்கு மேலாகவே தேங்காய்ப் பால் பவுடர் தான் கறிக்குப் பயன்படுத்துவது. அதைவிட வாரம் மூன்றுநாட்களாவது பிட்டுக்கு தேங்காய்ப்பூ பயன்படுத்துவேன். எனக்கு கொலஸ்ரோல் மனதில் மட்டும்தானேயன்றி உடலில் இல்லை😎 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நான் கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்கு மேலாகவே தேங்காய்ப் பால் பவுடர் தான் கறிக்குப் பயன்படுத்துவது. அதைவிட வாரம் மூன்றுநாட்களாவது பிட்டுக்கு தேங்காய்ப்பூ பயன்படுத்துவேன். எனக்கு கொலஸ்ரோல் மனதில் மட்டும்தானேயன்றி உடலில் இல்லை😎 

நான் பிறந்ததிலையிருந்தே  தேங்காய் சேர்க்காத சாப்பாடுகளே இல்லை எண்டு சொல்லலாம். இப்ப கொஞ்சக்காலமாய் வீட்டிலை  ஒராளின்ரை மூளையை யூரியூப்பிலை ஆரோ தேங்காய் கூடாதெண்டு கழுவி ஊத்திப்போட்டினம். அதிலையிருந்து நான் தேங்காய் கலந்த சாப்பாடுகளை எட்டி நிண்டு பார்க்கலாமே தவிர சாப்பிடுற நோக்கமே வரப்படாதாம்.🙃

Bild

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, குமாரசாமி said:

 

 

எங்க எந்த நாட்டில் வாழ்கிறது என் எதிர்காலம் என்பதே தெரியவில்லை.
தெரிந்தால் தேங்காய் பாலிலேயே குளிக்க வைக்கலாம் 

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, குமாரசாமி said:

நான் பிறந்ததிலையிருந்தே  தேங்காய் சேர்க்காத சாப்பாடுகளே இல்லை எண்டு சொல்லலாம். இப்ப கொஞ்சக்காலமாய் வீட்டிலை  ஒராளின்ரை மூளையை யூரியூப்பிலை ஆரோ தேங்காய் கூடாதெண்டு கழுவி ஊத்திப்போட்டினம். அதிலையிருந்து நான் தேங்காய் கலந்த சாப்பாடுகளை எட்டி நிண்டு பார்க்கலாமே தவிர சாப்பிடுற நோக்கமே வரப்படாதாம்.🙃

Bild

உங்கள் வீட்டுக்காரிக்கு தேங்காய்ப் பாலில் செய்வினை செய்யவேணும் 😃

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
18 minutes ago, Maruthankerny said:

எங்க எந்த நாட்டில் வாழ்கிறது என் எதிர்காலம் என்பதே தெரியவில்லை.
தெரிந்தால் தேங்காய் பாலிலேயே குளிக்க வைக்கலாம் 

சரியாய் கெட்டு நொந்து போனார். :grin:

14 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

உங்கள் வீட்டுக்காரிக்கு தேங்காய்ப் பாலில் செய்வினை செய்யவேணும் 😃

  ம்... சிவனே எண்டு சும்மாய் இருக்க சீனியில்லாமல் தாற தேத்தண்ணிக்கும் வேட்டு வைக்கிற பிளான் போலை கிடக்கு....:grin:

 

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 2/9/2020 at 14:08, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நான் கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்கு மேலாகவே தேங்காய்ப் பால் பவுடர் தான் கறிக்குப் பயன்படுத்துவது. அதைவிட வாரம் மூன்றுநாட்களாவது பிட்டுக்கு தேங்காய்ப்பூ பயன்படுத்துவேன். எனக்கு கொலஸ்ரோல் மனதில் மட்டும்தானேயன்றி உடலில் இல்லை😎 

20 ஆண்டுகள் தானோ? அதுக்கு முன்னம்.... ஊரிலை?

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 16/9/2020 at 17:44, Nathamuni said:

20 ஆண்டுகள் தானோ? அதுக்கு முன்னம்.... ஊரிலை?

அதுக்கு முன்னம் double cream தான் யேர்மனியில்.  ஊர்ல அம்மாதான் சமையல் 🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அதுக்கு முன்னம் double cream தான் யேர்மனியில்.  ஊர்ல அம்மாதான் சமையல் 🤣

என்ன நடந்தது.... எல்லோரும் ஓகேயா?

நாம கொஞ்சம், நஞ்ச கவலையா பட்டம் ... வந்தது நின்மதி. கொரோனா காலம் எல்லோ .... அதுதான்

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Nathamuni said:

என்ன நடந்தது.... எல்லோரும் ஓகேயா?

நாம கொஞ்சம், நஞ்ச கவலையா பட்டம் ... வந்தது நின்மதி. கொரோனா காலம் எல்லோ .... அதுதான்

கொஞ்சம் உயர் இரத்த அழுத்தம். இப்ப ஓகே.

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

கொஞ்சம் உயர் இரத்த அழுத்தம். இப்ப ஓகே.

அதுக்குதான் அப்பவே சொன்னானங்கள் தேங்காய் பாவிக்காதேங்கோ என்று 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.