Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குரோய்டன் பொலிஸ் நிலையத்தில் ஒரு பொலிஸ் அதிகாரி சுட்டுக் கொலை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

குரோய்டன் பொலிஸ் நிலையத்தில் ஒரு பொலிஸ் அதிகாரி சுட்டுக் கொலை!

spacer.png

தெற்கு லண்டனில் உள்ள குரோய்டன் பொலிஸ் நிலையத்தில், ஒரு பொலிஸ் அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டார்.

விண்ட்மில் லேனில் உள்ள பொலிஸ் மையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒருவரால் அந்த அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

02:15 பி.எஸ்.டி.யில் சம்பவத்திற்குப் பிறகு வந்த துணை மருத்துவர்களால் அந்த அதிகாரி சம்பவ இடத்தில் சிகிச்சை பெற்றார்.

பின்னர் அவர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

சம்பவ இடத்திலேயே 23வயது இளைஞரை அதிகாரிகள் தடுத்து வைத்தனர். அவரும் துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளார்.

இந்த சம்பவத்தின் போது பொலிஸ் துப்பாக்கிகள் எதுவும் வெளியே கொண்டுச் செல்லப்படவில்லை என மெட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
http://athavannews.com/குரோய்டன்-பொலிஸ்-நிலையத்/

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

இது உங்கட ஏரியாவோ?

  • கருத்துக்கள உறவுகள்

போலீஸ் ஒரு கட்டத்துக்கு மேல் எதுவும் சொல்கிறார்கள் இல்லை எங்கு வைத்து சம்பந்தப்பட்ட நபரை கைது  பண்ணினார்கள் என்ற விபரத்தை கூட தரமறுக்கிறார்கள் .

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, பெருமாள் said:

போலீஸ் ஒரு கட்டத்துக்கு மேல் எதுவும் சொல்கிறார்கள் இல்லை எங்கு வைத்து சம்பந்தப்பட்ட நபரை கைது  பண்ணினார்கள் என்ற விபரத்தை கூட தரமறுக்கிறார்கள் .

இதில் ஏதோ உண்மை மறைந்து உள்ளது . கை  விலங்கு போடப்பட்ட ஒருவர் எப்படி துவக்கை எடுத்து சுட முடியும்?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

இதில் ஏதோ உண்மை மறைந்து உள்ளது . கை  விலங்கு போடப்பட்ட ஒருவர் எப்படி துவக்கை எடுத்து சுட முடியும்?

33648090-8775309-image-a-15_1601118684517.jpg

https://www.dailymail.co.uk/news/article-8775309/The-London-tower-block-police-arrested-cop-killer-having-ammunition-MISSED-gun.html

சுட்டவர் சிறிலங்கன்  நாட்டை சேர்ந்தவர் என்று   டெய்லி மெயில் பேப்பரில் வந்துள்ளது
 
  • கருத்துக்கள உறவுகள்

சுட்டவரின் பெயர் சன்னா டி சொய்சா. மனைவி பெயர் எலிசபெத். 5 பிள்ளைகளின் தந்தை. கடைசி மகனுக்கு 23 வயது.

டி சொய்சா ஓட்டிசம் பாதிப்பு உள்ளவராம்.

நன்றி சன் நியூஸ் பேப்பர்

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, goshan_che said:

டி சொய்சா ஓட்டிசம் பாதிப்பு உள்ளவராம்.

அப்ப  சிறிய தண்டனையுடன் வெளியில் வருவார்  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
17 minutes ago, goshan_che said:

டி சொய்சா ஓட்டிசம் பாதிப்பு உள்ளவராம்.

தமிழனாய் இருந்தால் பயங்கரவாதி....

ஓட்ஸ் ஓட்டிசம் எல்லாம் கிடையாது. 😁

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, பெருமாள் said:

அப்ப  சிறிய தண்டனையுடன் வெளியில் வருவார்  

இருக்கலாம். இப்போதே சொல்ல முடியாது. நோயின் வீரியத்தை பொறுத்து. Manslaughter என்றால் conditional discharge இல் தண்டை இல்லாமல் கூட வெளிவரலாம். அதேவேளை mild autism என்றால் முழு தண்டனையும் கிடைக்கலாம்.

பொலிசாரின் அண்மைய கொலை (ஜிப்சிகள் காரால் அடித்த்தது) ஒன்று கூட குறைந்த தண்டனையிலேயே முடிந்தது.

மேலதிக தகவல் இன்றி இப்போ சொல்ல முடியாது.

10 minutes ago, குமாரசாமி said:

தமிழனாய் இருந்தால் பயங்கரவாதி....

ஓட்ஸ் ஓட்டிசம் எல்லாம் கிடையாது. 😁

அப்படி இல்லை அண்ணர்.

இங்கே எம்மவர் கொலைகள் எதையும் இதுவரை பயங்கரவாதமாக பார்கவில்லை.

இதை கூட தோலை வைத்து அப்படி சந்தேகித்தாலும் கொண்டவர் முஸ்லிம் இல்லை என்றவுடன் அந்த சந்தேகம் அகன்றுவிட்டது. 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

அப்படி இல்லை அண்ணர்.

இங்கே எம்மவர் கொலைகள் எதையும் இதுவரை பயங்கரவாதமாக பார்கவில்லை.

இதை கூட தோலை வைத்து அப்படி சந்தேகித்தாலும் கொண்டவர் முஸ்லிம் இல்லை என்றவுடன் அந்த சந்தேகம் அகன்றுவிட்டது. 

எல்லாம் காவல்துறை மறைக்க வேண்டி வந்ததின்  விளைவு இங்கும் பல கேள்விகள் ஏன் இந்த அதிகாரி சாமத்தில் விசாரிக்க போனார் ?

ராணிக்கும்  நம்பர் 10 க்கு பாதுகாப்பாய்  இருந்தவர் இந்த தன்னியல்லா  காடு குரைடனுக்கு ஏன் மாற்றப்படணும் ?

அறிக்கை குடுத்தவர்கள் இரண்டு பிழை கொரனோ  டெஸ்ட் என்று குழம்பினார்கள் .

இரு சகோதரர்களும்  அயலில் உள்ள வெற்று  காணியில் ஏதோ  பொருட்களை எறிந்ததை  அயலவர்கள் கண்டுள்ளார்கள் அது என்ன ?

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் ஒரு விடயம் அந்த அதிகாரியை நோக்கி மட்டும் ஐந்து சொட் அதுவும் அவரின் நென்சு பகுதியை நோக்கி கடைசி வெடி தன்னை நோக்கி இதெல்லாமே செட்டப் போல தோணலையா ?

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பெருமாள் said:

பெருமாள்,

அவர் விசாரிக்க போகவில்லை. அவர் கஸ்டடி சார்ஜண்ட். ஏனையோர் பிடித்து கொண்டு வருபவர்களை “புக்” பண்ணி உள்ளே வைப்பது. பின் 3 மணிக்கொருக்க்கா அவர்கள் நலத்தை உறுதி செய்வது. ரெட்க்கோர்ட் எழுதுவது. ரிலீஸ் பண்ணுவது.  இவைதான் அவர் வேலை. புக் பண்ணும் புரசீஜர் நடந்த வேளைதான் சூடு விழுந்துள்ளது.

Close protection unit இல் இருப்பவர்கள் ஒரு வயதுக்கு மேல் இப்படி வேறு வேலைக்கு அனுப்பபட்டு விடுவது வழமைதான். பொதுவாக 45-50 வயதுக்கு மேல் frontline வேலை செய்வது குறைவு. 55 வயதில் ஓய்வும் பெறலாம் (ஏனையொருக்கு 68). இவருக்கு 54 வயது என நினைக்கிறேன். இதில் மர்மம் ஒன்றும் இல்லை.

காணிக்குள் எறிந்த பொருள் பற்றி எனக்கு இப்போதான் தெரியும். அநேகமாக குடு பார்சல் ஆக இருக்கலாம்.

கொரோனா குழப்பம்- வழமைதானே.

மனைவி பிரிடிஸ் என்கிறார்கள். ஆனால் என்ன இனம் என்று சொல்லவில்லை.

1 minute ago, பெருமாள் said:

இன்னும் ஒரு விடயம் அந்த அதிகாரியை நோக்கி மட்டும் ஐந்து சொட் அதுவும் அவரின் நென்சு பகுதியை நோக்கி கடைசி வெடி தன்னை நோக்கி இதெல்லாமே செட்டப் போல தோணலையா ?

புக்க்கிங் இற்கு போக முதல். Body check பண்ணி, விலங்கும் அடித்த பின். Body cavity க்குள் இருந்த பிஸ்டலை எப்படி எடுத்து சுட்டார் என்பதுதான் மர்மம்.

உடம்புக்கு உள்ளே இல்லாவிடிலும். தொடை நடுவில் அல்லது அக்குளில் இருந்து பிஸ்டலை எடுப்பதும் கிட்டதட்ட இயலாத காரியம்.

சீ சி டிவி நிச்சயம் இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

சுட்டவரும் கிட்டதட்ட செத்து ஆஸ்பத்திரியில் revive செய்துள்ளார்கள்.

ஒரு கஸ்டடி சாஜனை இப்படி கொல்லும் அவசியம் இருப்பதாக படவில்லை, ஆனால் கொலை நடந்த விதம் புதிராகவே இருக்கிறது.

ரெண்டு மூன்று நாளில் தெளிவாகலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

ஆனால் கொலை நடந்த விதம் புதிராகவே இருக்கிறது.

எல்லாருக்குமே 

சுட்டவரின் முகநூல் கணக்கை சகோதர்கள் பிடிபட்ட உடனே டிஸ் ஏபில்  செய்துள்ளனர் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 25/9/2020 at 21:04, ரதி said:

இது உங்கட ஏரியாவோ?

குரோய்டனில் மூன்று பகுதிகள் உள்ளன. குரோய்டன் வடக்கு பெருமளவு அடிமட்ட மக்கள் வாழும் பகுதி. நகரம் உள்ள மத்திய பகுதி மத்தியதர வர்க்கத்தினர் வாழும் பகுதி. தெற்கு சறே மாதிரி இலைகள் கூடிய பெருமரங்கள் உள்ள வீதிகளைக் கொண்ட அமைதியான செல்வந்த பகுதி. 

நான் மக்களோடு மக்களாக இருக்கின்றேன்😀. சில வாரங்களுக்கு பக்கத்து வீதியில் ஒரு கறுப்பு இளைஞனை கத்தியால் குத்தி, பொலிஸ், அம்புலன்ஸ், எயார் அம்புலன்ஸ் எல்லாம் வந்தது. நானும் வீதியை மூட முன்னர் எட்டிப் பார்த்தேன். இளைஞன் முதுகில் குத்து. சாகக்கூடிய அளவிற்கு இல்லை என்பதால் இரண்டு மணிநேரத்தில் எல்லாம் வழமைக்கு வந்துவிட்டது.

8 hours ago, goshan_che said:

Body check பண்ணி, விலங்கும் அடித்த பின். Body cavity க்குள் இருந்த பிஸ்டலை எப்படி எடுத்து சுட்டார் என்பதுதான் மர்மம்.

கைவிலங்கோடு இருந்தவர் எப்படி லோட் பண்ணி சுட்டார் என்பது ஆச்சரியம்தான்.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, goshan_che said:

சுட்டவரின் பெயர் சன்னா டி சொய்சா. மனைவி பெயர் எலிசபெத். 5 பிள்ளைகளின் தந்தை. கடைசி மகனுக்கு 23 வயது.

டி சொய்சா ஓட்டிசம் பாதிப்பு உள்ளவராம்.

நன்றி சன் நியூஸ் பேப்பர்

சுட்டவர் 23 வயது பெடியன்...தகப்பன் தான் சிங்களவர் . தாய் வெள்ளையின பெண்.அவர்களது கடைசி மகன் தான் 
கை விலங்கு போடப்படவில்லை அல்லது வடிவாய் போடப்படவில்லை ...பிடித்தவுடனேயே முழுமையாய் செக் பண்ணித் தானே பொலீஸ் ஸ்ரேசனுக்கு கூட்டிப் போவார்கள் ஏன் இவரை வடிவாய் செக் பண்ணவில்லை?
இவர்கள் இருவரையும் சுட்டது மூன்றாவது இன்னொரு நபராக இருக்கலாம்....போதைவஸ்து பெரும் வியாபாரம் ....இவர்கள் எதையோ மறைக்கிறார்கள்.
சீசிடிவி காட் சி வெளியிடுவார்களோ பார்ப்பம் 

https://www.msn.com/en-gb/news/uknews/police-determined-to-find-justice-for-officer-killed-on-duty/ar-BB19snaz?ocid=spartanntp

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

உண்மைதான் ரதி,

நேற்று இரவு தகப்பந்தான் கொலையாளி என sun, daily mail இரண்டும் எழுதினார்கள். அதை வைத்தே நானும் பெருமாளும் இங்கே கருத்து எழுதினோம்.

இப்போ போய் பார்த்தால் 23 வயது மகன்தான் கொலையாளி என பிளேட்டை மாத்தி போட்டுள்ளார்கள்.

இவர்களுக்கு தமிழ் ஊடகங்கள் பரவாயில்லை போலிருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

குறைடன் ஊத்தை இடம். வெஸ்ட் குறைடன் லண்டன் ரேட்டில் அடிக்கடி இப்படியான சம்பவங்கள் நடக்கும்.
தொர்டன் ஹீத் போன்றவை ஆபத்தானது. சட்டன் / வாலிங்டன் / கர்ஷெல்டன் அருமையான இடங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, goshan_che said:

இவர்களுக்கு தமிழ் ஊடகங்கள் பரவாயில்லை போலிருக்கு.

நடந்த சம்பவத்துக்கு போலீஸ் கிளிப்பிள்ளை சொல்வது போல் ஒரே கதையை திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டு இருந்தனர் உள்ளிருக்கும் தகவல் அளிப்பவர்கள் மூலம் வந்த செய்திகள்  கொலையாளியின் தொடர்பு   ஸ்ரீலங்கன் என்றவுடன் கேட்டு கேள்வி இல்லாமல் தமிழன்தான் என்று ஊகத்தில் கதைக்க வெளிகிட்டினம் ஆஸ்பத்திரியில் செய்தியாளர்கள் தேடிப்பார்க்க தகப்பனின் சிங்கள பெயரே வந்துள்ளது அதனால் வந்த குழப்பம் .

என்னதான் இருந்தாலும் தாய் பிரிட்டிஸ் ஆக இருந்தாலும் சிங்கள பெயர்உடன் சிங்களவர்களாகவே வளர்ந்து உள்ளனர் மூவரும் .

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, colomban said:

குறைடன் ஊத்தை இடம்.

அண்ணெய்  குரைடனுக்குள்  இருக்கும் Kenley Lane பக்கம் போகல போல் இருக்கு வீட்டின் விலையே ஒண்ணரை  மில்லியன் தாண்டும் எல்லாம் பிரைவேட் வீதி யுடன் அங்கும் நம்ம சனம்  வாழுதுகள் .

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பெருமாள் said:

அண்ணெய்  குரைடனுக்குள்  இருக்கும் Kenley Lane பக்கம் போகல போல் இருக்கு வீட்டின் விலையே ஒண்ணரை  மில்லியன் தாண்டும் எல்லாம் பிரைவேட் வீதி யுடன் அங்கும் நம்ம சனம்  வாழுதுகள் .

கிருபன்ட வீடு உந்த பக்கமோ😆

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, ரதி said:

கிருபன்ட வீடு உந்த பக்கமோ😆

கிருபன் முதலே சொல்லிவிட்டார் மக்களோடு மக்கள் ஆக ஜீவிக்கிறார் என்று .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.