Jump to content

அற்புதமான சுவையில் திரும்ப திரும்ப சாப்பிட சொல்லும் ஈழத்து மீன் குழம்பு

nige

Recommended Posts

Posted
3 minutes ago, goshan_che said:

நிழலி சொல்வதை பார்த்தால் அப்படி ஒரு மீன் போலவே படுகிறது.

திலப்பியாவை இங்கு தமிழர்கள் வாங்கி சமைப்பது வலு குறைவு. சமன் மீனை வாங்கி பிள்ளைகளுக்கு கொடுப்பார்கள். அனேகமாக bake செய்து கொடுப்பதுண்டு. 

அனேகமான வார நாட்களில் என் காலை உணவு ஒரு துண்டு சமன் மீன் bake + பால் (1 வீத கொழுப்பு) தேனீர் 

  • Replies 59
  • Created
  • Last Reply
Posted
38 minutes ago, நிழலி said:

இன்று உங்கள் செய்முறையை பார்த்து கும்பளா மீனில்  நான் சமைத்தது. 

2SLdMP.md.jpg

சின்ன வெங்காயமும் நாட்டு உள்ளியும் (சீன உள்ளி அல்ல) போட்டு சமைத்தேன். மனிசி வேலையால வர முதல் சமைச்சு முடிக்க வேண்டும் என்று கட கடவென்று சமைத்த உணவு.

1. எண்ணெய்க்கு அவகாடோ எண்ணை பாவித்தேன்
2. தாளிக்கும் போது பெரும் சீரகம் போட மறந்து விட்டேன்
3. வீட்டில் இருந்த கருங்கல் உரலை தேடி களைத்து மர உரலில் தான் மிளகு சின்ன சீரகம் இடித்தது.
4. தக்காளியை மிக்சரில் போட்டு அரைக்கும் போது பசையாக வராமல் கொஞ்சம் தண்ணியாக வந்தது.

பார்க்க நல்லாய் இருக்கு.. உங்கள் மனைவியை இன்று சந்தோசப்படுத்தி விட்டீர்கள்.அதுதான் பெரிய விடயம்.என் கணவரும் சில நேரங்களில் எனக்கு இப்படி இன்ப அதிர்ச்சி கொடுப்பதுண்டு.சமைத்த பாத்திரங்களையும் அப்படியே கழுவி வைத்திடுங்கோ.ஆண்களை சமையல் கட்டில் விட பெண்களுக்கு அதுதான் பயம். பாத்திரங்களை அள்ளி குவித்தால் அதை கழுவிறது ஒரு பெரிய வேலையாயிரும்.தக்காளி தண்ணியாய் இருந்தாலும் அதை கொஞ்ச நேரம் வதக்கினால் அது இல்லாமல் போயிரும்.படத்துடனான உங்கள் பகிர்வுக்கு நன்றி நிழலி...

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, நிழலி said:

திலப்பியாவை இங்கு தமிழர்கள் வாங்கி சமைப்பது வலு குறைவு. சமன் மீனை வாங்கி பிள்ளைகளுக்கு கொடுப்பார்கள். அனேகமாக bake செய்து கொடுப்பதுண்டு. 

அனேகமான வார நாட்களில் என் காலை உணவு ஒரு துண்டு சமன் மீன் bake + பால் (1 வீத கொழுப்பு) தேனீர் 

இங்கேயும் அதே நிலைதான்.

யாழ்பாணத்தில் நன்நீர் நிலைகள் இல்லைத்தானே? அதனால் அங்கே இருக்கும் றால் நண்டு மீன் எல்லாமே கடலில் இருந்துதான். 

மட்டகளப்பு திருமலையில் கூட ஆற்று மீன் என்பது கூட ஆறும், கடலும் சேர் இடங்களில் உவர்ப்பான நீரில் வளரும் மீன்களையே.

அதனால் தமிழர் பகுதியில்-  “குளத்து மீன்” என அழைக்கப்படும் இம்மீன்களை அநேகர் விரும்புவதில்லை என நினைகிறேன்.

பொலநறுவை போன்ற இடங்களில், விலைகுறைவான இந்த மீனை வாங்குவார்கள். 

Posted
15 minutes ago, குமாரசாமி said:

ஊரிலை நாங்கள் உந்த மீனை சாப்பிடுறேல்லை...அதிலையும் நன்னீர் மீன் வாயிலையும் வைக்கிறேல்லை.

இதைத்தான யப்பான் மீன் என்று சொல்லுறது. நாங்களும் இதுவரை சமைத்தில்லை.ஆனால் அமெரிக்கர்கள் இதை விரும்பி சாப்பிடுவார்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 minutes ago, nige said:

பார்க்க நல்லாய் இருக்கு.. உங்கள் மனைவியை இன்று சந்தோசப்படுத்தி விட்டீர்கள்.அதுதான் பெரிய விடயம்.என் கணவரும் சில நேரங்களில் எனக்கு இப்படி இன்ப அதிர்ச்சி கொடுப்பதுண்டு.சமைத்த பாத்திரங்களையும் அப்படியே கழுவி வைத்திடுங்கோ.ஆண்களை சமையல் கட்டில் விட பெண்களுக்கு அதுதான் பயம். பாத்திரங்களை அள்ளி குவித்தால் அதை கழுவிறது ஒரு பெரிய வேலையாயிரும்.தக்காளி தண்ணியாய் இருந்தாலும் அதை கொஞ்ச நேரம் வதக்கினால் அது இல்லாமல் போயிரும்.படத்துடனான உங்கள் பகிர்வுக்கு நன்றி நிழலி...

Vadivel Balaji Laughing GIF - VadivelBalaji Laughing Funny - Discover &  Share GIFs

  • கருத்துக்கள உறவுகள்
Posted

யப்பான் மீன் யாழ்ப்பாணத்தில் வல்லைக்கடல்,மண்டான்,செம்மணி போன்ற ஆழம் குறைந்த கடனீரேரிகளில் பிடிபடும் ,இதுநன்னீர் யப்பான் மீனை விட சுவையானது அதேநேரம் வெடுக்கும் குறைவு. வன்னியில் பிடிபடும் யப்பான் மீன் பெரிது வெடுக்கு கூட அதை விட பச்சைத் தண்ணி மாதிரி இருக்கும். உள்ளி மிளகு சீரகம் போட்டு சமைத்தால் யாழ்ப்பாண யப்பான் மீன் விளை மீன் மாதிரி இருக்கும். இங்கை வாற திலாப்பியா கேரளத்து ஆற்று மீன்நிறைய உப்பு புளி தூள் போட்டு உள்ளி மிளகு சீரகம் போட்டு சமைத்தால் ஓரளவு வெடுக்கு இல்லாமல் சமைக்கலாம். ஒரு விடயம் இது தான் ஏழைகளின் மீன் சூடையை போலை மலிவு.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, வாதவூரான் said:

அரிய தகவல்களை பகிர்ந்துள்ளீர்கள் வாதவூரன். நன்றி.

நான் இதுவரை இதை ஒரு நன்னீர் மீன் என்றே நினைத்தேன். ஆனால் அதிக உவர்ப்பு இல்லாத கடனீரேரியிலும் வளரும் என்பதை இன்று தெரிந்து கொண்டேன.
 
வன்னி/யாழ் திலாப்பியாகளுக்கு இடையான சுவை/மண வேறுபாடு - உணவுக்கு உவர் நீர் மீன் ஏன் விரும்பபடுகிறது என்பதை விளக்குகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உண்மையில் திலாப்பியா என்பது, ஓர் மீன் குடும்பத்தின் பொதுப் பெயர்.  அவற்றில் நூறு அளவில் வகை உள்ளது.

திலேபியாவின் தோற்றத்திற்கும், திரளியின் தோற்றத்திற்கும் அவ்வளுவு வேறுபாடு இல்லை. மீனை பற்றி அறியாதவர்களை தில்பியவை திரளியின் விலையில் விற்கலாம்.

அதனால், வாங்கும் போது fresh (frozen ஐ தவிர்க்கவும்), முழு மீனாக வாங்கவும் (துண்டுகளை தவிர்கவும்).  

Tesco, Morrison போன்ற super மார்க்கெட் இல் வாங்குவது, கீழே சொல்லி உள்ளதாய் குறைக்கும். Tesco இல் இளஞ்சிவப்பு பொன்னிற திலாப்பியா கண்டு இருக்கிறேன்.  

திலாப்பியாவில் முக்கியமாக 3 வகைகள்.

கறுப்பு,  நீலம் (அதை ஒத்தது), பொன்னிறம் (அல்லது அதை ஒத்தது, மஞ்சள் நிறமும் சேர்த்து), வெள்ளை ( ஒத்த நிறங்களும்).

திலாப்பியா மிகவும் இலகுவாக இயைபாக்கம் அடையக்  கூடியது. அதனால், உப்பு நீர் (களப்புகள் போன்ற இடங்களில் இருப்பவை) திலாப்பியாவும் உண்டு. அனால், பெரிய அளவில் விற்கப்படுவதில்லை (இலாபம் மிகவும்  குறைவு). 

ஆனால் திலாப்பியா என்று இங்கு விற்கபடுவது, செயற்க்கை நன்னீர் நிலைகளில், மிகவும் நெருக்கமாக வளர்க்கப்படுவது. இங்கு ஏலவே சொல்லியது போல, antibiotics என்று பல செயற்க்கை கட்டுப்பாடுகளோடு.

ஏறத்தாழ, செறிவு கூடிய இயந்திர மயப்படுபட்ட கோழிப் பண்ணை போல, திலாப்பியா மீன் பண்ணை.      

ஆனால் விற்கப்படும் திலாப்பியாவில் உள்ள ஓர் விரும்பத்தகாத தன்மை   ஓர் ஈரபுழுதி அல்லது ஈரக் களிமண் சேறு    தன்மையான மணமும் (after taste) இருக்கிறது.

இது உண்மையில் திலாப்பியாவின் மணம் இல்லை. 

திலாப்பியா வளர்ப்பது போல, நெருக்கமாக நன்னீர் நிலைகளில் எந்த மீனும் வளர்க்கப்பட்டால் அப்படி புழுதி ழுதி அல்லது அல்லது ஈரக் களிமண் சேறு  மனம் வரும். 

கரணம், அது நெருக்கமாக வளர்க்கப்படுவதால் நன்நீர் நிலையில்  உருவாகும் பாசியாலும், மற்றும் அதன் கழிவுகள் உக்கும் பொது உருவாகும் பக்க விளைவுகளால் வரும் geosmin எனும் பதார்த்தம் நீரிலும், மீனின் சுவாசத்திலும்  சேர்வதால் வருவது. 

இந்த புழுதி மணம் மீனின் கொழுப்பின் அளவிலும் தங்கி இருக்கிறது. இந்த புழுதி மணம், திலாப்பியா உணவுக்கு ஏற்றது இல்லை என்பதை குறிக்காது.

வினிகர்,  எலுமிச்சம் புளி மற்றும் பழப் புளியில், தூள், மஞ்சள், மிளகு கலந்து  ஊறவைத்து  குறைக்கலாம்.   

ஆனால் , ஊறவைத்த வினிகர்,  எலுமிச்சம் புளி மற்றும் பழப் புளி, தூள், மஞ்சள், மிளகு கலவையை கழுவி நீக்க வேண்டும். சமைப்பதற்கு பாவிக்க கூடாது. 

அந்த புழுதி மணம் இல்லாவிட்டால், வளர்க்கப்படும் திலாப்பியா மீன்கள் ஏறத்தாழ சுவை அற்றவை (பச்சைத்தண்ணி சுவை போல). 

Hotel மற்றும் Restaurant களின் முதலாவது தெரிவாக இருந்து இருக்கும். 

திலாப்பியா என்ற பெயரும் வழக்கொழிந்து இல்லாது போய், Lipped Snapper (கனி இதழ் திரளி) என்ற பெயரில் திலாப்பியா சந்தைக்கு வந்து இருக்கும்.   

https://www.tilapia.ws/blog/is-that-a-snapper-on-your-plate-or-are-you-just-eating-really-pricy-tilapia/

"Another example of a cited restaurant was Thai Sushi Express, where the operator claimed they used Tilapia instead of Red Snapper because “they are the same kind of fish“."

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, வாதவூரான் said:

இது தான் ஏழைகளின் மீன் சூடையை போலை மலிவு.

அதனால் தான் சூப்பர் மார்க்கெட் இல் அள்ளாது நீங்கள் நன்கு அறிந்த மீன்கடையில், முழுதாக fresh ஆக வாங்குகள் என்பது. 

ஏனெனில், இந்த சூப்பர் மார்க்கெட், தாம் திலாப்பியா எடுக்கும் பண்ணைகளை மிகவும் கட்டுப்பாடுகளோடு தெரிந்து எடுபார்கள்.

அதனால், மீன்கள் நெருக்கமில்லாமல் வளர்க்கப்படுவது ஓர் கட்டாய தெரிவு தகமை.

இது பொதுவாக மீன்களின் தரத்தை, ஏறத்தாழ இயற்றைகையான சூழலில் வளரும் அளவுக்கு பேணப்படும்.

இந்த புழுதி அபிடேர் டேஸ்ட் தம்மையும் குறையும், சிலவேளைகளில் முற்றாக அகற்றப்படலாம்.

ஆனால், மலிவாக இருக்காது.   

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆம், சொல்ல மறந்து  விட்டேன். திலாப்பியா குடும்பம்பத்தில், சில வகைகள் அழிவின் விளிம்பில் (endangered) உள்ளவை. 
 
Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.