Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உங்கள் வணிகம் எப்படி அமையப் போகின்றது? - செங்கல் அல்லது கிளிக் - Brick or Click

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் வணிகம் எப்படி அமைய போகின்றது? - செங்கல் அல்லது கிளிக் - Bricks or Clicks 

வாணிப உலகம் தலைகீழாக மாறி வெகுகாலம்.

நவீன தொழில் நுட்பம் இதனை சாத்தியமாகி உள்ளது.

ஒரு சிறு அறையினுள் உள்ள கட்டிலில் இருந்து கொண்டே, பெரும் கார்பொரேட் நிறுவனத்தினையே ஆட்டம் காணவைக்கும் வகையில் தனி மனிதருக்கு தொழில் நுட்பம் கை கொடுக்கிறது.

யானை போன்ற பெரும், பெரும் நிறுவனங்கள் எல்லாமே சிறு பூச்சி போன்ற, ஒரு மனிதரும், அவரது கணணியும் காதுக்குள் குடையும் வேலையால் அல்லாடிக் கொண்டு இருக்கின்றன.

மறுபுறம் சட்டமும் தடுமாறுகின்றது. பிரிட்டனில் இருக்கும் நான், அமெரிக்காவில் ஒரு சாப்ட்வேர் தொடர்பில் அவசர வேலை செய்வதனால், இமிகிரேஷன், விசா, காலதாமதம்.... ஆனால் அதே வேலையினை ஒன்லைன் வழியே செய்யும் போது, சட்டமும் இல்லை, அதைத்தடுக்க வழியும் இல்லை.

ஆகவே, தொழில் நுட்பம், பெரும் புரட்சியினை கொண்டு வருகிறது. அண்மைய கொரோன, இந்த புரட்சி மாறுதலின் வேகத்தினை அதிகரித்துள்ளது.

கல்வித்துறையில் இது பெரும் மாறுதலைக் கொண்டு வந்துள்ளது. முன்னர் ஒன்லைன் கல்வி குறித்து அக்கறை இல்லாமல் இருந்தவர்களைக் கூட, கொரோனா மாத்தி விட்டதால், அங்கே பெரும் வாய்ப்பு உருவாகி உள்ளது.

இந்த புதிய உலக ஒழுங்கில், வழமையான வியாபார முறைமைகள் மாறி, செங்கல்லா, கிளிக்கா என்ற கேள்வியே நம் முன் வந்து நிக்கிறது.

அதாவது, செங்கல்லால் கட்டப்பட்ட கட்டிடத்தினுள் (கடை) வியாபாரம் செய்வதா அல்லது கிளிக் பண்ணும் ஒன்லைன் மூலம் நடத்தப்படும் வியாபாரமா சரியானது என்னும் கேள்வியே பலர் முன் வருகிறது.

தமிழர்கள் பலர், இந்த செங்கல் வியாபாரத்தினை நாடி ஓடுவதை காண்கிறோம். இது பெரும் பொருட்ச்செலவு கொண்டது என்பது அனைவருக்கும் புரியும்.

இவர்களுக்கு போதுமான விபரங்கள் இல்லாததால், கிளிக் பக்கம் போவதில்லை. அப்படி போவதாயிருந்தாலும், தொழில் நுட்ப விடயங்கள், ( 'bird view' or full picture idea ) குறித்த முழுவதுமான பார்வை இருப்பதில்லை ஆகையினால், இணையத்தளம் ஒன்றினை அமைத்தால் போதும்.... வியாபாரம் அமர்க்களமாக ஆரம்பமாகி விடும் என்று நினைத்து ஆரம்பிப்பார்கள்.

நான் சொன்ன, முழுவதுமான பார்வை இல்லாமல் போவதால்,  இவர்கள் இணைய தளம் ஒரு ஐந்து நிமிட வேலை என்று அறிவதில்லையாகையால், ஏதோ பெரிய நாட்கள் எடுக்கும் வேலை என்று சொல்லப்படுவதை நம்பி பணத்தினை அதிகமாக செலவழித்து, வேலைக்காகாத தளம் ஒன்றினை செய்வித்து, நொந்து போய், இது சரிவராது என்று, செங்கல் பக்கம் நடையினைக் கட்டுவார்கள்.

நான் இங்கே பலமுறை சொல்லி இருக்கிறேன். பெரிய நிறுவங்களின் கிளைகள், வங்கி கிளைகள் தொழில் நுட்பம் காரணமாக இழுத்து மூடுகையில், அதனை எடுத்து, தமிழர்கள் தலையில் கட்டி விட ஒரு கூட்டமே திரிகிறது.

அங்கே, தமிழ் கடைகளும், வடை, மோதகம், ரோல்ஸ் விக்கும் சாப்பாட்டு கடைகளும் வந்து சேர்கின்றன. நாளடைவில், பூட்டி விட்டு அல்லது கைமாத்தி விட்டு போகின்ற்னர்.

சரி... இந்த திரியில், எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம், இந்த click வியாபாரம் குறித்து எழுத இருக்கிறேன். IT துறையில் குப்பை கொட்டுபவர்கள் பங்களைப்பினையும் கோருகின்றேன். எனினும் சாப்ட்வேர் வேறு, ஒன்லைன் பிசினஸ் தொழில் நுட்பம் வேறு என்பதனையும் அறிவேன்.

அதேவேளை தேவையில்லாமல், இந்த திரிக்குள் வந்து அலம்பல்  பண்ணாமல் இருக்கும் படி, இந்த துறையுடன் தொடர்பில்லாத உறவுகளையும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

1. இணைய உலகம்.
2. இணைய தளம் வியாபாரம். 
3. தளமும், சந்தைப்படுத்துதலுல் (digital marketing) - இதுவே கிளிக் வியாபாரத்தின் உயிர் நாடி. 
4. மாறும் தொழில் நுட்பம், மற்றும் புதிய தொழில் நுட்பம் குறித்த மேலதிக தெளிவுகள் (Update) பெற்றுக் கொண்டிருத்தல்.

மேலே தளமும், சந்தைப்படுத்துதலுல் (digital marketing) இன் கீழே, 

1. எவ்வாறான இணையதளம்?
2. இனைய தளம் அமைக்க யாரை, எங்கே பிடிப்பது?
3. சோசியல் மீடியா மார்க்கெட்டிங் என்றால் என்ன அதிலுள்ள விடயங்கள் என்ன?
4. ஈமெயில் மார்க்கெட்டிங் என்றால் என்ன? இதனை எவ்வாறு பயன்படுத்த முடியும்?
5. ஒன்லைன் வியாபாரத்தில் உள்ள சரியான ஒழுங்கு முறை.
6. மேலும் உங்களுக்கு வரக்கூடிய கேள்விகள்.

இவை புரியாமல், அல்லது இது குறித்த முழு பார்வை இல்லாமல் ஒன்லைன் வியாபாரத்தில் இறங்கினால், பணம், சில சந்தர்ப்பவாத இணைய தள அமைப்பவர்களிடம் இழப்பதில் முடியும்.

முக்கியமாக, இணைய தளம் அமைப்பது, ஒன்லைன் வியாபார முனைவின் 2% கூட இல்லை என்ற புரிதல் முக்கியமானது. பலர் இதுவே 100% என்று நினைக்கின்றனர். அதுவே தோல்வியின் காரணமாகின்றது.

 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

மிக்க நன்றி நாதமுனி. நானும் ஓர் வெப்சைட் ஆரம்பித்து அப்படியே கிடக்கின்றது. எழுதுங்கள் ஆவலுடன் காத்திருக்கின்றேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Just now, ராசவன்னியன் said:

Knock.jpg

வாங்கோ... வன்னியர்... 👋

  • கருத்துக்கள உறவுகள்

நாதம்,

காலத்திற்கேற்ற விடயத்தை ஆராய்கிறீர்கள். தொடருங்கள்.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீண்ட தூரம் நடந்து வந்து கலைத்துப்போயிருந்தார் அந்த மனிதர்.

இதுதானா அந்த வீடு..... பக்கத்தில் போய் கொண்டிருந்த மனிதரிடம் விசாரித்தார். 

அவரா?.... இந்த ரயில்பாதையினைக் கடந்து ஒரு 100 அடி இடதுபக்கமாக போனால், அவரது வேலை செய்யும் இடத்தின் பின் புறம் அடையலாம்.

அந்த மனிதர் எட்வின் பார்ன்ஸ். அவர் சந்திக்க வந்தவர், தாமஸ் ஆல்வா எடிசன்.

கையில் பணமே இல்லை. புகையிரதத்தில் வர முடியவில்லை. நடந்தே வந்தார் அந்த மனிதர். ஆனால் அவரது கனவு, ஒரே ஒரு கனவு, அமெரிக்காவின் புகழ் மிக்க கண்டு பிடிப்பாளரின் வியாபார பார்ட்னர் ஆவது.

எடிசன் முன்னால் நின்றார் அந்த மனிதர். தனது விருப்பத்தினை சொன்னார். இதுவரை அவர் என்ன செய்தார் என்று கேட்ட எடிசன், அவரது கனவு குறித்து, நம்ப முடியாமல் தலையினை ஆட்டினார்.  

இதோபார், உன்னை எனது பார்ட்னராக சேர்த்துக்கொள்ளவேண்டிய தேவை எதுவும் எனக்கு இல்லை. ஆனாலும் எனக்கு உதவியாக இங்கே கூட்டுவது, துடைப்பது போன்ற வேலைகளை செய்ய ஆள் பார்த்துக் கொண்டிருக்கிறேன். செய்வாயானால் சொல்லு, இப்போதே எடுத்துக் கொள்கிறேன்.

ஒருகணமும் யோசிக்கவில்லை எட்வின். அதனை ஏற்றுக் கொண்டார். இரு வருடங்கள் அமைதியாக அங்கே சொன்ன வேலையினை செய்துகொண்டே, தனக்கான தருணத்தினை எதிர் பார்த்துக் கொண்டு இருந்தார்.

Image for post

Edwin C. Barnes (left) and Thomas Edison

மின்சார பல்ப் கண்டுபிடிப்பதில் தோல்விகள் அடைந்து கொண்டிருந்தார் எடிசன். தூக்கி எறியும் குப்பைகளை அள்ளிக் கொண்டு போய் வெளியே கொட்டும் போது, எடிசன் வசம் இல்லாத எட்வின் வியாபார மூளை வேலை செய்து கொண்டிருந்தது.

ஒரு நாள்.... இந்த மின்சார பல்ப் வேலை செய்யும், பெரும் பணத்தினை எனக்கு தரும் என்றார் எடிசன்.

ஆனால்...?

என்ன, 'ஆனால்' என்கிறாய் எட்வின்....?

பல்ப் வாங்கி வீட்டினுள், தெருவினுள் எரிய வைக்க, மின்சாரமும் வேண்டுமே...

அப்போதுதான் எடிசன் தலைக்குள் மின்சாரம் பாய்ந்தது. ஆகா, நான் அதனை சிந்திக்கவிலையே....

இல்லை எடிசன், நான் அதுகுறித்து சிந்தித்து, ஒரு பிளான் போட்டு விட்டேன். நாம் அந்த பல்ப் மட்டுமல்ல, மின்சாரத்தினையும் சேர்த்தே விற்கவேண்டும்.

அன்று, எட்வின், எடிசனின் வியாபார பார்ட்னர் ஆனார்.

இதுவே ஒரு விஞ்ஞான கண்டுபிடிப்பாளர், பெரும் பணக்காரராகிய உலகப் புகழ் மிக்க கதை.

*********

சரி எதுக்கு இந்த கதை இங்கே?

பிரிட்டனினின் இரண்டு கண்டுபிடிப்பாளர்கள்.  அவர்களது கண்டுபிடிப்பு உலகம் முழுவதும் சக்கை போடு போடுகிறது.

ஒருவர் ATM cashpoint இயந்திரத்தினைக் உருவாக்கிய, James Goodfellow. அவருக்கு, என்பீல்ட் கிளையில், முதல் முதலாக ATM நிறுவிய barclays வங்கி கொடுத்தது £10 அன்பளிப்பு மட்டுமே. காரணம் தனது கண்டுபிடிப்பினை பதிவு செய்ய தவறினார்.

James Goodfellow invented the automated cash machine but received just a £10 bonus

அடுத்தவர் நம்ம ஹீரோ: Tim Berners-Lee

tim-berners-lee.jpg

இவர் தான் இணையத்தினை கண்டுபிடித்தவர். இவரும் அதே தவறினை செய்தார். பணம் கிடைக்கவில்லை. (ஆனாலும் வேறு வகையில் £60 மில்லியன் உழைத்திருக்கிறார்.)

என்ன சொல்கிறது இந்த கதைகள். கண்டு பிடிப்புகள் வேறு, காசு பண்ணுவது வேறு. உலக சரித்திரத்தில் எடிசன் தான், பெரும் பணக்காரர் ஆக இருந்த கண்டுபிடிப்பாளர்.

உலகம் முழுவதும் காசு, காசாக அள்ளிக் கொடுக்கிறது ATM இயந்திரம்.... கண்டுபிடித்தவருக்கு றோயாலிட்டி கிடையாது.

இணையத்தினை வைத்து பல பில்லியன் டாலர் வியாபாரம் நடக்கிறது. அவருக்கு றோயாலிட்டி கிடையாது.

******

Edited by Nathamuni

  • Nathamuni changed the title to உங்கள் வணிகம் எப்படி அமையப் போகின்றது? - செங்கல் அல்லது கிளிக் - Brick or Click

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.