Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை – இந்திய உறவுகளை எந்தத் தரப்பும் பிரிக்க முடியாது.!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை – இந்திய உறவுகளை எந்தத் தரப்பும் பிரிக்க முடியாது.!

Screenshot-2020-10-13-12-47-10-766-org-m

“இலங்கையும் இந்தியாவும் சரித்திர ரீதியில் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்துள்ளது.

இந்த இரு நாடுகளுக்கும் இடையில் உள்ள உறவை எந்தத் தரப்பும் அல்லது எந்த நாடும் பிரிக்கவே முடியாது. அதற்கு நாம் ஒரு போதும் அனுமதிக்கவும் மாட்டோம்.”

    இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் காணொளி ஊடாக அண்மையில் கலந்துரையாடல் நடத்தியிருந்தார்.

அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியிருந்தார்.

13ஆவது திருத்தச் சட்டத்தையே நீக்க வேண்டும் என்று ராஜபக்ச அரசிலுள்ள முக்கிய அமைச்சர்கள் வலியுறுத்தி வரும் நிலையில்,

மோடியின் இந்த நிலைப்பாட்டால் அதிருப்தியடைந்து இராஜதந்திர ரீதியிலான பதிலடியை வெளிக்காட்டுவதற்காகவா, சீனத்தூதுக்குழுவை இலங்கை அரசு அவசர அவசரமாகச் சந்தித்தது .? என்று அரசியல் அவதானிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இது தொடர்பில் இரா.சம்பந்தனிடம் கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“சீனத் தூதுக்குழு எதற்காக இலங்கை வந்தது ? அந்தக் குழுவை இலங்கை அரசு ஏன் அழைத்தது ? உண்மையில் இரு தரப்பும் நேரில் என்ன பேசினார்கள் ? என்பது தொடர்பில் எமக்குத் தெரியாது.

ஆனால், இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் உள்ள உறவை எந்தத் தரப்பும் அல்லது எந்த நாடும் முறிக்கவே முடியாது.

இலங்கையின் அயல் நாடு இந்தியா. இன ரீதியில் – மொழி ரீதியில் – மத ரீதியில் – கலாசார ரீதியில் இரு நாடுகளுக்கும் இடையில் தொடர்பு உண்டு.

அதற்கமைய இலங்கையிலுள்ள தமிழ், முஸ்லிம், சிங்களம் என மூவின மக்களும் பெருமளவில் இந்தியா சென்று வருபவர்கள்.

அதே போல் இந்தியா நாட்டைச் சேர்ந்த மக்களும் இலங்கை வந்து போவார்கள். இது அன்று தொட்டு இன்றுவரை தொடர்கின்றது. இதை எவரும் தடுக்க முடியாது.

இந்தியா வல்லரசு நாடு. இலங்கை அபிவிருத்தியடைந்து வரும் நாடு. எனவே, இந்தியாவிடமிருந்து சகல உதவிகளையும் இலங்கை பெற முடியும்.

அதே போல் தேசிய இனப்பிரச்சினைக்கான நிரந்தர அரசியல் தீர்வு தொடர்பில் இலங்கைக்கு இந்தியா கூறும் அறிவுரைகளையும் ஆட்சியிலுள்ள அரசுகளும் கேட்டு நடக்க வேண்டும். அதனைப் புறக்கணிக்கும் வகையில் இலங்கை அரசு செயற்படக்கூடாது.

இலங்கையின் அரசியல், அபிவிருத்தி மற்றும் பொருளாதாரம் எனப் பல துறைகள் தொடர்பில் இந்தியா மிக அதிக சிரத்தை கொண்டுள்ளது. இதை நாம் வரவேற்கின்றோம்” – என்றார்.

https://vanakkamlondon.com/world/srilanka/2020/10/87707/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இலங்கை – இந்திய உறவுகளை எந்தத் தரப்பும் பிரிக்க முடியாது.!

Screenshot-2020-10-13-12-47-10-766-org-m

“இலங்கையும் இந்தியாவும் சரித்திர ரீதியில் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்துள்ளது.

இந்த இரு நாடுகளுக்கும் இடையில் உள்ள உறவை எந்தத் தரப்பும் அல்லது எந்த நாடும் பிரிக்கவே முடியாது. அதற்கு நாம் ஒரு போதும் அனுமதிக்கவும் மாட்டோம்.”

இனிமேல் செய்திகளோடை படம் போடேக்கை சம்பந்தப்பட்டவர் இப்ப எந்த நிலைமையிலை இருக்கிறாரோ அந்த படங்களை இணையுங்கப்பா...
படத்தை பார்க்க வீராவேசமாய் கிடக்கு.....ஆனால் ஆளின்ரை உண்மை நிலவரம்???????

தமிழ்நாட்டிலையும் ரஜனி எண்ட கிழட்டுக்கு 40வயது படத்தை போட்டு அரசியல் விளம்பரம் செய்யிறாங்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, குமாரசாமி said:

இனிமேல் செய்திகளோடை படம் போடேக்கை சம்பந்தப்பட்டவர் இப்ப எந்த நிலைமையிலை இருக்கிறாரோ அந்த படங்களை இணையுங்கப்பா...
படத்தை பார்க்க வீராவேசமாய் கிடக்கு.....ஆனால் ஆளின்ரை உண்மை நிலவரம்???????

தமிழ்நாட்டிலையும் ரஜனி எண்ட கிழட்டுக்கு 40வயது படத்தை போட்டு அரசியல் விளம்பரம் செய்யிறாங்கள்

http:// ஏற வில்லை தோழர்.. முயற்சி செய்குறன்..👍

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
பிழை திருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ ஐயா நீங்க எதுக்கு கதறுகிறீர்கள்?! யாராவது அறிவித்தவர்களா இரு நாட்டையும் பிரிக்கபோவதாக?
கவலைப்படவேண்டியது இந்தியா எல்லோ!

  • கருத்துக்கள உறவுகள்

“சீனத் தூதுக்குழு எதற்காக இலங்கை வந்தது ? அந்தக் குழுவை இலங்கை அரசு ஏன் அழைத்தது ? உண்மையில் இரு தரப்பும் நேரில் என்ன பேசினார்கள் ? என்பது தொடர்பில் எமக்குத் தெரியாது.

ஆனால், இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் உள்ள உறவை எந்தத் தரப்பும் அல்லது எந்த நாடும் முறிக்கவே முடியாது."

இதை ஏன் ஐயா அமெரிக்கா வந்து போற நேரம் சொல்வதில்லை? 

  • கருத்துக்கள உறவுகள்

சீனா வந்ததற்கு சிங்களவரோ கிந்தியரோ கூட இந்தளவுக்கு கதறவில்லை.

Edited by விசுகு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, ஏராளன் said:

ஐயோ ஐயா நீங்க எதுக்கு கதறுகிறீர்கள்?! யாராவது அறிவித்தவர்களா இரு நாட்டையும் பிரிக்கபோவதாக?
கவலைப்படவேண்டியது இந்தியா எல்லோ!

5 hours ago, Maruthankerny said:

“சீனத் தூதுக்குழு எதற்காக இலங்கை வந்தது ? அந்தக் குழுவை இலங்கை அரசு ஏன் அழைத்தது ? உண்மையில் இரு தரப்பும் நேரில் என்ன பேசினார்கள் ? என்பது தொடர்பில் எமக்குத் தெரியாது.

ஆனால், இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் உள்ள உறவை எந்தத் தரப்பும் அல்லது எந்த நாடும் முறிக்கவே முடியாது."

இதை ஏன் ஐயா அமெரிக்கா வந்து போற நேரம் சொல்வதில்லை? 

2 hours ago, விசுகு said:

சீனா வந்ததற்கு சிங்களவரோ கிந்தியரோ கூட இந்தளவுக்கு கதறவில்லை.

 சம்பந்தன் ஐயா வழமையாய்  கதைக்கிற மாதிரி சும்மா ஒரு பேச்சுக்கு கதைச்சாலும் விடமாட்டியள் போலை கிடக்கு...:grin:

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இந்தியா கூறும் அறிவுரைகளையும் ஆட்சியிலுள்ள அரசுகளும் கேட்டு நடக்க வேண்டும். அதனைப் புறக்கணிக்கும் வகையில் இலங்கை அரசு செயற்படக்கூடாது.

அப்பாடா! ஒருவழியாய் இந்தியாவின் மேல் பாரத்தை போட்டு தப்பித்தாயிற்று. இனிமேல் தீபாபலி, பொங்கலை சாட்சிக்கு அழைக்கத் தேவையில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.