Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

20ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றம்!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

20ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டம் பெரும்பான்மை வாக்குகளால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட இரண்டாம் கட்ட வாக்கெடுப்பில் சட்டமூலத்திற்கு ஆதரவாக 156 வாக்குகளும் எதிராக 65 வாக்குகளும் கிடைத்துள்ளன.

அரசாங்கத்தின் பங்காளி கட்சிகள் அனைத்து அரசியலமைப்பு திருத்த சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். எதிர்க்கட்சியினர் அனைவரும் சட்டமூலத்திற்கு எதிராக வாக்களித்துள்ளனர்.

இதன் காரணமாக 20ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

19ஆவது அரசியலமைப்பு சட்டத்தில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி 20ஆவது அரசியலமைப்பு சட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது கொண்டு வரப்பட்ட 19ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டம் நாட்டுக்கு பொருத்தமற்றது என சமகால அரசாங்கம் குற்றம் சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

https://www.tamilwin.com/parliment/01/259174?ref=imp-news

இருண்ட யுகம் ஒன்றில் இருந்து மேலும் அகண்ட படுகுழிக்குள் தள்ளக் கூடிய இருண்ட யுகம் நோக்கி இலங்கை நகர்கின்றது. இந்த சர்வாதிகாரத்தின் பங்காளிகளாக சிங்கள மக்களில் பெரும்பான்மையினரு, எதிராளிகளாக தமிழ் மக்களும் நிற்கின்றனர். 
 

  • கருத்துக்கள உறவுகள்

பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம்!

20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தின் மூன்றாம் வாசிப்பு முடிவடைந்துள்ள நிலையில் பாராளுமன்றில் இன்று  பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை பலப்படுத்தும் விதமாக அரசாங்கம் கொண்டுவந்த 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பின் போது 20 ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக 156 வாக்குகளும் எதிராக 65 வாக்குகளும் அளிக்கப்பட்டது.

இதனையடுத்து திருத்தங்களுடன் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அங்கீகாரத்தை பெற்று  20 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பின் போது ஆதரவாக 156 வாக்குகளும் எதிராக 65 வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்த நிலையில் இரு வாக்கெடுப்பிலும் 08 எதிர்க்கட்சி உறுப்பினர்கள்  20 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர்.

அத்துடன் இவ் இரு வாக்கெடுப்பின் போதும் முன்னால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

இதேவேளை, முதலாவது வாக்கெடுப்பு முடிவடைந்த போது, 20 ஆவது திருத்தத்தில் உள்ள இரட்டை பிரஜாவுரிமை தொடர்பான சரத்துக்கு தனி வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என எதிர்க்கட்சி கோரியதையடுத்து பாராளுமன்றத்தில் இரட்டை பிரஜாவுரிமை சட்டத்திற்கு தனி வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இவ் வாக்கெடுப்பில் ஆதரவாக 157 வாக்குகளும் எதிராக 64 வாக்குகளும் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் இரட்டை பிரஜாவுரிமை சரத்து மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நாடாளுமன்ற குழு நிலை விவாதத்தின் போது நிறைவேற்றப்பட்டது.

இவ் வாக்கெடுப்பின் போது எதிர்க்கட்சியிலிருந்து 08 பாராளுமன்ற உறுப்பினர்கள்  ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

1. ஐ.ம.ச. தேசிய பட்டியல் உறுப்பினர் - டயானா கமகே 

2. ஸ்ரீ.மு.கா. உறுப்பினர் நஸீர் அஹமட் 

3. முஸ்லிம் தேசிய கூட்டணி உறுப்பினர் ஏ.ஏ.எஸ்.எம்.ரஹீம் 

4. ஸ்ரீ.மு.கா. உறுப்பினர்  பைசல் காசிம் 

5. ஸ்ரீ.மு.கா. உறுப்பினர் எச்.எம்.எம்.ஹாரீஸ் 

6. ஸ்ரீ.மு.கா. உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் 

7. ஐ.ம.ச. உறுப்பினர் அரவிந்த் குமார் 

8. ஐ.ம.ச. உறுப்பினர் இஷாக் ரஹ்மான் 
 

https://www.virakesari.lk/article/92768

ஹஹ்ஹா... வழக்கப் போல் முஸ்லிம் காங்கிரஸ் பல்டி அடித்து விட்டது. இனி அமைச்சர் பதவிகள் தான். 

கிழக்கு முன்னாள் முதலமைச்சருக்கு அமைச்சு பதவி கொடுத்தால் கிழக்கு வாழ் தமிழ் மக்கள் மேலும் ஒதுக்கப்படுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இரட்டை பிரஜாவுரிமை : அமோக வெற்றி !

இரட்டை பிரஜாவுரிமை தொடர்பான அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தின் 17 வது சரத்து மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நாடாளுமன்ற குழு நிலை விவாதத்தின் போது நிறைவேற்றப்பட்டது.

20 ஆவது திருத்தத்தில் உள்ள இரட்டை பிரஜாவுரிமை தொடர்பான சரத்துக்கு தனி வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என எதிர்க்கட்சி கோரியதையடுத்து பாராளுமன்றத்தில் இரட்டை பிரஜாவுரிமை சட்டத்திற்கு தனி வாக்கெடுப்பு நடத்தப்பட்டது

இந்நிலையில் இரட்டை பிரஜாவுரிமை சரத்து மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது.

இவ் வாக்கெடுப்பில் ஆதரவாக 157 வாக்குகளும் எதிராக 64 வாக்குகளும் அளிக்கப்பட்டது.

எதிர்க்கட்சியிலிருந்து 08 பாராளுமன்ற உறுப்பினர்கள்  இதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/92765

இலங்கை வரலாற்றில் இன்று இருண்ட நாள் - சிவஞானம் சிறதரன்

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

 அதிகாரங்கள் ஓர் இடத்தில் குவிக்கப்படுவதால் தமிழர்களின் இருப்புக்கும் இறைமைக்கும் பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே இலங்கை வரலாற்றில் இன்று இருண்டநாள் என  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறதரன்  சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டம் மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். 

sritharan-mp « Radiotamizha Fm

அவர் மேலும் கூறுகையில்,

20ஆவது திருத்தச்சட்டத்தை கொண்டுவருவதன் மூலம் இந்த நாடு ஓர் இருண்ட யுகத்தை நோக்கி நகர்கிறது. முசோலினி, ஹிட்லர் அல்லது ஒரு இடியமீன்  யுகத்தை நோக்கியே  நாடு நகரப்போகிறது. 1978ஆம் ஆண்டு ஜே.ஆர்.ஜெயவர்தன புதிய அரசிலமைப்பொன்றை கொண்டுவந்திருந்த சந்தர்ப்பதில் அதன் ஆபத்தை கொல்வின் ஆர்.டி.சில்வா விளக்கியிருந்தார். 

எந்தவொரு நபருடைய கருத்தையுத் செவி சாய்க்காது ஜே.ஆரால் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பில் பல்வேறு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ள சூழலில் மீண்டும் 42 வருடங்களின் பின்னர் ஒரு தனிநபரிடம் அதிகாரத்தை குவிக்கும் முகமாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இதனால் நாடு மிகப்பெரிய ஆபத்தை நோக்கிதான் நகரும்.

1948 ஆம் ஆண்டு இலங்கையின் தலா தேசிய வருமானமும் ஜப்பான், சிங்கப்பூர் போன்ற நாடுகளின் தலா தேசிய வருமானமும் சமமாக காணப்பட்ட நிலையில் இன்று அந்த நாடுகள் அடைந்துள்ள நிலையை பார்க்க வேண்டும். இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போர் இந்த நாட்டை அதலபாதாளத்துக்கு தள்ளியள்ளது. ஜனாதிபதியிடம் இன்று குவிக்கப்படும் அதிகாரங்கள் இந்த நாட்டில் வாழும் சிறுபான்மை இனங்கள்மீதான அதிகார துஷ்பிரயோகத்திற்கு அல்லது அவர்களுடைய வாழ்வுக்கு பாதகமாக இருக்கும்.

42 வருடங்கள் இராணுவச் சிந்தையில் உள்ள ஒருவர்தான் ஜனாதிபதியாகியுள்ளார். அவர் பதவியேற்ற நாள்முதல் இந்த நாட்டில் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினை தொடர்பில் எந்தவொரு வார்த்தையும் பேசவில்லை. அநுராதபுரத்தில் நடைபெற்ற அவரது பதவியேற்பு உரையில் தமிழர்கள் இந்த நாட்டில் வாழ்கிறார்கள், அவர்களுக்கு பிரச்சினை உள்ளதென்பதைக் கூட அவர் கூறவில்லை. இந்தியாவுக்கு சென்ற போது அங்கு ஊடகமொன்றுக்கு வழங்கிய  பேட்டியிலும் கூட இனப்பிரச்சினை பற்றி அவர் பேசவில்லை. அதேபோன்று பாராளுமன்றத்தில் அவர் ஆற்றிய கொள்கை விளக்க உரையிலும் இனப்பிரச்சினை பற்றி ஒருவார்த்தை பேசவில்லை.

இவ்வாறான ஒருவரிடம் தான் அதிகாரங்கள் குவிக்கப்படுகிறது. ஏனைய இனங்களை மதித்து பல்லினங்கள் வாழும் இந்த நாட்டில் ஜனநாயகத்தை மதித்து அவர் ஆட்சி செய்வார் என்ற உத்தரவாதம் இந்தச் சட்டத்தினால் கொடுக்கப்படுமா? இதனை சிந்திக்க வேண்டும். சிங்கள மக்களை நினைத்து கவலையடைகிறேன். இந்த நாள் ஓர் ஆபத்தான இருண்ட நாள். இன்னும் 20 வருடங்களுக் பின்னர் இராணுவ மயப்படுத்தப்பட்ட நாடாக இது இருக்கும். நாம் பாதிக்கப்பட்ட இனம். 70 வருடங்களாக இந்த மண்ணில் இருப்புக்காகவும் இழந்துபோன இறைமையை மீட்கவும் போராடுகிறோம்.

 எமக்கு இந்த நாட்டில் வாழும் உரிமை இருப்பது என்றால் இவ்வாறு அதிகாரம் குவிக்கப்படுவது ஆபத்தானது. அதன்hல் தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம் என்பதை ஏற்றுக்கொள்ள முன்வர வேண்டும். சிங்கள மக்கள் வழங்கியுள்ள அதிகாரத்தை நேர் வழியில் பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் சிறந்த எதிர்காலம் அமையும். வரலாற்றின் கறுப்புநாளை வாக்களிக்கும் உறுப்பினர்கள் பதிவுசெய்து வைத்துக்கொள்ளுங்கள் நாளை இந்த அதிகாரங்கள் உங்களுக்கு எதிராகவே திரும்பும் என்றார்.https://www.virakesari.lk/article/92764

அரச தரப்பில் ’20’ க்கு ஆதரவாக வாக்களிக்காத ஒரேயொரு உறுப்பினர்; மைத்திரிபால சிறிசேன

sirisena-1024x576.jpgஅரசியலமைப்புக்கான 20 ஆவது திருத்தம் இன்றிரவு வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது, அரசாங்கத் தரப்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மட்டுமே அதற்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை.

முன்னாள் ஜனாதிபதி சிறிசேன இன்றைய தினம் பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ளவில்லை.

225 பாராளுமன்ற உறுப்பினர்களில் 221 பேர் மட்டுமே இன்றைய வாக்கெடுப்பில் கலந்துகொண்டிருந்தார்கள்.

ஐ.தே.க. மற்றும் ஞானசார தேரரின் கட்சி என்பன தமது தேசியப் பட்டியல் உறுப்பினரை இதுவரையில் தெரிவு செய்யவில்லை. அதனைவிட சபாநாயகர், மைத்திரிபால சிறிசேன ஆகியோரும் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாததால் 221 உறுப்பினர்கள் மட்டுமே வாக்களித்திருந்தார்கள்.

மைத்திரிபாலவை தலைவராகக் கொண்ட ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 20 ஆவது திருத்தத்தை ஆதரிப்பது என்ற முடிவை நேற்றிவு எடுத்தது. ஆனால், 19 ஆவது திருத்தத்தை கடந்த நல்லாட்சியில் கொண்டுவருவதற்குக் காரணமாக இருந்தவர் என்ற முறையில் ’20’ ஐ தன்னால் ஆதரிக்க முடியாது என மைத்திரி இன்று காலை ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் தெரியப்படுத்தியிருந்தார்.

 

20 ஐ ஆதரித்த முஸ்லிம் எம்.பிக்கு 20 ரூபா! இந்தக் அவமானம் தேவையா?

 

 

“20” நிறைவேறியதை காட்டிலும் எம்.பிக்கள் துரோகம் அதிக வலி!

ஈ.சரவணபவன் ஆதங்கம்

எமது நாட்டின் தலையெழுத்தை மாற்றி, இருண்ட யுகத்துக்குள் தள்ளியுள்ள 20 ஆவது திருத்தச் சட்டம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டதை விடவும், அந்தத் திருத்தம் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தோடு நிறைவேற, மக்களின் முதுகில் குத்தி கட்சி தாவிய எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் செய்த துரோகமே அதிகமாக வலியைத் தருகின்றது.
இவ்வாறு தெரிவித்துள்ளார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் , தமிழரசுக் கட்சி முக்கியஸ்தருமான ஈ.சரவணபவன்.


அவர் நேற்று விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் உள்ளதாவது-


ஒக்ரோபர் 22 இலங்கையின் வரலாற்றில் ஒரு கறுப்பு நாளாக மாறியுள்ளது. தனிப்பட்ட ஒருவரின் கைகளில் ஒட்டுமொத்த அதிகாரங்களையும் கொடுத்து , ஜனநாயக ரீதியில் ஒரு சர்வாதிகாரியை உருவாக்கும் 20 ஆவது திருத்தம் நாடாளுமன்றில் 91 மேலதிக வாக்குகளால் – மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன்  நேற்று நிறைவேறியுள்ளது. ஜனநாயகத்தின் பேரைப் பயன்படுத்தி சர்வாதிகாரத்தை நிலைநிறுத்தும் ராஜபக்சக்களின் சதியை திட்டமிட்டபடி நிறைவேற்றியுள்ளனர். இதன் விளைவை ஒட்டுமொத்த இலங்கையர்களும், எதிர்காலம் முழுதும் அனுபவிக்க வேண்டிய துயரமான, இருண்ட யுகம் தோன்றியுள்ளது.


இந்தத் திருத்தம் மூன்றிலிரண்டு பெரும்பான்மையோடு நிறைவேற, எதிர்க்கட்சி வரிசையில் இருந்து முதுகில் குத்தி விட்டு கட்சி தாவிய எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களே முக்கியமான காரணம். அவர்களில் 6 பேர் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள். இவர்களுடன் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் அரவிந்தகுமார் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் டயானா ஆகிய எட்டுப்பேரே இந்தத் துரோகத்தைப் புரிந்து நாட்டில் சர்வாதிகார ஆட்சி மலர துணைபோயுள்ளனர். 20 ஆவது திருத்தம் நிறைவேறிவிட்டதே என்ற துயரை விடவும், இந்த எட்டுப் பேரும் செய்த துரோகமே இன்னும் அதிக வலியை மக்களிடம் உண்டாக்கியுள்ளது.

கடந்த ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதிக்குப் பின்னர் முஸ்லிம் மக்களை ஈவிரக்கம் இல்லாமல், ஐந்தறிவு ஜந்துக்கள் போல நடத்துவதற்கும், கலவரங்களைத் தூண்டி விட்டு இழப்புக்களை ஏற்படுத்துவதற்கும் சூத்திரதாரிகளான ராஜபக்சக்களுக்கு , அதே முஸ்லிம் இனத்தின் பிரதிநிதிகள் தோள் கொடுக்க எப்படி முடிந்தது?. அவ்வளவு எளிதில் தங்கள் இனத்துக்கு ராஜபக்சக்கள் இழைத்த கொடுமைகளை மறந்துவிட்டு, சுயநலத்துக்காக ஓடிப்போய் ஒட்டிக்கொள்ளபவர்களை முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகள் என அழைக்கமுடியுமா?
அதேபோன்றுதான் அரவிந்தகுமாரும் , 20 ஆம் திருத்தத்துக்காக ராஜபக்சக்களுக்கு அடிமையானதன் மூலம் தனக்கு வாக்களித்த மலையக மக்களுக்கு துரோகமிழைத்துள்ளார். தோட்டத் தொழிலாளர்களுக்கு இன்னமும் 1000 ரூபா சம்பளத்தை கொடுக்க மனமில்லாமல் நாடகமாடும் அரசுக்கு ஆதரவு தெரிவித்ததம் மூலம் தன் மீது பெரும் களங்கத்தை உண்டுபண்ணியுள்ளார்.


இலங்கையின் எதிர்காலத்தைப் படுகுழிக்குள் தள்ளியுள்ள 20 ஆம் திருத்தத்தை நிறைவேற்ற துணைபோனதன் மூலம் இந்த எட்டுப் பேரும் செய்த துரோகத்தை மக்கள் மன்னித்தாலும், வரலாறும், காலமும் அவர்களை மன்னிக்கப் போவதில்லை-என்றுள்ளது. 

 

https://newuthayan.com/20-நிறைவேறியதை-காட்டிலு/

  • கருத்துக்கள உறவுகள்

20’ க்குள் உள்ளடங்கும் இரட்டைப் பிரஜாவுரிமை தொடர்பில் தனியாக நடைபெற்ற வாக்கெடுப்பு

parliment-600.png
 7 Views

20 ஆவது திருத்தச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இரட்டைப் பிரஜாவுரிமை தொடர்பான 17 ஆவது சரத்து குறித்து எதிர்க்கட்சியினர் தமது எதிர்ப்பை வெளியிட்டதோடு தனியான வாக்கெடுப்பொன்றையும் கோரினர்.

இந்த நிலையில், சபாநாயகரின் அனுமதியுடன் முன்னெடுக்கப்பட்ட தனியான வாக்கெடுப்பின் 17 ஆவது சரத்து தொடர்பில் ஆதரவாக 157 வாக்குகளும், எதிராக 64 வாக்குகளும் கிடைத்தன. இதற்கமைய, 17 ஆவது சரத்து 92 மேலதிக வாக்குகளினால் திருத்தங்கள் இன்றி 20ஆவது திருத்தச் சட்டத்துக்குள் உள்வாங்கப்பட்டது. மொத்தமாக அளிக்கப்பட்ட வாக்குகள் 213 ஆகும்.

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சரத்து ஒன்றுக்கான வாக்கெடுப்புஇடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

https://www.ilakku.org/20-க்குள்-உள்ளடங்கும்-இரட்/

11 hours ago, கிருபன் said:

2. ஸ்ரீ.மு.கா. உறுப்பினர் நஸீர் அஹமட் 

4. ஸ்ரீ.மு.கா. உறுப்பினர்  பைசல் காசிம் 

5. ஸ்ரீ.மு.கா. உறுப்பினர் எச்.எம்.எம்.ஹாரீஸ் 

6. ஸ்ரீ.மு.கா. உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் 

தலைவர் எதிர் மற்றவர்கள் ஆதரவு?, இது டபிள் கேம் (double game). திட்டமிட்டு இவர்கள் இரு பக்கமும் ஆடுகிறார்கள் 

தமிழவின்'ல் "ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்டு 20ம் திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முஸ்லிம் சமூகத்துக்கு மட்டுமல்லாமல் முழு இலங்கையருக்கும் வரலாற்று துரோகம் இழைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான்" என்ற தலைப்பில் வந்துள்ள செய்தியில் ""முஸ்லிம்கள் “தொப்பி பிரட்டிகள்” என்று பெரும்பான்மை சமூகத்தினர் எம்மை அடிக்கடி விமர்சிப்பார்கள்.இவர்கள் இவ்வாறு விமர்சிப்பதை இன்று இந்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உண்மை என நிரூபித்துள்ளனர்.இன்று இவர்கள் செய்தது முஸ்லிம் சமூகத்துக்கு மட்டுமல்லாமல் முழு இலங்கையருக்கும் வரலாற்று துரோகம். இவர்கள் ஆதரவு அளித்ததால்தான் இன்று இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது" என்று நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்துள்ளார்  என்றுள்ளது 🙄

செய்தி மூலம்: https://www.tamilwin.com/politics/01/259205?ref=home-imp-parsely

இலங்கை தொழிலாளர் காங்கிரசும் ஆதரவாக வாக்களித்துள்ளனர். 

Edited by puthalvan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.