Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வீரமுனை படுகொலை நினைவிடத்தில் விளக்கேற்றிய கருணா அம்மான்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, MEERA said:

அதுதான், நீங்கள் கொடுத்த பதில் தவறானது...

இராஜதந்திர கடவுச்சீட்டில் நிரந்தரமாக இருக்க முடியாது என்பது கூட உங்களுக்கு தெரியவில்லை..😀

மீரா, ஜெயானந்தமூர்த்தி, முன்னாள் பா.உ எந்தக் கடவுச்சீட்டில் பிரித்தானியா வந்தவர்? 

நான் நினைக்கிறேன், உள்ளே நுழையத் தான் கடவுச் சீட்டு தேவை (சில சமயம் தேவையும் இல்லை!). பிறகு பல்வேறு வழிகள் உண்டல்லவா நிரந்தரமாக வசிக்க? 

  • Replies 165
  • Views 18.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Justin said:

மீரா, ஜெயானந்தமூர்த்தி, முன்னாள் பா.உ எந்தக் கடவுச்சீட்டில் பிரித்தானியா வந்தவர்? 

நான் நினைக்கிறேன், உள்ளே நுழையத் தான் கடவுச் சீட்டு தேவை (சில சமயம் தேவையும் இல்லை!). பிறகு பல்வேறு வழிகள் உண்டல்லவா நிரந்தரமாக வசிக்க? 

ஜெயானந்தமூர்த்தி பிரித்தானியா வந்தது பாராளுமன்ற உறுப்பினருக்கான ராஜதந்திர கடவுச்சீட்டு, ஆனால் அவர் நிரந்தரமாக தங்கியது அவரது மனைவி (பிள்ளைகளின்) தஞ்சைக்கோரிக்கையில் (Spouse Visa )

அவர் பாராளுமன்ற உறுப்பினராகியவுடன் முதலில் செய்தது குடும்பமாக பிரித்தானியா வந்து மனைவி பிள்ளைகளை Asylum கேட்க வைத்தது, முதலில் Home Office ஆல் அவர்களது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு பின்னர் நீதிமன்றில் தஞ்சம் வழங்கப்பட்டது. அவர் தற்போதும் சிறீலங்கா பிரசையாக இருப்பதாலேயே தொடர்ந்தும் அரசியலில் ஈடுபட முடிகிறது.

ஆனால் கும்மான் பிரித்தானியா வந்தது கள்ள சிறீலங்கா இராஜதந்திர கடவுச்சீட்டு.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, MEERA said:

அப்படியானால் ரதியின் கருத்து சரி தானே? கருணா நீலக் கடவுச் சீட்டில் வந்திருந்தாலும் இப்படி போராடியிருக்கலாம் தங்கி நிற்க. மனைவி ஏற்கனவே இருந்தார் அல்லவா லண்டனில்? சில நாடுகளின் ராஜதந்திரிகளே தஞ்சம் கோரி தங்கி நிற்கும் போது, கருணா தங்கி நின்றிருக்கவே முடியாதென்பது தவறான கருத்தல்லவா? 
(எனக்கு கருணாவுக்கு தஞ்சம் கிடைத்திருக்க வேண்டுமென்ற ஆவல் அல்ல, உங்கள் தகவல் பிழையென்பதே என் கருத்து)

On 28/11/2020 at 02:55, கற்பகதரு said:

எல்லாம் ஒரு உயிர்தானுங்கோ. அது குற்றம் புரியாமலும் துரோகி பட்டம் கட்டப்பட்டு கொல்லப்பட்டாலும்,  தவறான ஆளாக அடையாளம் காணப்பட்டு கொல்லப்பட்டாலும், குண்டுவைக்கப்படும் இடத்தில் வாழ்ந்து மாண்டிருந்தாலும் கூட, எல்லாம் ஒரு உயிர்தானுங்கோ. இப்படி எத்தனை உயிர் போனது?

வசதியாக , தங்களுக்கு வசதியாக கொலைகளை நியாயப்படுத்தும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் கொலை செய்தால் காட்டிக்கொடுத்தான், அப்படி செய்தான், இப்படி செய்தான் எண்டு போர்ட் போட்டுவிடுவார்கள். மட்றவன் செய்தால் செய்தால் மாறி கதை கட்டிவிடுவார்கள். இதுதான் சாத்தானின் தந்திரங்கள். இதனால்தான் நான் சாத்தான்களுடன் தொடர்பு வைப்பதில்லை. கடைசியில் உங்கள் உயிரையே பறித்துவிடும்.

On 29/11/2020 at 02:21, nunavilan said:

அமெரிக்கா, ரஸ்யா,இஸ்ரேல் என்று சொல்லிக் கொண்டே போகலாம் நாடுகளை. ஆயுதத்தை  வாய் பேசுவதை விட அவர்களில் ஆயுதங்கள் பேசிய இடம் தான் அதிகம். ஆயுதங்களால் அழியவில்லையே??

நீங்கள் சொல்வது உண்மைதான். எல்லா நாடுகளும்தான் யுத்தம் செய்கின்றன. ஆனால் அரச கடடளைகளுக்கு கீழ்ப்படிந்து வேலை செய்பவர்களும் உண்டு. நாடு என்று போராடுபவர்களும் உண்டு. ஆனால் அநியாயமாக மனித உயிர்களை எடுப்பதட்கு யாருக்கும் உரிமை இல்லை. அதாவது ரத்தம் என்பது மனித உயிர். எனவே ரத்தம் சிந்தினால் அதட்கு விலை கொடுத்தே தீர வேண்டும். இங்கும் கூட எத்தனையோ மனிதர்கள் கூட அநியாயமாக எடுக்கப்பட்ட்து. நிச்சயமாக அதட்கு உரியவர்கள் விலை கொடுத்தே தீர வேண்டும். அரசன் அன்று அறுப்பான் , தெய்வம் நின்று அறுக்கும். அமெரிக்கா தவறாக செயல்பட்டிருந்தால் விலை கொடுத்தே தீரும். இஸ்ரவேல் பற்றி எனக்கு தனிப்படட அபிப்பிராயம் உண்டு. அது அவர்கள் வாழ்ந்த நாடு. அவர்களுக்கு தண்டனையாக எல்லா நாடுகளிலும் சிதறிக்கப்படடவர்கள். இப்போது தங்கள் நாட்டுக்கு வந்திருக்கிறார்கள். இருந்தாலும் அவர்களுக்கும் இக்கட்டு (Toruble ) வரத்தான் போகின்றது. அதட்கான காரணங்கள் வேறு.  

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Justin said:

அப்படியானால் ரதியின் கருத்து சரி தானே? கருணா நீலக் கடவுச் சீட்டில் வந்திருந்தாலும் இப்படி போராடியிருக்கலாம் தங்கி நிற்க. மனைவி ஏற்கனவே இருந்தார் அல்லவா லண்டனில்? சில நாடுகளின் ராஜதந்திரிகளே தஞ்சம் கோரி தங்கி நிற்கும் போது, கருணா தங்கி நின்றிருக்கவே முடியாதென்பது தவறான கருத்தல்லவா? 
(எனக்கு கருணாவுக்கு தஞ்சம் கிடைத்திருக்க வேண்டுமென்ற ஆவல் அல்ல, உங்கள் தகவல் பிழையென்பதே என் கருத்து)

கும்மான் இங்கு வந்த போது அவரது மனைவியின் தஞ்சக்கோரிக்கை அங்கீகரிக்கப்படவில்லை, மேலும் இதுவரை புலிகளின் இரணுவ தளபதிகளுக்கு பிரித்தானியாவில் அடைக்கலம் கொடுக்கப்படவும் இல்லை. புலிகளில் இருந்த பலர் தாம் பங்கெடுத்த தாக்குதல்கள் பலவற்றை மறைத்தே வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.

கரும்புலிகளை கட்டியணைச்சு தாக்குதலுக்கு அனுப்பியவருக்கு எந்த நாடு அடைக்கலம் கொடுக்கும்?      (இந்தியா தவிர)

கும்மானை காட்டிக் கொடுத்தது அவரது கூட்டாளிகள்.

Edited by MEERA

  • கருத்துக்கள உறவுகள்
On ‎30‎-‎11‎-‎2020 at 19:38, MEERA said:

நிச்சயம் தவறு

அது உங்கள் கருத்து 

போட்டுக் கொடுத்ததே கூட்டாளிகள் தான் 

கூட்டாளிகள் தான் காட்டிக் கொடுத்தனர் என திரும்ப ,திரும்ப உறுதியாய் சொல்கிறீர்கள் ....அந்த கூட்டாளிகள் உங்களுக்கு தெரிந்தவர்களா?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

No comments 🤐

  • கருத்துக்கள உறவுகள்
On ‎01‎-‎12‎-‎2020 at 21:17, MEERA said:

No comments 🤐

இனி மேலாவது எழுதும் போது அடுத்தவரை எதிர்க்க வேண்டும் என்று எழுதாமல் பொறுப்புணர்ந்து எழுதுங்கள் ...நன்றி . வணக்கம்

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, ரதி said:

இனி மேலாவது எழுதும் போது அடுத்தவரை எதிர்க்க வேண்டும் என்று எழுதாமல் பொறுப்புணர்ந்து எழுதுங்கள் ...நன்றி . வணக்கம்

உங்கட குசும்புக்பு அளவில்லை,

கூட்டாளிகள் தான் காட்டிக் கொடுத்தனர் என திரும்ப ,திரும்ப உறுதியாய் சொல்கிறீர்கள் ....அந்த கூட்டாளிகள் உங்களுக்கு தெரிந்தவர்களா?

இதற்கு தான் No comments 

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, MEERA said:

உங்கட குசும்புக்பு அளவில்லை,

கூட்டாளிகள் தான் காட்டிக் கொடுத்தனர் என திரும்ப ,திரும்ப உறுதியாய் சொல்கிறீர்கள் ....அந்த கூட்டாளிகள் உங்களுக்கு தெரிந்தவர்களா?

இதற்கு தான் No comments 

அப்ப அந்த கூட்டாளிகள் உங்களுக்கு தெரிந்தவர்களாய் இருக்க வேண்டும் அல்லது நீங்களும் அந்த கூட்டாளிகளில் ஒருவராய் இருக்க வேண்டும் இல்லாட்டில் எவ்வளவு உறுதியாய் உங்களால் எப்படி சொல்ல  முடிந்தது 

  • கருத்துக்கள உறவுகள்
On 1/12/2020 at 05:45, ரதி said:

கருணாவின் பிரிவு என்பது சடுதியில் நடந்தது ...அவர் மீது குற்றங்கள் இருந்தால் அவரை பேச்சு வார்த்தைக்கு அனுப்பி இருக்க கூடாது

தலைவர் வி. முரளிதரனை முழுமையாக நம்பியதார்த்தான் தளபதி அந்தஸ்த்து, தன்கூடவே வைத்திருந்தார், எந்த சந்தேகமுமில்லாமல் அனுப்பிவைத்தார்.

On 1/12/2020 at 05:45, ரதி said:

சுபாவை நம்பி அவரை விசாரனைக்கு கூப்பிட்டு இருக்க கூடாது...

தலைவர், தான் அவரை நம்பி இருந்தாலும் குற்றம் சாட்டுபவரின் பொருட்டு முரளிதரன் குற்றவாளியா? சுற்றவாளியா? என்பதை விசாரிக்க  வேண்டிய பொறுப்பு தலைமைக்கு உள்ளது.  வி. முரளிதரனை முழுமையாக நம்பியதாலே விசாரணைக்கு அழைத்திருக்கிறார் தலைவர். இது வழமையானதுதானே?  குற்றம் உண்மையென கருதியிருந்தால் விசாரணைக்கு அழைக்காமல் தண்டனையை பிறப்பித்திருப்பாரே?  தான் நிரபராதி என்பதை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு குற்றம் சாட்டப்பட்டவருக்கு உண்டு.  ஆனால் தலைவரை சந்திக்க தைரியம் வரவில்லை இந்தத் துரோகிக்கு. தண்டனையிலிருந்து தப்பிக்க குறுக்கு வழியில் ஓடியது.

On 1/12/2020 at 05:45, ரதி said:

அத்தனை வருடங்கள் ஒன்றாய் இருந்த அவருக்கு தன்னை  போடப் போறார்கள் என்பது தெரியாமலா இருக்கும்?

ஏன் தெரியாது? நன்றாகவே தெரியும். எந்தக் குற்றத்திற்கு என்ன தண்டனை என்பதை நன்றாகவே தெரிந்து வைத்துதான் விசாரணைக்கு கூப்பிட்டபோது, அதை தவிர்த்து அடைக்கலம் தேடி மஹிந்தவிடம் அல்ல ரணிலின் வழிகாட்டலில் வெளியேறினார். இது தற்சமயம் நடந்தது என்று கூற முடியாது. வி. முரளிதரனுக்கு நன்றாகவே தெரியும் தான் என்ன தவறு செய்தேன், அதற்கு என்ன தண்டனை என்பதை நன்றாகவே தெரிந்து தான் முடிவெடுத்தார். எத்தனையோ போராளிகள், தளபதிகள் தவறு செய்து தண்டனை அனுபவித்து உரிய முறையில் இயக்கத்தை விட்டு வெளியேறி உள்நாட்டிலோ, வெளிநாட்டிலோ இயல்பாக வாழுகிறார்கள். இன்னும் சிலர் தண்டனை முடித்து தொடர்ந்து மக்களுக்காக போராடினார்கள். இனவாத சிங்கள அரசும் அதன் கூலிப்படையுமே எதிரி, சிங்கள மக்களல்ல என்னும் கொள்கை உடையவர்கள், தன் சொந்த குடும்பத்தை, உயிரை துறந்தவர்கள் அனிஞாயமாக யாரையும் கொல்ல வேண்டிய தேவையில்லை. கரணம் தப்பினால் மரணம். அதை சிலர் வலிந்து தேடிக்கொண்டனர். சிலர் இயக்கத்தின் நம்பிக்கையையும், அதன் வசதிகளையும் தங்களின் சொந்த நலனுக்கும், பழிவாங்கல்களுக்கும்  பயன்படுத்திக்கொண்டனர். ஒரு அமைப்பில் உள்ளவர் விடும் தவறு அந்த அமைப்பையே சாரும். தெரிந்தவர்கள் தவறை கண்டுபிடிக்கமுன், விசாரணையின்முன் திட்டமிட்டு தப்பியோடி இராணுவத்தோடும், வெளிநாட்டிலும் உல்லாசமாக இருக்கிறார்கள். ஆனால் எல்லாவற்றையும் புலிகளின் தலையில் கட்டிவிட்டு தாம் தப்பிக்கொண்டனர். தமது கடமை எதுவோ அதை செய்துவிட்டு எதையும் எதிர்பாராமல் உறங்குகிறார்கள் உண்மையாய் விடுதலைக்காய் உழைத்தவர்கள். எதுவுமே செய்யாத நாம் அவர்களை மட்டும் குறை கூறிக்கொண்டிருக்கிறோம். 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ரதி said:

அப்ப அந்த கூட்டாளிகள் உங்களுக்கு தெரிந்தவர்களாய் இருக்க வேண்டும் அல்லது நீங்களும் அந்த கூட்டாளிகளில் ஒருவராய் இருக்க வேண்டும் இல்லாட்டில் எவ்வளவு உறுதியாய் உங்களால் எப்படி சொல்ல  முடிந்தது 

நான் யாழ்ப்பாணத்தவன் / வடக்கன், எப்படி  கூட்டாளி ஆக முடியும்?

2004இல் யாழ்ப்பாணிகளை மட்டக்களப்பிலிருந்து கும்மான் கலைத்தது மறந்து போய்விட்டதா உங்களுக்கு? 

  • கருத்துக்கள உறவுகள்
On ‎04‎-‎12‎-‎2020 at 06:04, MEERA said:

நான் யாழ்ப்பாணத்தவன் / வடக்கன், எப்படி  கூட்டாளி ஆக முடியும்?

2004இல் யாழ்ப்பாணிகளை மட்டக்களப்பிலிருந்து கும்மான் கலைத்தது மறந்து போய்விட்டதா உங்களுக்கு? 

நீங்களும் செய்யேல்ல, செய்தவர்களையும் உங்களுக்கு தெரியாது...ஆனால் வெறும் வாயால் வடை சுட மட்டும் தெரியுமாக்கும் 
 
On ‎03‎-‎12‎-‎2020 at 21:46, satan said:

தலைவர் வி. முரளிதரனை முழுமையாக நம்பியதார்த்தான் தளபதி அந்தஸ்த்து, தன்கூடவே வைத்திருந்தார், எந்த சந்தேகமுமில்லாமல் அனுப்பிவைத்தார்.

தலைவர், தான் அவரை நம்பி இருந்தாலும் குற்றம் சாட்டுபவரின் பொருட்டு முரளிதரன் குற்றவாளியா? சுற்றவாளியா? என்பதை விசாரிக்க  வேண்டிய பொறுப்பு தலைமைக்கு உள்ளது.  வி. முரளிதரனை முழுமையாக நம்பியதாலே விசாரணைக்கு அழைத்திருக்கிறார் தலைவர். இது வழமையானதுதானே?  குற்றம் உண்மையென கருதியிருந்தால் விசாரணைக்கு அழைக்காமல் தண்டனையை பிறப்பித்திருப்பாரே?  தான் நிரபராதி என்பதை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு குற்றம் சாட்டப்பட்டவருக்கு உண்டு.  ஆனால் தலைவரை சந்திக்க தைரியம் வரவில்லை இந்தத் துரோகிக்கு. தண்டனையிலிருந்து தப்பிக்க குறுக்கு வழியில் ஓடியது.

ஏன் தெரியாது? நன்றாகவே தெரியும். எந்தக் குற்றத்திற்கு என்ன தண்டனை என்பதை நன்றாகவே தெரிந்து வைத்துதான் விசாரணைக்கு கூப்பிட்டபோது, அதை தவிர்த்து அடைக்கலம் தேடி மஹிந்தவிடம் அல்ல ரணிலின் வழிகாட்டலில் வெளியேறினார். இது தற்சமயம் நடந்தது என்று கூற முடியாது. வி. முரளிதரனுக்கு நன்றாகவே தெரியும் தான் என்ன தவறு செய்தேன், அதற்கு என்ன தண்டனை என்பதை நன்றாகவே தெரிந்து தான் முடிவெடுத்தார். எத்தனையோ போராளிகள், தளபதிகள் தவறு செய்து தண்டனை அனுபவித்து உரிய முறையில் இயக்கத்தை விட்டு வெளியேறி உள்நாட்டிலோ, வெளிநாட்டிலோ இயல்பாக வாழுகிறார்கள். இன்னும் சிலர் தண்டனை முடித்து தொடர்ந்து மக்களுக்காக போராடினார்கள். இனவாத சிங்கள அரசும் அதன் கூலிப்படையுமே எதிரி, சிங்கள மக்களல்ல என்னும் கொள்கை உடையவர்கள், தன் சொந்த குடும்பத்தை, உயிரை துறந்தவர்கள் அனிஞாயமாக யாரையும் கொல்ல வேண்டிய தேவையில்லை. கரணம் தப்பினால் மரணம். அதை சிலர் வலிந்து தேடிக்கொண்டனர். சிலர் இயக்கத்தின் நம்பிக்கையையும், அதன் வசதிகளையும் தங்களின் சொந்த நலனுக்கும், பழிவாங்கல்களுக்கும்  பயன்படுத்திக்கொண்டனர். ஒரு அமைப்பில் உள்ளவர் விடும் தவறு அந்த அமைப்பையே சாரும். தெரிந்தவர்கள் தவறை கண்டுபிடிக்கமுன், விசாரணையின்முன் திட்டமிட்டு தப்பியோடி இராணுவத்தோடும், வெளிநாட்டிலும் உல்லாசமாக இருக்கிறார்கள். ஆனால் எல்லாவற்றையும் புலிகளின் தலையில் கட்டிவிட்டு தாம் தப்பிக்கொண்டனர். தமது கடமை எதுவோ அதை செய்துவிட்டு எதையும் எதிர்பாராமல் உறங்குகிறார்கள் உண்மையாய் விடுதலைக்காய் உழைத்தவர்கள். எதுவுமே செய்யாத நாம் அவர்களை மட்டும் குறை கூறிக்கொண்டிருக்கிறோம். 

இது பற்றி நிறையவே பல திரிகளில் எழுதியாயிற்று... எனக்கு உங்களை,உங்களை போன்றவர்களை நினைக்க பரிதாபம் தான் வருகிறது ...வேஸ்ட் ஒப் டைம் ...தேவையில்லாத மனஸ்தாபத்தை வளர்ப்பதை விட நீங்கள் பிடித்த முயலுக்கு 3 கால் என்று சொல்லி மகிழுங்கள் ...காசா,பொருளா எனக்கென்ன வந்தது 
 
  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ரதி said:

நீங்களும் செய்யேல்ல, செய்தவர்களையும் உங்களுக்கு தெரியாது...ஆனால் வெறும் வாயால் வடை சுட மட்டும் தெரியுமாக்கும் 
 
நீங்கள் வாயால் வடை சுடுகிறியள் என்று மற்றவர்களையும் சொல்றதோ..

கும்மான் வரேக்கே போய் சந்திக்கவும் இல்லை, பிறகு தூக்கு வாளி ஏன்?

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ரதி said:

இது பற்றி நிறையவே பல திரிகளில் எழுதியாயிற்று

எத்தனை தடவை எழுதினாலும் ஒன்றையே திருப்பித் திருப்பி எழுதுகிறீர்கள். உங்கள் அண்ணர் செய்த தவறை நிஞாயப்படுத்துகிறீர்கள், அதற்கு சன்மானமாக கிடைக்கும் பட்டம், பதவிக்கு பாராட்டும், வாழ்த்து மழையும் தெரிவிக்கிறீர்கள் அவ்வளவே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.