Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொரோனா உயிரிழப்புக்களின் போது சடலங்கள் வலுக்கட்டாயமாக தகனம் செய்யப்படும் நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதிக்கவும் - சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் வாதம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா உயிரிழப்புக்களின் போது சடலங்கள் வலுக்கட்டாயமாக தகனம் செய்யப்படும் நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதிக்கவும் - சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் வாதம்

(எம்.எப்.எம்.பஸீர்)

கொரோனா வைரஸ் குடும்பத்தின் கொவிட் 19 வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்கள் உள்ளிட்டோரின் சடலங்களை வலுக்கட்டாயமாக  தகனம் செய்யும் நடவடிக்கைக்கு இடைக்கால தடை உத்தரவை பிறப்புக்குமாறு ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் நேற்று திங்கட்கிழமை உயர் நீதிமன்றில் வாதிட்டார்.

கொரோனா  தொற்றால் உயிரிழக்கும் சடலங்களை தகனம் செய்யப்படுவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள 11 அடிப்படை உரிமை மீறல் மனுக்களை ( முஸ்லிம்கள், கத்தோலிக்கர்கள் சார்பில்)  உயர் நீதிமன்றம் நேற்று பரிசீலனைக்கு எடுத்த போதே,  ஹில்மி அஹமட் மற்றும் இருவரால் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், சிரேஷ்ட சட்டத்தரணி ருஷிதி ஹபீப் மற்றும் சட்டத்தரணி  ஏர்மிஸா ரீகல் ஆகியோருடன் ஆஜராகி வாதங்களை முன்வைக்கும் போது அவர் இந்த இடைக்கால தடைக்கான கோரிக்கையை முன்வைத்தார்.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான நீதியரசர்களான முர்து பெர்ணான்டோ மற்றும் ப்ரீத்தி பத்மன் சுரசேன ஆகியோர் முன்னிலையில் இந்த 11 அடிப்படை உரிமை மீறல் மனுக்களும் நேற்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

இதில் 5 மனுக்கள் சிரேஷ்ட சட்டத்தரணி கெளரி சங்கரி தவராசாவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. சட்டத்தரணி சபீனா மஹ்ரூப் ஊடாக ஒரு மனுவும்,  முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட தரப்புக்களாலும் இந்த 11 மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

குறிப்பாக சட்டத்தரணி சபீனா மஹ்ரூப்  ஊடாக தாக்கல் செய்யப்ப்ட்ட மனு தொடர்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் பிரசன்னமானார். இதனைவிட,  சிரேஷ்ட சட்டத்தரணி கெளரி சங்கரி தவராசா தாக்கல் செய்த 5 மனுக்களில், முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் உள்ளிட்டவர்களின் மனு தொடர்பில் சிரேஷ்ட சட்டத்தரணி  புலஸ்தி ஹேவாவசம் முன்னிலையானார். இதனைவிட  கொவிட் தொற்றுக்குள்ளாகி  மரணமடைந்த நிலையில் தகனம் செய்யப்ப்ட்ட இருவரின் மகன்மாரான  பயாஸ் யூனுஸ் மற்றும்  ரபாய்தீன் நெளபர் சார்பில்  தாக்கல் செய்யப்ப்ட்டிருந்த மனுக்கள் சார்பில்  சிரேஷ்ட சட்டத்தரணி புலஸ்தி ஹேவமான்ன மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா ஆகியோர் அஜராகினர்.

இதேவேளை  கத்தோலிக்கர்களான ஓசல லக்மால் சார்பில் தாக்கல்ச் செய்யப்ப்ட்ட மனுவில் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸும்,  சிரந்த ரன்மல் சார்பில் தாக்கல் செய்யப்ப்ட்ட மனு தொடர்பில் சிரேஷ்ட சட்டத்தரணி ஹஸ்திக தேவேந்ரவும் ஆஜராகினர். இம்மனுக்கள் அனைத்தும் சிரேஷ்ட சட்டத்தரணி கெளரி சங்கரி தவராசா ஊடாக தாக்கல் செய்யப்ப்ட்டிருந்தன.

இதனைவிட, ஜனாதிபதி சட்டத்தரணிகளான  பைசர் முஸ்தபா,  நிசாம் காரியப்பர் உள்ளிடோரும் சிரேஷ்ட சட்டத்தரணி விரான் கொரொயாவும் மன்றில் வெவ்வேறு மனுக்கள் தொடர்பில் பிரசன்னமாகினர். சுகாதார அமைச்சர் பவித்ராதேவி வன்னி ஆரச்சி,  சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், சட்ட மா அதிபர் ஆகியோர் அனைத்து மனுக்களிலும் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டிருந்த நிலையில், அவர்கள் சார்பில் சட்ட மா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரால் நெரின் புள்ளே ஆஜரானார்.

இந்நிலையில் முதலில் எஸ். சி. எப்.ஆர். 502 எனும் மனு  பரிசீலனைக்கு வந்தது. முற்பகல் 10.40 மணியளவில்  அம்மனு விசாரணைக்கு வந்தது. அம்மனு சார்பிலும் பிரிதொரு மனுசார்பிலும் ( முஸ்லிம், கத்தோலிக்க ஒருவர்) சிரேஷ்ட சட்டத்தரணி விரான் கொரயா வாதங்களை ஆரம்பித்தார். அவரது வாதங்கள் சுமார் இரு மணி நேரம் வரை நீடித்தது.

இதன்போது முஸ்லிம்களும், கத்தோலிக்கர்களும், உயிரிழந்த பின்னர் ஒரு நாள் மீள தாங்கள் எழுப்பப்டுவோம் எனும் நம்பிக்கையை கொண்டுள்ளதாக  சுட்டிக்காட்டிய அவர், தமது நம்பிக்கை பிரகாரம் செயற்படுவதற்கான உரிமை அரசியலமைப்பின் 10 ஆவது உறுப்புரை ஊடாகவும்  அதுசார்ந்த மதத்தை தடையின்றி பின்பற்றுவதற்கான உரிமை 14 ஆவது உறுப்புரை ஊடாகவும் குடிமகனுக்கு வழங்கப்பட்டுள்ளதாக  சுட்டிக்காட்டினார்.  

 அடிப்படை உரிமைகளை மட்டுப்படுத்துவதற்கான சந்தர்ப்பம் அரசியலமைப்பு ஊடாக குறிப்பிடப்பட்டிருந்தாலும், அவற்றை கட்டுப்படுத்த  அவசர கால நிலைமையின் போதே முடியும் எனவும், தனிமைப்படுத்தல் சட்டத்தின் ஊடாக அடிப்படை உரிமைகளை கட்டுப்படுத்த முடியாது எனவும் அவர் வாதிட்டார்.

 அத்துடன்  இது குறித்து வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அரிறிவித்தல் சட்ட விரோதமானது என தெரிவித்த அவர், உலக சுகாதார ஸ்தாபனத்தின்  வழிகாட்டலையும் விஞ்சிய செயற்பாடுகளின் பின்னனி என்ன என கேள்வி எழுப்பினார்.

 கொரோனா காரணமாக முதல் முஸ்லிம் நபர்  ஒருவர் கடந்த மார்ச் 30 ஆம் திகதி உயிரிழக்கும் போதும், உலக சுகாதார  ஸ்தாபனத்தின் ஆலோசனைகள், சுகாதார சேவைகள் பணிமனையின் இணையத்தில் இருந்த போதும்,  உடனடியாக இரவோடிரவாக அது மாற்றப்பட்டது எந்த அறிவியல் ஆய்வின் அடிப்படையிலானது என அவர் உயர் நீதிமன்றில் கேள்வி எழுப்பி அதன் நோக்கத்தை  நியாயமற்றது என விளக்கினார்.

 இதனையடுத்து ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன்  தனது வாதங்களை முன்வைத்தார். இதுவரை கொரோனாவால் பாதிக்கப்படும் நபர்களின் சடலங்களை எரிப்பதால் அந்த வைரஸ் பரவும் என எந்த ஆய்வுகள் ஊடாகவும் கண்டறியப்படவில்லை என ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.

இத்தாலி, அமெரிக்கா உள்ளிட்ட  அபிவிருத்தி அடைந்த நாடுகளில்  கூட கொவிட் தொற்றினால் உயிரிழந்த தமது உறவுகளை அடக்கம் செய்ய அனுமதியுள்ள நிலையில், அங்கு அதனூடாக வைரஸ் பரவியதாக எந்த  விடயமும் வெளிப்படுத்தப்படவில்லை என அவர் குறிப்பிட்டார்.

 இலங்கையின் தனிமைப்படுத்தல் மற்றும் தொற்று நோய் தடுப்பு சட்டத்தின் கீழும் ,  அடக்கம் செய்ய அனுமதியுள்ளதாக சுட்டிக்காட்டி வாதிட்ட ஜ்னாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், நாட்டில் கொவிட் தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியசாலைகளில் இருந்தும், தனிமைப்படுத்தல் நிலையங்கலில் இருந்தும் கழிவுகள் திறந்த சூழலுக்கே செல்வதாக சுட்டிக்காட்டினார்.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டலை புறக்கணித்து செயற்படுமளவுக்கு இலங்கையில் இந்த விடயத்தில் ஏதேனும் ஆய்வுகள் செய்யப்பட்டு அறிவு பூர்வமான உறுதிப்படுத்தல்கள் வெளிபப்டுத்தப்பட்டுள்ளனவா என கேள்வி எழுப்பிய   சுமந்திரன், அவ்வாறான ஆய்வுகள் இருப்பின் அதனை உலக சுகாதார ஸ்தாபனமே தனது வழிகாட்டலில் உள்ளீர்த்திருக்கும் என்றார்.

 இதன்போது இந்தியாவின்  மும்பை மற்றும் கல்கத்தா மேல் நிலை நீதிமன்றன்ங்களில், கொவிட் மரணங்களின் போது சடலங்களை எரிக்க வேண்டும் என தாக்கல் செய்யப்ப்ட்ட வழக்குகளில், அந் நீதிமன்றங்கள் வழங்கிய தீர்ப்பினையும் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் உயர் நீதிமன்றின் கவனத்துக்கு கொண்டுவந்தார்.

இலங்கையை உதாரணம் காட்டி, தாக்கல் செய்யப்பட்டிருந்த அம்ம்மனுக்களை,  உலக சுகாதார ஸ்தபனத்தின் வழி காட்டல்களை விட சிறந்த இலங்கையின் நடைமுறையை ஏற்க முடியாது என கூறி  அந் நீதிமன்றங்களின் தீர்ப்புகளில்  குறிப்பிடப்ப்ட்டுள்ளதை அவர் எடுத்துரைத்தார்.

இந்நிலையில்  மனித உரிமை என்பது, இறந்த ஒருவரின் சடலத்துக்கும் உள்ளது என அந்த தீர்ப்புக்களில் கூறப்பட்டுள்ள விடயத்தை சுட்டிக்காட்டிய அவர், கெளரவமான இறுதிக் கிரியைகள் ஒவ்வொருவரினதும் உரிமை என வாதிட்டார்.

அதன்படி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்ட 2170/8  ஆம் இலக்க வர்த்தமானி சட்ட விரோதமானது என வாதிட்ட சுமந்திரன், மனுக்களை விசாரணைக்கு ஏற்குமாறும், தற்காலிக நிவாரணமாக உடனடியாக சடலங்களை வலுக்கட்டாயமாக தகனம் செய்வதற்கு இடைக்கால தடை விதிக்குமாறும் கோரினார்.

 இதனையடுத்து ஜனாதிபதி சட்டத்தரணிகளான  பைசர் முஸ்தபா,  நிசாம் காரியப்பர் ஆகியோர் உணர்வுபூர்வமாக மன்றில் வாதங்களை முன்வைத்தனர். மன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸும்,  தகனம் மட்டும் செய்யப்படல் வேண்டும் என்பது அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகளை மீறும் செயல் எனவும் அதனால் அது தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி சட்ட வலுவற்றது எனவும் வாதிட்டார். ஏனைய சட்டத்தரணிகளும் அதனை ஒத்த வாதங்களையே மன்றில் கொண்டு வந்தனர்.

இந்நிலையில் மனுதாரர் தரப்பு வாதங்கள் நிறைவடைந்ததும், பிரதிவாதிகள் சார்பில் சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரால் நெரில் புள்ளே வாதங்களை ஆரம்பித்தார்.

சடலங்களை தகனம் செய்யும் தீர்மானம் எந்தவொரு மதம், இனத்தவரை வெறுப்பூட்டுவதற்காக அல்லது பழி வாங்கும் நோக்கில் எடுக்கப்பட்டதல்ல என குறிப்பிட்ட நெரின் புள்ளே, அது வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை என்றார்.  கொவிட் தொற்றினால் மரணமடைபவரை   அடக்கம் செய்யலாம் என வழிகாட்டல் உலக சுகாதார ஸ்தாபனத்தினால் வழங்க்கப்பட்டிருந்தாலும்,  1998 ஆம் ஆண்டு அந்த ஸ்தபனம் சடலங்கள் ஊடாகவும் வைரஸ் பரவலாம் என்ற  கருத்தினை வெளியிட்டுள்ளதாக அவர் வாதிட்டார். அவரது வாதங்கள் நிறைவு பெறாத நிலையில், மீள இன்றும் தொடரவுள்ளது. அதன்படி மனுக்கள் மீதான மேலதிக பரிசீலனைகள் இன்றைய தினம் முற்பகல் 10.30 வரை ஒத்தி வைக்கப்பட்டது. 
 

 

https://www.virakesari.lk/article/95673

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் ஐயாவுக்கு, இஸ்லாமிய சமூகம்சார் உளமார்ந்த நன்றிகள் பல கோடி...!

MA-Sumanthiran-720x450.jpg

 

சுமந்திரன் சேர்!

 

சகோதர சமூகத்தின்

உளக்காயங்களுக்கு

மருந்திட வந்திட்ட

மரியாதைமிகு

சுமந்திரன் ஐயாவுக்கு

இஸ்லாமிய சமூகம்சார்

உளமார்ந்த நன்றிகள்

பல கோடி!

 

எமது உறவுகள் அல்ல

எமது உணர்வுகளே

எரிக்கப்பட்டன சார்!

 

விஞ்ஞான ரீதியிலா

அஞ்ஞான ரீதியிலா

அநீதி என்பதை

மெய்யாக நீங்கள்

மன்றில் பேசி,

மன்றாடுவது 

எமக்காக அல்லளூ

சிறுபான்மையின்

நசுக்கப்படும் உரிமைக்காய்!

 

வெகுமதி சொல்லவியலா

வெருட்சியில் நாம்

அகமதில் உம்மை

அகிலமெலாம்

அமுதூட்டுவோம்!

 

மத வேறுபாடுகள்,

மனிதத்திற்கப்பால்

என்பதை உரத்த

போராட்டத்தில்

பார்த்தோம் ஐயா!

 

மதத்தால் வேறாயினும்,

இனிய மொழியால்,

கனிய தேசத்தால்

வேறில்லை

ஒன்று நாம்!

 

பல்லின சமூகமும்

சொல்லுது உங்களது

நீதியியலின்

ஆதி வரலாற்றை

சாதி பேதமில்லை என!

 

சமூகங்கள் இணைய

சமுத்திரப் பாலமாய்,

சட்டம் பேசி நீவிர்

சங்கமித்தீர்!

 

வாதாட்ட வீரன்ளூ

அஞ்சா நெஞ்சன்ளூ

முகஸ்துதி அல்லளூ

உளச்சுத்தியாய்

உரைக்கிறேன் ஐயா!!

 

வாழ்க பல்லாண்டு

வளமுடனும்

நலமுடனும்

நம் தேசத்திற்காய்

நீதியின் வாசத்திற்காய்

இறை துணையோடும்

எமது துஆவோடும்!

 

 

அஷ் ஷைக் நாகூர் ளரீஃப்

http://www.jaffnamuslim.com/2020/11/blog-post_736.html

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாஸா எரிப்பு வழக்கு தள்ளுபடி - ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் ஏமாற்றம் - ஒரேயொரு நீதியரசர் ஆதரவு, 2 பேர் எதிர்ப்பு

கொரோனா வைரஸ் குடும்பத்தின் கொவிட் 19 வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்கள் உள்ளிட்டோரின் சடலங்களை வலுக்கட்டாயமாக  தகனம் செய்வதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று 01.12.2020 தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

http://www.jaffnamuslim.com/2020/12/blog-post_29.html

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாஸாக்களை வெளிநாட்டில் நல்லடக்கம், செய்வது குறித்து பரிசீலனை - முஸ்லிம் பணக்காரர்களும் ஒத்துழைப்பு

இலங்கையில் கொரோனாவினால் மரணிக்கும், முஸ்லிம்களுடைய ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யவிடாமல் தகனம் செய்வது தொடரும் நிலையில், மாற்றுத் திட்டமொன்று முன்மொழியப்பட்டுள்ளது.

 

 

அதாவது கட்டார் அல்லது மாலைதீவு போன்ற முஸ்லிம் நாடுகளின் சம்மதத்துடன், அந்த நாடுகளுக்கு கொரோனாவினால் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எடுத்துச்சென்று, நல்லடக்கம் செய்வது குறித்தும் சில தரப்புக்கள் ஆராய்ந்துள்ளன.

 

இதற்கு ஐக்கிய நாடுகள் சபையின், ஆதரவை பெறுவது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

 

மேலும், முஸ்லிம் பணக்காரர்கள் இவ்வாறான ஒரு திட்டம் முன்னெடுக்கப்பட்டால், அதற்கு தம்மால் 100 மில்லியன் ரூபாய்களை ஒதுக்கித்தர முடியுமெனவும் வாக்குறுதி வழங்கியுள்ளனர்.

 

தற்போது இலங்கை - கட்டார் விமான சேவைகள் தினமும் நடந்துவரும் நிலையில், இத்திட்டத்தை சாதகமாக்கலாமெனவும் நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

 

அத்துடன் இதுபற்றிய இறுதி அறிக்கை, துறைசார் வைத்தியர்கள் எதிர்பார்க்கப்பட்டுள்ளதாகவும், அது விரைவில் கிடைக்குமென எதிர்பார்த்துள்ளதாகவும் முஸ்லிம் பிரதிநிதி ஒருவர் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு உறுதிப்படுத்தினார்.

 

சட்டத்துறை மற்றும் அரசியல்துறை வட்டாரங்களும் இத்தகவலை, ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் உறுதிப்படுத்தின.

 

இதுவரை இறுதி முடிவுகள் எதுவும் எடுகப்பட்டவில்லை என்றபோதிலும் இத்திட்டம் பரிசீலனையில் இருப்பதாகவும் அவர்கள் மேலும் Jaffna Muslim இணையத்திடம் கூறினர்.

http://www.jaffnamuslim.com/2020/11/blog-post_437.html

  • கருத்துக்கள உறவுகள்

இப்பொழுது சுமந்திரனை வாழ்த்தும் இதே முஸ்லீம் கூட்டம். ரிசான எனும் சிறுமி சவுதியில் கழுத்து வெட்டி கொல்லப்படும்போது, இதை பாரளுமன்றத்தில் விமர்சித்தார். அப்பொழுது முஸ்லீம்கள் மேசையில் தட்டி இவரை தூசித்தார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, colomban said:

இப்பொழுது சுமந்திரனை வாழ்த்தும் இதே முஸ்லீம் கூட்டம். ரிசான எனும் சிறுமி சவுதியில் கழுத்து வெட்டி கொல்லப்படும்போது, இதை பாரளுமன்றத்தில் விமர்சித்தார். அப்பொழுது முஸ்லீம்கள் மேசையில் தட்டி இவரை தூசித்தார்கள். 

அவர்கள் கழுத்து வெட்டுவதை வரவேற்பார்கள், கல்லால் எறிந்து கொன்றால் கை தட்டுவார்கள் ஏனெனில் அவர்களுடைய மதம் அப்படி செய்யும் படி சொல்லிவிட்டது.டென்மார்க்கில் கொரோனா பிடித்துள்ளது என்ற பயத்தினால் Mink மிருகங்களை  கொன்று அதன் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்துவிட்டு இப்போது சுகாதார கேடு என்பதால் புதைகுழிகளில் புதைக்கப்பட்டிருந்த மில்லியன் கணக்கான  ஜனாஸாக்களை தோண்டி எடுத்து எரிக்க டென்மார்க் திட்டமிடுகிறது.
இலங்கையில் கொரோனா காலத்திலாவது ஜனாஸாக்களை எரிப்பது எல்லோருக்கும்  பொதுவானதாக இருக்க வேண்டும்.

13 hours ago, விளங்க நினைப்பவன் said:

அவர்கள் கழுத்து வெட்டுவதை வரவேற்பார்கள், கல்லால் எறிந்து கொன்றால் கை தட்டுவார்கள் ஏனெனில் அவர்களுடைய மதம் அப்படி செய்யும் படி சொல்லிவிட்டது.டென்மார்க்கில் கொரோனா பிடித்துள்ளது என்ற பயத்தினால் Mink மிருகங்களை  கொன்று அதன் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்துவிட்டு இப்போது சுகாதார கேடு என்பதால் புதைகுழிகளில் புதைக்கப்பட்டிருந்த மில்லியன் கணக்கான  ஜனாஸாக்களை தோண்டி எடுத்து எரிக்க டென்மார்க் திட்டமிடுகிறது.
இலங்கையில் கொரோனா காலத்திலாவது ஜனாஸாக்களை எரிப்பது எல்லோருக்கும்  பொதுவானதாக இருக்க வேண்டும்.

நீங்கள் சொல்வது உண்மைதான். அவர்களுக்கு சார்பாக பேசும்போது வாழ்த்துவதும், உண்மையை கூறும்போது தூற்றுவதும் உண்மை. ஆனால் இந்த சமூகத்தில் இது அதிகமாகவே காணப்படுகின்றது. இவர்களது இணையத்தளத்தில் இப்படியான கருத்துக்களை நிறையவே பார்த்திருக்கிறேன். ஆனால் நாங்கள் பத்தி கருது எழுதினால் அது அங்கு வராது.

இருந்தாலும் ஒன்று. எல்லா நாடுகளிலும் அடக்கம் செய்ய அனுமதிக்கப்படுகின்றது. WHO வும் இதைத்தான் சொல்கிறது. எனவே உலகம் முழுவதும் சொல்லப்படும் நடை முறைமைகளை பின்பற்றும் அரசு இதட்கு மட்டும் தடை விதிப்பது எதோ ஒரு நோக்குடன்தான். அதாவது இனவாதமே ஒழிய வேறொன்றும் இல்லை.

இருந்தாலும் இவர்களுக்கு இந்த தண்டனை பொருத்தமானதுதான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.