Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்று முதல்முதலாக இந்திய அணிக்கு விளையாடும் தமிழக வீரர் நடராஜன்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, goshan_che said:

இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரெண்டு போட்டிகளிலும் விளையாடும் குழாமில் நட்டு இல்லை😞.

பும்ரா, சர்மா திரும்ப வருவதாலா?

அல்லது நட்டு 5 ஓவரில் ஒவ்வொரு முதல் பந்தினையும் நோபாலாக வீசியதை ஷேன் வான் spot fixing ஆக இருக்கும் என்ற சந்தேக தொனியில் டிவீட் போட்டிருந்தார், இந்த சந்தேகமா?

கிரிக்கெட் உல‌கில் சேன் வான் மாதிரி ஒரு அர‌வேக்காட்டை இதுவ‌ரை பார்த்த‌து இல்லை , 

புறாமை பிடிச்ச‌ ந‌ரி , 2003ம் ஆண்டு போதையின் உச்சிக்கு போன‌தால் உல‌க‌ கோப்பையில் இருந்து வெளி  ஏற்ற‌ ப‌ட்டார் , 

பெண்க‌ளுட‌ன் உட‌ல் உற‌வு செய்வ‌தில் கிரிக்கெட் உல‌கில் இவ‌ரை மிஞ்ச‌ ஆட்க‌ள் இல்லை , ஒழுக்க‌ம் என்றால் என்ன‌ என்று இவ‌ருக்கு அற‌வே தெரியாது , விளையாட்டு மைதான‌த்தில் அதிக‌ம் தூச‌ன‌ம் க‌தைச்ச‌து என்றால் அது சேன் வான் தான் ,

இவ‌ரின் ப‌ந்து க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் ந‌ல்லா சுழ‌ண்ட‌து அது தான் இவர் அவுஸ்ரேலியா அணியில் இட‌ம் பிடிக்க‌ முக்கிய‌ கார‌ன‌ம் , இவ‌ரின் ஒழுக்க‌த்தை பார்த்து ஒரு வ‌ருட‌த்துக்கு மேல் விளையாட‌ அவுஸ்ரேலியா கிரிக்கெட் வாரிய‌ம் த‌டை போட்ட‌து 

Edited by பையன்26

  • Replies 111
  • Views 9.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, பையன்26 said:

கிரிக்கெட் உல‌கில் சேன் வான் மாதிரி ஒரு அர‌வேக்காட்டை இதுவ‌ரை பார்த்த‌து இல்லை , 

புறாமை பிடிச்ச‌ ந‌ரி , 2003ம் ஆண்டு போதையின் உச்சிக்கு போன‌தால் உல‌க‌ கோப்பையில் இருந்து வெளி  ஏற்ற‌ ப‌ட்டார் , 

பெண்க‌ளுட‌ன் உட‌ல் உற‌வு செய்வ‌தில் கிரிக்கெட் உல‌கில் இவ‌ரை மிஞ்ச‌ ஆட்க‌ள் இல்லை , ஒழுக்க‌ம் என்றால் என்ன‌ என்று இவ‌ருக்கு அற‌வே தெரியாது , விளையாட்டு மைதான‌த்தில் அதிக‌ம் தூச‌ன‌ம் க‌தைச்ச‌து என்றால் அது சேன் வான் தான் ,

இவ‌ரின் ப‌ந்து க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் ந‌ல்லா சுழ‌ண்ட‌து அது தான் இவர் அவுஸ்ரேலியா அணியில் இட‌ம் பிடிக்க‌ முக்கிய‌ கார‌ன‌ம் , இவ‌ரின் ஒழுக்க‌த்தை பார்த்து ஒரு வ‌ருட‌த்துக்கு மேல் விளையாட‌ அவுஸ்ரேலியா கிரிக்கெட் வாரிய‌ம் த‌டை போட்ட‌து 

பொம்பிளை விசயத்த பார்த்தால் முக்காவாசி வீரர்கள் விளையாட முடியாது🤣.

ஆனால் வார்ன் recreational drugs பாவித்து ஒரு வருடம் தடை வாங்கியது உண்மைதான்.

ஆனாலு இதுவரை உலகில் வந்த அற்புதமான ஸ்பின் போலர் வார்ந்தான் (முரளி ஸ்பின்னர் அல்ல சக்கர்). 

அவர் எப்படி பட்டவராக இருந்தாலும், அவரின் கூற்றை அவரின் கடந்த காலத்தை வைத்து நிராகரிப்பது சரியாகபடவில்லை.

ஏனெறால் வார்ன் ஒரு போதும் கிரிகெட்டில் cheat பண்ணியதில்லை.

ஐந்து ஓவரில் முதல் பந்தை மட்டும் நோபாலாக எறிவது சந்தேகபட கூடிய விசயம்தான். 

இதை ஒரு பாகிஸ்தான் போலர் எறிந்திருந்தால் நாங்கள் எல்லாரும் ஷேன் வார்னை போலவே சிந்தித்திருப்போம்.

நட்டு என்பதால் - இருக்காது என எமது மனது சொல்கிறது.

நானும் நட்டு இப்படி செய்தார் என நம்பவில்லை.

ஆனால் ஷேன் வார்ன் இதில் சந்தேகப்பட்டதிலும் பெரிய தப்பு இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரெண்டு போட்டிகளிலும் விளையாடும் குழாமில் நட்டு இல்லை😞.

பும்ரா, சர்மா திரும்ப வருவதாலா?

அல்லது நட்டு 5 ஓவரில் ஒவ்வொரு முதல் பந்தினையும் நோபாலாக வீசியதை ஷேன் வான் spot fixing ஆக இருக்கும் என்ற சந்தேக தொனியில் டிவீட் போட்டிருந்தார், இந்த சந்தேகமா?

நான் நினைக்கிறேன் அவரை ஒரு நாள் மற்றும் டி 20 ஆகியவற்றில் பயன் படத்துவார்கள் என்று.

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, சுவைப்பிரியன் said:

நான் நினைக்கிறேன் அவரை ஒரு நாள் மற்றும் டி 20 ஆகியவற்றில் பயன் படத்துவார்கள் என்று.

ஓம், பையனும் சொன்னார் மேலே, டெஸ்டில் விளையாடினால் விரைவில் ஓய்வுபெற வேண்டி வரும்.

தவிரவும் சர்மா, பும்றா வந்தால் டெஸ்ட் டீமில் இடம் கஸ்டம்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

நடராஜன் தனது குழந்தையை பார்க்க ஓய்வெடுப்பதாக அறிகிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

நடராஜன் தனது குழந்தையை பார்க்க ஓய்வெடுப்பதாக அறிகிறேன். 

அப்படி என்றால் சந்தோசம்😀

  • கருத்துக்கள உறவுகள்

Natarajan ஐ தமிழில் வாழ்த்திய David Warner

 

 

  • கருத்துக்கள உறவுகள்

நடராஜன் இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் சேர்க்கபடாததற்கு காரணம் இதுதான் – விவரம் இதோ 

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று முடிந்தது. இந்த நீண்ட தொடரில் ஒரு நாள் தொடரை 2 க்கு 1 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணியும், டி20 தொடரை 2 க்கு 1 என்ற கணக்கில் இந்திய அணியும் கடைசியாக நடைபெற்ற நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2 க்கு 1 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தது. இந்திய அணி பெற்ற இந்த வெற்றிக்கு வாழ்த்துக்களும், பாராட்டுகளும் குவிந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து இந்திய அணி கலந்துகொள்ளும் அடுத்த தொடர் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. அதன்படி இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக மோதவுள்ளது. இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து அணி பிப்ரவரி 5ஆம் தேதி முதல் நான்கு டெஸ்ட் போட்டி, 5 டி20 போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. 

Nattu-4-1024x576.jpg - இந்த தொடரின் முதல் இரண்டு டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டிகளுக்கான இந்திய வீரர்களின் பட்டியலை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதில் ஹார்திக் பாண்டியா மற்றும் அக்ஷர் பட்டேல் ஆகியோர் இந்திய அணிக்காக அழைக்கப்பட்டுள்ளனர் .அது தவிர இஷாந்த் ஷர்மா மீண்டும் அணியில் இணைந்துள்ளார்.

IND-1-1-1024x576.jpg

இந்நிலையில் இந்த இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியில் நடராஜன் சேர்க்கபடாமல் போனதற்கு ரசிகர்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும் ஆஸ்திரேலிய தொடருக்கான அணியில் இடம்பெற்றிருந்த நடராஜன் இந்த தொடர் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். அதனால் நிச்சயம் இங்கிலாந்து தொடருக்கான அணியில் இடம் பிடிப்பார் என்று எதிர்பார்த்திருந்தனர். - 

nattu-2-1024x576.jpg

- இந்நிலையில் இங்கிலாந்து தொடருக்கான அணியில் அவர் இடம்பிடிக்காததற்கு காரணம் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐ.பி.எல் தொடரின் போது நடராஜனுக்கு பெண் குழந்தை பிறந்தது. அதன்காரணமாக அவரது குடும்பத்துடன் நேரத்தை செலவழிக்கவே அவருக்கு அணியில் இருந்து இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

https://crictamil.in/the-reason-behind-nattu-rejection-vs-eng/?fbclid=IwAR3xKQ_dmjeeFEEqUH7hJF6H0eSF6HpnXFePEHAkJURdi1fjAvYrMLGl1jI

  • கருத்துக்கள உறவுகள்

141730973_1127632084345183_7367408096842

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக வீரர் நடராஜன் ஒரு ஜாம்பவான் - வார்னர் புகழாரம்

தமிழக வீரர் நடராஜன் ஒரு ஜாம்பவான் - வார்னர் புகழாரம்

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிக்காக டேவிட் வார்னர் தலைமையில் விளையாடிய தமிழக வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜன் கடந்த ஐ.பி.எல். சீசனில் 16 விக்கெட்டுகள் வீழ்த்தி பிரமாதப்படுத்தினார். அது மட்டுமின்றி அந்த ஐ.பி.எல்.-ல் மொத்தம் 71 யார்க்கர் பந்துகளை வீசி எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடித்தார். அதன் தொடர்ச்சியாக ஆஸ்திரேலிய பயணம் மேற்கொண்ட அவர் ஒரு நாள், 20 ஓவர் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகம் ஆனதுடன் மொத்தம் 5 ஆட்டங்களில் விளையாடி 11 விக்கெட்டுகள் கைப்பற்றி முத்திரை பதித்தார். அவருக்கு ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் பாராட்டு தெரிவித்து ஒரு வீடியோவை நேற்று வெளியிட்டுள்ளார். அதில் முதலில் ‘வாழ்த்துகள் நட்டு’, என்று தமிழில் பேசியுள்ள வார்னர் அதன் பிறகு, ‘நடராஜன், நிச்சயம் நீங்கள் ஒரு ஜாம்பவான். நான் உங்களுடன் நிறைய நேரத்தை செலவிட்டு இருக்கிறேன். களத்திற்கு வெளியேயும், உள்ளேயும் நீங்கள் சிறப்பான மனிதர். நீங்கள் எங்கள் அணியில் (ஐதராபாத்) இருப்பதை மிகவும் விரும்புகிறேன்’ என்றார்.

மேலும் வார்னர் கூறுகையில், ‘அதிர்ஷ்டவசமாக அவருக்கு நான் கேப்டனாக இருந்துள்ளேன். நடராஜன் வியப்புக்குரிய வீரர். பணிவானவர். உண்மையிலேயே ஒரு ஜென்டில்மேன். 2020-ம் ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நம்ப முடியாத அளவுக்கு அவரது பந்து வீச்சு இருந்ததை பார்த்தோம். அதைத் தொடர்ந்து வலைபயிற்சி பவுலராக ஆஸ்திரேலியாவுக்கு பயணித்தார். தனக்கு முதல் குழந்தை பிறந்ததை கூட பார்க்க செல்லாமல் தியாகம் செய்தார். அதன் பிறகு மூன்று வடிவிலான சர்வதேச கிரிக்கெட்டிலும் கால்பதிக்கும் வாய்ப்பு கிடைத்தது. என்ன ஒரு மகத்தான சாதனை. அவரை நினைத்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். என்ன செய்ய வேண்டும், சூழ்நிலைக்கு தக்கபடி எப்படி பவுலிங் செய்ய வேண்டும் என்பது அவருக்கு தெரியும். கடந்த முறை இறுதிகட்ட பந்துவீச்சில் நேர்த்தியாக செயல்பட்டார். இந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டியிலும் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறார் என்பதை காண ஆவலுடன் காத்திருக்கிறேன்.’ என்றும் குறிப்பிட்டார்.


 
இதற்கிடையே சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியில் நடராஜனுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பை பார்த்து இந்திய முன்னாள் வீரர் ஷேவாக் சிலாகித்து போய் உள்ளார். மேளம் தாளம் முழங்க சாரட் வண்டியில் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஷேவாக், ‘இது தான் இந்தியா. இங்கு கிரிக்கெட் என்பது சாதாரண விளையாட்டல்ல. அதற்கும் மேலாக பார்க்கப்படுகிறது. நடராஜன் சொந்த ஊருக்கு திரும்பிய போது அவருக்கு பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. இது நம்ப முடியாத வகையில் இருக்கிறது’ என்று கூறியுள்ளார்.

 

https://www.maalaimalar.com/news/sports/2021/01/23130032/2288264/Tamil-newes-Warner-says-Tamil-Nadu-player-Natarajan.vpf

 

  • கருத்துக்கள உறவுகள்

நட்டுவை தவறான முறையில் பந்துவீசுகின்றார் என்று ஓராண்டு பந்து வீச விடவில்லை தமிழ்நாட்டு கிரிக்கெட் சங்கம், பந்து வீசும் பாணியை மாற்றி இப்போது சாதித்திருக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

 

 

நடராஜனின் வரவேற்பை கண்டு வாயடைத்து போன சேவாக் ; என்ன சொல்லியிருக்கார் பாருங்க !

 
நடராஜனின் வரவேற்பை கண்டு வாயடைத்து போன சேவாக் ; என்ன சொல்லியிருக்கார் பாருங்க ! 1

 

நடராஜனின் வரவேற்பை கண்டு வாயடைத்து போன சேவாக் ; என்ன சொல்லியிருக்கார் பாருங்க !

 

இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் டெஸ்ட் தொடரை 2 – 1 என கைப்பற்றி அசத்தியுள்ளது. இந்த ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் தொடரில் அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்டில் இந்திய அணி வெறும் 36 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. இதனால் இந்திய அணி ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரை 4-0  என இழந்து விடும் என்று முன்னாள் வீரர்கள் பலர் விமர்சனம் செய்தனர்.

ஆனால் மெல்போர்ன் மற்றும் பிரிஸ்பேன் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் பெற்ற அதிரடி வெற்றியால் இந்திய அணி டெஸ்ட் தொடரை 2-1  என கைப்பற்றி விமர்சனம் செய்த அனைவருக்கும் தக்க பதிலடி கொடுத்தது.

 
நடராஜனின் வரவேற்பை கண்டு வாயடைத்து போன சேவாக் ; என்ன சொல்லியிருக்கார் பாருங்க ! 2

இந்திய அணியின் இந்த வரலாற்று வெற்றியையும் சீனியர் வீரர்கள் இல்லாத போது அவர்களுக்கு பதிலாக சிறப்பாக விளையாடி இளம் வீரர்களையும் அனைவரும் பாராட்டி வருகின்றனர். 

இந்நிலையில்,  ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் முடித்து நாடு திரும்பிய இந்திய வீரர்களை இந்திய ரசிகர்கள் மேளதாளங்களுடன் வரவேற்றனர். இதில் இந்திய கேப்டன் ரஹானே மற்றும் தமிழக வீரர் தங்கராஜ் நடராஜன் ஆகியோரின் வரவேற்பு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 
நடராஜனின் வரவேற்பை கண்டு வாயடைத்து போன சேவாக் ; என்ன சொல்லியிருக்கார் பாருங்க ! 3

ஐபிஎல் தொடர் மூலம் இந்திய அணியில் இடம் பிடித்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மூன்று விதமான போட்டிகளிலும் அறிமுகமாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் நடராஜன்.

இவர் தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் 3 விக்கெட்டுகளையும், ஒருநாள் போட்டிகளில் 2 விக்கெட்டுகளையும், டி20 போட்டிகளில் 6 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறார். தற்போது ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு நடராஜன் தனது சொந்த ஊரான சின்னப்பம்பட்டிக்கு நேற்று வந்தடைந்தார். ஆஸ்திரேலிய தொடரில் கலக்கிய நடராஜனை ஊர் பொதுமக்கள் அனைவரும் இணைந்து கோலாகலமாக வரவேற்று இருக்கின்றனர்.

நடராஜனின் வரவேற்பை கண்டு வாயடைத்து போன சேவாக் ; என்ன சொல்லியிருக்கார் பாருங்க ! 4

நடராஜனின் வரவேற்பு குறித்து விரேந்திர சேவாக் ஒரு ட்வீட் செய்திருக்கிறார். இவரது இந்த ட்விட் பலரால் பகிரப்பட்டு வருகிறது. அதில் சேவாக் “இதுதான் இந்தியா. இங்கு கிரிக்கெட் என்பது ஒரு விளையாட்டு மட்டுமல்ல. அதற்கும் மேலானது. சேலம் மாவட்டத்திலுள்ள சின்னப்பம்பட்டி கிராமத்தில் நடராஜனின் வரவேற்பு பிரம்மாண்டமாக இருந்தது. நடராஜனின் கதை சுவராசியமாக இருக்கிறது” ட்வீட் செய்திருக்கிறார். 

https://tamil.sportzwiki.com/cricket/sehwag-who-was-speechless-at-natarajans-welcome-look-at-what-he-said/?fbclid=IwAR2Qf7YL_7qcO9tjxewAp17ykcZ_yvdGj68rV9A7ZfTPoS7hAkZCI5We7sM

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.