Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உயிர்த்தஞாயிறு தாக்குதல்கள் குறித்த விசாரணைகள் – எதிர்கட்சியின் கேள்வியால் சபையில் குழப்பநிலை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உயிர்த்தஞாயிறு தாக்குதல்கள் குறித்த விசாரணைகள் – எதிர்கட்சியின் கேள்வியால் சபையில் குழப்பநிலை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் குறித்து எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்வியை தொடர்ந்து நாடாளுமன்றத்தில் குழப்பநிலை உருவானது
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் இடம்பெறும் விதம் குறித்து கர்தினால் மல்கம் ரஞ்சித் அதிருப்தி வெளியிட்டுள்ளார் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிரோசன் பெரேரா சுட்டிக்காட்டினார்.

parliment-300x168.jpg
விசாரணைகள் மூடிமறைக்கப்படுவதற்கு அனுமதிக்கவேண்டாம் என கர்தினால் அரசாங்கத்தை கேட்டுக்கொண்டுள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டினார்
குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துவதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுகின்றனவா எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

Easter-Sunday-Attack-Bombings-1-300x150.
இதற்கு பதிலளித்த அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ அரசாங்கம்உ உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் மூலம் எந்த இலாபமும் அடையமுடியவில்லை என குறிப்பிட்டார்.
கோத்தபாய அரசாங்கம் ஜனநாயக கட்டமைப்பிற்குள் செயற்படுகின்றனது இதன் காரணமாக விசாரணைகளில் தலையிடாது என அவர் தெரிவித்தார்.
இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் சரத்வீரசேகர விசாரணைகளின் போது இரகசிய தகவல்கள் கிடைத்துள்ளன அவற்றை பகிரங்கப்படுத்த முடியாது என குறிப்பிட்டார்.

https://thinakkural.lk/article/95542

நீங்கள் பகிரங்கப்படுத்த வேண்டாம் வீரசேகரா. ஆனால் இதட்கு எப்போது முடிவு காணப்போகிறீர்கள்? இவர்கள் கிழக்கு மாகாண போலீசாரிடம் சரியாக விசாரணை செய்யவில்லை. சஹரனை கைது செய்ததை தடுத்தது ஹிஸ்புல்லா. வானதாவில்லு ஆயுதங்கள் பிடிபட்டு கைதை தடை செய்தது ரிசார்ட். இப்படியானவர்களை வெளியே விட்டுவைத்துக்கொண்டிருக்கிறார்கள். இருந்தாலும் சில பாராளுமன்ற உறுப்பினர்களும் சிறைக்கு போக வேண்டி இருக்குமென்று வீரசேகர கூறியிருகிக்கிறார். எனவே ரிஷர்டுக்கு ஆப்பு இருக்குதென்று எதிர்பார்க்கலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈஸ்டர் தாக்குதலுடன்  தொடர்புபட்ட 257 பேர் தடுப்புக்காவலில் – அமைச்சர் சரத் வீரசேகர

1-30-696x371.jpg
 27 Views

ஈஸ்டர் தாக்குதலுடன் நேரடியாக தொடர்புபட்ட 257 பேர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர  தெரிவித்துள்ளார்.

இவர்களுக்கான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியது சட்டமா அதிபரின் கைகளில் உள்ளது. மேலும் சட்டமா அதிபரை சந்தித்து அவர்கள் தொடர்பான வழக்கை துரிதப்படுத்த கோரிக்கை வைப்போம் என்றும் கூறியுள்ளார்.

ராஜபக்சே அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் கடந்துள்ள போதிலும் ஈஸ்டர் தாக்குதல் குறித்த விசாரணைகளில் எந்தவித முன்னேற்றமும் தென்படவில்லை எனவும் குற்றவாளிகளை கண்டறிய அரசாங்கம் என்ன நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது என எதிர்க் கட்சி உறுப்பினர்கள் சபையில் கேள்வி எழுப்பிய வேளையில் அதற்கு பதில் தெரிவிக்கும் விதத்தில் அமைச்சர் சரத் வீராசேகர இதனைக் கூறினார்.

குற்றப்புலனாய்வு பிரிவு, பயங்கரவாத தடுப்பு பிரிவினால் ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புபட்ட 171 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 86 பேர் தடுப்புக்காவலில் உள்ளனர். மொத்தமாக 257 பேர் இந்த சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளதாக அடையாளம் காணபட்டது. இவர்கள் குறித்த வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளது என்றார்.

https://www.ilakku.org/ஈஸ்டர்-தாக்குதலுடன்-தொட/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பொன்றின் கண்காணிப்பிலேயே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்றது- முன்னாள் கடற்படை தளபதி

வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பொன்றின் கண்காணிப்பின் கீழ் உயிர்த்த ஞாயிறுதாக்குதல் இடம்பெற்றது என தான் கருதுவதாக தெரிவித்துள்ள முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரட்ண ஜஹ்ரான் ஹாசிம் தற்கொலை குண்டுதாரிகளின் தலைவர் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ravindra-wijeya.jpg
சரியான தரப்பிற்கு புலனாய்வு செய்திகளை அனுப்பதவறியதன் காரணமாக அந்த தாக்குதலை தடுக்க முடியாமல் போய்விட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜஹ்ரான் ஹாசிமை கண்காணி;ப்பதற்கு 2004 முதல் இராணுவபுலனாய்வாளர்கள் நியமிக்கப்பட்டனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜஹ்ரானை கண்காணிப்பதற்காக நியமிக்கப்பட்ட இராணுவபுலனாய்வு அதிகாரி பின்னர் ஐந்து வருடங்களிற்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

easter-attack.00-300x164-1.jpg
முன்னைய அரசாங்கத்தில் புலனாய்வு அமைப்புகள் பலவீனப்படுத்தப்பட்டன அவர்களின் முதுகெலும்பு முறிக்கப்பட்டது,நான் புலனாய்வு பிரிவினை பாதுகாக்க முற்பட்டதால் நானும் விளக்கமறியலில் இருந்து பிணையில் விடுதலை செய்யப்பட்டவனே என முன்னாள் முப்படை பிரதானி தெரிவித்துள்ளார்.
மாவனெல்லயில் புத்தர் சிலைகள் தகர்க்கப்பட்டமை குறித்த விசாரணைகள், வவுணதீவில் பொலிஸாரின் கொலைகள் குறித்த விசாரணைகள் வானத்தவில்லில் வெடிமருந்து மீட்கப்பட்டமை போன்றன சிஐடியினர் சரியான பாதையை பின்பற்றாததன் காரணமாக பிழையாக வழிநடத்தப்பட்டன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக தாக்குதல்களை தடுக்க முடியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://thinakkural.lk/article/95766

2 hours ago, உடையார் said:

ஒரு பக்கத்தில் CID யினர் சரியான கோணத்தில் விசாரணை செய்யவில்லை. இன்னொரு பக்கத்தில் அரசியல்வாதிகள் முட்டுகடடை போதுதான்.

வவுணதீவு விவகாரத்தில் புலனாய்வு பிரிவினர் ஒரு கோணத்தில் மட்டுமே நோக்கினார். முஸ்லீம் பயங்கரவாதம் கிழக்கில்   இருந்த போதும் ஒரு கோணத்தில் மட்டுமே பார்த்தனர். இதை முஸ்லீம் பயங்கரவாதிகள் சரியாக பயன்படுத்திக்கொண்டனர். புலனாய்வு பிரிவினர் இதில் கோடடை விட்ட்னர்.

வானதாவில்லு, மாவெனெல்லா , காத்தான்குடி போன்ற இடங்களில் இடம்பெற்ற சம்பவங்களை சரியாக அடையாளப்படுத்தினாலும் முஸ்லீம் ஜிஹாத் அரசியல்வாதிகள் அதேட்க்கெதிராக நடவடிக்கை எடுப்பதை தடை செய்தனர். இது பொண்ணையார்கள் ஆட்சி செய்த காலத்தில் நடந்ததால் பொலிஸாரால் ஒன்றும் செய்யவும் முடியவில்லை.

மற்றபடி வெளி நாட்டு பயங்கரவாதிகளின் கரம் இருந்ததா என்பதை சரியாக சொல்ல முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
முன்னாள் சீஐடி பணிப்பாளர் ரவி செனவிரட்ன தம் சாட்சியத்தில், சஹரான் ஹிசாம் குழுவினர் "பயன்படுத்தப்பட்டனர்" என்றும், அவர்களுக்கு மேலே இன்னொரு குழுவினர் இருந்தனர் என்றும் கூறியுள்ளார்.
இதை கண்டுபிடிக்க முன் தான் ஓய்வு பெற்றுவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஆகவே அந்த இன்னொரு குழு யார் என்பதை, இப்போது ஏறக்குறைய முடிவுற்று விட்டதாக கூறப்படும் அரசாங்க விசாரணைகள் வெளிப்படுத்துமா?
இதைவிட கர்தினால் மெல்கம் அவர்களும் தனக்கு அரசின் விசாரணைகள் தொடர்பில் திருப்தி இல்லையென கூறுகிறார்.
Image may contain: 1 person, sitting
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பில் இருப்பவர்கள் குறித்து அரசுக்குத் தெரியும் – சரத் வீரசேகர

sarath-weerasekara-600.png
 47 Views

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பில் இருப்பவர் தொடர்பாக அரசுக்குத் தெரியும். அது தொடர்பாக விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றதென இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

நாட்டில் நடைபெற்ற ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக அரசால் முன்னெடுக்கப்படுகின்ற விசாரணை தொடர்பாக எதிர்க்கட்சியால் கடந்த (சனிக்கிழமை) நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறியுள்ளவை வருமாறு –

“ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய 257 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும், 86 பேருக்கு எதிராக நீதி மன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இவ்வாறு 8 இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு அவை தொடர்பான அறிக்கைகள் சட்டமா அதிபரின் ஊடாக நீதிமன்றத்தில் கையளிக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில் இன்று திங்கட்கிழமை, இந்த விடயம் தொடர்பாக நீதிபதியை உத்தியோகபூர்வமாகச் சந்தித்து, வழக்கு விசாரணைகளை மேலும் துரிதப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கவுள்ளேன். அரசாங்கம் என்ற ரீதியில் இந்த விடயத்தில் விசாரணை ஆணைக்குழு ஒன்றை அமைத்து உரிய விசாரணைகளை முன்னெடுத்துள்ளோம்.

ஆகவே, இந்த விடயத்தில் சிறந்த தீர்மானத்தை விரைவில் எடுப்போம். கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் பாதுகாப்புத் துறை சிறந்த முறையில் இல்லாதமையாலேயே இந்தத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றது. மேலும், ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பில் இருப்பவர்கள் தொடர்பாக அரசுக்குத் தெரியும். ஆனால் தற்போது அந்த இரகசியத்தை வெளியிடமுடியாது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://www.ilakku.org/ஐ-எஸ்-அமைப்புடன்-தொடர்பி/

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, உடையார் said:

முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரட்ண ஜஹ்ரான் ஹாசிம் தற்கொலை குண்டுதாரிகளின் தலைவர்

என்ன ஐயா இது வாசிப்பவர்கள் குழம்பிபோய்விடுவார்கள்

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, உடையார் said:

ஜஹ்ரான் ஹாசிமை கண்காணி;ப்பதற்கு 2004 முதல் இராணுவபுலனாய்வாளர்கள் நியமிக்கப்பட்டனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜஹ்ரானை கண்காணிப்பதற்காக நியமிக்கப்பட்ட இராணுவபுலனாய்வு அதிகாரி பின்னர் ஐந்து வருடங்களிற்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வளர்த்து விட்ட டாக் கடிக்கும் என்று கொஞ்சமும்  எதிர்ப்பார்க்கவில்லை 
கடி கொஞ்சம் பலமாக விழுந்துவிட்டதால் , யார் வளர்த்தது என்று சொல்ல பம்முறினம் 
எல்லோரும் ஒண்டுக்குள்ள ஒண்டுதான் , இனி அவனவன் தன்னை காப்பாற்றிக்கொள்ள மற்றவனை பலி கொடுப்பான், சிங்களவர்கள் தாங்கள்  தப்பிக்கொள்ள முஸ்லீம் எம்பிக்களை பலிக்கடாவாக்குவார்கள் 
நம்பித்தொலைத்த குற்றத்திற்காக பாவம் இரத்த ஆறு புகழ் புல்லா முதல் றிசாட் வரை கம்பிதான்
போதாக்குறைக்கு சூடு தணியாமல் இருக்க மல்க்கி அவரோட பங்கிற்கு மஹிந்த மாபியா எழுதி தந்ததை வாசித்திருக்கிறார்,
ஈஸ்டர் தாக்குதலுக்கு பிறகு மனிதப்புனிதராக முசிலீம்களால் சகட்டு மேனிக்கு புகழ்மழையில் நனைந்த 
மல்க்கியின் உண்மை முகத்தை இப்போது பார்த்து முழுசிப்போய் இருக்கிறார்கள் முசிலிம்கள்    

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.