Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முஸ்லிம்களின் உடல்கள் எரிக்கப்படுவதை கண்டித்து வவுனியாவில் போராட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா தொற்றுக்குள்ளாகி மரணிக்கும் முஸ்லிம்களின் உடல்கள் எரிக்கப்படுகின்றமைக்கு எதிராக வவுனியாவை சேர்ந்த மௌலவி ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.

வவுனியா பெரிய பள்ளிவாசலுக்கு முன்பாக இன்று (11.12.2020) காலை 10.30 மணிக்கு குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

spacer.png

போராட்டத்தில் ஈடுபட்ட மௌலவி கருத்து தெரிவித்த போது,

கொரோனா ஒரு கொடிய உயிர் கொல்லி நோயல்ல, பன்றி இறைச்சியில் உள்ள வைரசைவிட கொரோனாவில் கொடிய வைரஸ்கள் கிடையாது காய்ச்சலும், தலையிடியும், சளியும்  எப்படி ஒரு மனிதனை கொல்லும். கொரோனாவுக்கு தீர்வு உடல்களை எரிப்பதா. ஏன் இந்த அநியாயத்தை முஸ்லிம்களுக்கு செய்கிறீர்கள்.

இன்றுவரை இறப்பவர் கொரானாவினால் தான் இறக்கின்றார் என்று எந்த ஒரு வைத்தியரும் நிரூபிக்கவில்லை. யார் இந்த அரசுக்கு பிடிக்காதோ அவர்களிற்கு கொரோனா என சொல்கிறார்கள்.

எனவே  பரிசோதனைக்கு செல்பவர்கள் உங்களிற்கான பரிசோதனை அறிக்கையை வைத்தியர்களிடம் கேளுங்கள். இலங்கையில் இறந்த ஒருவருக்கும் கொரோனா இல்லை. வைத்திய துறையிலேயே இருக்கும் அறிவார்ந்த வைத்தியர்கள் இந்த அதிகாரிகளிற்கு பயந்து பின்னால் நிற்கின்றார்கள். சாணக்கியன் நேர்மையாக கதைத்தார் இறைவன் அவருக்கு அருள் புரிவார். கூலிப்படைகள் அவருக்கு எதிராக கதைத்தார்கள். அரசியல் வாதிகள் கைப்பொம்மைகளாக இருக்கிறார்கள். ஆளும் கட்சியிலும்  நேர்மையானவர்கள் இருக்கின்றார்கள் மிகவிரைவில் அவர்கள் வெளியிலே வருவார்கள். 

முள்ளிவாய்க்காலில் உரிமை கேட்டவர்களை மெனிக்பாமில் அடைத்தீர்கள் இது நியாயமா, தமிழனும், முஸ்லீமும் கதைத்தால் தீவிரவாதி. ஆட்சி வெறி, அதிகார வெறி அரசியல் துஷ்பிரயோகம் ஆகியவையே உங்களை இப்படி செய்விக்கின்றது. 

20 மாத குழந்தையை எரித்தீர்கள்.  நீங்கள் கொலை செய்து பழக்கப்பட்டவர்கள் முள்ளிவாய்க்காலில் பச்சை குழந்தைகளை கொன்றீர்கள். உங்களிடம் இரக்கம் இருக்குமா. தமிழ்மக்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தினீர்கள் மூன்று இனத்தையும் அழித்த கருணா உங்களுக்கு நண்பன்  உரிமைக்காக போராடிய பிரபாகரன் பயங்கரவாதி என்றீர்கள் என தெரிவித்தார்.

முஸ்லிம்களின் உடல்கள் எரிக்கப்படுவதை கண்டித்து வவுனியாவில் போராட்டம் | Virakesari.lk

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம்களின் உடல்கள் எரிக்கப்படுவதைக் கண்டித்து புத்தளத்தில் ஆர்ப்பாட்டம்

இலங்கையில் கொரோனாவால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை எரிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து புத்தளத்தில் நேற்று (10.12.2020) மாலை 7  மணிக்கு தீப்பந்தம் ஏற்றி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.

சர்வதேச மனித உரிமைகள் தினம் நேற்று வியாழக்கிழமை அனுஷ்டிக்கப்பட்ட நிலையிலேயே மேற்படி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

spacer.png

வடமேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸ், யாழ். மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் எம்.ஐ.இலியாஸ், புத்தளம் நகரசபை முன்னாள் உறுப்பினர் முஹம்மது சலீம்கான் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

சுகாதார நடைமுறைகளை முழுமையாகக் கடைப்பிடித்து, மேற்படி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது. 

புத்தளம் பெரிய பள்ளிவாசலுக்கு முன்பாக ஆரம்பித்த குறித்த ஆர்ப்பாட்டப்பேரணி, புத்தளம் நகர் ஊடாக தபால் நிலைய சுற்றுவட்டம் வரை சென்றது. இந்தப் பேரணியில் கலந்துகொண்டவர்கள் தீப்பந்தங்களையும், உடல் வடிவ பொம்மை ஒன்றையும் கையில் ஏந்திய நிலையில் பேரணியாக சென்றனர்.

spacer.png

இதன்போது கொரோனாவால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை வலுகட்டாயமாக எரிப்பது மனித உரிமை மீறல் என ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர். 

அத்துடன், சர்வதேச ரீதியில் கொரோனாவால் உயிரிழக்கும் சடலங்களை நல்லடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கும் போது, இலங்கையில் மாத்திரம் அனுமதி மறுக்கப்படுவது பெரும் அநியாயமாகும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கோஷம் எழுப்பினர்.

முஸ்லிம்களின் உடல்கள் எரிக்கப்படுவதைக் கண்டித்து புத்தளத்தில் ஆர்ப்பாட்டம் | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பிழம்பு said:

இதன்போது கொரோனாவால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை வலுகட்டாயமாக எரிப்பது மனித உரிமை மீறல் என ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர். 

இது மனித உரிமை மீறல் அல்ல. முசுலீம் உரிமை மீறல். 

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லீம்களின்..   இந்தப் போராட்டம், முதலில்,  
காத்தான்குடியில் தான் ஆரம்பித்திருக்க வேண்டும்.
அதன் பின்... கொழும்பில், கண்டியில்,  அனுராதபுரத்தில், மாத்தறையில்,  செய்திருக்க வேண்டும். 

அதை... விடுத்து, தமிழர் பெரும் பான்மையாக வாழும் பகுதிகளில்,
இப்படி செய்வதை... மிக வன்மையாக கண்டிக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

குழந்தை... பிறந்த இடமும், தகனம் செய்யப்  பட்ட  இடமும்  கொழும்பு. 
பிறகென்ன  இழவுக்கு... தமிழ்ப் பகுதிகளில் போராட்டம் நடத்துகிறார்கள்.

தமிழர்களாகிய..  நாங்கள்,  அரை நூற்றாண்டுகளாக... போராடிக் கொண்டிருக்கும் போது...
முஸ்லீம்களாகிய  நீங்கள்,எம்மை எதிர்த்து... பல வெள்ளிக் கிழமைகளில்... 
ஜும்மா தொழுகையின் பின்..கொழும்பில், கண்டன  போராட்டம்  நடத்திய உங்களால், 
இது,  ஏன் முடியாமல் போனது... 

சிங்களவன்... ஓட்ட, நறுக்கி விடுவான்  என்ற பயத்தால்....
தமிழர் பகுதியில்...  வந்து, குளறுபடி பண்ணுகிறீர்களா?
உங்களுக்கு.... வெட்கமாக  இல்லையா?

  • கருத்துக்கள உறவுகள்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 2 பேர், நபர்கள் நின்றுக்கொண்டிருக்கின்றனர் மற்றும் வெளிப்புறம், , ’Government of Sri Lanka! We Need Justice For Baby Shaayik I| UHAME CILCOL No scientific basis for Covid cremations only' Policy Sri Lankan government! Do notfool the people!’ எனச்சொல்லும் உரை

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள், நபர்கள் நின்றுக்கொண்டிருக்கின்றனர் மற்றும் வெளிப்புறம்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள், நபர்கள் நின்றுக்கொண்டிருக்கின்றனர் மற்றும் வெளிப்புறம்

இலங்கையில் முஸ்லிம்களின் ஜனாசாக்களை எரிப்பதற்கு எதிராக இங்கிலாந்திலுள்ள இலங்கை முஸ்லிம்களால் ஆர்ப்பாட்டம்!

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, தமிழ் சிறி said:

குழந்தை... பிறந்த இடமும், தகனம் செய்யப்  பட்ட  இடமும்  கொழும்பு. 
பிறகென்ன  இழவுக்கு... தமிழ்ப் பகுதிகளில் போராட்டம் நடத்துகிறார்கள்.

தமிழர்களாகிய..  நாங்கள்,  அரை நூற்றாண்டுகளாக... போராடிக் கொண்டிருக்கும் போது...
முஸ்லீம்களாகிய  நீங்கள்,எம்மை எதிர்த்து... பல வெள்ளிக் கிழமைகளில்... 
ஜும்மா தொழுகையின் பின்..கொழும்பில், கண்டன  போராட்டம்  நடத்திய உங்களால், 
இது,  ஏன் முடியாமல் போனது... 

சிங்களவன்... ஓட்ட, நறுக்கி விடுவான்  என்ற பயத்தால்....
தமிழர் பகுதியில்...  வந்து, குளறுபடி பண்ணுகிறீர்களா?
உங்களுக்கு.... வெட்கமாக  இல்லையா?

புலி இருக்குமட்டும் இவர்கள் சைனா லங்காவின் செல்லப்பிள்ளைகள் இவர்கள் கேட்டது எல்லாம் கொடுத்து இன்ப மயக்கத்தில் வைத்திருந்தார்கள் புலிகளும் தெளிவாகவே இஸ்லாமியத்-தமிழரும்-தமழீழ-விடுதலைலப்-போராட்டமும். எனும் புத்தகத்தில் தெரிவித்து உள்ளார்கள் புலிகள் போராடாத பட்சத்தில் என்ன நடக்கும் இஸ்லாமிய தமிழர்களுக்கு என்று .

இன்று புலி பத்து வருடங்களுக்கு மேல் இல்லை எமக்கு கிடைத்த அதே இனவெறி பேச்சுக்கள் கலவரங்கள் உங்களின் சமய அனுட்டானம் எல்லாம் மறுக்கப்படுது 2009களில் நாங்கள் கிடந்து  அழுத லண்டன்  தெருக்களில் சிங்களம் உங்களையும் கொண்டுவந்து விட்டுள்ளது .

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லீமகளின் உடல்கள் தகனம் செய்யப்படுவது அரசாங்கத்தின் அனுசரணையுடன் முஸ்லீம்களிற்கு எதிரான உணர்வுகள் உருவாக்கப்படுவதற்கான சிறந்த உதாரணம்- பிரிட்டன் அமைப்பு

 

இலங்கையில் கொரோனா வைரசினால் உயிரிழக்கும் அனைவரினதும் உடல்களை தகனம் செய்யவேண்டும் என்ற செய்தி கரிசனை அளிக்கின்றது என பிரிட்டனின் முஸ்லீம் பேரவை தெரிவித்துள்ளது.
இந்த கொள்கை இலங்கையின் முஸ்லீம்களின் உரிமைகள் மற்றும் மத சுதந்திரத்திற்கு முரணானது என்பதுடன் இந்த விவகாரம் தொடர்பில் காணப்படும் விஞ்ஞானரீதியான முடிவுகளிற்கும் முரணானது எனவும் பிரித்தானியாவின் முஸ்லீம் பேரவை தெரிவித்துள்ளது.

srilanka-corona-dead.jpg
உடல்களை வேகமாகவும் பாதுகாப்பாகவும் ஷரியா சட்டத்தின் அடிப்படையிலும் புதைப்பதற்காக உலகம் முழுவதிலும் உள்ள முஸ்லீம் சமூகத்தினர் வலுவான நடைமுறைகளை உருவாக்கி நடைமுறைப்படுத்தியுள்ளனர் என பிரிட்டன் அமைப்பு தெரிவித்துள்ளது.
கொவிட் 19 காரணமாக உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதால் சுகாதார ஆபத்துக்கள் எதுவுமில்லை என்பதை உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
தொற்றுநோய் காரணமாக உயிரிழந்தவர்களை தகனம் செய்யவேண்டும் என்பது பொதுவான கட்டுக்கதை என தெரிவித்துள்ள பிரிட்டன் அமைப்பு ஆனால் இது உண்மையில்லை தகனம் என்பது கலாச்சார தெரிவுகள் கிடைக்கின்ற வளங்கள் எனவும் தெரிவித்துள்ளது.

EpCYokIW4AAvi3c-300x251.jpg
கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்யவேண்டும் என்ற கொள்கைக்கு காரணங்களுடன் கூடிய நியாயப்படுத்தல் எதுவுமில்லாததன் காரணமாக உடல்களை தகனம் செய்யவேண்டும் என இலங்கை அரசாங்கம் வற்புறுத்துவதுஅரசாங்கத்தின் அனுசரணையுடன் இஸ்லாமிய மதம் குறித்து அச்சம்உருவாக்கப்படுவதற்கான சிறந்த உதாரணம் எனவும் பிரித்தானிய அமைப்பு தெரிவித்துள்ளது.
இலங்கை அரசாங்கத்தை கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை வலுக்கட்டாயமாக தகனம் செய்யும் நிலைப்பாட்டை கைவிடுமாறு நாங்கள் இலங்கை அரசாங்கத்தை நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம் என என பிரிட்டனின் முஸ்லீம் பேரவை தெரிவித்துள்ளது.

 

https://thinakkural.lk/article/97532

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் குழந்தைகளை கொல்ல பாகிஸ்தானிடம் மல்ரி பரல் உட்பட பல மிகமோசமான போர்தளபாடங்களை பெற்றுக் கொடுக்க.. சொறீலங்கா முஸ்லிம் சமூகம்.. குறிப்பாக சொறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீவிரமாக செயற்பட்டமை கண்முன்னால் வந்து போகிறது. குறிப்பா போர் உச்சம் பெற்றிருந்த வேளையில் ரவ் கக்கீம் அடிக்கடி பாகிஸ்தான் போய் வந்தார்.

இப்ப அந்தப் பாகிஸ்தான் கோத்தா அரசின் இச்செயலை கண்டிக்க வக்கில்லாமல் இருக்கிறது. மனித உரிமைப் பேரவையில் சொறீலங்காவின் போர்க்குற்றங்களை எல்லாம் நிராகரித்த பாகிஸ்தானிடம்.. சொறீலங்கா முஸ்லிம்கள் இப்ப என்ன கோரிக்கை விடுப்பார்கள்..???!

மருத்துவ ரீதியான முடிவுகளுக்கு மத இன பேதமின்றி கட்டுப்படுதல் அவசியம். ஆனாலும்.. அப்பாவி தமிழர்களின் சாவுக்கு காரணமானவர்களை.. துன்பம் பலவழிகளில் சூழவே செய்யும். தவிர்க்க முடியாது.

முள்ளிவாய்க்கால்  மானுடப் பெருந்துயரை.. சிங்களவர்களோடு சேர்ந்து..  கிரி பத் சாப்பிட்டு கொண்டாடியதும் இதே சமூகமே ஆகும். 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில 20 க்கு கைதூக்கின ஆறுபேர் ..இப்ப மகிந்தவின்ன்ரை கடைசி மோனைக் கொஞ்சிப்போட்டு இப்ப பசிலட்டை பண்டி இறாச்சியோடை போகினம்...இவைக்கு நோய் பெரிதில்லை....மதம் ..மதம் சார்ந்த அரசியல் ...அதாவது தமிழனை அழித்து ....தாம் முன்னுக்கு வருவதுதான்...

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.