Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்து பாரம்பரிய பலகாரமான வாய்ப்பன் முறையான செய்முறை விளக்கங்களுடன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, குமாரசாமி said:

யுத்தம் இல்லாத காலங்களிலும் பல விவசாய குடும்பங்களில் காலை உணவு அவித்த மரவள்ளிக்கிழங்காக இருக்கும்.. இல்லையேல் துவையலாகவும் இருக்கும். அவித்த மரவள்ளிக்கிழங்கை உறைப்பான தேங்காய் சம்பலுடன் சாப்பிட இன்னும் நல்லாய் இருக்கும்.:wink:

இரவில் மரவள்ளிக்கிழங்கு பால் அவியல்.சொல்லி வேலையில்லை ராசன்.👌🏽

இதெல்லாம் உந்த மேட்டுக்குடியளுக்கு எங்கை தெரியப்போகுது?வெள்ளைக்காரன் சொன்னால் முள்ளுக்கரண்டியாலை குத்தி ரேஸ்ற் பண்ணுவினம்.🐇

அண்ணை இலங்கைக்கு மரவெள்ளியை அறிமுகபடுத்தினது முள்ளுகரண்டி பாவிக்கும் டச்சு மேட்டு குடிகள்தானாம். 

  • Replies 115
  • Views 12.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நேற்று சும்மா இருக்க இயலாமல் நாடாங்காய் பற்றி தேடிய போது இது தான் முதலில் வந்தது..FSbottlegourd - மகுடி - தமிழ் விக்கிப்பீடியா (wikipedia.org). திட்டாமல் பார்த்து மகிழுங்கள்.

  • தொடங்கியவர்
8 hours ago, பெருமாள் said:

எங்கடை  ஆட்களுக்கு  பார்வை அப்படி குஜராத்திகளுக்கு  மோகோ  என்று பெயர் வைத்து மரவள்ளிக்கிழங்கை விதம் விதமாய் செய்கிறார்கள் நீங்களும் விரும்பினால் முயற்சி பண்ணி பாருங்க .https://www.jcookingodyssey.com/2020/07/masala-mogo-chips.html

மசாலா மோகோ சில்லுகள்

Chili Garlic Mogo Chips

Chili Garlic Mogo Chips

Chilli-Garlic & Lime Mogo Chips Sanjana Feasts

Chilli-Garlic & Lime Mogo

https://www.sanjanafeasts.co.uk/blog/2020/07/chilli-garlic-lime-mogo/

தகவலிற்கு மிகவும் நன்றி. செய்து பார்க்கிறேன்

1 hour ago, யாயினி said:

நேற்று சும்மா இருக்க இயலாமல் நாடாங்காய் பற்றி தேடிய போது இது தான் முதலில் வந்தது..FSbottlegourd - மகுடி - தமிழ் விக்கிப்பீடியா (wikipedia.org). திட்டாமல் பார்த்து மகிழுங்கள்.

நான் நினைச்சன் யாயினி recipe ஐ கண்டு பிடிச்சிட்டா என்று

9 hours ago, goshan_che said:

https://www.thespruceeats.com/how-to-prepare-bottle-gourd-slaouia-2395014
 
இது தான் பொருள். ஆனால் செய்வது எப்படி என்று தெரியாது 🤓. முன்னமே சொல்லி உள்ளேன் ரெசிப்பி எல்லாம் கேக்க கூடாது🤣

மாங்காய் சொதியில் மாங்காய்கு பதில் இதை போட்டு செய்து பாருங்கோ.

நீளமாகவும் இருக்கும். சிலது போத்தல் போல குண்டாகவும் இருக்கும்.

ஓம். ஆனால் எனக்கு கீரிமீனை நல்லா முறுக பொரித்து சாப்பிடவே பிடிக்கும்.

இந்த காய் தெரியும். நன்றி கோசன்

On 16/12/2020 at 10:59, தனிக்காட்டு ராஜா said:

வெங்காய இலையை சிறிதாக நறுக்கி. குழம்பை நாம் மற்ற கறிகளுக்கு கூட்டுவது போல எல்லா பலசரக்கு களும் போட்டு சமைத்து எடுக்க வேண்டியதுதான் ஆனால் கறி இறுக்கமக இருக்க வேண்டும் அதற்கேற்றால் போல் தேங். பால் ஊற்ற வேண்டும் . இந்த க்கறிக்கும் கூனித்தூளுக்கும் கிழங்கு செமையாக இருக்கும் ஆனால் தற்போது கூனி கிடைப்பது குறைவு 

நன்றாக பனி வந்துள்ளது இனி கூனி கிடைக்கும் என நினைக்கிறன் 

இப்ப பெண்களை விட ஆண்களிற்குத்தான் நிறைய சமையல் முறைகள் தெரிந்திருக்கு போல. 

  • கருத்துக்கள உறவுகள்

maxresdefault.jpg இங்கு சமோசா , பொப்கார்ன் , உருளை கிழங்கு சிப்ஸ் கிடைக்கும் ..

Screenshot-2020-12-18-13-28-22-729-org-m

ஈழத்தில் தாங்கள் வாழ்ந்த காலபகுதிகளில் தியேட்டர் இடை வேளையில் அந்த 10 நிமிட கெப்பில்  என்ன விற்பார்கள் ..? இப்படியான பலகாரங்களா.? ரெல் மீ ..!

  • கருத்துக்கள உறவுகள்

போளி யாழ்ப்பாணத்திலும் பிரபலமாக இருந்தது.....மாலயன் கபே அதுக்கு பிரபல்யம். மற்றும் தாமோதர விலாஸ், லக்சுமி விலாஸ், பரிசித்து விலாஸ் போன்ற எல்லா இடங்களிலும் கிடைக்கும்......!

முன்பு போண்டா என்றால் உருளைக்கிழங்குதான் உள்ளுடன் ஆக இருக்கும். பின்பு ஸ்ரீமாவின் அரசாங்கத்தில் என். எம் பெரேரா நிதி அமைச்சராய் இருந்தபோது உள்ளூர் உற்பத்தியை பெருக்குவதற்கு பல பொருட்களின் இறக்குமதியை தடை செய்து விட்டார்கள். அதனால் உருளைக்கிழங்கின் இடத்தை மரவள்ளிக்கிழங்கு பிடித்து விட்டது. சும்மா சொல்ல கூடாது, அக்காலத்தில்தான் சிரமபட்ட பல  விவசாயிகள் நிறைய பயிர் செய்து பெரிய வசதியானவர்களாக வந்தார்கள்.மிளகாய் செய்கை நாடு முழுதும் செய்யப்படட்து. மகாவலி திட்டத்தில் புது கிராமங்கள் முளைத்து மிளகாய் செய்தார்கள். யாழிலும் புங்குடுதீவு வேலணை  உட்பட  நிறைய செய்து புதிய லொறிகள் எல்லாம் (isuzu, austin, morris, leyland) வாங்கினார்கள்.....!

regal தியேட்டரில் இந்தப் பலகாரங்கள் எதுவும்  இல்லை தோழர். அங்கு ஆங்கிலப் படங்கள் மட்டும்தான் ஓடும். அதுவும் ஒரு படம் மூன்று நாட்கள் மட்டும்தான் ஓடும். ஜேம்ஸ் பொண்ட் , க்ளிண்ட் ஈஸ்வுட், சார்ள்ஸ் பிரவுன்சன் போன்றவர்களின் படங்கள் மட்டும் ஐந்து ஆறு நாட்கள் ஓடும். அடல்ஸ் ஒன்லி படங்களும் அதிகம்.ஒரு மாதத்துக்கு ஓடும் படங்களின் அட்டவனையை 30 ம் திகதியே தந்து விடுவார்கள். காதலியுடன் சென்று பார்ப்பதற்கு பொக்ஸ் வசதியும் அங்கு இருந்தது.  விதிவிலக்காக எப்போதாவது தமிழ் படங்கள் நாலைந்து நாட்கள் ஓடும்..... அங்கு இடை வேளைகளில் பரிமாறப் படுவது கொக்கோ கோலா வித் ஸ்ரோ,  சீஸ் பிஸ்கட் போன்ற மேல்தட்டு ஆயிட்டங்கள்......!  🤠

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

maxresdefault.jpg இங்கு சமோசா , பொப்கார்ன் , உருளை கிழங்கு சிப்ஸ் கிடைக்கும் ..

Screenshot-2020-12-18-13-28-22-729-org-m

ஈழத்தில் தாங்கள் வாழ்ந்த காலபகுதிகளில் தியேட்டர் இடை வேளையில் அந்த 10 நிமிட கெப்பில்  என்ன விற்பார்கள் ..? இப்படியான பலகாரங்களா.? ரெல் மீ ..!

எனது காலத்தில் சோடா, கச்சான் அல்வா, எள்ளுருண்டை, Tippitips.

  • தொடங்கியவர்
11 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

maxresdefault.jpg இங்கு சமோசா , பொப்கார்ன் , உருளை கிழங்கு சிப்ஸ் கிடைக்கும் ..

Screenshot-2020-12-18-13-28-22-729-org-m

ஈழத்தில் தாங்கள் வாழ்ந்த காலபகுதிகளில் தியேட்டர் இடை வேளையில் அந்த 10 நிமிட கெப்பில்  என்ன விற்பார்கள் ..? இப்படியான பலகாரங்களா.? ரெல் மீ ..!

இந்த recipe இருந்தால் பதிவிடுங்கள் புரட்சிகர தமிழ்தேசியன். நன்றி நிறைய புதிய உணவுமுறைகளை அறிமுகப்படுத்தியதற்கு..

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nige said:

இந்த recipe இருந்தால் பதிவிடுங்கள் புரட்சிகர தமிழ்தேசியன். நன்றி நிறைய புதிய உணவுமுறைகளை அறிமுகப்படுத்தியதற்கு..

சமோசாக்கு பூரி மாவு பிசைவது dough வை செய்து எடுத்து, உள்ளே கறியை வைத்து முக்கோண வடிவில் மடித்து, பொரித்து எடுப்பது என நினக்கிறேன்.

மா குழைத்தல், உருட்டல் போன்ற முட்டாள் வேலைகளில் பங்கெடுப்பதால் கிடைத்த அறிவு.

பிகு: Foodi Ninja என்று ஒரு குக்கர் கூகிளில் தேடி பாருங்கோ. Steaming, baking, air frying, grilling இப்படி பலதை இலகுவாக செய்ய உதவுகிறது. வாங்கி வைத்ததில் இருந்து வீட்டில் எனக்கு கொஞ்சம் மவுசு கூடி விட்ட உணர்வு🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 hours ago, suvy said:

போளி யாழ்ப்பாணத்திலும் பிரபலமாக இருந்தது.....மாலயன் கபே அதுக்கு பிரபல்யம். மற்றும் தாமோதர விலாஸ், லக்சுமி விலாஸ், பரிசித்து விலாஸ் போன்ற எல்லா இடங்களிலும் கிடைக்கும்......!

முன்பு போண்டா என்றால் உருளைக்கிழங்குதான் உள்ளுடன் ஆக இருக்கும். பின்பு ஸ்ரீமாவின் அரசாங்கத்தில் என். எம் பெரேரா நிதி அமைச்சராய் இருந்தபோது உள்ளூர் உற்பத்தியை பெருக்குவதற்கு பல பொருட்களின் இறக்குமதியை தடை செய்து விட்டார்கள். அதனால் உருளைக்கிழங்கின் இடத்தை மரவள்ளிக்கிழங்கு பிடித்து விட்டது. சும்மா சொல்ல கூடாது, அக்காலத்தில்தான் சிரமபட்ட பல  விவசாயிகள் நிறைய பயிர் செய்து பெரிய வசதியானவர்களாக வந்தார்கள்.மிளகாய் செய்கை நாடு முழுதும் செய்யப்படட்து. மகாவலி திட்டத்தில் புது கிராமங்கள் முளைத்து மிளகாய் செய்தார்கள். யாழிலும் புங்குடுதீவு வேலணை  உட்பட  நிறைய செய்து புதிய லொறிகள் எல்லாம் (isuzu, austin, morris, leyland) வாங்கினார்கள்.....!

regal தியேட்டரில் இந்தப் பலகாரங்கள் எதுவும்  இல்லை தோழர். அங்கு ஆங்கிலப் படங்கள் மட்டும்தான் ஓடும். அதுவும் ஒரு படம் மூன்று நாட்கள் மட்டும்தான் ஓடும். ஜேம்ஸ் பொண்ட் , க்ளிண்ட் ஈஸ்வுட், சார்ள்ஸ் பிரவுன்சன் போன்றவர்களின் படங்கள் மட்டும் ஐந்து ஆறு நாட்கள் ஓடும். அடல்ஸ் ஒன்லி படங்களும் அதிகம்.ஒரு மாதத்துக்கு ஓடும் படங்களின் அட்டவனையை 30 ம் திகதியே தந்து விடுவார்கள். காதலியுடன் சென்று பார்ப்பதற்கு பொக்ஸ் வசதியும் அங்கு இருந்தது.  விதிவிலக்காக எப்போதாவது தமிழ் படங்கள் நாலைந்து நாட்கள் ஓடும்..... அங்கு இடை வேளைகளில் பரிமாறப் படுவது கொக்கோ கோலா வித் ஸ்ரோ,  சீஸ் பிஸ்கட் போன்ற மேல்தட்டு ஆயிட்டங்கள்......!  🤠

சுவியர்! நீங்கள் ஒரு பொக்கிசம். 🦁
அரசியல் விசயத்திலையும் நீங்கள் காலடி எடுத்து வைச்சியளெண்டால் கன விட்டில் பூச்சிகள் எல்லாம் பொசுங்கி போயிடும்.😁

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

சுவியர்! நீங்கள் ஒரு பொக்கிசம். 🦁
அரசியல் விசயத்திலையும் நீங்கள் காலடி எடுத்து வைச்சியளெண்டால் கன விட்டில் பூச்சிகள் எல்லாம் பொசுங்கி போயிடும்.😁

இதை வாசிச்சதும் எனக்கு வடிவேலுவின் கிட்னி திருட்டு பகிடிதான் நினைவு வந்தது.

ஒரு படம் போட யோசிச்சனான். பிறகு அதுக்கும் இன்னொரு திரியில குத்தல் கதை கேட்க வேண்டாம் எண்டு விட்டுட்டன்🤣

  • தொடங்கியவர்
36 minutes ago, goshan_che said:

சமோசாக்கு பூரி மாவு பிசைவது dough வை செய்து எடுத்து, உள்ளே கறியை வைத்து முக்கோண வடிவில் மடித்து, பொரித்து எடுப்பது என நினக்கிறேன்.

மா குழைத்தல், உருட்டல் போன்ற முட்டாள் வேலைகளில் பங்கெடுப்பதால் கிடைத்த அறிவு.

பிகு: Foodi Ninja என்று ஒரு குக்கர் கூகிளில் தேடி பாருங்கோ. Steaming, baking, air frying, grilling இப்படி பலதை இலகுவாக செய்ய உதவுகிறது. வாங்கி வைத்ததில் இருந்து வீட்டில் எனக்கு கொஞ்சம் மவுசு கூடி விட்ட உணர்வு🤣

நன்றி கோசன், இப்ப விளங்கீற்று . உணவு சம்மந்தமாக நீங்க ஒரு புத்தகம் எழுதலாம் போல இருக்கு...பாராட்டுக்கள் கோசன்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
32 minutes ago, nige said:

நன்றி கோசன், இப்ப விளங்கீற்று . உணவு சம்மந்தமாக நீங்க ஒரு புத்தகம் எழுதலாம் போல இருக்கு...பாராட்டுக்கள் கோசன்...

அட்டமத்து சனி தொடங்கப்போகுது...🥱

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, nige said:

இந்த recipe இருந்தால் பதிவிடுங்கள் புரட்சிகர தமிழ்தேசியன். நன்றி நிறைய புதிய உணவுமுறைகளை அறிமுகப்படுத்தியதற்கு..

நானே தியேட்டர்காரர்கள் இடம் இருந்து கற்று கொண்டேன் ..☺️..😊

 👍..👌

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
பிழை திருத்தம்

  • தொடங்கியவர்
8 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

நானே தியேட்டர்காரர்கள் இடம் இருந்து கற்று கொண்டேன் ..☺️..😊

 👍..👌

நன்றி புரட்சிகர தமிழ் தேசியன். சமோசா தெரியும் ஆனால் அதற்கு வேற ஏதோ பெயர் போட்டிருந்தார்கள். அதோட அது சின்னனா இருந்தது. ஒருவேளை அது mini சமோசாவோ. நன்றி இந்த recipe க்கு 

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, nige said:

நன்றி புரட்சிகர தமிழ் தேசியன். சமோசா தெரியும் ஆனால் அதற்கு வேற ஏதோ பெயர் போட்டிருந்தார்கள். அதோட அது சின்னனா இருந்தது. ஒருவேளை அது mini சமோசாவோ. நன்றி இந்த recipe க்கு 

பேக்கரி சமோசா வேறு .. தியேட்டர் சமோசா வேறு .. 

தியேட்டர் சமோசாவுக்கு தனியே சீட் தயார் செய்ய வேண்டும் 

அத்துடன் மடிக்கும் முறை வேறு  நன்றி .. 👍

  • கருத்துக்கள உறவுகள்
On 18/12/2020 at 05:11, குமாரசாமி said:

யுத்தம் இல்லாத காலங்களிலும் பல விவசாய குடும்பங்களில் காலை உணவு அவித்த மரவள்ளிக்கிழங்காக இருக்கும்.. இல்லையேல் துவையலாகவும் இருக்கும். அவித்த மரவள்ளிக்கிழங்கை உறைப்பான தேங்காய் சம்பலுடன் சாப்பிட இன்னும் நல்லாய் இருக்கும்.:wink:

இரவில் மரவள்ளிக்கிழங்கு பால் அவியல்.சொல்லி வேலையில்லை ராசன்.👌🏽

இதெல்லாம் உந்த மேட்டுக்குடியளுக்கு எங்கை தெரியப்போகுது?வெள்ளைக்காரன் சொன்னால் முள்ளுக்கரண்டியாலை குத்தி ரேஸ்ற் பண்ணுவினம்.🐇

மாங்காய் அவித்து சம்பல் போடுவது நாங்கள் மாரி காலங்களில் மாங்காய் சம்பல் செமயாக இருக்கும்  அதற்கு சின்ன கொச்சி கடும் உறைப்பானது இட்டு சம்பல் போட வேண்டும் சூப்பராக இருக்கும் 

On 18/12/2020 at 05:23, குமாரசாமி said:

புளியந்தீவுக்குள்ளை இருக்கும் மட்டும் சந்தோசம் குறைவு......எண்டைக்கு பார் ரோட்டு தொங்கலுக்கு போனனோ அண்டு தொடக்கம் சந்தோசம் உச்சத்திலை.....கிட்டத்தட்ட மலையாள தேசம் மாதிரி.....ஒரே குளிர்ச்சி...tw_heart:🥳

உண்மையிலே எனக்கு மிகவும் பிடித்த இடமும் கூட அந்த இடத்தை வைத்தே சுற்றுலா அமைத்தே பல ஆயிரம் சம்பாதிக்கலாம் ஆனால் நம்ம சனமோ தண்ணி கரையிலே குப்பையையும் பிளாஸ்டிக் கழிவுகளையும் கொட்டி நிறைக்கிறதை காணூம் போது மனம் வருந்தும் இயற்கைகை அழிப்பதை எண்ணி 

  • கருத்துக்கள உறவுகள்

132091239-213422290251671-7593025744981930279-nபுளி மாங்காய் சம்பலுடன் ( கொச்சிக்காய், வெங்காயம் கொஞ்சம் தண்ணீர் விட்டு அவிக்க வேண்டும் அவித்த பின்னர் மாங்காயை இட்டு நன்றாக மசித்து எடுத்தால் உப்பு தேவையான அளவு ) மாங்காய் சம்பல் ரெடி 

இரு வருடங்களுக்கு முன் நாங்கள் செய்து சாப்பிட்டது , தற்போது சோலன் சீசன் மழைக்க சொல்லி வேலை இல்லை அதுவும் படம் இருக்கு போடவா சாமி .இன்னும் கச்சான் பனங்கிழங்கு , வற்றாளை கிழங்கு எல்லாம் லிஸ்டில் இருக்கு 

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

மாங்காய் அவித்து சம்பல் போடுவது நாங்கள் மாரி காலங்களில் மாங்காய் சம்பல் செமயாக இருக்கும்  அதற்கு சின்ன கொச்சி கடும் உறைப்பானது இட்டு சம்பல் போட வேண்டும் சூப்பராக இருக்கும் 

உண்மையிலே எனக்கு மிகவும் பிடித்த இடமும் கூட அந்த இடத்தை வைத்தே சுற்றுலா அமைத்தே பல ஆயிரம் சம்பாதிக்கலாம் ஆனால் நம்ம சனமோ தண்ணி கரையிலே குப்பையையும் பிளாஸ்டிக் கழிவுகளையும் கொட்டி நிறைக்கிறதை காணூம் போது மனம் வருந்தும் இயற்கைகை அழிப்பதை எண்ணி 

உண்மைதான்....குமாரசாமி அண்ணா சொல்லியது போல இந்த பகுதியால் போய் வரும் போது ஒரு மலையாள பீலிங் வரவே செய்யும்.

இந்த பேர்கர் ஆக்களிண்ட கல்யாண மண்டபம் தாண்டி போனதும் வாற கால்வாய் மிக மோசமாக மாசடைந்து இருந்தது, அதை அண்மையில் அழகு படுத்தியதாக கேள்விபட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

உண்மைதான்....குமாரசாமி அண்ணா சொல்லியது போல இந்த பகுதியால் போய் வரும் போது ஒரு மலையாள பீலிங் வரவே செய்யும்.

இந்த பேர்கர் ஆக்களிண்ட கல்யாண மண்டபம் தாண்டி போனதும் வாற கால்வாய் மிக மோசமாக மாசடைந்து இருந்தது, அதை அண்மையில் அழகு படுத்தியதாக கேள்விபட்டேன்.

130543958-141043387803198-2385049916138952649-n130469650-141043274469876-1296579034350410239-nஇந்த படங்கள் அண்மையில் வெளிவந்தது என நினைக்கிறன் நண்பர் ஒருவர் முகநூலில் இணைத்து இருந்தார் 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

130543958-141043387803198-2385049916138952649-n130469650-141043274469876-1296579034350410239-nஇந்த படங்கள் அண்மையில் வெளிவந்தது என நினைக்கிறன் நண்பர் ஒருவர் முகநூலில் இணைத்து இருந்தார் 

மட்டு நகர் மண்ணில்
மீன் கூடப் பாடும்!

மணல் மேட்டில் கடல் காற்றில்
தென்னை கூத்தாடும்!

பட்டிப்பளை வயல்
தங்கமாய் காய்க்கும்!
 
பரண்மீது உழவர்பெண்
தமிழ்ப்பாடல் கேட்கும்!

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

மட்டு நகர் மண்ணில்
மீன் கூடப் பாடும்!

மணல் மேட்டில் கடல் காற்றில்
தென்னை கூத்தாடும்!

பட்டிப்பளை வயல்
தங்கமாய் காய்க்கும்!
 
பரண்மீது உழவர்பெண்
தமிழ்ப்பாடல் கேட்கும்!

தமீழீழத்தின் அழகு தனி அழகு 

  • கருத்துக்கள உறவுகள்

— காசி ஆனந்தன்——

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

தமீழீழத்தின் அழகு தனி அழகு 

அற்புதமான வீடியோ பிடிப்பு.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, goshan_che said:

மட்டு நகர் மண்ணில்
மீன் கூடப் பாடும்!

மணல் மேட்டில் கடல் காற்றில்
தென்னை கூத்தாடும்!

பட்டிப்பளை வயல்
தங்கமாய் காய்க்கும்!
 
பரண்மீது உழவர்பெண்
தமிழ்ப்பாடல் கேட்கும்!

கிழக்குப் பெண்கள் உடலால் மட்டுமல்ல உள்ளத்தாலும் அழகானவர்கள் 🙄

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான்.

29 minutes ago, வாலி said:

கிழக்குப் பெண்கள் உடலால் மட்டுமல்ல உள்ளத்தாலும் அழகானவர்கள் 🙄

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.