Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஹெலியில் பறந்து சென்று பிரச்சாரம்... ஜெயலலிதா பாணியில் ரஜினிகாந்துக்கு தயாராகும் ஏற்பாடுகள்..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஹெலியில் பறந்து சென்று பிரச்சாரம்... ஜெயலலிதா பாணியில் ரஜினிகாந்துக்கு தயாராகும் ஏற்பாடுகள்..!

rajini444-152-1608012468.jpg

சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்பதற்காக நடிகர் ரஜினிகாந்துக்கு ஹை டெக் முறையில் பரப்புரை முன்னேற்பாடுகள் திட்டமிடப்பட்டு வருகின்றன.

ஹோலோகிராபி

முப்பரிமாண காட்சி வடிவில் பரப்புரை, ஹெலிகாப்டரில் பறந்து சென்று பரப்புரை, எல்.இ.டி. திரைகள் கொண்ட வாகனங்கள் மூலம் பரப்புரை என திட்டமிடல்கள் மும்முரமாக இருக்கின்றன. வரும் ஜனவரி மாதம் இறுதியில் இருந்தே ரஜினிகாந்த் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி விடுவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

சட்டமன்றத் தேர்தல்

தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் இந்த சட்டமன்றத் தேர்தல் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. கருணாநிதி, ஜெயலலிதா என இரு பெரும் ஆளுமைகள் இல்லாமல் நடைபெறும் முதல் சட்டமன்றத் தேர்தல் என்பதால் திமுகவுக்கும், அதிமுகவுக்கும் இது அக்னிப்பரீட்சையாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அந்த இரு கட்சிகளுக்கும் இடையேயான போட்டி தான் இதுவரை நிலவி வந்தது.

ரஜினி உடல்நிலை

முதல்முறையாக நடிகர்கள் கமல்ஹாசனும், ரஜினிகாந்தும் சட்டமன்றத் தேர்தலில் களமிறங்கியுள்ளனர். இதனால் இந்த முறை போட்டி சற்று கடினமாகவும் தேசியளவிலான கவனத்தையும் தமிழகம் ஈர்த்துள்ளது. சரி விஷயத்திற்கு வருவோம், நடிகர் ரஜினிகாந்தை பொறுத்தவரை தனது உடல்நிலையை கருத்தில் கொண்டு தேர்தல் அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கத்தான் விரும்பினார்.

அன்புக்கட்டளை
 - பிரத்யேக குழு

இருப்பினும் அவரது நலன் விரும்பிகளும், அன்பர்களும், ரசிகர்களும் விடுத்த அன்புக்கட்டளை காரணமாக வேறு வழியின்றி அரசியல் என்ட்ரி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதனிடையே மருத்துவர்கள் அறிவுரைப்படி மிகுந்த கவனத்துடன் அவரது அரசியல் நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பிரச்சாரம் என்பது தேர்தலுக்கு இன்றியமையாதது என்பதால் அதில் ரஜினியை எப்படி பங்கேற்க செய்வது என்பது பற்றியும் அவரால் நியமிக்கப்பட்ட பிரத்யேக குழு ஆலோசித்து வருகிறது.

லைவ் ரிலே

01slide4.jpg

மாலை நேர பிரச்சாரங்களை தவிர்த்து ஜெயலலிதா பாணியில் பகல் நேர பிரச்சாரம் மேற்கொள்ளலாம் என்றும் அந்தப் பிரச்சாரத்துக்கு சென்னையில் இருந்து ஹெலிகாப்டரில் சென்றுவிட்டு அன்றைய தினமே ரஜினி சென்னை திரும்பும் வகையிலும் திட்டமிடல்கள் நடந்து வருகின்றன.

மேலும், தமிழகத்தின் முக்கிய நகரங்களான மதுரை, கோவை, திருச்சி,சேலம், நெல்லை, என இந்த ஊர்களுக்கு மட்டும் ரஜினியை நேரடியாக விசிட் அடிக்க வைத்துவிட்டு ஊரகப்பகுதிகளில் முப்பரிமாண காட்சி வடிவில் லைவ் ரிலே செய்யவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதைத்தவிர வழக்கம் போல் டிஜிட்டல் ஊடகம் வழியாகவும் பரப்புரை நிகழவுள்ளது.

https://tamil.oneindia.com/news/chennai/rajnikanth-to-fly-in-helicopter-for-election-campaign-like-jayalalitha-405873.html

டிஸ்கி

வயதான மனிதரை வதைப்பது குறித்து கிந்திய சட்டம் சொல்வது என்ன.? 😢..😢

30740424_1814522365284519_24425905502604

கிந்திய அரசியல் அமைப்பு சரத்து 41 சட்ட பிரிவு 125 ன் கீழ்

"முதியோரை திட்டுதல், முதியோரை துன்புறுத்துதல், முதியோரை  உடல் ரீதியான மற்றும் மன ரீதியாக பாதிப்பு ஏற்படுத்துதல் " என பலவகையாக பிரிக்கப்பட்டுள்ளது

சம்பந்தப்பட்ட நபருக்கு 6 மாதம் சிறை தண்டனை அல்லது ரூ.10 ஆயிரம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்க வகை செய்யும் வகையில் இந்த சட்டம் 2019 இல் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. 

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
பிழை திருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்

கார்... டிறைவருக்கு, சம்பளம் கொடுக்கவில்லை.... 

ரசனி மனைவி நடத்தும் பாடசாலைக்கு.... வாடகை கொடுக்கவில்லை....

இதற்குள்.... உலங்கு வானூர்தியில் பிரச்சாரம் செய்யப் போகிறாராம். வாயிலை வருகுது.   😡

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அஞ்சலி போட்டாவா இது? 😁

Bild

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Bild

திமுகவுக்காக களமிளறங்கும் சத்தியராஜ்..தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்ய திட்டம்.! 

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 4 பேர், , ’வாசலுக்கு வந்து இனிப்பு கொடுப்பதற்கு கூட பின்னாடியே மின் விசிறியுடன் வேலைக்காரம்மா வரனும்னா எவ்ளோ பகுமானம் எவ்ளோ சொகுசு வாழ்ராங்க வசதிபடைச்சவங்க... தந்தி A THANTHITV fo /THANTHITV /THANTHITVNEWS WWW.THANTHITV.COM’ எனச்சொல்லும் உரை

  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

  • கருத்துக்கள உறவுகள்

தலீவரை விட செட்டைகள் பெரிசாக இருக்கு!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, தமிழ் சிறி said:

கார்... டிறைவருக்கு, சம்பளம் கொடுக்கவில்லை.... 

ரசனி மனைவி நடத்தும் பாடசாலைக்கு.... வாடகை கொடுக்கவில்லை....

இதற்குள்.... உலங்கு வானூர்தியில் பிரச்சாரம் செய்யப் போகிறாராம். வாயிலை வருகுது.   😡

130988096_3817772818275655_1236953765939

☺️..😊.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

130988096_3817772818275655_1236953765939

☺️..😊.

நன்றி தோழர். யாழ். களத்திலுள்ள கருத்துக்களை, இந்திய உயர் நீதிமன்றமும் வாசிக்கின்றது போலுள்ளது. 😁

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kavi arunasalam said:

spacer.png

5 hours ago, கிருபன் said:

தலீவரை விட செட்டைகள் பெரிசாக இருக்கு!

இரண்டு பக்கமும்... உள்ள செட்டைகள் தான்,

ரசனியின் தலையில், இரண்டு பக்கமும் காணப்படும்.... முடி.

ஆட்டோவின் மேல்பாகம்... அவரின் உச்சி மண்டை. 😁

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Bild

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, கிருபன் said:

தலீவரை விட செட்டைகள் பெரிசாக இருக்கு!

கிருபன், அண்ணாமலையின் ஓட்டோ அல்லவா. இறக்கை கட்டி பறக்க வேண்டாமோ?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kavi arunasalam said:

கிருபன், அண்ணாமலையின் ஓட்டோ அல்லவா. இறக்கை கட்டி பறக்க வேண்டாமோ?

ஓஹோ. அதை மறந்தே விட்டன்!!! தலீவர் காவோலை வேலிப்பொட்டுக்கால பார்க்கிற மாதிரி இருக்குது😂😂😂

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, கிருபன் said:

தலீவர் காவோலை வேலிப்பொட்டுக்கால பார்க்கிற மாதிரி இருக்குது😂😂😂

தலீவர் (தலை)sticker ஒட்டிய ஓட்டோ. தலீவருக்கு உடல்நலக் குறைவு  இருப்பதால் தேர்தலுக்கு இப்படி ஒரு பிரச்சார ஏற்பாடு.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

நன்றி தோழர். யாழ். களத்திலுள்ள கருத்துக்களை, இந்திய உயர் நீதிமன்றமும் வாசிக்கின்றது போலுள்ளது. 😁

சுமந்திரனே வந்து போறாராம். அப்ப இந்திய உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் வாறது அதிசயமில்லையே.

ரதி என்ற பெயரில் எழுதுவது கமலா ஹாரிஸ்தானோ என்று எனக்கு நெடுநாளையா சந்தேகம்.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, goshan_che said:

ரதி என்ற பெயரில் எழுதுவது கமலா ஹாரிஸ்தானோ என்று எனக்கு நெடுநாளையா சந்தேகம்.

அப்போ ரதி from மானிப்பாய்

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

சுமந்திரனே வந்து போறாராம். அப்ப இந்திய உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் வாறது அதிசயமில்லையே.

ரதி என்ற பெயரில் எழுதுவது கமலா ஹாரிஸ்தானோ என்று எனக்கு நெடுநாளையா சந்தேகம்.

நடிகை பெயரில் 120 கோடி சொத்து வைத்திருக்கிறாரா கர்நாடக முதல்வர்  Kumaraswamy..? என்னையா நடக்குது..? | JDS Leader HD Kumaraswamy the Richest  CM Candidate in Karnataka Elections Assets ...

நான், ஆரம்பத்தில்... குமாரசாமி அண்ணரை,
கர்நாடக முன்னாள்  முதல்வர் குமாரசாமி, என்று நினைத்துக் கொண்டு இருந்தனான்.

காவிரி பிரச்சினையில்... யாழ். களத்தில்  என்ன கதைக்கிறார்கள் என்று,
உளவு பார்க்க வந்திருப்பாரோ.... என்ற பயமும் இருந்தது.

கனகாலத்துக்குப் பிறகு தான்...நம்மாள், 
தென்மராட்சியை சேர்ந்த, ஈழத் தமிழர் என்று தெரிந்தது.  

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

 அப்போ அவர் ஜெயலிதா சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு சொன்ன நீதிபதி இல்லையா?

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, goshan_che said:

 அப்போ அவர் ஜெயலிதா சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு சொன்ன நீதிபதி இல்லையா?

அவர் வேறை... இவர் வேறை.

இவர் பக்கா... அரசியல்வாதி. இவரின் தந்தையும் முதல்வர் என நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, தமிழ் சிறி said:

அவர் வேறை... இவர் வேறை.

இவர் பக்கா... அரசியல்வாதி. இவரின் தந்தையும் முதல்வர் என நினைக்கின்றேன்.

இல்லை அண்ணா நான் கேட்டது யாழ் களத்தில் எழுதும் குமாரசாமியும் சொத்து குவிப்பு வழக்கு நீதிபதியும் ஒரே ஆள் இல்லையா என்று🤣

அரசியல்வாதி குமாரசாமி முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் மகன்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, தமிழ் சிறி said:

நடிகை பெயரில் 120 கோடி சொத்து வைத்திருக்கிறாரா கர்நாடக முதல்வர்  Kumaraswamy..? என்னையா நடக்குது..? | JDS Leader HD Kumaraswamy the Richest  CM Candidate in Karnataka Elections Assets ...

நான், ஆரம்பத்தில்... குமாரசாமி அண்ணரை,
கர்நாடக முன்னாள்  முதல்வர் குமாரசாமி, என்று நினைத்துக் கொண்டு இருந்தனான்.

காவிரி பிரச்சினையில்... யாழ். களத்தில்  என்ன கதைக்கிறார்கள் என்று,
உளவு பார்க்க வந்திருப்பாரோ.... என்ற பயமும் இருந்தது.

கனகாலத்துக்குப் பிறகு தான்...நம்மாள், 
தென்மராட்சியை சேர்ந்த, ஈழத் தமிழர் என்று தெரிந்தது.  

1 hour ago, goshan_che said:

இல்லை அண்ணா நான் கேட்டது யாழ் களத்தில் எழுதும் குமாரசாமியும் சொத்து குவிப்பு வழக்கு நீதிபதியும் ஒரே ஆள் இல்லையா என்று🤣

அரசியல்வாதி குமாரசாமி முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் மகன்.

 கோதாரிவிழ  இண்டைக்கு நானே கிடைச்சன்.....???😎

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, goshan_che said:

அப்போ அவர் ஜெயலிதா சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு சொன்ன நீதிபதி இல்லையா?

 நீங்கள் சொன்ன நீதிபதி குமாரசாமியை நானும் தெரிந்து கொண்டேன் அவர் நீதிவழுவாத நீதிபதி அல்லவா அத்துடன் கணிதத்திலும் மேதை 🤣
 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.