Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு இளவேனிற் காலையில் 5கிமீ கடற்கரையோர நடை அனுபவம்( Bondi to Coogee Coastal Walk)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

0-F0-E3-D60-6-CF2-4-E74-A236-E675-DAF60-

Bondi to Coogee walk என்பது சிட்னியில் பிரபல்யமான ஒரு விஷயம். தொண்டுநிறுவனங்கள் தொடங்கி சாதாரண மக்கள் வரை இந்த கடற்கரையோர நடையை விரும்பி செய்வதுண்டு. அந்த அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்..

large.F9804998-5665-4C79-9F98-2E305A6B2339.jpeg.63a4d79955ab9c55e699c4f82a4adcbe.jpeg

காலை 7மணிக்கு Bondi கடற்கரையில் தொடங்கிய நடை சுமார் 8.40மணியளவில் Coogee கடற்கரையில் முடிந்தது.. 

இந்த நடைப்பயணத்தில் மனதை கொள்ளைகொள்ளும் காட்சிகள், கடற்கரைகள், பூங்காக்கள், பாறைகள், விரிகுடாக்கள் மற்றும் பாறைகளிற்கிடையில் அமைந்த நீச்சல் குளங்கள், Sculpture by Sea திட்டத்தின் கீழ் வடிவமைக்கப்பட்ட சிற்பங்கள் போன்றவற்றை ரசிக்கலாம். 

B10-B147-D-22-E3-4041-820-E-02-B590333-D

அதுமட்டுமல்ல காலைநேர கடற்கரை காற்று, ஆரவாரமற்ற அலைகள், அவை அமைதியாக இருப்பதால் அலைகளுடன் விளையாடும் மனிதர்கள், பறவைகள், நீச்சல்பயிற்சி தொடங்கி நடைப்பயிற்சி செய்யும் பலர் என வழிநெடுக பார்க்கமுடியும்..காலை வேளை என்பதால்   சூரியனிடமிருந்து இலவசமான விட்டமின் Dயையும் பெறலாம் என்பதால் ஆரோக்கியமான நடையாகவும் இருக்கும். 

51-AB7-B9-C-F621-4-A74-84-DB-6-FAD64-F5-

முதலாவது Bondi ( Boondi - Aboriginal சொல்)
இது மற்றைய கடற்கரைகளைவிட நீளமானதும் சிட்னியில் பிரபல்யமானதுமான வெள்ளை மணற்கடற்கரை... 

710-EF344-B943-45-CD-B8-CE-4-D52046-E147

large.9B158A73-05AB-46F6-B8A8-B01C3A704F64.jpeg.270b9c0f4d608a964666fb95b82d2ece.jpeg

657628-EC-2-BB1-4776-AFE6-E56-E323092-B4
Bondiற்கும் இரண்டாவது கடற்கரையான Tamarama இடையில் Bondi Skate பூங்கா, Hunter பூங்கா என இளைப்பாறும் இடங்கள் உள்ளது. Hunter பூங்காவில், இந்த கடலில்,பாறைகளில், கடற்கரையோரத்தில் வாழும் கடல்வாழ் உயிரினங்களைப்பற்றி கல்லில் செதுக்கிவைத்துள்ளார்கள். 

330165-F1-BE8-F-4315-9685-A3-A4-A6668-B6

இரண்டாவது Tamarama கடற்கரை
இரண்டு உயர்ந்த குன்றுகளிடையில் உள்ளது. சிறிது ஒடுங்கிய கடற்கரை மற்றும் சுழல்களையும் உடையது. 

41194254-9-F74-4-FE7-B202-22-EEFF6-B6-D6

மூன்றாவது Bronte கடற்கரை
இது ஓரளவிற்கு நீன்ட கடற்கரையை உடையது மட்டுமல்ல பாறைகளிற்கிடையிலான நீச்சல்குளத்தையும் உடையது. ஆர்ப்பாட்டமான அலைகள், சுழல்களை உடையதால் கடலோர காவலர்களால் நடப்பட்டிருக்கும் இரண்டு கொடிகளுக்கிடையில்தான் கடலில் இறங்கலாம்.. 

இந்த கடற்கரைக்கும் நான்காவது கடற்கரையான Clovelly கடற்கரைக்கும் இடையில்தான் புகழ்பெற்ற Waverly மயானம் உள்ளது. நான் இந்த மாயனத்தைப்பார்த்த பொழுது யோசித்தேன் மண்ணிற்குள் மீளதுயிலில் இருந்தாலும் கொடுத்துவைத்தவர்கள் என்று.. இந்த இடத்திலிருந்து பார்க்கும் பொழுது கடலோர காட்சி மிகவும் அழகானது.. 

762-FCAD9-AC85-4-C5-E-827-B-665-D6-A6-C2

அதே போல இந்த Bronte குன்றின் மீது 
Keizo Ushio என்ற யப்பானின் புகழ்பெற்ற சிற்ப கலைஞரின் Twice Twist எனும் சிற்பமும் உள்ளது.

large.9C734B70-7087-4D09-A021-4CA0F269BDFE.jpeg.ee1b61ab3a04d665bb0f11840c4db427.jpeg

அடுத்ததாக எனக்கு பிடித்த அமைதியான Clovelly கடற்கரை மிகவும் குறுகிய, அலைகளற்ற பாறைகளை அதிகம் உடைய கடல்.. snorkeling செய்வேரை அதிகமாக காணலாம்.. பாறைகளிற்கிடையே அமைந்த நீச்சல் குளமும் உள்ளது.. 

06666431-0-BE4-4-A94-B7-CC-E28-D7-DA2-DE

இறுதியாக Coogee கடற்கரை..
இதுவும் ஓரளவிற்கு நீளமான கடற்கரை.. அமைதியான அலைகள், நிழல்தரும் மரங்கள் சூழ்ந்த அழகிய கடற்கரை.. 

A670379-D-F6-A2-4-B79-B634-199-E0-E4-CCB

நன்றி

- பிரபா சிதம்பரநாதன்

Edited by பிரபா சிதம்பரநாதன்
எழுத்துப்பிழை

பகிர்வுக்கு நன்றி. மிகவும் அழகான பிரதேசம். இயற்கை அழகு காட்சிகள். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, tulpen said:

பகிர்வுக்கு நன்றி. மிகவும் அழகான பிரதேசம். இயற்கை அழகு காட்சிகள். 

நன்றி..

உண்மைதான் மிகவும் அழகான பிரதேசம்..அதிகாலை வேளையில் போனதால் அதன் அழகை அதிக மனிதர்களின் நடமாட்டமின்றி ரசிக்ககூடியதாக இருந்தது. 

1 minute ago, பிரபா சிதம்பரநாதன் said:

நன்றி..

உண்மைதான் மிகவும் அழகான பிரதேசம்..அதிகாலை வேளையில் போனதால் அதன் அழகை அதிக மனிதர்களின் நடமாட்டமின்றி ரசிக்ககூடியதாக இருந்தது. 

கடற்கரைப்பிரதேசங்களில், கடற்கரைஓரமாக காலையில் நடப்பது இதமான இன்பம்.  12  வருடத்திற்கு முன்பு  அமெரிக்காவில் வேர்ஜீனியா கடற்கரை ஓரத்தில் உள்ள நீண்ட பாதையில் காலை வேளையில் இப்படி நடந்தோம். மிக அழகாகவும் மனதுக்கு மகிழ்வாகவும் இருந்த‍து. சுவிற்சர்லாந்தின் அமைவிடம் கடலுக்கு நீண்ட தூரத்தில் இருப்பதால் இங்கு அல்ப்ஸ் மலை நடைப்பயணமே செய்ய முடியும். 

  • கருத்துக்கள உறவுகள்

அழகான படங்களும் சிறப்பான தகவல்களும் ..... இங்கு ஆற்றங்கரை ஓரமாகத்தான் நடக்க முடியும். மரங்கள் அடர்ந்த சோலைகளும் உண்டு. நன்றி சகோதரி......!  😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, suvy said:

அழகான படங்களும் சிறப்பான தகவல்களும் ..... இங்கு ஆற்றங்கரை ஓரமாகத்தான் நடக்க முடியும். மரங்கள் அடர்ந்த சோலைகளும் உண்டு. நன்றி சகோதரி......!  😁

நன்றி அண்ணா..

இயற்கையோடு இணைந்து நடப்பது மனதிற்கு மிகவும் புத்துணர்ச்சி தரும் ஒரு விடயம்..அதுவும் கடந்த பங்குனியிலிருந்து வீட்டில் இருந்தபடியே வேலையும் என்பதால்  இந்தமாதிரி பயணங்களை செய்யமுயற்சிப்பதுண்டு ஆனால் இங்கே சிட்னியில் திரும்பவும் Covid பரவத்தொடங்கியதால் எனது இன்னொரு இயற்கையோடு இணைந்த பயணம் தடைப்படும் போல உள்ளது.. பொறுத்திருந்து பார்ப்போம்..

  • கருத்துக்கள உறவுகள்

அழகான அருமையான பதிவு.

எங்கள் நாட்டுக் கடற்கரைகளும் அழகோ அழகு. அதுவும் இரவு வேலை முடிந்த அதிகாலையில் நண்பர்களுடன் பாசிக்குடா வந்து தென்னம் கள் அடித்துவிட்டு, அந்தக் குடாக் கரையில் நடந்த அனுபவத்தின் இனிமையை வார்த்தைகளில் சொல்லி அடங்காது.  

அங்கு கரைவலை இழுக்க உதவிய அனுபவம்.

Pasikudha-Beach.jpg?resize=1024%2C475&ssl=1

பெரும் அலைகளுக்கும், சுளிகளுக்கும் பயமற்று நீண்ட தூரம் நீந்தக்கூடிய குடாக்கடல். 

Quellbild anzeigen

சின்னக் காம்பு தாங்கும் மலரை நான் தாங்கமாட்டேனா என்று தெரிவிக்கும் சாய்ந்த தென்னைமரம். 

 %E6%8E%8C%E4%B8%8A%E5%9E%8B%E8%AE%A1%E7%AE%97%E6%9C%BA%E6%B5%B7%E8%BF%90%E7%BB%93%E6%9E%84%E6%A0%91-12834876.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Paanch said:

அழகான அருமையான பதிவு.

எங்கள் நாட்டுக் கடற்கரைகளும் அழகோ அழகு.

நன்றி..

பாசிக்குடாவும் அழகுதான், ஆனால் அங்கே உள்ள கடலோர தென்னை மரங்களை பார்த்தபொழுது கவலையே ஏற்பட்டது..

கிழக்கில் எனக்கு மிகவும் பிடித்த கடற்கரை, திருகோணமலையில் இருக்கும் மாபிள் கடற்கரை.. 

large.43771C0B-44AE-40CE-93D5-A70FCF29009F.jpeg.d35507a6709decc2f02f98bcb6714c73.jpeg

திருகோணமலையில் உள்ள அரிசிமலை கடற்கரை, நிலாவெளி கடற்கரை, சல்லி கடற்கரை: இந்த கடற்கரைகளும் மிகவும் அழகானவை..

சல்லி அமைதியான கடற்கரை..

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

பாசிக்குடாவும் அழகுதான், ஆனால் அங்கே உள்ள கடலோர தென்னை மரங்களை பார்த்தபொழுது கவலையே ஏற்பட்டது..

உண்மைதான் இயற்கையைப் பராமரிக்க அங்கு யாருமில்லை. ஆனால் கரையோரம் விடுதிகள் கட்டிப் பணம்பண்ண அரசுகளும் தயங்குவதில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு பதிவு. கடலை பார்க்க ஆசையாக உள்ளது. 

  • கருத்துக்கள உறவுகள்

அழகான படங்களுடன் கூடிய தரமான பதிவு .. பகிர்விற்கு நன்றி.! 👌

  • கருத்துக்கள உறவுகள்

அருமையாக இருக்கிறது 

இது உலோகமா கல்லா?

large.9C734B70-7087-4D09-A021-4CA0F269BDFE.jpeg.ee1b61ab3a04d665bb0f11840c4db427.jpeg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

நல்லதொரு பதிவு. கடலை பார்க்க ஆசையாக உள்ளது. 

நன்றி..

கடலைகளை பார்த்தபடி இருப்பது எப்பொழுதுமே எனக்கு பிடித்த ஒரு விஷயம் 

56 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

அழகான படங்களுடன் கூடிய தரமான பதிவு .. பகிர்விற்கு நன்றி.! 👌

மிக்க நன்றி.. 

35 minutes ago, Maruthankerny said:

அருமையாக இருக்கிறது 

இது உலோகமா கல்லா?

large.9C734B70-7087-4D09-A021-4CA0F269BDFE.jpeg.ee1b61ab3a04d665bb0f11840c4db427.jpeg

மிக்க நன்றி..

இது granite(கருங்கல்?) ..Keizo Ushio என்ற யப்பானியரின் கைவண்ணம்.. இந்த வருடமும் Sculpture by Sea கண்காட்சியில் இவரது படைப்பு வந்திருக்குமென நினைக்கிறேன்.. 

உண்மையிலேயே எனது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியை தந்தது இந்த கடற்கரையோர நடை. எத்தனை முறை போனாலும் சலிக்காத ஒரு விஷயம்..

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

இது granite(கருங்கல்?) ..Keizo Ushio என்ற யப்பானியரின் கைவண்ணம்.. இந்த வருடமும் Sculpture by Sea கண்காட்சியில் இவரது படைப்பு வந்திருக்குமென நினைக்கிறேன்.. 

ஒரே கல்லிலேயே இப்படி செதுக்கி எடுத்துவிட்டு 
மனப்பாரத்தை குறைக்க என்று நடக்க போகும் எங்களை 
போன்றவர்களின் மூளையை குடைவதுக்கு ஒண்றோடு ஒன்று 
புகுந்து இருப்பதுபோல செய்து வைத்திருக்கிறார் என்று எண்ணுகிறேன்.
நிம்மதியா இருக்கிறது என்றால் இருந்து பாருங்கள் என்பதுபோல இருக்கிறது 

  • கருத்துக்கள உறவுகள்
On 21/12/2020 at 21:11, பிரபா சிதம்பரநாதன் said:

0-F0-E3-D60-6-CF2-4-E74-A236-E675-DAF60-

Bondi to Coogee walk என்பது சிட்னியில் பிரபல்யமான ஒரு விஷயம். தொண்டுநிறுவனங்கள் தொடங்கி சாதாரண மக்கள் வரை இந்த கடற்கரையோர நடையை விரும்பி செய்வதுண்டு. அந்த அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்..

large.F9804998-5665-4C79-9F98-2E305A6B2339.jpeg.63a4d79955ab9c55e699c4f82a4adcbe.jpeg

காலை 7மணிக்கு Bondi கடற்கரையில் தொடங்கிய நடை சுமார் 8.40மணியளவில் Coogee கடற்கரையில் முடிந்தது.. 

இந்த நடைப்பயணத்தில் மனதை கொள்ளைகொள்ளும் காட்சிகள், கடற்கரைகள், பூங்காக்கள், பாறைகள், விரிகுடாக்கள் மற்றும் பாறைகளிற்கிடையில் அமைந்த நீச்சல் குளங்கள், Sculpture by Sea திட்டத்தின் கீழ் வடிவமைக்கப்பட்ட சிற்பங்கள் போன்றவற்றை ரசிக்கலாம். 

B10-B147-D-22-E3-4041-820-E-02-B590333-D

அதுமட்டுமல்ல காலைநேர கடற்கரை காற்று, ஆரவாரமற்ற அலைகள், அவை அமைதியாக இருப்பதால் அலைகளுடன் விளையாடும் மனிதர்கள், பறவைகள், நீச்சல்பயிற்சி தொடங்கி நடைப்பயிற்சி செய்யும் பலர் என வழிநெடுக பார்க்கமுடியும்..காலை வேளை என்பதால்   சூரியனிடமிருந்து இலவசமான விட்டமின் Dயையும் பெறலாம் என்பதால் ஆரோக்கியமான நடையாகவும் இருக்கும். 

51-AB7-B9-C-F621-4-A74-84-DB-6-FAD64-F5-

முதலாவது Bondi ( Boondi - Aboriginal சொல்)
இது மற்றைய கடற்கரைகளைவிட நீளமானதும் சிட்னியில் பிரபல்யமானதுமான வெள்ளை மணற்கடற்கரை... 

710-EF344-B943-45-CD-B8-CE-4-D52046-E147

large.9B158A73-05AB-46F6-B8A8-B01C3A704F64.jpeg.270b9c0f4d608a964666fb95b82d2ece.jpeg

657628-EC-2-BB1-4776-AFE6-E56-E323092-B4
Bondiற்கும் இரண்டாவது கடற்கரையான Tamarama இடையில் Bondi Skate பூங்கா, Hunter பூங்கா என இளைப்பாறும் இடங்கள் உள்ளது. Hunter பூங்காவில், இந்த கடலில்,பாறைகளில், கடற்கரையோரத்தில் வாழும் கடல்வாழ் உயிரினங்களைப்பற்றி கல்லில் செதுக்கிவைத்துள்ளார்கள். 

330165-F1-BE8-F-4315-9685-A3-A4-A6668-B6

இரண்டாவது Tamarama கடற்கரை
இரண்டு உயர்ந்த குன்றுகளிடையில் உள்ளது. சிறிது ஒடுங்கிய கடற்கரை மற்றும் சுழல்களையும் உடையது. 

41194254-9-F74-4-FE7-B202-22-EEFF6-B6-D6

மூன்றாவது Bronte கடற்கரை
இது ஓரளவிற்கு நீன்ட கடற்கரையை உடையது மட்டுமல்ல பாறைகளிற்கிடையிலான நீச்சல்குளத்தையும் உடையது. ஆர்ப்பாட்டமான அலைகள், சுழல்களை உடையதால் கடலோர காவலர்களால் நடப்பட்டிருக்கும் இரண்டு கொடிகளுக்கிடையில்தான் கடலில் இறங்கலாம்.. 

இந்த கடற்கரைக்கும் நான்காவது கடற்கரையான Clovelly கடற்கரைக்கும் இடையில்தான் புகழ்பெற்ற Waverly மயானம் உள்ளது. நான் இந்த மாயனத்தைப்பார்த்த பொழுது யோசித்தேன் மண்ணிற்குள் மீளதுயிலில் இருந்தாலும் கொடுத்துவைத்தவர்கள் என்று.. இந்த இடத்திலிருந்து பார்க்கும் பொழுது கடலோர காட்சி மிகவும் அழகானது.. 

762-FCAD9-AC85-4-C5-E-827-B-665-D6-A6-C2

அதே போல இந்த Bronte குன்றின் மீது 
Keizo Ushio என்ற யப்பானின் புகழ்பெற்ற சிற்ப கலைஞரின் Twice Twist எனும் சிற்பமும் உள்ளது.

large.9C734B70-7087-4D09-A021-4CA0F269BDFE.jpeg.ee1b61ab3a04d665bb0f11840c4db427.jpeg

அடுத்ததாக எனக்கு பிடித்த அமைதியான Clovelly கடற்கரை மிகவும் குறுகிய, அலைகளற்ற பாறைகளை அதிகம் உடைய கடல்.. snorkeling செய்வேரை அதிகமாக காணலாம்.. பாறைகளிற்கிடையே அமைந்த நீச்சல் குளமும் உள்ளது.. 

06666431-0-BE4-4-A94-B7-CC-E28-D7-DA2-DE

இறுதியாக Coogee கடற்கரை..
இதுவும் ஓரளவிற்கு நீளமான கடற்கரை.. அமைதியான அலைகள், நிழல்தரும் மரங்கள் சூழ்ந்த அழகிய கடற்கரை.. 

A670379-D-F6-A2-4-B79-B634-199-E0-E4-CCB

நன்றி

- பிரபா சிதம்பரநாதன்

நீங்கள் இணைத்திருக்கும் படங்களையும், அவற்றினை நீங்கள் ரசித்து வர்ணிக்கும் விதத்தினையும் பார்க்கும்பொழுது உங்களின் இயற்கை அழகுமீதான பற்றுப் புரிகிறது. அடிக்கடி இங்கே உங்களின் பயணங்களின் பதிவுகளை இணைக்கிறீர்கள். காடுகள் நடுவே பயணிக்கும் நெடுஞ்சாலை, பசுமையான வெளிகள், இடையிடையே எரிந்து போன காடுகள், அதற்குள்ளிருந்து துளிர்க்கும் சிறிய உயிர்கள் என்று உங்களின் பார்வை பல விடயங்களைச் சொல்கிறது.

இப்போது கடற்கரையும் சிற்பங்களும். நானும் சிட்னியில்த்தான் இருக்கிறேன். ஆனால், இடங்கள் பார்த்ததில்லை. பார்க்கலாம் இனி. 

உங்களின் பதிவிற்கு மிக்க நன்றிகள் பிரபா சிதம்பரநாதன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 23/12/2020 at 00:03, Maruthankerny said:

ஒரே கல்லிலேயே இப்படி செதுக்கி எடுத்துவிட்டு 
மனப்பாரத்தை குறைக்க என்று நடக்க போகும் எங்களை 
போன்றவர்களின் மூளையை குடைவதுக்கு ஒண்றோடு ஒன்று 
புகுந்து இருப்பதுபோல செய்து வைத்திருக்கிறார் என்று எண்ணுகிறேன்.
நிம்மதியா இருக்கிறது என்றால் இருந்து பாருங்கள் என்பதுபோல இருக்கிறது 

இவரது சிற்பங்கள் பெரும்பாலும் Möbius Strip என்பதை நினைவுபடுத்துவதாக இருக்கும் என Sculpture by Sea இணையத்தளத்தில் வாசித்தேன்.. 

ஆசையாக கடலை பார்க்கப்போகும் என்போன்றவர்கள் இங்கே நின்று மூளையை குடையமாட்டார்கள்.. பார்த்தோமா ரசித்தோமா சரி என்றுவிட்டு நடையை கட்டுவார்கள்

10 hours ago, ரஞ்சித் said:

நீங்கள் இணைத்திருக்கும் படங்களையும், அவற்றினை நீங்கள் ரசித்து வர்ணிக்கும் விதத்தினையும் பார்க்கும்பொழுது உங்களின் இயற்கை அழகுமீதான பற்றுப் புரிகிறது. அடிக்கடி இங்கே உங்களின் பயணங்களின் பதிவுகளை இணைக்கிறீர்கள். காடுகள் நடுவே பயணிக்கும் நெடுஞ்சாலை, பசுமையான வெளிகள், இடையிடையே எரிந்து போன காடுகள், அதற்குள்ளிருந்து துளிர்க்கும் சிறிய உயிர்கள் என்று உங்களின் பார்வை பல விடயங்களைச் சொல்கிறது.

இப்போது கடற்கரையும் சிற்பங்களும். நானும் சிட்னியில்த்தான் இருக்கிறேன். ஆனால், இடங்கள் பார்த்ததில்லை. பார்க்கலாம் இனி. 

உங்களின் பதிவிற்கு மிக்க நன்றிகள் பிரபா சிதம்பரநாதன்.

உங்களது கருத்திற்கு மிக்க நன்றி.. 

உங்களுக்கும் இயற்கை மீது பற்றும் நேரமும் கிடைத்தால் கட்டாயம் பாருங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.