Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கரி சாம்பல் – உலகப்போர் 2 - பாகம் 12

Featured Replies

large.4960AC78-4A0B-4379-A40F-3B9329DEBEA3.jpeg.d4fca292695b10f4b24e9bd84224d712.jpegசோவியத் யுத்தம் ஜேர்மனியின் ராணுவத்தை மட்டுமல்ல ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் சிதைக்க ஆரம்பித்திருந்தது. இந்தப் போர் எவ்வளவு காலம் நீடிக்கும் என்று ஒருவராலும் உறுதியாகச் சொல்லமுடியவில்லை. எப்படிப் பார்த்தாலும் நீ்ண்டதொரு போருக்கு ஏற்ற பொருளாதார பலம் ராணுவத்திடம் இல்லை. 1930களில் இருந்தே ராணுவத்தை ஜேர்மனி செழுமைப்படுத்த ஆரம்பித்து விட்டது என்றாலும் சோவியத் யுத்தம் ஏற்படுத்திய பின்னடைவு ஜேர்மனியை சோர்வாக்கியது. கரி, எண்ணெய், இரும்பு உள்ளிட்ட மூலப்பொருள்கள் கிடைத்தபாடில்லை. ஆயுதங்கள் தயாரிப்பிலும் சுணக்கம். 1941 அரை ஆண்டில் மட்டும் 1823 போர் விமானங்களை ஜேர்மனி இழந்திருந்தது. இழப்பை ஈடுகட்ட 1600 விமானங்களே உருவாக்கப்பட்டன. Wehrmacht வீர்ர்களுக்கு போதுமான உணவு கிடைக்கவில்லை.

ராணுவ அமைச்சர் Fritz Todz 1941 இறுதியில் நிலைமையை ஓரளவுக்குச் சீராக்கினார். நாம் எதிர்பார்த்ததைக் காட்டிலும் நீண்ட போருக்கு நாம் தயாராக வேண்டும் என்று சுட்டிக்காட்டினார். வேலையை தொடங்கும் முன்பே பிப்ரவரி 1942ல் இவர் ஒரு விபத்தில் இறந்து போனார். மாற்றாக வந்து சேர்ந்த அர்பேரட் ஸ்பீர் (Allbert Speer)  ராணுவத்தை பலப்படுத்தும் பணியை தொடர்ந்து மேற்கொள்ள ஆரம்பித்தார். ராணுவ அமைச்சகத்தின் பலத்தையும் அதிகப்படுத்திகொண்டார். மக்களுக்கு உணவில்லை, எண்ணெயை இல்லை, வீடில்லை என்றால் பரவாயில்லை பஜ்ஜெட்டின் பெரும் பகுதி ராணுவத்துக்கு ஒதுக்கவேண்டும் என்று விண்ணப்பித்து வெற்றியும் பெற்றார்.

போர்க்களத்தில் தோல்விகள் ஏற்பட்ட போதும், பொருளாதாரம் படுத்துக்கொண்ட போதும், மக்கள் அவதிப்பட்ட போதும், ராணுவத்தின் வளர்ச்சி அடுத்த மூன்று ஆண்டுகளில் மூன்று மடங்கு அதிகரித்தது. 1944ல் பிரிட்டனை விட ஐந்து மடங்கு அதிகமாக டாங்கிகளை உருவாக்கியது. அதிசயிக்கத்தக்க வகையில் 41000 போர் விமானங்கள் தயாரிக்கப்பட்டன. (ஜப்பான் தனியே 28000 விமானங்களை உருவாக்கியது)

தனிப்பட்ட முறையில் இது அசுர சாதனை என்பதில் சந்தேகமில்லை. ஆனால், சோவியத், பிரிட்டன், அமெரிக்கா மூன்றும் ஒன்று சேர்ந்ததால் ஏற்பட்ட பலத்தின் முன்னால் ஜேர்மனியின் வளர்ச்சி அடிபட்டு போனது. அதே 1944ல் இந்த மூன்று தேசங்களிடம் இருந்த போர் விமானங்களின் எண்ணிக்கை 1,63,000.

ஆயுத தயாரிப்புகளில், ஒன்பதுக்கு இரண்டு என்னும் விகிதாசாரத்தில் நேச அணி அச்சு அணியை முந்திச் சென்றது. இன்னும், இன்னும் என்று ஹிட்லர் வெறியுடன் உந்தி்த் தள்ளியபோதும் ஜேர்மனியால் நேச அணியின் பலத்திற்கு அருகே செல்ல முடியவில்லை. ஆனால் முடியும் என்று இறுதிவரை நம்பினார். ஏதாவது அதிசயம் நிகழும் என்று காத்திருந்தார்.

தான் கைப்பற்றிய ஐரோப்பிய பிரதேசங்களில் இருந்து வளங்களை உறிஞ்சிக்கொள்ள ஆரம்பித்தது ஜேர்மனி. இயற்கை வளங்கள், மூலப்பொருள்கள், தங்கம் முதல் தகரம் வரை எது கிடைத்தாலும் அபகரித்துக்கொண்டது. போர் தயாரிப்புப்பணிகள் மலையாகக் குவிந்திருப்பதால் ஆள்களையும் அள்ளிப் போட்டுக்கொண்டு அழைத்து வந்தார்கள். சம்பளமில்லா வேலை அளிக்கப்பட்டது. சிறப்பு பொருளாதார மையங்கள் அமைத்து உற்பத்தியைப் பெருக்கும் முயற்சிகள் மேற்கொள்ளபட்டன. ஹிட்லர் விரட்டிக்கொண்டிருந்தார். இன்னும், இன்னும்.

பிரான்ஸிலிருந்து கணிசமாக லாபம் கிடைத்துக்கொண்டிருந்தது. ஒப்பந்தம் போட்டுக்கொண்ட பிறகு, போர் விமானங்கள், கப்பல்கள், தகவல்கள் தொடர்பு கேபிள்கள், இரும்பு பொருள்கள், டர்பைன்கள், மோட்டார் போன்றவை உருவாக்கப்பட்டன. பிரெஞ்சு நிறுவனங்கள் நாசிகளின் கட்டுப்பாட்டில் இயங்கின. 1643 இறுதியில், பிரெஞ்சு மொத்த உற்பத்தியில் 40 சதவீதம் ஜேர்மனிய தேவைக்கு பயன்படுத்தப்பட்டது.

டச்சு நிறுவனங்களும் பெருமளவில் ஜேர்மனிக்காகப் பணியாற்றின. டச்சு பொருளாதார அமைச்சரான Hans Max Hirschfeld  என்பவரை போர் முடியும்வரை ஜேர்மனி பதவியில் வைத்திருந்தது. அவர் ஒரு ஜேர்மனிய யூதர் என்ற போதும். வைத்திருந்ததற்கு ஒரே காரணம், அவருடைய செயல்திறன். 1644ல் அவர் தலைமையில் தொழில் உற்பத்தி 80 சதவீதம் அதிகரித்தது. மின்சாரம், கப்பல் கட்டுமானம், தொழில்நுட்பப் பணிகள் என்று பல்துறை வளர்ச்சி சாத்தியமானது. அத்தனையும் ஜேர்மனியின் ராணுவ இயந்திரத்தில் போய் விழுந்தது.

ஹிட்லரின் போர் வெறிக்கு தீனி போடும் அளவுக்கு வேலையாட்கள் கிடைக்காதது பெரிய ஏமாற்றமாக இருந்தது. ஜுலை 1939ல் 10.4 மில்லியன் தொழிலாளர்கள் இருந்தனர். ஐந்து ஆண்டுகளில் 7.5 மில்லியனாக இது குறைந்து போனது. பிரான்ஸ், பிரிட்டன், சோவியத் என்று பெரும் சக்திகளுடன் ஒரு பக்கம் ராணுவம் மோதிக்கொண்டிருந்த போது, மறுபக்கம் தொழிலாளர்கள் குறைந்து கொண்டே போனது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதை ஈடுகட்ட, உள்ளூர், வெளியூர் போர்க் கைதிகளை பயன்படுத்த ஆரம்பித்தனர். ஆகஸ்ட் 1944ல் 7.6 வெளிநாட்டினர் கட்டாயப்பணியில் அமர்த்தப்பட்டனர். இவர்களுள் 1.9 மில்லியன் பேர் போர்க்கைதிகள். மிச்சமுள்ளவர்கள் சிவிலியன்கள். பெரும்பாலும் அடிமைகள். லட்சக்கணக்கானவர்களை கொண்டு வந்த பிறகும் உற்பத்தியில் பெரிய மாற்றம் ஏற்படவில்லை. அயல் தேசப் போர்க்கைதிகளால் கடினமான பணிகளில் தொடர்ந்து ஈடுபட முடியவில்லை.

மொத்தத்தில் ஜேர்மனியின் போர் கால அயல்தேசக் கொள்கை தோல்வியையே தழுவியது. நீடித்த லாபம் எங்கிருந்தும் கிடைக்கவில்லை. டச்சு மற்றும் பிரெஞ்சு உற்பத்தி அதனளவில் கவர்ச்சிகரமானதாக இருந்தாலும், ஜேர்மனியின் தேவையோடு ஒப்பிடும்போது சுண்டைக்காய் அளவுக்கே இருந்தன. இத்தனைக்கும் போலந்து போன்ற நாடுகளில் இருந்து சக்கையாக ஜேர்மனி உறிஞ்சிக்கொண்டு தான் இருந்தது. போலந்து மக்கள் உணவில்லாமல் பஞ்சத்தால் இறந்து கொண்டிருந்தனர். கைப்பற்றப்பட்ட உணவுப்பொருட்கள் உடனுக்குடன் ராணுவத்தினருக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

பிரிட்டன் தனது கொலனி நாடுகளில் இருந்து (உதாரணத்திற்கு இந்தியா) சிறிது சிறிதாக உறிஞ்சி, நீடித்த நெடிய லாபம் அடைந்தது. ஜேர்மனிக்கு அந்த அளவுக்கு பொறுமை இல்லை. கிடைக்க, கிடைக்க அபகரித்துக்கொண்டார்கள். இந்தப் போக்கு ஜேர்மனிக்கும் லாபம் அளிக்கவில்லை. குதிரைகள், கம்பளி ஆடைகள், கருவிகள், தானியங்கள் என்று கண்ணில் சிக்கியவர்களை சர்வ சாதாரணமாகச் சித்திரவதை செய்து கொன்று குவித்தாலும், மக்கள் கும்பல் கும்பலாக வெளியேறினர். இப்படிக் கைப்பற்றப்பட்ட பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற ஆரம்பித்தால் எப்படி உற்பத்தி நடக்கும்? எங்கிருந்து லாபம் கிடைக்கும்?

1941-42 ஆண்டுகளில் கிரிஸில் விளைந்த தானியங்கள் நாசிகளால் முழுமையாக கொள்ளையடிக்கப்பட்டுவிட்டதால் பஞ்சம் வந்து கிட்டத்தட்ட மூன்று லட்சம் பேர் உயிரிழக்க நேரிட்டது. கிறிஸில் சோவியத் எதிர்ப்பாளர்களின் எண்ணிக்கை அதிகம். சூட்சுமமாக சிந்திக்க முடிந்திருந்தால், இந்த எதிர்ப்பாளர்களை ஜேர்மனி தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு இருந்திருக்கலாம். செய்யவில்லை. இதனால் சோவியத் எதிர்ப்பாளர்களாக இருந்தவர்கள் நாசி எதிர்ப்பாளர்களாக மாறிப்போனார்கள்.

பிரிட்டனும் அமெரிக்காவும் தங்களுக்குள் செய்து கொண்ட பரிமாற்றங்கள் முக்கியமானவை. நிதி, தொழில்நுட்பம், ஆயுதங்கள், வீரர்கள், தொலைத்தொடர்பு வசதிகள், உளவுச்செய்திகள், மூலப்பொருட்கள் என்று பரந்த அளவில் பகிர்ந்து கொண்டு தங்களைப் பலப்படுத்திக்கொண்டார்கள் சோவியத்துடன் இணைவது என்னும் ராஜதந்திர முடிவின் மூலம் அவர்களது பலம் பன்மடங்கு அதிகரித்தது. ஜேர்மனி இந்த அணுகுமுறையைப் பயன்படுத்தவில்லை. இத்தாலியிடம் இருந்தும் ஜப்பானிடம் இருந்தும் ஜேர்மனி அதிகம் பெற்றுக்கொள்ளவில்லை. ஒருங்கிணைப்பு இல்லை. கொடுக்கல், வாங்கல் இல்லை. தனித்தனியே பலப்படுத்திக்கொண்டாலும் ஒருங்கிணைந்த பலம் உருவாகவில்லை.. குழு முயற்சி இல்லை. போக்குவரத்து, தகவல் தொடர்பு உள்ளிட்ட அடிப்படை ஒருங்கிணைப்பு கூட உருவாகவில்லை.

1940 முதல் 1944 வரை, சோவியத்தின் ஆயுதத் தயாரிப்பு நான்கு மடங்கு பெருகியது. 1942ல் 24,000 டாங்கிகள், 21,000 போர்விமானங்கள் உருவாக்கப்பட்டன. (ஜேர்மனி இதே காலப்பகுதியில் 9,300 டாங்கிகளையும் 15,000 விமானங்களையும் உருவாக்கியது.) 1942ல் சோவியத்தின் உற்பத்தி இரட்டிப்பானது. போரில் சந்தித்த இழப்புகளையும் மீறி இந்த உற்பத்தி சாத்தியமானது. போர் காலத்தில் சோவியத்தின் ஒட்டுமொத்த உற்பத்தி மலைக்க வைக்கக்கூடியது. ஒரு லட்சம் டாங்கிகள், ஒரு லட்சத்து முப்பதாயிரம் போர் விமானங்கள், எட்டு லட்சம் துப்பாக்கிகள் (வெல்ட் கன், மோர்ட்ஸ்)

இந்த பிரமாண்டமான உற்பத்தி சாத்தியமானதற்குக் காரணம் மக்களின் ஒத்துழைப்பு. சோவியத் தாக்கப்பட்ட போது மக்கள் கிளர்ந்து எழுந்தனர். ஸ்ராலின் அவர்களை ஒருங்கிணைத்தார். போர் முடியும் வரை பல்வேறு தட்டுப்பாடுகள் இருக்கும் என்று ஸ்ராலின் அறிவித்த போது மக்கள் அதைப் புரிந்து கொண்டனர். பொறுமை காத்தார்கள். ஸ்ராலினுக்கு உறுதுணையாக நின்றனர். மாபெரும் தேசபக்திப்போர் என்று பெயரிட்டு போர்க்களம் புகுந்தார்கள். ஹிட்லருக்கு ஜேர்மானியரின் ஏகோபித்த ஆதரவு கிடைக்கவில்லை. மயக்கத்தில் இருந்த பெரும்பாலான நாசி ஆதரவாளர்களும் முடிவு நெருங்க நெருங்க மயக்கம் தெளிந்து சுதாகரித்துக் கொண்டனர். அகண்ட பெருமை மிக்க ஜேர்மானிய சாம்ராஜ்யத்தை உருவாக்குவதற்காக வாக்களித்திருந்தார் ஹி்ட்லர். அவரால் உருவாக்க முடிந்தது அகண்ட நரகத்தை மட்டுமே. வலி, வேதனை, இழப்பு. வேறு எதையும் அளிக்க முடியவில்லை ஹிட்லரால்.

ஹிட்லர் எதிர்ப்பு கூட்டணியின் பலம் தொடர்ந்து வலுவடைந்து வந்தது. பிரிட்டன் அமெரிக்கா இரு நாடுகளும் இந்தப் பலத்தைப் பயன்படுத்திக்கொண்டன. தேவைப்படும் பிரதேசங்களை முடிந்தவரை கைப்பற்றிக் கொள்ளவேண்டும். ஜேர்மனியும் ஜப்பானும் கைப்பற்றி இருக்கும் பிராந்தியங்களை விடுவிக்கவேண்டும்.

large.1802529464_Normandylanding1944.jpg.92777260dedcc940ca2702f2840c8b9e.jpg

ஜுன்6,1944 அன்று பிரான்ஸின் வடக்குப் பகுதியுள் நுழைந்தது நேச நாடுகள் படை. Normandy Landing (D-Day)  என்று இந்த தினம் அழைக்கப்படுகிறது. முதல் முறையாக, மிகப் பெரும் அளவில் 1,30,000 வீரர்கள் இந்த தாக்குதலில் ஈடுபடுத்தப்பட்டார்கள். பிரிட்டனின் தெற்குப்பகுதியில், பிரான்ஸிற்கு வடக்கே உள்ள நோர்மண்டி என்னும் பகுதியில் இந்த வீரர்கள் களமிறக்கப்பட்டார்கள். பிரிட்டன், அமெரிக்கா, கனடா மூன்றும் சேர்ந்து தொடுத்த தாக்குதல் அது. ஆகாய மார்க்கமாகவும் கடல் மார்க்கமாகவும் அடுத்தடுத்து தாக்கினார்கள். ஓகஸ்ட் 25ம் திகதி பாரிஸ் விடுவிக்கப்பட்டது. கையோடு வடக்கு ஜேர்மனிக்குள் நுழையலாம் என்று திட்டமிட்டிருந்தார்கள். இயலவில்லை. இத்தாலிக்குகுள் புகுந்து அங்கே படர்ந்திருந்த ஜேர்மன் படைகளை தாக்கியழித்தனர்.

பசிபிக் பகுதியில், அமெரிக்கப் படைகள் ஜப்பானியப் படைகளோடு எதிரெதிர் மோதி முறியடித்துக்கொண்டிருந்தன.  ஜூன் 1944 மத்தியில் Mariana,Palau islands கைப்பற்றப்பட்டன. பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள தீவுகள் இவை. டிசம்பர் 16, 1944ல் கிறீஸ், அலபானியா, தெற்கு யூகோஸ்லோவியா ஆகிய முன்று பகுதிகளிலும் இருந்து ஜேர்மனி பின்வாங்கியது.

பாக்கி இருப்பவை ஜேர்மனியும் ஜப்பானும் மட்டுமே.

இதற்கிடையில், ஜேர்மனியிடம் இருந்து விடுவிக்கப்பட்ட பிரதேசங்களை என்ன செய்வது என்பது குறித்து நேச நாடுகளுக்கும் சோவியத்திற்கும் கருத்து வேறுபாடு இருந்தது. 1943 டிசம்பர் 12ம் திகதி சோவியத் யூனியன் செக்கோஸ்லாவாக்கியாவுடன் ஓர் ஒப்பந்தம் போட்டுக்கொண்டது. நட்புறவு, பரஸ்பர உறவு, யுத்தத்திற்கு பிறகான ஒப்பந்தம் அது. 1944 ஜலை 26 அன்று போலந்துடன் போட்டுக்கொண்ட ஒப்பந்தம் போலந்தின் விடுதலையை அங்கீகரித்தது. 1944 டிசம்பர் 10ம் திகதி பிரான்ஸுடன் நல்லுறவு தொடர்பாகவும் ஒத்துழைப்பு தொடர்பாகவும் ஒப்பந்தம் போட்டுக்கொண்டது சோவியத்.   

போலந்திலும் யூகோஸ்லோவாக்கியாவிலும் போருக்கு முந்தய ஆட்சியாளர்களை மீண்டும் பதவியில் அமர்த்தவேண்டும் என்று பிரிட்டனும் அமெரிக்காவும் விரும்பின. சோவியத்யூனியனுக்கு இதில் உடன்பாடில்லை. மக்களை ஜனநாயக ஆட்சியை இந்த இரு நாடுகளிலும் சோவியத் அங்கீகரித்தது. பிற நாடுகளின் உள்விவகாரங்களில் நாம் தலையிடக்கூடாது என்றும் கேட்டுக்கொண்டது. பிரான்ஸில் பிரெஞ்சு தேசிய விடுதலைக் கமிட்டி உருவாவதை சோவியத் ஆதரித்தது. இத்தாலியில் ஜனநாயக ஆட்சிமுறை மலரவேண்டும் என்று சோவியத் அறிவித்தது.

பெப்ரவரி 4, 1945 அன்று தெற்கு உக்கிரேனில் உள்ள யால்டாவில் ஸ்ராலின், சேர்ச்சில், ரூஸ்வெல்ட் மூவரும் சந்தித்துக்கொண்டனர். மகாநாட்டு தீர்மானங்கள் இவை. ஜேர்மனி நிபந்தனை இன்றி சரணடைந்த பின்னரே ராணுவ நடவடிக்கைகள் நிறுத்தப்படவேண்டும். பாசிசத்தையும் நாசிசத்தையும் ஒழிக்கவேண்டும். போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும். ஜேர்மனியின் ராணுவத் தொழிற்சாலைகளின் ஆற்றலை அழிக்கவேண்டும். ஐரோப்பிய மக்களுக்கு ஏற்பட்ட இழப்புகளுக்கு நஷ்டஈடு தரவேண்டும். சுதந்திர ஜனநாயக ஜேர்மனி நிர்மாணிக்கப்படல்வேண்டும்.

large.1448829676_Yaltaconference.jpg.fec465637b76b846c5e45c7d15c335e5.jpg

சோவியத்யூனியன் மேலும் ஓர் அம்சத்தை இந்த தீர்மானத்தில் இணைத்துக்கொண்டது. ஜேர்மனியின் ராணுவ வெறியையும் நாசிசத்தையும் ஒழிக்கவேண்டும் என்பதில் சந்தேகமில்லை. ஜேர்மனி இனி உலகில் அமைதியைக் ஒழிக்கவேண்டும் உத்தரவாதம் ஒன்றை பெற வேண்டும். இதுவே நமது லட்சியம். ஜேர்மனி செய்த பெற வேண்டும், ஜேர்மனியர்களை நாம் அழிக்கக்கூடாது. அது முறையு்ம அல்ல. கூடுதலாக சோவியத்  இன்னொரு வாக்குறுதியை அளித்தது. ஜேர்மனி சரணடைந்து இரண்டு, மூன்று மாதங்கள் கழிந்த பிறகு, ஜப்பான் மீது ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும்.

1945 தொடக்கத்தில் சோவியத்யூனியனின் எல்லைகளில் 94,12,000 வீரர்கள் இருந்தனர். 1,44,200 சாதாரண மற்றும் மார்டர் பீரங்கிகள், 15,700 டாங்கிகள் மற்றும் தானியங்கி பீரங்கிகள், 22,600 போர் விமானங்கள். தரைப்படையில் 81,80,000 வீரர்கள், விமானப்படையில் 6,33,000 பேர். கடற்படையில் 4,52,000 பேர். வான் எதிர்ப்புப் பாதுகாப்பு படையில் 2,09,000 பேர். அமெரிக்க பிரிட்டிஷ் ராணுவத்தில் 16.4 மில்லியன் நபர்கள் இருந்தனர்.

ஜேர்மனி வெகுவாகப் பலவீனமடைந்திருந்தது என்றாலும் இன்னமும் கணிசமான ராணுவ பலம் கைவசம் இருந்தது. சோவியத், சோவியத் என்று தான் இன்னமும் உச்சரித்துக்கொண்டிருந்தது ஜேர்மனி. காரணம், அதிக இழப்புகளை அது சோவியத்திடம் இருந்து தான் பெற்றுக்கொண்டிருந்தது. சோவியத் மட்டும் இடையூறு இல்லாமல் இருந்திருந்தால் வெற்றியை நோக்கி மட்டுமே ஜேர்மனி பயணம் செய்திருக்கும்.

ஆனாலும், முற்றாக நம்பிக்கையை இழக்கவில்லை ஜேர்மனி. சோவியத் எல்லையில் தன் முழுக் கவனத்தையும் குவித்தது. போனது போகட்டும். இனியாவது முழு விழிப்புடன் இருப்போம். எக்காரணத்தை முன்னிட்டும் சோவியத் பேர்லினை நெருங்கக்கூடாது. தேவை உறுதியான பாதுகாப்பு. பாதுகாப்பு வளையம். சோவியத்தை அழிக்கக்கூட வேண்டாம். தடுத்து நிறுத்திவிட முடிந்தாலே பெரிய விடயம். சுதாகரித்துக்கொள்வதற்கும் பலத்தை கூட்டிக்கொள்வதற்கும் சிறிது அவகாசம் தேவைப்படுகிறது. எதிரியே பொறு.

முனைப்புடன் முன்னேறிக்கொண்டிருந்தது சோவியத். ஜேர்மனியில் பிடியில் இருக்கும் அத்தனை நாடுகளையும் விடுவிக்கவேண்டும். பிறகு பேர்லினை குறிவைத்து தாக்கவேண்டும்.

ஜனவரி 12 முதல் பிப்ரவரி 2, 1945 வரை நாசிகளோடு நடத்திய போரின் விளைவாக, போலந்து முழுவதுமாக விடுவிக்கப்பட்டது. போலந்தின் தலைநகர் வார்சாவை நாசிகள் சின்னாபின்னப்படுத்தியிருந்தனர். வரலாற்றுக்கட்டங்களும் தேவாலயங்களும் அரண்மனையும் நாடகமன்றமும் வெடி வைத்து தகர்க்கப்பட்டிருந்தன. நூலகங்களையும் விட்டுவைக்கவில்லை. பல்லாயிரக்கணக்கான நூல் பிரதிகள், பழைய அச்சேடுகள், வரைபடங்கள் ஆகியவை கொளுத்தப்பட்டிருந்தன., ஜேர்மனி ஆக்கிரமிப்பின்போது போலந்தில் மட்டும் 6 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இறந்ததாக போருக்கு பின்னரான போலந்து அரசாங்கத்தின் கணிப்பீடு கூறுகிறது.

large.Poland.jpg.8864be9ab8cf33ac4e17b0209b438aa7.jpg

வார்சோ, சோவியத்தால் விடுவிக்கப்பட்டதை அறிந்ததும் சிதறிக்கிடந்த மக்கள் நகரத்தை நோக்கித் திரும்பி வந்தனர், செம்படை வீரர்களின் கைகளைப் பற்றி குலுக்கி தங்கள் மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டார்கள். போலந்து ராணுவவீரர்கள் ஆரவாரத்துடன் வரவேற்றனர். போலந்து குடியரசு அரசாங்கம் (Lublin Committe) தோற்றுவிக்கப்பட்டபோது சோவியத் ஆதரவு அளித்தது. ஆனால், பிரிட்டனும் அமெரிக்காவும் ஓடி ஒளிந்து கொண்ட முந்தைய ஆட்சியாளர்களை ஆதரித்தன.

போலந்துக்கு பண உதவியும் செய்தது சோவியத். மீட்புப்பணியின் தொடக்கமாக 60,000 டன் ரொட்டியும் ஏராளமான மருந்துகளும் அளிக்கப்பட்டன. தற்காலிக அரசாங்கம் சோவியத்துக்கு அனுப்பிய வாழ்த்து செய்தி இது. « கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருந்த எங்கள் தலைநகரமாகிய வார்சோ விடுவிக்கப்பட்டுவிட்டதால் லட்சக்கணக்கான எங்கள் மக்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான கிராமங்களும் நகரங்களும் உங்களால் விடுவிக்கபட்டுள்ளன. எங்கள் ஆழ்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.»

ஜனவரி 13 முதல் ஏப்ரல் 25 வரையிலான ராணுவ நடவடிக்கையின் மூலமாக, கிழக்கு ப்ரஷ்யாவிலும் போலந்தின் வடபகுதியிலும் உள ஜேர்மனியத் துருப்புக்கள் முறியடிக்கப்பட்டன. ஏப்ரல் 13 ம் திகதி ஒஸ்ரியாவின் தலைநகரம் வியன்னா விடுவிக்கபட்டது. மார்ச் 10 திகதி செக்கோஸ்லாவாக்கியவுக்குள் காலடி எடுத்து வைத்தது சோவியத். நாசிகள் மீதான தாக்குதல் ஒரு பக்கம். புரனமைப் பணிகள் மற்றொரு பக்கம். சீரழிந்திருந்த மக்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன. இடிந்து கிடந்த பாலங்கள் சீரமைக்க்பட்டன. ஆங்காங்கே நாசிகள் புதைத்து வைத்திருந்த கண்ணிவெடிகள் அகற்றப்பட்டன.

தலைநகம் பிராக்கை நோக்கி (Prag) மே 6ம் திகதி முன்னேற ஆரம்பித்தது சோவியத். அப்போது அங்கே உள்நாட்டு கலகம் வெடித்துக்கொண்டிருந்தது. ஜேர்மனிக்கு எதிராக வீதிகளில் மக்கள் திரண்டுகொண்டிருந்தனர். நேச நாடுகளுக்கு அவர்கள் அவசர செய்தியை அனுப்பிக்கொண்டிருந்தனர். ஜேர்மனி பிராக்கை நாலாபுறமும் சுற்றிவளைத்துவிட்டது. எங்களால் சமாளிக்கமுடியவில்லை. நேச நாடுகள் தயவுசெய்து உதவிக்கு வாருங்கள். சோவியத்தின் தலையீட்டால் மே 9ம் திகதி செக்கோஸ்லாவாக்கியா முழுவதுமாக விடுவிக்கப்பட்டது. வீடுகளிலும் கோபுரங்களிலும் அரசாங்க கட்டடங்களிலும் செக்கோஸ்லாவாக்கிய கொடியும் சோவியத் கொடியும் ஒருங்கே பறக்கவிடப்பட்டன.

அடுத்து பேர்லின்.

போலந்து இல்லை. ரூமேனியா இல்லை. ஆகவெ எண்ணெய் வளமும் இல்லை. எரிபொருள் இல்லாதபோது எப்படி விமானம் பறக்கும்? சோவியத், சோவியத் என்று தன் கவனம் முழுவதையும் கிழக்கில் மட்டுமே வெறியுடன் ஹிட்லர் குவித்திருந்தது இமாலய தவறாகப்போனது. விமானங்களையும் வீரர்களையும் ஆயுதங்களையும் தன்னம்பிக்கையையும் சிறிது சிறிதாக இழக்க ஆரம்பித்தது ஜேர்மனி.

தோல்வி கொடுக்கும் வலி பெரியது. ஆனால், அதற்காக இப்போது அழுதுகொண்டு உட்கார்ந்திருக்க முடியாது. சோவியத் நெருங்கிவிட்டது. எப்போதும் பேர்லினுக்குள் அவர்கள் நுழையலாம். எப்போது வேண்டுமென்றாலும் ஜேர்மனி சரியலாம். ராணுவத்தினரிடையே இருந்த நம்பிக்கையின்மை குறித்தும் உற்சாகமின்மை குறித்தும் ஹிட்லருக்கு செய்தி வந்தது. தொய்ந்து கிடக்கிறார்கள் வீரர்கள். இத்தனைப் பெரிய தோல்வியை அவர்கள் இதுவரை சந்தித்தது இல்லை. பயப்படுகிறார்கள்.

அனுதாபம் அல்ல, கோபமே ஏற்பட்டது ஹிட்லருக்கு. அதெப்படி அஞ்சலாம்? எப்படி ஓடி ஓளியலாம்? அவர்கள் நியமிக்கப்பட்டது எதற்காக? தெளிவாகச் சொல்லிவிடுங்கள். சோவியத்தை முறியடித்தே தீரவேண்டும். இருந்த இடத்தை விட்டு நகராமல், பின்வாங்காமல் தொடர்ந்து போரிட வேண்டும. யார் பின்வாங்க துணிந்தாலும் சரி, அவ்வாறு செய்யச் சொல்லி யார் கட்டளையிட்டாலும் சரி, அவர்களை அந்த இடத்திலேயே சுட்டுத்தள்ளுங்கள். இன்னொரு செய்தியும் வந்தது. நம் வீரர்கள் உயிர் பிழைத்தால் போதுமென்று சோவியத்படையினரிடம் சரணடைகிறார்கள். அவமானத்தால் கூனிக்குறுகிப் போனார் ஹிட்லர். சரணடைபவர்களின் குடும்பத்திரனைத் தண்டியுங்கள். நமக்கு அவப்பெயர் வாங்கிக் கொடுப்பவர்களை நாம் நசுக்கியழிக்கவேண்டும்.

ஹிட்லருக்கு மெல்லிய ஹிஸ்டீரியா உண்டு என்று பலர் குறிப்பிட்டிருக்கிறார்கள். இறுதி காலங்களில் அது இன்னமும் அதிகரித்திருக்கவேண்டும். எரிந்து விழுந்தார். குதித்தபடியே நரம்பு புடைக்கக் கத்தினார். தோல்விச் செய்தி கொண்டு வருபவரிடம் சீறினார். அமைதி ஒப்பந்தம் போட்டுக்கொள்ளலாமா என்று யார் சொன்னாலும் (ஹிட்லருடன் இருந்த பலரும் அப்போது சரணடைவது பற்றி சிந்திக்க ஆரம்பித்திருந்தனர்.) பெருங்குரலெடுத்து கத்த ஆரம்பித்தார். ஹிட்லருக்கு தெரிந்திருக்கக்கூடும். நன்றாகவே தொடங்கினோம். நன்றாகவே முன்னேறினோம். ஆனாலும் இறுதிக் கட்டத்தில் கை நழுவிக்கொண்டிருக்கிறது.

ஹிட்லருக்கு தோல்வி பயம். ஆகவே, கடுமையான சட்ட திட்டங்கள் பேர்லினை வலம் வந்தன. முழுமனத்துடன் சோவியத்தை எதிர்க்கவேண்டும். ஒத்துழைக்க மறுப்பவர்களுக்கு மரணதண்டனை.

மார்ச் 20ம் திகதி ஹிட்லர் உத்தரவு பிறப்பித்தார். எதிரிகளுக்கு பயன்படக்கூடிய எந்த ஆவணத்தையும் வைத்திருக்கவேண்டாம். அழித்துவிடுங்கள். அப்போதும் ஹிட்லருக்கு தன் மக்கள் குறித்து அக்கறை இருந்ததாக தெரியவில்லை. ஜேர்மனி தோற்றுவிட்டது என்றால் ஜேர்மனியர்கள் தோற்றுவிட்டார்கள் என்று பொருள். தோற்றப்போனவர்கள் எதற்கு உயிர் வாழவேண்டும்?

பிரிட்டன், அமெரிக்கா இரு நாடுகளின் மீதும் ஹிட்லருக்குப் பயமில்லை. இன்னும் சொல்லப்போனால் அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தது ஜேர்மனி. எனவே மே்றகு முனையில் இருந்து பெரும்பாலான படைகளை நகர்த்தி கிழக்கே கொண்டு வந்திருந்தார்கள். சோவியத் மட்டும் தான் பிரச்சனை. பிரிட்டனும் அமெரிக்காவும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள அவசரம் காட்டின. சோவியத் பேர்லினை சுற்றிவளைப்பதற்குள் நாம் அதை செய்துவிடவேண்டும். பேர்லினை சோவியத் கைப்ற்றிக் கொள்வது சோவியத்தின் பலத்தை இன்னமும் அதிகரித்துவிடும். மறந்துவிடவேண்டாம். நாஸிசத்தைப் போலவே கம்யூனிசமும் ஆபத்தானது தான். ஏப்ரல் 12ம் திகதி ரூஸ்வெல்ட் இறந்துபோனார். ஹாரி ட்ரூமென் அதிபராக நியமிக்கப்பட்டார்.

சோவியத் பேர்லினை நெருங்கியிருந்தது. பெலேரஷ்ய மற்றும் உக்கிரேனிய சேனைகள் பேர்லினை சுற்றிவளைக்க வேண்டும். ஜேர்மனிய படைகளை சிறுசிறு பகுதிகளாகப் பிரித்து ஒவ்வொன்றையும் தனித்தனியே தாக்கி அழிக்கவேண்டும். இது முன்பே கோட்டு வைத்திருந்த திட்டம். உயர்மட்ட அளவில் உட்கார்ந்து விவாதித்து இதை வரைந்திருந்தார்கள். இருபத்தைந்து லட்சம் பேர் கொண்ட படை உருவாக்கப்பட்டிருந்தது. மார்டர் பீரங்கிகள் தொகை 42,0000. போர்விமானங்கள் 75,000. டாங்கிகள் 6250.

ஏப்ரல் 16, அதிகாலை ஐந்து மணி. இருட்டு விலகியிருக்கவில்லை. சோவியத் தாக்க ஆரம்பித்தது. பீரங்கிப்படையும் விமானப்படையும் தாக்குதலை ஆரம்பித்து வைத்தன. இருபது நிமிடம் கழிந்த பிறகே பொதுத்தாக்குதல் ஆரம்பமானது. அன்றைய தினம் முடிவதற்குள் ஜேர்மனியில் அந்தப் பிராந்தியத்திற்கான தற்காப்பு வளையம் உடைக்கப்ட்டது.

அகண்ட ஜேர்மனியை அல்ல. உடையும் ஜேர்மனியைத்தான் கண்டார் ஹிட்லர். நகரங்களில் விரிசல்கள் விழ ஆரம்பித்தது. தோற்றுக்கொண்டிருகிறோம் என்னும் அச்சம் வெறுப்பையும் கோபத்தையும் ஒரு சேர மக்களிடையே உற்பத்தி செய்துகொண்டிருந்தது. இனி என்ன செய்யவேண்டும். இப்போது? ஹிட்லரால் இனி பேரழிவைத் தடுத்து நிறுத்தமுடியாது போலிருக்கிறதே. நொறுங்கத்தான் போகிறோமோ? ஹிட்லர் கட்டிய கனவுக்கோட்டை முற்றுப்பெறுவதற்கு முன்பே சிதறப்போகிதறதா? யார் செய்த தவறு இது?

நகரத்தின் மையத்தை நோக்கி முன்னேறியது சோவியத். சீ்ட்டுக்கட்டு சரிவது போல ஒவ்வொரு நகரமாக சரிந்து கொண்டிருந்தது. பகுதி பகுதியாக வீழ்ந்து கொண்டிருந்தது. பேர்லினின் மையத்தில் இருந்த ரிச்ஸ்டாக் கட்டடம் கைப்பற்றப்பட்டது. உச்சியில் பறந்து கொண்டிருந்த ஸ்வஸ்திகா கீழே இறக்கபப்பட்டது. சோவியத் கொடி பறக்க விடப்பட்டது.

இந்த வீழ்ச்சியை முன்னரே யூகித்திருந்த ராணுவ அதிகாரிகள் சொத்துக்களை விற்று குடும்பத்தினரை விமானம் ஏற்றி அயல் தேசம் அனுப்பியிருந்தனர். ஹிட்லரிடமும் கேட்டுப்பார்த்தார்கள். ஃப்யூரர், நீங்கள் பாதுகாப்பாக வேறு எங்காவது சென்றுவிடுகிறீர்களா? முடியாது என்றார் ஹிட்லர். வெறியேற விரும்புபவர்களை நான் தடுக்கப்போவதில்லை.

பேர்லினில் இருந்த ஈச் சான்சிலரிக்குப் (ஹிட்லரின் அலுவலகம்) பின்னால் இருந்த Fuhrerbunker  (தலைவரின் மறைவிடம்) க்கு வந்தார் ஹிட்லர். அங்கே அவருக்கு கிடைத்த கடைசி செய்தி *முஸோலினியின் மரணம். அந்த செய்தியை உள்வாங்கியபடி, தன் மரணத்திற்கான தயாரிப்புகளில் இறங்கினார். ஹிட்லர். நான் திருமணம் செய்துகொள்ளப்போகிறேன். ஏற்பாடு செய்யுங்கள்.கெப்பல்ஸ் என்று ஹிட்லர் உத்தரவிட்டபோது அதிர்ச்சியடையவில்லை கெப்பல்ஸ். இனி அதிர்ச்சியடைவதற்கு எதுவும் இல்லை.

*இனி தாக்குபிடிக்க முடியாது என்று ஏப்ரல் 1945 வாக்கில் முசோலினிக்கு தெரிந்துவிட்டது. சுவிற்சர்லாந்திற்கு சென்று அங்கிருந்து ஸ்பெயினுக்குத் தப்பிச்சென்றுவிடலாம் என்று திட்டமிட்டார். வழியில் இத்தாலிய எதிர்ப்பு இயக்கத்தினர் முசோலினியையும் அவர் மனைவியையும் கைது செய்தனர். ஏப்ரல்28,1945 அன்று இருவரும் கொல்லப்பட்டனர். அவர்களது உடல்கள் மிலனுக்கு கொண்டு செல்லப்பட்டு தலைகீழாக தொங்கவிடப்பட்டன. 

அந்தரங்க செயலாளரான மார்ட்டின் பர்மன்(Martin Bormann) இருவர் மட்டுமே அந்த ரகசிய அறையில் இருந்தனர். ஏப்ரல் 30ம் திகதி, ஈவா சைனயிற் எடுத்துக்கொண்டார். ஹிட்லர் தன்னை தானே சுட்டுக்கொண்டார். பத்து தினங்களுக்கு முன்பு தான் ஹிட்லர் தனது ஐம்பத்தாறாவது பிறந்த நாளை கழித்திருந்தார். ஜேர்மனியின் சான்சிலராக ஹிட்லர் பதவியேற்று பன்னிரண்டு ஆண்டுகள், மூன்று மாதங்கள் கழிந்திருந்தன. இரண்டு சடலங்களையும் பங்கருக்கு வெளியே கொண்டு வந்து எரித்தார்கள்.

மே 2ம் திகதி Wehmacht கொமாண்டர்,Wolfgang Leonhard  பேர்லினில் சரணடைந்தார். வீரர்களும் மக்களும் அமைதியை குறிக்கும் வெள்ளை நிற துணிகளை அசைத்துக் கொண்டிருந்தனர். சிலர் தங்கள் புஜங்களில் அதைக் கட்டியிருந்தனர். பலர் சிவப்பு நிற பட்டைகளை அணிந்து கொண்டனர். இரண்டு கொடிகளையும் செம்படை வீரர்களிடம் அசைத்துக் காட்டினார்கள். பெரும்பாலான செங்கொடிகளின் பின்புறம் நாசிக்கட்சியின் ஸ்வஸ்திக் சின்னம் இருந்தது. ஸ்வஸ்திக்கைக் கிழித்து அவசரத்தில் உருவாக்கப்பட்ட கொடிகள் அவை.

ஹிட்லரின் சீடரான Grand- Admiral Karl Donitz என்பவர் தன் தலைவரின் மரணத்தை முறைப்படி அறிவித்தார். «நம் ஃப்யூரர் அடோல்வ் ஹிட்லர் வீ்ழ்ந்துவிட்டார். அவருக்காக ஜேர்மனிய மக்கள் தலை சாய்த்து தங்கள் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறார்கள்  தற்கொலை செய்து கொண்டார் என்று சொல்வது ஃப்யூரரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் என்று நினைத்ததால் மரணத்தின் காரணத்தை அறிவிக்கவில்லை.

Fac-similé de la couverture du journal The Stars and Stripes, du 2 mai 1945 annonçant le décès d'Adolf Hitler

 ஹிட்லரின் வலது கரமான ஹைன்ரிஹ் ஹிம்லர் (Heinrich Himmler) , பிரிட்டனுடன் பேச்சுவார்தையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். மே 1ம் திகதி கோயபல்ஸ் தன் குடும்பத்தினருடன் தற்கொலை செய்து கொண்டார்.

1945, மே 8ம் திகதி ஜேர்மனி சோவியத்திடம் முழுமையாக சரணடைந்தது.

Edited by நியானி
திருத்தம்: ஐம்பத்தாறாவது

  • tulpen changed the title to கரி சாம்பல் – உலகப்போர் 2 - பாகம் 12
  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றி 

  • கருத்துக்கள உறவுகள்

பதிவுக்கு நன்றி ருல்பென். 

ஹிற்லர் இறந்து விட்டதாக பல ஆதாரங்கள் உடனிருந்தோராலேயே வழங்கப் பட்டும் அவர் ஆர்ஜென்டீனாவிற்குத் தப்பிப் போய் தலைமறைவாக பல ஆண்டுகள் வாழ்ந்து இயற்கையாக இறந்தார் என்று ஒரு காசு பார்க்கும் குழு ஆவணப்படங்கள் சில தயாரித்து விட்டிருக்கின்றன. மக்கள் நம்பவும் தலைப்படுகிறார்கள்.

நேச நாட்டுப் படைகளைக் குழப்ப முதலில் பெர்லினுக்குள் நுழைந்த ரஷ்யப் படையினரே ஹிற்லரின் இறப்பை உறுதிப் படுத்தாமல் தாமதித்தனர் என்றும் ஒரு கருத்து இருக்கிறது. 
 
  • கருத்துக்கள உறவுகள்
On 27/12/2020 at 17:56, tulpen said:

அந்தரங்க செயலாளரான மார்ட்டின் பர்மன்(Martin Bormann) இருவர் மட்டுமே அந்த ரகசிய அறையில் இருந்தனர். ஏப்ரல் 30ம் திகதி, ஈவா சைனயிற் எடுத்துக்கொண்டார். ஹிட்லர் தன்னை தானே சுட்டுக்கொண்டார். பத்து தினங்களுக்கு முன்பு தான் ஹிட்லர் தனது ஐம்பதாவது பிறந்த நாளை கழித்திருந்தார். ஜேர்மனியின் சான்சிலராக ஹிட்லர் பதவியேற்று பன்னிரண்டு ஆண்டுகள், மூன்று மாதங்கள் கழிந்திருந்தன. இரண்டு சடலங்களையும் பங்கருக்கு வெளியே கொண்டு வந்து எரித்தார்கள்.

மே 2ம் திகதி Wehmacht கொமாண்டர்,Wolfgang Leonhard  பேர்லினில் சரணடைந்தார். வீரர்களும் மக்களும் அமைதியை குறிக்கும் வெள்ளை நிற துணிகளை அசைத்துக் கொண்டிருந்தனர். சிலர் தங்கள் புஜங்களில் அதைக் கட்டியிருந்தனர். பலர் சிவப்பு நிற பட்டைகளை அணிந்து கொண்டனர். இரண்டு கொடிகளையும் செம்படை வீரர்களிடம் அசைத்துக் காட்டினார்கள். பெரும்பாலான செங்கொடிகளின் பின்புறம் நாசிக்கட்சியின் ஸ்வஸ்திக் சின்னம் இருந்தது. ஸ்வஸ்திக்கைக் கிழித்து அவசரத்தில் உருவாக்கப்பட்ட கொடிகள் அவை.

ஹிட்லரின் சீடரான Grand- Admiral Karl Donitz என்பவர் தன் தலைவரின் மரணத்தை முறைப்படி அறிவித்தார். «நம் ஃப்யூரர் அடோல்வ் ஹிட்லர் வீ்ழ்ந்துவிட்டார். அவருக்காக ஜேர்மனிய மக்கள் தலை சாய்த்து தங்கள் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறார்கள்  தற்கொலை செய்து கொண்டார் என்று சொல்வது ஃப்யூரரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் என்று நினைத்ததால் மரணத்தின் காரணத்தை அறிவிக்கவில்லை.

Fac-similé de la couverture du journal The Stars and Stripes, du 2 mai 1945 annonçant le décès d'Adolf Hitler

 ஹிட்லரின் வலது கரமான ஹைன்ரிஹ் ஹிம்லர் (Heinrich Himmler) , பிரிட்டனுடன் பேச்சுவார்தையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். மே 1ம் திகதி கோயபல்ஸ் தன் குடும்பத்தினருடன் தற்கொலை செய்து கொண்டார்.

1945, மே 8ம் திகதி ஜேர்மனி சோவியத்திடம் முழுமையாக சரணடைந்தது.

வாவ் துல்ப்ஸ்,

இதை இப்படி இருந்து தட்டச்சு செய்ய எனக்கு செத்தாலும் பொறுமை வராது.

எமது மக்கள் பலருக்கு இந்த வரலாற்றை அறிவதற்கான ஒரு வரப்பிரசாதம்தான் இது.

  • கருத்துக்கள உறவுகள்
Quote

அந்தரங்க செயலாளரான மார்ட்டின் பர்மன்(Martin Bormann) இருவர் மட்டுமே அந்த ரகசிய அறையில் இருந்தனர். ஏப்ரல் 30ம் திகதி, ஈவா சைனயிற் எடுத்துக்கொண்டார். ஹிட்லர் தன்னை தானே சுட்டுக்கொண்டார். பத்து தினங்களுக்கு முன்பு தான் ஹிட்லர் தனது ஐம்பதாவது பிறந்த நாளை கழித்திருந்தார். ஜேர்மனியின் சான்சிலராக ஹிட்லர் பதவியேற்று பன்னிரண்டு ஆண்டுகள், மூன்று மாதங்கள் கழிந்திருந்தன. இரண்டு சடலங்களையும் பங்கருக்கு வெளியே கொண்டு வந்து எரித்தார்கள்

இது சரியான தாகவலா? 50ஆ? 56ஆ?

  • தொடங்கியவர்
2 hours ago, Justin said:

பதிவுக்கு நன்றி ருல்பென். 

ஹிற்லர் இறந்து விட்டதாக பல ஆதாரங்கள் உடனிருந்தோராலேயே வழங்கப் பட்டும் அவர் ஆர்ஜென்டீனாவிற்குத் தப்பிப் போய் தலைமறைவாக பல ஆண்டுகள் வாழ்ந்து இயற்கையாக இறந்தார் என்று ஒரு காசு பார்க்கும் குழு ஆவணப்படங்கள் சில தயாரித்து விட்டிருக்கின்றன. மக்கள் நம்பவும் தலைப்படுகிறார்கள்.

நேச நாட்டுப் படைகளைக் குழப்ப முதலில் பெர்லினுக்குள் நுழைந்த ரஷ்யப் படையினரே ஹிற்லரின் இறப்பை உறுதிப் படுத்தாமல் தாமதித்தனர் என்றும் ஒரு கருத்து இருக்கிறது. 
 
 போர் முடிந்த பின்னர் ஆரஜென்ரீனாவுக்கு தப்பிச்சென்று 1979 ல் பிரேசிலில் மாரடைப்பால் இறந்தவர் டொக்ரர் ஜோசப் மங்கலே. இவர் அவுஸ்விட்ஸ் வதை முகாமுல் சிறு குழந்தைகளை வதைத்து வைத்திய புதிய பரிசோதனைகள் செய்தவர். அடுத்த பாகத்தில் வதை முகாம்கள் பற்றி விரிவாக உள்ளது. 

50 minutes ago, வாலி said:

இது சரியான தாகவலா? 50ஆ? 56ஆ?

சுட்டிக்காட்டியதற்கு நன்றி வாலி. அது எனது typing  mistake.

இறக்கும் போது அவரது வயது 56 என்பதே சரியானது. மன்னிக்கவும். 

  • கருத்துக்கள உறவுகள்

ஒரே மூச்சில் மிகப் பொறுமையாக வாசித்து முடித்தேன்.......ஆணவம் எப்போதும் அடி வாங்கித்தான் தீரும்.ஆனால் அதற்கிடையில் அது மிகப்பெரும் பேரழிவுகளைச் செய்து விட்டிருக்கும்.அதற்கு உதாரணம் ஹிட்லர்........!

பகிர்வுக்கு நன்றி துல்பன்......!  👍 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.