Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

🌱கள உறவுகளின் சிந்தையில் உதித்த நற்சிந்தனைகள், வாழ்க்கைத் தத்துவங்கள்🌳

Featured Replies

  • தொடங்கியவர்
8 hours ago, goshan_che said:

சும்மா இருப்பதே சுகம்

8 hours ago, goshan_che said:

இங்கே சும்மா இருப்பது என்பது சோம்பேறியாக இருப்பதல்ல.

தேவைக்கு ஏற்ற உழைப்பை இட்டபடியே, உழைப்பு இடும் முறையை, உழைப்பின் பலனை பற்றி அலட்டி கொள்ளாமல் இருக்கும் மனநிலை.

8 hours ago, goshan_che said:

ஒரேவேலைக்கு ஏன் இந்த இருவேறுபட்ட மனப்பிரதிபலிப்புகள்?

8 hours ago, goshan_che said:

ஒன்றை சும்மா செய்கிறோம், இன்னொன்றை மனதில் சுமந்து செய்கிறோம். அவ்வளவுதான்.

இரெண்டு சந்தர்பத்தையும் சும்மா செய்யும் மனப்பக்குவம் கைவரப் பெற்றால். அந்த வேலை சும்மா செய்யும் இலகுவான, ஏன் இன்புற கூடிய வேலையாக மாறிவிடும்.

கோஷன்,

'சும்மா இரு' என்ற ஞானியர் கூற்றுக்கு உங்கள் விளக்கம் சுவாரசியமானதாகவும், நியாயமானதாகவும் உள்ளது.

முற்றும் துறந்தோர்க்கு இறைவனை அடைவதே குறிக்கோளாக இருக்கும்போது,  அவர்கள் செய்யும் தவத்தின்போது மனம் அலைபாயாதிருக்க மனதை நோக்கிச் சொல்லப்பட்ட கட்டளை/அறிவுறுத்தலே இந்த 'சும்மா இரு' என்ற வார்த்தைகள் என்பது என் எண்ணக்கரு.

குழந்தை / குரங்கு போல் குழப்படி செய்யும் மனதைச் செல்லமாக 'சும்மா இரு' என்று கட்டளை இடுவதன் மூலம் அது அலைபாயாமல் ஒருநிலைப்படுத்தலாம் என்று ஒரு meditation வகுப்பில் கற்றேன். 

ஆனால், உலகியலில் ஈடுபடும் எம் போன்றோர்க்கு அன்றாடக் கருமங்களைச் செவ்வனே செய்ய மன ஒருமைப்பாடு அவசியமாகிறது. அவ்வாறு மனதை ஒருமுகப்படுத்த உங்களது இந்தப் பார்வை பெரிதும் துணை புரியும் என்பது என் எண்ணம். (மேற்கோள் காட்டப்பட்ட உங்கள் கருத்துக்களை மீண்டும் படித்துப் பாருங்கள்.)

ஆகவே ஞானியர் பார்வையிலும் சரி, உங்கள் பார்வையிலும் சரி 'சும்மா இருத்தல்' என்பது 'மனதை அலைபாய விடாமல் சும்மா வைத்திருத்தல் - தெளிந்த நீரோடை போல வைத்திருத்தல்' என்பதைப் புரிந்து கொள்கிறேன்! இரண்டிற்கும் என்ன வித்தியாசம் என்றால், மனதை ஒருமுகப்படுத்துதலின் நோக்கமே என்பேன். அதாவது துறவறத்தில் இறைவனை அடைவதற்காகவும், உலகியலில் நம் நாளாந்தக் கடமைகளை மனவுறுதியுடனும், தெளிவுடனும், விளைவுகளில் கவனம் செலுத்தாமல் processஇல் கவனம் செலுத்தி ஆத்மார்த்தமாகச் செவ்வனே செய்வதற்கும் இந்த 'சும்மா இரு' என்ற கட்டளை துணை புரிகிறது.

'சும்மா இருப்பது - மனதை ஒருமுகப்படுத்துவது எப்படி?' என யாராவது கேட்டால், அதற்கான ஒரு வழிமுறை தான் இங்கு பலரும் கலந்துரையாடிய தியானம் என்கிற meditation. துறவறத்தில் இது பல நாள், மாத, வருடக் கணக்காகலாம்; உலகியலில் இதை நாம் நம் தேவையைப் பொறுத்து சில, பல நிமிடங்களுக்குள் மட்டுப்படுத்துவோம். அத்துடன் நமக்குப் பிடித்த செயல்களில் நம்மை முழுமையாக ஈடுபடுத்தியும் மனதை ஒருமுகப்படுத்துவோம்; உதாரணத்துக்கு மும்முரமான வேலை நாள் ஒன்றில் இடையிடையே பிடித்த இசையை மெய்மறந்து கேட்பது / அனுபவித்துப் பாடுவது. 

Edited by மல்லிகை வாசம்
தெளிவுபடுத்த மேலதிக விளக்கம்

  • Replies 50
  • Views 5.4k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
6 hours ago, goshan_che said:

பிகு

இதெல்லாம் எல்லாருக்கும் தெரிஞ்ச விசயம்தானே இதை ஒரு மேட்டர் என எடுத்து, சும்மா இவ்வளவு எழுதி இருக்கிறார் கோஷான் என என நினைபவர்கள் மன்னிக்கவும். 

என் பார்வையில் பெரும்பாலான தத்துவங்களில் புதிதாக ஒன்றும் இல்லை. பல ஞானியர், அறிஞர் பல்வேறு கோணங்களிலிருந்து, விதம் விதமான கண்ணாடிகளூடாக, வெவ்வேறு காலப்பகுதியில், வெவ்வேறு தேசங்களில் இருந்து அவதானித்ததைச் சொன்னதனாலேயே அவை எல்லாம் வெவ்வேறு தத்துவங்களாகவோ, புதியதாகவோ தெரிகின்றன; சாராம்சம் ஒன்று தான்!

இட்டிலியாகவும், தோசையாகவும், வடையாகவும் நாம் சுவைப்பதெல்லாம் உழுந்தின் பல்வேறு தயாரிப்புக்களே! ஆனாலும் தோசையின் சுவை பிடித்தோர்க்கு இட்டிலியின் சுவை பிடிபடவேண்டிய அவசியமில்லையே! 

எனவே கள உறவுகளே! உழுந்து போன்ற உண்மைகளை உங்கள் அனுபவங்கள் எனும் செய்முறை மூலம் விதம் விதமான தோசைகளாய், இட்லிகளாய், இன்ன பிறவாய் உங்கள் நற்சிந்தனைகளாகத் தாருங்கள்!

'சும்மா இரு'இல் புது ஒளியைப் பாய்ச்சி என் 'மனதைச்' சும்மா கலக்கிய உங்களுக்கு நன்றிகளும், வாழ்த்துக்களும் கோஷன்! 😊

  • கருத்துக்கள உறவுகள்

கோசான்-சே சொல்லும் "சும்மா இரு" என்பதற்கு லௌகீகமாக நல்ல விளக்கம் சொல்கிறார்....!

ஆன்மீகத்தில் அது முற்றிலும் மாறுபாடானது. உன்னுடைய மூச்சுக்காற்றை கவனித்து கொண்டிரு என்று சொல்வார்கள்.ஒருத்தர் ஒற்றையடிப் பாதையில் தனியே சென்று தன்னுடைய இலக்கை அடைவது போன்றதாகும்......!

பிறப்பெடுத்த ஒவ்வொரு ஆன்மாவின் பயணமும் முடிவில் இறையுடன் ஒன்றுவதாகும்.இடையில் வரும் இன்ப துன்பம் எல்லாம் வரும் போகும்.அதிலேயே நிக்கவோ நினைத்து மறுகவோ கூடாது.....!

அரசருக்கே செல்வம் குடுக்குமளவு செல்வந்தராக இருந்தவர் பட்டினத்தார்."அவர் அவ்வளவையும் துறந்து "காதற்ற ஊசியும் வாராது காண் உன் கடை வழிக்கே" என்று சொல்லிவிட்டு இரண்டு கோவணத்துடன் கிளம்புகிறார்.தாயார் மறித்து மகனே துறவறத்துக்கு போகிறாய் எதற்கு இரண்டு கோவணம் என்று சொல்ல அவர் ஒன்றை விடுகிறார். அப்போது தாய் சொல்கிறார் பரவாயில்லை கொண்டு போ ஆனால் அது தொலைந்தாலோ எலி கடித்தாலோ கவலைப்படாதே.அதாவது அதில்கூட ஆசை வைக்காதே என்கிறார்.....!

அந்த பட்டினத்தார் ஒரு கோவில் வாசலில் இருந்து பிட்சை  எடுக்கிறார் அப்போது அவரிடம் ஒருவர் வந்து யாசகம் கேட்கிறார்.பட்டினத்தார் அவரிடம் சொல்கிறார் என்னிடம் எதுவும் இல்லை நான் சும்மா இருக்கிறன் பக்கத்து வாசலில் ஒருவர் குடும்பமாய் இருக்கிறார் அவரிடம் சென்று கேள் என்கிறார். அந்த வாசலில் பத்திரகிரியார் (அவரும் ஒரு அரசன்.பின்பு துறவறம் ஏற்றவர்)கையில் ஒரு சட்டியோடும் கூட ஒரு நாயோடும் இருக்கிறார்.அதுதான் அவர் குடும்பம். வந்தவர் இவரிடம் நீங்கள் குடும்பமாய் இருக்கிறீர்கள்.அந்த வாசலில் இருப்பவர் உங்களிடம் யாசகம் கேட்க சொன்னார் என்று சொல்லவும் இவர் சட்டியையும் எறிந்து உடைத்து விட்டு அங்கே ஓடுகிறார். அங்கே அவர் யாரோ கூழ் ஊத்த வெறுங்கையில் ஏந்திக் குடிக்கிறார். பட்டினத்தார் கையில் ஒழுகும் கூழை பத்திரகிரியார் குடித்து ஞானம் பெற்றார்.....!

செம்மான் மகளைத் திருடும் திருடன்,
பெம்மான் முருகன், பிறவான், இறவான்,
"சும்மா இரு சொல் அற" என்றலுமே
அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே. (12)

---அநுபூதியில் அருணகிரியார்---

  • கருத்துக்கள உறவுகள்

பெற்றவரை, உற்றவரை நோக்கினேன், நல்லவன், வல்லவன், பண்பானவன் எனப் புகழ்ந்தார்கள். 

என் உள்ளத்தை நோக்கினைன் ஏளனமாகச் சிரித்தது.

அறியாத வயதில்..... தெரிந்து செய்ததல்ல. மனம் ஆறுதல் கொண்டது.

இது என் வாழ்வில் பெற்ற அனுபவம். எல்லோர் வாழ்விலும் நிச்சயம் இருக்கும் நம்புகிறேன்.

ஏளனம் செய்யாத உள்ளம் கொண்டவர் ஒருவர் இருந்தாலும் எனக்குக் கல்லெறியலாம்.

வேண்டுமானால் வீம்புக்கு வாதாடி மனம்தேறலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, மல்லிகை வாசம் said:

கோஷன்,

'சும்மா இரு' என்ற ஞானியர் கூற்றுக்கு உங்கள் விளக்கம் சுவாரசியமானதாகவும், நியாயமானதாகவும் உள்ளது.

முற்றும் துறந்தோர்க்கு இறைவனை அடைவதே குறிக்கோளாக இருக்கும்போது,  அவர்கள் செய்யும் தவத்தின்போது மனம் அலைபாயாதிருக்க மனதை நோக்கிச் சொல்லப்பட்ட கட்டளை/அறிவுறுத்தலே இந்த 'சும்மா இரு' என்ற வார்த்தைகள் என்பது என் எண்ணக்கரு.

குழந்தை / குரங்கு போல் குழப்படி செய்யும் மனதைச் செல்லமாக 'சும்மா இரு' என்று கட்டளை இடுவதன் மூலம் அது அலைபாயாமல் ஒருநிலைப்படுத்தலாம் என்று ஒரு meditation வகுப்பில் கற்றேன். 

ஆனால், உலகியலில் ஈடுபடும் எம் போன்றோர்க்கு அன்றாடக் கருமங்களைச் செவ்வனே செய்ய மன ஒருமைப்பாடு அவசியமாகிறது. அவ்வாறு மனதை ஒருமுகப்படுத்த உங்களது இந்தப் பார்வை பெரிதும் துணை புரியும் என்பது என் எண்ணம். (மேற்கோள் காட்டப்பட்ட உங்கள் கருத்துக்களை மீண்டும் படித்துப் பாருங்கள்.)

ஆகவே ஞானியர் பார்வையிலும் சரி, உங்கள் பார்வையிலும் சரி 'சும்மா இருத்தல்' என்பது 'மனதை அலைபாய விடாமல் சும்மா வைத்திருத்தல் - தெளிந்த நீரோடை போல வைத்திருத்தல்' என்பதைப் புரிந்து கொள்கிறேன்! இரண்டிற்கும் என்ன வித்தியாசம் என்றால், மனதை ஒருமுகப்படுத்துதலின் நோக்கமே என்பேன். அதாவது துறவறத்தில் இறைவனை அடைவதற்காகவும், உலகியலில் நம் நாளாந்தக் கடமைகளை மனவுறுதியுடனும், தெளிவுடனும், விளைவுகளில் கவனம் செலுத்தாமல் processஇல் கவனம் செலுத்தி ஆத்மார்த்தமாகச் செவ்வனே செய்வதற்கும் இந்த 'சும்மா இரு' என்ற கட்டளை துணை புரிகிறது.

'சும்மா இருப்பது - மனதை ஒருமுகப்படுத்துவது எப்படி?' என யாராவது கேட்டால், அதற்கான ஒரு வழிமுறை தான் இங்கு பலரும் கலந்துரையாடிய தியானம் என்கிற meditation. துறவறத்தில் இது பல நாள், மாத, வருடக் கணக்காகலாம்; உலகியலில் இதை நாம் நம் தேவையைப் பொறுத்து சில, பல நிமிடங்களுக்குள் மட்டுப்படுத்துவோம். அத்துடன் நமக்குப் பிடித்த செயல்களில் நம்மை முழுமையாக ஈடுபடுத்தியும் மனதை ஒருமுகப்படுத்துவோம்; உதாரணத்துக்கு மும்முரமான வேலை நாள் ஒன்றில் இடையிடையே பிடித்த இசையை மெய்மறந்து கேட்பது / அனுபவித்துப் பாடுவது. 

3 hours ago, suvy said:

கோசான்-சே சொல்லும் "சும்மா இரு" என்பதற்கு லௌகீகமாக நல்ல விளக்கம் சொல்கிறார்....!

ஆன்மீகத்தில் அது முற்றிலும் மாறுபாடானது. உன்னுடைய மூச்சுக்காற்றை கவனித்து கொண்டிரு என்று சொல்வார்கள்.ஒருத்தர் ஒற்றையடிப் பாதையில் தனியே சென்று தன்னுடைய இலக்கை அடைவது போன்றதாகும்......!

பிறப்பெடுத்த ஒவ்வொரு ஆன்மாவின் பயணமும் முடிவில் இறையுடன் ஒன்றுவதாகும்.இடையில் வரும் இன்ப துன்பம் எல்லாம் வரும் போகும்.அதிலேயே நிக்கவோ நினைத்து மறுகவோ கூடாது.....!

அரசருக்கே செல்வம் குடுக்குமளவு செல்வந்தராக இருந்தவர் பட்டினத்தார்."அவர் அவ்வளவையும் துறந்து "காதற்ற ஊசியும் வாராது காண் உன் கடை வழிக்கே" என்று சொல்லிவிட்டு இரண்டு கோவணத்துடன் கிளம்புகிறார்.தாயார் மறித்து மகனே துறவறத்துக்கு போகிறாய் எதற்கு இரண்டு கோவணம் என்று சொல்ல அவர் ஒன்றை விடுகிறார். அப்போது தாய் சொல்கிறார் பரவாயில்லை கொண்டு போ ஆனால் அது தொலைந்தாலோ எலி கடித்தாலோ கவலைப்படாதே.அதாவது அதில்கூட ஆசை வைக்காதே என்கிறார்.....!

அந்த பட்டினத்தார் ஒரு கோவில் வாசலில் இருந்து பிட்சை  எடுக்கிறார் அப்போது அவரிடம் ஒருவர் வந்து யாசகம் கேட்கிறார்.பட்டினத்தார் அவரிடம் சொல்கிறார் என்னிடம் எதுவும் இல்லை நான் சும்மா இருக்கிறன் பக்கத்து வாசலில் ஒருவர் குடும்பமாய் இருக்கிறார் அவரிடம் சென்று கேள் என்கிறார். அந்த வாசலில் பத்திரகிரியார் (அவரும் ஒரு அரசன்.பின்பு துறவறம் ஏற்றவர்)கையில் ஒரு சட்டியோடும் கூட ஒரு நாயோடும் இருக்கிறார்.அதுதான் அவர் குடும்பம். வந்தவர் இவரிடம் நீங்கள் குடும்பமாய் இருக்கிறீர்கள்.அந்த வாசலில் இருப்பவர் உங்களிடம் யாசகம் கேட்க சொன்னார் என்று சொல்லவும் இவர் சட்டியையும் எறிந்து உடைத்து விட்டு அங்கே ஓடுகிறார். அங்கே அவர் யாரோ கூழ் ஊத்த வெறுங்கையில் ஏந்திக் குடிக்கிறார். பட்டினத்தார் கையில் ஒழுகும் கூழை பத்திரகிரியார் குடித்து ஞானம் பெற்றார்.....!

செம்மான் மகளைத் திருடும் திருடன்,
பெம்மான் முருகன், பிறவான், இறவான்,
"சும்மா இரு சொல் அற" என்றலுமே
அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே. (12)

---அநுபூதியில் அருணகிரியார்---

மல்லிகை, சுவி அண்ணா,

நான் சும்மா எழுதியதை, இந்த வசனத்தின் ஆன்மீக அர்த்தத்துடன் ஒப்பிட்டு சும்மா கலக்கி விட்டீர்கள் 👏🏾🙏🏾.

நான் சொல்வது உலகியலை மையப்படுத்தியே இருந்தாலும் இதில் ஆன்மீகத்துக்கு ஒரு தொடர்பிருப்பதாக நான் எண்ணுகிறேன். 

மனதை ஒரு நிலைப்படுத்தல், பட்டினத்தடிகள் போல் உலகியல் இன்ப துன்பங்களை துறந்தல் என்ப ஆன்மீகத்தின் முதல் இரண்டாம் படிகள் என வைத்துக்கொண்டால், முன் ஆன்மீக நிலை என்று ஒன்று இருக்கிறது என்பது என் கருத்து (pre spiritual stage).

இந்த முன்ஆன்மீக நிலையில் விரக்தி, எதிர்பார்ப்பு, கோப தாபங்கள் என்பனவற்றை நாம் முடிந்தளவு விலத்தி, சும்மா இருக்க பழகுவதே அடுத்த கட்டத்துக்கு போவதற்க்கான இன்றி அமையாத பயிற்சி என நான் எண்ணுகிறேன்.

ஆங்கிலத்தில் being at peace with oneself (தன்னளவில் சமாதானமாதல்) என்பார்கள். எமது வாழ்வை, இழப்புகளை, வரவுகளை, முடியாமல் போனவற்றை, சாதனைகளை இன்னும் பலதை கூட்டி, கழித்து, வாழ்க்கைக்கான சுடெண்ணை தெரிந்து கொண்டு, அதை ஏற்று கொள்ளும் நிலை.

நிச்சயமாக இந்த நிலை கைகூடும் போது, உலகியல் அன்றாட வாழ்க்கை இலகுவாகும் ஆனால் அது மட்டும் அல்ல, அடுத்த கட்டங்களான மனதை ஒரு நிலையாக்கல், பற்றுக்களை துறத்தல் என்பனவும் இலகுவாக கைகூடும் என்று நான் நினைக்கிறேன்.

இவ்வாறு  தன்னளவில் சமாதானாமாகாமல் மனதை ஒரு நிலைபடுத்துவது கஸ்டமாக இருக்கும் என நினைக்கிறேன்.

  • தொடங்கியவர்
11 hours ago, goshan_che said:

மனதை ஒரு நிலைப்படுத்தல், பட்டினத்தடிகள் போல் உலகியல் இன்ப துன்பங்களை துறந்தல் என்ப ஆன்மீகத்தின் முதல் இரண்டாம் படிகள் என வைத்துக்கொண்டால், முன் ஆன்மீக நிலை என்று ஒன்று இருக்கிறது என்பது என் கருத்து (pre spiritual stage).

இந்த முன்ஆன்மீக நிலையில் விரக்தி, எதிர்பார்ப்பு, கோப தாபங்கள் என்பனவற்றை நாம் முடிந்தளவு விலத்தி, சும்மா இருக்க பழகுவதே அடுத்த கட்டத்துக்கு போவதற்க்கான இன்றி அமையாத பயிற்சி என நான் எண்ணுகிறேன்.

11 hours ago, goshan_che said:

தன்னளவில் சமாதானாமாகாமல் மனதை ஒரு நிலைபடுத்துவது கஸ்டமாக இருக்கும்

உங்களது கருத்துக்களை ஏற்றுக்கொள்கிறேன் கோஷன். 👍

அத்துடன் உலகியலில் இருப்பவர், முதல் இரு நிலைகளுக்கிடையிலும் அங்குமிங்குமாக ஊசலாடுவது சகஜமானது என நான் எண்ணுகிறேன்; வயதும், பக்குவமும் அதிகரிக்க அடுத்தடுத்த நிலைகளில் உறுதியாக முன்னேறிச்செல்வது எளிதாகும் என்பதும் என் எண்ணம். 

இதே ஊசலாட்டம் இரண்டாம் படியிலிருந்து மூன்றாம் படிக்குச் சென்றபிறகும் இருக்கக்கூடும். முற்றும் துறந்த முனிவர்களுக்கும் கோபம், பெண்ணாசை போன்ற குணங்கள் வந்துபோனதுண்டு என்று சொல்வதும் இதனால் தானோ! மனம் ஊசலாடுகிறதே என்று மனம் கலங்காமல் ஒரு விழிப்புணர்வு நிலையில் 'சும்மா இரு'த்தலும் முக்கியம் என நான் நினைக்கிறேன்! 😊

  • தொடங்கியவர்

நாளை தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையை உலகமெங்குமுள்ள தமிழர்கள் நாம் கொண்டாடுகிறோம். 

சூரியனுக்கும், உழவர்களுக்கும், பசு மாடுகளுக்கும் நன்றி செலுத்தும்முகமாக் கொண்டாடப்படும் இந்தத் திருநாளை முன்னிட்டு ஒரு சிறு நற்சிந்தனை:

நாம் பிறருக்கு நமது நன்றியைத் தெரிவிக்கும்போது அதனால் மகிழ்வது அவர்கள் மட்டுமல்ல; நாம் உளமார நமது நன்றியுணர்ச்சியை வெளிப்படுத்தும்போது நமக்குள்ளும் ஏதோ ஒரு இனந்தெரியாத குதூகல உணர்வும், நேர்மறை எண்ணங்களும் எழுகின்றன. இதனால் நாம் ஆத்மதிருப்தி கொள்கிறோம்.

பொங்கல் பண்டிகையை நமது நன்றியுணர்ச்சியை வெளிப்படுத்தும் நாளாகக் கொண்டாடும் நாம், ஏனைய நாட்களிலும் தினமும் சில நிமிடங்களாவது நமது நன்றியுணர்ச்சியை சக மனிதர்களுக்கோ, இயற்கைக்கோ, பிற உயிர்களுக்கோ அல்லது பிரபஞ்ச சக்திக்கோ உளமாரத் தெரிவிப்பதற்கு ஒதுக்கினால் நம்மில் நல்ல பல மாற்றங்களை ஏற்படுத்தும் என்பது எனது தாழ்மையான எண்ணம். இதைப் பலர் சொல்லக் கேட்டும், என் அனுபவபூர்வமாகவும் உணர்ந்துள்ளேன். 

இதை நாம் நமது பூஜை அறையிலோ, வீட்டுத் தோட்டத்திலோ, கடற்கரை, park போன்ற இயற்கையை ரசிக்கும் தருணங்களிலோ, அல்லது வேறேதேனும் நமக்கு வசதியான இடங்களில் செய்யலாம். தூக்கத்திற்குச் செல்லுமுன் செய்தலும் மிக்க சிறப்பே என எண்ணுகிறேன். 

இங்கு தமது நற்சிந்தனைகளைப் பகிரும் சக உறவுகளுக்கு எனது மனமார்ந்த நன்றிகளும், இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்களும். 😊

வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்! 🙏

☀️🐃🐂🐄🌾

  • தொடங்கியவர்

🐄🐂மாட்டுப்பொங்கல் நன்னாளான இன்று, விவசாயத்துக்குத் துணை புரியும் பசு மாடு போன்ற கால்நடைகளை நன்றியுணர்ச்சியுடன் நினைவுகூருவதுடன், ஊரிலுள்ள ஏழை விவசாயி ஒருவரது குடும்பத்துக்காவது நம்மால் இயன்ற சிறு பண / பொருள் உதவிகளை அன்புடனே செய்வோம். கூடவே பசு மாடு போன்றவற்றுக்குத் தேவையான தீவனங்களையும் அன்பளிப்புச் செய்வோம். 😊

🌾இதனால் நமக்குக் கிடைக்கும் மனநிறைவுக்கு ஈடு அந்த மனநிறைவு மட்டுமே! 😊

வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!🙏

  • கருத்துக்கள உறவுகள்

இதை இதில் எழுதலாமோ தெரியல்ல  எம்மோடு கூட படித்தவர்கள் ,சின்ன வயசில் இருந்து வளர்ந்தவர்களது படங்களை சமூக வலைத் தளங்களில் பார்க்கும் போது தான் நமக்கும் வயசு போகுது என்று ஞாபகம் வருகுது ...கூடவே லைட்டாய் பயமும் வருது :38_worried:

  • தொடங்கியவர்
2 hours ago, ரதி said:

எம்மோடு கூட படித்தவர்கள் ,சின்ன வயசில் இருந்து வளர்ந்தவர்களது படங்களை சமூக வலைத் தளங்களில் பார்க்கும் போது தான் நமக்கும் வயசு போகுது என்று ஞாபகம் வருகுது ...கூடவே லைட்டாய் பயமும் வருது :38_worried:

ரதி,

எனக்கும் இதே உணர்வு வருவதுண்டு, குறிப்பாக நம்மோடு படித்தோர்க்கு வளர்ந்த பிள்ளைகள் இருப்பதைப் பார்க்கும்போது. 

எனினும் பலரும் சொல்வதுபோல 'வயது சும்மா ஒரு எண்ணிக்கை மட்டுமே' என்று நினைத்து அமைதிகொள்வேன். ஒரே வயதில் இருக்கும் இருவர் வெவ்வேறு விதமாக முதுமையடையலாம்; ஒருவருக்கு 50 வயதிலேயே தலைநரைத்து, தளர்ச்சியடைந்து, நோயாளியாகலாம்; மற்றவர் அதே வயதில் இன்னும் இளைஞனாக இருக்கலாம், உடலளவிலும், மனதளவிலும். 

இன்னொரு விதமாகப்பார்த்தால், ஒரு 70 வயதுடையவரையும், இன்னொரு 95 வயதுடையவரையும் நாம் வயோதிகர் என்றே சொல்கிறோம். ஆனால் இவர்களுக்கிடையில் ஒரு தலைமுறை இடைவெளியே இருக்கு; 25 வருஷ வித்தியாசம். இங்கும் கூட 95 வயதானவர் நோய்கள் எதுவும் அற்றவராகவும் (உடல் தளர்ச்சி இருக்கலாம்), மனவுறுதியுடையவராகவும் இருக்கும் அதேவேளை 70 வயதுடையவர் உடலாலும் மனதாலும் நலம் குன்றி இருக்கலாம் - ஒரே ஊரிலே ஏன் ஒரே குடும்பத்திலேயே இப்படியான இருவரைப் பார்த்திருப்போம். 

இதிலிருந்து நான் கற்றுக்கொண்டது அவ்வளவு பெரிய ரகசியமல்ல; நேர்மறை எண்ணங்களுடன் நம் physical, mental, emotional and spiritual ஆரோக்கியங்களுக்கு என்னென்ன செய்யவேண்டுமோ அவற்றை இயன்ற வரை செய்து, அவசியமில்லாமல் மற்றோருடன் நம்மை ஒப்பிடாது நமக்குப் பிடித்த, முக்கியமான விடயங்களில் மட்டும் நம் முழுக்கவனத்தையும் செலுத்தி நாம் வாழ்ந்தால் 'age is just a number' தான்! இது நம் வாழ்க்கை முறைத் தெரிவும் கூட - lifestyle choice. 

ஜப்பானியரில் நூறு வயதும் கடந்து வாழும் பலர் ஆரோக்கியமாக இருப்பதை நாம் அறிந்திருப்போம். சுருங்கச் சொன்னால் அவர்களது வாழ்க்கை முறையும் அதற்கு முக்கியமான ஒரு காரணம். (இணையத்திலும், YouTubeஇலும் இது பற்றிய நம்பகரமான தகவல்கள் இருக்கும். நேரமிருந்தால் பாருங்கள்). 

இதை எழுதும்போது எனக்கும் ஒருவித விழிப்புணர்வு ஏற்படுகிறது. எனவே இதை எழுதத்தூண்டிய உங்கள் கருத்துக்கு நன்றி ரதி. 

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, மல்லிகை வாசம் said:

நான் ஒரு நாளும் என்னை வயது போவதாய் எண்ணியதில்லை ...ஆனால் இப்படி மற்றவர்களது போட்டோக்களை பார்க்கும் போது மட்டும் ஒரு வித பயம் சாடையாய் வருகின்றது 

  • கருத்துக்கள உறவுகள்
On 17/1/2021 at 01:05, மல்லிகை வாசம் said:

இதிலிருந்து நான் கற்றுக்கொண்டது அவ்வளவு பெரிய ரகசியமல்ல; நேர்மறை எண்ணங்களுடன் நம் physical, mental, emotional and spiritual ஆரோக்கியங்களுக்கு என்னென்ன செய்யவேண்டுமோ அவற்றை இயன்ற வரை செய்து, அவசியமில்லாமல் மற்றோருடன் நம்மை ஒப்பிடாது நமக்குப் பிடித்த, முக்கியமான விடயங்களில் மட்டும் நம் முழுக்கவனத்தையும் செலுத்தி நாம் வாழ்ந்தால் 'age is just a number' தான்! இது நம் வாழ்க்கை முறைத் தெரிவும் கூட - lifestyle choice. 

இவ்வாறு சொல்வது  எளிது

ஆனால்  அதற்கு  எமக்கு பல  தடைகள் உண்டு

அதில் முக்கியமானது எமது  இச்சமூகம் 

ஆனால் ஓரளவு இதில் வெற்றி  கண்டுள்ளேன் என்ற  திருப்தியுண்டு

  • கருத்துக்கள உறவுகள்

உடலும் உள்ளமும்

வலுப்பெறும் வழி

நல்வழியானால், 

வாழும் வயது 

மனதுக்கு என்றும் இளமை,

உடலுக்கு என்றும் வலிமை. 

  • தொடங்கியவர்
12 hours ago, விசுகு said:

இவ்வாறு சொல்வது  எளிது

ஆனால்  அதற்கு  எமக்கு பல  தடைகள் உண்டு

அதில் முக்கியமானது எமது  இச்சமூகம் 

ஆனால் ஓரளவு இதில் வெற்றி  கண்டுள்ளேன் என்ற  திருப்தியுண்டு

நீங்கள் சொல்வது சரி அண்ணா. 

இதை எழுதியதால் நான் ஏதோ தடைகள் இல்லாமல், அவை எல்லாவற்றையும் எப்போதும் செய்கிறேன் என்று அர்த்தமல்ல! 

அத்துடன் நீங்கள் குறிப்பட்டபடி சமூகமும் தடையாக இருக்கலாம்; அதனால் தான் அவ்வப்போது கூட்டத்தில் இருந்து விலகி நின்று சிந்திக்க வேணும் என்பார்கள். அதற்கு மிகுந்த துணிச்சலும், மனவுறுதியும் அவசியம். 

இந்த lockdown / கொறோனா காலம் பலருக்குத் தனித்திருக்கும் வாய்ப்பைக் கொடுத்திருக்கும். நம் வாழ்வை மீளாய்வு செய்து தேவையற்றதைக் களைந்தும், புதிய நல்ல விடயங்களை உள்வாங்கியும் நம் வாழ்க்கைமுறையை ஆரோக்கியமானதாக, மனநிறைவானதாக மாற்றியமைக்க இக்காலம் ஓர் அரிய சந்தர்ப்பம். அவரவர்க்கு இயன்றவரை சிறு சிறு மாற்றங்கள் செய்தாலே அதன் பலன் நிச்சயம் உண்டு. 

'தனித்திரு! பசித்திரு! விழித்திரு!' என்ற ஞானியர் வார்த்தையின் அர்த்தம் இந்த கொறோனா காலத்தில் நன்கு புரிந்தது! ('கூட்டத்திலிருந்து விலகிச் சிந்தித்து, அறிவுத் தேடலில் ஈடுபட்டுத் தெளிந்து ஓர் விழிப்புணர்வு நிலையில் இரு!' என்பதே இதன் பொருள்.)

  • தொடங்கியவர்
11 hours ago, Paanch said:

உடலும் உள்ளமும்

வலுப்பெறும் வழி

நல்வழியானால், 

வாழும் வயது 

மனதுக்கு என்றும் இளமை,

உடலுக்கு என்றும் வலிமை. 

நீங்கள் இங்கு நல்லொழுக்கத்தைத் தானே குறிப்பிடுகிறீர்கள் பாஞ்ச் அண்ணா? 

ஒழுக்கமுடைய வாழ்க்கைமுறையை இடைவிடாது கடைப்பிடித்தால் முதுமையிலும் இளமையான மனதுடனும், திடமான தேக ஆரோக்கியத்துடனும் வாழலாம் என்பது தானே? 

  • கருத்துக்கள உறவுகள்

" ஆடைகளுக்கு மதம் உண்டு ஆசைகளுக்கு மதம் இல்லை 

சிலைகள், சிற்பங்களுக்கு மதம் உண்டு கல்லுக்கும்,மரத்துக்கும் மதம் இல்லை"

 ---சுவி---   

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, மல்லிகை வாசம் said:

நீங்கள் இங்கு நல்லொழுக்கத்தைத் தானே குறிப்பிடுகிறீர்கள் பாஞ்ச் அண்ணா? 

ஒழுக்கமுடைய வாழ்க்கைமுறையை இடைவிடாது கடைப்பிடித்தால் முதுமையிலும் இளமையான மனதுடனும், திடமான தேக ஆரோக்கியத்துடனும் வாழலாம் என்பது தானே? 

ஆமாம் சோதரி. ஆனால் இந்த ஒழுக்க முறைகளை எங்கள் ஆசான்கள் வெளியே சென்று சிகரட் பற்றிவிட்டு மூக்குப் பொடியும் போட்டுவிட்டு வந்துதான் போதித்தார்கள்.🤧

  • தொடங்கியவர்

தத்துவங்கள் சொல்லிச் சென்ற அறிஞர்கள், ஞானிகள் எவரும் அவர்கள் வாழ்க்கை முழுவதும் புனிதர்களாக இருந்திருக்க வேண்டிய அவசியமில்லை; அவர்கள் விட்ட தவறுகள், அதனால் அவர்கள் அனுபவித்த இன்னல்கள் மூலம் அவர்கள் கற்றுக்கொண்ட பாடங்களின் விளைவாக அவர்கள் மனதில் தோன்றியவையே அவர்களின் தத்துவங்கள். 

அத்துடன் அவர்களது காலத்தில் அவர்களைச் சூழ உள்ள சமூகம், வாழ்க்கைச் சூழல் மற்றும் பிற தகவல்களை உன்னிப்பாக அவதானித்து, ஆராய்ந்து, ஆழ்ந்து சிந்தித்துப் பெறப்பட்ட முடிவுகளும் தத்துவங்களாயின. 

இன்னும், ஆழ்நிலை தியானங்கள், சுய விசாரம் (self-analysis) இவை மூலம் தம்முள்ளே உண்மையை நோக்கிய தேடலை மேற்கொண்டு தாம் உணர்ந்தவற்றை ஞான மொழிகளாகச் சொல்லிச் சென்றனர் மெய்ஞானிகள்.

எனவே, இந்த அறிஞர்கள், ஞானிகளது தத்துவங்களை நம் வாழ்வில் பயன்படுத்தும் முன்னர் நம்மைப் பற்றிய சுய அறிவை வளர்த்துக் கொள்வது அவசியம். இயன்ற அளவுக்குச் சுய விசாரம் செய்வதன் மூலம் நம்மைப் பற்றிய அறிவை வளர்த்துக் கொள்ளலாம். இது ஓரிரவில் நிகழ்ந்துவிடக்கூடிய செயற்பாடல்ல. என்னைப் பொறுத்தவரை இது வாழ்க்கை முழுவதற்கும் நீண்டது. இதன் மூலம் நமது நோக்கங்கள், இலக்குகள் போன்றவற்றைத் தெளிவாக்கிக்கொண்டு அந்த இலட்சியங்களுக்கு ஞானிகள், அறிஞர்களின் தத்துவங்கள் எவ்வாறு பயன்படும் என்பதை ஆழ்ந்து சிந்தித்துச் செயற்பட வேண்டும். இவ்வாறு செயற்படும்போது நமக்குப் பொருத்தமான தத்துவங்களின் பயன் அதிகரித்து அவை மேலும் அர்த்தமுள்ளதாகின்றன. மறுபுறம் நமக்குத் தேவையற்ற தத்துவங்களை இனங்கண்டு ஒதுக்கவும் இந்தச் செயற்பாடு வழிவகுக்கும். 

அத்துடன் நாம் வாழும் காலம், வாழ்க்கைச் சூழல், குறிப்பிட்ட சந்தர்ப்பங்களைப் பொறுத்தும் சில தத்துவங்கள் மிகப் பயனுள்ளதாகவும், ஏனையவை பொருத்தமற்றதாகவும் அமையலாம். எனவே, அவை பற்றிய அறிவு / விழிப்புணர்வும் நமக்கு இருப்பது அவசியம். குறிப்பாக உலகியல் சார்ந்த தத்துவங்களுக்கு இது மிக மிக அவசியம்!

("எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் - அப்பொருள் மெயப்பொருள் காண்பது அறிவு" - திருவள்ளுவர்)

  • கருத்துக்கள உறவுகள்

கல்விக்கும் கலவிக்கும் ஒரு புள்ளிதான் வித்தியாசம். மாணவர்களின் காலத்தில் கல்வியில் கவனம் சிதறின் அது கலவியின் பக்கம் திசை மாற்றிவிடும்.கல்வி கற்றோர்க்கு புள்ளிகள் பெருமை சேர்க்கும். கலவி கண்டோர்க்கு புள்ளிகள் சிறுமை தரும் கூற்றாகும்......!

--- சுவி---  

  • கருத்துக்கள உறவுகள்
On 17/1/2021 at 01:05, மல்லிகை வாசம் said:

இன்னொரு விதமாகப்பார்த்தால், ஒரு 70 வயதுடையவரையும், இன்னொரு 95 வயதுடையவரையும் நாம் வயோதிகர் என்றே சொல்கிறோம். ஆனால் இவர்களுக்கிடையில் ஒரு தலைமுறை இடைவெளியே இருக்கு; 25 வருஷ வித்தியாசம். இங்கும் கூட 95 வயதானவர் நோய்கள் எதுவும் அற்றவராகவும் (உடல் தளர்ச்சி இருக்கலாம்), மனவுறுதியுடையவராகவும் இருக்கும் அதேவேளை 70 வயதுடையவர் உடலாலும் மனதாலும் நலம் குன்றி இருக்கலாம் - ஒரே ஊரிலே ஏன் ஒரே குடும்பத்திலேயே இப்படியான இருவரைப் பார்த்திருப்போம். 

இதிலிருந்து நான் கற்றுக்கொண்டது அவ்வளவு பெரிய ரகசியமல்ல; நேர்மறை எண்ணங்களுடன் நம் physical, mental, emotional and spiritual ஆரோக்கியங்களுக்கு என்னென்ன செய்யவேண்டுமோ அவற்றை இயன்ற வரை செய்து, அவசியமில்லாமல் மற்றோருடன் நம்மை ஒப்பிடாது நமக்குப் பிடித்த, முக்கியமான விடயங்களில் மட்டும் நம் முழுக்கவனத்தையும் செலுத்தி நாம் வாழ்ந்தால் 'age is just a number' தான்! இது நம் வாழ்க்கை முறைத் தெரிவும் கூட - lifestyle choice. 

நாம் இப்படி நினைத்து கடந்து போகலாம் தான்.ஆனால் எனக்கு கிடைக்கும் அனுபவம் எப்படி என்டால் ஊரில் ஒரு பின் தங்கிய மாவட்டத்தில்  50 தான்டினாலே முதியோர்தான்.ஒரே முதியோர் என்டு நேரடியாகவும் மறை முகமாகவும் பரிகாசம் பண்னியோ கொண்டு விடுவார்கள்.

  • தொடங்கியவர்
19 hours ago, சுவைப்பிரியன் said:

நாம் இப்படி நினைத்து கடந்து போகலாம் தான்.ஆனால் எனக்கு கிடைக்கும் அனுபவம் எப்படி என்டால் ஊரில் ஒரு பின் தங்கிய மாவட்டத்தில்  50 தான்டினாலே முதியோர்தான்.ஒரே முதியோர் என்டு நேரடியாகவும் மறை முகமாகவும் பரிகாசம் பண்னியோ கொண்டு விடுவார்கள்.

சுவைப்பிரியன் அண்ணா,

உங்களது ஆதங்கத்தில் நியாயம் இல்லாமலில்லை.

மற்றோரின் பரிகாசத்துக்கு அஞ்சி அஞ்சியே நாம் வாழ்வில் பலவற்றைத் தொலைத்துவிட்டோம்; மற்றோரைப் பரிகசித்தும் நமது காலத்தை வீணடித்தும்விட்டோம்.

இவ்வாறான சூழ்நிலைகளில் நான் நினைத்துக்கொள்வது: நாம் எது செய்தாலும் அதைப் பிறர் பரிகசிப்பார்கள் - பரிகசிப்பதற்கு அவர்களுக்கு ஏதாவது காரணம் தேவை. 'வாழ்ந்தாலும் ஏசும், தாழ்ந்தாலும் ஏசும்' உலகம் இது. பிறரைப் பரிகசித்து, அவர்களை அவமானத்தால் கூனிக்குறுக வைத்து, வேடிக்கைபார்த்து அவர்கள் தாழ்ந்துபோவதில் மகிழ்வடைவோரைக் கண்டு நாம் ஏன் அஞ்ச வேண்டும்? அவ்வாறு நாம் அஞ்சுவதால் அவர்களது நோக்கத்தை நாமாகவே நிறைவேற்றுகிறோம். 

50 வயதானால் கிழவர் எனப் பரிகசிக்கும் அதே நபர்கள் 50 வயதில் 40 வயதுக்குரிய தோற்றத்தில் இருப்பவரைக் கண்டு பொறாமைப்படலாம். அதேவேளை 40 வயதுடைய ஒருவர் நோய் வந்து தளர்ந்தால் 'இப்பவே வயசாகிக் கிழவனாயிட்டாய்' என்று பரிகசிக்கவும் செய்யலாம். 

எனவே, போட்டி பொறாமைகள் நிறைந்த உலகில் இவ்வாறான யதார்த்தங்களை உணர்ந்து ஏற்றுக்கொண்டு, அவற்றுக்கு எதிர்வினை ஆற்றாது, பிறர் பரிகசிப்புக்களைக் கண்டுகொள்ளாது புறக்கணித்து நமது கருமமே கண்ணாக இருந்தால் நாம் நிம்மதியான, நிறைவான வாழ்க்கையை வாழலாம் என்பது எனது எண்ணம். 

இந்த மனோதிடத்தை வளர்ப்பது அவ்வளவு இலேசான விடயமுமல்ல. எவ்வாறு உடற்பயிற்சி செய்து நமது உடல் தசைகளை முறுக்கேற்றி உடல் வலுவைப் பெறுகிறோமோ, அவ்வாறே நமது மனோதிடத்தையும் தினமும் பயிற்சி செய்து வளர்க்க வேண்டும். நாம் முன்பு கலந்துரையாடிய தியானம் போன்ற விடயங்களும் இதற்கு உதவும். யோகாவையும் இதனுடன் சேர்க்கலாம். கூடவே பிரார்த்தனையின் சக்தியும் அளப்பரியது. நல்ல நூல்களைப் படித்து நமது அறிவை விருத்தி செய்தல், நல்ல இசையில், இயற்கை எழிலில் அவ்வப்போது மூழ்கித் திளைத்தல் என்று ஏராளம் விடயங்கள் இருக்கின்றன. இவை அனைத்தையும் நம் அன்றாட வாழ்வின் ஓர் அங்கமாக்கிப் பயிற்சி செய்யும்போது, புறச் சூழலில் இருந்து வரும் எதிர்வினைகளின் தாக்கத்தைச் சமாளிக்கக் கூடியதாக இருக்கும். நாளாந்த முயற்சி நாளடைவில் பயிற்சியாகி நம்மில் ஓர் அங்கமாகிவிடும். தினமும் பல் துலக்குவது போல, உணவு உண்பது போல இவையும் மிக அவசியம்.

வயதைப் பற்றி நீங்கள் குறிப்பிட்டபடியால் இன்னொரு விடயம்: 'காவோலை விழக் குருத்தோலை சிரிக்கும்'. அந்தக் குருத்தோலையும் ஓர் நாள் காவோலையாகும். காவோலைகளும் சிரித்துப் பரிகசிக்கலாம்; எல்லா ஓலைகளுக்கும் வீழும் நாள் ஒன்று உண்டு என்பதை உணர்ந்தால் நாம் நமது சமநிலையைப் பேண அது உதவும். அந்த சமநிலை தான் இந்த உலக வாழ்வு என்ற சமுத்திரத்தில் நீச்சலடிக்க உதவும்! 😀

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, மல்லிகை வாசம் said:

சுவைப்பிரியன் அண்ணா,

வயதைப் பற்றி நீங்கள் குறிப்பிட்டபடியால் இன்னொரு விடயம்: 'காவோலை விழக் குருத்தோலை சிரிக்கும்'. அந்தக் குருத்தோலையும் ஓர் நாள் காவோலையாகும். காவோலைகளும் சிரித்துப் பரிகசிக்கலாம்; எல்லா ஓலைகளுக்கும் வீழும் நாள் ஒன்று உண்டு என்பதை உணர்ந்தால் நாம் நமது சமநிலையைப் பேண அது உதவும். அந்த சமநிலை தான் இந்த உலக வாழ்வு என்ற சமுத்திரத்தில் நீச்சலடிக்க உதவும்! 😀

நன்றி உங்கள் கருத்துக்கு.இங்கை பிரச்சனை (பகிடி)என்னவென்டால் ரேடியோவில் ஒரு பாட்டு போய்க்கொன்டிருக்கும் போது அங்கு ஒரு வயோதிபர் என்று அவர்கள் கருதும் ஒரு நபர்(அது நானே தான்)அருகில் நின்றால் இஞசை பாருடா அவர் கேக்கிற பாட்டை என்று ஒரு கதை.😁நாங்கள் இங்கு மாதிரி உடை அணிந்தால் பாருடா அவருக்கு பெடியன் என்ற நினைப்பு.இப்டியான கதைகள் எராளாம்.😂இவளவும் நான் சொன்ன பின் தங்கிய இடத்தில் தான்.சுருக்கமாய் சொன்னால் வேட்டி கட்டாத ஊரில் வேட்டி கட்டியவனுக்கு ஏப்ற்புடும் நிலைதான்.இவளவுக்கும் இந்த ஊரில் இப்பபும் பாடசாசை செல்லும் இளைஞர் என்னிடம் கேட்ட கேங்வி நீங்கள் ரெயினில்தானே சுவிஸ் போவீர்கள் என்று.

  • தொடங்கியவர்
13 hours ago, சுவைப்பிரியன் said:

இப்டியான கதைகள் எராளாம்.😂இவளவும் நான் சொன்ன பின் தங்கிய இடத்தில் தான்.

சுவைப்பிரியன் அண்ணா,

இப்படிப் பல இடங்களில் நடப்பதுண்டு. வடிவங்கள் தான் மாறும். 

இவற்றைத் தலைக்கு எடுப்பதால் நேர விரயமும், மன உளைச்சலுமே மிஞ்சும்.

எனவே, இவற்றைக் கண்டும் காணாதது மாதிரி விட்டு விட்டு நம்ம பாட்டுக்குப் போய்க்கொண்டே இருக்க வேணும்! (காலம் எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை. தக்க சமயத்தில் இப்படியானவர்களுக்கு வாழ்க்கை நிறையப் பாடங்களைக் கற்றுக் கொடுக்கும்!)

  • தொடங்கியவர்

வாழ்க்கையில் முன்னேற நமக்குத் தன்னம்பிக்கை அவசியம் என்பது உண்மை தான்.

எனினும், நமக்குப் பிடிக்காத, நம் இயல்புக்குப் பொருந்தாத, கொள்கைக்கு மாறான விடயங்களை வெறும் கடமைக்காகவோ, நிர்ப்பந்தத்துக்காகவோ செய்ய நேரும் போது நமக்குள்ளே எழும் அவநம்பிக்கை உணர்வு இயல்பானது. இங்கே தன்னம்பிக்கை உணர்வைக் கொண்டுவர முயல்வது வெறும் செயற்கைத் தனமாகவே அமையலாம்; சில வேளைகளில்  அது வீணான திணிப்பாகவும் அமையலாம்.

ஆகவே, நமது வேலை / கடமை எதுவாக இருப்பினும், நமக்கு மிகவும் பிடித்த / நாம் மனமொன்றி மகிழ்வுடன் செய்யக்கூடிய ஓரிரு விடயங்களுக்காகத் தினமும் இயன்ற அளவு நேரத்தை ஒதுக்கினால் அவற்றைச் செய்வதன் மூலம் நமது தன்னம்பிக்கையை வளர்க்கலாம் என்பது எனது நம்பிக்கை.

உதாரணத்துக்கு, அலுவலகத்தில் வேண்டாவெறுப்பாக வேலை பார்க்கும் ஒருவர், தான் சிறுவயதிலிருந்தே ஆசைப்பட்டு நிறைவேறாதிருக்கும் இசைக்கருவி ஒன்றை இசைக்கப் பழகும் முயற்சியில் தினமும் ஒரு மணி நேரத்தை ஒதுக்கினால் நாளடைவில் அந்தத் திறமையை வளர்ப்பது மட்டுமல்லாது, கூடவே அவரது தன்னம்பிக்கையையும் வளர்த்துக்கொள்ள முடியும். இதனால் அவரது பொதுவான உளநலமும் முன்னேறுகிறது; வாழ்வின் மீதான பிடிப்பு மேலும் அதிகரிக்கிறது. யாருக்குத் தெரியும், அவரது இந்த புதிய பொழுதுபோக்கு முயற்சி நாளடைவில் அவருக்கு வருமானம் தரும் பகுதி நேர, ஏன் முழு நேரத் தொழிலாகவும் மாறலாம்; அப்போது கிடைக்கும் மன நிறைவும், அவர் மனதில் எழும் தன்னம்பிக்கை உணர்வும் விபரிக்கவியலாதவை. இது ஒரு சிறு உதாரணம் மட்டுமே. வாழ்க்கையில் இப்படி எண்ணற்ற வழிகள் உள்ளன ஒருவரது தன்னம்பிக்கையை அதிகரிக்க!

இது பற்றிய உங்களது அனுபவங்களையும் அறிய ஆவல், கள உறவுகளே!

  • தொடங்கியவர்

🖋ஒரு சுய ஆக்கத்தை அல்லது ஆக்கபூர்வமான கருத்தொன்றைப் பதிவிடுவதால் கிடைக்கும் மனநிறைவை இங்கு பலரும் உணர்ந்திருப்போம்.

📝நம் எண்ணங்களை எழுத்துக்களாகப் பிரசவித்த திருப்தி அது - தாய்மை உணர்வின் சிறு துளி போல!

✍கூடவே நம் திறமைகளை எழுத்துருவில் வெளிக்கொணர்ந்த வெற்றிக் களிப்பாகவும் இருக்கலாம். எனினும் அதனால் கிடைக்கும்  மகிழ்ச்சி நிரந்தரமானது அல்ல என்பதையும் உணர்ந்திருப்போம். 

💡ஆக்கங்களோ, கருத்துக்களோ அதைப் படிக்கும் நூற்றுக்கணக்கான வாசகர்களில் ஒரு சிலருக்காவது அவற்றால் சிறு பயனாவது கிடைக்கும் என்ற நம்பிக்கை தரும் உத்வேகத்துக்கும், அவ்வாறு பயனடைகிறார்கள் என்பதை அறியும்போது கிடைக்கும் ஆத்மதிருப்திக்கும் ஈடுஇணை வேறெதிலும் உண்டோ! 😊

🗣நம் வார்த்தைகள் சிற்பியின் உளி போன்றவை; உளியால் பலர் ரசனையை / சிந்தனையைத் தூண்டும் சிற்பங்களையும் உருவாக்கலாம்; உளி கொண்டு அலங்கோலமான வடிவங்களையும் தோற்றுவிக்கலாம் - பாறையையும் உடைத்துப் பயனற்றதாக்கலாம். தெரிவு நமதே! 😊

🗒🖋

Edited by மல்லிகை வாசம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.