Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஸ்ரேயா கோஷல் 

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

Shreya Ghoshal - Wikipedia

வங்காளம் தந்த அருமையான ஒரு அழகான இசைக்குயில். எந்த ஒரு இளம் பாடகியும் அடைந்திராத குரலுக்கு சொந்தமானவர் இவர்.

பல விருதுகளை வென்று சாதனை படைக்கும் இந்த குரல் இந்தியாவுக்கு வெளியேயும், சிங்களத்துக்கும், ஆங்கிலத்துக்கும் அறிமுகமானது.

Anugerah Filmfare untuk Penyanyi Latar Wanita Terbaik - Wikipedia Bahasa  Melayu, ensiklopedia bebas

இவரது குரலை கேட்டு மெய் மறந்து போன அமெரிக்க ஒஹயோ  மாநில ஆளுநர், ஸ்ரேயா கோஷல் தினம் என்னும் ஒரு தினத்தினை ஜூலை மாதத்தில் வரும் வகையில் அறிவித்து உள்ளார்.

லண்டனின் புகழ் மிக்க மெழுகு சிலைக்கூடத்தில், மெழுகு சிலையாக இருக்கும் ஒரே அழகான, இந்திய இசைக்குயில் இவர் மட்டுமே.

SHREYA

A tribute to the living legends Atif Aslam and Shreya Ghoshal on their  birthday – Reflection

வங்காளத்தில் ஆரம்பித்து, பாஞ்சாலி எனும் இசை அமைப்பாளரால் இந்தி திரை உலகுக்கு அறிமுகமாகி, இளையராஜா மகன், கார்த்திக் இளையராஜா மூலம் தமிழுக்கு வந்தார் இவர். பின்னர் தெலுங்கு, மலையாளம் என இந்தியா எங்கும் கலக்கி வருகிறார்.

மெய்யை உருக்கும் குரலுக்கு சொந்தமான இந்த பெண், போர்ப்ஸ் சஞ்சிகையின் முகப்பில் சிலமுறை வந்துள்ளார்.

இந்தியாவில் இரு முறை தேசிய விருதினை பெற்றுக்  கொண்ட பெண் பாடகிகள் ஆன, லதா மங்கேஷ்கர், சுசிலா, சித்திரா  வரிசையில் இவர் அண்மையில் இணைந்துள்ளார்.

பின்னர் பலரிடம் பழகி இருந்தாலும், இவரது ஆரம்ப கால குரு இவரது தாயார் தான்.

இவர் தனது மானசீக குருவாக சின்னக்குயில் சித்திரா என்று சொல்லி இருந்தாலும், சின்னக்குயில் சித்திரா, சின்னத்தனமாக, மலையாள இசை அமைப்பாளர்கள், ஸ்ரேயாவை அழைப்பதன் மூலம், உள்ளூர் கலைஞர்களுக்கு வாய்ப்பு தருவதில்லை என்று புலம்பி, இவரை அதிர வைத்தார்.

பெயரை குறிப்பிடாமல், பொதுவாக சொல்லி இருக்கலாம், சித்திரா. இருந்தாலும், அதனை கண்டுகொள்ளாத மிகப் பெரிய உயரத்துக்கு போய் விட்டார் ஸ்ரேயா கோஷல்.

துள்ளிசைப் பாடகி ஆகவும் மேடையினை அலங்கரிக்கிறார் அவர். அமைதியாக பாடி விட்டு செல்லும் மற்ற  இந்திய பெண் பாடகிகளை போலன்றி, மேடையில், ஆடி, பாடி ரசிகர்களை மகிழ்விக்கும் இவரது ஸ்டைல் வித்தியாசமானது.

Shreya_Ghoshal_in_2009.jpg

தமிழில், கார்த்திக் ராஜாவின் பின்னர், இளையராஜா, ரகுமான், யுவன் சங்கர் ராஜா என்று இப்போது இமான் உடன் கலக்கிக் கொண்டு இருக்கிறார்.

கண்டாங்கி பாடல் இவரை தமிழில் புகழ் பெற வைத்தது. அது மட்டுமல்ல, மனதை உருக்கும் பல தமிழ் பாடல்களையும் இவர் தந்துள்ளார்.

இப்போது, டிவி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் வருகின்றார்.

 

 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

என்னை சிரேயா கோஷல் உருக்கியது 
இந்த இரு பாடல்கள் ஊடாகவே ...... 

ஆயிரம் தடவைகளுக்கு மேலாக கேட்டுருப்பினும் 
இன்னும் சலிக்காத பாடல்களாக இருக்க நிச்சயம் 
சிரேயாவின் குரலே காரணம்.

இவர் தமிழ் இல்லை என்று கண காலம் கழித்தே தெரிந்து கொண்டேன்.

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல குரல். 

வேற்று மொழி பாடகி என்று கண்டு பிடிப்பதே கஷ்டம். இளையராஜாவின் இசையமைப்பில் பாடிய பாட்டுக்களும் யுவன்சங்கர் ராஜாவின்  இசையமைப்பில் பாட்டுக்களும் எனக்கு பிடிக்கும்..

இமானின் இசையமைப்பிலும் நல்ல பாடல்களை பாடியுள்ளார்.

 

  • கருத்துக்கள உறவுகள்

 

இமானின் இசையில் அருமையான பாடல்

இளையராஜா இசையில்

யுவனின் இசையில் ஐயையோ

 

பூக்களே சற்று ஓய்வெடுங்கள் ரகுமானின் இசையில்

 

  • கருத்துக்கள உறவுகள்

கற்பனையை தெறிக்கவிட்டு நெஞ்சை நெகிழ்த்திக் கொண்டு போகும் குரல்.இவருடைய பல பாடல்களுக்கு நான் அடிமை......நல்லதொரு பதிவு நாதம்ஸ்......!   👍

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீயும் நானும்

எப்ப நடிகையா அறிமுகமாகப் போறீங்க? பிரபல பாடகி ஸ்ரேயா கோஷலிடம் ரசிகர்கள் கேள்வி!

இயல்பாக அதுவாக நடந்தால், படங்களில் நடிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, Nathamuni said:

நீயும் நானும்

எப்ப நடிகையா அறிமுகமாகப் போறீங்க? பிரபல பாடகி ஸ்ரேயா கோஷலிடம் ரசிகர்கள் கேள்வி!

இயல்பாக அதுவாக நடந்தால், படங்களில் நடிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

எந்த வேசமெண்டாலும் நடிப்பாவோ? 🤠

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

எந்த வேசமெண்டாலும் நடிப்பாவோ? 🤠

இயல்பாக அதுவாக நடக்கும்போது 
நடிப்பா என்றுதான் எண்ணுகிறேன் 
குழந்தையும் அப்படிதான் சொல்லி இருக்கிறது 

  • 3 months later...
  • கருத்துக்கள உறவுகள்

பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷலுக்கு குழந்தை பிறந்தது

பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷலுக்கு குழந்தை பிறந்தது

பிரபல பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல், இந்திய மொழி அனைத்திலும் பாடி வருகிறார். அவருடைய மயக்கும் குரலுக்கு அனைத்து மொழிகளிலும் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு தனது நீண்டநாள் காதலரான ஷிலாதித்யாவைத் திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பின்னரும் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் செம பிசியாகப் பாடிக் கொண்டிருக்கிறார் ஸ்ரேயா கோஷல்.

ஸ்ரேயா கோஷல்

 

சமீபத்தில், தான் கர்ப்பமாக இருப்பதாக குறிப்பிட்டு அழகிய புகைப்படம் ஒன்றையும் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்தார். இதையடுத்து ரசிகர்களும், பிரபலங்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் ஸ்ரேயா கோஷலுக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதை ஸ்ரேயா கோஷல் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

 

https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2021/05/22173927/2664332/Tamil-cinema-shreya-ghoshal-blessed-boy-bay.vpf

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்.

பறந்து, பறந்து பாடும் குயிலை வீட்டுக்குள் கொரோனா பூட்டி வைக்க, குழந்தை கிடைத்திருக்கின்றது.

ஏற்கனேவே இந்திய சனத்தொகை, 1.25 கோடி.... தமிழகத்தில் மட்டும், 80 லட்ச்சம் பெண்கள், கரு கொண்டுள்ளார்கள்.

கொரோனாவுக்கு, வீட்டுக்குள்ள அடைத்து வைத்த மோடி அய்யா, குடும்பம் நடத்தி இருந்தால், ஆணுறையை இலவசமாக கொடுத்திருப்பார்.

வட அமெரிக்காவில், ஐரோப்பாவில்,  அமேசானில், கொண்டோம் வித்தே பெரும்  பணம் பார்த்து இருக்கிறார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.