Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சின்னச் சின்ன தீவுகளுக்கு கூட தமிழ் பெயர் எப்படி வந்தது? கடல் ஆய்வு முடிவுகள்- ஒடிசா பாலு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

சிறப்பான ஆராய்ச்சி வீடியோ .....ஒடிசா பாலுவுக்கு நன்றி.....!

ஒரு காரில் ஒன்று இரண்டு  ஆமையை ஏற்றும் அளவு பெரிய ஆமைகளை பாசையூர், கரையூர் போன்ற இடங்களில் முன்பு கடலில் இருந்து பிடித்து வருவார்கள். பின்பு இயக்கம் வந்து ஆமைகளைப் பிடிக்கக் கூடாது என்று தடை செய்து விட்டார்கள்...... ஐயா ஆமைகளைப் பற்றி நிறைய விடயங்களை சொல்கிறார்.....!  👌

நன்றி நாதம்ஸ்.....! 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 16/1/2021 at 12:34, suvy said:

சிலர் கப்ஸா அடிப்பார்கள்... வயல் வடை சுடுவார்கள் இவர் சொல்லணும் விடயங்களுக்கு ஆதாரங்களை தரும் போது, வியப்பு தான் உண்டாக்குறது. 👍

  • கருத்துக்கள உறவுகள்

On 16/1/2021 at 12:34, suvy said:

பின்பு இயக்கம் வந்து ஆமைகளைப் பிடிக்கக் கூடாது என்று தடை செய்து விட்டார்கள்...... 

அண்ணா,

1. இந்த தடை எத்தனையாம் ஆண்டு இயக்கம் போட்டது?

2. எவ்வளவு பெரிய ஆமைகளை நீங்கள் கண்டுள்ளீகள்? ஒரு கடலில் படகாக பயன்படுத்தும் அளவுக்கு பெரிய, நீரில் மிதக்கும் ஆமை ஓடுகளை கண்டுள்ளீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் ஆர்வம், தமிழை வளர்க்கிறோம் என்ற பெயரில் ஒரிசா பாலு போன்றோர் செய்யும் quackery , தமிழின் உண்மையான தொன்மையையும் சிறப்பையும் கூட கேலிக்குள்ளாக்கும் நிலைக்கு கொண்டு வந்து விடும்!🤦‍♂️

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 17/1/2021 at 20:32, goshan_che said:

அண்ணா,

1. இந்த தடை எத்தனையாம் ஆண்டு இயக்கம் போட்டது?

2. எவ்வளவு பெரிய ஆமைகளை நீங்கள் கண்டுள்ளீகள்? ஒரு கடலில் படகாக பயன்படுத்தும் அளவுக்கு பெரிய, நீரில் மிதக்கும் ஆமை ஓடுகளை கண்டுள்ளீர்களா?

தெரியும் தல... அடுத்த கேள்வி.... சீமான் ஆமைக்கறி சாப்பாட்டுக்கு முன்னரே, பின்னரே ?😜🤪

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒடிசா பாலு சுத்துகிறார் என்னும் கருத்துக்கு, சான்று  உள்ளதா?

  • கருத்துக்கள உறவுகள்
On 17/1/2021 at 15:32, goshan_che said:

அண்ணா,

1. இந்த தடை எத்தனையாம் ஆண்டு இயக்கம் போட்டது?

2. எவ்வளவு பெரிய ஆமைகளை நீங்கள் கண்டுள்ளீகள்? ஒரு கடலில் படகாக பயன்படுத்தும் அளவுக்கு பெரிய, நீரில் மிதக்கும் ஆமை ஓடுகளை கண்டுள்ளீர்களா?

ஒருமுறை பாசையூர்க் கடலில் மிகப் பெரிய ஆமை ஒன்றைக் கொண்டுவந்து கடலில் கட்டி வத்திருந்தார்கள். பாசையூரை அண்மித்த ஊரிலெல்லாம் இருந்து ஆட்கள் சென்று பார்த்தார்கல். இதை நான் நேரில் சென்று பார்த்தேன்.

6-8 அடி நீளம் இருக்கலாம் என நினைக்கிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Kapithan said:

ஒருமுறை பாசையூர்க் கடலில் மிகப் பெரிய ஆமை ஒன்றைக் கொண்டுவந்து கடலில் கட்டி வத்திருந்தார்கள். பாசையூரை அண்மித்த ஊரிலெல்லாம் இருந்து ஆட்கள் சென்று பார்த்தார்கல். இதை நான் நேரில் சென்று பார்த்தேன்.

6-8 அடி நீளம் இருக்கலாம் என நினைக்கிறேன். 

நன்றி கற்பிதன்.

நான் ஒரு 5 அடியளவுக்கு கண்டுள்ளேன்.

நாதம் மேலே கோடிட்டு காட்டினாலும், உண்மையில் அதையும் தாண்டி எனக்கு இதில் ஒரு தெளிவின்மை இருக்கிறது.

ஆமை ஓடு உண்மையிலேயே எலும்பால் ஆனாது என்றும். ஆமைக்கான buoyancy ஐ அதன் சுவாச பையில் இருக்கும் காற்றுதான் வழங்கும் என்றும் தனியே ஆமை ஓட்டை நீரில் போட்டால் தாண்டு விடும் என்றும் சொல்கிறார்கள்.

எமது வளவுக்குள் ஒரு சருகாமை ஓடு இருந்தது ஆனால் அதை அப்போ நீரில் போட்டு பார்க்கவில்லை🤣

உண்மையில் தனியே ஆமை ஓடு மிதக்குமா?

பிகு

ஒரிசா பாலு ஐயாவின் உண்மையான துறை ஆமை ஆராய்சி அவருக்கு இது தெரிந்து இருக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

ஒடிசா பாலு சுத்துகிறார் என்னும் கருத்துக்கு, சான்று  உள்ளதா?

நாதம்,

ஒரு தியரியை முன்வைப்பவர்தான் அந்த தியரி உண்மை என்ற burden of proof ஐயும் discharge பண்ண வேண்டும். 

உங்களை பொலீஸ் ஒரு மேடர் கேசுக்கு புக் பண்ணி போட்டு கோர்ட்டில் வந்து, நீ கொலை செய்யவில்லை என நிரூபி என்று கேட்பது போல் இருக்கிறது உங்கள் கேள்வி.

ஐயாவின் கதை சில எடுகோள்களை வைக்கிறது.

1. ஆமைகள் தமிழ்நாட்டில் இருந்து, உலக நாடுகள் எங்கும் போகிறன. ஐயா இதை இலகுவாக நிறுவலாம் ஒரு 5000 ஆமையில் சிப்பை பொருத்தி ஒரு 5 வருடம் அதை அவதானித்து primary data மூலம்.

2. ஆமை போகும் இடங்கள் எல்லாம் தமிழ் பெயரை ஒத்த இடங்கள் உள்ளன. இதற்கு 1இன் டேட்டாவும், அடுத்து அந்த ஊரில் அந்த பெயரை பற்றிய etymology, historical, folklore இப்படி பல டேட்டாவும் தேவைப்படும். சும்மா கந்தன் புரிதான் Canterbury என்ற உச்சரிப்பு ஒற்றுமை அன்றி அந்த அந்த மொழி நிபுணர்களின் மொழி சார் ஆராய்சி முடிவுகள். 

3. இவை இரெண்டையும் நிறுவினாலும், எமக்கு ஒரு ஒரிசா பாலு இருப்பதை போல் மெக்சிகோவில் ஒரு “யூகட்டான் யோசேப்பு” இருந்து, மெக்சிகோ மக்கள்தான் முதல் குடிகள், அவர்கள் ஆமை வழி வந்து மதுரையில் குடியேறினார்கள் என சொன்னால் - தமிழில் உள்ள சொற்கள் பல மெக்சிக்கோ பழங்குடி சொற்கள்தான் என்றால் - எல்லாம் படுத்துவிடும்🤣. அதையும் தியரியை முன்வைக்கும் பாலு ஐயாதான் தகர்க்க வேண்டும்.

இப்படி எண்ணற்ற சிக்கல்கள் உள்ளதால்தான் யூனியில் படிக்கும் பிள்ளைகள் தரவுகளுக்கு ஏற்று கொள்ளபட்ட ஆய்வுகளை தேடி லைபரிரரி அல்லது ஒன் லைன் லைபரரியில் படிக்கவேண்டி இருக்கிறது

ஒரு யூனி அசைண்ட்மெண்டில் “இப்படி ஒரிசா பாலு ஐயா ஒரு யூடியூப் வீடியோவில் சொன்னார்” என உசாத்துணை காட்ட முடியாதுதானே.

ஐயா அவசரப்பட்டு வீடியோ விடாமல், தனது பெளதீகவியல் இளமானி பட்டத்தை அடுத்து; ஒரு யூனியில் ரிசேர்ஜ் டிகிரிக்கு பதிவு செய்து, ஆய்வறிக்கை சமர்பித்து, அது peer reviewed ஆகி - அதன் பின் ஏற்றுகொள்ளபட்டால் - நாமும் பெரும் பெருமிதம் அடையலாம்.

அதுவரை ஐயாவின் தமிழ் ஆர்வத்தை மெச்சுவதை மட்டும்தான் செய்ய முடியும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இணைப்பிற்கு நன்றி நாதர்!

தமிழ்,தமிழினம் என்றால் தமிழர்களுக்கே கசப்பது இப்போதெல்லாம் சர்வ சாதாரணம்.😎
 
  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, goshan_che said:

நன்றி கற்பிதன்.

நான் ஒரு 5 அடியளவுக்கு கண்டுள்ளேன்.

நாதம் மேலே கோடிட்டு காட்டினாலும், உண்மையில் அதையும் தாண்டி எனக்கு இதில் ஒரு தெளிவின்மை இருக்கிறது.

ஆமை ஓடு உண்மையிலேயே எலும்பால் ஆனாது என்றும். ஆமைக்கான buoyancy ஐ அதன் சுவாச பையில் இருக்கும் காற்றுதான் வழங்கும் என்றும் தனியே ஆமை ஓட்டை நீரில் போட்டால் தாண்டு விடும் என்றும் சொல்கிறார்கள்.

எமது வளவுக்குள் ஒரு சருகாமை ஓடு இருந்தது ஆனால் அதை அப்போ நீரில் போட்டு பார்க்கவில்லை🤣

உண்மையில் தனியே ஆமை ஓடு மிதக்குமா?

பிகு

ஒரிசா பாலு ஐயாவின் உண்மையான துறை ஆமை ஆராய்சி அவருக்கு இது தெரிந்து இருக்கும். 

எனக்கு அது தொடர்பாக எதுவும் தெரியாது.

ஆனால் Huwaii தீவுகளுக்கு மனிதக் குடியேற்றம் எப்படி ஏற்பட்டதென்பது தொடர்பான ஒரு ஆய்வுத் தொடர் ஒன்றை(History Television ?) சில வருடங்களிற்கு முன்னர் பார்த்திருந்தேன். அதில் மனிதர்கள் கடல் ஆமைகளின் பயணம் அல்லது (Seasonal migration) இடப்பெயர்ச்சியை அடிப்படையாக வைத்தே மனிதர்கள் Hawaii தீவுகளுக்குச் சென்று குடியேறியதாக  மிகவும் தெளிவாக கூறினார்கள்.

அதனை அடிப்படையாக வைத்து மனிதர் கட்டுமரத்தினை துணையாகக் கொண்டு Huwaii தீவுகளுக்கு மேற்கொண்ட ஆய்வுப் பயணத்தினை ஒட்டிய திரைப்படத்தையும் பார்த்திருந்தேன். அதிலும் மனிதர் கடற் பயணங்களுக்கு கடல் ஆமைகளை வழிகாட்டியாகக் கொள்வதனை காட்டியிருந்தார்கள். 

அதில் சிறப்பாக கடல் ஆமைகள் எவ்வாறு சிறப்பாக கடல் நீரோட்டத்தை தமது இடப் பெயர்வுக்குத் துணையாகக் கொள்கின்றன என்பதையும் விளக்கியிருந்தார்கள்.

😀

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Kapithan said:

நானும் அதை பார்த்தேன். நேசனல் ஜியோகிரபி என நினைக்கிறேன்.

ஆமைகள் நீரோட்டத்தை மனிதர் பின் தொடர்ந்தனர் என்ற எடுகோள் பலரால் முன் வைக்கபடுவதுதான்.

அதனால்தான் பாலு ஐயா என்னத்தை நிறுவ வேண்டும் என புள்ளி 1இல் தெளிவாக குறிப்பிட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்

நேசனல் ஜியோகிரபி தொலைக்காட்சி நிகழ்சியையும் யூனி அசைன்மெண்டில் உசாத்துணையாக காட்ட முடியாது என்பதை நீங்கள் மறுக்க மாட்டீர்கள் ( யாழ் பல்கலையின் கற்பிதன் அல்லவா 😀). 

ஆனால் அந்த நிகழ்சியில் பல நம்பகமான ஆய்வுகளை, ஆய்வாளர்களை மேற்கோள் காட்டியதாக நினைவு.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, goshan_che said:

நேசனல் ஜியோகிரபி தொலைக்காட்சி நிகழ்சியையும் யூனி அசைன்மெண்டில் உசாத்துணையாக காட்ட முடியாது என்பதை நீங்கள் மறுக்க மாட்டீர்கள் ( யாழ் பல்கலையின் கற்பிதன் அல்லவா 😀). 

ஆனால் அந்த நிகழ்சியில் பல நம்பகமான ஆய்வுகளை, ஆய்வாளர்களை மேற்கோள் காட்டியதாக நினைவு.

 ஒரிசா பாலுவின் பேச்சு என்பது உணர்வு பூர்வமாக இருந்தாலும் அவர் தனது முடிவிற்கான உசாத்துணையை பெருமளவு காட்டவில்லை என்பது மிகவும் முக்கியமான குறைபாடு. அவரது வாதங்கள் எங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தலாமே தவிர, ஆராச்சியாளருக்குரிய தெளிவான விளக்கத்தை தரவில்லையென்பது பெருங்குறை. 

(நான் Methodology மற்றும் Statistics  ஐ கற்றேன் என்பதையிட்டு உண்மையில் எப்போதுமே மகிழ்வடைவேன்...👍)

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Kapithan said:

நன்றி. நீங்கள் விஞ்ஞான ரீதியான அணுகுமுறை உள்ளவர் என்பதை அறிந்தே அப்படி எழுதினேன். படித்த விடயதானத்தை பார்த்ததும் என் நினப்பு சரிதான் என உறுதியாகிறது.

பாலு ஐயாவின் கருத்து மட்டும் நிறுவப்பட்டால் என்னை விட அதை வீட்டு கூரையில் ஏறி நின்று உரக்க கத்துபவர்கள் இருப்பார்களா என்பது சந்தேகமே.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Nathamuni said:

ஒடிசா பாலு சுத்துகிறார் என்னும் கருத்துக்கு, சான்று  உள்ளதா?

ஒரிசா பாலு சுத்தவில்லை என்றால் அதை அவர் தான் நிரூபிக்க வேண்டும், மேலே கோசான் (நான் நினைக்கிறேன் ஆறு மாதங்களில் இரண்டாவது தடவையாக!) எழுதியிருப்பது போல!

ஆனால், எப்படி நிரூபிப்பது?

உதாரணமாக:  முதல் தோன்றிய மொழியை எப்படி வரையறுப்பது என்பதே இன்னும் தெளிவில்லை! தானிய வரவு செலவைக் கணக்கு வைப்பதற்காக கோடுகளும் ,புள்ளிகளும் போட்ட போது தான் மொழி முதன் முதலில் எழுதப் பட்டதாக (வரி வடிவம்) மானிடவியலாளர் யுவால் நோவா ஹரிரி சொல்கிறார். வரிகளும் கோடுகளும் எந்த மொழிக்குச் சொந்தமானவை என்று எப்படி நிறுவுவது? சரி, பேச்சு மொழியில் எது முதலில் தோன்றியது என்றால் , வரிவடிவம் வந்த போது தான் என்ன பேசினார்கள் என்றே பதிவு உருவானது. எனவே முதல் பேசப் பட்ட மொழி எதுவென்று ஆயிரம் ஆண்டுகள் கடந்த பதிவை வைத்து எப்படித் தீர்மானிப்பது?

2009 இல் நடந்த நிகழ்வுகளே 2020 இல் தவறுகளுடன் பதியப் படும் போது ஆயிரம் ஆண்டுகளில் எவ்வளவு திரிபுகள் உருவாகியிருக்கும்? எனவே இந்த முதன் முதல் தோன்றியது எந்த மொழி , எதில் இருந்து சொற்கள் எங்கு சென்றன என்பதெல்லாம் ஒலியை (phonetics) வைத்துக் கொண்டு ஆராய முடியாது. இதனால் தான் etymology நிபுணர்களே இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை!

ஒரிசா பாலுவுக்கு இருக்கும் சௌகரியம் அவர் etymologist அல்ல! சொல்லும் எதையும் ஒரு ஆய்வுச் சஞ்சிகையில் பிரசுரித்து அங்கீகாரம் தேட வேண்டிய அழுத்தம் அவருக்கில்லை! எனவே, இப்படி தமிழர்களிடையே மட்டும் பேசிக் கைதட்டல் வாங்கி விட்டு நகர்ந்து விடுவார்! 

இதனால் நன்மை ஒன்றும் இல்லை!

தீமை: வந்த வெள்ளம் கிணற்று நீரைப் பாழாக்கி விடுவது போல தமிழின் நிரூபிக்கப் பட்ட தொன்மையும்  செம்மையும் கூட கேள்விக்குள்ளாகும்! இதனால் தான் ஒரிசா பாலு போன்றோர் ஊக்குவிக்கப் படக் கூடது என்கிறேன்!

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Kapithan said:

அதில் சிறப்பாக கடல் ஆமைகள் எவ்வாறு சிறப்பாக கடல் நீரோட்டத்தை தமது இடப் பெயர்வுக்குத் துணையாகக் கொள்கின்றன என்பதையும் விளக்கியிருந்தார்கள்.

Finding Nemo சிறுவர்களுக்கான animation படத்திலும் வருகின்றது!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பதிலுக்கு நன்றி. உங்கள் ஈசி சேர் தர்க்கத்துக்குள்ள போக விரும்பவில்லை. இதிலே, சிலர், லைக் வேறு போட்டிருக்கிறார்கள்.  தயவு செய்து, இந்த  வகையான சிந்தனைகளை விடுத்து, அவர் சொல்ல வருவதை கவனியுங்கள்.

ஒரு முக்கிய கவனிப்பினை சொல்ல விரும்புகிறேன்.

கறி, தமிழர்களின் 2000 ஆண்டுகளுக்கு மேலான சொத்து. எமது இலக்கியங்களில் கூட, ஏன் பைபிளில் கூட குறிப்புகள் உண்டு.

இந்தியன் கறி என்று பிரிட்டனில் புகுந்து கொண்ட. இந்தக்கறியை , தாம் தான் இந்தியாவில் அறிமுகப்படுத்தினோம் என்று பிரிட்டிஷ்காரரும், தமதே என்று பங்களாதேஷ்காரரும், இல்லை எமதெ என்று தாய், மலே, கரிபியன், ஜப்பானீஸ், சீனா நாட்டவரும் சொல்லி, இன்று பிரிட்டனினின் £4.2பி கறி மார்க்கெட் பெரும் அடையாள சிக்கலில் மாட்டி உள்ளது. இதனை curry crisis  என பிரிட்டிஷ் மீடியா சொல்கிறது. 

சிங்களவர்கள் வேறு, கறி எமதே என்கிறார்கள். 

இதுக்குள்ள, கிழக்கு ஆப்பிரிக்காவில் இருந்து இடி அமினால் துரத்தப்பட்டு பிரிட்டன் வந்த, குஜராத்தி வம்சாவளி பதக் என்பார், கறி பேஸ்ட் என்னும் ஏதோ ஒரு கோதரியை அறிமுகப்படுத்தி, இப்போது, இந்திய சந்தைக்கு போகிறாராம்.

அடப்பாவியலே, எமது கறி பேஸ்ட், அம்மியில் இன்றும் அரைக்கப்படும் பத்தியம்.

இதனை எப்படி நிறுவுவது?

எங்களுக்கு சொந்தமானதை, சொந்தமானது என்று சொல்லாமல் இருப்பது கூட பரவாயில்லை. இந்த மாதிரி, நியாங்களை பிளப்பதும், அந்த முயல்வு எடுபவர்களையாவது, நக்கல், கிரந்தம் விட்டு நாமே கல் எறிவது என்ன நியாயம்?

ஒடிசா பாலு முடிந்தளவு முயல்கிறார். கோசன், ஆமைகளை பிடித்து, சிப்பினை பொருத்தி, எப்படி நகர்கிறது என்று பார்க்கலாமே என்கிறார்.

சரியான கருத்து. ஆனால், இது அவருக்கு தெரியாமல் இருக்கலாம், அதுக்கான வசதி இல்லாமல் இருக்கலாம், அதுக்குரிய, தொடர்புகளை உண்டாக்கி, கருத்தாடல் செய்து, பிரச்சனைகளை விளங்கி, உதவிகளை ஒருங்கிணைக்கலாம்.

தமிழர்கள் கறியினை மீட்டு எடுப்பது எவ்வளவு கடினம் என்று கவனியுங்கள். இந்த மீட்டு எடுப்பில், ஈழ தமிழர்களுக்கு மேலதிக பொறுப்பு இருப்பதனை கவனியுங்கள். காரணம் மிளகாயுடன் வந்த போர்த்துக்கேயர் இந்திய தமிழர்களை ஆளவில்லை. எம்மையே ஆண்டார்கள். இந்திய தமிழர்கள், இந்தியாவினுள்ளேயும், ஈழ தமிழர்கள் இலங்கைக்குள்ளும் சிக்கி கொண்டு விட்டார்கள் என்பதனையும் புரியுங்கள். 

இந்த போர்த்துக்கேய, டச்சு காரர்களின் யாழ்ப்பாண ராஜ்ய 300 வருட ஆட்சி விபரமே, பிரிட்டிஷ் கார்களின் கறி தாம் அறிமுகப்படுத்தியது என்பதை உடைக்க தேவையானது என்னும் முக்கிய விடயம் என்பதனையும் கவனியுங்கள்.

இடையே இருந்த சுதந்திர வன்னி ராஜ்யமே, யாழ் ராஜ்ஜியம் தனியாக ஆளப்பட வேண்டிய தேவையாக இருந்தது என்பதை கவனியுங்கள். 

ஆகவே, நானும் தின்ன மாட்டேன், தின்பவர்களையும் விடமாட்டேன் என்னும் வைக்கோல் பட்டறை நாய்க்குட்டி மன நிலையினை விடுத்து, ஆகக்குறைந்தது, கடந்தாவது போங்க.

இதுக்கு மேல் நான் இங்கே மினக்கடப்போவதில்லை. பதில் போட்டு, பதில் எதிர்பார்க்க வேண்டாமே.

Edited by Nathamuni

நீங்கள் தொடர விரும்பாவிட்டாலும் சிலதை சொல்ல விரும்புகிறேன்.

கறி.

இதை பற்றி முன்பே நாம் ஒன்றுக்கு மேற்பட்ட தடவை உரையாடி விட்டோம்.

இங்கே மூன்று விடயங்களை போட்டு குழப்பி கொள்ள கூடாது.

1. கறி என்ற பெயர் சொல் - இது தமிழ் சொல்தான். இதை மொழியிலாளர்கள் ஏற்று கொள்கிறார்கள் 

https://www.merriam-webster.com/dictionary/curry 

Noun 

Tamil kaṟi (or a cognate word in another Dravidian language).

2. Curry எனும் ஆங்கில வினைச்சொல் verb. வினைச்சொல்லாக இது 2 அர்த்தத்தில் பயன்படுகிறது, ஆனால் இரெண்டும் உணவு சம்பந்தமில்லாதது. இந்த அர்த்தத்தில் இது ஏனைய ஐரோப்பிய மொழிகளில் இருந்து வருகிறது. (மேலே தந்த இணைப்பில் ஆதாரம் உண்டு).

ஆகவே கறி - என ஒரு உணவை குறிக்கும் போது அந்த சொல் தமிழ் சொல் என்பதை நாம் நிறுவ வேண்டிய தேவை இல்லை.

3. அடுத்து வருவதுதான் what is  a curry? என்ற கேள்வி. 

இங்கேதான் மயக்கம் எழுகிறது.

பால்தியில் இருந்து, குருமா, விண்டலூ, யூகேயில் உருவாக்கிய டீக்கா மசாலா, ஜமைக்காவின் curried goat வரை எல்லாவற்றையும் ஆங்கிலேயர்கள் கறி என்ற பொது பதத்தில் 300 வருடங்களாக பிழையாக அழைந்தமையால் இப்போ கறி என்றால் யாருடையது என்று பிடுங்கு படவேண்டி உள்ளது.

இதற்கான விளக்கம்:

Curry in its original form and meaning தமிழ் சொல்தான். ஆனால் கறியே அல்லாத பால்டி, குருமா, டீக்கா போன்றவற்றையும் பிழையாக (misnomer) கறி என அழைப்பதால் ஒருவித மயக்கம் ஏற்படுகிறது.

இதை விளங்கிகொண்டால் எங்கள் புறநானூற்று கறி பறிபோகிறதே என பதறவேண்டியதில்லை. அவர்களின் டிக்சனறிகள் கூட இதை எமது சொல் என ஏற்கிறன.

அடுத்து Champaign, Cornish Pastry போல geographical identification status வழங்கப்பட்டு, ஒரு பகுதியில் உருவாகும் கறி மட்டும்தான் “கறி” என அழைக்கப்படும் ஆபத்து இருக்கிறதா? என்றால் இப்போதைக்கு இல்லை என்றே கூறமுடியும். காரணம் நான் மேற்சொன்ன ஆதாரம். அவர்களது டிக்சனரியே எமது சொல் என சொல்லும் ஒன்றை தமது என அவர்கள் உரிமை கோரமுடியாதல்லவா? இப்படி ஒரு நிலைவந்தால் புறநானூற்று ஆதராமும் சமர்பிக்கபடலாம்.

 அப்படி ஒரு நிலை வந்தால் - இந்திய அரசோ, தமிழ்நாடு அரசோ அல்லது ஏனைய தமிழ் “கறி” வியாபாரிகளோ அதை எதிர்க்கலாம். 

ஆகவே தமிழர்களின் கறி-உரிமை பாதுகாப்பாகத்தான் இருக்கிறது. ஆனால் விரும்பினால் யாரும் இதை ஒரு ஆய்வு செய்து, ஆய்வறிக்கையாக சமர்பிக்கலாம்.

இது கறி மேட்டர்.

பாலு ஐயா மேட்டர் சிக்கலானது. நாம் நம்புவதை போல உலகில் பலரும் தாமே ஆதிக்குடி என நம்புகிறார்கள்

ஆனால் விஞ்ஞானம் இந்த இனம்களின் உரிமை கோரல்களை தவிர்த்து  வேறு வழிகளில் மனித இன தோற்றுவாயையும், பரம்பலையும் ஆராய்ந்து சில கொள்கைகளையும் முன் வைக்கிறது.

விஞ்ஞானத்தில் ஊகம், பின் கருதுகோள், பின் கொள்கை, ஆதாரபூர்வமாக நிறுவிய பின் விதி ஆகிறது. 

பாலு ஐயா முன் வைப்பது ஒரு ஊகம். இதை அவர் உங்களை போன்ற ஆர்வலருக்கு சமர்பித்து funding எடுத்து, கொள்கையாக ஏற்று கொள்ளவைக்க வேண்டும்.

அந்த நிலையை அடையும் போது, கோசானும் ஜஸ்டினும் அல்ல, துறைசார் நிபுணர்கள் இதை பற்றி விவாதிப்பார்கள்.

அதை விடுத்து, வெறுமனே தமிழில் வீடியோக்களை விட்டு அதை “ஆராய்சி முடிவு” என்றால் - அதை தமிழ் உணர்வாளர்களை தாண்டி யாரும் கருத்தில் எடுக்க போவதில்லை.

காக்கை பொன் குஞ்சை நாங்கள் மட்டும் கொஞ்சி வளர்த்து விட்டு போக வேண்டியதுதான்.

அது மட்டும் அல்லாமல் ஜஸ்டீன் அண்ணா சொல்வதை போல் “வந்த வெள்ளம் நிண்ட வெள்ளத்தையும் கொண்டு போன கதையாக” இலங்கையில், இந்தியாவில் எமது உண்மையான தொன்மையயும் எதிரிகள் இதை வைத்து கேள்விக்கு உள்ளாக்கவும் கூடும்.

தமிழர் மரபுரிமை மீது உங்களையும் குமாரசாமி அண்ணையையும் போலத்தான் எல்லாருக்கும் அபிமானம் உண்டு. எங்களது அம்மா அப்பாவும் தமிழ்தானே🤣.

ஆனால் ஆராய்சி என்ற பெயரில் மொக்கேனப்படும் படிநடந்தால் அதை சொல்லித்தான் ஆக வேண்டும்.

Edited by goshan_che

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

நாதம்,

நீங்கள் தொடர விரும்பாவிட்டாலும் சிலதை சொல்ல விரும்புகிறேன்.

கறி.

இதை பற்றி முன்பே நாம் ஒன்றுக்கு மேற்பட்ட தடவை உரையாடி விட்டோம்.

இங்கே மூன்று விடயங்களை போட்டு குழப்பி கொள்ள கூடாது.

1. கறி என்ற பெயர் சொல் - இது தமிழ் சொல்தான். இதை மொழியிலாளர்கள் ஏற்று கொள்கிறார்கள் 

https://www.merriam-webster.com/dictionary/curry 

Noun 

Tamil kaṟi (or a cognate word in another Dravidian language).

2. Curry எனும் ஆங்கில வினைச்சொல் verb. வினைச்சொல்லாக இது 2 அர்த்தத்தில் பயன்படுகிறது, ஆனால் இரெண்டும் உணவு சம்பந்தமில்லாதது. இந்த அர்த்தத்தில் இது ஏனைய ஐரோப்பிய மொழிகளில் இருந்து வருகிறது. (மேலே தந்த இணைப்பில் ஆதாரம் உண்டு).

ஆகவே கறி - என ஒரு உணவை குறிக்கும் போது அந்த சொல் தமிழ் சொல் என்பதை நாம் நிறுவ வேண்டிய தேவை இல்லை.

3. அடுத்து வருவதுதான் what is  a curry? என்ற கேள்வி. 

இங்கேதான் மயக்கம் எழுகிறது.

பால்தியில் இருந்து, குருமா, விண்டலூ, யூகேயில் உருவாக்கிய டீக்கா மசாலா, ஜமைக்காவின் curried goat வரை எல்லாவற்றையும் ஆங்கிலேயர்கள் கறி என்ற பொது பதத்தில் 300 வருடங்களாக பிழையாக அழைந்தமையால் இப்போ கறி என்றால் யாருடையது என்று பிடுங்கு படவேண்டி உள்ளது.

இதற்கான விளக்கம்:

Curry in its original form and meaning தமிழ் சொல்தான். ஆனால் கறியே அல்லாத பால்டி, குருமா, டீக்கா போன்றவற்றையும் பிழையாக (misnomer) கறி என அழைப்பதால் ஒருவித மயக்கம் ஏற்படுகிறது.

இதை விளங்கிகொண்டால் எங்கள் புறநானூற்று கறி பறிபோகிறதே என பதறவேண்டியதில்லை. அவர்களின் டிக்சனறிகள் கூட இதை எமது சொல் என ஏற்கிறன.

அடுத்து Champaign, Cornish Pastry போல geographical identification status வழங்கப்பட்டு, ஒரு பகுதியில் உருவாகும் கறி மட்டும்தான் “கறி” என அழைக்கப்படும் ஆபத்து இருக்கிறதா? என்றால் இப்போதைக்கு இல்லை என்றே கூறமுடியும். காரணம் நான் மேற்சொன்ன ஆதாரம். அவர்களது டிக்சனரியே எமது சொல் என சொல்லும் ஒன்றை தமது என அவர்கள் உரிமை கோரமுடியாதல்லவா? இப்படி ஒரு நிலைவந்தால் புறநானூற்று ஆதராமும் சமர்பிக்கபடலாம்.

 அப்படி ஒரு நிலை வந்தால் - இந்திய அரசோ, தமிழ்நாடு அரசோ அல்லது ஏனைய தமிழ் “கறி” வியாபாரிகளோ அதை எதிர்க்கலாம். 

ஆகவே தமிழர்களின் கறி-உரிமை பாதுகாப்பாகத்தான் இருக்கிறது. ஆனால் விரும்பினால் யாரும் இதை ஒரு ஆய்வு செய்து, ஆய்வறிக்கையாக சமர்பிக்கலாம்.

இது கறி மேட்டர்.

இது கறி மேட்டர்.... !!

surprise GIF

பகவானே!!!  :grin:

Oh My God Reaction GIF

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
56 minutes ago, Nathamuni said:

பகவானே!!!  :grin:

தல...! காவடி எடுத்தால் ஆடாமல் இறக்கி வைக்காது.அது சாமி குத்தம் எண்டு நல்லாய் தெரியும்.😎

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

இது கறி மேட்டர்.... !!

surprise GIF

பகவானே!!!  :grin:

Oh My God Reaction GIF

இண்டையோட உந்த கறி சட்டிய தூக்கி கொண்டு வாரத நிப்பாட்டோணும் சரியே🤣

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.