Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்கா அண்மையில் வெளியிட்டிருக்கும் தடைசெய்யப்பட்ட வெளிநாட்டுத் தீவிரவாத அமைப்புக்களின் பட்டியலில் புலிகளின் பெயரும் தொடர்ந்து இடம்பெறுகிறது.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ரஞ்சித் said:

அண்ணை,

இப்ப பலருக்கு 2009 இற்கு முன்னர் தாங்கள் எப்படி, எதற்காக புலிகளை ஆதரித்தார்கள் என்பது மறந்து போச்சுது. 2009 இல புலிகள் மனிதவுரிமை மீறல்களில் ஈடுபட்டார்கள் என்று ஊரிலிருந்து தங்களுக்குச் செய்தி கிடைத்ததாம், அதனால தான் தாங்கள் புலிகளை விமர்சிக்கிறம் என்று இப்போது கூறுகிறார்கள். அப்படியானால் 2009 வரை புலிகளை அவர்கள் ஆதரித்தபோது புலிகள் செய்தவை என்று பேசப்பட்ட மனிதவுரிமை மீறல்களை இவர்கள் ஏற்றுக்கொண்டிருக்கவேண்டும் அல்லது அதுபற்றி எதுவுமே தமக்குத் தெரியாது என்று கற்பூரத்தை அணைத்துச் சத்தியம் செய்ய வேண்டும். 2009 வரை புலிகளை ஆதரிப்பதற்கு இவர்களுக்கு இருந்த அதே காரணங்கள்தாம் இன்றுவரை புலிகளை ஆதரித்து நிற்பவர்களுக்கும் இருக்கிறது என்பதை இவர்கள் புரிந்துகொள்ளப்போவதில்லை.  புலிகளின் மனிதவுரிமை மீறல்களுக்காகவே அவர்களை எதிர்க்கிறோம் விமர்சிக்கிறோம் என்று இன்று பேசுபவர்கள் 2009 இற்கு முன்னமே, அதாவது புலிகள் மனிதவுரிமை மீறல்களில் ஈடுபடுகிறார்கள் என்று பேசப்பட்டபோதே அதைச் செய்திருக்க வேண்டும். அதைவிட்டுட்டு இப்போதுவந்து நடுநிலமை பேசுறம் எண்டுறதும், மனிதவுரிமை வாதிகள் எண்டுறதும் சகித்துக்கொள்ள முடியாமல் கிடக்கு.

மக்களைப் புலிகள் தான் வழிநடத்தினார்கள். இதில் மாற்றுக்கருத்தில்லை. இன்று மனிதவுரிமை வாதிகள் போலவும், நடுநிலைமைவாதிகள் போலவும் பேசும் எல்லோருமே அவர்களின் தலைமைத்துவத்தையே தமிழர்களின் தலைமைத்துவமாக ஏற்றுக்கொண்டே சென்றார்கள். ஏனென்றால், அன்று புலிகளை விட்டால் மக்களுக்கு வேறு எவரும் இருக்கவில்லை. தமது அரசியலை, தமது இருப்பை, தாயகத்தை புலிகள் காப்பார்கள் என்கிற நம்பிக்கை மக்களுக்கு இருந்தது. அதனாலேயே அவர்கள் எடுத்த முடிவுகள் அனைத்தையும் மக்கள் ஆதரித்தார்கள். புலிகள் காட்டிய கூட்டமைப்பை ஏற்றுக்கொண்டு அமோக வெற்றியை ஈட்டிக் கொடுத்தார்கள்.

ஆகவே, புலிகள் மக்களை வழிநடத்தவில்லை, தமிழர்களின் ஏக பிரதிநிதிகளாக இருக்கவில்லையென்று இன்று கூறுவோர் செய்வது தாம் 12 வருடங்களுக்கு முன்னர் நம்பியவற்றையும், நம்பிச் செயற்பட்டவற்றையும் இல்லையென்றும், பொய்யென்றும் மறுப்பதுதான்.

இவர்களை எம்மால் மாற்றவியலாது. கடந்து செல்லுங்கள். உங்களுக்குத் தெரியும் நீங்கள் செய்வது. அது உங்களுக்குச் சரியாகத் தென்படும் பட்சத்தில் நீங்கள் கவலைகொள்ளத் தேவையில்லை.

இதை நேரே என்னிடமே சொல்ல ஏன் தயக்கம்? நாம் இன்னும் நண்பர்கள் தானே?😊

2012 வரை புலிகள் பற்றி நான் கொண்டிருந்த கருத்தும், மாற்றுக் கருத்தாளர்கள் பற்றிக் கொண்டிருந்த கருத்துக்களும் தவறானவை என்று ஏற்றுக் கொள்கிறேன். அது ஏன் 2012 இல் மாறியது என்பதை வேறொரு திரியில் உங்களுக்கு நேராகவே சொல்லியிருக்கிறேன் என்று நினைக்கிறேன்.

"அட நல்லா மற்றவர்களைக் கழுவி ஊற்றி விட்டோமே, இப்ப எப்படி என் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வது?" என்ற வெட்டிப் பெருமை என்னிடம் இல்லை!

அதனாலேயே cognitive dissonance இல்லாமல் எனக்குள் இருக்கும் நியாயத் திசைகாட்டியை  மட்டும் நம்பி வெளிப்படையாகப் பேசுகிறேன். இந்த moral compass இல்லாத காரணத்தால் தான் இங்கே சில உறுப்பினர்கள் ஒவ்வொரு கேசுக்கும் ஒவ்வொரு கொள்கையை பொக்கற்றுக்குள் துளாவி எடுத்து அணிந்து கொள்கின்றனர்😂.

உதாரணமாக, புலிகளின் பெண் விடுதலை முனைப்பைச் சிலாகிக்கும் நபர்களால் பெண்களை உயர்வாக்கும் சில செயல்பாடுகள்  பரிகசிக்கவும் எதிர்க்கவும் படும்! 

வேறென்ன சந்தேகங்கள் இருக்கின்றன? நேராகக் கேளுங்கள், தெளிவாக்குகிறேன்! 

  • Replies 80
  • Views 6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, கற்பகதரு said:

நீங்கள் அவருக்கு ஆதரவானவராக தெரிகிறது. றோ பற்றி எழுதினால் பொதுவாக அதை கேலி செய்து நீங்கள் எழுதுவதை அவதானித்திருக்கிறேன். எமது மக்களின் அழிவில் றோவின் பங்களிப்புக்கு ஈழத்தமிழர் பலர் வேலை செய்திருக்கிறார்கள். நீங்களும் அவர்களில் ஒருவராக இருக்கலாம்.

அப்படியே என்னையும் சேர்த்து கொள்ளுங்கோ பாஸ் .😜

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Nathamuni said:

  ok. happy? :grin:

இங்கிலிசும் தெரியுமா? 😄🇮🇳 இங்கிலிசு படிச்சிருக்கிறதும் நல்லது தான்.👏

1 hour ago, பெருமாள் said:

அப்படியே என்னையும் சேர்த்து கொள்ளுங்கோ பாஸ் .😜

பாஸ் உங்கட வடைக்கடையில் இல்லையா? இந்தியன்ர வடையாச்சே? நல்லாயிருக்குதா? 🇮🇳🤗

  • கருத்துக்கள உறவுகள்

2009ஆம் ஆண்டுக்குப்பிற்பாடு உலகில் எந்தவொரு நாட்டிலும் தமிழ்ஈழவிடுதலைப்புலிகளமைப்பு இயங்கவில்லை.தமிழ்ஈழத்தில் இயங்க மற்ற இயக்கங்கள் விடமாட்டார்கள்.வெளிநாடுகளில் இயங்க புலிகளின் செயற்பாட்டளர்களே விடமாட்டார்கள் ..இந்தத்தடைகளே போதுமானது..நிலமை இப்படியிருக்க ,அமெரிக்காவும் ஏனையநாடுகளும்..ஏன் வருட வருடம் தடையை நீடிக்கின்றீர்கள்? உங்கள தடையால் இலங்கையரசு தீர்வை இழுத்தடிக்கினறது..எனவே தமிழருக்கு தீர்வு முன்வைக்கவிடில், தமிழ்ஈழவிருதலைப்புலிகளின் தடை எடுக்கப்படுமென இலங்கையரசுக்கு எச்சரிக்கை விடுங்கள்..😜👍😁🙏

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கற்பகதரு said:

இங்கிலிசும் தெரியுமா? 😄🇮🇳 இங்கிலிசு படிச்சிருக்கிறதும் நல்லது தான்.👏

ஏதோ, ரா... சா... cia  புண்ணியத்திலை ... ஹி... ஹீ...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, Kapithan said:

😏

இல்லாவிட்டால்....? 

புலித்தடை வந்திராதோ..😂

 

நீங்கள் கூறுவதைப் பார்த்தால், 

go corana go, go corano go என்று இந்தியன் பானையைத் தட்டி Covid-19 ஐ விரட்டியதுபோல, புலிகளும் துவக்குகளில தட்டித் தட்டி Go army go, Go army go என்று வாயாலதான் சண்டை பிடித்திருக்க வேண்டி இருந்திருக்கும்..

😂

8 hours ago, விசுகு said:

நான

எனது வயதுக்கு

இதுவரை நான் கண்ட மாற்றுக்கருத்தாளரெல்லாம் இவ்வாறு  மட்டுமே சிந்திக்கிறார்கள்

செயல்  என்பது  என்னவென்றே தெரியாததன் அறுவடை இது  மட்டும்  தான்

 

மாற்றுக்கருத்து மன்னர்களுக்கு  தெரிந்ததெல்லாம் புலி வசைபாடல் மட்டுமே. அது எங்கும் எப்போதும் எதிலும்.
இன்றைய அரசியல் விவாதத்திலும் சுற்றி வளைத்து  புலியை முன்னிறுத்துவார்கள். ஆனால் ஒரு துளிதனிலும் சிங்களத்தின் இன அழிப்புகளையும்,இனக்கலவரங்களையும்,உரிமை மறுப்புகளையும் நினைவு கூரவே மாட்டார்கள். இப்படிப்பட்டவர்களின் கருத்துக்களை கவனித்தால் இவர்கள் யாரென்பது நன்கு புரியும்.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.