Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்கள- பௌத்த தலைவன் என்பதை வெளிப்படுத்த தயங்கமாட்டேன்- சுதந்திர தின உரையில் ஜனாதிபதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

நல்ல காலம் மட்டக்களப்பு பக்கம் நடக்கல நடந்திருந்தால் அடுத்த கட்டுரை வந்திருக்கும்

உப்பிடியெலாம் போட்டுடைக்க கூடாது , பிள்ளையானும் கருணாவும் தான் எங்க கண்ணுக்கு  தெரியுமா இல்லையா 

  • Replies 58
  • Views 4.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, அக்னியஷ்த்ரா said:

உப்பிடியெலாம் போட்டுடைக்க கூடாது , பிள்ளையானும் கருணாவும் தான் எங்க கண்ணுக்கு  தெரியுமா இல்லையா 

போர் நடந்ததே யாழ்ப்பாணத்திலதான் இங்கால பக்கம் சும்மா ஆளாளுக்கு சுட்டு விளையாடுனாங்க நீங்க வேற 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, தனிக்காட்டு ராஜா said:

ஆளாளுக்கு சுட்டு விளையாடுனாங்க நீங்க வேற 

சுட்டு விளையாடவில்லை ,சீன வெடி போட்டு விளையாடினவை 

  • கருத்துக்கள உறவுகள்

***

இவர் போன்றோரை மிகப் பெரும்பான்மையோர் கடுகளவும் பொருட்படுத்துவதில்லை என்பதுதான் உண்மை. இது சப்பக் கட்டு அல்ல. 

டக்கிளஸ் வட மாகாணத்திற்கு பலவற்றைச் செய்தும் (ஒப்பீட்டளவில்) யாரும் அவரை மதிப்பதில்லை. 

ஆனால் ஜெயந்தன் படையணியில் நாங்கள் வைத்திருந்த விருப்பும் மரியாதையும் மற்றைய படையணிகளின் மேல் இருந்த மரியாதையைப் போல் பல மடங்கு.

அந்த நேசம் உங்களுக்குப் புரியாது ☹️

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Kapithan said:

அவர்களுடன் பல ஆண்டுகள் கழித்தேன் அதை சொன்னால் இங்கு பலருக்குப் புரியாது 2004 ற்கு பிறகு .

  • கருத்துக்கள உறவுகள்
Just now, தனிக்காட்டு ராஜா said:

அவர்களுடன் பல ஆண்டுகள் கழித்தேன் அதை சொன்னால் இங்கு பலருக்குப் புரியாது 2004 ற்கு பிறகு .

அதற்காக இந்தத் தலைமுறையை முந்தையதுடன் ஒப்பிடுவது நியாயமில்லை. ☹️

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Justin said:

அமெரிக்காவும் மேற்கு நாடுகளும் ரணிலின் பின்னால் நின்றதே மகிந்த செய்தது போன்ற இரத்தக்களரியை ரணில் செய்யத் துணியார் என்ற தகவல்களின் அடிப்படையிலான நம்பிக்கை காரணமாகத் தான்!

என்ன ஒரு விளக்கம், என்னவொரு தெளிவு?

ரணில் இனக்கொலயைச் செய்யமாட்டார் என்றுதான் மேற்குலகு அவர் பின்னால் நின்றதாம். மற்றும்படி உந்தச் சீனாவின் இலங்கைமீதான செல்வாக்கு, இலங்கையில் அதன் ஆதிக்கம் எண்டெல்லாம் சும்மாதான் பூச்சாண்டி விடுறாங்கள் போலக் கிடக்கு. ஆனால் எனக்கொரு விஷயம் விளங்கேல்ல, இனகொலை செய்யமாட்டார் என்பதற்காகத்தான் ரணிலை மேற்குலகு ஆதரித்ததென்றால், ஏன் மகிந்த செய்யும் போது  தடுக்கவில்லையாம்? சிலவேளை இலங்கையென்ற உலக மகா வல்லரசு செய்யும்போது சுற்றிநின்று வேடிக்கை பார்ப்பதைத்தவிர அவர்களுக்கு வேறு வழி இல்லாமல் இருந்திருக்குமோ? 

13 hours ago, Justin said:

ஆனால், நாம் "ஒரு தமிழனைக் கூட கொல்லாத, வதைக்காத சிங்களத் தலைவர் வந்தால் தான் வரவேற்போம், மிச்ச எல்லாரையும் தூக்கி அடிப்போம்!" என்று நின்றால் சிறிதுங்க ஜெயசூரியவைத் தவிர யாரையும் நாம் ஆதரிக்க/பதவிக்கு வர அனுமதிக்க முடியாது! 

சிங்கள இனவாதிகளில் வித்தியாசம் இல்லையென்பதைத்தான் நானும் சொல்கிறேன். மகிந்த இனக்கொலையினைச் செய்தபடியினால் அவன் தெரியாத பேய், ரணில் இதுவரை செய்யவில்லை என்பதால தெரிந்த பிசாசு. ஒருவேளை 2005 தேர்தலில் மகிந்த தோற்று ரணில் வென்றிருந்தால் இன்று சொல்வதை மாற்றிச் சொல்லியிருப்பீர்கள். 

மற்றும்படி இனவாதமற்ற சிங்களவர்களை சாதாரண சிங்களவர்களே மதிப்பதில்லை.

2000 இல் மகரகமை பமுனுவ எனும் இடத்தில் மொத்தவிலையில் துணிகள் வாங்கும் ஒரு சந்தைக்குப் போகும் சந்தர்ப்பம் கிடைத்தது. ஒருவர், தனியாக ஒரு வாகனத்தின் மீது ஏறிநின்று சிங்களத்தில் சத்தமாகப் பேசிக்கொண்டிருந்தார். ஒருவர் கூட நின்று கேட்கவில்லை. நான் அவர் பேசுவதைப் புரிந்துகொண்டதால் சில நிமிடங்கள் நின்று கேட்டேன். அத்தனையும் தமிழருக்கு உரிமை கொடுங்கள் எனும் வேண்டுகோள், சிங்களவர்களை நோக்கி. அவர் வேறு யாருமல்ல , கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன. இப்படியிருக்கிறது நிலமை.

13 hours ago, Justin said:

ஆனால், தமிழ் தரப்பிற்கு மக்களுக்கான தீர்வையும் நிம்மதியையும் விட ரோஷம், மானம், போலிப் பெருமை பழிவாங்கும் உணர்வு என்பன மேலோங்கியிருந்ததால் ரணிலுக்கு ஆப்பு வைத்தனர், அவர்களே சொந்த செலவில் தமக்குச் சூனியமும் வைத்து அப்பாவித் தமிழ் மக்களையும் பலி கொடுத்தனர்!

இதுபற்றி பலரும் பதிலளித்துவிட்டார்கள். ரணிலின் சுற்றிவளைக்கும் சூழ்ச்சி, பன்னாட்டுப் பொறி, கருணா பிரிப்பும் அதனைத் திமிராக பகிரங்கப்படுத்தி வந்தது ஆகிய விடயங்களின்பின்னர்தான் தெரியாத பிசாசான மகிந்தவை புலிகள் அன்று தேர்வுசெய்தார்கள். தம்மையும் மக்களில் ஒன்றரை லட்சம் பேரையும் அவன் கொல்வான், ரணிலின் சர்வதேச வலைப்பின்னல் தம்மை முற்றாக நசுக்கும், இந்தியா வன்மத்தைத் தீர்த்துக்கொள்ளும் என்பவை அப்போது தெரியாமல்ப் போனது. விளைவுதான் 2009 முள்ளிவாய்க்கால். இதில் ரோஷமோ, மானமோ, பிடிவாதமோ இருந்ததாக நான் நினைக்கவில்லை. ரணிலின் பேச்சுவார்த்தைப்பொறிக்குள் தாம் சிக்குண்டு, ஏமாற்றப்படுவதை உணர்ந்தபின்னரே அதிலிருந்து விடுபட புலிகள் மகிந்த வருவதை விரும்பினார்கள். அப்போது உங்களுக்குக் கூட அது சரியாகத்தான் இருந்தது. இப்போது புலிகள் தவறானவர்கள் என்று உங்களுக்குத் தெரிவதால்த்தான் அவர்கள் செய்த அனைத்துவிடயங்களும் தவறாகத் தெரிகிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, ரஞ்சித் said:

ரணிலின் சுற்றிவளைக்கும் சூழ்ச்சி, பன்னாட்டுப் பொறி, கருணா பிரிப்பும் அதனைத் திமிராக பகிரங்கப்படுத்தி வந்தது ஆகிய விடயங்களின்பின்னர்தான் தெரியாத பிசாசான மகிந்தவை புலிகள் அன்று தேர்வுசெய்தார்கள்.

உண்மை அதுதான். அன்றைய தேர்தலில் ரணிலுக்கு வாக்களிப்பதாகவே இருந்தது. ஆனால் அப்போதைய தேர்தல் பிரச்சாரத்தில் மிலிந்த மொறகொடவும், நவீன் திஸாநாயக்கவும் சிங்கள மக்களின் வரவேற்பைப் பெறுவதற்காக, ரணிலின் திட்டத்தை போட்டுடைத்தார்கள். அதாவது தாம் தேர்தலில் வென்றால்; புலிகளுக்கெதிராக தமது இராணுவம் சண்டையிடாது. இந்திய, அமெரிக்க இராணுவமே போரிடும் என்று தங்கள் நஜவஞ்சக திட்டத்தை  சொல்லி சிலாகித்தார்கள். அதன்பின்னரே திட்டம் மாறியது. அதாவது ராஜ பக்ஸ கொம்பனிகளின் மனநிலையை கணித்தே தலைவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம். அந்தக் காலம் கனிந்து வருகிறது. ஆனால் நாம் தான் பெறுவதற்கு  இன்னும் தயாராகவில்லை, பின்னிற்கிறோம்.  காலத்தை  இழுத்தடிக்கிறோம்.  

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, தனிக்காட்டு ராஜா said:

யாழ்பபாணத்தில் அங்கஜன் சிறப்பாக கொண்டாடியுள்ளார்

கைக்கூலிகளுக்கு எந்தக்கொடியைக் கொடுத்தாலும் பிடிப்பார்கள். அவர்களுக்கு இலட்சியம் என்று ஒன்று இல்லை. வயிறே அவர்களது  தெய்வம். சிறி லங்கா சுதந்திர கட்சியின் நினைவாக அர்ச்சனை செய்து அசடு வழிந்த கூட்டமாச்சே!

  • கருத்துக்கள உறவுகள்
On 4/2/2021 at 06:01, தமிழ் சிறி said:

சிங்கள- பௌத்த தலைவன் என்பதை வெளிப்படுத்த தயங்கமாட்டேன்- சுதந்திர தின உரையில் ஜனாதிபதி

அடப்பாவி...! இத்தனை காலமும் இதை ஒழித்தா வைத்திருந்தாய்?????????😲

Edited by Paanch

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, satan said:

கைக்கூலிகளுக்கு எந்தக்கொடியைக் கொடுத்தாலும் பிடிப்பார்கள். அவர்களுக்கு இலட்சியம் என்று ஒன்று இல்லை. வயிறே அவர்களது  தெய்வம். சிறி லங்கா சுதந்திர கட்சியின் நினைவாக அர்ச்சனை செய்து அசடு வழிந்த கூட்டமாச்சே!

பொத்துவில்  தொடக்கம் பொலிகண்டி வரைக்கும் என்ற பேரணியை வரவேண்டாம் என வவுனியாவிலும் ஆர்ப்பாட்டம் நடக்கிறது அப்ப பாருங்கோவன்

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் போராட்டம் தோற்கடிக்கப்படவேண்டும் என்பதில் விலைபோனவர்களுக்கிருக்கும் ஆர்வம் விளங்கிக்கொள்ளக்கூடியதுதான். இதைவிட இவர்களிடமிருந்து வேறு எதனை எதிர்பார்க்கமுடியும்?

ஒரு வருடத்தில் சிலரின் நிலையில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் ஆச்சரியம் தரும் அதேநேரம் அருவருப்பினையும் தருகிறது. இவர்களைப்போன்றோர் இதுவரை காலமும் போராட்டத்துடன் நின்றார்கள் என்பதுகூட சந்தேகத்திற்கிடமானது.

Edited by ரஞ்சித்

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

பொத்துவில்  தொடக்கம் பொலிகண்டி வரைக்கும் என்ற பேரணியை வரவேண்டாம் என வவுனியாவிலும் ஆர்ப்பாட்டம் நடக்கிறது அப்ப பாருங்கோவன்

கூலிக்கு மாரடிப்பவர்களுக்கு வேதனம் வேண்டாமோ என்னோ? அவர்கள் வயிறை யார் கவனிப்பது? 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

பொத்துவில்  தொடக்கம் பொலிகண்டி வரைக்கும் என்ற பேரணியை வரவேண்டாம் என வவுனியாவிலும் ஆர்ப்பாட்டம் நடக்கிறது அப்ப பாருங்கோவன்

அவர்கள் யார்? எந்த அமைப்பை சேர்ந்தவர்கள்???

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, குமாரசாமி said:

அவர்கள் யார்? எந்த அமைப்பை சேர்ந்தவர்கள்???

வேறு யாராக இருக்கமுடியும்? வயிற்றை வளர்க்க இனத்தை விற்பவர்கள்தான்!

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ரஞ்சித் said:

வேறு யாராக இருக்கமுடியும்? வயிற்றை வளர்க்க இனத்தை விற்பவர்கள்தான்!

வயிறு வளர்க்க இனத்தை விக்கும் அமைப்பு என்று கவுரமாய் சொல்லுங்கோ ரஞ்சித்! அப்போதான் அவர்களுக்கும் கெத்தாய் இருக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, satan said:

வயிறு வளர்க்க இனத்தை விக்கும் அமைப்பு என்று கவுரமாய் சொல்லுங்கோ ரஞ்சித்! அப்போதான் அவர்களுக்கும் கெத்தாய் இருக்கும். 

ஓ, இதை இப்போது அமைப்பாகவே செய்கிறார்களா? முன்னேறிவிட்டார்கள்!!!

  • கருத்துக்கள உறவுகள்
On 6/2/2021 at 04:51, Kapithan said:

***

இவர் போன்றோரை மிகப் பெரும்பான்மையோர் கடுகளவும் பொருட்படுத்துவதில்லை என்பதுதான் உண்மை. இது சப்பக் கட்டு அல்ல. 

டக்கிளஸ் வட மாகாணத்திற்கு பலவற்றைச் செய்தும் (ஒப்பீட்டளவில்) யாரும் அவரை மதிப்பதில்லை. 

ஆனால் ஜெயந்தன் படையணியில் நாங்கள் வைத்திருந்த விருப்பும் மரியாதையும் மற்றைய படையணிகளின் மேல் இருந்த மரியாதையைப் போல் பல மடங்கு.

அந்த நேசம் உங்களுக்குப் புரியாது ☹️

ஜெயந்தன் படையணி தமிழரின் படையணி. தமிழீழ விடுதலைக்காக வீரத்துடன் போராடிய எமது படையணி. வயிற்றை வளர்க்க எதியுடன் சேர்ந்து இனத்தைக் காட்டிக்கொடுத்துக்கொண்டிருக்கும் பிரதேசவாதம் பேசும் புல்லுருவிகள் அப்படையணியை உரிமைகோருவதோ அல்லது அதனுடன் முன்னர் பயணித்தோம் என்று சப்பைக் கட்டு கட்டுவதோ நகைப்பிற்கிடமானது. எப்போது எதியுடன் சேர்ந்து துணைராணுவக் கொலைக்குழுக்களின்  பின்னால் செல்லத் தொடங்கினார்களோ, அன்றே அவர்களுக்கும் எமது முன்னணிப் படையணிக்குமான தொடர்பு அறுந்துவிட்டதென்பதே உண்மை!

ஜெயந்தன் படையணி தமிழீழ மக்களுக்கானது, துரோகிகள் அதனை உரிமைகோரமுடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
On 6/2/2021 at 04:58, Kapithan said:

அதற்காக இந்தத் தலைமுறையை முந்தையதுடன் ஒப்பிடுவது நியாயமில்லை. ☹️

உண்மை. இதுதான் இப்போது நடக்கிறது. எப்போது தலைவருக்கு தனிழினத்திற்கும் மாபெரும் துரோகத்தைச் செய்தபின் கருணா வெறும் துரோகி ஆகினானோ, அதுபோலத்தான் ஜெயந்தன் படையணிபற்றி இப்போது உரிமைகோருபவர்களும். 

இனத்தோடும், விடுதலை உணர்வோடும் நிலைத்திருந்தால் நீங்களும் போராளிகளே, இல்லையென்றால் உங்களின் புதிய அடையாளம் எல்லோருக்கும் தெளிவானது.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

அவர்கள் யார்? எந்த அமைப்பை சேர்ந்தவர்கள்???

அது தெரியல ஆனால் ஆர்ப்பாட்டம் நடந்த போட்டோ செய்தியாக வந்தது , ஆனால் கூட்டமைப்புக்கு பல தரப்பட்ட எதிர்ப்பு கிழக்கில் ஆனால் அப்படி எந்த ஆர்ப்பாட்டமோ கூச்சல் குழப்பமோ விளைவிக்கல அதுதான் மேட்டர்.

  • கருத்துக்கள உறவுகள்

போராட்ட  வாழ்வில் வாழ்கையை துலைத்தவர்கள். காசை கொடுத்தால் ஈழம் வந்துடும் என நினைத்தவர்களிடம் போராட்டம் எப்படி அதன் உளவியல் தாக்கம் எப்படி என அவர்களிடம் எள்ளளவும் எதிர்பார்க்க முடியாது 2002 ,09 மாதம் ஒரு ஆர்ப்பாட்ட பேரணி நடந்தது திருகோவில் காஞ்சிரங்குடா ராணுவ முகாமை அண்மித்த போது முகாமில் இருந்து வேட்டுகள் தீர்க்கப்பட்ட து அப்பாவி தமிழர்கள் இறந்து போனார்கள் 7 பேர் ஆர்ப்பாட்டம் பண்ண தூண்டியவர்களும் இன்றில்லை ஆனால் உறவுகளை இழந்தவர்கள் இன்றுவரை அஞ்சலி செலுத்தி வருகிரார்கள் .

இன்று நீதிமன்ற தடையுத்தரவு கொடுத்தும் ஆர்ப்ப்பட்டம் நடக்கிறது ஆனால் ரஞ்சன் ராமநாயக்காவுக்கு அதே நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்கு தண்டனை இன்று போராட்டத்தில் முன்னிற்கும் சாணாக்கியன், சுமந்திரன் அரசிடம் போய் உட் கார்ந்து விட்டு கதை பேசிவிட்டு ஆர்ப்பாட்டம்  போராட்டம் பண்ணுகிறார்கள்  சுமந்திரருக்கு பின்னால் அதிரடிப்படை பாதுகாப்பு சாணாக்கியனுக்கு பொலிஸ் பாதுகாப்பு போட்டோவும் , வீடியோவும் எடுக்கப்படுகிரது இராணுவத்தால் நாளை அவர்கள் பாராளுமன்றம் போய் பாதுகாப்பாக இருப்பார்கள் பாவம் மக்களள்ளும் இளைஞர்கள் இதற்கு நான் எதிர்ப்பல்ல வெற்றி  பெற வாழ்த்துக்கள் 
 
ஆனால் நாளைக்கு அரசின்ற காலடிக்கு செல்லத்தான் வேண்டும் இவர்கள் .2009 ல் திரும்பி பார்க்காத உலகநாடுகளா இப்ப நம்மளை திரும்பி பார்க்க இருக்கிறது   .

அடுத்த தமிழரசுக்கட்சி தலைவர் சுமந்திரர் ஐயாவுக்கு வாழ்த்துக்கள் உங்கள் அரசின் திட்டமிடலில் நீங்களும் ஓர் சாணாக்கியரே இது விளங்காது போகப்போக புரியும் .  கன பேருக்கு பிரசர கொண்டு வரும் இந்த கருத்து ஒன்றும்  செய்ய இயலாது குளுசையை போட்டு கதறுங்கள் இல்லாட்டி நாலு துரோகி கட்டுரை மண்டைய கசக்கி எழுதப்பாருங்கள்.

7 hours ago, ரஞ்சித் said:

ஜெயந்தன் படையணி தமிழரின் படையணி. தமிழீழ விடுதலைக்காக வீரத்துடன் போராடிய எமது படையணி. வயிற்றை வளர்க்க எதியுடன் சேர்ந்து இனத்தைக் காட்டிக்கொடுத்துக்கொண்டிருக்கும் பிரதேசவாதம் பேசும் புல்லுருவிகள் அப்படையணியை உரிமைகோருவதோ அல்லது அதனுடன் முன்னர் பயணித்தோம் என்று சப்பைக் கட்டு கட்டுவதோ நகைப்பிற்கிடமானது. எப்போது எதியுடன் சேர்ந்து துணைராணுவக் கொலைக்குழுக்களின்  பின்னால் செல்லத் தொடங்கினார்களோ, அன்றே அவர்களுக்கும் எமது முன்னணிப் படையணிக்குமான தொடர்பு அறுந்துவிட்டதென்பதே உண்மை!

ஜெயந்தன் படையணி தமிழீழ மக்களுக்கானது, துரோகிகள் அதனை உரிமைகோரமுடியாது.

ஜெயந்தன் படையணிக்கு யாரும் உரிமை கோர முடியாது தமிழீழ மக்களை தவிர நீங்கள் கூட  .🤣

  • கருத்துக்கள உறவுகள்

 தமிழருக்காகப் போராடியவர்களைத் தவிர மற்றையவர் எல்லோரும் துரோகிகளே.

எதிரியுடன் சேர்ந்து இனத்தைக் காட்டிக்கொடுத்து, சொந்த இனத்தையே பணத்திற்காகக் கடத்திச்சென்று, கொன்று எறிந்து, கூலிக்குக் கொலை செய்தவனையெல்லாம் தலைவனாகத் தூக்கித்திரியும் சோரம்போனவர்கள் ஜெயந்தன் படையணிபற்றிப் பேசத் தகுதியற்றவர்கள். கூடவிருந்த போராளிகளையே காட்டிக் கொடுத்துக் கொன்று, வயிறுவளர்த்த துரோகிகள் தமிழீழ மக்களின் ஒப்பற்ற படையணிபற்றிப் பேசத் தகுதியற்றவர்கள்.

புலம்பெயர் நாட்டிலிருந்து பணம் அனுப்பிப் போராடச் சொல்லி எவரும் கேட்கவில்லை. குடும்பத்தில் கூடப்பிறந்தவர்கள், மச்சான், மச்சாள் என்று மாவிரர்களைக் கண்ட எங்களுக்கு துரோகிகளின் அடிவருடிகள் பாடம் எடுக்கத் தேவையில்லை.

வயிறுவளர்க்க இனத்தை விற்று, தமது சொந்த இனத்தையே தின்று ஏப்பம் விட்ட மிருகங்களின் ஆதரவாளர்கள் தமிழீழ மக்கள் பற்றி அக்கறைப்படுவதும், தமிழீழம் எனும் சொல்லை இன்னும் பாவிப்பதும் வியக்க வைக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரஞ்சித் said:

 தமிழருக்காகப் போராடியவர்களைத் தவிர மற்றையவர் எல்லோரும் துரோகிகளே

ரஞ்சித், பட்டம் கொடுக்கிற பல்கலைக்கழத்தில் பேராசிரியராக எப்போது சேர்ந்தீர்கள்? 🤔சொல்லவேயில்லை!😁

இப்படியான பட்டங்களை இப்ப கொடுக்கிறவையும் மதிப்பதில்லை. கொடுக்கப்படுபவர்களும் கவனிப்பதில்லை. 😃

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கிருபன் said:

ரஞ்சித், பட்டம் கொடுக்கிற பல்கலைக்கழத்தில் பேராசிரியராக எப்போது சேர்ந்தீர்கள்? 🤔சொல்லவேயில்லை!😁

இப்படியான பட்டங்களை இப்ப கொடுக்கிறவையும் மதிப்பதில்லை. கொடுக்கப்படுபவர்களும் கவனிப்பதில்லை. 😃

உங்களுக்குப் பொறுந்தினால் மாட்டிக்கொள்ளுங்கள். இடையில்வந்து நீங்கள் என்னைக் கேள்விகேட்காமல், முழுதுமாக வாசியுங்கள், அப்படியும் புரியவில்லையா, உங்களுக்கில்லை என்று இருந்துவிடுங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரஞ்சித் said:

உங்களுக்குப் பொறுந்தினால் மாட்டிக்கொள்ளுங்கள். இடையில்வந்து நீங்கள் என்னைக் கேள்விகேட்காமல், முழுதுமாக வாசியுங்கள், அப்படியும் புரியவில்லையா, உங்களுக்கில்லை என்று இருந்துவிடுங்கள். 

முழுவதும் வாசித்துத்தான் எழுதினேன்.☺️

பட்டம் கொடுக்கிறவர்களுக்கும் பட்டங்களும்கும் இப்ப மதிப்பில்லை😉

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.