Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியா : உலக அவமானத்தின் சின்னம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா : உலக அவமானத்தின் சின்னம்!

spacer.png

இன்று இந்தியாவின் அவமானச் சின்னமாக டெல்லி காட்சியளிக்கிறது. உலகின் அவமானச் சின்னமாக இந்தியா காட்சி தருகிறது. இந்திய இந்துத்துவ அதிகாரவர்க்கத்திற்கு ஏதோ ஒரு காரணத்திற்காக முட்டுக்கொடுக்கும் மனிதர்களும் இந்த அவமானத்தின் தூதுவர்களாகச் செயற்படுகின்றனர். டெல்லியில் தமது நாளாந்த வாழ்க்கைக்காக மட்டுமல்ல 800 மில்லியன் உலக மக்களின் ஒவ்வொருவரதும் வாழ்விற்காகவும் விவசாயிகள் டெல்லியில் அமைதியாகப் போராட ஆரம்பித்து இப்போது எழுபது நாட்களாகும் நிலையில், இந்திய அரசு டெல்லியில் தனது சொந்த மக்கள் மீது யுத்தத்தைப் பிரகடனப்படுத்தியுள்ளது. விவசாயிகள் போராடும் பகுதிகளில் நீர் வினியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. மின்சாராம் இல்லை. அலை பேசி, இன்டர் நெட் போன்ற அனைத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது. முள் வேலி, தெருக்கள் பதிக்கப்பட்டுள்ள முள், 14 அடுக்கு பாதுகாப்பு வலையம் என்று விவசாயிகளையும் விவசாயத்தையும் பெரு முதலாளிகளின் சொத்தாக மாற்றுவதற்காக இந்திய அரசு அப்பாவிகள் மீது போர் தொடுத்துள்ளது.

இந்திய மத அடிப்படை வாத மத்திய அரசு, கூலிக்கு வேலை செய்யும் குண்டர் படைகளை விவசாயிகள் மத்தியில் விதைத்து ஊடுருவல் வேலைகளைச் செய்து வன் முறையைத் தூண்டிவிடுகிறது. இந்திய சமூகவிரோத அரசின் இந்த யுத்த நடவடிக்கை உலகில் வாழும் ஒவ்வொரு மனிதன் மீதும் நடத்தப்படும் தாக்குதல். மனித குலம் இந்தியாவை இன்று உலகின் அவமாமாக் கருதும் சூழலை உருவாக்கிய இந்துத்துவா ஆதிக்கம் அழியும் நாள் தொலைவில் இல்லை என்ற உறுதியுடன் இந்திய விவசயிகளின் போராட்டம் தொடர்கிறது.

3 லட்சம் விவசாயிகள் டெல்லியில் நடத்தும் மனித குலத்திற்கான இந்தப் போராட்டமே இத்துவரை உலகில் நடைபெற்ற நீண்ட அதிக மக்கள் கலந்துகொண்ட போராட்டமாகக் கருதப்படுகின்றது.

ஒன்பது கிரமி விருதுகள் உட்பட இசைக்கான பல்வேறு விருதுகளை மட்டுமல்ல மனித உரிமைச் செயற்பாட்டுக்கான பல பாராட்டுக்களையும் பெற்றவர் ரியான என்ற பாடகி. வெறுமனே பாடகி என்ற தனது எல்லைகளை கடந்து உலகின் ஒவ்வொரு மூலையிலும் நடைபெறும் சம்பவங்கள் தொடர்பாகத் தனது கருத்துக்களைப் பதிவிடும் ரியானா,இந்திய விவசாயிகளின் போராட்டம் தொடர்பாக உலகம் மௌனம் சாதிப்பது ஏன் என்ற ஒற்றை வரியை தனது ரிவிட்டர் பக்கத்தில் பதிவிட , சுவீடனின் சுற்றுச் சூழல் ஆர்வலரான கிரீட்ட தான்பேர்க் விவசாயிகளுக்கு தான் ஆதரவளிப்பதாக கருத்துத் தெரிவிக்க, உலகின் பல்வேறு பிரபலங்கள் விவசாயிகளின் போராட்டத்தைத் திரும்பிப்பார்க்க ஆரம்பித்தனர்.

spacer.png சிறுமியின் கொடும்பாவியை எரிக்கும் காவிகள்

கிரீட்டா தான்பேர்க்கிற்கு எதிராக காவி உடையணிந்த அரச ஆதரவாளர்கள் டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்தி அந்தச் சிறுமியின் கொடும்பாவியை எரித்து இந்திய அவமானத்தை ஆழப்படுத்தினர். நரேந்திர மோடியின் காட்டுமிராண்டி அரசு விவசாயிகள் மீது நடத்தும் யுத்தத்தை உலக மக்கள் திரும்பிப்ப் பார்க்க ஆரம்பித்ததும், ரியானாவிற்கு எதிராக வெளிவிவகார அமைச்சு அறிக்கை விடுத்து தனது கோமாளித்தனத்தை உலக மக்களுக்கு வெளிப்படுத்திற்று.

spacer.png கூலிகளின் ரிவீட்டர் செய்திகள்

இந்திய அரசை இயக்கும் மத வெறி பயங்கரவாத அமைப்பான ஆர்.எஸ்.எஸ் இன் சமூகவலைத் தள குழுக்கள் ரியானாவை ஆபாசப்பட நடிகை என பொய்யான பிராச்சாரத்தை முடுக்கிவிட இந்திய நடிகைகளும் அதனை தமது ரிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இந்தியாவின் அழுகிய முகத்தை உலகிக்குக் வெளிக்காட்டினர். சச்சின் டென்டூல்கர், சேஷாத்திரி உட்பட்ட கிரிக்கட் பிரபலங்கள் ஒரே நேரத்தில் ஒரு வகையான ரிவிட்டுக்களைப் பதிவிட்டனர். தமிழ் நாட்டையும் கேரளாவையும் தவிர ஏனைய மானிலங்களிலிருந்து பெரும்பாலான பிரபலங்கள் ஒரே மாதிரியான பதிவுகளை வெளியிட்டனர்.

மனித குலத்தின் மீதான இந்திய அரசின் இத் தாக்குதலுக்கு எதிராக தமிழ் நாட்டில் அரசியலுக்கு வரப்போவதாக தமது திரைப்பட வெளியீட்ட்டு நிகழ்வுகளில் கூறும் எந்தப் தமிழ்ப் பிரபலங்களுக்கும் ரியானாவின் மக்கள் பற்று இல்லை. அடுத்த திரைப்பட வெளியீட்டில் பேசினால் தான் உண்டு. தமிழனா தெலுங்கனா என ஒவ்வொரு மனிதனையும் டீ.என்.ஏ பரிசோதனைக்கு உட்படுத்தும் சீமான் கும்பலும் அதனோடு ஒட்டியிருக்கும் புலம்பெயர் குழுக்களும் இவற்றையெல்லாம் ஒரு பொருட்டாகக் கருதுவதே கிடையாது. எல்லாவற்றிற்கும் மேலாக, மோடி அரசு இலங்கை அரசுடன் முரண்பட்டு தமிழர்களை ஆதரிக்கும் என உலகின் எங்கோ ஒரு மூலையில் அமர்ந்து கொரோனா கொடுமைகளுக்கு மத்தியில் விவாதம் நடத்தும் தமிழர்களின் நாற்பதுவருட கால போராட்ட வரலாற்றை எப்படி உரைப்பது?

 

https://inioru.com/india-symbol-of-world-shame/

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
A967469B-C190-49E5-B324-B9EFB121BDC5.webp

இந்தியா இங்கிலாந்து தொடரை ஏன் புறக்கணிக்கக் கூடாது?

ஆளுங்கட்சி அரசியல்வாதிகள் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகத்தில் இருப்பது, பின்னிருந்து இயக்குவது எதுவும் புதுசு அல்ல தான். ஆனால் முன்பு எப்போதும் கிரிக்கெட் வீரர்கள் ஆளும் கட்சியின் பிரச்சார பீரங்கியாக பயன்படுத்தப்பட்டதாக எனக்கு நினைவில்லை. அதாவது நாட்டுக்காக நிற்பது வேறு, ஒரு கட்சியின் சார்பில் பேசுவது வேறு. சில நேரம் நீங்கள் ஒரு கட்சி சார்பாக பிரச்சாரம் செய்கையில், அந்த அரசு அப்பட்டமாக தனது மக்களுக்கு எதிராக சட்டங்களை இயற்றி, அவர்களை வன்முறை கொண்டு ஒடுக்கும் போது, நீங்கள் உங்கள் ஒரு கட்சிக்காக உங்கள் மக்களுக்கு எதிராக அரசியல் பண்ணுகிறவர்கள் ஆகிறீர்கள். அந்த அரசு போராடும் மக்களை தீவிரவாதிகள், தேச துரோகிகள், ரௌடிகள் என சொல்லும் போது அதுவும் உங்கள் கருத்தாவதை தவிர்க்க முடியாது போகிறது. இதற்கு ஒரு அணியின் தலைவர், பயிற்சியாளர் சகிதம் களமிறங்கும் போது, கிரிக்கெட் வீரர்களை பாராட்டுவதை வழக்கமாக ஒரு பிரதமரும் நிதியமமைச்சரும் வைத்திருக்கையில், இது ஒரு மோசமான முன்னுதாரணத்தை உருவாக்குகிறது. நாளை கிரிக்கெட் வீரர்கள் எந்த கட்சி ஆட்சியில் இருக்கிறதோ அதன் முடிவுகள், நடவடிக்கைகளுக்கு சாதகமாக டிவீட் போட்டாலே தாம் அணியில் நிலைக்க முடியும் என நம்புவார்கள்.

கிரிக்கெட் இதுவரை ஒரு தேசியவாத உணர்வலையின் உருவகமாக இருக்கிறது. இனி அது பச்சையான கட்சி ஆதரவு செயலாக மாறும். ஒரு கிரிக்கெட் அணியை ஆதரித்து அரங்கில் கைதட்டுகிறவர்கள் அனைவரும் மறைமுகமாக தனது ஆதரவாளர்களே என ஒரு நாட்டின் எதிர்கால பிரதமர்கள் நினைத்து புளகாங்கிதம் அடைகிற அபத்தம் நடக்கும். கிரிக்கெட் அணியின் தலைவரும், பயிற்சியாளரும் தேர்தலுக்கு முன்பு கட்சிப் பிரச்சாரம் செய்யுமாறு வலியுறுத்தப்படுவதும் நடக்கும். (ஏற்கனவே இதை பாலிவுட் வெளிப்படையாகவே செய்து கொண்டிருக்கிறது.) ஒரு கட்சி தன்னையே நாடு என நினைப்பது ஒரு அபத்தம் எனில், அக்கட்சியை ஆதரிப்பதே தேசபக்தி என செலிபிரிட்டிகள், விளையாட்டு வீரர்கள், நடிகர்கள் நினைப்பது இன்னும் அபத்தமானது. எனில் கட்சிக்கு வெளியே தேசம் என ஒன்றில்லையா? அரசுக்கு வெளியே மக்களின் குரலுக்கு மதிப்பில்லையா? அரசுக்கு வெளியே இருக்கும் மக்கள் தேசம் இல்லையா? எனில் ஏன் தேர்தலை நடத்த வேண்டும்? ஒரு கட்சியை நிரந்தரமாக ஆள அனுமதிக்கலாமே? 

இந்த பின்னணியில் பார்க்கும் போது நமக்கு விராத் கோலி, ரவி சாஸ்திரி கும்பலின் டிவீட் அரசியல் எவ்வளவு மோசமான ஒரு தேச விரோத அரசியல் எனப் புரியும். இவர்கள் நமது மக்களாட்சி அமைப்புக்கே உலை வைக்கிற போக்குக்கு துணை போகிறார்கள். அதனால் இதை எதிர்க்க வேண்டியது அவசியம். ஆகையால் வெள்ளிக்கிழமை துவங்குகிற இங்கிலாந்து இந்தியா டெஸ்ட் தொடரை நாம் புறக்கணிக்கக் கூடாது? அதனால் இத்தொடருக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது எனிலும், நம்மால் முடிந்த எதிர்ப்பை பதிவு செய்வோம். அதனால் #BoycottIndiavsEnglandSeries 

என்னதான் அழுத்தம் இருந்தாலும் மக்கள் விரோதப் போக்கை ஆதரிப்பதை இனிமேலாவது கிரிக்கெட்டர்கள் நிறுத்த வேண்டும்.
 

http://thiruttusavi.blogspot.com/2021/02/blog-post_4.html

 

 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

புலம்பெயர் குழுக்களும் இவற்றையெல்லாம் ஒரு பொருட்டாகக் கருதுவதே கிடையாது. எல்லாவற்றிற்கும் மேலாக, மோடி அரசு இலங்கை அரசுடன் முரண்பட்டு தமிழர்களை ஆதரிக்கும் என உலகின் எங்கோ ஒரு மூலையில் அமர்ந்து கொரோனா கொடுமைகளுக்கு மத்தியில் விவாதம் நடத்தும் தமிழர்களின் நாற்பதுவருட கால போராட்ட வரலாற்றை எப்படி உரைப்பது?

இந்தியா அரசை நம்பிக்கொண்டிருக்கும் பல தமிழ் அரசியல்வாதிகளிடமிருந்தோ, அல்லது இப்பவும் இந்திய கிரிக்கெட் அணிக்கு ஆதரவு தெரிவிக்கும் பல தமிழர்களிடமிருந்தோ, இந்த மாதிரி boycott செய்யுங்கள் என எதிர்பார்ப்பது எவ்வளவு சிறுபிள்ளைத்தனம்?????

 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

இந்தியா அரசை நம்பிக்கொண்டிருக்கும் பல தமிழ் அரசியல்வாதிகளிடமிருந்தோ, அல்லது இப்பவும் இந்திய கிரிக்கெட் அணிக்கு ஆதரவு தெரிவிக்கும் பல தமிழர்களிடமிருந்தோ, இந்த மாதிரி boycott செய்யுங்கள் என எதிர்பார்ப்பது எவ்வளவு சிறுபிள்ளைத்தனம்?????

 

அதாவது இந்தியாவை வெறுத்து இந்திய சினிமா பார்த்து மகிழ்வது போல அப்படித்தானே இலங்கையை வெறுத்து நெக்டோ குடிச்ச ஆட் களும் இருக்கு பாருங்க

27 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

அதாவது இந்தியாவை வெறுத்து இந்திய சினிமா பார்த்து மகிழ்வது போல அப்படித்தானே இலங்கையை வெறுத்து நெக்டோ குடிச்ச ஆட் களும் இருக்கு பாருங்க

இங்குள்ள பெரும்பாலானோருக்கு இலங்கை மீதோ அல்லது இந்தியா மீதோ வெறுப்பு இல்லை. இவ் நாடுகளின் அரசுகள் மீது தான் வெறுப்பு. 
இலங்கையில் வெறுப்பு எனில் எவருமே இலங்கைக்கு செல்ல மாட்டார்கள், இலங்கையில் இருக்கும் உறவுகளுக்கு ஒரு சிறு துளிதானும் உதவ மாட்டார்கள். ஆனால் எம்மவர்கள் அப்படி அல்ல. இலங்கை அரசு எல்லா சிறுபான்மை தேசிய இனங்களுக்கும் சம அளவிலான உரிமைகளை கொடுத்தால் இந்த அரசுகள் மீதான  வெறுப்பும் அகன்று விடும்.

ஆனால் மேலும் மேலும் வெறுப்பை அதிகரிக்கும் செயல்களைத்தான் இவ் அரசுகள் செய்கின்றன.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, நிழலி said:

இங்குள்ள பெரும்பாலானோருக்கு இலங்கை மீதோ அல்லது இந்தியா மீதோ வெறுப்பு இல்லை. இவ் நாடுகளின் அரசுகள் மீது தான் வெறுப்பு. 
இலங்கையில் வெறுப்பு எனில் எவருமே இலங்கைக்கு செல்ல மாட்டார்கள், இலங்கையில் இருக்கும் உறவுகளுக்கு ஒரு சிறு துளிதானும் உதவ மாட்டார்கள். ஆனால் எம்மவர்கள் அப்படி அல்ல. இலங்கை அரசு எல்லா சிறுபான்மை தேசிய இனங்களுக்கும் சம அளவிலான உரிமைகளை கொடுத்தால் இந்த அரசுகள் மீதான  வெறுப்பும் அகன்று விடும்.

ஆனால் மேலும் மேலும் வெறுப்பை அதிகரிக்கும் செயல்களைத்தான் இவ் அரசுகள் செய்கின்றன.

இந்தியாவை எடுத்துக்கொண்டால் இந்து நாடு அங்கு முஸ்லீம்களின் சுதந்திரம், விருப்புக்கள் எல்லாம் எந்த நிலையில் இருக்கிறது அதே போல இலங்கையை எடுத்துக்கொண்டால் ஆளும் வர்க்கத்தின் கைக்க்குள் இருக்கும் இரண்டாம் பிரஜை நாம் அவர்களிடம் நாம் எதிர்பார்ப்பது கிடைக்காது . காஷ்மீர் அடக்குமுறையை அறிந்து இருப்பீர்கள் என நினைக்கிறன். பெரும்பான்மையான மக்களே அரசிசியலை தீர்மானிக்கையில் அரசியல் வாதியை நாம் நொந்து பலன் இல்லையே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

இந்தியா அரசை நம்பிக்கொண்டிருக்கும் பல தமிழ் அரசியல்வாதிகளிடமிருந்தோ, அல்லது இப்பவும் இந்திய கிரிக்கெட் அணிக்கு ஆதரவு தெரிவிக்கும் பல தமிழர்களிடமிருந்தோ, இந்த மாதிரி boycott செய்யுங்கள் என எதிர்பார்ப்பது எவ்வளவு சிறுபிள்ளைத்தனம்?????

 

மக்கள் விரோதப் போக்கிற்கு எதிர்ப்பு காட்டாமல் விடுவதால்தான் பா.ஜ.க. போன்ற  வலதுசாரிகள்  தாம் நினைத்ததை எல்லாம் செய்யமுனைகின்றனர்.

1 hour ago, ஏராளன் said:

 

இப்ப பெப்ருவரி. ஏதாவது சிலமன்?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அதாவது இந்தியாவை வெறுத்து இந்திய சினிமா பார்த்து மகிழ்வது போல அப்படித்தானே இலங்கையை வெறுத்து நெக்டோ குடிச்ச ஆட் களும் இருக்கு பாருங்க

உங்க ஒப்பீடு சகிக்கல.. 🤥

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மிடில் கிளாஸ் மாஸ்டர்கள் –கே.வி

தில்லி டிராக்டர் பேரணிக்குப் பின் போலீசார் உருவாக்கியிருக்கும் தடுப்பு அரண்களை பார்த்தேன் . பேரிகேட்களை குறுக்குவாட்டில் ரோட்டில் அடுக்கி கான்கிரீட் கலவை ஊற்றியிருக்கிறார்கள் .பல வரிசை கான்க்ரீட் தடுப்புகள் .கூரான ஆணிகள் பதித்த இரும்புப் பட்டைகளை ரோட்டில் பதித்திருக்கிறார்கள் . சுருள் முள் கம்பிகள் , போலீசாருக்கு லோக்கல் பட்டறை மேட் இரும்புத்தடி ஆயுதங்கள் .

இது ஏதோ குற்றங்கள் மலிந்த ,கேங்வார் நடக்கும் டிஸ்டோப்பியன் நகரம் ஒன்றை நினைவுறுத்தியது .

போலீசார் தரப்பில் மேலோட்டமாக பார்த்தால் இதற்கான நியாயங்கள் இருப்பது போல தோன்றலாம் . ஆனால் இதன் பின் இருக்கும் மனநிலையை யோசித்து பார்த்தால் பகீரென்கிறது. இது பிராக்டிகலாக பயன் உள்ளதா இல்லையா என்பதல்ல கேள்வி , இது விடுக்கும் செய்தி என்ன என்பது தான் நாம் யோசிக்க வேண்டியுள்ளது.

அதாவது விவசாயிகள் ஆபத்தானவர்கள் , காட்டுமிராண்டிகள் , எதிரிகள் , தூரத்தில் வைக்கப்பட வேண்டியவர்கள் .அவர்கள் வேறு அரசு வேறு என்று அடையாளப்படுத்தும் மனநிலை . இவ்வித நடவடிக்கைகளில் இருக்கும் ஒரு கீழ்மையான அவமதிப்பு அரசுக்கு புரியவில்லை . போராடும் விவசாயிகள் மீதான அடிப்படை மரியாதை இல்லாத கண்ணியமற்ற அணுகுமுறை இது .

இது ஏன் நிகழ்கிறது ?

நம் பண்பாட்டில் ஊறிப்போயிருக்கும் பாகுபாடு காட்டும் வழக்கம் என்பதன் வேறொரு மாதிரிதான் இது . நாம் பாகுபாடு என்ற உடனே சாதிய பாகுபாடு என்பதையே மனதுள் உருவகிப்போம் . ஆம் அது தான் மையமானது ஆனால் அது உருவாக்கும் இந்த பாகுபாட்டு சார்ந்த மனநிலை சாதியையும் கடந்தது . Caste is a structure , discrimination is a practice.

மனிதர்களை சமமான மரியாதை கொண்டவர்களாக நடத்தும் வழக்கம் நம் பண்பாட்டில் உருவாகவே இல்லை, அந்த எண்ணமே நம் சிந்தனை முறைக்கு அன்னியமானது. அங்கிருந்து கொண்டு நவீன ஐனநாயக வழுமியங்கள் நோக்கி வர நாம் தடுமாறிக் கொண்டிருக்கிறோம் . முதலில் வேறுபாடாக அடையாளப்படுத்தியது மெல்ல திரிந்து பாகுபாடாகிறது , பாகுபாடு என்பது பின் கீழ் மேலாக graded ஆக அடுக்கப்படுகிறது.

“Differentiate ,Distance , Discriminate , Demonize ”

இதன் ஒவ்வொரு கட்டத்திலும் ஒரு குழுவை அல்லது ஒரு அடையாளத்தை மையத்தை விட்டு வெளி தள்ளிக்கொண்டே இருக்கிறோம்.இப்படி எவ்வளவு தூரம் ஒரு குழுவை நாம் வேறுபடுத்தி , பாகுபாடு காட்டி நம்மிலிருந்து தூர வைக்கிறோமே அவ்வளவுக்கு அவர்களின் மேல் நாம் மெல்ல மெல்ல empathy ஐ இழக்கத் துவங்குகிறோம் .

வெறுப்பும் ,அருவருப்பும், indifference உம் அந்த இடைவெளிகளை நிரப்ப ஆரம்பித்துவிடுகிறது . ஒரு கட்டத்தில் அவர்களை தீமையின் உருவமாகவே உருவகித்துக்கொள்ள ஆரம்பிக்கிறோம் .

மரபான சாதிய அடையாளத்தை முன்வைத்து தான் இந்த பாகுபாடு கட்டமைக்கப்பட வேண்டும் என்பதில்லை.ஜெய் ஸ்ரீராம் , தேசப்பற்று , ஒரே தேசம் , வல்லரசு , மரபின் மூர்க்கம் போன்றவை எல்லாமே நவீன உயர் சாதியாக கட்டமைக்கப்பட்டிருக்கின்றன.மாறாக ஆண்டி இந்தியன் , அர்பன் நக்ஸல் , காலிஸ்தான் விவசாயி, பிர்ஸ்டிடியூட், பிராந்தியவாதம் என்பதெல்லாம் நவீன தாழ்த்தப்பட்ட சாதிகள். அவ்வாறு தான் இன்று அவை நம் popular narration ஆல் கட்டமைக்கபடுகிறது

சில மாதங்களுக்கு முன்பு வரை நாட்டுக்கு உணவளிக்கும் இனமாக , இந்திய ராணுவத்தின் முதுகெலும்பாக , சமூக நல்லிணக்கத்தின் அடையாளமாக , மாடல் இந்தியனாக நாம் கொண்டாடிய பஞ்சாபியர்கள் இன்று திடீரென்று காலிஸ்தான் தீவிரவாதிகளாக , தேச துரோகிகளாக , கோடாலிக்காம்பாக மாறியிருக்கிறார்கள்.

இப்படி சாதிய இயங்கிலை நவீன ஜனநாயக கருத்தியல் செயல்பாட்டின் மீது superimpose செய்தது தான் பாரதிய ஜனதா கட்சியின் பெரும் சாதனை என்று சொல்லலாம். அதனால் தான் இங்கு ஜனநாயக செயல்பாட்டில் தகவல் சார்ந்த அறிவார்ந்த விவாதங்கள் நிகழ்வதில்லை , இங்கு உரையாடல் என்னும் வடிவில் நிகழ்ந்துகொண்டிருப்பது discrimination என்பதன் நவீன வடிவம் தான்.

இங்கு அதிகார மையம் செய்ய வேண்டியது ஒன்றே . யார் யார் “என்ன சாதி” என்று முத்திரை குத்துவதை மட்டும் செய்தால் போதும் இந்த நவீன சாதிய மனநிலை அதை தன்பாட்டுக்கு ஏற்கவோ எதிர்க்கவோ ஆரம்பித்துவிடும், தரவுகளோ , விவாதங்களோ ,அற அடிப்படைகளோ தேவையில்லை.

தேசப்பற்று இருக்கும். நாடு முக்கியம் , நாடு முன்னேற வேண்டும் , செழிப்பாக இருக்கவேண்டும் வல்லரசு ஆக வேண்டும் , மரபு பேணப்பட வேண்டும் என்றெல்லாம் கனவு இருக்கும் .ஆனால் நாட்டு மக்கள் நலன் என்று வரும்போது இந்த தேசப்பற்று என்பது காணாமல் போய்விடும் , திருதிருவென விழிப்பார்கள் . தேசம் வேறு மக்கள் வேறு என்றாகிவிடும் .இது தான் இந்திய மிடில் கிளாஸ் மெண்டாலிட்டியின் ஆதார கட்டமைப்பு .

சச்சின் டெண்டுல்கர் போன்றோர் அந்த மிடில் கிளாஸ் மெண்டாலிட்டியின் மனசாட்சிகளே .

நானும் சச்சின் ரசிகன் தான் , ஆனால் விவசாயிகள் போராட்டம் குறித்த அவரின் கருத்து ஆச்சரியமளிக்கவில்லை , வருத்தமாக இருந்தது . சச்சின் மேல் கோபப்படுவதில் பிரயோஜனம் இல்லை. அவரிடம் ஏன் இப்படி சொல்கிறீர்கள் இதை விளக்க முடியுமா என்றெல்லாம் கேட்டால் அவருக்கு தெரியாது . அவர் இப்பொது தேசப்பற்று சாதியின் ஒரு மெம்பர் , தேசவிரோத சாதி என்று உருவாக்கி அளிக்கப்பட்ட லேபிளின் மீது தனது discriminatory view ஐ கண்ணியமாக வெளிப்படுத்துகிறார் அவ்வளவுதான்.

அதனால் தான் வெளியிருந்து பார்ப்போருக்கு – இரண்டு மாதங்களாக லட்சக்கணக்கான விவசாயிகள் வீதியில் இறங்கி ஒரு sustained protest நிகழ்கிறது இது பெரிய விஷயம் அதில் எப்படியும் ஒரு தார்மீக நியாயம் இருக்கும் என்று தோன்றுகிறது. ஆனால் அதே விஷயம் உள்நாட்டில் இருந்து கொண்டு , போராட்ட நிகழ்வுகளுக்கு அணுக்கமாக இருந்தாலும் , இந்த disrcriminatory கதையாடலுக்குள் இருந்து பார்க்கும் ஒருவருக்கு புராபகேண்டா தேசவிரோதம் என்று தோன்றுகிறது .

https://inioru.com/மிடில்-கிளாஸ்-மாஸ்டர்க/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

38881934-0-image-a-31_1612450210898.jpg

நரேந்திர மோடி அரசு பல் தேசிய நிறுவனங்களுக்கு ஆதரவாக கொண்டு வந்திருக்கும் வேளாண்மை சட்டங்களுகளை  எதிர்த்து  இந்திய உழவர் குடிமக்கள் மூன்று மாத காலங்களுக்கு மேலாக போராடுகிறார்கள்.  காவல்துறை தடியடி நடத்துகிறது. முள்வேலிகள் போட்டு போராடும் மக்களை முடக்கப் பார்க்கிறார்கள்.  இலட்சக்கணக்கான உழைப்பாளி மக்கள் தமது வாழ்க்கைக்காக போராடுவதை தேச விரோதிகளின் சதி என்று தமது பொய் வாய்கள்   திறந்து வாழ்நாளில் ஒருநாள் கூட உடலை வருத்தி உழைக்காத பார்ப்பன கும்பல்கள் ஊளையிடுகின்றன.  அடிமைச் சூத்திர சங்கிகள் வழக்கம் போல தமது எஜமானர்களுடன் சேர்ந்து தேசபக்தி பஜனை பாடுகிறார்கள்.

 

விவசாயிகளின் போராட்ட்ங்களுக்கு ஆதரவாகவும், பாசிச பாஜக கட்சியினது  நரேந்திர மோடியின் தலைமையிலான இந்திய அரசினது மனித உரிமை மீறல்களுக்கு எதிராகவும் உலகம் எங்கும் இருந்து குரல்கள் எழுகின்றன. சுற்றுச்சுழல போராளி கிரேட்டா துன்பேர்க், பாடகி ரிகானா போன்றவர்கள் குரல் கொடுத்தார்கள். இந்திய நாட்டுக்காக உயிரையும  கொடுக்க கிரிக்கட் மடடையுடன் திரியும் சச்சின் டெண்டுல்கர் மற்றும் சில நடிக நடிகையர்கள்  வெகுண்டு எழுந்த்து வெளிநாட்டு சதி என்று அபாயத் சங்கு ஊதுகிறார்கள். கிரேட்டா துன்பேர்க் போன்ற ஒரு சிறு பெண்ணால் இந்திய இறையாண்மைக்கு ஆபத்து வந்து விட்டது என்று அலறுகிறார்கள்.
 
அப்படியானால் இந்திய அமைதிப்படை என்ற பெயரில் வந்த அழிவுப்படை ஆயிரக்கணக்கான இலங்கைத் தமிழ் மக்களை கொன்று குவித்ததே; அந்தக் கொலைகள் எந்த இறையாண்மையின் கீழே வருகின்றன?. இவர்களினால் பாதிக்கப்பட்ட எமது பெண்கள் இன்னும் அந்தக் கொடுமைகளில் இருந்து மீள முடியாமல் தவிக்கிறார்கள். இந்தக் கொலைகாரர்களினால் எரிக்கப்பட்ட எமது ஊர்களின் மண் இன்னும் கருகிப் போய் இருக்கின்றது. யாழ் மருத்துவமனையில் வைத்து நோயாளர்களும், மருத்துவப் பணியாளர்களும் கையெடுத்து கும்பிட்ட போதும் கல்நெஞ்சுக்காரர்கள் கொன்றார்கள். இந்தக் கொடுமைகள் எல்லாம் எந்த இறையாண்மையின் கீழே வருகின்றன?
 
இந்திய இராணுவத்தை இலங்கைக்கு அனுப்பி தமிழ் மக்களை கொன்றது ராஜீவகாந்தியின் தலைமையில் இருந்த காங்கிஸ் கட்சி அமைத்த இந்திய அரசு தானே தவிர என்று பாரதிய ஜனதா கட்சியின் அரசு அல்ல என்று சிலர் வாதிடலாம். எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் முதலாளித்துவ அரசு என்பது  ஒரே மாதிரியான ஒடுக்குமுறை அமைப்பாகத்  தான் இருக்கும். ஆட்சியில் இருக்கும் கட்சிகள் மாறினாலும் அரசுகளின் வெளிநாட்டு கொள்கைகள் பெரும்பாலும் மாறுவதில்லை.  மேலும் நரேந்திரமோடியின் பாசிச கட்சி அன்று ஆட்சியில் இருந்திருந்தால் தமிழ் மக்கள் இதை விட மோசமான விளைவுகளைத் தான் சந்தித்து இருந்திருப்பார்கள்.
 
பார்ப்பனர்கள், இந்துத்துவ மதவெறியர்கள் உட்பட்ட மக்களின் எதிரிகள்  இன்றைக்கு உழவர்களின் போராட்டத்தை  எதிர்க்கிறார்கள். நரேந்திர மோடி அரசினது மனித உரிமை மீறல்களை ஆதரிக்கிறார்கள். அன்றைக்கும் இதே விதமான கும்பல்கள் ராஜீவ் காந்தியின் அரசு தமிழ் மக்களை ஒடுக்கியதை நியாயப்படுத்தினார்கள். ம.போ. சிவஞானம் சோ ராமசாமி, ஜெயகாந்தன் போன்றவர்களும் பார்ப்பன ஊடகங்களும் இந்திய இராணுவத்தினர்கள் இலங்கையில் அமைதியை நிலை நாட்டிக் கொண்டு இருக்கிறார்கள் என்று பச்சைப் பொய்களை பரப்புரை செய்தார்கள். 
 
தமிழகத்தின் மீன்பிடி தொழிலாளர்களின் வாழ்வை இலங்கை அரசினது கடற்படை தொடர்ந்து இன்று வரைக்கும் அழித்துக் கொண்டு வருகின்றது. இந்திய மீனவர்களினது வாழ்வை இலங்கை அரசு ஒடுக்குவது இந்தியாவின் இறையாண்மைக்கு எதிரானது இல்லையா? இந்த கடல் மக்களின் அவலம் குறித்து தேசபக்தர்கள் ஏன் பேசுவதில்லை? அம்பானி, அதானி போன்ற பணக்காரர்களுக்கு ஆதரவாகப் பேசுவது தான் இந்த பாசிச பயங்கரவாதிகளின் தேசபக்தி. குஜராத் கலவரத்தை நடத்தியவர்களை ஆதரிப்பது தான் பணத்துக்காகவும், பதவிகளுக்காகவும் அலையும் இந்த கும்பல்களின் தேச பக்தி.
 
 -வசந்தன் நடராசா
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அதாவது இந்தியாவை வெறுத்து இந்திய சினிமா பார்த்து மகிழ்வது போல அப்படித்தானே இலங்கையை வெறுத்து நெக்டோ குடிச்ச ஆட் களும் இருக்கு பாருங்க

ராசன்! சிங்கள பொது மக்களும் சிங்கள உணவுகளும் தமிழர்களுக்கு எந்த விதத்திலும் எதிர் இல்லை எண்டதை நீங்கள் புரிந்து கொள்ளவேணும். தலைவர் பிரபாகரன் தொடக்கம் இன்றிருக்கும் இளம் தமிழ் அரசியல்வாதிகள் வரைக்கும் சிங்கள மக்களை எதிரிகளாக பார்க்கவில்லை.

 

Bildergebnis für pfeil gif

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Kapithan said:

உங்க ஒப்பீடு சகிக்கல.. 🤥

நீங்கள்  எடுத்துக்கொள்வதை பொறுத்து  

 

18 hours ago, குமாரசாமி said:

ராசன்! சிங்கள பொது மக்களும் சிங்கள உணவுகளும் தமிழர்களுக்கு எந்த விதத்திலும் எதிர் இல்லை எண்டதை நீங்கள் புரிந்து கொள்ளவேணும். தலைவர் பிரபாகரன் தொடக்கம் இன்றிருக்கும் இளம் தமிழ் அரசியல்வாதிகள் வரைக்கும் சிங்கள மக்களை எதிரிகளாக பார்க்கவில்லை.

 

Bildergebnis für pfeil gif

நான் கூட எதிரியாக பார்க்கல அவ்வளவுதான் 

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, கிருபன் said:

இப்ப பெப்ருவரி. ஏதாவது சிலமன்?

 

இது ஜனவரி 26.

இந்த இணைப்பில் பெரும்பாலான போராட்ட விபரங்கள் இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

நிர்வாகத்திற்கு, ருவிற்றர் இணைப்பை போட்டா நிறைய தொடராக வந்துவிட்டது, தவறாக இருந்தால் நீக்கிவிடவும்.

On 5/2/2021 at 17:00, நிழலி said:

இங்குள்ள பெரும்பாலானோருக்கு இலங்கை மீதோ அல்லது இந்தியா மீதோ வெறுப்பு இல்லை. இவ் நாடுகளின் அரசுகள் மீது தான் வெறுப்பு. 
இலங்கையில் வெறுப்பு எனில் எவருமே இலங்கைக்கு செல்ல மாட்டார்கள், இலங்கையில் இருக்கும் உறவுகளுக்கு ஒரு சிறு துளிதானும் உதவ மாட்டார்கள். ஆனால் எம்மவர்கள் அப்படி அல்ல. இலங்கை அரசு எல்லா சிறுபான்மை தேசிய இனங்களுக்கும் சம அளவிலான உரிமைகளை கொடுத்தால் இந்த அரசுகள் மீதான  வெறுப்பும் அகன்று விடும்.

ஆனால் மேலும் மேலும் வெறுப்பை அதிகரிக்கும் செயல்களைத்தான் இவ் அரசுகள் செய்கின்றன.

மக்களினால் தேர்ந்தெடுக்கப்படும் அரசாங்கம் (அரசு) என்பது அது ஒரு தனிஅலகல்ல, அது அந்த மக்களின் பிரதிபலிப்பு.

ஒவ்வொருமுறையும் தேர்ந்தெடுக்கப்படும் அரசுகள் சிறுபான்மை மக்களின் உரிமைகளை மறுப்பது  என்பது அவர்களை தேர்ந்தெடுத்த மக்களின் விருப்பை நிறைவேற்றும் ஒரு செயலே

  • கருத்துக்கள உறவுகள்
On 5/2/2021 at 18:00, நிழலி said:

இங்குள்ள பெரும்பாலானோருக்கு இலங்கை மீதோ அல்லது இந்தியா மீதோ வெறுப்பு இல்லை. இவ் நாடுகளின் அரசுகள் மீது தான் வெறுப்பு. 

நிழலிக்கு அப்படி இருக்கலாம் நல்லெண்ணம். அப்படி பலர் இருக்கிறார்கள் ஆனால் எல்லோரும் அப்படி இல்லை  அங்கே உள்ள தமிழர்களுக்கு தீங்கு நடந்தாலும் ஒகே இலங்கைக்கு தீமை நடைபெற வேண்டும் என்ற வெறியில் பலர் இருக்கிறார்கள் என்பதே உண்மை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.