Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பொலிகண்டியில் நாட்டப்பட்ட “இரண்டு கற்கள்” குழப்பம் - நடந்தது என்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பொலிகண்டியில் நாட்டப்பட்ட “இரண்டு கற்கள்” குழப்பம் - நடந்தது என்ன?

தமிழீழம் 

பொத்துவிலில் தொடங்கிய பேரணி பொலிகண்டியில் பல்லாயிரக்கணக்கான மக்களின் பங்களிப்போடு நிறைவுபெற்ற நிலையில் நிறைவிடத்தில் குழப்பமான சூழல் ஏற்பட்டுள்ளமை தொடர்பில் பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

வடக்கு மற்றும் கிழக்கு சிவில் சமூகங்களின் ஏற்பாட்டில் தொடங்கி நடைபெற்று முடிந்த போராட்டத்தினை தங்களது போராட்டமாக முடித்துவைக்கும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் முன்னிலையில் சாணக்கியன் பொலிகண்டியில் கல் ஒன்றை நாட்டிவைத்தமையாலேயே குழப்பம் ஏற்பட்டதாக சம்பவத்தில் பங்குகொண்டவர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து மேலும் விரிவாக தெரியவருவதாவது,

திருமலையில் தொடங்கிய முறுகல்

கடந்த 03ஆம் திகதி அம்பாறை மாவட்டத்தின் பொத்துவிலில் தொடங்கிய பேரணி நேற்று முன்தினம் திருகோணமலையிலிருந்து முல்லைத்தீவு நோக்கிப் புறப்படுவதற்கு முன்பாக தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சாணக்கியன் ஆகியோர் பேரணிக்கு முன்பாக தங்களுடைய ஆதரவாளர்களுடன் புறப்பட்டிருந்ததாகவும்

பின்னர் சில சமரச முயற்சிகளுக்குப் பின்னர் இரண்டு தரப்பும் ஒன்றாகவே முல்லைத்தீவை நோக்கி நகர்ந்ததாகவும் தெரியவந்தது. இது குறித்து கேட்டபோது, முதலில் குழப்பம் ஒன்று நடந்தது உண்மை தான் பின்னர் சரி செய்யப்பட்டுவிட்டது என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் அருவிக்குத் தெரிவித்தார்.

திருகோணமலை குழப்பத்திற்கு காரணம் என்ன? என்று ஆராய்ந்தபோது,

போராட்டத்தினை ஏற்பாடு செய்த சிவில் சமூகப் பிரதிநிதிகள் போராட்டத்தின் தொடக்கத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகின்றபோது கட்சிகளுக்கு இடையிலான பிணக்காக மாறலாம் என்பதால் மதகுருமார் முன் வரிசையில் வருமாறும் அதன் தொடராக அரசியல் பிரமுகர்களை வருமாறும் அறிவுறுத்தியதாக சிவில் சமூகப் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

அதேபோல மட்டக்களப்பிலிருந்து திருகோணமலை போராட்டம் வந்தபோது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நின்ற இடத்திற்கு போராட்டப் பேரணியில் பங்கேற்றவர்களை அழைத்துச் சென்று சந்திக்கவைத்ததாகவும் ஏற்பாட்டாளர்களால் விசனம் வெளியிடப்பட்டிருக்கின்றது.

இந்த இரண்டு விடயங்களும் தமிழரசுக்கட்சியினருக்கும் சிவில் சமூகப் பிரநிதிகளுக்கும் இடையிலான முறுகலின் தொடக்கமாக வெடித்திருந்தது.

இதனை அடுத்தே திருகோணமலையிலிருந்து தனியாக முதலில் எம்.ஏ.சுமந்திரன், சாணக்கியன் ஆகியோர் தலைமையிலான அணியினர் முல்லைத்தீவு நோக்கி முதலில் புறப்படத் தலைப்பட்டிருக்கின்றனர்.

இந்நிலையில் திருகோணமலையின் தொடராக ஏனைய மாவட்டங்களுக்குப் போராட்டங்கள் நகர்ந்தபோது அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்வரிசையில் இடம்பெற்றிருக்கவில்லை.

கிளிநொச்சியில் மதகுருமாருடன் முரண்பட்ட சாணக்கியன்

இன்று கிளிநொச்சியில் போராட்டம் தொடங்குவதற்கு முன்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அங்கு வந்திருக்கின்றார். அவர் வந்தபோது அங்கு நின்றிருந்த மதகுருக்கள் மார் தம்மை மதித்து வணக்கம் செலுத்தவில்லை என்று தெரிவித்து, அவர்களுடன் முரண்பட்டிருந்தார் என்று பேரணில் பங்கேற்பதற்காக அங்கு கூடியிருந்த இளைஞர்கள் தெரிவித்தனர்.

சாவகச்சேரியில் தந்தை செல்வாவின் பேரன் தாக்கப்பட்டார்

சாவகச்சேரியில் பேரணி நடைபெற்றுக்கொண்டிருந்தபோது முன்னாள் மாகாணசபை உறுப்பினர் சயந்தனின் ஏற்பாட்டில் அவருடைய அலுவலகத்துக்கு முன்பாக சிறப்பு வழிபாடு ஒன்று நடைபெற்றிருந்தது. அதேவேளை பேரணியின் முன்வரிசையில் இடம்பெறவேண்டும் என்று முன்னாள் மாகாணசபை உறுப்பினர் சயந்தன் ஏற்பாட்டாளர்களிடம் கோரிக்கைவிடுத்து தர்க்கப்பட்டதாகவும் அதன் தொடராக அந்த இடத்திற்குச் சென்ற நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனும் முன்வரிசைக்கு அழைக்கப்பட்டிருந்ததாகவும் சம்பவத்தினை அவதானித்தவர்கள் தெரிவித்தனர்.

குறித்த சம்பவத்தினை அடுத்து பாதுகாப்பு அரண் அமைத்து நகர்ந்து வந்த யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் அவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டமை தொடர்பில் விசனம் தெரிவித்திருக்கின்றனர். இதனை அடுத்து தமிழரசுகட்சி ஆதரவாளர்கள் என்று சொல்லப்படுபவர்கள் பல்கலைக்கழக மாணவர்களைத் தாக்கியிருக்கின்றனர். அதன்போது அந்த விடயங்களை கையாள முற்பட்ட பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரைக்குமான பேரணியின் ஏற்பாட்டுக்குழுவின் வடக்கு மாகாண இணைப்பாளராக செயற்பட்ட தந்தை செல்வாவின் பேரனான இளங்கோ மீதும் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கின்றது.

பொலிகண்டிக்குழப்பம் நடந்தது என்ன?

பின்னர் பேரணி யாழ்மாவட்டத்தின் பிரதான பகுதிகளைக் கடந்து பொலிகண்டியை அண்மித்த போது அங்கு மீண்டும் பாரிய குழப்பம் ஏற்பட்டது.

பொலிகண்டியின் ஆலடி, செம்மீன்படிப்பகம் இரண்டு இடங்கள் தான் முக்கிய இடம்பெற்றிருக்கின்றன.

பேரணி பொலிகண்டியில் செம்மீன்படிப்பகப் பகுதியை அண்மித்து அங்கு பேரணியை முடிப்பதாக ஏற்பாட்டுக்குழு திட்டமிட்டிருந்ததாக தெரியவருகிறது.

ஆனால்,

ஆலடிப் பகுதியில் சுமந்திரன் தலைமையில் சாணக்கியனால் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரைக்கும் நினைவாக கல் ஒன்று நாட்டப்பட்டிருக்கிறது.

சம்பவத்தை அடுத்து அங்கு கூடிய பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட்ட பிரதிநிதிகள் சாணக்கியனின் வாகனத்தினைச் சுற்றிவளைத்திருக்கின்றனர். பொத்துவிலில் போராட்டத்தினைத் தொடங்கியவன் நானே, எனவே முடித்துவைப்பதும் நானே தான் என்று அவர் தெரிவித்தார் என்று மாணவர்கள் தெரிவித்தனர்.

இதனை அடுத்து வாக்குவாதம் முற்றிய நிலையில் இளைஞர்கள் காரைச் சூழ்ந்துகொண்டதால், சாணக்கியன் வாகனத்தை வேகமாக செலுத்திப் புறப்பட்டிருக்கிறார். அங்கு நின்றிருந்த இருவரின் கால்களில் ஏறி வாகனம் சென்றதாக அங்கு கூடியிருந்த மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

பொலிகண்டியின் முக்கியபகுதியில் ஆலடி காணப்படுவதால் அங்கே தானே நிகழ்வினை முடிக்கவேண்டும் என்று அந்தக் கிராமத்தின் மக்களில் பலரே கேள்வி எழுப்பியிருக்கின்றனர். (செம்மீன் படிப்பகம் பொலிகண்டியின் மேற்குப் பகுதியில் எல்லைப்பகுதியில் காணப்படுகிறது) அதையே மக்கள் மத்தியில் சுமந்திரனும் தெரிவித்திருக்கின்றார்.

இந்நிலையில்

செம்மீன்படிப்பக பகுதியை தேர்ந்தெடுத்தமைக்கான காரணத்தினை போராட்ட ஏற்பாட்டுக்குழு மக்களுக்கு விளக்கியிருக்கிறது.

Znp7WynlWOnhtqWFJZH8.jpg

பேரணி ஏற்பாட்டுக்குழு இடம் தெரிவு செய்தமைக்கான காரணம் என்ன?

1985 ஆம் ஆண்டு மே மாதம் பொலிகண்டிப் பகுதியைச் சேர்ந்த ஆண்கள் 55 பேர் பிடிக்கப்பட்டு பொலிகண்டியில் உள்ள செம்மீன்படிப்பகத்தில் அடைக்கப்பட்டு அங்கு குண்டுவைத்துக் கொல்லப்பட்டதாகவும் அதனால் அவர்களை நினைவு கூரும் வகையில் அவர்கள் உயிரிழந்ததாக சொல்லப்படும் இடத்தில் போராட்டத்தினை நிறைவுசெய்வது தானே பொருத்தமாக இருக்கும் என்று தெரிவித்து அந்த இடத்திலேயே மாவீரர் ஒருவரின் தாயார் சுடரேற்றிய பின்னர் நினைவுத்தூபி நாட்டப்பட்டிருக்கின்றது.

அதன் பின்னர் ஏற்பாட்டாளர்கள் அங்கிருந்து ஆலடிப்பகுதிக்குச் சென்று அங்கு மக்களை சந்தித்து விளக்கமளித்திருக்கின்றனர்.

தொடக்கத்தில் அந்தப்பகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தபோதிலும் அங்கு மதகுருமாரும் ஏற்பாட்டாளர்களும் தங்களின் நோக்கத்தினையும் நடந்த சம்பவங்களையும் விளக்கிய பின்னர் அந்த மக்கள் ஏற்றுக்கொண்டதை அடுத்து அமைதியான முறையில் பிரகடனம் வாசிகப்பட்டு சிறப்பாக நிகழ்வு நிறைவு பெற்றது 
 
https://www.thaarakam.com/news/2ff9a47b-ac66-4a02-b566-3992afd3a71d

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, கிருபன் said:

எல்லாமே குழப்பத்தில் தான் முடிந்து உள்ளது இந்த போராட்டம் சம்பந்தமாய் சமயம் சம்பந்தப்பட்டது என்று ஐநாவுக்கு  அறிக்கை அனுப்பிய புண்ணியவானை இன்னும் கண்டுபிடிக்க முடியலை .😀

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, பெருமாள் said:

எல்லாமே குழப்பத்தில் தான் முடிந்து உள்ளது இந்த போராட்டம் சம்பந்தமாய் சமயம் சம்பந்தப்பட்டது என்று ஐநாவுக்கு  அறிக்கை அனுப்பிய புண்ணியவானை இன்னும் கண்டுபிடிக்க முடியலை .😀

"சும்"மாய் இருக்குமோ அவர் தான் பேரணியின் போது  வவுனியாவில் இருந்து கிளிநொச்சி செல்லும் போது  இடையில் காணாமற் போய்  திரும்பி வந்தவராம்  ....கொழும்புக்கு ஒரு வெளி நாட்டு தூதுவரை சந்திக்க போய் வந்தவர் என்று  அவரது வால்கள் சொல்லி கேள்வி 😂

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ரதி said:

"சும்"மாய் இருக்குமோ அவர் தான் பேரணியின் போது  வவுனியாவில் இருந்து கிளிநொச்சி செல்லும் போது  இடையில் காணாமற் போய்  திரும்பி வந்தவராம்  ....கொழும்புக்கு ஒரு வெளி நாட்டு தூதுவரை சந்திக்க போய் வந்தவர் என்று  அவரது வால்கள் சொல்லி கேள்வி 😂

சரியான ஆதாரம் இல்லை .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்ப முந்தின ஆய்வாளர்கள் எல்லாம் பழையபடி சுறுசுறுப்பாயிட்டினம்.

டிபிஎஸ் ஜெயராஜ், வேல்ஸிலிருந்து அரூஸ் போன்றவர்களின் “ஆய்வுக்கட்டுரைகளை” படிக்க ஆவலுடன் காத்திருக்கின்றேன்.😜 எல்லாம் புட்டுப்புட்டு வைப்பார்கள்😂

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, கிருபன் said:

இப்ப முந்தின ஆய்வாளர்கள் எல்லாம் பழையபடி சுறுசுறுப்பாயிட்டினம்.

டிபிஎஸ் ஜெயராஜ், வேல்ஸிலிருந்து அரூஸ் போன்றவர்களின் “ஆய்வுக்கட்டுரைகளை” படிக்க ஆவலுடன் காத்திருக்கின்றேன்.😜 எல்லாம் புட்டுப்புட்டு வைப்பார்கள்😂

எங்கள் சபேசனை மறக்கலாமா??

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விசுகு said:

எங்கள் சபேசனை மறக்கலாமா??

அவர் ஒரு தீவை வாங்கிப் போயிருப்பார்!😉

  • கருத்துக்கள உறவுகள்
Just now, கிருபன் said:

அவர் ஒரு தீவை வாங்கிப் போயிருப்பார்!😉

அங்கேயும் தேள் 🦂 வகைகளை பயன்படுத்த பயிற்சி எடுத்துக் கொண்டிருப்பார் 🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, விசுகு said:

அங்கேயும் தேள் 🦂 வகைகளை பயன்படுத்த பயிற்சி எடுத்துக் கொண்டிருப்பார் 🤣

அது வன்னியன் என்ற பெயரில் ஒருவர் தேள்வடிவ தாக்குதலை டிஸைன் பண்ணியிருந்தார். ஆனால் வன்னியன் என்பது புனைபெயரில் ஒழிந்திருந்த one-off “ஆய்வாளாராக” இருக்காது!

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, கிருபன் said:

இப்ப முந்தின ஆய்வாளர்கள் எல்லாம் பழையபடி சுறுசுறுப்பாயிட்டினம்.

டிபிஎஸ் ஜெயராஜ், வேல்ஸிலிருந்து அரூஸ் போன்றவர்களின் “ஆய்வுக்கட்டுரைகளை” படிக்க ஆவலுடன் காத்திருக்கின்றேன்.😜 எல்லாம் புட்டுப்புட்டு வைப்பார்கள்😂

ஆய்வாளவர்கள் எழுதுவதை விட இந்த வால்கள்😀 சொல்வதில் தான் உண்மை இருக்கும் ...அவர்கள் தான் சம்மந்தப்பட்டவரோடு கூடவே இருப்பவர்கள் கொஞ்சம்  உசுப்பேத்தினால்😂 காணும் உண்மை அப்பிடியே வெளியே வந்திடும்😉 ...ஆய்வாளர்கள் கூட இவர்களிடம் தான் செய்தி கறக்கிறார்கள் 

  • கருத்துக்கள உறவுகள்

பொலிகண்டியில் 55 பொதுமக்கள் குண்டுத் தாக்குதல் மூலம் படுகொலை செய்யப்பட்ட இடத்தில் - தமிழ் சிவில் சமூகத்தினாலும்

147807345_3598922036893655_6422343232541

பொலிகண்டி ஆலடிச் சந்தியில் சுமந்திரன் தலைமையில் வைக்க வெளிக்கிட்டு பின்னர் சாணக்கியனால் வைக்கப்பட்டது

148212682_3598922123560313_4050384843291

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

ஆய்வாளவர்கள் எழுதுவதை விட இந்த வால்கள்😀 சொல்வதில் தான் உண்மை இருக்கும் ...அவர்கள் தான் சம்மந்தப்பட்டவரோடு கூடவே இருப்பவர்கள் கொஞ்சம்  உசுப்பேத்தினால்😂 காணும் உண்மை அப்பிடியே வெளியே வந்திடும்😉 ...ஆய்வாளர்கள் கூட இவர்களிடம் தான் செய்தி கறக்கிறார்கள் 

சுமத்திரனின் ஐநா வரைபு பிழையென்றுவிக்கியர் சொல்ல யாரோ வால் மூலம் அந்த வரைபு முதன் முதல் யாழில் இணைக்கப்பட்டது அதன் பின்தான் மற்றைய ஊடகங்களில் மறு  நாள் வந்தது. அவ்வளவுக்கு விசுவாச கூட்டம் இங்குள்ளது .

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, nunavilan said:

பொலிகண்டியில் 55 பொதுமக்கள் குண்டுத் தாக்குதல் மூலம் படுகொலை செய்யப்பட்ட இடத்தில் - தமிழ் சிவில் சமூகத்தினாலும்

ஒரு இரண்டு சகாப்தம் ஓடியிட்டது உண்மையான தரவுகளை சொல்வதுக்கு  அங்கு ஆட்கள் இல்லை போல் உள்ளது புதிதாக கட்டிய  சன சமூக நிலைத்துக்குள் பிடிபட்ட இளைஜர்களை உள்ளே விட்டு நான்கு பக்கமும் சக்கை இறக்கி கிளப்பினவர்கள் அந்த சுத்துவட்டராம்  எங்கும் கை  கால் தலை என்று தனித்தனியாக வந்து விழுந்து கிடந்தது . இவ்வளவுக்கும் முதல்நாள் டெலோ  போட்டிக்கு இலங்கை ராணுவத்துக்கு எதிரா  வைத்த சக்கை சரியாக வெடிக்கவில்லை திக்கம் அயலூரில் நடந்தது  அதனால் இந்த வெறியாட்டம் இலங்கை படைகள் ஆடினவை .

சிம்பிளாக சொல்கிறார்கள் குண்டுத்தாக்குதல் மூலம் என்று அவர்கள் இறக்கும் தருணம் எவ்வளவு இரந்து மன்றாடினார்கள் என்று நினைத்து பாருங்கள் .

Edited by பெருமாள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.