Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேச விசாரணை – பொது வாக்கெடுப்பு’: தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் ஈழத் தமிழர் விடயம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச விசாரணை – பொது வாக்கெடுப்பு’: தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் ஈழத் தமிழர் விடயம்!

http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/DMK.jpg

இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணையை முன்னெடுப்பதற்கும், தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வை வழங்கும்பொருட்டு பொது வாக்கெடுப்பை நடத்துவதற்கும் மத்திய அரசை வலியுறுத்தவுள்ளதாக தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் ஆறாம் திகதி நடைபெறவுள்ள நிலையில், பிரதானமாகப் போட்டியிடும் தி.மு.க. கட்சி தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், இந்தத் தேர்தல் அறிக்கையில் ஈழத் தமிழர் நல்வாழ்வு என்ற தலைப்பின் கீழ் நான்கு விடயங்களைச் செயற்படுத்துவது தொடர்பாக உறுதியளிக்கப்பட்டுள்ளது.

அதில், இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள், இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணையை மேற்கொள்ள இந்திய அரசு உலக நாடுகளை வலியுறுத்திச் செயற்படுத்த வேண்டுமென மத்திய அரசை தி.மு.க. வலியுறுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இலங்கையின் வடக்கு கிழக்கில் நீர்த்துப் போன அதிகாரப் பங்கீடுகளே அனுமதிக்கப்பட்டுள்ளன. எனவே, அங்குள்ள தமிழர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு நிரந்தரமான அரசியல் தீர்வு அமைய ஈழத் தமிழர்கள், புலம்பெயர் தமிழர்கள் இடையே ஐ.நா.வின் மேற்பார்கையில் பொது வாக்கெடுப்பு நடத்தவும் மத்திய அரசை தி.மு.க. வலியுறுத்தும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.

மேலும், இலங்கையில் புதிதாக உருவாக்கப்படவுள்ள அரசியலமைப்புச் சட்டத்தில் முழுமையான அதிகாரங்கள் தமிழர்களுக்குக் கிடைக்கும் வகையில் சட்டப் பிரிவுகளை உருவாக்குவதற்கு இலங்கையை நிர்ப்பந்திக்க வேண்டுமென மத்திய அரசை தி.மு.க. வலியுறுத்தும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இலங்கையில் இருந்து அகதிகளாக இந்தியாவுக்கு வந்த தமிழர்கள் குறித்தும் கரிசனை காட்டப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்குவதற்கும், இலங்கைக்கு திரும்பிச் செல்ல விரும்புபவர்களுக்குத் தேவையானவற்றைச் செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://athavannews.com/சர்வதேச-விசாரணை-மற்றும்/?fbclid=IwAR37jOp4IJ4lCJuJ7i2L7eeRfeA6bosOChBq9JtlfKM1w0wG9s3wvd_uGmw

http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/DMK-Election-Report-2021-Eelam-Tamils-Problem.jpg

DMK-Election-Report-2021-Eelam-Tamils-Problem.jpg

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nunavilan said:

சர்வதேச விசாரணை – பொது வாக்கெடுப்பு’: தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் ஈழத் தமிழர் விடயம்!

இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணையை முன்னெடுப்பதற்கும், தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வை வழங்கும்பொருட்டு பொது வாக்கெடுப்பை நடத்துவதற்கும் மத்திய அரசை வலியுறுத்தவுள்ளதாக தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் ஆறாம் திகதி நடைபெறவுள்ள நிலையில், பிரதானமாகப் போட்டியிடும் தி.மு.க. கட்சி தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், இந்தத் தேர்தல் அறிக்கையில் ஈழத் தமிழர் நல்வாழ்வு என்ற தலைப்பின் கீழ் நான்கு விடயங்களைச் செயற்படுத்துவது தொடர்பாக உறுதியளிக்கப்பட்டுள்ளது.

அதில்,

1) இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள், இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணையை மேற்கொள்ள இந்திய அரசு உலக நாடுகளை வலியுறுத்திச் செயற்படுத்த வேண்டுமென மத்திய அரசை தி.மு.க. வலியுறுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2) அத்துடன், இலங்கையின் வடக்கு கிழக்கில் நீர்த்துப் போன அதிகாரப் பங்கீடுகளே அனுமதிக்கப்பட்டுள்ளன. எனவே, அங்குள்ள தமிழர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு நிரந்தரமான அரசியல் தீர்வு அமைய ஈழத் தமிழர்கள், புலம்பெயர் தமிழர்கள் இடையே ஐ.நா.வின் மேற்பார்கையில் பொது வாக்கெடுப்பு நடத்தவும் மத்திய அரசை தி.மு.க. வலியுறுத்தும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.

3) மேலும், இலங்கையில் புதிதாக உருவாக்கப்படவுள்ள அரசியலமைப்புச் சட்டத்தில் முழுமையான அதிகாரங்கள் தமிழர்களுக்குக் கிடைக்கும் வகையில் சட்டப் பிரிவுகளை உருவாக்குவதற்கு இலங்கையை நிர்ப்பந்திக்க வேண்டுமென மத்திய அரசை தி.மு.க. வலியுறுத்தும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.

4) அத்துடன், இலங்கையில் இருந்து அகதிகளாக இந்தியாவுக்கு வந்த தமிழர்கள் குறித்தும் கரிசனை காட்டப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்குவதற்கும், இலங்கைக்கு திரும்பிச் செல்ல விரும்புபவர்களுக்குத் தேவையானவற்றைச் செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1) டமால்

2) டுமீல் 

3) டும் டுடும்

4 ) இஅங்கையில் மலையகத் தமிழரும், தமிழ்நாட்டில் ஈழத் தமிழ் அகதிகள் இருப்பதுதானே இந்தியாவின் துருப்புச் சீட்டு.. 

😏

(இதே நிலைமை நீடிக்குமானால் திமுக மிக விரைவில் பிரபாகரன் படத்தை பிரச்சார மேடைகளில் வைத்தாலும் ஆச்சரியமில்லை.)

முடிவில்...

ஐ நா வில் இந்தியா இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்கும் என எதிர்பார்க்கலாம்..

😏

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Kapithan said:

முடிவில்...

ஐ நா வில் இந்தியா இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்கும் என எதிர்பார்க்கலாம்..

வடிவேலு கொமடி தோத்தது .

  • கருத்துக்கள உறவுகள்

என்னடா இது 
சேர்ந்து கொன்றவனே கட்டிப்பிடித்து அழுகிறான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, Kapithan said:

ஐ நா வில் இந்தியா இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்கும் என எதிர்பார்க்கலாம்..

😏

காசா பணமா எடுத்து விடு தல...😎

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
52 minutes ago, ஈழப்பிரியன் said:

என்னடா இது 
சேர்ந்து கொன்றவனே கட்டிப்பிடித்து அழுகிறான்.

இங்கேயும் நடந்தது நல்லது கெட்டது சொல்லப்படுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

Quote

சர்வதேச விசாரணை – பொது வாக்கெடுப்பு’: தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் ஈழத் தமிழர் விடயம்!

தி.மு.க.வின் தேர்தல் குண்டு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

159793023_2828993847360987_2443351568928

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.