Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தோழனே....!!!!

Featured Replies

தோழனுக்காக கவிதை அழகு.

நட்பே புனிதமானது (தனது) என்று தனியே நின்று வாதிட்டு ஜெயித்ததும் அழகு.

வாழ்த்துக்கள் வெண்ணிலா..

..............

அதற்கு பின இடம்பெற்ற கருத்துக்களை கவனித்தேன். வெண்ணிலாவின் கருத்துக்களின் போது அவர் குறிப்பிட்ட சில கவிதைகள் வாசித்தேன். நன்றாக இருந்தது.

பின்னால் நெடுக்ஸ் அண்ணாவின் அழகான கருத்துக்கள் சூப்பர்! விளங்காத வைக்கும் சட்டென்று விளங்க வைத்து விடும்... (சில சமயங்களில் விளங்கியவர்களையும் அவர் கருத்துக்கள் குழப்பும் அது வேறு விடயம் :P )

...........

இப்ப எனக்கு விளங்காத ஒரு விடயம் என்னவென்றால்..

வாழ்க்கையில் எல்லோருக்கும் நட்பும் இருக்கு...காதலும் இருக்கு! இரண்டும் முக்கியமானவை கூட.

இப்போ நட்பு, காதல் என்று இரண்டை பற்றி அடிக்கடி வாதங்கள் நடைபெறுவது சரி.

ஆனால் நட்பு என்று..நட்பை பற்றி கதைக்கும் போது நான் கூட கவனித்தது என்னவென்றால்.

காதலை கொச்சைப்படுத்துவது போல(அப்படியென்றால் மிகையாக்கி சொல்கிறேனா தெரியவில்லை) சரி காதலை குறைவாக..அதாவது நட்பை விட குறைவாக சொல்லியே சொல்லப்படுகின்றது.

அப்படி எந்த வகையில் காதல் நட்பை விட குறைந்து விட்டது என்று தான் புரியவில்லை. ஆனால் எங்கேயாவது காதலை பற்றி சொல்லும் போது நட்பை குறைவாக சொல்லப்பட்டிருக்கா? இல்லை..ஆனால் நட்பு என்ற போது மட்டும் காதலை கொச்சைப்படுத்துவது தப்பு! நட்பு உன்னதமானது. காதலும் உன்னதமானது. அப்படி இருக்க ஏன் ஒன்றை மிகையாக்க மற்றொன்றை கொச்சைப்படுத்துகிறார்கள். அதுவும் கூட உடல் உணர்ச்சிகளை காதலோடு இணைத்தே கொச்சைப்படுத்துகிறார்கள். சிலது இயற்கை. எல்லாரும் எழும்பி நின்று இல்லை என்று வாதிட்டாலும் எல்லோரும் மனிதர்..எல்லோருக்கும் இயற்கையான உணர்வுகள் எல்லாமே இருக்கு. இது நான் தப்பா கதைக்க வரவில்லை.

ஆனால் கூட காதலை இப்படி உணர்ச்சிகளோடு சேர்த்து கொச்சை படுத்துவது எனக்கு பிடிக்கவில்லை.

நட்பை காதலோடு கொச்சைப்படுத்துவது பிழை என்றால்..காதலை வேறு உணர்ச்சிகளோடு கொச்சைப்படுத்துவது மிகப்பெரிய பிழை!!

காதல் தனது ஆட்சியை

பள்ளியறையில்

முடித்துக்கொண்டு

மூச்சடங்கிப்போகிறது.

நட்பு அப்படியல்ல

இதயத்தின் இதயத்துள்

உணர்வின் உணர்வுள்

புதுப்புது அர்த்தங்களை

வாழ்வின் எல்லை வரை

தருவதாய்.

இதில் முதல் வரிகள்..எந்த உண்மையான காதலர்,கணவன்,மனைவியாலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.

இதில் முற்றாக நட்பை உயர்வாக்க எண்ணி வாழ்வில் முக்கியமான அதே உயர்வான காதலை கொச்சைப்படுத்தப்படுகின்றது.

2வது வரிகள்..ஏன் இதயத்தின் உணர்வுகளை காதல் தராதா? புது புது அர்த்தங்கள்?? அப்படி என்ன புது புது அர்த்தங்கள்? காதலில் அது இல்லையா?

ஒரு பெண்ணை, அல்லது ஆணை தாய்,தகப்பன் என்னும் மகத்தான் உயர்வுக்கு இட்டு செல்வது காதல் தான். அது திருமணத்தால் இணைக்கப்பட்ட காதல் தான். நட்பால் முடியவே முடியாது. இப்படி புது புது உறவுகளை தந்து ஒருவரின் வாழ்வில் புது அர்த்தங்களை கொடுப்பது காதல் தானே...

(இது நான் இரண்டையும் குழப்பவில்லை, ஆனால் நட்பை விட காதல் குறைவில்லை என்று சொல்கிறேன்!)

அத்தோடு பல பாடல்கள் கவிகளிலும் இப்படியே.

காதலுக்கு எல்லை உண்டு..

நட்புக்கு இல்லை!

சரி நட்புக்கு இல்லை. ஏற்றுக்கொள்கிறேன்.

ஆனால் காதலுக்கு இருக்கா? எங்க என்று யாராவது காட்டினார்களா?

இன்னும் சொல்லப்போனால்

நட்புக்குள் காதல் இருக்காது! இருக்கவும் கூடாது!ஆனால்

காதலுக்குள் நட்பு இருக்கலாம்!

இப்படி பார்க்க போனால் நட்பு காதலுக்குள் அடக்கம்!

அப்போ எந்த வகையில் காதலை குறைவாக பேசலாம்???

..........

இதில் ஒன்று சொல்ல வேண்டும்...நான் சொல்வது உண்மையான நட்பு & காதலை பற்றி மட்டுமே!

இரண்டையும் கலந்து பால்ல தண்ணி கலந்தது போல எதென்றே புரியாமல் இருக்கும் அந்த அதை சொல்லவில்லை.

மேலேயும் நெடுக்ஸ் அண்ணா சொல்லி இருந்தார்..எல்லாவற்றையும் தாண்டிய காதல் உண்டு என்று.

உண்டு தானே உண்மை தானே..இங்கு யாரும் குழந்தை பெற்ற பின் கணவனோடு ஆயுள் வரை வாழவில்லையா?

அப்படி என்றால் ஏன் எல்லோரும் காதல் செய்பவர்கள்..

காதலி,காதலனோடு வாழ்பவர்கள்..

நட்பு என்று வந்ததும் காதலை குறைத்து கதைக்கிறார்கள் என்பது தான் விளங்கவில்லை.. :lol::lol::huh:

Edited by பிரியசகி

  • Replies 98
  • Views 15.6k
  • Created
  • Last Reply

...............

Edited by சபேசன்

  • தொடங்கியவர்

.

உனக்குள் இருக்கும் சோகத்தை

எனக்குள் இன்றே புதைத்துவிட்டு

வெண்ணிலாவின் தோழி கவிதை வரிகளில் இந்த வரிகளை நட்பு என்பதில் இருந்து தியாகம் என்றே எண்ணத்தோன்றுகின்றது. உனக்குள் இருக்கும் சோகத்தை என்னுடன் பகிர்ந்து கொள் என்றால் நட்பாகலாம் என்னுள் புதைத்து விடு என்றால ;உங்களுக்கு அர்தம் என்ன? இங்கே ஒருவர் பலமானவராயும் மற்றவர் பலமற்றவராயும் கருத இடமுண்டு. உங்கள் சோகத்தை யாருள் புதைப்பீர்கள்?

"அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்

அல்லல் உழப்பதாம் நட்பு"

இது திருக்குறள். அதாவது நண்பணுக்கு அழிவுவரும்போது அதை விலக்கி அவனை நிலைபெறச் செய்து தன்னையும் மீறிய அழிவின்போது தானும் அவனோடு துயரப்படுவதே நல்ல நட்பாகும்.

இது போலவே தான் அவனின் துயரத்தை நான் வாங்கிக்கொண்டு அவனுக்கு ஆறுதல் அளித்தேன். இதனால் ஒருவர் பலமானவர் மற்றவர் பலமற்றவர் என சொல்லவில்லையே. அவனிலிருந்து வாங்கிக்கொண்ட சோகத்தை அவ்னுக்கு ஆறுதல் வார்த்தை சொல்லும்போதே நானும் என்னைத் தேற்றிக்கொள்வதாக இருக்கலாமே. இதுவும் நட்புத்தான்.

பழையனவற்றை மறந்திடு

புதியதை தேடி விரைந்திடு

சோகத்தை தூக்கி எறிந்திடு

தோழி என் தோளில் தலை சாய்த்திடு

இந்த வரிகளின் அர்தம் ஒருவருக்கு ஒருவர் ஆறுதல் என்று நீங்கள் கருதினால் நான் அதற்கு மறுப்பு சொல்லவில்லை. ஆனால் ஒருவனின் பிரச்சனைக்கு நட்பின் மூலம் தீர்வு என்றால் அதில் பிரச்சனை உண்டு.

பழயன எதையும் மறக்காதே

அதிலிருந்து பாடங்களை படித்துக்கொள்.

சோகங்களை தூக்கி எறியாதே

உன் சோகத்துக்கான காரணங்களை கண்டுபிடி

பின் அதிலிருந்து தீர்வை கண்டு கொள்.

புதியனவற்றை தேடு ஆனால்

நீ நடப்பது முன்னோர் போட்ட

சாலையில் என்பதை மறக்கதே.

நட்பின் மூலம் தீர்வு என்றால் பிரச்சனைகள் வந்தாலும் அவ்நட்பே அதற்கு தீர்வாகவும் அமையலாம். புனிதமான நட்புக்குள் விட்டுக்கொடுப்பும் புரிந்துணர்வும் நிச்சயமாக இருக்கும். நன்றி சுகன் உங்கள் வரிகளும் அழகாக வித்தியாசமான என்னை சிந்திக்க வைக்கின்றது.

துயரத்தால் மிகுந்த ஒருவனை சாந்தப்படுத்தும் தாய்மைக்கு கிட்டவான ஒரு ஆறுதல் இந்த அழகான கவிதையை அலங்கரிக்கின்றது. தோழமை (நட்பு) என்பது இது மட்டும் இல்லை ஒரு கடமையை சேர்ந்து ஒற்றுமையாய் செய்யும் உயரிய அடயாளம் கொண்டது. ஒரு நட்பானது அது ஆண் பெண் இருபாலாருக்குள்ளும் எப்படி வேண்டுமானலும் வரும் போதும் ஏற்ற தாழ்வுகள் இன்றிய ஒன்றாகவே வர முடியும். நட்புக்குள் காமம் வரக்கூடாது காதல் வரக்கூடது என்று எதுவும் கிடையாது. அது மானுடத்தின் இயற்கையான அசைவுகளை நிராகரிப்பதாக அமையும். நாகரீகமஇ; கலாச்சாரம் என்பது நிராகரிப்புகளை செய்வதின் வெளிப்படு நட்புடன் புனிதம் என்ற ஒரு பதத்தை சேர்த்துள்ளது. மானுடத்தின் பரிணாம வளர்ச்சியில் நாகரீகமும் கலச்சாரமும் நிராகரிப்புகளையும் சில இணைப்புக்களையும் ஏற்படுத்துவது தவறென்பது எனது வாதமில்லை.

நானும் நட்புக்குள் காதல் இல்லை காமம் இல்லையென நான் சொல்லவில்லை. என்னைப்பொறுத்தளவில் என்னுடைய இக்கவிதைக்கான நட்பில் காமமோ காதலோ இல்லை. அதாவது தோள்சாய்தலினால் ஏற்பட்ட வாதத்திற்கு நான் சொன்ன கருத்தின்படி ஆண் பெண் நட்பில் காமம் காதல் இன்றி நட்போடு இருக்கலாம் என்றுதான் சொன்னேன் சொல்கின்றேன் சொல்வேன்.நன்றி சுகன் உங்கள் கருத்துக்களை நான் உள்வாங்குகின்றேன்,

(கவிதையை நன்கு ரசித்தேன் அதில் குறை கூறுவது எனது நோக்கமும் அல்ல ஆனால் அது நகர்த்தப்படும் கருத்துக்களோடு என்சார்பாக எனது கருத்தை எழுதினேன்)

நன்றி. நானும் விமர்சனங்களை எதிர்பர்க்கின்றேன். குறைகளைக் கண்டு நான் குன்றிப்போகவே மாட்டேன். ஆனால் நட்புக்கு இலக்கணம் காமமுமின்றி காதலுமின்றி நட்புக்கொள்ளலாம் என்பதே என் வாதம். அதுவே என் முடிவும்.

  • தொடங்கியவர்

வெண்ணிலா!. சிலர் "பாவம்" செய்வது பற்றி பெரும் அச்சத்தோடு வாழ்வார்கள். பெண்ணை ரசிப்பது என்பது கூட சிலருக்கு மிகப் பெரிய பாவம்தான். "காமம்" என்பது உலகிலேயே மிகப் பெரிய பாவம் என்பது அவர்களின் ஆழ்மனதில் உறுதியாக பதிந்து போயிருக்கும். பாவத்திற்கு அஞ்சி இயற்கையான உணர்வுகள் எழவிடாது அடக்கப்பட்டிருக்கும்.இப்படி?ானவர்கள் ஒரு சிலர் இருக்கிறார்கள். இதற்கு அவர்களின் வளர்ப்பும் சூழலும் ஒரு முக்கிய காரணம். ஆனால் இது இயற்கைக்கு மாறான ஒரு விடயமே தவிர, இது இயற்கை அல்ல. புனிதமும் அல்ல.

.சாதாரண ஆணின் மீது நட்பு ஏற்பட்டாலும் இதே அளவு நம்பிக்கை வைப்பார்கள். ஆனால் நட்பு என்பது எல்லோர் மீதும் ஏற்பட்டு விடாது. உயிர்கொடுப்பான் தோழன் என்று சொல்லுற அளவுக்கு நட்பு ஏற்படாது. அப்படி ஒரு நட்பு ஏற்பட்டால் கண்டிப்பாக அவனோடு நட்பை தொடர்வேன். .நட்பு அந்தஸ்தோ சாதி மதம் மொழி வயது இவை எதையும் எதிர்பார்க்காது.

புனிதம் என்பது ஒவ்வோர் மனசிலும் இருக்கு.

*******சபேசன் எழுதிய கருத்தை அவர் நீக்கியதால் அதை மேற்கோள்காட்டி பதில் எழுதிய நானும் சில சில வசனங்களை நீக்கி இருக்கின்றேன். ***********

என்னால் நிறைய எழுத முடிந்தும் இன்று நேரமின்மையால் எழுத முடியாமல் உள்ளது அதற்காக வருந்துகின்றேன்.நெடுக் அண்ணா சகி & சுகன் உங்கள் கருத்துக்களை ஆறுதலாக வாசித்து பின்னர் பதில் எழுதுவேன். நெடுக் அண்ணா எழுதியதை சகி சொன்னது போல விளங்கினாலும் குழப்புகின்றது. எனவே மீண்டும் பலதடவைகல் வாசித்த பின்னர் எழுதுவேன். நன்றி வணக்கம்

Edited by வெண்ணிலா

  • கருத்துக்கள உறவுகள்

வெண்ணிலா கவிதை சூப்பர் அது சரி எனக்கு கனக்கா எழுதி பழக்கமில்லை கனக்கா வாசித்தும் பழக்கமில்லை.....என்னத்குக்கும் 10 கிளாஸ் படித்த நண்பியின்ட தோளிள சாய்ந்து பார்கிறேன் என்ட மனிசியிட்டையும்,அவளிட்டையும

  • தொடங்கியவர்

வெண்ணிலா கவிதை சூப்பர் அது சரி எனக்கு கனக்கா எழுதி பழக்கமில்லை கனக்கா வாசித்தும் பழக்கமில்லை.....என்னத்குக்கும் 10 கிளாஸ் படித்த நண்பியின்ட தோளிள சாய்ந்து பார்கிறேன் என்ட மனிசியிட்டையும்,அவளிட்டையும? அடி வாங்காட்டி வந்து சொல்லுறேன்.

:P :huh:

உங்கள் நண்பியிடம் உங்களுக்கில்லாத போல உணர்ச்சிகள் இல்லாமல் இருப்பின் கட்டாயம் தோள்சாய அனுமதிப்பாள். இருப்பினும் இக்கவியில் நான் கண்டபடி தோள்சாய சொல்லவில்லையே. அவன் ஒரு துக்கத்தில் இருந்த போதுதான் அப்படி சொன்னேன். அதுதவிர, சும்மா வெண்ணிலா கவிதை எழுதி இருக்கிறாள் தோழன் தோழி தோளில் சாயலாம் என்றதுக்காக போய் தோளில் சாய்ந்து அடிவாங்கினால் நானா பொறுப்பு? :angry: அடிவாங்கிட்டு வந்து வெண்ணிலா உன் கருத்து தப்பு என்று சொல்லி மீண்டும் மீண்டும் என் நட்பு என்ற இலக்கணத்தில் கறை பூச எத்தணிக்காதீங்க அழுதுடுவேன். :P

கணிப்பின் அடிப்படையில் கருத்து எழுதுவது சரி அல்ல என்பதால், என்னுடைய கருத்தை நீக்கி விட்டேன்.

ஆனால் நீங்கள் வெகமாக இருக்கிறீர்கள். அதை மேற்கோள் போட்டு பதிலும் எழுதி விட்டீர்கள்.

Edited by சபேசன்

  • தொடங்கியவர்

கணிப்பின் அடிப்படையில் கருத்து எழுதுவது சரி அல்ல என்பதால், என்னுடைய கருத்தை நீக்கி விட்டேன்.

ஆனால் நீங்கள் வெகமாக இருக்கிறீர்கள். அதை மேற்கோள் போட்டு பதிலும் எழுதி விட்டீர்கள்.

.

நான் கருத்து எழுதுவதில் இருக்கும் வேகத்தை விட என் நட்பில் இருக்கும் உறுதியே வேகமாக இருக்கின்ரது. என்ன செய்ய? :huh:

Edited by வெண்ணிலா

நான் கருத்து எழுதுவதில் இருக்கும் வேகத்தை விட என் நட்பில் இருக்கும் உறுதியே வேகமாக இருக்கின்ரது. என்ன செய்ய? :huh:

அற்புதம் தனித்தே நின்று வாதிட்டு சாதித்த என் சகோதரி உங்கள் துணிவு

எல்லா பெண்ணிடமும் வரவேண்டும்

உங்கள் நட்பும் அழகு

உங்கள் தன்நம்பிக்கையும் அழகு

வாழ்ந்துக்கள் எனியாவது எம்மிடம் உள்ள தாழ்வுமனப்பான்மை

மறையட்டும்

Edited by கஜந்தி

  • கருத்துக்கள உறவுகள்

பாலகுமாரனின் புத்தகம் ஒன்றில் பார்த்தது...

"ஒரு ஆணும் பெண்ணும் நட்போடு பழகுவது சமூகத்தில் கொஞ்சம் கொஞ்சமாய் அங்கீகரிக்கப்பட்டுக் கொண்டிருந்தாலும் அவர்களை ஒரு வித்தியாசமான் பார்வையில் கறை படிந்த பார்வையில்தான் சமூகம் பார்க்கின்றது. அந்த இருவரையும் தவறாய்த்தான் எடை போடுகின்றது.ஆனால் இதில் இன்னொன்று; வயது வந்த ஒரு ஆணும் பெண்ணும் பேசிப் பழகிக் கொண்டிருக்கும் வேளையில் பெண் மனது எப்படியோ, ஆனால் ஆணின் மனதில் ஏதாவது ஒரு மூலையில் கண நேரமாவது சபல எண்ணமோ, காம எண்ணமோ வந்து நிற்கும். அதட்டினால் மின்னலாய் மறையும். சகோதர பாசத்தோடு பழகினால் கூட இந்த எண்ணம் எட்டிப் பார்த்து மறைகின்றது. இது சராசரி மனிதர் எல்லோருக்கும் பொதுவானது. நல்ல மனதுடையவன் தோன்றிய எண்ணத்தை அடக்கி மிரட்ட மறையும். அசிங்க எண்ணமுள்ளவனோ அதனை ஏற்று ஆராதித்து கற்பனையிலேயே இரசிக்கவும் செய்கின்றான்"

அட இந்த பிரச்சினை இன்னும் முடியவில்லையா பாவம் நிலா அக்கா எழுதி எழுதியே தெய்ந்து போய் இருப்பா...................எனி எப்ப முழு பெளர்ணமியா வருவாவோ தெறியவில்லை............அட அட நட்பை பற்றி இங்கே உள்ளவர்கள் வைத்திருக்கும் கருத்தை பார்க்க என்ன தான் சொல்வது என்று தெறியவில்லை.........உங்களுக்கு சொல்வேன் என்னவென்றா நட்பையும் உங்களின் குடும்ப உறுப்பினர் அம்மா,அக்காவை போல் நேசித்தீங்கள் என்றா இப்படியான விவரீத சிந்தனைகள் எல்லாம் தோன்றாது.........அம்மாவின் தோளிளே அல்லது தங்கையின் தோளிள் சாயவ்து போல் தான் இருக்கும்..........பிறகு வந்து கேட்கிறதில்லை உங்க ஆளை சாய விடுவீங்களா என்று நிச்சயமா அது சிறந்த நட்பா இருந்தா...........நம்மன்ட விடை யேஸ் தான்....... :D .

சா பேபி வந்து ஒவரா கதைத்து போட்டேன்..........இப்ப நிலா அக்காவிட்ட ஏச்சு விழ போகுது அதுக்குமுன் நான் எஸ்கேப்.......... :D

வரட்டா........ :P

  • தொடங்கியவர்
பாலகுமாரனின் புத்தகம் ஒன்றில் பார்த்தது..."ஒரு ஆணும் பெண்ணும் நட்போடு பழகுவது சமூகத்தில் கொஞ்சம் கொஞ்சமாய் அங்கீகரிக்கப்பட்டுக் கொண்டிருந்தாலும் அவர்களை ஒரு வித்தியாசமான் பார்வையில் கறை படிந்த பார்வையில்தான் சமூகம் பார்க்கின்றது. அந்த இருவரையும் தவறாய்த்தான் எடை போடுகின்றது.ஆனால் இதில் இன்னொன்று; வயது வந்த ஒரு ஆணும் பெண்ணும் பேசிப் பழகிக் கொண்டிருக்கும் வேளையில் பெண் மனது எப்படியோ, ஆனால் ஆணின் மனதில் ஏதாவது ஒரு மூலையில் கண நேரமாவது சபல எண்ணமோ, காம எண்ணமோ வந்து நிற்கும். அதட்டினால் மின்னலாய் மறையும். சகோதர பாசத்தோடு பழகினால் கூட இந்த எண்ணம் எட்டிப் பார்த்து மறைகின்றது. இது சராசரி மனிதர் எல்லோருக்கும் பொதுவானது. நல்ல மனதுடையவன் தோன்றிய எண்ணத்தை அடக்கி மிரட்ட மறையும். அசிங்க எண்ணமுள்ளவனோ அதனை ஏற்று ஆராதித்து கற்பனையிலேயே இரசிக்கவும் செய்கின்றான்"
சமூகத்துக்கு பயந்து வாழணும் என்றால் பெண்கள் எல்லோரும் அடிமைத்தனமாக அடுப்பங்கரையில் முடங்கிக்கிடக்கும் நிலை தான்.ஆனால் இப்போதெல்லாம் பெண்கள் ஆணுக்கு சமமாக இருக்கின்றாள். பெண்கள் விஞ்ஞானி விமான ஓட்டுநர் நீச்சலில்............................... இப்படி பலதுறைகளிலும் சாதித்திருக்கின்றார்கள். இவர்கள் இப்படி வருவதற்கு முதல் ஐயோ சமுதாயம் ஏதும் நினைக்குமே என்று பயந்தால் எப்படி இபப்டி ஆக முடியும்?ஆனால் தமிழ் சமுதாயத்தினிடையே பலவாறான கேலிப்பேச்சுக்களுக்கு பஞ்சமேயில்லை. அதனால் தான் பொண்ணுக எதிலும் முழுதாக வெற்றிகாண முடியாமலுள்ளது. ஆண் பெண் நட்பில் ஆணுக்கு ஏதோ ஒரு மூலையில் காமம் இருக்குமாம். அதட்டினால் மின்னலாய் மறையுமாம். அப்போ பெண்ணுக்குள் தோழமையில் காமம் இருக்காது. சோ கியூட். சிலவேளைகளில் நம்ம ஆண்கள் வாதாடுவது போல நட்புக்குள் ஆணுக்கு காமம் இருப்பினும் அது அதட்ட மறைந்திடுமாயின் போகபோக காமமே நட்புக்குள் இல்லாமல் போக வாய்ப்பு இருக்கலாம் தானே. ஆனாலும் ஒரு ஆண் நண்பன் (நட்பை நன்கு உணர்ந்தவன்) தன் தோழி முன் தூய நட்போடு பழகுவானாயின் அவனிடம் காமம் இருக்க வாய்ப்பிருக்காது என்பதில் நான் திடமாக இருக்கின்றேன். :P
அற்புதம் தனித்தே நின்று வாதிட்டு சாதித்த என் சகோதரி உங்கள் துணிவுஎல்லா பெண்ணிடமும் வரவேண்டும்உங்கள் நட்பும் அழகுஉங்கள் தன்நம்பிக்கையும் அழகுவாழ்ந்துக்கள் எனியாவது எம்மிடம் உள்ள தாழ்வுமனப்பான்மைமறையட்டும்
தனித்து நின்று வாதிடுவது அதிசயம் இல்லை. ஆனால் நான் என்கருத்துக்களை தான் சொன்னேன். என் தனி வாதாட்டமும் துணிச்சலும் என்றைக்கும் இருக்கும். அதே துணிவும் தாழ்வுமனப்பான்மையற்ற சிந்தனையும் எல்லா பெண்களிடமும் இருக்கணும் என நானும் ஆண்டவனை பிரார்த்திக்கின்றேன். :angry: :P
அட இந்த பிரச்சினை இன்னும் முடியவில்லையா பாவம் நிலா அக்கா எழுதி எழுதியே தெய்ந்து போய் இருப்பா...................எனி எப்ப முழு பெளர்ணமியா வருவாவோ தெறியவில்லை............
உண்மையிலேயே கை நோவுதான். இருப்பினும் என்ன செய்ய முடியும்? ஆனால் நான் தேயவோ ஓயவோ போவதில்லை நட்புக்குள். :P
  • கருத்துக்கள உறவுகள்

ஆண் பெண் நட்பில் ஆணுக்கு ஏதோ ஒரு மூலையில் காமம் இருக்குமாம். அதட்டினால் மின்னலாய் மறையுமாம். அப்போ பெண்ணுக்குள் தோழமையில் காமம் இருக்காது. சோ கியூட். சிலவேளைகளில் நம்ம ஆண்கள் வாதாடுவது போல நட்புக்குள் ஆணுக்கு காமம் இருப்பினும் அது அதட்ட மறைந்திடுமாயின் போகபோக காமமே நட்புக்குள் இல்லாமல் போக வாய்ப்பு இருக்கலாம் தானே. ஆனாலும் ஒரு ஆண் நண்பன் (நட்பை நன்கு உணர்ந்தவன்) தன் தோழி முன் தூய நட்போடு பழகுவானாயின் அவனிடம் காமம் இருக்க வாய்ப்பிருக்காது என்பதில் நான் திடமாக இருக்கின்றேன்.

பாலகுமாரன் 15 வருடங்களுக்கு முன்னர் எழுதியது. சிலவேளை தற்போது ஆண், பெண் நட்புக்குள் காமம் ஒழிந்து போயிருக்க வாய்ப்புண்டு.. ஆண்கள் மனம் திறந்து கூறினால் உண்மை தெரிய வரும்..

தூய்மையான நட்புடன் பழகும் வாய்ப்பு இதுவரை ஆண்களுடனேயே நிற்பதால் நமது பார்வை எப்படியென்று சொல்லத் தெரியவில்லை. :D

  • தொடங்கியவர்

பாலகுமாரன் 15 வருடங்களுக்கு முன்னர் எழுதியது. சிலவேளை தற்போது ஆண், பெண் நட்புக்குள் காமம் ஒழிந்து போயிருக்க வாய்ப்புண்டு.. ஆண்கள் மனம் திறந்து கூறினால் உண்மை தெரிய வரும்..

தூய்மையான நட்புடன் பழகும் வாய்ப்பு இதுவரை ஆண்களுடனேயே நிற்பதால் நமது பார்வை எப்படியென்று சொல்லத் தெரியவில்லை. :D

இங்கு எங்களில் பலர் நாம் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று அடம்பிக்கின்றோம். என்ன விளக்கம் கொடுத்தாலும்ஏற்றுக்கொள்ளக் கூடிய நிலையில் நாம் இல்லை. நட்பு நட்புத் தான், இதில் இருந்து என்ன புரிகிறது என்றால் எங்களில் பலருக்கு தன்னம்பிக்கை குறைவு. அதை ஏற்படுத்துவதிற்கு முயற்சி செய்ய வேண்டும்.

:D:D:D:D

அம்பியோடு நட்பாக பழகலாம். ஆனால் அம்பிக்குள் ரெமோ இருப்பான். இது வெளிப்படாதவரை பிரச்சனை இல்லை.

  • தொடங்கியவர்

வானுக்கு நிலத்தோடு

நிலத்துக்கு நீரோடு

நீருக்கு அலையோடு

அலைகளோ மனதோடு

நட்பு நட்பு ஆஆஆஆ நட்பு நட்பு

ஓஓஓஓ நட்பு நட்பு

ஆஆஆஆ நட்பு நட்பு

வெவ்வேறு இடத்தில் பிறந்தும்

வெவ்வேறு இடத்தில் வாழ்ந்தும்

வெவ்வேறு இடத்தில் பிறந்தும்

வெவ்வேறு இடத்தில் வாழ்ந்தும்

எப்போதும் பிரிந்திடாதது அது

ஹோய் ஹோய் ஹொய்..

நட்பு நட்பு ஆஆஆஆ நட்பு நட்பு

ஓஓஓஓ நட்பு நட்பு

ஆஆஆஆ நட்பு நட்பு

இடையினில் தடைகள் இல்லை

இதற்கென இல்லை எல்லை

இடையினில் தடைகள் இல்லை

இதற்கென இல்லை எல்லை

முடிவினில் முறிந்திடாதது நட்பு

முடிவினில் முறிந்திடாதது நட்பு நட்பு

கோவங்கள் வந்த போதிலும்

அது சிறு ஊடலாகிடும்

கோவங்கள் வந்த போதிலும்

அது சிறு ஊடலாகிடும்

ஆவலை அடக்கிடாதது நட்பு நட்பு

வானுக்கு நிலத்தோடு

நிலத்துக்கு நீறோடு

நீருக்கு அலையோடு

அலைகளோ மனதோடு

நட்பு நட்பு ஆஆஆஆ நட்பு நட்பு

ஓஓஓஓ நட்பு நட்பு

ஆஆஆஆ நட்பு நட்பு

தனித்தனி ஆன போதிலும்

வழித்துணை இதயம் தானே

தனித்தனி ஆன போதிலும்

வழித்துணை இதயம் தானே

இனிப்புடன் என்றும் வாழ்வது நட்பு

இனிப்புடன் என்றும் வாழ்வது நட்பு நட்பு

ஒரு நிலை உயர்ந்த போதும்

மறு நிலை தாழ்ந்த போதும்

ஒரு நிலை உயர்ந்த போதும்

மறு நிலை தாழ்ந்த போதும்

அரவணைத்தே போவது நட்பு நட்பு

நட்பில்லா மனிதனென்றால்

அவனொரு மனிதன் இல்லை

நட்புக்கே உயிரை தந்தால்

அவனைப்போல புனிதனில்லை

நட்பு நட்பு ஆஆஆஆ நட்பு நட்பு

ஓஓஓஓ நட்பு நட்பு

ஆஆஆஆ நட்பு நட்பு

நட்பு நட்பு ஆஆஆஆநட்பு நட்பு

ஓஓஓஓ நட்பு நட்பு

ஆஆஆஆ நட்பு நட்பு

படம் (உன்னைச் சரணடைந்தேன்)

http://www.raaga.com/channels/tamil/movie/T0001026.html

Edited by வெண்ணிலா

  • கருத்துக்கள உறவுகள்

QUOTE(kirubans @ Jun 30 2007, 10:47 PM)

பாலகுமாரன் 15 வருடங்களுக்கு முன்னர் எழுதியது. சிலவேளை தற்போது ஆண், பெண் நட்புக்குள் காமம் ஒழிந்து போயிருக்க வாய்ப்புண்டு.. ஆண்கள் மனம் திறந்து கூறினால் உண்மை தெரிய வரும்..

தூய்மையான நட்புடன் பழகும் வாய்ப்பு இதுவரை ஆண்களுடனேயே நிற்பதால் நமது பார்வை எப்படியென்று சொல்லத் தெரியவில்லை.

QUOTE(Valvai Mainthan @ Jun 29 2007, 11:59 PM)

இங்கு எங்களில் பலர் நாம் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று அடம்பிக்கின்றோம். என்ன விளக்கம் கொடுத்தாலும்ஏற்றுக்கொள்ளக் கூடிய நிலையில் நாம் இல்லை. நட்பு நட்புத் தான், இதில் இருந்து என்ன புரிகிறது என்றால் எங்களில் பலருக்கு தன்னம்பிக்கை குறைவு. அதை ஏற்படுத்துவதிற்கு முயற்சி செய்ய வேண்டும்.

மாத்ருபூதம் மண்டையைப் போட்டாப் பிறகு பலரும் மனநல மருத்துவர்களாக வந்து விட்டார்கள் போலுள்ளது.. :D B)

  • கருத்துக்கள உறவுகள்

அம்பியோடு நட்பாக பழகலாம். ஆனால் அம்பிக்குள் ரெமோ இருப்பான். இது வெளிப்படாதவரை பிரச்சனை இல்லை.

எல்லோருக்குள்ளும் ஒரு நல்லவனும் ஒரு ஊத்தையனும் இருப்பதாக எஸ்.பொ. எங்கேயோ எழுதியுள்ளார்.. இதனை உண்மையென்றே நம்புகின்றேன். சிலவேளை நட்பு என்பது ஒரு பாதியுடன் மட்டுமே நிற்கின்றது போலுள்ளது.. இல்லாவிடில் எந்தவொரு நட்பும் முறியச் சாத்தியமில்லை. அதாவது முறியாத நட்பைக் கொண்டவர்கள் ஈருடலும் ஓருயிருமாக வாழ்வார்கள் எனக் கொள்ளலாம்.. :D

Edited by kirubans

நட்பு ஏதோ ஒரு இடத்தில் முறிந்தால்... அதாவது உண்மையான நட்பு.. அதை மீண்டும் ஒட்டவே முடியாதுங்க..

  • தொடங்கியவர்

:P :P :P :P :P

  • கருத்துக்கள உறவுகள்

அசட்டுத்தனமான கருத்தியல்களை விட்டுவிட்டு வாழ்வைத் தங்களுக்குப் பிடித்தபடி கொண்டு நடாத்த வேண்டும் என்ற தொனியில் ஒரு கள உறவு இன்னோர் இடத்தில் எழுதியுள்ளார்..

எனினும் ஒரு விடயத்தை இங்கு தெளிவுபடுத்த வேண்டும்.. சிறு வயதில் மிக நட்பாக இருந்தவர்கள் காலவோட்டத்தில் முரணான சிந்தனையோட்டத்துடன் வளரலாம்.. அப்படியானவர்கள் நட்பாக இருப்பார்களா, பகையாக இருப்பார்களா என்பது அவர் அவர்களையே பொறுத்தது.. எது தூய்மை, எது அசுத்தம் என்பதையெல்லாம் இலகுவாகத் தீர்மானிக்க முடியாது. அது அவரவர் பார்வையில் தங்கியுள்ளது.. ஆண்-பெண் நட்பும் இதற்குள் அடக்கம்!

தோழனைத் தோளில் சாயச்சொல்வது எந்த நாட்டுக் கலாசாரம் என்பது எனக்குப் புரியவில்லை

எங்கள் தோழர்மார் தோளில் சாய சொன்னா இருவரும் கட்டிலில் சய்வோமா என்று திருப்பி கேட்பார்கள் இது தெரியாத அப்பாவி பெண்ணாக இருக்கிறாரே வெண்ணிலா/ :P

  • தொடங்கியவர்

கட்டிலில் சாயலாமா என்று கேட்கிறவங்களை எல்லாம் நண்பனென சொல்லிக்க வெட்கமாயில்லையா? :angry: :angry: :angry:

Edited by வெண்ணிலா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நட்ப்பை பத்தி பெரிய விவாதமே நடந்து இருக்கு. இண்ணைக்குதான் எல்லாம் இருந்து வாசிக்க முடிஞ்சுது.

வெண்ணிலா கவிதை நல்லா இருக்கு. :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.