Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உண்மையை பேசுங்கள் சீமான்!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மையை பேசுங்கள் சீமான்! - அனந்தி சசிதரன், மேனாள் அமைச்சர் நேர்காணல்

  • கருத்துக்கள உறவுகள்

சோறும், சம்பலும் எண்டால் என்ன என்று அவருக்கு விளங்குமா? 😁

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அம்மாவுக்கு விபூதி அடிச்சு அர்ச்சனை வைக்கப் போறானுகள், அத நினைக்கவே பயமா இருக்கு!👀

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

உண்மையை பேசுங்கள் சீமான்! - அனந்தி சசிதரன், மேனாள் அமைச்சர் நேர்காணல்

ஆனந்தி அம்மாவின் கதை ஒரு நீண்ட கதை.

உருவை மாற்றிய ஒரு வீரத் தமிழ் மங்கை.

பேட்டி எடுப்பவர் ஏதோ ஒருவகையில் பழைய, புலிகளின் நட்பு வட்டாரங்கள் கொடுத்த, தற்போதைய சீமான் எதிர்ப்பு விசுவாசிகள் என்னவோ எல்லாம் செய்யத் துடிக்கிறார்கள்.

இல்லை இதையும் கடந்து போவோம்.

இன்னும் சில விடயங்களை உங்களோடு உடைத்து கதைக்க முடியும் ஆனால் எங்கள் இருவரின் நலன் கருதி விட்டுவிடுகிறேன்.
 
  • கருத்துக்கள உறவுகள்
A YOUTUBE COMMENTS
அந்தம்மா இழந்து போன கணவர் குறித்து பேசுகிறார், இவரு சீமான் குறித்து ஏதாவது புடுங்கலாமா என்று கேட்க்கிறாரு.. சம்பலும், சோறும் என்பது என்ன என்று இவருக்கு புரியாதே.
 
முதலில் ஒரு விசயத்தை புரிந்து கொள்ளுங்கள். இவர் புலி உறுப்பினர் அல்ல. ஒரு அரச வேலை செய்தவர். சிங்கள அரசு வேலையாளர். இவருக்கும், புலிகளுக்கும் எதுவித தொடர்பும் இருக்க வில்லை. இருந்திருந்தால், வேலையும் பறி போய், கைதாகி இருப்பார். ஆகவே இவர் சொல்வது புலிகளின் உள் விடயம் புரியாமல் பேசுவது. அதுதவிர, புலிகள் இவருக்கு எதுவித விடயமும் தெரியக்கூடாது என்று சொல்லியே வைத்திருப்பார்கள்.
 
இவர், எழிலன் மனைவி என்பது வெளியுலகத்துக்கு, 2009 க்கு பின்னரே, அதுவும் இவர், வேலை இழந்த பின்னர் தான் தெரியும். அதனை சொல்லியே, அனுதாபம் வாங்கி, வட மாகாண உறுப்பினர் ஆனார். ஆனாலும் பின்னர் மக்கள் செல்வாக்கு இல்லாமல் போனது, காரணம், புரியாமல் அலம்பறை பண்ணுவது.
 
அனைத்துக்கும் மேலே, பாரதிராஜா, மகேந்திரன் போல சீமான் விசா பெற சிங்கள அரசுக்கு சொன்னதையே, இவரும் சொல்கிறார். சாதாரணமாக டைரக்டர் ஒருவர் வந்திருக்கிறார் என்று கேள்விப்பட்டேன் என்கிறார்.
 
சூசை எதுக்கு கடைசியில் அவ்வாறு பேசினார்? என்று ஏன் கேட்கவில்லை. சரி, தமிழகத்தில், தெலுங்கர், தமிழர் என்று பாராமல் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று சொல்லும் அவரிடம் சிங்களவர் ஆட் சியின் கீழ் சிங்களவருடன் சேர்ந்து போகலாமே என்று அந்தம்மாவை ஒரு கேள்வி கேட்டிருக்கலாமே.
 
இப்போதும் கூட, சீமானுக்கு ஆதரவாக பேசினால், கைதாவார் என்பதே நிதர்சனம் என்பது, கேள்வி கேட்பவருக்கு புரியுமா?
Show less
 
Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

YOUTUBE COMMENTS,

திருமதி ஆனந்தி சசிதரன் அவர்களே,

நீங்கள் உண்மைக்கு புறம்பான அல்லது நீங்களாக ஊகித்து சில கருத்துக்களை பதி விடுகிறீர்கள். உங்களிடம் ஒரு கேள்வி நீங்கள் எந்த அளவுக்கு உங்களுக்கும் தலைமைக்கும் இடையே உறவு இருந்தது என்பதனையும், தலைமைக்கும் அடுத்து இருக்கின்ற, உப கட்டமைப்புகளும் இருந்த இடைவெளிகளும் தனித்துவமும் ரகசியமும் உங்களுக்கு தெரியாத ஒன்றல்ல.

நீங்களாகவே குறிப்பிட்டதுபோல,

எல்லோரும் மாய்ந்து விடவில்லை தகவல்கள், பரிமாற படாமல் இருந்ததுமில்லை.

உங்களின் கரிசனையும், தமிழர்கள் மீதான உங்களின் அரசியல் நிலைப்பாடும் எங்களுக்கு நன்றாகவே தெரியும். நீங்கள் அதனை ஒட்டிய பயணங்களை தொடருங்கள். உங்களை நாங்கள் மிகுந்த மரியாதையோடு பார்க்கின்றோம்.

உங்களைப் போன்று சக போராளிகளின் உறவுகள் குடும்பங்கள் சீரழிந்து நிற்கதியா உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் வாழ்கிறார்கள்.

மற்றும் ஒன்றை மட்டும் நினைவுபடுத்திக் கொள்ளுங்கள் உங்களோடு இருந்து போராளிகள் மரணித்தும் அவர்கள் தியாகங்கள் இல்லாதொழிக்கப்பட்டு விட்டது.

சமநேரத்தில் உங்களுடைய இருந்தவர்கள் அரசின் புலனாய்வாளர்களால் வழிநடத்தப்பட்டு உங்களுக்கு தெரிந்ததை போல் வவுனியாவில் அமைக்கப்பட்ட தடுப்பு முகாமில், நீங்கள் பெண் என்ற வகையில் அதனை ஒட்டிய சில தகவல்களை கூறுகின்றேன் சரணடைந்த பெண் போராளிகள் அந்த உருமாறிய விடுதலைப் புலி உறுப்பினர்களினால் பாலியல் இச்சைக்காக கொண்டுவரப்பட்டு புளங்காகிதம் அடைந்தார்கள் என்பது உங்களுக்கு தெரியும்.

இன்னும் இரணைமடு அருகிலுள்ள இரகசிய முகாம்களில் அவர்கள் செய்ய வேண்டியவற்றை செய்து கொண்டே இருக்கிறார்கள்.
கடந்த பத்து வருடமாக முள்ளிவாய்க்காலில் கட்டமைப்பு முற்றாக சிதைவடைந்த போது எல்லாமே மாறிப் போய் மாறிப்போய்விட்டது.

புலிகளின் ஆயுதப்போராட்ட மௌனிப்பின் பின்,

வெளிநாடுகளில் இருந்து தலைமை உத்தரவு பெற்ற அந்த நால்வரில்,
 
சரண் அடைந்து வருகின்றவர்கள் ஓடு, அடுத்து நடக்கப் போகின்ற வெளிநாட்டு சம்பந்தமாக ஒழுங்குபடுத்தப்பட்ட நிகழ்ச்சிகளை நடத்த காத்திருந்தவர்கள் ஆனால் நடந்ததோ…….

ஒருவர் இப்போது உங்களுடைய இலங்கை அரசின் அதி உன்னதமான பாதுகாப்பு செல்வாக்கு உங்களோடு உறவு இருக்கின்ற ஐயா கேபி அவர்கள். அவரே அப்போது எப்போதோ உருமாறிப் போனது தெரிந்தும் ஒரு நம்பிக்கையில் கொண்டு கொண்டுவரப்பட்டவர்.
இன்னொருவர் மலேசியாவில் அந்த பெருந்தொகை பணத்தோடு கொடுத்து வைத்த அந்த மலேசிய பெண்ணோடு தமிழர் விடுதலை சம்பந்தமான மலேசிய அரசுக்கு நெருக்கமாக இருந்து காட்டிக்கொடுத்தது சுகபோக வாழ்க்கை.

அடுத்தவர் ஐரோப்பிய பெண்ணோடு தான் பதுக்கிய பெரும் பணத்துடன் செல்வந்தனாக ஒரு ஐரோப்பிய நாட்டில் சுகபோக வாழ்க்கை.

அந்த எஞ்சிய ஒருவர் ஒன்றுமில்லை பலமில்லாதது தற்போது புனர்வாழ்வு அளிக்கப்பட்ட போராளிகள் விதவைகள் மற்றும் உறவுகளை நினைத்து நோய்வாய் பட்டது மட்டும் மிச்சம். வெளிநாடு ஒன்றில் காலத்தை கடத்துகின்றார்.

நீங்கள் கூட புதுக்குடியிருப்பு ராணுவ முகாமை அகற்றுவது சம்பந்தமான திட்டமிடலில் அல்லது உந்துதலில் நீங்கள் அரசுக்கு சார்பான போக்கையே கொண்டிருக்கிறீர்கள். ஏன் நீங்கள் தடுத்து கூட இருந்தீர்கள். நீங்கள் கூட உருமாறி பலகாலம் ஆயிற்று.

நீங்கள் போட்டி கொடுக்கின்ற இந்த நபர் கூட ஏதோ தானும் இந்த தமிழ்நாட்டு அரசியலில், தமிழர்களின் அரசியலில் ஒரு மாற்றத்தை உண்டு பண்ணிவிடலாம்  என்று எண்ணி உங்களின் சுய ரூபமும் அவர் உங்களை அடைவதற்கு உதவி செய்த நீங்கள் குறிப்பிட்ட அந்த நபர்களும் ஏதோ, எல்லாம் முடிந்து விட்டதாக எண்ணுகிறார்கள்.

நீங்களும் உங்களைச் சார்ந்தவர்களும் மேலும் மேலும் சீமானையும் அவரைப்போன்ற அவரைப்போன்ற ஏனையோர் ஐயம் தயவுசெய்து விமர்சிப்பதை விட்டுவிடுங்கள்.
நீங்கள் திரும்ப திரும்ப உங்களின் விமர்சனங்களை பார்க்கின்ற பொழுது உங்களை அறியாமலேயே நீங்கள் யார் என்பதை, உங்கள் நோக்கம் என்ன என்பது தெரியவரும். அது உங்களின் வருங்கால அரசியலுக்கு நல்லதல்ல ஏற்கனவே நீங்கள் ஒரு ஒதுங்கிய நிலையில் ஆகிக் கொண்டிருக்கிறீர்கள்.

இன்னும் சில விடயங்களை உங்களோடு உடைத்து கதைக்க முடியும் ஆனால் எங்கள் இருவரின் நலன் கருதி விட்டுவிடுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, MullaiNilavan said:

இன்னும் சில விடயங்களை உங்களோடு உடைத்து கதைக்க முடியும் ஆனால் எங்கள் இருவரின் நலன் கருதி விட்டுவிடுகிறேன்.
 
உண்மைகளைச் சொல்லுங்கள். ஆனால் விசுவாசத்திற்காக சேறு பூசாமல் சொல்லுங்கள்.

அனந்தி அவர்கள் பேட்டியில் நேர்காணல் செய்பவரின் உள்நோக்கங்களை (இருந்தமாதிரி தெரிந்தது) தவிர்த்து நேர்மையாகத்தான் பதில் சொல்லியுள்ளார். தனக்குத் தெரியாததை தெரிந்தமாதிரிச் சொல்லவில்லை.

8 hours ago, Nathamuni said:

முதலில் ஒரு விசயத்தை புரிந்து கொள்ளுங்கள். இவர் புலி உறுப்பினர் அல்ல. ஒரு அரச வேலை செய்தவர். சிங்கள அரசு வேலையாளர். இவருக்கும், புலிகளுக்கும் எதுவித தொடர்பும் இருக்க வில்லை. இருந்திருந்தால், வேலையும் பறி போய், கைதாகி இருப்பார். ஆகவே இவர் சொல்வது புலிகளின் உள் விடயம் புரியாமல் பேசுவது. அதுதவிர, புலிகள் இவருக்கு எதுவித விடயமும் தெரியக்கூடாது என்று சொல்லியே வைத்திருப்பார்கள்.

தலைவர் பிரபாகரனின் மனைவி மதிவதனி அக்காவும் புலி உறுப்பினர் அல்ல என்பதையும் கவனிக்கவேண்டும் பாஸ்.

அனந்தி அவர்கள் அரச வேலையை செய்தார் என்பதற்காக எழிலன் அவருடன் ஏதும் பேசாமல் இருந்திருப்பாரா? ஒன்றும் தெரியாமல் இருந்திருப்பாரா?

அவர் புலிகளின் உள்வீட்டு, இராணுவ அரசியல் விவகாரங்கள் பற்றி ஏதாவது பேட்டியில் சொல்லியிருக்கிறாரா? இல்லையே..

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, MullaiNilavan said:

வெளிநாடுகளில் இருந்து தலைமை உத்தரவு பெற்ற அந்த நால்வரில்,
 
சரண் அடைந்து வருகின்றவர்கள் ஓடு, அடுத்து நடக்கப் போகின்ற வெளிநாட்டு சம்பந்தமாக ஒழுங்குபடுத்தப்பட்ட நிகழ்ச்சிகளை நடத்த காத்திருந்தவர்கள் ஆனால் நடந்ததோ…….

ஒருவர் இப்போது உங்களுடைய இலங்கை அரசின் அதி உன்னதமான பாதுகாப்பு செல்வாக்கு உங்களோடு உறவு இருக்கின்ற ஐயா கேபி அவர்கள். அவரே அப்போது எப்போதோ உருமாறிப் போனது தெரிந்தும் ஒரு நம்பிக்கையில் கொண்டு கொண்டுவரப்பட்டவர்.
இன்னொருவர் மலேசியாவில் அந்த பெருந்தொகை பணத்தோடு கொடுத்து வைத்த அந்த மலேசிய பெண்ணோடு தமிழர் விடுதலை சம்பந்தமான மலேசிய அரசுக்கு நெருக்கமாக இருந்து காட்டிக்கொடுத்தது சுகபோக வாழ்க்கை.

அடுத்தவர் ஐரோப்பிய பெண்ணோடு தான் பதுக்கிய பெரும் பணத்துடன் செல்வந்தனாக ஒரு ஐரோப்பிய நாட்டில் சுகபோக வாழ்க்கை.

அந்த எஞ்சிய ஒருவர் ஒன்றுமில்லை பலமில்லாதது தற்போது புனர்வாழ்வு அளிக்கப்பட்ட போராளிகள் விதவைகள் மற்றும் உறவுகளை நினைத்து நோய்வாய் பட்டது மட்டும் மிச்சம். வெளிநாடு ஒன்றில் காலத்தை கடத்துகின்றார்.

போராட்டம் எவ்வாறு காட்டிக்கொடுக்கப்பட்டது, எதனால் புலிகள் இயக்கம் அழிந்தது, பல பிரிவுகளாக புலம்பெயர் நாடுகளில் பங்குபிரித்தது என்பதெல்லாம் தெரிந்தவராக இருக்கின்றீர்கள் என நினைக்கின்றேன். கருணா பிரிந்ததனால்தான், அவரின் காட்டிக்கொடுப்பினால்தான் புலிகளே அழிந்தார்கள் என்ற கருத்துருவாக்கத்திற்கு உங்கள் கருத்து முரணாக இருக்கின்றதே!

7 hours ago, MullaiNilavan said:

நீங்களும் உங்களைச் சார்ந்தவர்களும் மேலும் மேலும் சீமானையும் அவரைப்போன்ற அவரைப்போன்ற ஏனையோர் ஐயம் தயவுசெய்து விமர்சிப்பதை விட்டுவிடுங்கள்.
நீங்கள் திரும்ப திரும்ப உங்களின் விமர்சனங்களை பார்க்கின்ற பொழுது உங்களை அறியாமலேயே நீங்கள் யார் என்பதை, உங்கள் நோக்கம் என்ன என்பது தெரியவரும். அது உங்களின் வருங்கால அரசியலுக்கு நல்லதல்ல ஏற்கனவே நீங்கள் ஒரு ஒதுங்கிய நிலையில் ஆகிக் கொண்டிருக்கிறீர்கள்

சீமானை ஒன்றும் அனந்தி அவர்கள் விமர்சிக்கவில்லையே. 2009 போர் முடிந்தபின்னர், தமிழ்நாட்டில் புலிகளின் கொடியையும், தலைவர் பிரபாகரனின் படத்தையும் நாம் தமிழர் கட்சிதான் பரவலாக்கினார்கள் என்று சொன்னாரே.

சீமான் புலிகளையும் தலைவர் பிரபாகரனின் படத்தையும் தனது சுயநல அரசியலுக்கு பாவிக்கின்றார் என்று கருத்துப்பட அனந்தி அவர்கள் சொல்லவேயில்லையே!

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

தலைவர் பிரபாகரனின் மனைவி மதிவதனி அக்காவும் புலி உறுப்பினர் அல்ல என்பதையும் கவனிக்கவேண்டும் பாஸ்.

அனந்தி அவர்கள் அரச வேலையை செய்தார் என்பதற்காக எழிலன் அவருடன் ஏதும் பேசாமல் இருந்திருப்பாரா? ஒன்றும் தெரியாமல் இருந்திருப்பாரா?

அவர் புலிகளின் உள்வீட்டு, இராணுவ அரசியல் விவகாரங்கள் பற்றி ஏதாவது பேட்டியில் சொல்லியிருக்கிறாரா? இல்லையே..

அய்யா, அது எனது கமெண்ட் இல்லை. உங்களை மாதிரியே, வெட்டி ஒட்டினேன்.... ஹி... ஹீ... பழக்கி விட்டீர்கள்... தவிர்க்க முனைகிறேன். 

மேலும், உந்த அனந்திகாகவெல்லாம் நாம இறங்கி விவாதிக்க, 'ஒர்த்' இல்லையே. விடுவோம். அந்தப்பக்கம் எங்கையோ, கட்டுமர காதலில்... எழுதி இருக்கிறியள்... அங்கை வாருங்கோவன்... கதைப்போம்... 

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, குமாரசாமி said:

உண்மையை பேசுங்கள் சீமான்! - அனந்தி சசிதரன், மேனாள் அமைச்சர் நேர்காணல்

விடுதலைப்புலிகள் இருந்தப்போ.. இந்த அனந்தி அக்காவை யாருக்காவது தெரியுமா..???!

சீமான் செய்வது சொல்வது எல்லாம் சரியென்றல்ல. ஆனால்.. சீமான் தமிழகத்தில் முன்னிலைப்படுத்தும்.. தமிழ் தேசியம் சார்ந்த.. அரசியல் என்பது தவிர்க்க முடியாதது.. தமிழ் நாட்டிலும்.. தமிழ் நாட்டுக்கு வெளியிலும்.. தமிழர்களின் இருப்பை காக்க.

இன்று தேசிய தலைவரின் பெயரும்.. கொள்கையும்.. தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் தெரிகிறது என்றால்.. அதற்கு சீமானின் பங்களிப்பும் அளப்பரியது. அது தொடரனும்.

பெண்கள் விவகார மந்திரியாக இருந்த அனந்தி அக்காவால்.. முன்னாள் போராளிப் பெண்களின் அடிப்படை வசதிகளைக் கூடப் பூர்த்தி செய்ய முடியவில்லையே..??!

மேலும் தேசிய தலைவரின் விருந்தோம்பல்.. பண்பை.. அனந்தி அக்கா கேள்விக்குட்படுத்த என்ன சான்றை சமர்ப்பிக்கிரார்..??!

தேசிய தலைவர் தான் உண்ணாவிட்டாலும்.. விருந்தினர்களுக்கு விருந்திட்டு மகிழ்ந்த ஒருவரே. இதை நாங்கள் சொல்லவில்லை.. பிபிசி ஆனந்தி அக்கா பதிவிட்டுச் சென்றிருக்கிறார்.  அதில் சீமான் சொல்வதில் பெரும் தவறிருக்க வாய்ப்பில்லை.

மேலும்.. எம்மவர்களே தேசிய தலைவரையும்.. புலிகளையும் திட்டாத திட்டா.. மற்றவர்கள் திட்டிவிடப் போகிறார்கள்..???!

சீமான் மறுத்த பின்னரும்.. குரலொலி வடிவ அவமதிப்புக்களை தூக்கிக் காவனுன்னு அவசியமில்லை. அதற்கான அவசியம் என்ன இப்போ..?!

மேலும்.. இந்த பேட்டியாளரின் நோக்கம்.. சீமான் பற்றி பேசுவதாக மட்டுமே இருக்க காண முடிகிறது. அந்த வகையில்.. இந்தப் பேட்டி பலத்த உள்நோக்கங்களைக் கொண்டிருக்க சந்தேகிக்கப்பட முடிகிறது. சீமானை விட்டு பேட்டியாளர் வெளிய போகவே இல்லை. பேச ஆயிரம் விடயங்கள் இருக்க..!!!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people and text that says 'கனிமொழி எங்களை அடிபணிய சொன்னாங்க விடுதலைப்புலி சசிதரன் மனைவியின் ஒப்புதல் வாக்குமுலம் GULLA BOYS CL இமயம் மவி அளந்தி சசிதான் CD 84 ΝΝΑΙ LU'CE ප என்ன கனி இதெல்லாம்!!'

கனிமொழி....  என்ன  இதெல்லாம். 🤣

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.