Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொரோனா: சமாளிக்கும் தமிழகம்... மருத்துவக் கட்டமைப்பில் `தமிழ்நாடு மாடல்’ - ஓர் அலசல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

இருக்கின்றது. காங்கிரஸ் எப்போதும் தமிழ்நாட்டில் அதிமுக, திமுக கூட்டில் சேர்ந்துதான் சட்டசபைக்கே தெரிவாகின்றார்கள். அவர்களுக்கு இருக்கும் குறுகிய வாக்குவங்கியின் அடிப்படையில்தான் “சீட்”டுக்கள் இந்த தேர்தலில் திமுகவால்

தமிழ்நாட்டில். காமாரஜர்...பக்த்தவத்தலம்(பெயர் பிழையாகயிருக்கலாம்) என இரு காங்கிரஸ் முதலமைச்சர் இருந்துள்ளார்கள் அவகளுடையாட்சி மிகச்சிறப்பாகவிருந்தது😎

  • Replies 130
  • Views 8.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, பெருமாள் said:

தன்னுடைய வாழ்நாள் முழுவதையும் சமூகத்தொண்டு செய்வதிலேயே அர்பணித்துக்கொண்ட காமராஜர், 1975 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி தன்னுடைய 72 வது வயதில் காலமானார். அதற்கு அடுத்த ஆண்டு, இந்திய அரசின் மிக உயரிய விருதான “பாரத ரத்னா”விருது மத்திய அரசால் அவருக்கு வழங்கப்பட்டது. சமூகத் தொண்டையே பெரிதாக நினைத்து வாழ்ந்த அவர், கடைசிவரை திருமணம் செய்துகொள்ளாமலே வாழ்ந்தார். ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தபொழுதும் இறுதிவரை வாடகை வீட்டிலேயே வாழ்ந்து இருந்தார். அவருக்காக அவர் சேர்த்து வைத்த சொத்து சில கதர் வேட்டிகள், சட்டைகள், புத்தகங்கள் மற்றும் 150 ரூபாய் மட்டுமே. இப்படிப்பட்ட உன்னதமான நேர்மையான இன்னொரு தலைவனைத் தமிழக வரலாறு மட்டுமல்ல, உலக வரலாறும் இனி சந்திக்குமோ என்பது சந்தேகமே?

காமராசர் நேர்மையானவர் எளிமையானவர். ஆனால் கடந்த 54 வருடங்கள் திமுக அதிமுக (ஊழல் செய்தாலும்) ஆட்சியில் தான் தமிழகம் முன்னேறி இருக்கிறது அதை தான் கட்டுரையும் தெரிவிக்கிறது. காமராசர் பற்றி நான் தெரிந்து கொண்டவை அவர் காங்கிரஸ் கட்சி, தீவிரமான இந்தியவாதி, அவர் அதிகாரத்தில் இருந்திருந்தால் தமிழ்நாட்டில் கட்டாய மொழியாக ஹிந்தி முன்பே வந்திருக்கும். அவரது + ஊழல் இல்லை, எளிமை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Quote

நான் தீம்கா ஆதரவாளர் இல்லை. ஆனால் வரலாற்றை அறியவேண்டும் என்பதற்காகச் சொல்கின்றேன். 

1999 இல் திமுக பிஜேபியோடு கூட்டுவைத்தது. ஆனால் அதற்கு முந்தைய வருடத்தில் ஜெயலலிதா அம்மையாரின் அதிமுக மத்தியில் வாஜ்பாய் தலைமையிலான கூட்டில் இருந்தது. தமிழ்நாட்டில் திமுக ஆட்சியைக் கவிழ்க்கவேண்டும் என்று ஜெயலலிதா அம்மையார் மத்தியில் கூட்டில் இருந்த பிஜேபிக்கு அழுத்தம் கொடுத்துக்கொண்டிருந்ததால், அதிலிருந்து தப்பிக்க, அதிமுக மத்திய அரசுக்கான ஆதரவை விலக்கியபோது திமுக பிஜேபியோடு கூட்டுவைத்தது.

இது இந்தியப் ஆக்கிரமிப்புக் காலத்தில் புலிகள் பிரேமதாசவுடன் வைத்த இராஜதந்திர உறவு போல. எப்படிப் புலிகள் தங்கள் கொள்கைகளை விட்டுக்கொடுக்காமல் பிரேமதாசவிடம் இருந்து ஆயுதம் வாங்கினார்களோ, அப்படி திமுகவும் மதச்சார்பின்மை என்ற கொள்கையை விட்டுக்கொடுக்காமல் பிஜேபியுடன் கூட்டை வைத்துக்கொண்டது. இந்தியாவில் கட்சிகள் தேர்தலில் கூட்டு வைக்கும்போது தத்தமது கொள்கைகளில் விட்டுக்கொடுப்பு செய்வதில்லை. First pass post system ஆக இருப்பதால் தேர்தலில் வெல்ல வைக்கும் கூட்டுக்கள் மட்டுமே.

அதாவது பா.ஜ.க.வின் கொள்கையில் சமரசமாகி திமுக அந்த நேரத்தில் கூட்டுச்சேரவில்லை. கடந்தகால தமிழக வரலாறும் அப்படியான சமரசங்களை ஏற்றுக்கொண்டதாகச் சொல்லவில்லை

சிறு பிள்ளைகளும் அறிந்த விடயங்களை புத்தக படிப்பு  உதவியதாக புளகாங்கிதம் கொள்கின்றார்கள். அதிலும் துல்லியமாக அறிந்து வைத்துள்ளார்களாம்.🤣
யூரியூப்பிலும் வாட்ஸ் அப்பிலும் எவ்வளவோ நல்ல விடயங்கள் பகிரப்படுகின்றன என்பதை களிசடை நிகழ்சிகளை தேடி அலைபவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.:cool:

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, விசுகு said:

புத்தகங்களில் இருந்து வரலாற்றை தொகுப்பவர் என்ற சேர்ட்டிபிக்கற் வாங்கி இருப்பதால் இனிமேல் எந்த காலத்திலும் மத சார்புடைய கட்சிகளுடன் சாதி சார்புடைய கட்சிகளுடன் திமுக கூட்டணி வைக்காது என்பதை உறுதிப்படுத்த முடியுமா உங்களால்??

நான் என்ன திமுகவின் கொள்கை வகுப்புச் செயலாளாரா?😁

இந்தியாவில் கட்சிகள் கூட்டணி வைப்பதே தேர்தலில் வெல்லத்தான். அதற்காக தங்கள் கட்சிகளின் கொள்கைகளில் சமரசம் செய்யவேண்டியதில்லை. அதை புரிந்தால் இப்படியான கேள்விகள் வராது.

திமுக கூட்டணியில் இருக்கும் திருமாவின் விடுதலை சிறுத்தை கட்சி ஒரு தலித் கட்சி.

முஸ்லிம் லீக் - பேரிலேயே இருக்கின்றது.

அதைவிட இடதுசாரிகளான சிபிஎம், சிபிஐ என்று பல கட்சிகள் கூட்டணியில் உள்ளன.

இப்படியான கட்சிகள் எல்லாம் திமுகவின் கொள்கைகளை முற்றாக ஏற்றுக்கொண்டவை என்று சொல்லமுடியுமா? இல்லையே.  எல்லாக் கட்சிகளும் தங்களது கொள்கைகளின் அடிப்படையில்தான் ஆதரவைத் தேடுகின்றன. கொள்கைகள் ஆதரவைப் பெற்றுத்தராவிட்டால் மாற்றம் செய்கின்றன. திராவிடக் கட்சிகள் மதச்சார்பின்மையை கைவிட்டால், அவை தமது சித்தாந்தத்தை கைவிட்டன என்றுதான் பொருள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

எப்படிப் புலிகள் தங்கள் கொள்கைகளை விட்டுக்கொடுக்காமல் பிரேமதாசவிடம் இருந்து ஆயுதம் வாங்கினார்களோ, அப்படி திமுகவும் மதச்சார்பின்மை என்ற கொள்கையை விட்டுக்கொடுக்காமல் பிஜேபியுடன் கூட்டை வைத்துக்கொண்டது. இந்தியாவில் கட்சிகள் தேர்தலில் கூட்டு வைக்கும்போது தத்தமது கொள்கைகளில் விட்டுக்கொடுப்பு செய்வதில்லை.

விளக்கம் கிடைத்தது 😎

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

சிறு பிள்ளைகளும் அறிந்த விடயங்களை புத்தக படிப்பு  உதவியதாக புளகாங்கிதம் கொள்கின்றார்கள். அதிலும் துல்லியமாக அறிந்து வைத்துள்ளார்களாம்.🤣

அது இங்குள்ள சில பால்குடிகளுக்கு தெரியவில்லையே😝

4 minutes ago, விளங்க நினைப்பவன் said:

காமராசர் நேர்மையானவர் எளிமையானவர். ஆனால் கடந்த 54 வருடங்கள் திமுக அதிமுக (ஊழல் செய்தாலும்) ஆட்சியில் தான் தமிழகம் முன்னேறி இருக்கிறது அதை தான் கட்டுரையும் தெரிவிக்கிறது. காமராசர் பற்றி நான் தெரிந்து கொண்டவை அவர் காங்கிரஸ் கட்சி, தீவிரமான இந்தியவாதி, அவர் அதிகாரத்தில் இருந்திருந்தால் தமிழ்நாட்டில் கட்டாய மொழியாக ஹிந்தி முன்பே வந்திருக்கும். அவரது + ஊழல் இல்லை, எளிமை

நீங்கள் கூறியபடி காமராஜர் எளிமை உடைய மனிதராயினும் முழுமையான இந்தியவாதிதான். அவரது ஆட்சியில் 1956 ல்  சென்னை மாநிலம் என்று இருந்த‍தை தமிழ் நாடு என்று பெயர் மாற்றம் செய்யுமாறு சங்கரலிங்கம் என்பவர் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்த‍த‍தை புறக்கணித்தார். சங்கரலிங்கம் உண்ணாவிரத்தத்தில் மரணமடைந்தார்.  அவரது மரணத்தின்  பின்னர் கூட தமிழ் நாடு என்று பெயர் மாற்ற மறுத்தார்.  1967  அறிஞர் அண்ணா முதல்வரானதும் முதல் வேலையாக தமிழ் நாடு என்று பெயரை மாற்றினார். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 minutes ago, விளங்க நினைப்பவன் said:

கடந்த 54 வருடங்கள் திமுக அதிமுக (ஊழல் செய்தாலும்) ஆட்சியில் தான் தமிழகம் முன்னேறி இருக்கிறது

ஒரு கோட்டுக்கு முன்னால் இன்னொரு பெரிய கோடு கீறிவிடுவது தங்கள் வழமை. அதைத்தான் இங்கும் செய்திருக்கின்றீர்கள். கொள்ளை/ஊழல் எல்லாம் உங்களைப்பொறுத்தவரை பெரிய விடயமே இல்லை என்பது  முக்கிய சாரம்சம்.

  • கருத்துக்கள உறவுகள்

திமுக வந்தால் பாஜக வராது என்று நம்புபவர்கள் பாவம் ஏமாளிகள். திமுக  என்றும் கொள்கையில் உறுதியான கட்சி கிடையாது. முதன்முதல் பாஜக வுடன் கூட்டுச்சேர்ந்து பாஜக இராதா கிருஜ்ணன ஆதரித்து அவர்கள் வீழ்த்தியது சுதந்தர பேராட்ட வீரரான அப்பழுக்கற்ற அரிசியல்வாதி அய்யா நல்ல கண்ணுவை. அதுமட்டுமல்ல எச் ராஜா  வெல்வதற்கும் திமுகவவே காரணம். எடப்பாடி அரசு மீது  பெரிய குறைகளைச் சொல்ல முடியாது அதிமுக வென்றால் பாஜக உள்ளே வந்திரும் என்றும்  தங்கள் கூட்டணிக்கட்சிகளை விட மற்றவர்கள் எல்லாம் பாஜகவின் பி,சீரீம் என்று சொல்லி வருகிறது. திமுக பாஜகவுடன் எதிர்காலத்தில் கூட்டணி வைக்காது என்பதற்கு யாராவது உத்தரவாதம் தரமுடியுமா?இதைத்தான் சீமான் கேட்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Kandiah57 said:

தமிழ்நாட்டில். காமாரஜர்...பக்த்தவத்தலம்(பெயர் பிழையாகயிருக்கலாம்) என இரு காங்கிரஸ் முதலமைச்சர் இருந்துள்ளார்கள் அவகளுடையாட்சி மிகச்சிறப்பாகவிருந்தது😎

நான் தற்போதைய நிலையைச் சொன்னேன். சென்னை மாநிலம் என்று இருக்கும்போதுதான் காங்கிரஸ் முதலமைச்சர்கள் இருந்தார்கள். தமிழ்நாடு என்று பெயர் மாறியபின்னர் திராவிடக் கட்சிகளின் ஆட்சிதானே நடக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கிருபன் said:

நான் தற்போதைய நிலையைச் சொன்னேன். சென்னை மாநிலம் என்று இருக்கும்போதுதான் காங்கிரஸ் முதலமைச்சர்கள் இருந்தார்கள். தமிழ்நாடு என்று பெயர் மாறியபின்னர் திராவிடக் கட்சிகளின் ஆட்சிதானே நடக்கின்றது.

காங்கிரசைக் கூட்டணியில் வைத்துக் கொண்டுதானே ஆட்சி செய்கிறார்கள்.அண்மைக்காலங்களில் திமுக கூட்டணி அமைக்காமல்  வென்றது கிடையாது. ஆனால் அதிமுக வென்று காட்டிpயிருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, tulpen said:

நீங்கள் கூறியபடி காமராஜர் எளிமை உடைய மனிதராயினும் முழுமையான இந்தியவாதிதான். அவரது ஆட்சியில் 1956 ல்  சென்னை மாநிலம் என்று இருந்த‍தை தமிழ் நாடு என்று பெயர் மாற்றம் செய்யுமாறு சங்கரலிங்கம் என்பவர் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்த‍த‍தை புறக்கணித்தார். சங்கரலிங்கம் உண்ணாவிரத்தத்தில் மரணமடைந்தார்.  அவரது மரணத்தின்  பின்னர் கூட தமிழ் நாடு என்று பெயர் மாற்ற மறுத்தார்.  1967  அறிஞர் அண்ணா முதல்வரானதும் முதல் வேலையாக தமிழ் நாடு என்று பெயரை மாற்றினார். 

இங்கு யார் காலத்தில் தமிழ்நாடு செழுமையாக உண்மையான ஊழல் அற்ற நாடாக  இருந்தது என்பதுதான் தர்க்கம் . உங்கடையை பிறிதொரு திரி திறந்து கும்மியடிப்பம் .

5 minutes ago, புலவர் said:

காங்கிரசைக் கூட்டணியில் வைத்துக் கொண்டுதானே ஆட்சி செய்கிறார்கள்.அண்மைக்காலங்களில் திமுக கூட்டணி அமைக்காமல்  வென்றது கிடையாது. ஆனால் அதிமுக வென்று காட்டிpயிருக்கிறது.

உண்மை தான் புலவர்.  பிரபாகரனை கொண்டுவந்து இந்தியாவில் தூக்கில் போட வேண்டும் என்று சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய பின்னர் தமிழ் நாட்டில் வென்று காட்டியது அதிமுகவின் திறமை தான். 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாடு என்று சொல்லியபின்தான் கருவருக்கிறார்கள் 6ஆயிரம் கோடி வரி வடமாநிலங்களுக்கு போகின்றது .

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, புலவர் said:

காங்கிரசைக் கூட்டணியில் வைத்துக் கொண்டுதானே ஆட்சி செய்கிறார்கள்.அண்மைக்காலங்களில் திமுக கூட்டணி அமைக்காமல்  வென்றது கிடையாது. ஆனால் அதிமுக வென்று காட்டிpயிருக்கிறது.

தமிழ்நாட்டில் கடந்த ஐம்பதாண்டுகளாக அதிமுக அல்லது திமுக கட்சிதான் ஆட்சிக்கு வரும். ஆட்சியைப் பிடிக்க தேர்தலில் தொகுதி உடன்பாடு செய்து காங்கிரஸோடு மாறி மாறி கூட்டணி வைத்துக்கொள்வார்கள். இதற்காக காங்கிரஸ் தனது கொள்கைகளையெல்லாம் தமிழ்நாட்டில் நிறைவேற்றமுடியாது. 

ஆனால் அடுத்த மாதம் தேர்தல் முடிவு வரும்போது திராவிட ஆட்சி முடிந்து தமிழரின் ஆட்சி வருமல்லவா! அப்போது தமிழ்நாடு வளர்ச்சியில் எகிறிப்பாயும்😀

3 minutes ago, பெருமாள் said:

தமிழ்நாடு என்று சொல்லியபின்தான் கருவருக்கிறார்கள் 6ஆயிரம் கோடி வரி வடமாநிலங்களுக்கு போகின்றது .

தமிழர் ஆட்சி வந்தால் போகாமல் நிறுத்திவிடமுடியுமா?

மோடியின் பிஜேபியின் தந்திரமே மாநில அரசுகளை பலமில்லாமல் ஆக்கவேண்டும் என்பதுதான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 minutes ago, பெருமாள் said:

இங்கு யார் காலத்தில் தமிழ்நாடு செழுமையாக உண்மையான ஊழல் அற்ற நாடாக  இருந்தது என்பதுதான் தர்க்கம் . உங்கடையை பிறிதொரு திரி திறந்து கும்மியடிப்பம் .

வெளிநாட்டு அரசியலை போற்றுவார்களாம். இந்திய இலங்கை ஊழல் அரசியலை கண்டும் காணாமல் இருப்பார்களாம் .வெள்ளை புறாக்கள்.😁

5 minutes ago, கிருபன் said:

தமிழ்நாட்டில் கடந்த ஐம்பதாண்டுகளாக அதிமுக அல்லது திமுக கட்சிதான் ஆட்சிக்கு வரும். ஆட்சியைப் பிடிக்க தேர்தலில் தொகுதி உடன்பாடு செய்து காங்கிரஸோடு மாறி மாறி கூட்டணி வைத்துக்கொள்வார்கள். இதற்காக காங்கிரஸ் தனது கொள்கைகளையெல்லாம் தமிழ்நாட்டில் நிறைவேற்றமுடியாது. 

ஆனால் அடுத்த மாதம் தேர்தல் முடிவு வரும்போது திராவிட ஆட்சி முடிந்து தமிழரின் ஆட்சி வருமல்லவா! அப்போது தமிழ்நாடு வளர்ச்சியில் எகிறிப்பாயும்😀

அப்படி தமிழர் ஆட்சி வந்தாலும் அதிலும் ஊழல் இருக்கும். அதற்கு உதாரணம் ஐரோப்பாவில் உள்ள தமிழ் தேசியவாதிகள் பலர் சாதாரண தமிழ் மக்களிடம் இருத்து பல கோடி பணத்தை கொள்ளை அடித்ததுள்ளனர்.  ஆட்சியில் இல்லாமலே தமிழ் தேசியத்தை கூறி  அப்படி செய்துள்ளனர் என்றால் அங்கு ஆட்சிக்கு வந்தால் விடுவார்களா? 🤣

ஊழல் செய்பவர்கள் தமிழகம் முழுவதும் உள்ளார்கள். அவர்களில் இன மத வேறுபாடு இல்லை. தமிழர்லும் பல ஊழல் செய்பவர்கள் உள்ளார்கள்.  ஊழல் வாதிகளில் இன மத வேறுபாடு இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, tulpen said:

நீங்கள் கூறியபடி காமராஜர் எளிமை உடைய மனிதராயினும் முழுமையான இந்தியவாதிதான். அவரது ஆட்சியில் 1956 ல்  சென்னை மாநிலம் என்று இருந்த‍தை தமிழ் நாடு என்று பெயர் மாற்றம் செய்யுமாறு சங்கரலிங்கம் என்பவர் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்த‍த‍தை புறக்கணித்தார். சங்கரலிங்கம் உண்ணாவிரத்தத்தில் மரணமடைந்தார்.  அவரது மரணத்தின்  பின்னர் கூட தமிழ் நாடு என்று பெயர் மாற்ற மறுத்தார்.  1967  அறிஞர் அண்ணா முதல்வரானதும் முதல் வேலையாக தமிழ் நாடு என்று பெயரை மாற்றினார். 

தகவல்களுக்கு நன்றி. காங்கிரஸ் கட்சிடோடு திமுக கூட்டு வைத்துவிட்டது என்று குற்றம் சொல்லும் வெளிநாட்டில் உள்ள ஈழத்து சீமான் ஆதரவாளர்கள தீவிரமான இந்தியவாதியான காங்கிரஸ் கட்சி காமராசரை இவ்வளவுக்கு புகழ்கிறார்களே என்று எனக்கும் குளப்பம் தான் 😁.  நீங்கள், கிருபன் இப்படி பழைய விடயங்களை அறிந்தவர்கள் பழைய உண்மை தகவல்களை தெரிவித்து கொள்ள வேண்டும். போகிற போக்கை பார்த்தால் காமராசர் தான் தமிழ்நாடு என்ற  அழகிய தமிழ் பெயரை சென்னை மாநிலத்திற்கு சூட்டினார் என்று கதை மாறிவிடும்.☹️

37 minutes ago, குமாரசாமி said:

கொள்ளை/ஊழல் எல்லாம் உங்களைப்பொறுத்தவரை பெரிய விடயமே இல்லை என்பது  முக்கிய சாரம்சம்.

கொள்ளை ஊழல் செய்வது எல்லாம் எனக்கு பாரதூரமான விடயமே.
கொள்ளை ஊழல் அவர்கள் செய்தாலும் இந்தியாவில் உள்ள மற்ற கட்சிகளைவிட தங்கள் மானிலத்தை அவர்கள் முன்னேற்றியுள்ளார்கள் என்பதே நான் சொன்னது. கொள்ளை ஊழல் அவர்கள் செய்தது தவறே. 

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, tulpen said:

உண்மை தான் புலவர்.  பிரபாகரனை கொண்டுவந்து இந்தியாவில் தூக்கில் போட வேண்டும் என்று சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய பின்னர் தமிழ் நாட்டில் வென்று காட்டியது அதிமுகவின் திறமை தான். 

ஜெயலலிதா ஆரம்பத்தில் தலைகால் தெரியாமல் ஆடியது உண்மைதான் அனால் காலப் போக்கில் தன்னைத்திருத்திக் கொண்டார். தங்கம் என்றால் புடம் போட்ட பின்னால்தான் பெறுமதி வருகிறது. அந்த வகையில் சிறிலங்காவிற்கெதிரதன சர்வதேச போர்க்குற்ற விசாணை வேண்டும். தமிழர்கிடையே சர்வசன வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தீர்மானமே நிறைவேற்றியவர் இஜயலலிதா. அனால் கலைஞரோ மத்தியில் அமைச்சர் பதவிகளுக்காக அலைந்தாரே ஒழிய தமிழ்களுக்காக ஒரு துரும்பையும் எடுத்துப்போடவில்லை. முள்';ளிவாய்க்கால் இன அழிப்பையே 3 மணிநேர உண்ணாவிரதமிருந்து போர்நின்று விட்டது என்று தேர்தல் பிரச்சாரம் செய்தவர் அவர்..ஜெயலலதா இறுதிக்காலங்களில் தமிழர்சார்பாகவே நின்றார்.இன்று நடக்கும்'ஐபிஎல் போட்டடிகளில் சிறிலங்காவீரர்களுக்கு முக்கியத்துவம் இல்லாமல் போனது கூட அவருடைய நடவடிக்கையால்தான்.

4 minutes ago, விளங்க நினைப்பவன் said:

தகவல்களுக்கு நன்றி. காங்கிரஸ் கட்சிடோடு திமுக கூட்டு வைத்துவிட்டது என்று குற்றம் சொல்லும் வெளிநாட்டில் உள்ள ஈழத்து சீமான் ஆதரவாளர்கள தீவிரமான இந்தியவாதியான காங்கிரஸ் கட்சி காமராசரை இவ்வளவுக்கு புகழ்கிறார்களே என்று எனக்கும் குளப்பம் தான் 😁.  நீங்கள், கிருபன் இப்படி பழைய விடயங்களை அறிந்தவர்கள் பழைய உண்மை தகவல்களை தெரிவித்து கொள்ள வேண்டும். போகிற போக்கை பார்த்தால் காமராசர் தான் தமிழ்நாடு என்ற  அழகிய தமிழ் பெயரை சென்னை மாநிலத்திற்கு சூட்டினார் என்று கதை மாறிவிடும்.☹️

கொள்ளை ஊழல் செய்வது எல்லாம் எனக்கு பாரதூரமான விடயமே.
கொள்ளை ஊழல் அவர்கள் செய்தாலும் இந்தியாவில் உள்ள மற்ற கட்சிகளைவிட தங்கள் மானிலத்தை அவர்கள் முன்னேற்றியுள்ளார்கள் என்பதே நான் சொன்னது. கொள்ளை ஊழல் அவர்கள் செய்தது தவறே. 

அது தமிழர்களின் கடும் உழைப்பும் கல்விக்குக் கொடுக்கும் முக்கியத்துவமும் தான் அந்த மாநிலத்தை முன்னேற்றியது.பெரியாரும் திமுகவும் இல்லாவிட்டால் மாட்டு மூத்தரத்தைக குடித்துக்கொண்டிருப்பார்கள் என்று கனவு காணாதீர்கள். கேரளாவை எந்தப் பெரியாரும் திராவிடவாதிகளம் முன்னேற்றினார்கள்? ஆது இந்தியாவிலேயே முதன்மை மாநிலம் ஆனது எப்படி?

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, கிருபன் said:

தமிழர் ஆட்சி வந்தால் போகாமல் நிறுத்திவிடமுடியுமா?

மோடியின் பிஜேபியின் தந்திரமே மாநில அரசுகளை பலமில்லாமல் ஆக்கவேண்டும் என்பதுதான்.

ஆறாயிரம் கோடி கடன் உள்ள மாநிலம் மத்திய அரசு வலுக்கட்டாயமாக வரி என்று வசூல் செய்கிறது இது போக GST வேறு இதுவே கேரளா முதல்வரிடம் செல்லுபடியாகுமா ?

திராவிடம் என்பதை முதலில் மூட்டை கட்டி வையுங்கள் .

21 minutes ago, புலவர் said:

ஜெயலலிதா ஆரம்பத்தில் தலைகால் தெரியாமல் ஆடியது உண்மைதான் அனால் காலப் போக்கில் தன்னைத்திருத்திக் கொண்டார். தங்கம் என்றால் புடம் போட்ட பின்னால்தான் பெறுமதி வருகிறது. அந்த வகையில் சிறிலங்காவிற்கெதிரதன சர்வதேச போர்க்குற்ற விசாணை வேண்டும். தமிழர்கிடையே சர்வசன வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தீர்மானமே நிறைவேற்றியவர் இஜயலலிதா. அனால் கலைஞரோ மத்தியில் அமைச்சர் பதவிகளுக்காக அலைந்தாரே ஒழிய தமிழ்களுக்காக ஒரு துரும்பையும் எடுத்துப்போடவில்லை. முள்';ளிவாய்க்கால் இன அழிப்பையே 3 மணிநேர உண்ணாவிரதமிருந்து போர்நின்று விட்டது என்று தேர்தல் பிரச்சாரம் செய்தவர் அவர்..ஜெயலலதா இறுதிக்காலங்களில் தமிழர்சார்பாகவே நின்றார்.இன்று நடக்கும்'ஐபிஎல் போட்டடிகளில் சிறிலங்காவீரர்களுக்கு முக்கியத்துவம் இல்லாமல் போனது கூட அவருடைய நடவடிக்கையால்தான்.

உங்கள் கற்பனை திறன் நன்றாக உள்ளது புலவர். புலவர் என்றால் கற்பனை வளம் அதிகமாக இருக்கும் தானே.   ஜெயல‍லிதா உயிரோடு இருந்து ஆட்சியில் இருந்திருந்தால் உங்கள் இந்த கற்பனை பாடலை கேட்டு புளகாங்கிதம் அடைந்து பொற்கிழி பரிசளித்திருப்பார். (கிட்டதட்ட கூந்தலுக்கு இயற்கையில் மணம் உள்ளது போன்ற உங்கள் பாடலுக்கு நிச்சயம் பரிசு கிடைக்கும்)

Edited by tulpen

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 minutes ago, விளங்க நினைப்பவன் said:

கொள்ளை ஊழல் அவர்கள் செய்தாலும் இந்தியாவில் உள்ள மற்ற கட்சிகளைவிட தங்கள் மானிலத்தை அவர்கள் முன்னேற்றியுள்ளார்கள் என்பதே நான் சொன்னது.

தமிழர்கள் எங்கும் அரசியல் உந்துசக்தி இல்லாமல் நல்ல வாழ்வாதாரத்தோடு வாழ்பவர்கள். சிறந்த முயற்சி உள்ளவர்கள். கல்லில் நார் உரித்து வாழக்கூடியவர்கள்.காகம் இருக்க பனம் பழம் வீழ்ந்தது போல் கருநாநிதியின் அரசியலும் அப்படித்தான்

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, tulpen said:

உங்கள் கற்பனை திறன் நன்றாக உள்ளது புலவர். புலவர் என்றால் கற்பனை வளம் அதிகமாக இருக்கும் தானே.   ஜெயல‍லிதா உயிரோடு இருந்து ஆட்சியில் இருந்திருந்தால் உங்கள் இந்த கற்பனை பாடலை கேட்டு புளகாங்கிதம் அடைந்து பொற்கிழி பரிசளித்திருப்பார். 

உங்கள் கருத்துப்படி கருணாநிதி  அப்பழுக்கற்றவர் அப்படித்தானே ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 minutes ago, பெருமாள் said:

உங்கள் கருத்துப்படி கருணாநிதி  அப்பழுக்கற்றவர் அப்படித்தானே ?

என்ன நீங்கள் ஈழத்டமிழர் இண்டியன் அரசியலை பற்றி கதைக்க அருகதை இல்லை எண்டு சொல்லிப்போட்டு தமிழ்நாட்டு அரசியலை வெட்டி விளாசுறியள்? 🤣😀😀😀😀

3 minutes ago, பெருமாள் said:

உங்கள் கருத்துப்படி கருணாநிதி  அப்பழுக்கற்றவர் அப்படித்தானே ?

அதெப்படி கூற முடியும். ஈழத்திற்காக போரிட்ட ஈழ போராட்ட இயக்கங்ளுக்குள்ளேயே மக்களின் பணத்தை ஊழல் பேர்வளிகள் இருக்கும் போது கருணாநிதி அப்பழுகற்றவர் என்று எப்படி கூற முடியும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.