Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புலத்துப் போலிகள்

Featured Replies

"போலிகள்" என்ற சொற்பதத்தைக் கேட்டதும், ஒருவர் எந்தச் சூழலில் வாழ்கிறார் என்பதைப் பொறுத்தும் அவரது அனுபவங்களபை; பொறுத்தும் போலிச் சாமியார். போலி வைத்தியர், போலி முதலீட்டு நிறுவனங்கள், போலி மருந்துகள், போலிக் காதலர்கள் என்று ஒவ்வொருவர் மனதினிலும் ஒவ்வொரு விடயங்கள் தோன்றும். இருப்பினும், இன்று இப்பதிவில் நான் பேச விழைவது புலம் பெயர் தமிழ் சமூகத்தில் தமிழர்களின் மனங்களை ஆக்கிரமித்திருக்கும் போலிக் கௌரவத்தின் மீதான அடிமைத் தனம் பற்றியதே.

அண்மையில் எனக்குத் தெரிந்த ஒரு குடும்பம் தாங்கள் வாழ்ந்து வந்த வீட்டினை விற்றார்கள். இவர்கள் என்னைக் காட்டிலும் எத்தனையோ ஆண்டுகள் வயதில் மூத்தவர்கள். கால் நூற்றாண்டிற்கு முன்னர் தாயகத்தை விட்டுப் புலம் பெயர்ந்து, ஐரோப்பாவில் அனுபவம் பெற்று, இறுதியில் கனடாவில் ஓய்ந்தவர்கள். இவர்களிற்கு வளர்ந்த மகவுகளும் உள்ளனர்.

வாழ்வின் குருத்துப் பருவந் தொட்டுக் கடந்த இரு தசாப்தங்களைக் கனடாவின் சிந்தனை ஓட்டத்தில் ஊறிக் கரைத்தவன் என்பதனாலோ என்னவோ ஒருவரது பிரத்தியேகம் தொடர்பில் எனக்கு அதிதீவிர கரிசனை உள்ளது. எனது பிரத்தியேகங்களில் தலையிடும் உரிமையையும் எவரிற்கும் நான் எப்போதும் வழங்குவதுமில்லை அதுபோல் நானும் தலையிடுவதில்லை. இதை நன்கு அறிந்திருந்தும், மேற்படி வீடு விற்ற குடும்பத்தினர் வலுக்கட்டாயமாக என்னிடம் ஒரு ஆலோசனை கேட்டனர். அடம் பிடித்துக் கேட்டதனால் அவர்கள் விபரித்த விடயம் தொடர்பான எனது சிந்தனையை அவர்களுடன் பகிர்ந்து கொள்ளச் சம்மதித்தேன். அவர்கள் விபரித்த விடயமானது:

தாங்கள் தங்களது 2800 சதுர அடி வீட்டினை 380,000 டொலர்களிற்கு ஸ்காபரோவில் வாங்கி இருந்தார்களாம். தற்போது அவ்வீடு 455,000 டொலர்களிற்கு விற்கப்பட்டதாம். இதை விற்பதற்காகத் தரகர் கூலியாக 4.5 வீதம் (20,475 டொலர்கள்) கொடுக்கப்பட்டதாம். தாம் தமது வீடு முழவதும் அதிநவீன தளபாடங்களைக் கடனிற்கு வாங்கிப் போட்டிருந்தார்களாம். அதனால் அக்கடனைக் கட்டுவதற்கும் இதர கடன்களிற்காகவும் 30,000 டொலர்கள் செலவாகிப் போனதாம். மேலும் வீட்டின் மீதிருந்த ஈட்டுக் கடன் முதலியன போகத் தற்போது கையில் வெறும் 70,000 டொலர்கள் மட்டுமே வைத்துள்ளனராம். இந்நிலையில், குடியிருந்த வீடு விற்கப்படுவதால் தாம் உடனடியாக வேறு ஒரு மனை வாங்க வேண்டிய தேவையில் இருப்பதாகவும், எனினும் புதிய மனையானது தமது பழைய மனை தமக்கு ஏற்படுத்தியது போன்ற பணத்தேவைக்கான சுமையினை ஏற்படுத்தாதிருக்கும் வகையே தாம் வீடு பார்ததாகவும் கூறினார்கள். நானும் அது நல்ல விடயம் தானே வரவிற்குள் செலவை அமைப்பது எப்போதும் மன உளைச்சல்களைக் குறைத்து வாழ்வை மேம்படுத்துவது இயல்பு தானே எனக் கூறினேன்;.

அதற்கு, உண்மைதான் முன்னர் வரவிற்கு மிஞ்சி தாம் சுமைகளை ஏற்றியதால் தான் தனது மனைவி மன அழுத்தத்திற்கு உட்பட்டு வேiலையையும் தொலைத்துள்ளார் என்று அக்குடும்பத் தலைவர் கூறினார். கூட இருந்த குடும்பத் தலைவியும் ஒத்துக் கொண்டார்.

அதைத் தொடர்ந்து தாம் புதிதாக முற்றுச் செய்திருக்கும் மனை பற்றிக் அது ஸ்காபரோ மார்க்கம் எல்லையில் மார்ககம் நகரிற்குள் அமைந்துள்ள 1600 சதுர அடி விஸ்தீரணம் கொண்ட பத்து ஆண்டுகள் பழைமையான வீடு என்றும் அதன் விலை 325,000 டொலர்கள் என்றும் கூறினார்கள். பின் அது பற்றிய எனது அபிப்பிராயம் கேட்டார்கள். எனது துறைசார் பின்னணிக்கும் தகமைகளிற்கும் இவர்கள் கேட்கும் ஆலொசனைக்கும் எவ்விதத்திலும் சம்பந்தமில்லை என்பதனை ஆணித்தரமாக மீண்டும் அவர்களிற்குக் கூறினேன். அவர்கள் விடுவதாய்; இல்லை. எனது அபிப்பிராயம் கேட்டார்கள்.

கனடாவில் ஒன்ராறியோ மாநிலத்தில் (மற்றையவை பற்றித் தெரியவில்லை) உள்ள பொதுவான சட்டத்தின் பிரகாரம் (தில்லுமுல்லுகளை விடுங்கள்), ஒருவர் வீடு கொள்முதல் செய்கின்றபோது அவ்வீட்டின் 75 வீதமான விலையையே வங்கிகள் அவரிற்கு ஈட்டுக் கடனாகக் கொடுக்க இடமுள்ளது. 75 வீதத்திற்கும் அதிகமான தொகையினை ஒருவர் ஈட்டுக் கடனாகப் பெறவிரும்பின், அந்நபர் மொத்தவிலையின் 4 வீதத்தினை ||கனடா மோட்கேச் அன்ட் கவுசிங் கோப்பரேசன்|| (சீ. எம். ஏச். சுp) என்ற கட்டமைப்பிற்குக் காப்புறுதியாக, மீழப்பெறமுடியாத கட்டணமாகக் கொடுக்க வேண்டும். இக்காப்புறதியானது ஈட்டுக் கடன் வழங்கும் வங்கியின் பாதுகாப்பிற்குரியதே அன்றி நுகர்வோர் பாதுகாப்பிற்கானது அல்ல. அதாவது வங்கியின் பாதுகாப்பிற்கான காப்புறுதிக்கான முதலை நுகர்வோர் செலுத்துகின்றனர்.

இதன் அடிப்படையில் மேற்படி குடும்பத்தினரின் புதிய வீட்டின் விலையானது 325,000 டொலர்களாக இருப்பதனால் குறைந்த பட்சம் 81250 டொலர்களினை தமது முன்பணமாக இவர்கள் செலுத்தாதவிடத்து 13000 டொலர்களினை சீ.எம்.எச்.சி கட்டமைப்பிற்கு இவர்கள் செலுத்த வேண்டும். மேலும் இவர்களது கடன் பெறும் தகுதி மற்றும் இதர விடயங்களின் அடிப்படையில் இதில் தில்லுமல்லுகளிற்கும் இவர்களிற்கு அதிக வாய்ப்பில்லை. இதை நான் கூறியபோதும் அவர்கள் தங்ளிடம் தலையை அடகு வைத்தாலும் 70,000 டொலர்களிற்கு மேல் திரட்ட முடியாது என்று மட்டுமே கூறினார்கள். மேலும் வீடு வாங்கும் நடவடிக்கை முற்றுப் பெறுகையில் காணி கைமாறும் வரி, வழக்கிஞர் கட்டணம் என்று இதர செலவுகளும் உள்ளன.

இந்நிலையில் அவர்களின் மன அழுத்த நோயின் பின்னணி, புலம் பெயாந்து கால் நூற்றாண்டுகள் உழைத்துக் கழைத்து மூத்து விட்ட அவர்களின் நிலை, வளர்ந்து விட்ட மகவுகள் முதலியவற்றைக் கருத்தில் கொண்டு நான் அவர்களிற்குக் கூறியதானது, உங்கள் கையில் உள்ள 70 ஆயிரத்தில் ஒரு பத்தாயிரத்தை உங்களது வீடு கொள்முதல் ஒப்பதந்தம் முற்றுப்பெறல் தொடர்பான செலவீனங்களிற்காக ஒதுக்கிவிட்டு மீதி 60,000 டொலர்களை முற்பணமாக்கின் 240,000 டொலர்கள் வரையான விலை கொடுத்து அவர்களால் ஒரு மனையை சீ.எம்.எச்.சி தண்டத் தொகை செலுத்தாது பெறமுடியும் என்றேன் . மேலும் 180,000 டொலர்கள் ஈட்டுப் பணத்திற்கு அண்னளவாக மாதாந்த கட்டுப்பணம் 1080 டொலர்கள் வரும் என்றும் அதை அவர்களால் செலுத்த முடியுமா என்றும் கூடக் கேட்டேன். மேலும் அனைத்து மகவுகளும் வளர்ந்து தனிக்குடித்தனமோ அல்லது பல்கலைக்கழகமோ போகும் நிலையில் உள்ளதால் இவர்கள் தங்கள் இருவரின் வாழ்விற்கான ஒரு சுமை குறைந்த வீட்டை வாங்குவதால் மேலும் எத்தனையோ நன்மைககள் கை கூடுமே என்றேன். மேலும் ஐம்பதுகளிலும் கூட இன்னமும் வாரம் ஏழு நாளும் மாடாய் ஏதோ ஒரு உணவகத்தில் உழைக்கும் அக்குடும்பத் தலைவனும் சற்றேனும ஓய்வெடுக்க வழி பிற்க்கும் என்றேன். அத்தோடு அவர்களது வயதையும் அவர்கள் தங்களின் ஓய்வு காலத்திற்காகச் சேமிக்க வேண்டியதையும் கூறியதோடு கால் நூற்றாண்டு புலம்பெயர்ந்து உழைத்தும் 70,000 டொலர்களை மட்டுமே சேமிப்பாகக் கொண்டிருக்கும் அவர்களது நிலைமையையும் சுட்டிக் காட்டினேன். அப்போது தான் என்னை அதிர வைத்த பதில் அவர்களிடம் இருந்து வந்தது.

"இல்லை நாங்களும் ஒருக்கால் மார்க்கம் நகரில் வாழ ஆசைப் படுகின்றோம். அடிமட்டங்கள் வாழும் ஸ்காபரோ வாசி என்ற அவமானத்தை அழிக்க விரும்புகின்றோம். மேலும் நீங்கள் சொல்வது போன்று 240,000 ற்குள் வாங்குவதாயின் அது ஒரு கொண்டமேனியமாகவோ ரவுண்கவுசாகவோ இருந்தால் மட்டுமே முடியும். ஆனால் அவ்வாறு வாழ்வது எஙகளிற்கு மரியாதை இல்லை. அப்படி நாம் வாழின் எம்மையோ எமது குழந்தைகளையோ எவரும் மதிக்கமாட்டார்கள். அதனால் தான் நாங்கள் சொன்ன வீட்டை மார்க்கம் எல்லைக்குள்ள பாத்திருக்கிறம்"

என்பதே என்னைத் தூக்கிவாரிப் போட்ட அவர்களின் பதில்.

மன அழுத்தம் எப்போதேனும் அவர்களi விட்டகலும் என்ற நம்பிக்கையே என்னிடம் இறந்து போனது.

பி.கு: சாத்திரியின் புழுகன் அரிச்சந்திரன் நாடகந் தொடர்பில் முன்னொருநாள் எனது விமர்சனமாக மக்களின் வழுக்களை என்னால் இரசிக்கமுடியாதுள்ளதால் அந்நாடகத்தை இரசிக்க முடியவில்லை எனப் பதிந்திருந்தேன். எனினும் இந்தக் கட்டுரையில் உள்ள மனிதர்களைக் கண்டபின்னர், நானறிந்த விதத்தில்இவர்களின் போலித்தனத்தை இவர்களிற்கு என்னால் உணர்த்த முடியவில்லை என்பதை உணர்கின்றபோது, சாத்திரியின் நாடகம் தொடர்பான எனது விமரிசனம் தவறென்றே எனக்குப் படுகின்றது.

தமது வழுக்களைப் பார்வையாளராய் மூன்றாம் மனிதராய் பிறரில் காண்கையில் ஒருவேளை இம்மனிதர் சிந்திப்பரோ என்ற எண்ணம் பிறக்கின்றது. எனவே அன்றைய எனது விமரிசனத்தை

இன்று மீளப்பெற்றுக் கொள்கின்றேன்.

Edited by Innumoruvan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"

நானும் அது நல்ல விடயம் தானே வரவிற்குள் செலவை அமைப்பது எப்போதும் மன உழைச்சல்களைக் குறைத்து வாழ்வை மேம்படுத்துவது இயல்பு தானே எனக் கூறினேன்;.

உளைச்சல்

. எனவே அன்றைய எனது விமரிசனத்தை

இன்று மீழப்பெற்றுக் கொள்கின்றேன்.

<<

மீளப்

இன்னுமொருவன், நீங்கள் கூறும் இந்தப்போலிகள் தங்கள் முடிவை தொடக்கத்திலேயே திட்டமிட்டிருப்பவர்கள். உங்களிடம் ஏன் கருத்தை முன் வைத்தார்கள் ஆலோசனை கேட்டார்கள் தங்கள் தம்பட்டத்தை கொட்டமடிக்கவா?!!

இவர்கள் எல்லாம் வாழ்பவர்கள் அல்ல! ஒவ்வொருவருக்காகவும் தம்மை தம் நிலையை மாற்றிக்கொள்ளூம் நடிகர்கள், விட்டுத் தள்ளுங்கள். இவர்களை திருத்த முயல்வது வீண்!.

  • தொடங்கியவர்

ழ, ள திருத்தியமைக்கு மிக்க நன்றிகள் தமிழ்தங்கை.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் இன்னுமொருவன் விமர்சனங்களால் நான் எப் ்பொழுதுமே விசனமடைந்தது இல்லை அடுத்ததாக ஒருவரை பாதித்த ஒரு சம்பவம்தான்படைப்பாகின்றது அந்த சம்பவங்களை அவரரவர் தங்களிற்கு தெரிந்த முறை மூலம் வெளிப்படுத்தகின்றனர். அதே போல நீங்களும் உங்களை பாதித்த சம்பவத்தை ஒரு செய்திவடிவத்தில் வெளிப்படுத்தியிருக்கிறீர்க

Edited by sathiri

  • தொடங்கியவர்
வணக்கம் இன்னுமொருவன் விமர்சனங்களால் நான் எப் ்பொழுதுமே விசனமடைந்தது இல்லை அடுத்ததாக ஒருவரை பாதித்த ஒரு சம்பவம்தான்படைப்பாகின்றது அந்த சம்பவங்களை அவரரவர் தங்களிற்கு தெரிந்த முறை மூலம் வெளிப்படுத்தகின்றனர். அதே போல நீங்களும் உங்களை பாதித்த சம்பவத்தை ஒரு செய்திவடிவத்தில் வெளிப்படுத்தியிருக்கிறீர்க
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்னுமொருவன்,

நீங்கள் எழுதியது அத்தனையும் உண்மை என்றால், அந்தத் தரவுகளை வைத்துக்கொண்டு நீங்கள் யாரைப் பற்றிக் குறிப்பிட்டீர்கள் என்று மிக இலகுவாக சம்பந்தப் பட்டவர்களாலோ அல்லது சம்பத்தப்பட்டவர்களுக்கு வேண்டியவர்களாலோ மிக இலகுவாக அடையாளம் கண்டுகொள்ள முடியும். எனவே மேற்சொன்ன தகவல்கள் வரிக்கு வரி உண்மையானால் சம்பந்தப் பட்டவர்களின் அனுமதியுடன் மட்டுமே நீங்கள் இதைப் பதிந்திருக்க முடியும்.

  • தொடங்கியவர்

பண்டிதர் உங்களது கூற்றுச் சிந்திக்க வைக்கின்றது. உங்களது நல்லெண்ணமும் புரிகிறது.

இதை விவாதமாக விவாதிப்பதற்குப் பல ஆதாரங்களை, காப்புரிமை முன்னுதாரணங்களை எடுத்து விவாதிக்கலாம் என்ற போதும் அதைத் தவிர்த்து உங்களது கருத்தின் உள்ளாhந்த செய்தியை அணுகுவதே சரியானது என எனக்குப் படுகின்றது. அவ்வகையில்:

முதற்கண், இங்கு எனக்கும் சாத்திரிக்கும் இடையே நிகழ்ந்த கருத்துப் பரிமாற்றத்திற்கான எனது முன்னைநாள் பதிவை நீங்கள் பார்வை இடின், அங்கு எனக்கும் இவ்வாறு (உங்களிற்கு இப்பதிவு தொடர்பில் ஏற்பட்டுள்ளதைப் போன்றே) மக்கள் பற்றிப் பேசுவது அருவருப்பினைத் தந்தமையை நீங்கள் வெளிப்படையாய்க் காணலாம். சாத்திரியின் அந்த நாடக அங்கமானது ஒருவர் இன்னொருவரிற்குப் பொறாமை முதலிய காரணங்களினால் உந்தப்பட்டு ஏற்படுத்தும்தொல்லையான தொலைபேசி அழைப்புக்கள் பற்றியும் பேசியது. எனக்கு இன்னமும் நல்ல ஞாபகம் இருக்கின்றது, அது ஒரு இனிய மாலைப் பொழுது, எதேச்சையாக யாழிற்கு வந்தபோது அந்த நாடகம் அங்கு பதிவாகி இருந்தது. அதனைக் கேட்டு முடித்தபோது எனக்குள் ஒரு கொக்ரெயில் போன்று பலதரப்பட்ட உணர்வுகள், அதில் முதற்கண் ஆத்திரமும் அருவருப்பும்.

எனது அரிய நேரத்தை விரயமாக்கி எனது மனநிலையையும் கெடுத்துக் கொண்டேன்

என்ற உணர்வே மேலிட்டது. அப்போது எனது கருத்தை அப்படியே யாழில் பதிவு செய்தேன். இருப்பினும் அக்கருத்துத் தொடர்பாக ஆழ்ந்து சிந்திப்பது அவசியம் என உள்ளுணர்வு உணர்த்தியது (இதில் ஒரு உதிரித் தரவு என்னவெனில் எனது அந்தக் கருத்திற்கு வந்த எதிர்வினை பெரும்பாலும் நான் யாரிற்கோ அவ்வாறு முன்னெப்போதோ தொல்லை கொடுத்துள்ளதால் தான் எனக்கு அத்தொப்பி பொருந்தி உறுத்துகிறது என்ற அடிப்படையில் அமைந்திருந்ததால், அது அறவே எனக்குப் பொருந்தாதால், அவ்வெதிர்வினை என்னை எந்தப் புதிய முனையிலும் சிந்திக்கத் தூண்டவில்லை என்பது துரதிஸ்ரம்).

சாத்திரியின் நாடகம் தொடர்பான எனது விமர்சனம் பற்றி நிறையவே சிந்தித்தபோது எனது ஆத்திரமும் அருவருப்பும் சித்தரிக்கப்பட்டிருக்கும் பாத்திரங்கள் மீதானதே அன்றி நாடகம் மீதானதல்ல என்பதை புரிந்து கொண்டேன். அது மட்டுமன்றி அவ்வாறான கேலிச்சித்திரங்களிற்கென்று

Edited by Innumoruvan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதே போல் இன்னும் பல புலம்பெயர் உறவுகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.அந்த சம்பவங்கள் வெளிவருவதில்லை.காரணம் மானம்,மரியாதை போன்றவைகளே.இப்படியான அவலங்கள் வெளிவருவதன் மூலம் ஏனையவர்கள் திருந்துவதற்கு வசதியாக இருக்கும்.சாத்திரியார் போல் கதை வடிவில் அல்லது நாடகவடிவில் எழுதுங்கள் பிரச்சனைகள் வர சந்தர்ப்பங்கள் குறையும்.இன்னுமொருவனுக்கு வாழ்த்துக்களுடன் நன்றிகள் :lol:

  • தொடங்கியவர்

இதே போல் இன்னும் பல புலம்பெயர் உறவுகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.அந்த சம்பவங்கள் வெளிவருவதில்லை.காரணம் மானம்,மரியாதை போன்றவைகளே.இப்படியான அவலங்கள் வெளிவருவதன் மூலம் ஏனையவர்கள் திருந்துவதற்கு வசதியாக இருக்கும்.சாத்திரியார் போல் கதை வடிவில் அல்லது நாடகவடிவில் எழுதுங்கள் பிரச்சனைகள் வர சந்தர்ப்பங்கள் குறையும்.இன்னுமொருவனுக்கு வாழ்த்துக்களுடன் நன்றிகள் :)

உங்களது ஊக்குவிப்பிற்கு நன்றி :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மையில் காப்புரிமை என்ற கோணத்தில் இதை விவாதிப்பதை விட சாதாரண மனித நீதி என்ற கோணத்தில் விவாதிப்போமே. எனது விவாதம் பிழையானதாகக் கூட இருக்கலாம். எனினும் அதை (துணிந்து) முன் வைக்கிறேன்

வானவில்லில் ஏழு நிறங்கள் இருப்பதாகக் கூறுகிறோம். உண்மையில் வானவில்லில் ஏழு நிறங்களா இருக்கின்றன? எண்ணற்ற நிறங்களல்லவா இருக்கின்றன? அது போல ஒருவர் ஸ்காபரோவில் இருந்து பேவியூ (Bay view) *1 விற்கு மாறுவதாக கூறினால் அதில் பொதிந்திருக்கும் அர்த்தத்தை விளங்கிக்கொள்வதாக பெருமையுடன் கூறும் நாங்கள் ஸ்காபரோவில் இருந்து மார்க்கத்திற்கு ஒருவர் நகரவிரும்பும் போது அதிலுள்ள வேறுபாட்டை அங்கீகரிக்க மறுக்கிறோம்.

இனி டொரொண்டோ யூனிவர்சிட்டி யில் உள்ள பிரபலமான ஒரு புரொபசர் தனது வெப்சைடில் இவ்வாறு கூறுகிறார் “I'm just an average man trying to have an above average effect on the world around me” *2. அதாவது “நான் எனது சராசரிக்கு மேலான விளைவை ஏற்படுத்த முனைந்து கொண்டிருக்கும் ஒரு சராசரிமனிதன்” என்பதாக. இது எவ்வளவுக்கு எம்மவர் எல்லாரைப் பொறுத்தவரையிலும் உண்மை என்று சிந்திப்போமானால் சிலிர்ப்புத் தான் வரும். உதாரணமாக எமது போராட்டத்தை எடுத்துக் கொள்வோமானால் எமது வரையறுக்கப்பட்ட ஆளணி மற்றும் ஏனைய வளங்களைக்கொண்டு எம்மைவிட வலியதாக கருதப்படும் பகைவனுடன் மோதி வெல்வதே எமது நோக்கம். இதே நோக்கத்தையே இன்றைய மனிதன் பலதுறைகளிலும் கொண்டிருப்பதைக் காணலாம், அது விஞ்ஞானமாகட்டும் வணிகமாகட்டும் you name it.

இந்த வகையில் அந்த தம்பதியினரும் கூட தம்மிடமுள்ள வரையறுக்கப்பட்ட வளத்தைக்கொண்டு (average resource) சிறிது பெரிய (above average) ஒரு இலக்கை அடைய முற்பட்டதில் தவறேதுமிருப்பதாக எனக்குப்படவில்லை. இந்த இலக்கை அடைய ஒரு அறிவாளி என்ற வகையில் உங்களின் ஆலோசனனயை அவர்கள் கோரியிருக்கலாம் என்பதே எனது கணிப்பு.

எனது கணிப்பு தவறாகவும் இருக்கலாம். இதை ஆன்மீக கருத்துக்களுடன் denounce பண்ண பலர் வரலாம். இது இன்னுமொரு பார்வை அவ்வளவே.

*1 கனடாவாசிகள் அல்லாதோருக்கு – பேவியூ என்பது டொரன்ரோவில் மிகப்பெரும் பணக்காரர் வசிக்குமிடம்.

*2 http://www.ecf.utoronto.ca/~parham/

  • கருத்துக்கள உறவுகள்

அதற்கு, உண்மைதான் முன்னர் வரவிற்கு மிஞ்சி தாம் சுமைகளை ஏற்றியதால் தான் தனது மனைவி மன அழுத்தத்திற்கு உட்பட்டு வேiலையையும் தொலைத்துள்ளார் என்று அக்குடும்பத் தலைவர் கூறினார். கூட இருந்த குடும்பத் தலைவியும் ஒத்துக் கொண்டார்.

வரவுக்கு மிஞ்சிய செலவு செய்து மனதில் சுமைகளை ஏற்றிக்கொண்டபின் இனியாவது மன அமைதிக்காக வாழ முயற்சிக்கலாமே?

"இல்லை நாங்களும் ஒருக்கால் மார்க்கம் நகரில் வாழ ஆசைப் படுகின்றோம். அடிமட்டங்கள் வாழும் ஸ்காபரோ வாசி என்ற அவமானத்தை அழிக்க விரும்புகின்றோம்.

இப்படித்தான் பலர் தமிழர் என்ற அடையாளத்தை மறந்து நடக்க வெளிக்கிடுறாங்கள்.

இவ்வாறான ஆக்கங்கள் நிறைய வர வேண்டும். எமது சமூகமானது தமக்குள்ளே ஒரு போட்டிநிலையை வளர்க்கின்றது. கனடாவில் உள்ள ஏனைய சமுகங்களின் நல்ல விசயங்களை பின்பற்றி அதனூடே ஒரு போட்டி நிலையை வளர்த்தால் அதில் பெரிய பிரச்சனை எதுவும் இருக்கப்போவதில்லை.

சிலர் 23 பவுணில் தாலி செய்தால் மற்றவர் 33 அல்லது 51 சிலர் அதிலும் கூடுதலாக செய்யவேண்டும் என்ற நிலைக்கு வருகின்றனர். இதனால் ஒரு மதிப்பு கௌரவம் என்று கருதுகின்றனர். எருதுகளுக்கு போடும் மூக்கணாங்கயிற்றை ஞாபகப்படுத்தும் இந்த அடடையாளம் இந்த நாட்டில் தேவைதானா? இதில் என்ன கொளரவம ;என்று புரியவில்லை.

தற்போதைய அதி கூடிய செலவில் திருமணத்தை நடத்தி ஒரு புதிய கொளரவ திருமணச்செலவை அறிமுகம் செய்திருக்கின்றனர். கனக்கவல்ல 300 000.00 டொலர்கள். 50 000.00 டொலர்களுக்கு கீழே செலவு செய்பவர்கள் 100 000.00 க்கு வரவேண்டிய மறைமுக அழுத்தம் இங்கு போடப்படுகின்றது.

இரண்டு அல்லது மூன்று இடத்தில் வேலைசெய்து 50 ல் இருந்து 60 வயதுக்குள் மடிந்து விடக்கூடிய நிறையச்சனங்கள் 10 000.00 செலவளிப்பதற்கே மிகக்கஸ்டப்படுகின்றனர்.

இவ்வாறு பல நிகழ்வுகள் நடக்கின்றன. பெருமை, கொளரவம், சமூக மதிப்பு என்று தனிமனிதன் தீர்மானிக்கும் சில போலித்தனமான விசயங்களில் பலர் மன அழுத்ததுக்கு உள்ளகின்றனர். அது கூட ஏன் 11 பவுணில் தாலிகட்டிய பிரச்சனை முற்றி பிரிந்த தம்பதிகள் இருக்கின்றார்கள். குழந்தை அம்மாவிடமும் அப்பாவிடமும் இழுபடுகின்றது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படியான தலைப்புக்களுடனும் தரமான கருத்துக்களுடனும் ஆயிரம் பக்கங்களை தாண்ட எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகின்றேன். :lol:

  • தொடங்கியவர்

வானவில்லில் ஏழு நிறங்கள் இருப்பதாகக் கூறுகிறோம். உண்மையில் வானவில்லில் ஏழு நிறங்களா இருக்கின்றன? எண்ணற்ற நிறங்களல்லவா இருக்கின்றன? அது போல ஒருவர் ஸ்காபரோவில் இருந்து பேவியூ (Bay view) *1 விற்கு மாறுவதாக கூறினால் அதில் பொதிந்திருக்கும் அர்த்தத்தை விளங்கிக்கொள்வதாக பெருமையுடன் கூறும் நாங்கள் ஸ்காபரோவில் இருந்து மார்க்கத்திற்கு ஒருவர் நகரவிரும்பும் போது அதிலுள்ள வேறுபாட்டை அங்கீகரிக்க மறுக்கிறோம்.

இதில் அவர் எந்த இடத்திற்குள் நுழைகிறார் என்பதல்ல எனது வழக்கு. இவர்களது சம்பவம் ஒரு

பதிவாக அமையலாம் என நான் கருதியதற்கான காரண:

ஏற்கனவே போலித்தனமாக மற்றையோரிற்காக தம்மால் முடியாததை செய்ய நினைத்து அதனால்

தனது உடல் உள நிலையினை வேலையே பார்க்க முடியாது என்ற அளவிற்குக் கெடுத்துக் கொண்ட

ஒருவர் அதைத் தடுக்க ஆலோசனை கேட்டு வந்து வட்டு, போலிக் கவுரவம் என்ற போதைக்கு

அடிமைப் பட்டுள்ளவராய், அப்போதையின் ஆட்சியில் இருந்து விடுபட முடியாதவர்களாக மீண்டும் அதே

தப்பைச் செய்ய விழைவதே நான் சுட்டிக் காட்டிய விடயம். மேலும் மன அழுத்தத்தின் வௌ;வேறு

பரிமாணங்களில் எத்தனை துயரகரமான விபரீதங்கள் எம் கண்முன்னே, அதுவும் எமது சமூகத்திற்

கூட, நிகழ்ந்தவண்ணம் உள்ளன என்பது கண்கூடு. இந்நிலையில் அவர்களது போலித்தனத்தை,

அடிமைத் தனத்தை என்னால் அவர்களிற்கு உணர்த்த முடியவில்லையே என்பது தான் எனது ஆதங்கம்.

இதில் பேவியு+வினை ஏற்கலாம் மார்க்கத்தை ஏற்கமுடியாது என்பது போன்ற வாதம் புரிந்து

கொள்ளமுடியவில்லை.

இனி டொரொண்டோ யூனிவர்சிட்டி யில் உள்ள பிரபலமான ஒரு புரொபசர் தனது வெப்சைடில் இவ்வாறு கூறுகிறார் “I'm just an average man trying to have an above average effect on the world around me” *2. அதாவது “நான் எனது சராசரிக்கு மேலான விளைவை ஏற்படுத்த முனைந்து கொண்டிருக்கும் ஒரு சராசரிமனிதன்” என்பதாக. இது எவ்வளவுக்கு எம்மவர் எல்லாரைப் பொறுத்தவரையிலும் உண்மை என்று சிந்திப்போமானால் சிலிர்ப்புத் தான் வரும். உதாரணமாக எமது போராட்டத்தை எடுத்துக் கொள்வோமானால் எமது வரையறுக்கப்பட்ட ஆளணி மற்றும் ஏனைய வளங்களைக்கொண்டு எம்மைவிட வலியதாக கருதப்படும் பகைவனுடன் மோதி வெல்வதே எமது நோக்கம். இதே நோக்கத்தையே இன்றைய மனிதன் பலதுறைகளிலும் கொண்டிருப்பதைக் காணலாம், அது விஞ்ஞானமாகட்டும் வணிகமாகட்டும் you name it.

இந்த வகையில் அந்த தம்பதியினரும் கூட தம்மிடமுள்ள வரையறுக்கப்பட்ட வளத்தைக்கொண்டு (average resource) சிறிது பெரிய (above average) ஒரு இலக்கை அடைய முற்பட்டதில் தவறேதுமிருப்பதாக எனக்குப்படவில்லை. இந்த இலக்கை அடைய ஒரு அறிவாளி என்ற வகையில் உங்களின் ஆலோசனனயை அவர்கள் கோரியிருக்கலாம் என்பதே எனது கணிப்பு.

ஒரே கருத்து எத்தனை விதத்தில் தேவைக்கேற்றவாறு மாற்றப்படலாம் என்பதற்கு மேற்படி எடுத்துக்காட்டு

ஒரு சிறந்த உதாரணம்.

அதாவது தன்னம்பிக்கை அல்லது உத்வேகம் ஊட்டுவதற்காக் கூறப்பட்ட ஒரு பொருள் இங்கு நுகர்வோரிசம் என்ற

பு+தத்தால் கடத்தப்பட்டுள்ளது. உண்மையில் ரொறன்ரோ நகரில் உள்ள பல வீடு விற்பனை முகவர்கள்

கூட தமது அதிகரித்த தரகுக் கூலிக்காக, அவர்களையே நம்பி வரும் அப்பாவிகள் பலரது தலையில்

அவர்களால் சுமக்கமுடியாதனவற்றைச் சுமத்தியுள்ளார்கள்.

மேலும் காரண காரியம் என்று ஒரு விடயம் உள்ளது. ஒரு விடயம் எதற்காகச் செய்யப்படுகின்றது என்பதை

வைத்தே ஒருவரது முயற்சிகள் எடைபோடப்படுவது உலகியல் வழமை. எமது இனத்தின் சுவடே தெரியாது

எம்மை ஒழித்து விட முயலும் பேரினவாத அரக்கனின் பிடியில் இருந்து தப்புவதற்காக வெறும்

கற்களுடன் அவனது கவசவாகனங்களை எதிர் கொள்ளும் போராளிக்கும், தனது நண்பனை ஏன்

சகோதரியைக் கூடத் தனது வீட்டின் சதுர அடிகளால் விஞ்சவேண்டும் என நினைப்பதற்கும் நிறையவே

வித்தியாசங்கள் உள்ளன. போராளி தனது முயற்சியில் உயிரிழக்கையில் உலகளாவிய ரீதியில்

இன மொழி மத வேற்றுமைகள் அனைத்துக் அப்பால் அவனது இறப்பைப் பார்த்து வியந்து பேசும் உலகு

வீட்டிற்கான சதுரஅடி அதிகரிப்பில் மனநிலை பிறழ்ந்து பின் அதன் படிப்படித் தாக்கங்களாக தனது

குடும்பத்தையும் தன்னையும் கொலை தற்கொலை செய்து கொள்பவனை என்றும் பாhத்து வியப்பதில்லை.

பரிதாபம் மட்டுமே படமுடியும்.

எனது கணிப்பு தவறாகவும் இருக்கலாம். இதை ஆன்மீக கருத்துக்களுடன் denounce பண்ண பலர் வரலாம். இது இன்னுமொரு பார்வை அவ்வளவே.

இதில் மறந்தும் நான் ஆன்மீகக் கதை எதையும் கதைக்கவில்லை என்றே நம்புகின்றேன். கதைத்திருப்பின்

சுட்டிக் காட்டுங்கள் திருந்திக் கொள்கின்றேன்.

  • தொடங்கியவர்

இவ்வாறான ஆக்கங்கள் நிறைய வர வேண்டும். எமது சமூகமானது தமக்குள்ளே ஒரு போட்டிநிலையை வளர்க்கின்றது. கனடாவில் உள்ள ஏனைய சமுகங்களின் நல்ல விசயங்களை பின்பற்றி அதனூடே ஒரு போட்டி நிலையை வளர்த்தால் அதில் பெரிய பிரச்சனை எதுவும் இருக்கப்போவதில்லை.

சிலர் 23 பவுணில் தாலி செய்தால் மற்றவர் 33 அல்லது 51 சிலர் அதிலும் கூடுதலாக செய்யவேண்டும் என்ற நிலைக்கு வருகின்றனர். இதனால் ஒரு மதிப்பு கௌரவம் என்று கருதுகின்றனர். எருதுகளுக்கு போடும் மூக்கணாங்கயிற்றை ஞாபகப்படுத்தும் இந்த அடடையாளம் இந்த நாட்டில் தேவைதானா? இதில் என்ன கொளரவம ;என்று புரியவில்லை.

தற்போதைய அதி கூடிய செலவில் திருமணத்தை நடத்தி ஒரு புதிய கொளரவ திருமணச்செலவை அறிமுகம் செய்திருக்கின்றனர். கனக்கவல்ல 300 000.00 டொலர்கள். 50 000.00 டொலர்களுக்கு கீழே செலவு செய்பவர்கள் 100 000.00 க்கு வரவேண்டிய மறைமுக அழுத்தம் இங்கு போடப்படுகின்றது.

இரண்டு அல்லது மூன்று இடத்தில் வேலைசெய்து 50 ல் இருந்து 60 வயதுக்குள் மடிந்து விடக்கூடிய நிறையச்சனங்கள் 10 000.00 செலவளிப்பதற்கே மிகக்கஸ்டப்படுகின்றனர்.

இவ்வாறு பல நிகழ்வுகள் நடக்கின்றன. பெருமை, கொளரவம், சமூக மதிப்பு என்று தனிமனிதன் தீர்மானிக்கும் சில போலித்தனமான விசயங்களில் பலர் மன அழுத்ததுக்கு உள்ளகின்றனர். அது கூட ஏன் 11 பவுணில் தாலிகட்டிய பிரச்சனை முற்றி பிரிந்த தம்பதிகள் இருக்கின்றார்கள். குழந்தை அம்மாவிடமும் அப்பாவிடமும் இழுபடுகின்றது.

உண்மை தான்.

  • தொடங்கியவர்

அந்த தம்பதியினரும் கூட தம்மிடமுள்ள வரையறுக்கப்பட்ட வளத்தைக்கொண்டு (average resource) சிறிது பெரிய (above average) ஒரு இலக்கை அடைய முற்பட்டதில் தவறேதுமிருப்பதாக எனக்குப்படவில்லை.

ஒருவரது முன்னேற்றம் என்பது அவரது quality of living அதிகரிக்க வேண்டும் என்பது எனது

கருத்து. மாறி, உள்ற குவாலிற்றியையும் கெடுக்கின் அது எவ்வாறு முன்னேற்றமாகும்?

இப்போ பாருங்கள், ஒரு அறை கொண்ட அடுக்கு மாடிக் கட்டடத் தொகுதியின் ஒன்றில் நிம்மதியாக

தனது சம்பாத்தியத்ற்குள் வாழ்ந்து வந்த ஒருவர், 4000 சதுரஅடி வீட்டினை எப்படியோ வாங்கி அங்கு

குடியேறி விட்டார் என்று வைத்துக் கொள்வோம். மேலெழுந்தவாரியாய்ப் பார்க்கையில் இது ஒரு

பொருளாதார முன்னேற்றமாகவே படுகின்றது. ஆனால் பல சந்தர்ப்பங்களில் குறிப்பிடும் நபரது

பொருளாதாரத்தில் எவ்வித மாற்றமுமின்றியே இவ்வாறான வீடு வாங்கல்கள் நடை பெறுகின்றன.

வீடு விற்றல் முடிந்ததும் உசுப்பிவிட்ட விற்பனை முகவர் மறைந்து விடுவார். பின்னர் தான் வீடு

தொடர்பான வரிகள் முதலிய இதர செலவுகள் பலரிற்கு வெளிச்சமாகிறது. செலவைச் சமாளிக்க

நிலக்கீழ் அறையினை வாடகைக்கு விடுவதில் ஆரம்பித்து வீட்டின் ஒவ்வொரு அறையிலும் அந்நியர்கள்

குடியேற்றம் நிகழ்கிறது. அப்படியும் செலவுகள் தலை விரித்தாட இரண்டு மூன்று வேலை என்றாகி

வீட்டில் இருக்கும் நேரம் என்பதே மிகச் சொற்பமாக மாறுகிறது. தப்பித் தவறி ஒரு வேலை இல்லாது

போயின் பின்னர் கடன் வாங்கல் அது இது என்று துன்பங்கள் எண்ணிலை.

என்னைப் பொறுத்தவரை மேற்படி உதாரணத்தில் ஒரு அறை தொடர்மாடி வீட்டில் இருந்த நிம்மதி

நிட்சயம் பின்வந்த 4000 அடிகள் கொடுக்கப் போவதில்லை. அதுவும் நாற்பது வயதில் மேற்படி

மாற்றத்தை மேற் கொள்ளும் ஒரு தம்பதியர் குறைந்த பட்ச ஈட்டுக் கடனை மட்டுமே மீழச் செலுத்தி

வரின் 25 ஆண்டுகள் மேற்கண்டவாறு அல்லல் பட்டாலே வீட்டின் கடன் தீரும். இவ்வாறு 25 வருடம்

தொழில் புரிவோர் 65 வயதின் பின்னர் எத்தனை காலம் ஆரோக்கியமாய் தனியே வீட்டில் வாழலாம்

என்பது கேழ்விக் குறியே. அனேகமாக வைத்தியசாலையோ நீண்ட நாள் பராமரிப்பு நிலையமோ தான்

கதியாகும். ஆகவே மேலுள்ள 4000 வீடு வாங்கலை முன்னேற்றமாய் என்னால் பார்க்கமுடியாதுள்ளது.

Edited by Innumoruvan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்னுமொருவன்,

நீங்கள் கூறும் வாதத்தில் பெரும்பாலானவற்றை நான் ஏற்றுக்கொள்கிறேன். அதாவது தமது வருவாய்க்கு மேலதிகமாக வாங்கிக்க்குவிப்பவர்களைப் பற்றி நானும் முன்பு எழுதியிருந்தேன். இது எம்மாத்திரம், வீட்டுக்கு டவுன் போட கிரடிட் காட் அடித்தவர்களை எனக்குத் தெரியும். அகதிப் பேப்பரிலிருந்து landed இற்கு மாறும்போது வீடு வாங்குவதற்கான தகுதியும் வந்து விடுவதாகத் தான் பலர் நம்புகிறார்கள்.

நிற்க.

சாள்ஸ் பிக்ரன் கொலை செய்திருப்பார் என்று ஊகிக்க தேவையான ஆதாரங்கள் பல இருந்தும் அவர் குற்றவாளி என நிரூபிக்க நூற்றுக்கணக்கான மில்லியன் டொலர்களை செலவழித்து வருடக்கணக்கில் மினக்கெடும் நீதித்துறை கொண்ட ஒரு நாட்டில் இந்த தம்பதியரை தண்டிக்க முதல் அவர்கள் பக்கமும் ஏதாவது நியாயம் இருந்திருக்குமா என்று ஆராய்ந்தேன் அவ்வளவு தான்.

  • தொடங்கியவர்

இந்த தம்பதியரை தண்டிக்க முதல் அவர்கள் பக்கமும் ஏதாவது நியாயம் இருந்திருக்குமா என்று ஆராய்ந்தேன் அவ்வளவு தான்.

பண்டிதர்,

இந்தத் தம்பதியர் தண்டிக்கப்படவேண்டும் என்பதல்ல எனது எண்ணம். மாறாக

தமக்குத் தாமே பாதகத்தை ஏற்படுத்திக் கொள்கின்றார்களே என்ற ஆதங்கம்

மட்டுமே.

நீண்டநாடக்களின் பின்னர் இத்தலைப்பு வாயிலாக உங்களுடன் கருத்துப் பகிர்ந்ததில் மகிழ்ச்சி.

  • 7 years later...
  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமொருவன்,

உங்கள் ஆதங்கம் புரியும் அதேவேளை, இங்கே இன்னும் ஒரு பார்வையும் உண்டு.

அவர்கள் மார்க்கம் பக்கம் நகர்வதற்கு, 'உங்களுக்கு' சொன்ன காரணம், எமக்கு, நகைப்புக்குரியதாயினும், மனிதர்களுக்கு வாழ்க்கையின் அடுத்த கட்டம் நோக்கி உயர்வதற்கு ஒரு உந்துதல் வேண்டும்.

சாதாரணமாக வாழ்ந்து விட்டுப் போவதில் அர்த்தம் இல்லையே. Risk எடுப்பது தானே வாழ்க்கை.

எனதுஉறவினர் ஒருவர், இவ்வாறு கிழக்கு இலண்டனின், ஈஸ்ட்காம் பக்கம் இருந்து விலை அதிகமாக உள்ள பகுதியில் வீடு வாங்குவதாக சொன்ன போது நாமும் இவ்வாறு தான் ஆலோசனை சொன்னோம், ஆதங்கப்பட்டோம்.

எனினும் அவர் அந்த வீடு வாங்கும் முன்னரே, மேலதிக வருமானத்துக்கு பல திட்டங்கள் போட்டு, எமக்கு சொல்லாமலே செயல் பட தொடங்கி இருந்தார்.

ரியூசன், மனைவியின் தையல் செயல்திறனை மெருகூட்டி, பிளவுஸ்.... கேக்..... உழைப்பு.. உழைப்பு... எங்கோ உயரத்தில் உள்ளார்.

அவர் சொல்வார்: எம்மை நாமே challenge பண்ணாவிடில் வாழ்வில் முன்னேற்றம் வரப்போவதில்லை.

தபாலில் வந்த வாராந்த $100 க்கும் குறைவான ஓய்வூதிய காசோலையை பார்த்து, இப்படியே எனது வாழ்க்கை முடிவதா என்று எழுந்த 64 வயதுக் காரர் ஆரம்பித்த நிறுவனம், KFC, 50ம் ஆண்டை கொண்டாடுகிறது.

வாழ்வில் ஒரு நோக்கம், ஆர்வம், அடுத்த நிலை உயர்வுக்கான உழைப்பு இல்லாமல், ஏதோ ஒரு ஓரமாக வாழ்ந்து போகாமல், அடுத்த நிலை உயர விரும்பும், அவர்களுக்கு, உங்களுக்கு சொன்ன காரணம், வேடிக்கையாக இருந்தாலும், அதுவே அவர்களை உந்துவதாக இருக்க முடியும் என நினைக்கிறேன்.

இங்கு பலர், நல்ல வீடு கார் வசதிகள் வந்தவுடன், உறவினர், நண்பர்கள், கடன் கேட்கும் தொல்லை தவிர்க்க, ரென்சன், தேவையில்லாமல் வீடொன்டை வாங்கி நாங்க படுற பாடு, நாய் படாப்பாடு எண்டு விடுவினம் பாருங்க கதை.... :D

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.