Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

TN Elections Exit poll results:| சி வோட்டர் முதல் இந்தியா டுடே வரை..! - கருத்துக்கணிப்பு முடிவுகள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய தேர்தலாக இது இருக்கிறது. அதனால் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளுக்கும் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

5 முனை போட்டியாக நடைபெற்ற இந்தத் தேர்தலில் , அதிமுகவின் சார்பில் எடப்பாடி கே பழனிசாமி, திமுகவின் சார்பில் மு.க.ஸ்டாலினும் முதல்வர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு தேர்தலை சந்தித்தனர்.டி.டி.வி தினகரன், ( அமமுக ) சீமான், ( நாம் தமிழர் கட்சி) கமல்ஹாசன் ( மக்கள் நீதி மய்யம்) உள்ளிட்டோர் முதல்வர் வேட்பாளர்களாக முன்னிறுத்தப்பட்டு களமிறங்கினர். அதிமுக-பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக, தமாக உட்பட மொத்தம் 10 கட்சிகள் இணைந்து தேர்தலை சந்தித்திருக்கின்றன. திமுக-காங்கிரஸ் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் மதிமுக, விசிக,கம்யூனிஸ்ட் என மொத்தமாக 9 கட்சிகள் இணைந்து இந்தத் தேர்தலைச் சந்தித்துள்ளன. இரண்டு பிரதான கட்சிகள் தவிர, டிடிவி தினகரனின் அமமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக, எஸ்டிபிஐ உள்ளிட்ட 8 கட்சிகள் இணைந்து தேர்தலை சந்தித்தன. கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் தலைமையில், சமக, ஐஜேகே என மொத்தமாக 12 கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்திருக்கின்றன.

TN Elections Exit poll results:| சி வோட்டர் முதல் இந்தியா டுடே வரை..! - கருத்துக்கணிப்பு முடிவுகள்!
 
மொத்தமுள்ள 234 தொகுதிகளில், போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களின் எண்ணிக்கை 3,998. இதில் 3,585 பேர் ஆண்களும், 411 பேர் பெண்களும் மற்றுமுள்ள 2 பேர் மூன்றாம்பாலினத்தவர்களும் ஆவார்கள். கடந்த ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற்ற தேர்தல் வாக்குப்பதிவில் மொத்தம் 72.78% சதவீதவாக்குகள் பதிவாகியிருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது.

தமிழகம் மட்டுமல்லாமல், கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களிலும் தேர்தல் நடைபெற்றது. அஸ்ஸாமில் 3 கட்டங்களாகவும், மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாகவும், மீதம் உள்ள தமிழகம், கேரளா, புதுச்சேரி மாநிலங்களில் தலா ஒரே கட்டமாகவும் வாக்குப்திவு நடைபெற்றது. மேற்கு வங்கத்தில் இன்று 8-வது மற்றும் இறுதிகட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனை தொடர்ந்து தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் இன்று இரவு 7 மணிக்கு மேல் வெளியாகும். அதாவது, மேற்கு வங்கத்தில் 8-வது கட்ட வாக்குப்பதிவு நேரம் முடிந்த பின்னர். .

கடந்த காலங்களில் தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் மறைந்த பின்னர் நடைபெறும் முதல் சட்டப்பேரவைத் தேர்தல் என்பதால், மக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய தேர்தலாக இது இருக்கிறது. அதனால் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளுக்கும் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

ரிபப்ளிக் டிவி - சி.என்.எக்ஸ் - கணிப்பு!

ரிபப்ளிக் டிவி - சி.என்.எக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நடத்திய இந்த கருத்துக்கணிப்பின் முடிவு வெளியாகி உள்ளது.

திமுக கூட்டணி: 160-170

அதிமுக கூட்டணி - 58-68

அமமுக கூட்டணி - 4-6

ம.நீ.ம கூட்டணி - 0-2

சி வோட்டர் - தேர்தலுக்குப் பிந்தைய கருத்துகணிப்பு முடிவுகள்..!

சி வோட்டர் நிறுவனம் நடத்திய இந்த கருத்துக்கணிப்பின் முடிவு வெளியாகி உள்ளது.

திமுக கூட்டணி: 160-172

அதிமுக கூட்டணி - 58-70

அமமுக கூட்டணி - 0-4

ம.நீ.ம கூட்டணி - 0

மற்றவை - 0

India Today-Axis My India நிறுவனத்தின் கருத்து கணிப்பு முடிவுகள்:

India Today-Axis My India நிறுவனத்தின் கருத்து கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது.

திமுக கூட்டணி: 175-195

அதிமுக கூட்டணி - 38-54

அமமுக கூட்டணி - 1-2

ம.நீ.ம கூட்டணி - 0-2

மற்றவை - 0

தொடர்ந்து பல்வேறு செய்தி நிறுவனங்கள் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாக உள்ளது...!
TN Elections Exit poll results:| சி வோட்டர் முதல் இந்தியா டுடே வரை..! - கருத்துக்கணிப்பு முடிவுகள்!| Tamil Nadu Election Exit Poll Results 2021 - Vikatan

Edited by பிழம்பு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் வெற்றி யாருக்கு? திமுக Vs அதிமுக

ஐந்து மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல்கள் முடிவடைந்திருக்கும் நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சியைப் பிடிக்கலாம் என தெரிவிக்கின்றன. புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரசிற்கு சாதகமாக கருத்துக் கணிப்புகள் வெளியாகியிருக்கின்றன.

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், புதுச்சேரி, அசாம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு சமீபத்தில் தேர்தல் நடைபெற்றது. இதில் மேற்கு வங்கத்திற்கு மட்டும் எட்டு கட்டங்களாக நடந்த தேர்தல் இன்று நிறைவடைந்தது.

இதையடுத்து பல தொலைக்காட்சிகளும் செய்தி நிறுவனங்களும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை இரவு 7 மணிக்குப் பிறகு வெளியிட்டு வருகின்றன.

ரிபப்ளிக் - சிஎன்எக்ஸ் தொலைக்காட்சி நடத்திய கருத்துக் கணிப்பின்படி தமிழ்நாட்டில் தி.மு.கவுக்கு 160 முதல் 170 இடங்கள் கிடைக்குமென்றும் அ.தி.மு.கவுக்கு 58 - 68 இடங்கள் கிடைக்குமென்றும் மக்கள் நீதி மய்யத்திற்கு 2 இடங்களும் அ.ம.மு.கவுக்கு 4-6 இடங்களும் கிடைக்குமென்றும் கூறப்பட்டுள்ளது.

ஏபிபி - சி ஓட்டர் நடத்திய கருத்துக் கணிப்பில் தி.மு.கவுக்கு 160 - 172 இடங்களும் அ.தி.மு.கவுக்கு 58 - 70 இடங்களும் மக்கள் நீதி மய்யத்திற்கு 2 இடங்களும் அ.ம.மு.கவுக்கு 2 இடங்களும் மற்றவர்களுக்கு 0- 3 இடங்களும் கிடைக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

Today's Chanakya கருத்துக் கணிப்பில் தி.மு.கவுக்கு 164-186 இடங்களும் அ.தி.மு.கவுக்கு 46 - 68 இடங்களும் மற்றவர்கள் 0 - 8 இடங்களில் வெல்வார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்தியா டுடே Axis My India நடத்திய கருத்துக் கணிப்பில் தி.மு.கவுக்கு 175- 195 இடங்களும் அ.தி.மு.கவுக்கு 38 - 54 இடங்களும் அ.ம.முகவுக்கு 1-2 இடங்களும் ம.நீ.மவுக்கு 0 -2 இடங்களும் கிடைக்குமெனக் கூறப்பட்டுள்ளது.

புதுச்சேரியைப் பொறுத்தவரை, பெரும்பாலான செய்தி நிறுவனங்கள் என்.ஆர். காங்கிரஸ் வெற்றிபெறுமென்றே கணித்துள்ளன. ரிபப்ளிக் - சிஎன்எக்ஸ் கருத்துக் கணிப்பில் என்.ஆர். காங்கிரஸ் கூட்டணிக்கு 16 - 20 இடங்களும் காங்கிரஸ் கூட்டணிக்கு 11 - 13 இடங்களும் கிடைக்குமெனக் கூறப்பட்டுள்ளது.

ஏபிபி - சி ஓட்டர் நடத்திய கருத்துக் கணிப்பில் என்.ஆர். காங்கிரஸ் கூட்டணிக்கு 19 - 23 இடங்களும் காங்கிரஸ் கூட்டணிக்கு 6 - 10 இடங்களும் மற்றவர்களுக்கு 1 - 2 இடங்களும் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.

தந்தி டி.வி கருத்துக் கணிப்பு

தந்தி டிவியின் கருத்துக் கணிப்புகளின் படி, அ.தி.மு.க. கூட்டணி 68 இடங்களில் வெல்லும் என்றும் தி.மு.க. 133 இடங்களில் வெல்லும் என்றும் 33 தொகுதிகளில் கடும் போட்டி நிலவுமென்றும் கூறப்பட்டுள்ளது.

இந்தக் கருத்துக் கணிப்புகள் குறித்த மூத்த பத்திரிகையாளர்களின் கருத்துகள் மாறுபடுகின்றன.

தி.மு.கவுக்கு பெரிய அளவில் வெற்றிபெறும் வாய்ப்பு இல்லை என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன்.

"இந்தத் தேர்தலில், கணக்குகளின்படி பார்த்தால் தி.மு.கவுக்கு சாதகமான நிலைதான் இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் கொடுத்த அ.தி.மு.க. செய்த நாளிதழ் விளம்பரம், ரேடியோ விளம்பரம், செலவழித்த பணம் ஆகியவற்றை வைத்துப் பார்க்கும்போது இந்தக் கருத்துக் கணிப்புகளை நம்ப முடியவில்லை. தவிர, வன்னியர்களுக்கு அளித்த உள் ஒதுக்கீடு, மருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு போன்றவையும் ஆளும் அரசுக்கு சாதகம். ஆகவே என்னால் இந்தக் கருத்துக் கணிப்புகளை முழுமையாக நம்ப முடியவில்லை. இதையெல்லாம் மீறி தி.மு.க. வெற்றிபெற்றாலும் 130 இடங்களைப் பெறும். இவ்வளவு பெரிய வெற்றி கிடைக்க வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன்" என்கிறார் மூத்த பத்திரிகையாளரான பிரியன்.

ஆனால், இது எதிர்பார்த்த வெற்றிதான் என்கிறார் ஃப்ரன்ட்லைன் இதழின் மூத்த பத்திரிகையாளரான ஆர்.கே. ராதாகிருஷ்ணன். "நான் தி.மு.கவுக்கு 150 இடங்கள் கிடைக்குமென நினைத்தேன். ஆனால், கருத்துக் கணிப்புகளில் 160 - 190 இடங்கள் கிடைக்கும் என்கிறார்கள். இது முழுக்க முழுக்க மோதி எதிர்ப்பு ஓட்டுதான். இதில் எடப்பாடிக்கோ தி.மு.கவுக்கோ எந்தப் பங்கும் இல்லை. மோதி எந்தப் பக்கம் இருக்கிறாரோ அதற்கு எதிர் பக்கம் நிச்சயம் வெற்றிபெறும். அதுதான் நடந்திருக்கிறது" என்கிறார் ராதாகிருஷ்ணன்.

தமிழ்நாடு தேர்தல் 2021: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் வெற்றி யாருக்கு? திமுக Vs அதிமுக - BBC News தமிழ்

  • கருத்துக்கள உறவுகள்

இன்றில்லாவிடில் என்றாவது தமிழ் பிள்ளைகள் ஆட்சி ஏறத்தான் செய்வோம்.

இமயம் சென்ற சேரனின், கடாரம் சென்ற சோழனின் வளநாடு தமிழ்நாடு. அந்த வீர மரபினர் நாங்கள். சிங்களனை அடக்கி ஆண்டவர்கள் எம் பூட்டனும் பாட்டனும்.

ஒரு தலைவன் வரவுக்காய் காத்திருந்தோம்...காத்திருப்பு முடிந்தது. இனி நீ...காத்திரு பகையே...எம் வெற்றிக்காய்...உன் தோழ்விற்காய்.

  • கருத்துக்கள உறவுகள்

உளவியலை சிதைக்கும் எக்சிட் போல்:சீமான்

spacer.png

"கருத்துக் கணிப்புகள் என்ற பெயரில் வரும் கருத்துத் திணிப்புகளை நாம் ஒருபோதும் பொருட்படுத்த தேவையில்லை. இதுபோன்ற கருத்துத் திணிப்புகள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டோரின் உளவியலை சிதைப்பதற்காக, அரசியல் உள்நோக்கத்துடன் உருவாக்கப்படுபவை"என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 29 ஆம் தேதி மாலை தேர்தல் நடந்த மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகான எக்சிட் போல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் பெரும்பாலும் தமிழகத்தில் திமுகவே ஆட்சி அமைக்கும் என்று தெரிவிக்கப்பட்டன.

இதேபோல் மேற்கு வங்காளத்தில் மம்தா மீண்டும் ஆட்சியைத் தக்க வைப்பார் என்றும், அஸ்ஸாமில் பாஜகவுக்கு அதிக வாய்ப்புகள் என்றும் கணிப்புகள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் எக்சிட் போல் குறித்த தனது கருத்துகளை அறிக்கையாக நேற்று (ஏப்ரல் 29) வெளியிட்டுள்ளார்.

"நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தல் 2021 நமக்கு மகத்தான நம்பிக்கைகளை வழங்கிய தேர்தலாக நடந்து முடிந்திருக்கிறது. கடுமையான உங்களது உழைப்பு மகத்தான வெற்றிகளுக்கு அடித்தளமாக மாறி இருக்கிறது. வியர்வை வடிந்த உங்களது முகங்கள் வெற்றிகளுக்கான புத்தொளி வீசுகிற ஒரு விடியலின் அடையாளங்களாய் மாறி இருக்கின்றன. பெரிய பொருளாதார வசதிகள், குடும்ப பின்புலம் இன்றி, சாதி மத உணர்வை சாகடித்து தமிழர் என்கின்ற தேசிய இனத்தின் விடியலுக்காக , நம் இனத்தின் அரசியல் அங்கீகாரத்திற்காக கடும் உழைப்பை சிந்தி நீங்கள் பாடுபட்டது ஒருபோதும் வீண் போகாது.

யாரும் செய்யத் துணியாத புரட்சிகர செயல்களை இந்தத் தேர்தலில் நாம் துணிந்து செய்திருக்கிறோம். இந்திய தேர்தல் அரசியல் வரலாற்றில் முதன்முறையாக 50 விழுக்காடு பெண்களை வேட்பாளர்களாக நிறுத்திய சாதனையை நாம் நிகழ்த்தி இருக்கிறோம். ஆணுக்குப் பெண் சமம் அல்ல, ஆணும் பெண்ணும் சமம் என்பதை உலகத்திற்கு காட்ட நாளை நாம் தமிழர் கட்சியின் ஆட்சியின் அமைச்சரவையில் 50 விழுக்காடு பெண்களுக்கு இடம், மாநில சட்டசபையின் சபாநாயகராக ஒரு பெண் என பல கனவுகளை நாம் நிறைவேற்ற போகின்ற காலம் நமக்கு கனிந்து வருகிறது.

பொதுத் தொகுதியில் ஆதி தமிழருக்கு இடம், இஸ்லாமிய தமிழர்களுக்கு மற்ற எல்லாக் கட்சிகளை காட்டிலும் அதிக வாய்ப்புகள், தமிழர் நிலத்தில் காலம் காலமாய் புறக்கணிக்கப்பட்ட பல எளிய சமூகங்களுக்கு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு என பல முத்திரைகளை நாம் இந்த தேர்தலில் பதித்திருக்கிறோம். சமரசம் இல்லாத நமது போர்க்குணம் பல இலட்சக்கணக்கான எளிய வாக்காளர்களின் வாக்குகளை நமக்குப் பெற்றுத் தந்திருக்கிறது.

வாக்குக்கு காசு கொடுக்காமல் 60 ஆண்டு கால அரசியல் சீரழிவை பற்றி பேசி, ஆற்றுமணல் காடு வளம், கனிம வளம் கொள்ளை அடிக்கப்பட்ட அவலங்களை பிரச்சாரம் செய்து, மாற்று அரசியல் என்றால் என்ன என்பதனை மக்களின் மனதில் பதிகிற அளவு உரத்த குரலில் முழங்கி, நாம் ஆற்றிய தேர்தல் பணிகள் தமிழ்த் தேசிய இன விடுதலை வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை.

வெறும் மனிதர்களுக்கு மட்டுமல்ல, இந்தப் பூவுலகில் வாழ்கின்ற அனைத்து உயிர்களுக்குமானது எங்களது அரசியல், என்பதனை உணர்த்த நமக்கு கிடைத்த வாய்ப்பினை அனைத்தையும் சூழலியல் சார்ந்த கருத்துக்களை கொண்டு போய் சேர்க்கின்ற பிரச்சாரங்களாக மாற்றினோம்.

நம் மொழி காக்க நம் இனம் காக்க நம் மண் காக்க நம் மானம் காக்க இன்னுயிர்த் தந்த மாவீரர்களின் மூச்சுக்காற்று நம்மை ஒவ்வொரு நொடியும் வழி நடத்தியது. நம் உயிர்த் தலைவர், என் உயிர் அண்ணன் மேதகு வே பிரபாகரன் அவர்களின் ஆன்ம பலம் நமக்கு வழிகாட்டியாக நின்றது.

கடுமையாக உழைத்து கம்பீரமாக இந்த தேர்தலை எதிர்கொண்டிருக்கிற உங்கள் அனைவரையும் நான் மனதார பாராட்டுகிறேன். வாழ்த்துகிறேன்.

நம்பிக்கையான பல செய்திகள் நமக்கு வந்து கொண்டிருக்கின்றன. பெரும் மாற்றம் ஒன்றுக்கு தமிழகம் தயாராகிவிட்டது.

பெண்கள், புதிய வாக்காளர்கள், மாற்று அரசியலின் பாற் நம்பிக்கை கொண்டவர்கள், படித்த இளைஞர்கள், என சமூகத்தின் பரவலான மக்கள் நமக்கு வாக்களித்திருக்கிறார்கள் என்கின்ற நம்பிக்கைச் செய்திகள் தொடர்ச்சியாக நமக்கு கிடைத்துக் கொண்டிருக்கின்றன. முன் எப்போது காட்டிலும் மகத்தான வெற்றிகளை இந்தத் தேர்தலில் நாம் அடைவோம் என்பது உறுதி. அந்த நம்பிக்கை தருகிற பலத்தோடு வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிகழ்வுகளில் முழுமையாக பங்கேற்று நமது இனமானக் கடமையை பூர்த்தி செய்வோம்" என்று கட்சியினருக்குக் கட்டளையிட்டுள்ள சீமான் எக்சிட் போல் பற்றியும் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.

"கருத்துக் கணிப்புகள் என்ற பெயரில் வரும் கருத்துத் திணிப்புகளை நாம் ஒருபோதும் பொருட்படுத்த தேவையில்லை. இதுபோன்ற கருத்துத் திணிப்புகள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டோரின் உளவியலை சிதைப்பதற்காக, அரசியல் உள்நோக்கத்துடன் உருவாக்கப்படுபவை. கடந்த காலத்தில் கருத்துக்கணிப்புகள் என்ற பெயரில் வெளியான எதையும் சரியானவையாக இருந்ததில்லை என்பதுதான் கடந்த கால வரலாறு. எனவே இது போன்ற எதிர்மறைச் செய்திகளை, புறக்கணித்துவிட்டு நம்பிக்கைகளோடு ‌ வாக்கு எண்ணிக்கை நிகழ்விற்கு நாம் தயாராவோம்.

2.05.2021 (ஞாயிற்றுக்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாள். குறித்த நேரத்திற்கு சென்று, நோய்த் தொற்றுக் கால விதிகளை கடைபிடித்து வாக்கு எண்ணிக்கை நிகழ்வினை இராணுவ ஒழுங்கோடு நமது உறவுகள் நிகழ்த்திட வேண்டும்.

நமது கடும் உழைப்பு எந்த அளவிற்கு சமூகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று சேர்ந்திருக்கிறது என்பதனை கண்டிட முதல் வாக்கு எண்ணும் நொடியில் இருந்து இறுதி வாக்கு எண்ணும் நொடி வரை இருந்திட வேண்டும்.

கடுமையான நோய் தொற்று காலமான இக்காலகட்டத்தில் தனிமனித இடைவெளியை பின்பற்றி, முழுமையாக மூக்கு வாய் பகுதிகளை மறைக்கின்ற முகக் கவசங்கள் அணிந்து , கிருமி போக்கிகளை பயன்படுத்தி வாக்கு எண்ணிக்கை மையங்களில் நாம் தமிழர் உறவுகள் மிகுந்த கவனத்தோடு செயல்படுங்கள்"என்று கூறியுள்ளார் சீமான்.

https://minnambalam.com/politics/2021/04/30/24/exit-poll-destroys-psychological-hope-seeman

  • கருத்துக்கள உறவுகள்

கொங்கு நாடு - பாண்டிய நாடு: அதிமுகவைக் கலக்கும் எக்சிட் போல் முடிவுகள்!

spacer.png
 
ஏப்ரல் 29ஆம் தேதி வெளியான எக்சிட் போல் முடிவுகள் அனைத்திலுமே தமிழகத்தில் திமுகதான் ஆட்சியமைக்கும் என்று உறுதிபட தெரிவித்திருக்கின்றன.

கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலிலும் இதே போல பல்வேறு எக்சிட் போல் முடிவுகள் திமுகவுக்கு சாதகமாக வந்தபோதும் தேர்தல் முடிவுகள் வேறு மாதிரி இருந்தன. ஆனால் அன்றைய 2016 தேர்தலில் தமிழகத்தைப் பொறுத்தவரை சி ஓட்டர்ஸ் நிறுவனத்தின் எக்சிட் போல் முடிவுகள் தேர்தல் முடிவுகளோடு பெரும்பாலும் பொருந்தின.

இந்த வகையில் இந்த 2021 தேர்தலில் ஏ பி பி - சி ஓட்டர்ஸ் நிறுவனத்தின் எக்சிட் போல் முடிவுகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

ஏ பி பி - சி ஓட்டர்ஸ் நிறுவனத்தின் 2021 தமிழ்நாடு எக்சிட் போல் கருத்துக்கணிப்பில் திமுகவே ஆட்சியைப் பிடிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது மட்டுமல்ல, சி ஓட்டர்ஸ் நிறுவனம் தமிழகத்தின் ஒவ்வொரு மண்டல ரீதியாகவும் யாருக்கு அதிக இடங்களை வெல்ல வாய்ப்பு என்றும் தனது எக்சிட் போல் முடிவுகளில் தெரிவித்துள்ளது.

அதன்படி

சோழ நாடு காவிரி டெல்டா மண்டலம்

திமுக 32 - 34

அதிமுக 7 - 9

அமமுக 1

சென்னை மாநகரம்

திமுக 11 - 13

அதிமுக 3 - 5

கொங்கு மண்டலம்

திமுக 33 - 35

அதிமுக 17 -19

பல்லவ நாடு (வ‌ட தமிழ்நாடு)

திமுக 36 - 38

அதிமுக 8 -10

அமமுக 1

பாண்டிய நாடு தென் மாவட்டம்

திமுக 33 - 35

அதிமுக 21 - 23

அமமுக 2

spacer.png

இவ்வாறு சி ஓட்டார்ஸ் நிறுவனம் தனது மண்டல வாரியான தமிழ்நாடு எக்ஸிட் போல் முடிவுகளை வெளியிட்டுள்ளது.

இதன்படி திமுக டெல்டா, தென்மாவட்டங்கள், வட மாவட்டங்கள், கொங்கு மாவட்டங்கள், சென்னை மாநகரம் ஆகிய பகுதிகளில் அதிக இடங்களில் வெற்றி பெறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக எம்ஜிஆர், ஜெயலலிதா காலங்களிலிருந்து அதிமுகவுக்கு கொங்கு எனப்படும் மேற்கு மாவட்டங்கள் கோட்டையாக விளங்கின. கடந்த சட்டமன்றத் தேர்தலில்கூட கொங்கு பகுதியில் அதிக அளவு பெற்ற சட்டமன்றத் தொகுதிகள்தான் அதிமுகவை ஆட்சிக்கு அழைத்துச் சென்றது.

இம்முறை கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் முதலமைச்சராகவும் முதலமைச்சர் வேட்பாளராகவும் நிறுத்தப்பட்ட நிலையில்... கொங்கு மண்டலத்தில் அதிமுகவை விட இரு மடங்கு இடங்களை திமுக பெறும் என்று இந்த எக்சிட் போல் கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமியின் நேரடி கண்காணிப்பிலும், அவரது தளபதிகளாக எஸ் பி வேலுமணி, தங்கமணி உள்ளிட்ட அமைச்சர்களின் பொறுப்பிலும் இருக்கும் கொங்கு மண்டலம் இந்த முறை அதிமுகவுக்கு சாதகமாக இருக்காது என்கிறது சி ஓட்டர்ஸ் எக்சிட் போல்.

அதேநேரம் ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பு வகிக்கும் தென்மாவட்டங்களில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தால் அதிமுக பெரிய அளவு அடிவாங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்... சி ஓட்டர்ஸ் எக்சிட் போல் முடிவுகளின்படி கொங்கு நாட்டைவிட தென்மாவட்டங்களில் அதிமுக சிறப்பாக பர்பாமன்ஸ் செய்திருப்பதாக தெரிகிறது.

இது கட்சிகள் மத்தியில் மட்டுமல்லாமல், அதிமுக என்ற கட்சிக்கு உள்ளேயும் சலசலப்பைக் கிளப்பியுள்ளது. இந்த முடிவுகள் தேர்தல் முடிவுகளோடு பொருந்திப் போகும் பட்சத்தில் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுகவில் அதிகார யுத்தம் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையே மேலும் அதிகமாகும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

https://minnambalam.com/politics/2021/04/30/25/kongu-south-cvoters-exit-poll-resut-admk-ops-eps

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

உளவியலை சிதைக்கும் எக்சிட் போல்:சீமான்

spacer.png

"கருத்துக் கணிப்புகள் என்ற பெயரில் வரும் கருத்துத் திணிப்புகளை நாம் ஒருபோதும் பொருட்படுத்த தேவையில்லை. இதுபோன்ற கருத்துத் திணிப்புகள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டோரின் உளவியலை சிதைப்பதற்காக, அரசியல் உள்நோக்கத்துடன் உருவாக்கப்படுபவை"என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 29 ஆம் தேதி மாலை தேர்தல் நடந்த மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகான எக்சிட் போல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் பெரும்பாலும் தமிழகத்தில் திமுகவே ஆட்சி அமைக்கும் என்று தெரிவிக்கப்பட்டன.

இதேபோல் மேற்கு வங்காளத்தில் மம்தா மீண்டும் ஆட்சியைத் தக்க வைப்பார் என்றும், அஸ்ஸாமில் பாஜகவுக்கு அதிக வாய்ப்புகள் என்றும் கணிப்புகள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் எக்சிட் போல் குறித்த தனது கருத்துகளை அறிக்கையாக நேற்று (ஏப்ரல் 29) வெளியிட்டுள்ளார்.

"நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தல் 2021 நமக்கு மகத்தான நம்பிக்கைகளை வழங்கிய தேர்தலாக நடந்து முடிந்திருக்கிறது. கடுமையான உங்களது உழைப்பு மகத்தான வெற்றிகளுக்கு அடித்தளமாக மாறி இருக்கிறது. வியர்வை வடிந்த உங்களது முகங்கள் வெற்றிகளுக்கான புத்தொளி வீசுகிற ஒரு விடியலின் அடையாளங்களாய் மாறி இருக்கின்றன. பெரிய பொருளாதார வசதிகள், குடும்ப பின்புலம் இன்றி, சாதி மத உணர்வை சாகடித்து தமிழர் என்கின்ற தேசிய இனத்தின் விடியலுக்காக , நம் இனத்தின் அரசியல் அங்கீகாரத்திற்காக கடும் உழைப்பை சிந்தி நீங்கள் பாடுபட்டது ஒருபோதும் வீண் போகாது.

யாரும் செய்யத் துணியாத புரட்சிகர செயல்களை இந்தத் தேர்தலில் நாம் துணிந்து செய்திருக்கிறோம். இந்திய தேர்தல் அரசியல் வரலாற்றில் முதன்முறையாக 50 விழுக்காடு பெண்களை வேட்பாளர்களாக நிறுத்திய சாதனையை நாம் நிகழ்த்தி இருக்கிறோம். ஆணுக்குப் பெண் சமம் அல்ல, ஆணும் பெண்ணும் சமம் என்பதை உலகத்திற்கு காட்ட நாளை நாம் தமிழர் கட்சியின் ஆட்சியின் அமைச்சரவையில் 50 விழுக்காடு பெண்களுக்கு இடம், மாநில சட்டசபையின் சபாநாயகராக ஒரு பெண் என பல கனவுகளை நாம் நிறைவேற்ற போகின்ற காலம் நமக்கு கனிந்து வருகிறது.

பொதுத் தொகுதியில் ஆதி தமிழருக்கு இடம், இஸ்லாமிய தமிழர்களுக்கு மற்ற எல்லாக் கட்சிகளை காட்டிலும் அதிக வாய்ப்புகள், தமிழர் நிலத்தில் காலம் காலமாய் புறக்கணிக்கப்பட்ட பல எளிய சமூகங்களுக்கு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு என பல முத்திரைகளை நாம் இந்த தேர்தலில் பதித்திருக்கிறோம். சமரசம் இல்லாத நமது போர்க்குணம் பல இலட்சக்கணக்கான எளிய வாக்காளர்களின் வாக்குகளை நமக்குப் பெற்றுத் தந்திருக்கிறது.

வாக்குக்கு காசு கொடுக்காமல் 60 ஆண்டு கால அரசியல் சீரழிவை பற்றி பேசி, ஆற்றுமணல் காடு வளம், கனிம வளம் கொள்ளை அடிக்கப்பட்ட அவலங்களை பிரச்சாரம் செய்து, மாற்று அரசியல் என்றால் என்ன என்பதனை மக்களின் மனதில் பதிகிற அளவு உரத்த குரலில் முழங்கி, நாம் ஆற்றிய தேர்தல் பணிகள் தமிழ்த் தேசிய இன விடுதலை வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை.

வெறும் மனிதர்களுக்கு மட்டுமல்ல, இந்தப் பூவுலகில் வாழ்கின்ற அனைத்து உயிர்களுக்குமானது எங்களது அரசியல், என்பதனை உணர்த்த நமக்கு கிடைத்த வாய்ப்பினை அனைத்தையும் சூழலியல் சார்ந்த கருத்துக்களை கொண்டு போய் சேர்க்கின்ற பிரச்சாரங்களாக மாற்றினோம்.

நம் மொழி காக்க நம் இனம் காக்க நம் மண் காக்க நம் மானம் காக்க இன்னுயிர்த் தந்த மாவீரர்களின் மூச்சுக்காற்று நம்மை ஒவ்வொரு நொடியும் வழி நடத்தியது. நம் உயிர்த் தலைவர், என் உயிர் அண்ணன் மேதகு வே பிரபாகரன் அவர்களின் ஆன்ம பலம் நமக்கு வழிகாட்டியாக நின்றது.

கடுமையாக உழைத்து கம்பீரமாக இந்த தேர்தலை எதிர்கொண்டிருக்கிற உங்கள் அனைவரையும் நான் மனதார பாராட்டுகிறேன். வாழ்த்துகிறேன்.

நம்பிக்கையான பல செய்திகள் நமக்கு வந்து கொண்டிருக்கின்றன. பெரும் மாற்றம் ஒன்றுக்கு தமிழகம் தயாராகிவிட்டது.

பெண்கள், புதிய வாக்காளர்கள், மாற்று அரசியலின் பாற் நம்பிக்கை கொண்டவர்கள், படித்த இளைஞர்கள், என சமூகத்தின் பரவலான மக்கள் நமக்கு வாக்களித்திருக்கிறார்கள் என்கின்ற நம்பிக்கைச் செய்திகள் தொடர்ச்சியாக நமக்கு கிடைத்துக் கொண்டிருக்கின்றன. முன் எப்போது காட்டிலும் மகத்தான வெற்றிகளை இந்தத் தேர்தலில் நாம் அடைவோம் என்பது உறுதி. அந்த நம்பிக்கை தருகிற பலத்தோடு வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிகழ்வுகளில் முழுமையாக பங்கேற்று நமது இனமானக் கடமையை பூர்த்தி செய்வோம்" என்று கட்சியினருக்குக் கட்டளையிட்டுள்ள சீமான் எக்சிட் போல் பற்றியும் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.

"கருத்துக் கணிப்புகள் என்ற பெயரில் வரும் கருத்துத் திணிப்புகளை நாம் ஒருபோதும் பொருட்படுத்த தேவையில்லை. இதுபோன்ற கருத்துத் திணிப்புகள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டோரின் உளவியலை சிதைப்பதற்காக, அரசியல் உள்நோக்கத்துடன் உருவாக்கப்படுபவை. கடந்த காலத்தில் கருத்துக்கணிப்புகள் என்ற பெயரில் வெளியான எதையும் சரியானவையாக இருந்ததில்லை என்பதுதான் கடந்த கால வரலாறு. எனவே இது போன்ற எதிர்மறைச் செய்திகளை, புறக்கணித்துவிட்டு நம்பிக்கைகளோடு ‌ வாக்கு எண்ணிக்கை நிகழ்விற்கு நாம் தயாராவோம்.

2.05.2021 (ஞாயிற்றுக்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாள். குறித்த நேரத்திற்கு சென்று, நோய்த் தொற்றுக் கால விதிகளை கடைபிடித்து வாக்கு எண்ணிக்கை நிகழ்வினை இராணுவ ஒழுங்கோடு நமது உறவுகள் நிகழ்த்திட வேண்டும்.

நமது கடும் உழைப்பு எந்த அளவிற்கு சமூகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று சேர்ந்திருக்கிறது என்பதனை கண்டிட முதல் வாக்கு எண்ணும் நொடியில் இருந்து இறுதி வாக்கு எண்ணும் நொடி வரை இருந்திட வேண்டும்.

கடுமையான நோய் தொற்று காலமான இக்காலகட்டத்தில் தனிமனித இடைவெளியை பின்பற்றி, முழுமையாக மூக்கு வாய் பகுதிகளை மறைக்கின்ற முகக் கவசங்கள் அணிந்து , கிருமி போக்கிகளை பயன்படுத்தி வாக்கு எண்ணிக்கை மையங்களில் நாம் தமிழர் உறவுகள் மிகுந்த கவனத்தோடு செயல்படுங்கள்"என்று கூறியுள்ளார் சீமான்.

https://minnambalam.com/politics/2021/04/30/24/exit-poll-destroys-psychological-hope-seeman

அண்ணன் சீமான் சொல்வது போல், யாரும் கலங்க வேண்டாம் உறவுகளே. நமது உழைப்புக்கான தீர்ப்பு மே2 இல் கிட்டும்.

கிட்டாது போகினும் தொடர்ந்து உழைப்போம். இன விடுதலை ஒன்றே இலக்கு.

அண்ணன் சென்னையில் (அ)நாகரீக மயப்பட்ட நாடார் குடி சொந்தங்களை நம்பாது, சிவகங்கை சீமையில் கேட்டிருந்தால் நாடார், தேவர், மறவர், கள்ளர் இன்னும் பல தமிழ் குடிகளின் ஆதரவு கிட்டி இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழகன் said:

அண்ணன் சென்னையில் (அ)நாகரீக மயப்பட்ட நாடார் குடி சொந்தங்களை நம்பாது, சிவகங்கை சீமையில் கேட்டிருந்தால் நாடார், தேவர், மறவர், கள்ளர் இன்னும் பல தமிழ் குடிகளின் ஆதரவு கிட்டி இருக்கும்.

சாதிகளை ஒழிக்க சாதி ஓட்டுக்களைத்தான் நம்பியிருக்கவேண்டும் என்று சொல்கின்றீர்கள்😂😂

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, கிருபன் said:

சாதிகளை ஒழிக்க சாதி ஓட்டுக்களைத்தான் நம்பியிருக்கவேண்டும் என்று சொல்கின்றீர்கள்😂😂

அதை தானே திமுகவும் கூட்டு அணிகளும் நம்பியிருக்கினம்!

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

அதை தானே திமுகவும் கூட்டு அணிகளும் நம்பியிருக்கினம்!

சரிதான். பேசாமல் நாம் திராவிடர் கட்சி என்று பெயரை வைத்திருக்கலாம்!

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

சாதிகளை ஒழிக்க சாதி ஓட்டுக்களைத்தான் நம்பியிருக்கவேண்டும் என்று சொல்கின்றீர்கள்😂😂

சாதி வேறு, தமிழ் குடி வேறு. 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழகன் said:

சாதி வேறு, தமிழ் குடி வேறு. 

நல்லது.. சாதியை தமிழ்க்குடி என்று பெயர் மாற்றினால் ஒரே நாளில் சாதியை ஒழிக்கலாம்😜

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, கிருபன் said:

நல்லது.. சாதியை தமிழ்க்குடி என்று பெயர் மாற்றினால் ஒரே நாளில் சாதியை ஒழிக்கலாம்😜

குடிகளை அழிக்க வேண்டிய தேவை இல்லை. 

அண்ணன் சீமான் வரைபில் இருக்கிறது. ஆட்சிக்கு வந்ததும் குடிவாரி கணக்கெடுப்பு.

அதன் பின் தமிழ் குடிகளுக்கு அனைத்திலும் முன்னுரிமை. 

ஏனைய குடிகள் வாழலாம் அல்லது ஆந்திரா கிளம்பலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

சரிதான். பேசாமல் நாம் திராவிடர் கட்சி என்று பெயரை வைத்திருக்கலாம்!

அப்பிடி தான் கதை போகுதென்று தீவிர தமிழ்தேசியவாதிகள் எதிர்க்கினம் அண்ணை.

41 minutes ago, தமிழகன் said:

குடிகளை அழிக்க வேண்டிய தேவை இல்லை. 

அண்ணன் சீமான் வரைபில் இருக்கிறது. ஆட்சிக்கு வந்ததும் குடிவாரி கணக்கெடுப்பு.

அதன் பின் தமிழ் குடிகளுக்கு அனைத்திலும் முன்னுரிமை. 

ஏனைய குடிகள் வாழலாம் அல்லது ஆந்திரா கிளம்பலாம்.

தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுக்க கூடிய நன்மைகளை வரவேற்கலாம்.

நீண்ட காலம் வாழ்ந்த மக்களை அனுப்புவது தவறானது.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ஏராளன் said:

அப்பிடி தான் கதை போகுதென்று தீவிர தமிழ்தேசியவாதிகள் எதிர்க்கினம் அண்ணை.

தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுக்க கூடிய நன்மைகளை வரவேற்கலாம்.

நீண்ட காலம் வாழ்ந்த மக்களை அனுப்புவது தவறானது.

நீண்டகாலம் வாழ்ந்து விட்டது என்பதற்காக புற்று நோயை விட்டு வைப்பீர்களா? சத்திரசிகிச்சை செய்வீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'ெய்திட kalaignarnews EXIT POLL RESULTS தமிழ்நாடு வாழகன 234 #ABPCvoter exit poll தி.மு.க+ 64 அ.தி.மு.க+ 166 மற்றவை 4 #ELECTION 2021'

"கலைஞர்" தொலைக் காட்சியின்... கருத்துக் கணிப்பில்,
 தீம்கா... மீண்டும், எதிர்க் கட்சியாக வரும் என்று, கணித்துள்ளார்கள்.  :grin:

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, தமிழகன் said:

நீண்டகாலம் வாழ்ந்து விட்டது என்பதற்காக புற்று நோயை விட்டு வைப்பீர்களா? சத்திரசிகிச்சை செய்வீர்களா?

சத்திர சிகிழ்ச்சை செய்வோம். ஹிட்லர் யூதர்களை ஒழித்ததுபோல ஸிம்மான் தெலுங்கு வடுகர் கூட்டத்தை ஒழிக்க புலம்பெயர் நாடுகளில் இருந்து நிதி சேர்த்துக்கொடுப்போம்!😆

5 minutes ago, தமிழ் சிறி said:

May be an image of text that says 'ெய்திட kalaignarnews EXIT POLL RESULTS தமிழ்நாடு வாழகன 234 #ABPCvoter exit poll தி.மு.க+ 64 அ.தி.மு.க+ 166 மற்றவை 4 #ELECTION 2021'

"கலைஞர்" தொலைக் காட்சியின்... கருத்துக் கணிப்பில்,
 தீம்கா... மீண்டும், எதிர்க் கட்சியாக வரும் என்று, கணித்துள்ளார்கள்.  :grin:

சந்தோஷமாக இல்லையே! நா.த.க. 234 இலும் வெல்லும் என்றல்லவா வந்திருக்கவேண்டும்🤪

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, கிருபன் said:

சத்திர சிகிழ்ச்சை செய்வோம். ஹிட்லர் யூதர்களை ஒழித்ததுபோல ஸிம்மான் தெலுங்கு வடுகர் கூட்டத்தை ஒழிக்க புலம்பெயர் நாடுகளில் இருந்து நிதி சேர்த்துக்கொடுப்போம்!😆

ஹிட்லர் போல் அழிப்போம் என கூறவில்லை. தமிழ் குடிகளுக்கு முன்னுரிமை. வடுக குடிகள் தமிழ் குடிகளின் கீழ் வாழலாம் அல்லது வெளியேறலாம். வடுக ஆதிக்கத்தை நிலை நிறுத்த முயலாதவரை - பயமின்றி வாழலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, கிருபன் said:

சந்தோஷமாக இல்லையே! நா.த.க. 234 இலும் வெல்லும் என்றல்லவா வந்திருக்கவேண்டும்🤪

பன்னி தான் டா கூட்டணி போகும் | நான் சிங்கம் டா | கூட்டணி குறித்து சீமான்  அதிரடி பேட்டி | AMMIKALLU - YouTube

"நாம் தமிழர்"  தன்னம் தனியே  நின்று, 
234 தொகுதிகளிலும் போட்டியிட்டதே... இமாலய வெற்றி தானே. :)

சீமானின்  அந்த 100% தன்னம்பிக்கையில்,  
மற்றைய கட்சிகள்,  அதனை...  கனவிலும், நினைத்துப் பார்க்க மாட்டார்கள்.  😎

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

"நாம் தமிழர்"  தன்னம் தனியே  நின்று, 
234 தொகுதிகளிலும் போட்டியிட்டதே... இமாலய வெற்றி தானே

234 இலும் டெப்பாசிட் கூட திரும்பிவராட்டியும் ஸிம்மானுக்கு கவலையா என்ன! உழைச்ச காசா புகையாகப் போகின்றது?? 😂😂

  • கருத்துக்கள உறவுகள்
Just now, கிருபன் said:

234 இலும் டெப்பாசிட் கூட திரும்பிவராட்டியும் ஸிம்மானுக்கு கவலையா என்ன! உழைச்ச காசா புகையாகப் போகின்றது?? 😂😂

it raid sabareesan: ஸ்டாலின் மருமகன் வீட்டில் கிடைத்த பணம் எவ்வளவு  தெரியுமா? இதுதான் ரசீது! - how much amount income tax official got from mk  stalin son in law sabareesan | Samayam Tamil

ஸ்ராலின்.. உழைக்காமல், சொந்த வாகனம்  இல்லாமல்,
மகள் செந்தாமரைக்கு... 1000 கோடி ரூபாய்க்கு,
ஒரு, சின்ன வீட்டை.. கட்டிக்க கொடுத்ததை, பார்க்க... எமக்கும் ஆச்சரியமாக இருந்தது. 😜

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, தமிழ் சிறி said:

உடன்பிறப்புக்கள் கொடுத்த அன்பளிப்பு ஐயா😃

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு தடிகொடுத்து ஓடும் ஓட்டப்பந்தயம்... விதைத்து கிடடே இருப்போம் அடுத்த தலைமை இதை கொண்டு ஓடும்.. நாம் தமிழர்..

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

இது ஒரு தடிகொடுத்து ஓடும் ஓட்டப்பந்தயம்... விதைத்து கிடடே இருப்போம் அடுத்த தலைமை இதை கொண்டு ஓடும்.. நாம் தமிழர்..

இந்த தெளிவு போதும்.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, தமிழகன் said:

இந்த தெளிவு போதும்.

இன்னிக்கு நான் தா மாட்டிக்கிட்டேன் போல...

spacer.png

16 hours ago, கிருபன் said:

234 இலும் டெப்பாசிட் கூட திரும்பிவராட்டியும் ஸிம்மானுக்கு கவலையா என்ன! உழைச்ச காசா புகையாகப் போகின்றது?? 😂😂

குடுப்பவனே கவலை படவில்லை ஆனால் . (ஆடு நனையுது என்று ஓநாய் அழுத்திச்சாம் )குள்ளநரிகள் கூட்டம் ????

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.