Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏழு தமிழர்களை விடுதலை செய்க! முதலமைச்சருக்கு வைகோ வேண்டுகோள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஏழு தமிழர்களை விடுதலை செய்க! முதலமைச்சருக்கு வைகோ வேண்டுகோள்

Vaiko-2.jpg
 46 Views

சிறைவாசம் அனுபவித்துவரும் ஏழு தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என தமிழக முதலமைச்சர் ஸ்டாலினிடம் ம.திமுக. தலைவர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

தவறு செய்யாமலே ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்து வருகின்ற ஏழு பேரில், சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய மூவரும் மரண தண்டனை கைதிகளாகவே மனதளவில் சித்ரவதை அனுபவித்து வருகின்றனர்.

அதுபோலவே நளினி, ரவிச்சந்தின், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோரின் இளமை வாழ்க்கையும் இருண்டு பாழாய்ப்போனது.

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தனது தீர்ப்பில், எழுவரையும் தமிழக அரசே விடுதலை செய்யலாம் என்று கூறிய பின்னரும், இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாடு அரசு அவர்களை விடுதலை செய்யுமாறு உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப ஆளுநருக்குக் கோரிக்கை விடுத்தும், ஆளுநர் அந்தக் கோரிக்கையை குப்பைத் தொட்டியில் போடுவது போல் போட்டுவிட்டார்.

இந்தப் பிரச்சினை குறித்து மத்திய அரசிடம் கருத்துக் கேட்க வேண்டிய அவசியமே கிடையாது. ஆனால் மத்திய அரசிடம் கருத்துக் கேட்டதாகவும், மத்திய அரசு அதற்கு தடை போடுவதாகவும் மோசடி நாடகத்தை இதுவரை நடத்தி வந்தனர். ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் என்ற கருத்தை ஏற்கனவே திராவிட முன்னேற்றக் கழகம் வலியுறுத்தி வருகிறது.

எனவே தமிழக முதலமைச்சர் மாண்புமிகு தளபதி ஸ்டாலின் அவர்கள் ஏழு பேரையும் விடுதலை செய்து ஆணை பிறப்பித்து கோடானு கோடி தமிழர்களின் உள்ளத்தில் பால்வார்க்கும் செய்தியாக நடவடிக்கை எடுக்குமாறு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அன்போடு வேண்டுகிறேன்.

https://www.ilakku.org/?p=49166

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கோரிக்கை நடந்திட வேண்டுமென்று உளமார பிரார்த்திக்கின்றேன்.....!  🙏

பகிர்வுக்கு நன்றி உடையார்.....!

  • கருத்துக்கள உறவுகள்

முகாம்களில் வைத்திருக்கும் அகதிகளுக்கு ஏதேனும் விடிவு.....

🤥

(உஸ்ஸ்ஸ்...எண்டு சொல்லுற சத்தம் கேக்குது 🤣)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

`எழுவர் விடுதலை’ வைகோ... `மதுவிலக்கு’ ராமதாஸ்! - முதல்வருக்கு அடுத்தடுத்த கோரிக்கைகள்!

வைகோ, ராமதாஸ்

வைகோ, ராமதாஸ்

மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட்டு, மனிதவளம் முழுமையாக பயன்படுத்தப்பட்டால், தமிழகத்தின் மொத்த உற்பத்தி மதிப்பு ரூ.4 லட்சத்து 18 ஆயிரத்து 379 கோடி அதிகரிக்கும்.

புதிதாக முதல்வராக பொறுப்பை ஏற்றிருக்கும் மு.க. ஸ்டாலினுக்கு பல்வேறு தரப்பினரிடமிருந்து பலதரப்பட்ட கோரிக்கைகள் தொடர்ச்சியாக வந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு பல்லாண்டுகளாக சிறை தண்டனை பெற்றுவரும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கை வைத்துள்ளார். அதேபோல், முழுமையான மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் குரல் எழுப்பியுள்ளார்.

"எழுவர் விடுதலை"குறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:

“தவறு செய்யாமலே ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்து வருகின்ற ஏழு பேரில், சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய மூவரும் மரண தண்டனை கைதிகளாகவே மனதளவில் சித்ரவதை அனுபவித்து வருகின்றனர்.

எழுவர் விடுதலை
 
எழுவர் விடுதலை

அதுபோலவே நளினி, ரவிச்சந்தின், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோரின் இளமை வாழ்க்கையும் இருண்டு பாழாய்ப்போனது. உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தனது தீர்ப்பில், எழுவரையும் தமிழக அரசே விடுதலை செய்யலாம் என்று கூறிய பின்னரும், இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாடு அரசு அவர்களை விடுதலை செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப ஆளுநருக்குக் கோரிக்கை விடுத்தும், ஆளுநர் அந்தக் கோரிக்கையை குப்பைத் தொட்டியில் போடுவது போல் போட்டுவிட்டார்.

இந்தப் பிரச்னை குறித்து மத்திய அரசிடம் கருத்துக் கேட்க வேண்டிய அவசியமே கிடையாது. ஆனால் மத்திய அரசிடம் கருத்துக் கேட்டதாகவும், மத்திய அரசு அதற்கு தடை போடுவதாகவும் மோசடி நாடகத்தை இதுவரை நடத்தி வந்தனர். ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் என்ற கருத்தை ஏற்கனவே திமுக வலியுறுத்தி வருகிறது.

எனவே தமிழக முதல்வர் ஸ்டாலின் ஏழு பேரையும் விடுதலை செய்து ஆணை பிறப்பித்து கோடானு கோடி தமிழர்களின் உள்ளத்தில் பால்வார்க்கும் செய்தியாக நடவடிக்கை எடுக்குமாறு மதிமுக சார்பில் அன்போடு வேண்டுகிறேன்.”

என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.

"முழு மதுவிலக்கு"குறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:

"ஊரடங்கு காலத்தில் மதுக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு குறிப்பிடத்தக்கதாகும். தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதற்கு பெரும் காரணமாக இருப்பவை மதுக்கடைகள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இப்போது மதுக்கடைகள் மூடப்படவிருப்பதால், அடுத்த சில வாரங்களில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் முழுமையாக கட்டுக்குள் வரக்கூடும்.

மதுக்கடைகள் மூடப்படுவது கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையாக மட்டும் இருந்து விடக்கூடாது. தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை ஏற்படுத்துவதற்கான தொடக்கமாக அமைய வேண்டும்.

டாஸ்மாக்
 
டாஸ்மாக்

மதுக்கடைகள் மூடப்படவுள்ள அடுத்த இரு வாரங்கள் ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான காலமாக அமையும். மது அரக்கனின் ஆதிக்கத்தால் நடந்த குடும்ப வன்முறைகள் முடிவுக்கு வரக்கூடும்.

கொரோனா உதவியாக தமிழக அரசு வழங்கவுள்ள ரூ.2,000 மதுக்கடைகள் வழியாக மீண்டும் அரசாங்கத்துக்கே செல்லாமல், ஏழைக் குடும்பங்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்கு பயன்படும். இவை அனைத்தும் மதுக்கடை மூடலின் மகிழ்ச்சிகள்.

மற்றொருபுறம் குடும்பத்தை மறந்து குடி, உடல்நலக்கேடு என சீரழிந்து கொண்டிருந்த பலர் ஊரடங்கின் பயனாக மதுவை மறந்து குடும்பத்தினருடனும், குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக பொழுதைக் கழிப்பர். இந்த மகிழ்ச்சி நிரந்தரமாக நீடிக்க வேண்டும் என்பது தான் ஒட்டுமொத்த தமிழகத்தின் விருப்பமாகும். இதற்கு ஒரே தீர்வு ஊரடங்குக்காக மூடப்பபடும் மதுக்கடைகள் மூடப்பட்டவையாகவே இருப்பது தான்.

மதுக்கடைகள் மூடப்பட்டால் தமிழக அரசின் வருமானம் போய்விடும் என்று கவலைப்படத் தேவை இல்லை. தமிழக அரசின் இன்றைய ஆண்டு வருமானத்திற்கு இணையான தொகையை வரியில்லா வருவாய் ஆதாரங்களின் மூலம் ஈட்ட முடியும்.

தமிழ்நாட்டின் மனிதவளம் அதன் முழுத் திறனையும் வெளிப்படுத்தினால், தமிழகத்தின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பு குறைந்தபட்சம் 20% உயரும். தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை மதிப்பீட்டின்படி, 2020-21 ஆம் நிதியாண்டில் மாநிலத்தின் ஒட்டுமொத்த மாநில உற்பத்தி மதிப்பு ரூ. 20 லட்சத்து 91 ஆயிரத்து 896 கோடி ஆகும்.

மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட்டு, மனிதவளம் முழுமையாக பயன்படுத்தப்பட்டால், தமிழகத்தின் மொத்த உற்பத்தி மதிப்பு ரூ.4 லட்சத்து 18 ஆயிரத்து 379 கோடி அதிகரிக்கும். இதிலிருந்து, தமிழகத்திற்கு கிடைக்கும் வருவாய், மது வணிகத்தால் கிடைக்கும் வருவாயை விட அதிகமாக இருக்கும். எனவே, வருவாய் இழப்பு குறித்த கவலை வேண்டாம்.

தமிழ்நாட்டில் மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட்டால், தமிழகத்தின் முகமே மாறிவிடும். இளைய தலைமுறையினர் மது அரக்கனின் பிடியிலிருந்து மீள்வார்கள். மக்கள் நோயின்றி வாழ்வார்கள். இவ்வளவு நன்மைகளை வழங்கும் மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதற்கு ஒற்றைக் கையெழுத்து போதுமானது.

எனவே, எந்த வித தயக்கமும் இல்லாமல் தமிழகத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் நிரந்தரமாக மூடுவதற்கு வசதியாக தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த அரசு ஆணையிட வேண்டும்.”

இவ்வாறு பாமக நிறுவனர் ராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

நீண்டகாலமாக நிறைவேற்றப்படாமல் கிடக்கும் இந்த கோரிக்கைகளை புதிய அரசுக்கு வலியுறுத்தும் விதமாக இவர்களின் அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது.

https://www.vikatan.com/news/politics/vaiko-and-ramadoss-request-to-the-new-tamilnadu-government

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, suvy said:

இந்தக் கோரிக்கை நடந்திட வேண்டுமென்று உளமார பிரார்த்திக்கின்றேன்.....!  🙏

பகிர்வுக்கு நன்றி உடையார்.....!

நீதிமன்றங்கள் கையை விரிக்கும் மத்திய அரசுதான் என மத்திய அரசு  கவர்ணர் கையில் கொடுத்து தாமதமாக்கும் நாமளும் எத்தன வருசமா பார்க்கிறம் அண்ண

  • கருத்துக்கள உறவுகள்

எழுவர் விடுதலை; தேர்தல் நாடகம் வேண்டாம்: நாளைக்கே குடியரசுத் தலைவரைச் சந்திக்க முதல்வர் சென்றால் திமுக எம்.பி.க்கள் உடன் வரத் தயார்: ஸ்டாலின்

Published : 05 Feb 2021 02:01 PM
Last Updated : 05 Feb 2021 02:04 PM

629650.jpg

தேர்தலுக்காக நாடகம் நடத்தாமல் ஏழு பேர் விடுதலைக்கு, வஞ்சக எண்ணம் இல்லாமல், இதயசுத்தியுடன் முதல்வர் பழனிசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று (பிப். 05) வெளியிட்ட அறிக்கை:

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலையில் திமுக அரசியல் நாடகம் நடத்துகிறது என்று தமிழகச் சட்டப்பேரவையில் கூறி, 30 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் வாடும் ஏழு பேரின் உணர்வுகளைக் கொச்சைப்படுத்தியிருப்பதுடன், மெகா பொய்யையும் அவிழ்த்து விட்டிருக்கும் முதல்வர் பழனிசாமிக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த ஏழு பேரின் வழக்கில், முதன் முதலில் நளினியின் தூக்கு தண்டனையை ரத்து செய்தவர் முதல்வராக இருந்த கருணாநிதி. அதுவும் மாநில அரசின் அதிகாரத்தைப் பயன்படுத்தியே செய்தார். குறிப்பாகச் சிறையில் அடைக்கப்பட்ட 8 ஆண்டுக்குள், இந்த தண்டனைக் குறைப்பைப் பெற்றுக் கொடுத்தது திமுக ஆட்சி என்பது கூடத் தெரியாமல், தனது அறிவீனத்தை வெளிச்சம் போட்டுக் காட்டி, சட்டப்பேரவைக்கே தவறான தகவலைக் கொடுத்திருக்கிறார் முதல்வர் பழனிசாமி.

2011-ல் ஆட்சிக்கு வந்தவுடன், 'இவர்களின் தண்டனையைக் குறைக்க மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை' என்று இதே சட்டப்பேரவையில் பேசியவர்தான் மறைந்த ஜெயலலிதா. இந்த ஏழு பேரின் விடுதலையில் எவ்வித அக்கறையும் இல்லாமல், அரசியல் நோக்கில், முன்னுக்குப் பின் முரணாகப் பேசி, மொத்த விவகாரத்தையும் குழப்பி, தமிழகச் சட்டப்பேரவையில் இவர்களை எல்லாம் விடுதலை செய்யத் தீர்மானம் நிறைவேற்றியும், இரண்டு ஆண்டுகள் கடந்த பின்னரும், இன்று வரை விடுதலையைப் பெற்றுக் கொடுக்கும் திராணியோ திறமையோ இல்லாமல், 10 ஆண்டு காலமாக 'தொடர் நாடகம்' போட்டு வரும் ஆட்சி அதிமுக ஆட்சிதான்!

முதலில் அதிகாரம் இல்லை என்ற ஜெயலலிதா பிறகு, 2014 நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் செயல்பாட்டுக்கு வரும் சில வாரங்களுக்கு முன்பு, இந்த ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினார். அப்போது, 'மூன்று நாட்களுக்குள் மத்திய அரசு தனது ஒப்புதலை வழங்க வேண்டும்' என்று வேண்டுமென்றே கெட்ட நோக்கத்தோடு கெடு விதித்து, இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்திற்குப் போவதற்கே வித்திட்டது அதிமுக ஆட்சிதான். நாடாளுமன்றத் தேர்தலின்போது அரங்கேற்றம் செய்த இந்த அரசியல் நாடகத்திற்கு, இரு ஆண்டுகள் ஜெயலலிதா இடைவேளை கொடுத்தார்.

பிறகு திடீரென்று 2016 சட்டப்பேரவைத் தேர்தல் நேரத்தில், மார்ச் மாதத்தில், மீண்டும் இந்த விடுதலை பற்றிய பழைய நாடகத்தையே தொடங்கினார். மத்திய அரசுக்கு அன்றைய தலைமைச் செயலாளர் ஞானதேசிகனை வைத்து, கடிதம் ஒன்றை எழுதினார். அவரது மறைவுக்குப் பிறகு, இந்த விடுதலை விவகாரம் மீண்டும் கிடப்பில் போடப்பட்டது. 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக இப்பிரச்சினையைக் கையிலெடுத்த முதல்வர் பழனிசாமி, செப்டம்பர் 2018-ல் 'பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும்' என்று அமைச்சரவைத் தீர்மானம் போட்டு அனுப்பினார். அது கூட உச்ச நீதிமன்றம் தலையிட்ட பிறகுதான்!

நாடாளுமன்றத் தேர்தல் முடிந்ததும், வழக்கம் போல அதை அப்படியே மறந்துவிட்டார். இரண்டு ஆண்டுகள் அது பற்றிச் சிறிதும் கவலைப்படவில்லை.

2014-ல் இருந்து இன்றுவரை இவர்களது கூட்டணிக் கட்சியான பாஜகதான் மத்தியில் ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. அமைச்சர்களுக்கு எதிரான வருமான வரித்துறை நடவடிக்கைகளையும், ஓட்டுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில், கிரிமினல் நடவடிக்கையும் எடுத்துவிடாமல் முதல்வராலும், அமைச்சர்களாலும் கண்ணும் கருத்துமாகக் காப்பாற்றிக் கொள்ள முடிந்தது.

ஆனால், ஆளுநரிடம் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருந்த தமிழக அமைச்சரவைத் தீர்மானத்திற்கு மட்டும் மத்திய அரசின் மூலம் அழுத்தம் கொடுத்து ஒப்புதல் பெறும் தெம்பு இல்லை!

மாறாக, திமுகதான் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. நானே நேரில் ஆளுநரைச் சந்தித்து, பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, கோரிக்கை விடுத்தேன்.

இப்போது 2021 சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற நேரத்தில்தான், மீண்டும் இந்த ஏழு பேரின் விடுதலை முதல்வர் பழனிசாமியின் நினைவுக்கு வந்திருக்கிறது. ஜனவரி 25-ம் தேதியே தமிழக அமைச்சரவையின் தீர்மானத்தை ஆளுநர் நிராகரித்து, 'எனக்கு அதிகாரம் இல்லை' என்று கூறிய பிறகு, ஜனவரி 29-ம் தேதி அவரைச் சந்தித்து 'ஏழு பேரையும் விடுதலை செய்யும் தீர்மானத்திற்கு ஒப்புதல் அளியுங்கள்' எனக் கடிதம் கொடுத்ததாகக் கூறியிருக்கிறார் முதல்வர் பழனிசாமி.

இதைவிட நாகரிகமே இல்லாத ஓர் அரசியல் நாடகம் வேறு ஏதாவது இருக்க முடியுமா? ஆளுநரிடம் விடுதலை தொடர்பான கோப்பே இல்லாத நிலையில், ஏன் அவரை முதல்வர் அவரைச் சந்தித்தார்? எதற்காகக் கடிதம் கொடுத்தார்?

ஏழு பேர் விடுதலை குறித்த தீர்மானத்தையே ஆளுநர், மத்திய அரசுக்கு அனுப்பி விட்ட பிறகு, 'ஆளுநர் விரைவில் நல்ல முடிவு எடுப்பார்' என்று ஏன் நேற்றைய தினம் (பிப். 4) தமிழகச் சட்டப்பேரவையிலேயே, வடிகட்டிய பொய்யை, தவறான தகவலை அளித்தார்?

நான் இந்த ஆளுநர் உரையின் கூட்டத் தொடரைப் புறக்கணித்தபோது, 'சட்டப்பேரவையில் உண்மைத் தகவலை இந்த அரசு எந்தப் பிரச்சினையிலும் தெரிவிப்பதில்லை' என்று எடுத்துச் சொன்னேன். அந்த என்னுடைய கூற்று, முதலில் நீட் தேர்வு மசோதா தொடர்பாகச் சட்டப்பேரவைக்கே உண்மை நிலையை மறைத்து, பொய் சொன்னதிலும், இப்போது ஏழு பேர் விடுதலையில் பச்சைப் பொய் சொல்லியிருப்பதிலும், முழுமையாக நிரூபணம் ஆகி விட்டது. 7 பேர் விடுதலை குறித்த தீர்மானம் டெல்லி போன பிறகு, ஆளுநரைச் சந்தித்து வலியுறுத்தி நாடகம் போடும் இப்படியொரு முதல்வர் எந்த மாநிலத்திலாவது இருக்கிறாரா?

உண்மை தெரிந்தும், சட்டப்பேரவைக்குத் திட்டமிட்டு தவறான தகவல் சொல்லும் ஒரு முதல்வர் வேறு மாநிலத்தில் உண்டா? இதுதான் முதல்வர் பழனிசாமி இந்த ஏழு பேர் விடுதலையில் தொடர்ச்சியாக நடத்தும் நாடகம்.

தன் நாடகத்தை மறைக்க, 10 ஆண்டுகாலமாக இந்த விடுதலையில் பம்மாத்து பண்ணிக் கொண்டிருக்கும் அதிமுக ஆட்சியின் தவறை மூடி மறைக்க, சிறையில் அடைக்கப்பட்ட 8 ஆண்டுகாலத்திற்குள் தூக்கு தண்டனையை ரத்து செய்த திமுகவைப் பார்த்து நாடகம் போடுகிறது என்று கூற பழனிசாமிக்கு நா கூச வேண்டாமா? நெஞ்சில் நெருடல் ஏற்பட வேண்டாமா?

ஏழு பேர் விடுதலையிலும் தேர்தலுக்குத் தேர்தல் நாடகம் போடுவதை, வேடம் கட்டுவதை முதலில் கைவிடுங்கள்! இப்போது ஆளுநர் 'எனக்கு அதிகாரம் இல்லை' எனக் கூறி மத்திய அரசுக்கு அனுப்பியிருக்கிறார்.

அதிமுகவும் பாஜகவும் நகமும் சதையும் போல் கூட்டணியாக இருக்கின்றன. 7 பேரும் 30 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் வாடுகிறார்கள். ஆகவே, பாஜகவும் தங்களது கூட்டணிப் பேச்சுவார்த்தையை முடித்து, தொகுதிப் பங்கீட்டை முதல்வர் பழனிசாமி அறிவிக்கும் முன்பு, ஒரு நிபந்தனையாக, 'பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் உடனே விடுதலை செய்ய வேண்டும்' என மத்திய பாஜக அரசுக்கு அழுத்தம் தர வேண்டும்.

கடந்த மூன்று தேர்தல்களில் நடத்திய அந்தப் பழைய நாடகத்தையே, இந்தத் தேர்தலிலும் நடத்தாமல், ஏழு பேர் விடுதலைக்கு, வஞ்சக எண்ணம் இல்லாமல், இதயசுத்தியுடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வரைக் கேட்டுக் கொள்கிறேன்.

நாடாளுமன்ற திமுக உறுப்பினர்களின் உதவி தேவை என்றால் சொல்லுங்கள். நாளைக்கே குடியரசுத் தலைவரைச் சந்திக்க முதல்வர் சென்றாலும் உடன் வரத் தயாராக இருக்கிறார்கள் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன். 'மிஸ்டர்' பழனிசாமி, எழுவர் விடுதலையில், உங்கள் முகமூடி கழன்று கீழே விழுந்துவிட்டது; வேடம் கலைந்து உண்மைச் சொரூபம் வெளியே தெரிந்துவிட்டது; நாடகம் முடிந்துவிட்டது!".

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

https://www.hindutamil.in/news/tamilnadu/629650-mk-stalin-slams-cm-palanisamy-4.html 

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
படம் சேர்ப்பு

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

உக்கும்....இது வேறயா...🤣🤣

  • கருத்துக்கள உறவுகள்

வழமையான வைகோவின் ஏமாற்றல் தான். ஒபாமாவையும் ஆதரித்தார்.. பின் கோரிக்கை வைத்தார்.. மோடியையும் ஆதரித்தார்.. பின் கோரிக்கை வைத்தார்... ராகுகளையும் கட்டிப்பிடித்தார்... பின் கோரிக்கை வைத்தார்.. இப்படி வைகோ போடாத அரசியல் வேடமே இல்லை. என்ன இவரை நம்பி ஏமாந்தது அப்பாவி மக்கள் தான். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.