Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூகிளில் படங்களை எவ்வாறு தக்க வைத்துக் கொள்வது?யாராவது தெரிந்தால் எழுதுங்கள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த மாதத்திலிருந்து கூகிளில் படங்கள் வைத்திருப்பதற்கு கட்டணம் அறவிட போவதாக மின்னஞ்சல் வந்தது(நீண்ட நாட்களின் முன்).
இப்போது காலம் நெருங்கிவிட்டது.
ஆயிரமாயிரம் படங்களை கூகிள் படத்தில் வைத்துள்ளேன்.அத்தனையும் இழக்க முடியாது.பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் பிரயாணப் படங்கள் போனவந்த இடங்களில் நண்பர்கள் உறவினர்கள் என்று நிறையவே இருக்கிறபடியால் எப்படியும் சேமிக்க யோசிக்கிறேன்.

உங்களுக்கும் இது போல பிரச்சனைகள் இருக்கலாம்.
ஏதாவது வழிமுறைகள் தெரிந்தால் எழுதுங்கள்.
நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

பெரிய கட்டணம் இல்லை என்றால் இன்னும் ஒரு வருடம் கூகிளில் ஓட்டலாம். கூகிள் பாதுகாப்பானதும், வசதியானதும் ஏற்கனவே பரீட்சயம் என்றால்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

பெரிய கட்டணம் இல்லை என்றால் இன்னும் ஒரு வருடம் கூகிளில் ஓட்டலாம். கூகிள் பாதுகாப்பானதும், வசதியானதும் ஏற்கனவே பரீட்சயம் என்றால்..

அவர்கள் சொன்ன தவணையில் இருந்து ஒரு மாதம் முடிய ஏதாவது செய்ய வேண்டும்.
ஒரு வருடம் விடமாட்டார்கள் என எண்ணுகிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழில் கூகிளில் யாருமே படங்கள் தரவேற்றி வைக்கவில்லை என்பது அதிர்ச்சியாக இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
  • ரெண்டு, மூனு எஸ்.எஸ்.டி(SSD- Solid State Drive) வாங்கி எல்லா தகவல்களையும் சேமித்துக்கொள்ளூங்கள். கூகிள் ஆண்டவரையே நம்பி இருக்காதீர்கள்..!

  • அதி முக்கியமான தகவல்களை மட்டுமே இணையத்தில் சேமியுங்கள். உதாரணமாக கடவுச்சீட்டு, விசா போன்ற பயண தகவல்கள். எங்காவது பிரச்சினை என்றால் உடனே கைப்பேசியில் தரவிறக்கம் செய்யலாம்.

UMEMO063900_02_L.jpg

  • கைப்பேசியில் இணைக்ககூடிய யுஎஸ்பி டிரைவ்(USB Pen Drive) சந்தையில் மலிவாக கிடைக்கிறது. அதிலும் சேமித்துக்கொண்டால் வசதி. ஆனால் அதை தொலைக்காமல் கடவுச் சொல்(Password) போட்டு பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். இல்லையெனில் லட்டு மாதிரி அடுத்தவனுக்கு உங்கள் சொந்த தகவல்களை அள்ளிக்கொடுத்த மாதிரி ஆகிவிடும். 🤔

சம் சே..?

நாங்கள் மூன்றாம் உலக நாடுகளில் வசிப்பவர்கள்.. கொஞ்சம் தாமதமாகத்தான் தொழிற்நுட்ப வசதிகளை தெரிந்து..புரிந்துகொண்டு, அதற்கேற்ப செயல்பட இயலும் ஐயா. 😜

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, ஈழப்பிரியன் said:

யாழில் கூகிளில் யாருமே படங்கள் தரவேற்றி வைக்கவில்லை என்பது அதிர்ச்சியாக இருக்கிறது.

 எங்கடை எந்த விசயமெண்டாலும் காணி உறுதி மாதிரி  பெட்டகத்துக்கை பூட்டி வைச்சிருக்க வேணும். விஞ்ஞான வளர்ச்சி எண்டு போட்டு கண்ட கண்ட களிசறைகளை எல்லாம் நம்பக்கூடாது.

நவீனத்தை ஒருக்கால் தொட்டுப்பாத்து அனுபவிச்சிட்டு அப்பிடியே களட்டி விட்டுடோணும். அதையே கட்டிப்பிடிச்சுக்கொண்டிருந்தால்  ஆபத்துக்கள் எக்கச்சக்கம்.

6 hours ago, ஈழப்பிரியன் said:

யாழில் கூகிளில் யாருமே படங்கள் தரவேற்றி வைக்கவில்லை என்பது அதிர்ச்சியாக இருக்கிறது.

நீண்ட காலத்திற்கு முன்னரே மின்னஞ்சல்களால் இடம் இல்லாது போனபோது அழிக்கக்கூடியவை அழித்து அழித்து பாவித்து வந்திருந்தேன். இனி அழிக்க முடியாது என்ற நிலை வந்த போது பணம் கட்டித்தான் சேமித்து வருகின்றேன்.  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ராசவன்னியன் said:
  • ரெண்டு, மூனு எஸ்.எஸ்.டி(SSD- Solid State Drive) வாங்கி எல்லா தகவல்களையும் சேமித்துக்கொள்ளூங்கள். கூகிள் ஆண்டவரையே நம்பி இருக்காதீர்கள்..!

5 hours ago, குமாரசாமி said:

நவீனத்தை ஒருக்கால் தொட்டுப்பாத்து அனுபவிச்சிட்டு அப்பிடியே களட்டி விட்டுடோணும். அதையே கட்டிப்பிடிச்சுக்கொண்டிருந்தால்  ஆபத்துக்கள் எக்கச்சக்கம்.

5 hours ago, மோகன் said:

நீண்ட காலத்திற்கு முன்னரே மின்னஞ்சல்களால் இடம் இல்லாது போனபோது அழிக்கக்கூடியவை அழித்து அழித்து பாவித்து வந்திருந்தேன். இனி அழிக்க முடியாது என்ற நிலை வந்த போது பணம் கட்டித்தான் சேமித்து வருகின்றேன்.  

எல்லோரது ஆலோசனைகளுக்கும் நன்றி.

வீட்டில் எல்லோரும் கூகிளிலேயே தரவேற்றி வைத்துள்ளனர்.ஆனாலும் இன்று அவர்களைக் கேட்கும் வரையிலும் இந்த சங்கதியை மறந்தே போயினர்.
ஆளாளுக்கு கதைத்துபேசி கூகிளில் குடும்பத்துக்கு 2 டெலர்கள் மாதம் கட்டி தக்க வைத்துள்ளார்கள்.இப்போ ஒரு வருடத்துக்கு கட்டியுள்ளனர்.
ஆளாளுக்கு 100 GB வரை பாவிக்கலாம்.

மீண்டும் நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, ஈழப்பிரியன் said:

எனக்கும் இந்தப் பிரச்சனை வந்தது!
கொஞ்சநாள் புங்குடுதீவான் விளையாட்டு விட்டுப் பார்த்தேன்! 
பின்னர் அப்பிள் கிளவுட்டுக்கு மாறியாச்சு! அது கூகிளை விடவும் மலிவாய் இருந்தது!

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, புங்கையூரன் said:

எனக்கும் இந்தப் பிரச்சனை வந்தது!
கொஞ்சநாள் புங்குடுதீவான் விளையாட்டு விட்டுப் பார்த்தேன்! 
பின்னர் அப்பிள் கிளவுட்டுக்கு மாறியாச்சு! அது கூகிளை விடவும் மலிவாய் இருந்தது!

அது என்ன மாதிரி விளையாட்டு? என சொன்னால் அனைவருக்கும் பயன்படலாம்.

ஏதும் அண்டை வீட்டு 'காணி பறிப்பு' மாதிரியா? 😜

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ராசவன்னியன் said:

அது என்ன மாதிரி விளையாட்டு? என சொன்னால் அனைவருக்கும் பயன்படலாம்.

ஏதும் அண்டை வீட்டு 'காணி பறிப்பு' மாதிரியா? 😜

வலு சிம்பிள், வன்னியர்!

இரண்டு, மூண்டு மின்னஞ்சல் கணக்குகள் திறந்தால்...ஒவ்வொண்டும் 15 GB யோட வரும்!

4 minutes ago, ராசவன்னியன் said:

அது என்ன மாதிரி விளையாட்டு? என சொன்னால் அனைவருக்கும் பயன்படலாம்.

ஏதும் அண்டை வீட்டு 'காணி பறிப்பு' மாதிரியா? 😜

அது கிடக்கட்டும், வன்னியர்!
உங்களுக்கெப்படி...ஊரில கதியால் நடக்கிறது தெரியும்?🙃

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, புங்கையூரன் said:

வலு சிம்பிள், வன்னியர்!

இரண்டு, மூண்டு மின்னஞ்சல் கணக்குகள் திறந்தால்...ஒவ்வொண்டும் 15 GB யோட வரும்!

அது கிடக்கட்டும், வன்னியர்!
உங்களுக்கெப்படி...ஊரில கதியால் நடக்கிறது தெரியும்?🙃

அது இங்கேயே கிராமங்களில் நடப்பதுதானே? எல்லைகளை குறிக்கும் சர்வே கல்லையே ராத்திரி நேரத்தில் தோண்டி எடுத்து பக்கத்து வீட்டு காணிக்குள் நகட்டி ஊன்றுவது உண்டு.. அதனால் அடிதடி, ஊர் பஞ்சாயத்து, கொலைகளில் முடிவதும் உண்டு.

ஈழத்தின் சில செய்திகளை படித்ததனால் கேட்டேன். 😀

சமீபத்தில் ஒரு காணொளியில் திரிகோணமலை 'கோணேஸ்வரர்' கோயிலில் இருக்கும் ராவணன் வெட்டு பாறைகளின் இடைவெளியில் நாணயத்தை விட்டெறிந்து அது கடலில் நேரடியாக விழுந்தால் நாம் வேண்டியது நிறைவேறும் என்ற நம்பிக்கை சொல்லப்பட்டது.

நீங்கள் செய்து பார்த்தது உண்டா? 🤔

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புங்கையூரன் said:

எனக்கும் இந்தப் பிரச்சனை வந்தது!
கொஞ்சநாள் புங்குடுதீவான் விளையாட்டு விட்டுப் பார்த்தேன்! 
பின்னர் அப்பிள் கிளவுட்டுக்கு மாறியாச்சு! அது கூகிளை விடவும் மலிவாய் இருந்தது!

ஐயா மலிவு என்றால் எவ்வளவு?

8 minutes ago, ராசவன்னியன் said:

ஈழத்தின் சில செய்திகளை படித்ததனால் கேட்டேன். 😀

சமீபத்தில் ஒரு காணொளியில் திரிகோணமலை 'கோணேஸ்வரர்' கோயிலில் இருக்கும் ராவணன் வெட்டு பாறைகளின் இடைவெளியில் நாணயத்தை விட்டெறிந்து அது கடலில் நேரடியாக விழுந்தால் நாம் வேண்டியது நிறைவேறும் என்ற நம்பிக்கை சொல்லப்பட்டது.

நீங்கள் செய்து பார்த்தது உண்டா? 🤔

நீங்க நாணயம் கொடுத்தால் அவர் உருட்டிப் பார்ப்பார்.

  • கருத்துக்கள உறவுகள்

1 hour ago, ஈழப்பிரியன் said:

ஐயா மலிவு என்றால் எவ்வளவு?

நீங்க நாணயம் கொடுத்தால் அவர் உருட்டிப் பார்ப்பார்.

United States4 (USD)    Google Drive
50 GB: $0.99                 Not Available
200 GB: $2.99               $ 2.99
2 TB: $9.99                    $ 9.99

ஈழப்பிரியன், அமெரிக்கச் சந்தையில்...இரண்டின் விலையும் ஒன்று போலத் தான் இருக்கு..!
அவுஸ் சந்தையில் அப்பிள் மலிவு..!

On 24/5/2021 at 00:14, ஈழப்பிரியன் said:

அடுத்த மாதத்திலிருந்து கூகிளில் படங்கள் வைத்திருப்பதற்கு கட்டணம் அறவிட போவதாக மின்னஞ்சல் வந்தது(நீண்ட நாட்களின் முன்).
இப்போது காலம் நெருங்கிவிட்டது.
ஆயிரமாயிரம் படங்களை கூகிள் படத்தில் வைத்துள்ளேன்.அத்தனையும் இழக்க முடியாது.பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் பிரயாணப் படங்கள் போனவந்த இடங்களில் நண்பர்கள் உறவினர்கள் என்று நிறையவே இருக்கிறபடியால் எப்படியும் சேமிக்க யோசிக்கிறேன்.

உங்களுக்கும் இது போல பிரச்சனைகள் இருக்கலாம்.
ஏதாவது வழிமுறைகள் தெரிந்தால் எழுதுங்கள்.
நன்றி.

நான் அறிந்தவரையில், இதுவரை நீங்கள் Google Photo ல சேமித்த போடோஸ்க்கு ஒரு பிரச்சினியும் இல்லை. அவை அப்படியேதான் இருக்கும். நீங்கள் எந்த நேரமும் பாக்கலாம், Download பண்ணலாம். இதுவரை (31/05/2021 வரை) Google Photo ல சேமிக்கும் போட்டோஸ்கு உங்கள் google account capacity ல  (15GB / Account) இருந்து எந்தவொரு capacity யும் கழிக்கப்படாமல், எல்லா போட்டோஸ்ம் Google சர்வர்ல சேமிக்கப்பட்டிருக்கும்.

ஆனால் ஜூன் 1, 2021 முதல் நீங்கள் Google Photo ல சேமிக்கும் போட்டோஸ்கு உரிய capacity உங்கள் google account capacity ல இருந்து கழிக்கப்படும்.

உதாரணமாக, இப்பொது உங்கள் Google Account available capacity 12GB என்று வைத்துக்கொள்வோம்.

நீங்கள் ஜூன் 1, 2021கு பிறகு 2GB photos ஐ உங்கள் google photos ல சேமித்தால், இந்த 2GB ம் உங்கள் Google account capacityla இருந்து கழிக்கப்படும். எனவே இப்பொது உங்களது Google account available capacity 10GB (12GB  - 2GB = 10GB) ஆக இருக்கும்.

இப்படியே நீங்கள் உங்கள் Google Account Capacity 0GB ஆகும் வரை எந்தவொரு பிரச்சினியும் இல்லாமல் போட்டோஸ் ஐ அப்லோட் பண்ணலாம்.

உங்களது 15GB யும் நிரப்பும்போது அல்லது நிரம்ப அண்மிக்கும்போது, Google உங்களுக்கு வார்னிங் ஈமெயில் அனுப்பும். அதன் பின்பு உங்களுக்கு 3 தெரிவுகள் உள்ளது.

1. Pay பண்ணி உங்களது Google Account capacity ஐ கூட்டுவது (monthly / Annually Subscription)

2. முக்கியத்துவம் குறைந்த  photosகளை உங்கள் External Hard Drive ku download பணியபின்பு அந்த photos களை Google Photos ல இருந்து நிரந்தரமாக delete பண்ணலாம். நீங்கள் delete பண்ணிய போட்டோஸ் capacity உங்கள் கூகுளை அக்கௌன்ட்ல available ல இருக்கும்.

3. புதிதாக ஒரு Google account open பண்ணி 15GB வரை photos upload பண்ணலாம். இப்படி எத்தினை Google account வேண்டுமானாலும் ஓபன் பண்ணலாம். (நான் 2 Google அக்கௌன்ட் வைத்துளேன். ஒன்று பிரைமரி அக்கௌன்ட். இந்த பிரைமரி அக்கௌன்ட் ல நான் போட்டோஸ் upload பண்ணுவதில்லை. ஈமெயில் மற்றும் முக்கிய தேவைகளுக்குதான் பாவிக்கின்றனான். Photos,  புக்ஸ் (PDF), work related documents, etc .... எல்லாம் 2வது  Google account ல தான் சேமிக்கின்றனான். இந்த 2வது account ம் fullaka, 3வது account ஓபன் பண்ணலாம்)

மேலே உள்ள தரவுகளில் ஏதாவது பிழை இருப்பின் தாராளமாக சுட்டிக்காட்டுங்கள். திருத்திக்கொள்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, Shanthan_S said:

இப்படித் தான்,நானும் புரிந்து கொண்டிருந்தேன்!
நன்றி...சாந்தன்!

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ராசவன்னியன் said:

அது என்ன மாதிரி விளையாட்டு? என சொன்னால் அனைவருக்கும் பயன்படலாம்.

ஏதும் அண்டை வீட்டு 'காணி பறிப்பு' மாதிரியா? 😜

அந்த விளையாட்டைக் கேள்விப்பட்டதில்லையோ வன்னியரே.... காணி பறிப்பையும் கடந்தது🤔

ஆத்துக்கட்டை அவித்துத்தாடி என்று மனிசியைக் கன்னத்தில் அறைந்த மாதிரி.🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Shanthan_S said:

மேலே உள்ள தரவுகளில் ஏதாவது பிழை இருப்பின் தாராளமாக சுட்டிக்காட்டுங்கள். திருத்திக்கொள்கிறேன்.

சாந்தன் உங்கள் விபரமான விளக்கத்திற்கு நன்றி.
இவ்வளவோ விடயங்கள் இருக்கிறதா?ஆச்சரியமாக இருக்கிறது.
உங்கள் தரவுகளைப் பார்த்தால் நிறையவே ஓட்டைகளும் இருக்கின்றனவே.
அவர்களுக்கும் இதுபற்றி எல்லாம் தெரிந்திருக்குமே?

9 hours ago, புங்கையூரன் said:

United States4 (USD)    Google Drive
50 GB: $0.99                 Not Available
200 GB: $2.99               $ 2.99
2 TB: $9.99                    $ 9.99

ஈழப்பிரியன், அமெரிக்கச் சந்தையில்...இரண்டின் விலையும் ஒன்று போலத் தான் இருக்கு..!
அவுஸ் சந்தையில் அப்பிள் மலிவு..!

புங்கை நீங்கள் பணம் கட்டினால் உங்கள் குடும்பத்தவர் விரும்பினால் நண்பர்களையும் சேர்த்துக் கொள்ளலாம்.

14 hours ago, ஈழப்பிரியன் said:

உங்கள் தரவுகளைப் பார்த்தால் நிறையவே ஓட்டைகளும் இருக்கின்றனவே.
அவர்களுக்கும் இதுபற்றி எல்லாம் தெரிந்திருக்குமே?.

ஓம் நிறைய ஓட்டைகள் இருக்குது. இது அவர்களுக்கும் தெரியாமல் இருக்க வாய்ப்பு இல்லை. கட்டாயம் அவர்களுக்கு தெரிந்திருக்கும். ஆனால் அவர்களாலும் ஒண்டும் செய்ய முடியாது எண்டு நினைக்கிறன். ஏனேனில் மேலே சொன்ன 3 வழிகளும் சட்டத்துக்கு புறம்பானவை இல்லை. அத்துடன், ஒருவர் இதனை கூகிள் account தான் தொடங்கலாம் என்று கூகுலில் எந்த வரைமுறையும் எனக்கு தெரிந்தவரையில் இல்லை. 

Edited by Shanthan_S

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.