Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் பேசும் பெண்கள் மோட்டார் சைக்கிள் படையணி யாழ்.நகரில் களமிறக்கப்பட்டுள்ளது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இன அழிப்பில் 
பகுதி 1 
பகுதி 2 
பகுதி 3 
என்று பல பகுதிகள் உண்டு 

பாதை முள்ளும் புதரும் என்பதுக்காக 
யாரோ வேண்டும் என்றே கிண்டிய குழியில் போய்  வீழ்வது மடமை. 

பெண்களை ஆணாதிக்க சமூகம் எவ்வளவு கொடுமை படுத்தி இருக்கிறது 
அவர்கள் துவண்டு போய்யிருப்பின் இப்போதும் அடிமைகளாகவே இருந்து இருப்பார்கள். 

  • Replies 82
  • Views 7.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
On 30/5/2021 at 08:40, ரஞ்சித் said:

இவர்களை விட இன்னும் இருவர் இருக்கிறார்கள். அவர்களைப்பொறுத்தவரையில் தமிழர்கள் ராணுவத்தில் இணைவதை எப்படியாது நியாயப்படுத்திவிடவேண்டும் என்கிற தேவை இருக்கிறது. சாதாரண தமிழர்களும் ராணுவத்தில் இணையும்போது தாம் இன்று புதிதாக ஏற்றுக்கொண்ட தலைவர்கள் தமிழினத்திற்கு எதிராகச் செய்த துரோகம் மெல்ல மெல்ல மறைந்துவிடும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். "எமது புதிய தலைவர்கள் மட்டுமா ராணுவத்துடன் இணைந்தார்கள்? இன்று சாதாரண தமிழர்களும் தானே இணைகிறார்கள்? ஆகவே எமது தலைவர்கள் செய்ததை எப்படி துரோகம் என்று சொல்வீர்கள்?" என்பதுதான் அவர்களது வாதம். ஆகவே, சாதாரண  தமிழர்களில் சிலர் ராணுவத்தில் இணைவதை பெரிய விடயமாகக் காட்டி, அல்லது தமது புதிய தலைவர்களின் துரோகக் கோட்டிற்கு அருகில் சாதாரண தமிழர்களின் இணைவை இன்னும் பெரிய கோடாகக் கீறிக் காட்டுவதன்மூலம், "பார்தீர்களா? எமது தலைவர்கள் செய்தது துரோகமே இல்லையென்று இப்போதாவது தெரிகிறதா?" என்பது அவர்களின் கூப்பாடு.  அபிவிருத்தி, வேலைவாய்ப்பென்று அவர்கள் கூறும் காரணங்கள் எல்லாம் இந்தத் துரோகத்தை மறைக்க அவர்கள் பாவிக்கும் வேஷங்கள், அவ்வளவுதான். 

இதிலொருவர்  நான்தானே ....? 
உலகம் ஆயிரம் சொல்லட்டுமே எனக்கு நான்தான்  நீதிபதி, By the way நான் தத்தெடுத்திருக்கும் பெண் பிள்ளை நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக நன்றாக கல்விகற்றுக்கொண்டிருக்கிறார், கொரோனா முடக்க நிலையிலும் அவரால் தனது குடும்பத்தை நன்றாக நிர்வகிக்க முடிகிறது, சில கூற்றுகளுக்கு செயல்களே  சிறந்த பதில்களாகவும் அமையும்....
cheerio   

Edited by அக்னியஷ்த்ரா

  • கருத்துக்கள உறவுகள்

மாதா, பிதா, குரு தெய்வம். ஆசிரியர்களுக்கு ஒரு தூர நோக்குண்டு. எதையும் பூசி மெழுகாமல், உள்ளதை உள்ளபடி, பயமின்றி, சரி, பிழைகளை எடுத்து விளக்கி ஒரு செழிப்பான சமுதாயத்தை கட்டி எழுப்புபவர் ஆசிரியர். அதனாலேயே எமது சமுதாயத்தில் அவர்களுக்கு ஒரு தனிச் சிறப்புண்டு. இவை தவறி தன்னலம் ஊறியதாலேயே  நமது இளம்  சமுதாயம் இன்று  தடம் புரள்கிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, அக்னியஷ்த்ரா said:

இதிலொருவர்  நான்தானே ....? 
உலகம் ஆயிரம் சொல்லட்டுமே எனக்கு நான்தான்  நீதிபதி, By the way நான் தத்தெடுத்திருக்கும் பெண் பிள்ளை நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக நன்றாக கல்விகற்றுக்கொண்டிருக்கிறார், கொரோனா முடக்க நிலையிலும் அவரால் தனது குடும்பத்தை நன்றாக நிர்வகிக்க முடிகிறது, சில கூற்றுகளுக்கு செயல்களே  சிறந்த பதில்களாகவும் அமையும்....
cheerio   

நல்ல விடயம்

1 hour ago, அக்னியஷ்த்ரா said:

இதிலொருவர்  நான்தானே ....? 
உலகம் ஆயிரம் சொல்லட்டுமே எனக்கு நான்தான்  நீதிபதி, By the way நான் தத்தெடுத்திருக்கும் பெண் பிள்ளை நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக நன்றாக கல்விகற்றுக்கொண்டிருக்கிறார், கொரோனா முடக்க நிலையிலும் அவரால் தனது குடும்பத்தை நன்றாக நிர்வகிக்க முடிகிறது, சில கூற்றுகளுக்கு செயல்களே  சிறந்த பதில்களாகவும் அமையும்....
cheerio   

சமூகம் மீதான உங்கள் அக்கறையில் எனக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை. என்னைவிட நீங்கள் ஒருபடி மேலாகவே செய்கிறீர்கள் என்று நம்புகிறேன். 

தேசியத்தின் ( கூத்தமைப்பின் அல்ல, புலிகள் கொண்டுசென்ற தேசியத்தின்) ஆதரவாளராகவிருந்து, தற்போது வேறு வழியில் பயணிக்கும் உங்களின் அரசியலையே விமர்சிக்கிறேன். 

அதை இனிமேல் செய்யப்போவதில்லை. உங்களுக்குச் சரியானதைச் செய்கிறீர்கள், இதில் நான் சொல்ல ஏதுமில்லை. 

நன்றி அக்னி!

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, ரஞ்சித் said:

தேசியத்தின் ( கூத்தமைப்பின் அல்ல, புலிகள் கொண்டுசென்ற தேசியத்தின்) ஆதரவாளராகவிருந்து, தற்போது வேறு வழியில் பயணிக்கும் உங்களின் அரசியலையே விமர்சிக்கிறேன்.

புலிகளது தேசியம் புலிகளோடு போய்விட்டது அதனை அவர்களை விட எந்த அப்பாட்டக்காராலும் ஒரு இஞ்சளவேனும் நகர்த்தமுடியாது என்பது எனது வேரூன்றிப்போன நம்பிக்கை , கூத்தமைப்பின் தேசியமே இப்போது எஞ்சியிருப்பது புள்ளிகளை ஒன்றிணைத்தால் படம் தெளிவாகும், கூத்தமைப்பின் தேசியத்திற்கு அடி விழ விழ புலிகளது தேசியமும் விம்பமும் மேலேறி வருவதும்  புலனாகும் , கூத்தமைப்பின் துருப்புசீட்ட்டான ஒட்டுமொத்த தமிழர்களின் திரள்சக்தி சுக்குநூறாகும்போதும்  இந்தியாவிற்கு இவர்களை வைத்துக்கொண்டு இலங்கைக்கு சோப்பு போடும் அரசியல் செய்ய முடியாமல் போகும்போதும் , அமெரிக்காவே புலிகளை நினைத்து கண்ணீர்வடிக்கும், பேச்சளவிற்காகவேனும் இனி அடிக்கடி   அமெரிக்க காங்கிரசுக்கு விடுதலை புலிகள் தேவைப்படுவார்கள்,இலங்கையை  சீனா நெருங்க நெருங்க இலங்கை தமிழர்கள் இந்தியாவால் கையாளப்படமுடியாதவர்களாக விலக விலக, பல கதறல்கள் இனிமேல் சர்வதேச மட்டங்களில் கேட்கத்துவங்கும், அது ஒரு விரைவான resolution இற்கு வழிவகுக்கலாம், எமக்கு இதனால் எவ்வித இழப்புமில்லை , விமர்சனம் என்பது ஒரு மனிதனை புடம்போடுவதாக தான் நான் பார்க்கிறேன், அதனை தனி மனித தாக்குதலாக எப்போதும் நான் பார்ப்பதில்லை 
இணைந்திருங்கள், நீங்கள் மேல் கூறிய புலிகளது உண்மை தேசியத்தின்பால் எனக்குள்ள  அபிமானத்தின் பெயரில் உங்கள் மீது எப்போதுமே எனக்கு பெருமதிப்புண்டு          

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, வாலி said:

இது ஒண்டுமட்டுமே எங்களுக்குப் போதும் தனியை போட்டுத் தாக்க! 😂

எப்படி தாக்கினாலும்  நின்று தடுத்தாடும் இந்த ராஜா ............. வாலி 

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, valavan said:

தனியொருவனின் தாயக மக்களின் பொருளாதார சிக்கல் வறுமை பற்றிய கருத்துக்கள் காத்திரமானவை மறுக்கமுடியாதவை.

அதேநேரம் வறுமையென்பதை மட்டும் வைத்துக்கொண்டு எமது இனத்தின் எதிர்கால இருப்புபற்றி புலத்திலிருப்பவர் கவலைபடாமல் இருக்க முடியுமா?

அன்றாட போராட்டத்தின் ஒரு பக்கத்தை வைத்துக்கொண்டு  இனிவரும் பல தலைமுறைகள் சம்பந்தப்பட்ட எம் மக்களின் அரசியல் இருப்பைபற்றி பேசாதுவிட்டால் எதிர்கால சந்ததி நிச்சயமாக தன்னோட அடையாளத்தை இலங்கை தீவில் இழந்துவிடும். வறுமை என்பது ஒருகாலத்தில் சிலவேளை முற்றாக ஒழியும் வாய்ப்புகள் உண்டு , ஆனால் இன அடையாளம் அழிந்துபோனால் மீண்டுவரும் வாய்ப்பிருக்கா?

அதை யார் பேசவேண்டும் முன்னிலைபடுத்தவேண்டும், சர்வதேச கவனத்திற்கு கொண்டு வேண்டும்??

நிச்சயமாக தற்போதுள்ள சூழ்நிலையில் தாயகத்திலிருப்பவர்கள் அரசுக்கெதிராக பேசமுடியாது, புலத்திலிருப்பவர்கள் மட்டுமே அதை பேசமுடியும் செய்யமுடியும், கருத்துக்களை அச்சுறுத்தலுக்கிடமின்றி கூறமுடியும்.

ஓடி போனவர்கள் இலங்கை நிலவரம்பற்றி எம்மக்கள் பற்றி பேசகூடாது, புலத்திலிருந்தபடி  தாயகம்பற்றி கருத்து சொல்லகூடாது என்று இங்கே அடிக்கடி சிலர் ஒரு கருத்தை பகிர பார்த்திருக்கிறோம்,

புலத்திலிருந்து மீண்டும் ஒரு ஆயுதபோராட்டத்தை நாங்கள் தூண்டிவிட்டால்தான் அது தப்பு, அரசியல் இருப்பு பற்றி பேசினால் அதில் என்ன தவறு?  சொந்த மக்களின் எதிர்கால அரசியல் இருப்பைபற்றி தாயகத்திலிருந்துதான் பேசவேண்டும் இல்லை, உலகின் எந்த மூலையிலிருந்தும் அவர்களை நினைக்கலாம் அது எமது தார்மீக உரிமை அதில் தவறேதும் இல்லை.

ஓடிபோனவர்கள் தாயக அரசியல் பற்றி பேசகூடாது என்றால், இந்த ஓடிபோனவர்களின் பலமான ஆதரவில்தான் ஒருகாலத்தில்  உலகத்திலிருந்தே துண்டிக்கப்பட்டு எவர் ஆதரவும் இன்று இருள் சூழ்ந்த நிலையிலிருந்த எமது மக்களையும் விடுதலை இயக்கத்தையும் தோள் கொடுத்து நிமிர்த்தியது.

அப்போதுமட்டும் தாயகம் பற்றி பேச உரிமை இருந்த எமக்கு இப்போது மட்டும் வேண்டாம் என்று சொல்ல எவருக்கும் உரித்தில்லை என்பதே புலத்திலுள்ள பலரின் ஆதங்கம்.

இது தனியொருவனுக்கான கருத்தாக சொல்லவில்லை இதுபோன்று கருத்து பகிரும் அனைவருக்காகவும் சொல்கிறேன்.

இன்னும் சிலகாலம்தான் புலத்திலுள்ளவர்கள் தாயகம்பற்றியும் எம் மக்களின் எதிர்கால அரசியல் வாழ்வுபற்றியும் சர்வதேச அளவில் பேசுவார்கள் கவலைபடுவார்கள் சர்வதேச கவனத்திற்கு கொண்டு செல்வார்கள். 

இப்போ இருக்கும் பெரிசுகள் எல்லாம் ஒரு 25 வருசத்தின் பின்னர் மண்டையைபோட புலத்திலுள்ள பெரும்பான்மையான இளையோர்கள் எமது பிரச்சனைபற்றி பேசமாட்டார்கள் அவர்களின் தனிப்பட்ட வாழ்வோடு ஒதுங்கி கொள்வார்கள், அப்போது இலங்கைதீவில் வாய்பேச முடியாத நிலையிலிருக்கும் எமது மக்களின் சார்பில் குரல் கொடுக்க எவருமே இன்றி நிரந்தர அரசியல் அடிமைகளாக்கப்பட்டுவிடும் நிலை உருவாகும்.

வளவன் ஐயா உங்கள் ஆதங்கம் புரிகிறது புலம்பெயர்ந்தவர்கள் தாயக மக்கள் மீதான அக்கறை பாராட்டுகிறேன் ஆனாலும் புலம் பெயர் மக்களால் போர் முடிந்து 12 வருடங்கள் ஆகிறது இதுவரைக்கும் எடுத்த காத்திரமான முடிவுகள் . அரசியல் சம்பந்தமான அப்படி எடுத்த முடிவுகள் என்ன அப்படி எடுத்தால் அந்த முடிவுகளை எப்படி இலங்கை அரசுக்கு முன்வைப்பீர்கள் அதை அரசு ஏற்றுக்கொள்ளுமா என்பது என்னை போன்ற பலருக்கான கேள்வி.
 
தாயகத்தின் அரசியலை பொறுத்தவரை மக்கள் நலன் சார்ந்தது அல்ல மாறாக கட்சிகளையும் , தலைவர்களின் வாரிசுக்களையும் அவர்களுக்கான சுய போகங்களையும் தேடுகிறார்கள் அண்மையில் வாழைச்சேனை வைத்தியசாலையில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஓட்டமாவடியில் பிறந்ததற்க்கான பிறப்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வந்தன அதை மாற்றி வாழைச்சேனை வைத்திய சாலையில் பிறந்ததாகவே பிரதேச செயலக பிறப்பு அத்தாட்ட்சி அலுவலகத்தை மாற்றி எடுத்தார் பிள்ளையான் ஆனால் அதற்கு எதிராக கிளம்பிய முஸ்லீம்களின் எம்பிக்கள் அப்படி மாற்ற முடியாது என அரசுக்கு எம்பிக்கள்  கடிதம் அனுப்பினார் அத்தனைக்கும் அவர்களை தூண்டியவ்ர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சி சார்ந்த பிரமுகர்கள் அவர்களது குரல் பதிவு இருப்பதாக சொன்னார்கள் இன்னும் கைக்கு கிடைக்கவில்லை எனக்கு. இதுதான் கிழக்கு அரசியல் 
மாறாக வடக்கில் இதே போல சைக்கிள் , வீடும் வீணை யும் இதே அரசியல் இப்படீருக்க இவர்களை ஒரு ஒன்றிணைத்து எப்படி தீர்வை  வைக்க முடியும் இது எனக்குள் இருக்கும் கேள்வி . 

புலம் பெயந்தவர்கள் அரசியல் பேசலாம் ஆனால் பேசி பேசி இன்னும் காலங்கள் கடக்கும் ஆனால் நிரந்தர தீர்வென்பது ஒன்றும் கிடைக்காது இன்னும் இருபது ஆண்டுகள் போனால் போர் நடந்த சுவடுகளே இல்லாமல் போகும் இன்று உலக நாடுகளை நம்பி இருப்போம் என வைத்துக்கொள்வோம் சீனாவோ , இந்தியாவோ , அமெரிக்காவோ இலங்கைக்குள் என்ன செய்யும் மாறாக இடங்களை பிடிக்க எத்தனிக்கும் மீண்டும் சண்டயை கூட துவங்கி வைக்கும்  அந்த நாடுகளுக்கு எரியுற  வீட்டில் பிடுங்கிறவரைக்கும் லாபமே அவ்வளவுதான் மாறாக , தமீழீழத்தை எமக்கு பெற்றுக்க்கொடுக்கும் , ஆதரிக்கும் என்பதெல்லாம் விடையில்லா கேள்விகளே .
புலம்பெயர்ந்த மக்களின் தோள்களிலே போராட்டம்  சுமக்கப்பட்டது என்பது யாராலும் மறுக்க முடியாது அப்போதும் பேசிய , நடந்த சம்பவங்கள் 2009  முடிவுக்கு வந்தது நிலமையும் மாறி 12 ஆண்டுகள் ஆனாலும்  அதே நிலையில் இங்குள்ள் மக்கள் இல்லை மக்கள் மெதுவாக மாறத்தொடங்கியுள்ளார்கள் காலத்தின் மாற்றத்திற்கேற்ப அது போலவே அவர்களும் மாறி அம்மக்களுக்கு  தேவையான சிறப்பான தேவைகளை சேவைகளையும் செய்யவேண்டும் . மாறாக அரசை எதிர்த்துக்கொண்டே இருப்போமாக இருந்தால் அப்படியே காலங்களும் கதைகள் மட்டும் பேசி ந்கரும் வளவன் ஐயா எனது தனிப்பட்ட கருத்துக்கள் இவை 

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, அக்னியஷ்த்ரா said:

புள்ளிகளை ஒன்றிணைத்தால் படம் தெளிவாகும், கூத்தமைப்பின் தேசியத்திற்கு அடி விழ விழ புலிகளது தேசியமும் விம்பமும் மேலேறி வருவதும்  புலனாகும் , கூத்தமைப்பின் துருப்புசீட்ட்டான ஒட்டுமொத்த தமிழர்களின் திரள்சக்தி சுக்குநூறாகும்போதும்  இந்தியாவிற்கு இவர்களை வைத்துக்கொண்டு இலங்கைக்கு சோப்பு போடும் அரசியல் செய்ய முடியாமல் போகும்போதும் , அமெரிக்காவே புலிகளை நினைத்து கண்ணீர்வடிக்கும், பேச்சளவிற்காகவேனும் இனி அடிக்கடி   அமெரிக்க காங்கிரசுக்கு விடுதலை புலிகள் தேவைப்படுவார்கள்,இலங்கையை  சீனா நெருங்க நெருங்க இலங்கை தமிழர்கள் இந்தியாவால் கையாளப்படமுடியாதவர்களாக விலக விலக, பல கதறல்கள் இனிமேல் சர்வதேச மட்டங்களில் கேட்கத்துவங்கும், அது ஒரு விரைவான resolution இற்கு வழிவகுக்கலாம்          

நீங்கள் செய்யும் பல நற்காரியங்களுக்கும், மேலே குறிப்பிட்ட காரியத்துக்கும் வாழ்த்து அக்னி. 

மேலே நீங்கள் கூறியுள்ள விடயம் - லொஜிக்கலாகத்தான் இருக்கிறது. இதுவரை உங்களின் தற்போதைய அரசியல் நிலைப்பாட்டுக்கான காரணத்தை மேம்போக்காக புரிந்திருந்தேன், இதை இப்படி டீப்பாகவும் அணுகலாம் என்பது லொஜிக்கலாகவே இருக்கிறது.

சரிவருமா தெரியவில்லை ஆனால் நீங்கள் சொல்வதில் ஒரு தர்கநியாயம் உண்டு.

Edited by goshan_che

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.