Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தாளையடி இறக்கம் பால்ராஜ் அண்ணாவின் சம்பவத்துடன் உள்ள இடம் இவ்வளவு விரைவாக யாழில் உள்ளவர்களே மறந்துவிட்டேம்  தற்போது சில குறியீடுகளே உள்ளன .

  • Replies 146
  • Views 13.1k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • ராசவன்னியன்
    ராசவன்னியன்

    மிகச் சரியான பதில் கோசான்,  வாழ்த்துக்கள்..! 🙏🌹   உங்களுக்கும் வாழ்த்துக்கள் கு.சா..!  🙏🌹   ஈழத்தில் இன்னும் நிறைய நுணுக்கமான இடங்கள் உள்ளன.. சாவகாசமா நேரமிருக்கும்போது

  • ராசவன்னியன்
    ராசவன்னியன்

    முழுப் படமும் போட்டாச்சுது..! இந்த சிலை 1982ம் ஆண்டு நிறுவப்பட்டு, யுத்த காலத்தில் அழிந்து மீண்டும் 14-04-2021 ல் 'மறவன்புலவு க.சச்சிதானதன்' அவர்களால் திறக்கப்பட்டது. சலிப்பை தவிர்க்க இது

  • ராசவன்னியன்
    ராசவன்னியன்

    வாழ்த்துக்கள், திரு.பெருமாள்.. மிகச் சரியாக ஊகித்துள்ளீர்கள்..! (I am @ desert site, reply in the evening)

  • கருத்துக்கள உறவுகள்
Just now, பெருமாள் said:

தாளையடி இறக்கம் பால்ராஜ் அண்ணாவின் சம்பவத்துடன் உள்ள இடம் இவ்வளவு விரைவாக யாழில் உள்ளவர்களே மறந்துவிட்டேம்  தற்போது சில குறியீடுகளே உள்ளன .

அது இத்தாவில் எல்லோ?

  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

அது இத்தாவில் எல்லோ?

என்கணிப்பு பிழையாக உள்ளது 

https://tamilnation.org/tamileelam/armedstruggle/warfront/061022soosai.htm

தாளையடி என்கிறார்கள் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, பெருமாள் said:

...அங்கு அநேக வீடுகள் பச்சை பெயின்ற் தான் அதிலும் வல்வையில் கூட நான் கண்டு பிடித்து விட்டேன் .

ஒரு பெரிய ஆளின் தெருவை கூகிள் மூலம் அனுகுங்க விடை இலகுவாக கிடைக்கும் .

வாழ்த்துக்கள், திரு.பெருமாள்..

மிகச் சரியாக ஊகித்துள்ளீர்கள்..!

671801409ba-awesome-coloful-fireworks-animated-gif-image-3.gif

(I am @ desert site, reply in the evening)

Edited by ராசவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ராசவன்னியன் said:

வாழ்த்துக்கள், திரு.பெருமாள்..

மிகச் சரியாக ஊகித்துள்ளீர்கள்..!

(I am @ desert site, reply in the evening)

அந்த புதிய படம் எங்கு எடுத்தீர்கள் என்று கூற முடியுமா அண்ணா ?

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, பெருமாள் said:

என்கணிப்பு பிழையாக உள்ளது 

https://tamilnation.org/tamileelam/armedstruggle/warfront/061022soosai.htm

தாளையடி என்கிறார்கள் 

இல்லை தரையிறங்கிய இடம் குடாரப்பு. களப்பு கடலினூடாக பெரும்தளத்தின் முன்னரங்கை தகர்த்து இத்தாவில் வரை முன்னேறி அங்கே ஒரு பெரும் சமர் நடந்தது என்பதே என் நினைவு.

2ம் குடாரப்பு தரையிறக்கத்தை 2ம் உலக போரின் நோமாண்டி தரையிறக்கத்துடன் ஒப்பிடுவர்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

இல்லை தரையிறங்கிய இடம் குடாரப்பு. களப்பு கடலினூடாக பெரும்தளத்தின் முன்னரங்கை தகர்த்து இத்தாவில் வரை முன்னேறி அங்கே ஒரு பெரும் சமர் நடந்தது என்பதே என் நினைவு.

2ம் குடாரப்பு தரையிறக்கத்தை 2ம் உலக போரின் நோமாண்டி தரையிறக்கத்துடன் ஒப்பிடுவர்.

இத்தாவில் தரையிறக்கம் குடாரப்பு என்றுதான் வரணும் கடைசியில் தாளையடி என்று குறிப்புகளை மாத்துகிறார்கள்  என்று புரியவில்லை .

பல கேள்விகளுக்கு விடையளிக்க அங்குள்ளவர்களை அணுக முடியாது இங்கு வந்தவர்களை கேட்டால் ஒரு வித கோப வெளிப்பாடு வருகிறது நேற்று நடந்த விடயத்தையே மறக்கிற  கூட்டம் நாங்கள் சேமித்த தரவுகளை தேட ஒரு நாள் பொழுது வீணாகிறது .

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, பெருமாள் said:

தகவல்கள் இங்கே உள்ளது.

https://www.kalaththil.com/single-news.php?id=8&cid=781

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, goshan_che said:

இல்லை தரையிறங்கிய இடம் குடாரப்பு. களப்பு கடலினூடாக பெரும்தளத்தின் முன்னரங்கை தகர்த்து இத்தாவில் வரை முன்னேறி அங்கே ஒரு பெரும் சமர் நடந்தது என்பதே என் நினைவு.

2ம் குடாரப்பு தரையிறக்கத்தை 2ம் உலக போரின் நோமாண்டி தரையிறக்கத்துடன் ஒப்பிடுவர்.

குடாரப்பு தரையிறக்கம்
இத்தாவில் சமர்
என்றுதான் நினைவில் உள்ளது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, பெருமாள் said:

அந்த புதிய படம் எங்கு எடுத்தீர்கள் என்று கூற முடியுமா அண்ணா ?

நான் நினைக்கிறன்.......? 🤔 :cool:

தொடர்ந்து பார்க்கவும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பெருமாள் said:

தென்பகுதி சிங்களவர்கள் அந்த வீட்டின் மண்ணை எடுத்துக்கொண்டு போக வந்த வினை .

சும்மா கையை வீசிக்கொண்டு வந்து சும்மா  போயிருக்கலாம்.

வன்னியர் சூம் பண்ண சொன்ன இடத்தில் எம்ஜிஆர் சிலை  உள்ள நினைவிடம் வரணும் .

தெருவிற்கான நுழைவு அம்புக் குறியிடப்பட்டுள்ளது..!

Test.jpg

தெருவை விட்டு வெளியே வந்து வலதுபுறம் திரும்பியவுடன் எம்ஜியார் சிலை உள்ளது.

எம்ஜிஆர் சிலை  உள்ள நினைவிடம்..!

t2.jpg

Edited by ராசவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, குமாரசாமி said:

நான் நினைக்கிறன்.......? 🤔 :cool:

தொடர்ந்து பார்க்கவும்.

15:09 ல் தலைவரின் வீடு உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

large.E3BCAEAF-70D9-4708-82E8-9BFA3BFF8667.jpeg.b925f74427bf4230630ddf9dd84c22db.jpeg

@ராசவன்னியன் எந்த ஊர் என்பவரே, இந்த ஊரை சொல்லுங்களேன். 

இந்த ஊர் உங்களுக்கும் தெரிந்த ஊர் அல்லவா?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

நான் சொல்லவா ?

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, பெருமாள் said:

நான் சொல்லவா ?

சொல்லுங்கோ…

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

large.E3BCAEAF-70D9-4708-82E8-9BFA3BFF8667.jpeg.b925f74427bf4230630ddf9dd84c22db.jpeg

@ராசவன்னியன் எந்த ஊர் என்பவரே, இந்த ஊரை சொல்லுங்களேன். 

இந்த ஊர் உங்களுக்கும் தெரிந்த ஊர் அல்லவா?

அடையார் ஆறு உடைந்த பாலம்.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ராசவன்னியன் said:

அடையார் ஆறு உடைந்த பாலம்.

👏🏾👏🏾👏🏾 பலே பலே. மிகச் சரியான பதில். அதுவும் ஒரு முயற்சியிலே.

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டு(ம்) வருமா அடையாறு ‘புரோக்கன் பிரிட்ஜ்’..?

  Web Team
 Published :21,Feb 2020 02:30 PM

Chennai-Broken-Bridge-history
 
தமிழகத்தின் தலைநகர் சென்னைக்கு எத்தனையோ அடையாளங்கள் இருக்கின்றன. சென்ட்ரல் ரயில் நிலையம், மெரினா கடற்கரை, ரிப்பன் பில்டிங், எல்.ஐ.சி பில்டிங் என ஏராளமான குறிப்பிடத்தகுந்த இடங்கள் உள்ளன. ஆனால் சென்னையில் வசிக்கும் பலருக்கும் தெரியாத இடமாகவும், அதே நேரத்தில் பிரபலமான இடமாகவும் இருப்பது அடையாறு ‘புரோக்கன் பிரிட்ஜ்’ எனப்படும் உடைந்த பாலம். வாலி படத்தில் சிம்ரனிடம் அஜித் காதலைச் சொல்லும் சீன் உட்பட பல்வேறு சினிமாக் காட்சிகளில் இந்த புரோக்கன் பிரிட்ஜை பார்த்திருப்பீர்கள்.

Advertisement
 
image

சென்னை சாந்தோம் கடற்கரைக்கும், பெசன்ட் நகர் கடற்கரைக்கும் இடையே அடையாறு கலக்கும் பகுதி உள்ளது. இந்தப் பகுதியை மக்கள் கடக்க வேண்டும் என்பதற்காக 1967ஆம் ஆண்டு ஒரு பாலம் கட்டப்பட்டது. 10 ஆண்டுகள் மக்கள் பயன்பாட்டில் இந்தப் பாலம் இருந்தது. இப்பாலத்தின் மீது காலை மற்றும் மாலை நேரத்தில் நின்றால், அது மனதிற்குச் சுகமான அனுபவத்தைக் கொடுக்கும் என்பது மறுப்பதற்கில்லை. இதனால் அந்த காலகட்டத்தில் மக்கள் அதிகம் வந்து செல்லும் ஒரு பகுதியாக இந்தப் பாலம் திகழ்ந்தது. எம்.ஜி.ஆர் நடித்த ‘ரிக்‌ஷாக்காரன்’ படத்தில் வரும் ‘கடலோரம் வாங்கிய காற்று குளிராக இருந்தது நேற்று’ பாடலில் இந்த பாலத்தின் அழகை அற்புதமாகக் காட்சிப்படுத்தியிருப்பார்கள்.

Advertisement
 
image

1977ஆம் ஆண்டு அடித்த பெரும் புயலில் இந்தப் பாலம் உடைந்து போனது. இந்த பாலத்தை மீண்டும் சீரமைக்கவோ அல்லது கட்டப்படவோ இல்லை. அதன்பின்னர் சுற்றுத்தலமாக மாறிய இந்தப்பாலம் காலப்போக்கில் சமூக விரோதிகளின் கூடாரமாகவும் உருவெடுத்தது. கொலை, வழிப்பறி, பெண்கள் மீதான அத்துமீறல்கள் ஆகியவையும் இந்த இடங்களில் அரங்கேறின. இதனால் பொழுது சாய்ந்த பின்னர் புரோக்கன் பிரிட்ஜுக்கு செல்வது ஆபத்து என காவல்துறையே எச்சரித்தது. இரவு நேரத்தில் போதை ஆசாமிகளின் அட்டூழியங்களும் இங்கே அதிகரித்தன. அதன்பின்னர் காவல்துறை அங்கே கண்டிப்பு காட்டி, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தது.

image

Advertisement
 
தற்போது அந்த இடம் சினிமா படங்கள், குறும்படங்கள், புகைப்பட ஆல்பங்கள் எடுக்கும் இடமாகவும், சுற்றுத்தலமாகவும் மாறியிருக்கிறது. இருப்பினும் மாலை நேரத்திற்குப் பின்னர் அங்கே செல்வது பாதுகாப்பற்றதாகவே கருதப்படுகின்றது. இந்தப் பாலத்தை தற்போது மீண்டும் கட்டினால் கண்டிப்பாகச் சென்னையின் பிரபல சுற்றுலாத்தளங்களில் ஒன்றாக மாறும் எனப் பலரும் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் அதற்குச் சாத்தியம் உள்ளதா ? சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

image

சென்னை மெரினா கடற்கரையில் மீன்கடைகளை முறைப்படுத்துவது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, சென்னை மாநகராட்சியிடம் கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்றம் லூப் சாலை - பெசன்ட் நகர் இடையிலான உடைந்த பாலத்தை மீண்டும் அமைக்கச் சாத்தியம் இருக்கிறதா ? என்றும், அதன் சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து மூன்று வாரங்களில் அறிக்கை அளிக்கவும் உத்தரவிட்டது.

image

இதையடுத்து சென்னை மாநகராட்சி ஆய்வு செய்து, பாலத்தைக் கட்ட வாய்ப்பு உள்ளது என அறிக்கை தாக்கல் செய்தால் மீண்டும் புரோக்கன் பிரிட்ஜ் மக்களின் கனவுப் பலமாக மாற வாய்ப்பிருக்கிறது. அதேசமயம் வாய்ப்பில்லை எனும் பட்சத்தில் அது என்றும் நிறைவேறாத கனவுப் பாலமாக, அதாவது ‘புரோக்கன் பிரிட்ஜாகவே’ இருக்கும். எனவே புரோக்கன் பிரிட்ஜ் மீண்டு(ம்) வருகிறதா ? அல்லது மீளாமல் போகிறதா ? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

http://www.puthiyathalaimurai.com/newsview/104800/Tamil-Nadu-Legislative-Assembly-Leader-of-Opposition-party-Edappadi-K-Palaniswami-writes-letter-to-Prime-Minister-Modi-to-provide-medicine-for-Mucormycosis.html

நித்திரை வராத இரவுகளில் கூகிள்  மப் தான் ஊர்  தமிழ்நாடு இலவச உலாத்தல் .

Edited by பெருமாள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

...

நித்திரை வராத இரவுகளில் கூகிள்  மப் தான் ஊர்  தமிழ்நாடு இலவச உலாத்தல் .

உங்களுக்கு தமிழ்நாடு உலாத்தல், எனக்கு ஈழம் உலாத்தல்..!

சமீபத்தில் பருத்தித்துறை காணொளியை பார்த்து ரசித்தேன். அதில் பேருந்து தரிப்பிட நவீன சந்தை கட்டிடத்திலுள்ள ஒரு கடையில் பலகார பொதிகள், பழங்கள் சில நான் அறிந்திராதவையாக இருந்தன.

rose-apple.jpg  ஜம்புக்காய்..பார்த்ததில்லை..! 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

56466282_594629234371416_686079086898341

பத்திரகாளிக்கோவில் ஒழுங்கை, ஓடக்கரை சந்தில், அப்பம் சுட்டு விற்கிறார்கள்தானே?

ஒருமுறையாவது வாங்கி சாப்பிட ஆசையுண்டு. :)

இந்த அப்பத்துக்கு 'சம்பல்' என ஏதோ செய்து தொட்டு சாப்பிடுகிறார்கள்..!

தமிழ்நாட்டில் அவ்வளவாக அப்பமும் கிடையாது, சம்பலும் கிடையாது.. சில ஓட்டல்களில்தான் அப்பம், சுப்பம் கிடைக்கும்.

ஆனால் கட்டையில் போனால், சாம்பல் நிச்சயம் உண்டு..! 🤣

இறந்த பின் விரும்பிய இடங்களை ஆவியாக வந்து ஒரு முறை பார்ப்பார்கள் என்பார்கள் - நான் கட்டாயம் பெசண்ட் நகர் கடற்கரைக்கும், ப்ரோகின் பிரிட்ஜுக்கும் போவேன் என நினைக்கிறேன்🤣

20 minutes ago, ராசவன்னியன் said:

உங்களுக்கு தமிழ்நாடு உலாத்தல், எனக்கு ஈழம் உலாத்தல்..!

சமீபத்தில் பருத்தித்துறை காணொளியை பார்த்து ரசித்தேன். அதில் பேருந்து தரிப்பிட நவீன சந்தை கட்டிடத்திலுள்ள ஒரு கடையில் பலகார பொதிகள், பழங்கள் சில நான் அறிந்திராதவையாக இருந்தன.

rose-apple.jpg  ஜம்புக்காய்..பார்த்ததில்லை..! 

ஜம்புக்காய் நார்த்தன்மையாக மிகவும் நீர்பிடிப்பாக கொஞ்சம் இனிப்பாக இருக்கும். 

சின்னதில் இந்த மரங்கள் இருக்கும் வீடுகளுக்கு விசிட் போவது என்றால் தனிச் சந்தோசம்.

கடைகளிலும் மிக குறைந்த விலைக்கு வாங்கலாம்.

இலங்கைக்கு எப்படி வந்தது என்று தெரியவில்லை. தேடிப்பார்க்க வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, பெருமாள் said:

மீண்டு(ம்) வருமா அடையாறு ‘புரோக்கன் பிரிட்ஜ்’..?

பெருமாள் எதை வைத்து கண்டு பிடித்தீர்கள்? 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

பெருமாள் எதை வைத்து கண்டு பிடித்தீர்கள்? 

முதலில் ராமேஸ்வரம் என்றுதான் நினைத்தேன்  பிறகு பிரிட்ஜ் உடைந்து  இருப்பதை  கவனித்து பாதையை மாற்றிக்கொண்டேன் நான்கெல்லாம் குட்டியில்  இருந்து கண் திறக்க முன்பு 77 என்கிறார்கள் புயலில் உடைந்தது என்கிறார்கள் 90 ன் ஆரம்பங்களில் ரவுண்டு கட்டிய இடம்கள் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, ராசவன்னியன் said:

56466282_594629234371416_686079086898341

பத்திரகாளிக்கோவில் ஒழுங்கை, ஓடக்கரை சந்தில், அப்பம் சுட்டு விற்கிறார்கள்தானே?

ஒருமுறையாவது வாங்கி சாப்பிட ஆசையுண்டு. :)

இந்த அப்பத்துக்கு 'சம்பல்' என ஏதோ செய்து தொட்டு சாப்பிடுகிறார்கள்..!

தமிழ்நாட்டில் அவ்வளவாக அப்பமும் கிடையாது, சம்பலும் கிடையாது.. சில ஓட்டல்களில்தான் அப்பம், சுப்பம் கிடைக்கும்.

ஆனால் கட்டையில் போனால், சாம்பல் நிச்சயம் உண்டு..! 🤣

என்ன வன்னியர் தமிழ்நாட்டில் சம்பல் இல்லையா? ஒரு வேளை கேரளத்து பக்கம் இருக்குமோ? 😁

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.