Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என் உண்மையை யாரும் உரசிப் பார்க்கத் தேவையில்லை... விருதை திருப்பி அளிக்கும் வைரமுத்து

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Nathamuni said:

.வைரமுத்தரை பத்தி கதைத்தால், கருணாநிதியை கொண்டு வந்து இழுப்பது ஏன் என்று புரியவில்லை. நானும் எஸ்கேப்....

இது உங்களுக்கு ஏன் விளங்கவில்லை என்பதுதான் எனக்கு விளங்கவில்லை.

1. நாங்கள் அல்லும் பகலும் வீதி வீதியாக அலைந்து எம் உறவுகளை காப்பாற்ற துடித்த போது - கருணாநிதி ஒவ்வொரு நாளும் காலையில் முதலாவதாக தொலைபேசியில் கதைக்கும் ஆளாக இருந்தவர் வைரமுத்து.

ஒரு தமிழனாக இன்றைக்கு அவருக்கு நாம் குரல் கொடுக்க, ஒரு தமிழனாக அவர் அன்று என்ன செய்தார்? கருணாநிதியை ஒரு உண்மையான யுத்த நிறுத்ததுக்கு தூண்டி இருக்கலாம். 

அவர் மறுத்தால் - நட்பை பகிரங்கமாக துண்டித்து - யுத்தத்தை கருணாநிதி நிறுத்த வேண்டும் என அறிக்கை விட்டிருக்கலாம்.

ஆனால் செய்யவில்லை? ஏன்?

கருணாநிதியுடனான நட்பை அதில் உள்ள அனுகூலத்தை இழக்க விரும்பவில்லை.

2. அது மட்டும் அல்ல இன்றைக்கும் 2009 இல் கருணாநிதி செய்தது சரி என்கிறார். வெள்ளை அடிக்கிறார்.

வைரமுத்துக்கு எம்மிடம் ஆதரவு திரட்டும் முன், அவரை கருணாநிதி செய்தது பச்சை துரோகம் என அறிக்கை விட சொல்லுங்கள்.

நாம் மிக தெளிவாக வைரமுத்து போன்றோரின் துரோகத்தை புரிந்துள்ளோம்.

ஆகவே அவரை தூக்கி கொண்டு எம்முன்னே வந்தால், ஒரு கட்டத்துக்கு மேல் எஸ்கேப் ஆவதை தவிர வேறு வழியில்லை.

  • Replies 180
  • Views 13.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, கிருபன் said:

இந்த மூன்றையும் படிக்கவும் இல்லை. படிக்கவும் போவதில்லை! ஆனால் தமிழை நேசிக்கத்தான் செய்கின்றோம். உண்மையில் மகாபாராதத்தை நவீன காவியமாக மீண்டும் தந்த ஜெயமோகனின் வெண்முரசு (26 நாவல்கள்) படித்தால் தமிழின் செழுமை புரியும்.

வைரமுத்து நல்ல பாடலாசிரியர். அவரது திரைப்பாடல்கள் பிடிக்கும். ஆனால் அவர் நல்ல கவிஞர் இல்லை.

வெண்முரசு நாவல் இதுவரையில் எவராலும் எழுதப்படாத காவியம். இது எனது கருத்து. 

அதுசரி கிருபன் நல்ல கவிஞர் என்றால் கவிதை எப்படி இருக்கும்? 

8 hours ago, சுவைப்பிரியன் said:

நல்ல காலம் என்ரை விசையம் ஒருத்தருக்கும் தெரிந்திருக்க  வில்லை.😄

நல்ல காலம் இன்னும் இந்தக் கருத்தை ஒருவரும் கவனிக்கேல்ல. 😀கவனிச்சினம் சுவைப்பிரியன் பூராயம் தொடங்கீடும். சத்தம் போடாமல் இருங்கோ🤭😀

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, shanthy said:

நல்ல காலம் இன்னும் இந்தக் கருத்தை ஒருவரும் கவனிக்கேல்ல. 😀கவனிச்சினம் சுவைப்பிரியன் பூராயம் தொடங்கீடும். சத்தம் போடாமல் இருங்கோ🤭😀

கவனிக்க வைத்தமைக்கு நன்றி அக்கா🤣.

@சுவைப்பிரியன்என்ன மாரி வசதியள்🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, shanthy said:

கிருபன் நல்ல கவிஞர் என்றால் கவிதை எப்படி இருக்கும்? 

கவிதை நுண்ணுணர்வின் அவசத்தை (நிலை கொள்ளாத மனத்தை) காட்டுவதாக இருக்கவேண்டுமாம்.  பிரசுரிக்கவேண்டும் என்றும் கவிதை எழுதினாலே அது மனதில் சலனத்தை உருவாக்கிவிடுமாம்!

இப்போதெல்லாம் யாழ் களத்தில் எழுதும் கருத்துக்கள் பிடிக்காவிட்டால் கவிதையாகவும் சில வரிகள் எழுதலாம். நல்ல வரிகளுக்கு!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

கவனிக்க வைத்தமைக்கு நன்றி அக்கா🤣.

@சுவைப்பிரியன்என்ன மாரி வசதியள்🤣

காத்திருந்து கம்போடை காவல் நிக்கிறியள். 😊

சேதாரங்களுக்கு goshan_che தான் பொறுப்பு சுவைப்பிரியரே.😊

44 minutes ago, கிருபன் said:

கவிதை நுண்ணுணர்வின் அவசத்தை (நிலை கொள்ளாத மனத்தை) காட்டுவதாக இருக்கவேண்டுமாம்.  பிரசுரிக்கவேண்டும் என்றும் கவிதை எழுதினாலே அது மனதில் சலனத்தை உருவாக்கிவிடுமாம்!

இப்போதெல்லாம் யாழ் களத்தில் எழுதும் கருத்துக்கள் பிடிக்காவிட்டால் கவிதையாகவும் சில வரிகள் எழுதலாம். நல்ல வரிகளுக்கு!

😕🙆

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

இப்ப யாழில் சில கருத்தாளர் இணைப்பது, எழுதுவது எல்லாம் கவிதைதானே?

#கவிதைக்கு பொய்யழகு 🤣

30 minutes ago, shanthy said:

காத்திருந்து கம்போடை காவல் நிக்கிறியள். 😊

சேதாரங்களுக்கு goshan_che தான் பொறுப்பு சுவைப்பிரியரே.😊

😕🙆

🤣 சுவையண்ணா அச்சா பிள்ளை எண்டு எல்லாருக்கும் தெரியும் ( எண்டு அவர் நினைக்கிறார்🤣). 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, goshan_che said:

இப்ப யாழில் சில கருத்தாளர் இணைப்பது, எழுதுவது எல்லாம் கவிதைதானே?

#கவிதைக்கு பொய்யழகு 

கவிதை என்றால் என்ன goshan_che 🤭

"கவிதைக்கு பொய்யழகு "  கவிப்பேரரசு வைரமுத்துவின் பாடல் வரியொன்று? இது கவிதை இல்லையோ 😀

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, shanthy said:

கவிதை என்றால் என்ன goshan_che 🤭

"கவிதைக்கு பொய்யழகு "  கவிப்பேரரசு வைரமுத்துவின் பாடல் வரியொன்று? இது கவிதை இல்லையோ 😀

அக்கா,

அவரை கவிஞர் இல்லை பாடலாசிரியர் என நான் கூறவில்லை. அது கிருபன் ஜி சொன்னது.

இது அவரின் வார்த்தை என்றறிந்தே எழுதினேன்.

தமிழ் வாழணும் என்பதற்காக ஆதரிக்கும்  அளவுக்கு வைரமுத்து ஒன்றும் பெரிய கவிஞர் இல்லை என்றே சொன்னேன்.

அவரை நாம் எதிர்க்க வேண்டும் என்றும் சொல்லவில்லை.

அவருக்குக்காக நாம் வரிந்து கட்ட தேவையில்லை என்று மட்டுமே சொன்னேன்.  

குறைந்த பட்சம் கருணாநிதியின் துரோகத்தை அவரை இன்னும் புகழும் அதே வார்த்தைகளில் பதிவு செய்யட்டும். 

எமது சாவை வேடிக்கை பார்த்தமைக்கு பிராயச்சித்தமாக.

அதன் பின் அவருக்குக்காக நாம் வரிந்து கட்டலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 minutes ago, goshan_che said:

குறைந்த பட்சம் கருணாநிதியின் துரோகத்தை அவரை இன்னும் புகழும் அதே வார்த்தைகளில் பதிவு செய்யட்டும். 

என்னது கருணாநிதி துரோகம் செய்தாரா?
யாருக்கு?
எப்போது?

இதை சொல்வது யார்?

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே வைரமுத்துக்கு கொடி பிடிப்பவர்கள் இதையும் ஒரு தரம் படியுங்கள்.

8 minutes ago, குமாரசாமி said:

என்னது கருணாநிதி துரோகம் செய்தாரா?
யாருக்கு?
எப்போது?

இதை சொல்வது யார்?

வேறு யார் சொல்கிறார்களோ இல்லையோ தெரியவில்லை ஆனால் - கோசான் யாழில் எழுதியகாலம் தொட்டு இதை சொல்லி வருகிறார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 minutes ago, goshan_che said:

வேறு யார் சொல்கிறார்களோ இல்லையோ தெரியவில்லை ஆனால் - கோசான் யாழில் எழுதியகாலம் தொட்டு இதை சொல்லி வருகிறார்.

அதாவது   ஈழத்தமிழர் பிரச்சனையில் கலைஞர் கருணாநிதியையும்  எதிர்க்கின்றீர்கள்?  😁

  • கருத்துக்கள உறவுகள்
Just now, குமாரசாமி said:

அதாவது   ஈழத்தமிழர் பிரச்சனையில் கலைஞர் கருணாநிதியையும்  எதிர்க்கின்றீர்கள்?  😁

என்ன புதிசு போல ஷாக் ஆகிறியள்🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 minute ago, goshan_che said:

என்ன புதிசு போல ஷாக் ஆகிறியள்🤣

இல்லை....எனக்கு தெரியும் நீங்கள் நல்லவரெண்டு. எதுக்கும் உங்கடை வாயாலை கேட்டு தெரிஞ்சு வைச்சிருப்பம் எண்டுதான்.....😂

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

இல்லை....எனக்கு தெரியும் நீங்கள் நல்லவரெண்டு. எதுக்கும் உங்கடை வாயாலை கேட்டு தெரிஞ்சு வைச்சிருப்பம் எண்டுதான்.....😂

உத நீங்கள் கேட்க நான் சொல்ல…🤣.

இது 6 மணி செய்தி மாரி வழமையான விடயம்தானே🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 minutes ago, goshan_che said:

உத நீங்கள் கேட்க நான் சொல்ல…🤣.

இது 6 மணி செய்தி மாரி வழமையான விடயம்தானே🤣

எல்லாம் கிடக்கட்டும்...அது சரி உங்கடை Popular  பொயின்ற் எகிறிக்கொண்டு போகுது. உங்களுக்கை நீங்களே குத்து கூத்து நடக்குதோ? 😂
ஏனெண்டால் நீங்கள் தான் முந்தியொருக்கால் இஞ்சத்தையான் பச்சை புள்ளி அது இதெல்லாம் தங்களுக்கை தாங்களே மாறி மாறி குத்திக்கொள்ளுவினம் எண்டு புறுபுறுத்தனியள்.🤣
அதோடை நல்ல கருத்தாளர்களுக்கு இஞ்சை பச்சை குறைவு எண்டும் சொன்னனியள். 😎

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

1. பொயிண்ட் எகிறுதோ? பாக்க அப்படித்தெரியேல்ல?

2. அண்ணை இன்னும் 2500 தாண்டாத நாங்களே மாறி மாறி குத்துறம் என்டால், 10,000 தாண்டினவை எப்படி🤣

3. உந்த புறுபுறுப்பில மாற்றம் இல்லை.

4. உந்த கருத்துலயும் மாற்றம் இல்லை. அப்பவே சொன்னான் அந்த லிஸ்டில என்ர பெயர் வந்தது ஒரு கெட்ட சகுனம் எண்டு. 

நான் நினைக்கிறன் உது சதி எண்டு. நான் அப்படி சொன்னபடியால் எனக்கு குத்தி ஏத்துற சதி எண்டு🤣.

ஆனால் இந்த சதியில உங்களுக்கு பங்கில்லை. என்ர அண்ணை மறந்தும் எனக்கு குத்தாது எண்டு எனக்குத்தெரியிம்🤣.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, கிருபன் said:

 வைரமுத்து நல்ல சினிமா பாடலாசிரியர். ஆனால் சிறந்த கவிஞரோ எழுத்தாளரோ அல்ல.

ஆசான் இப்படிச் சொல்லியிருக்கின்றார்..

வைரமுத்து தமிழின் வளமான இலக்கியமரபின் தொடர்ச்சி அல்ல. எவ்வகையிலும் நவீனத்தமிழிலக்கியத்தின்முகம் அல்ல. அவர் ஒரு பரப்பியல் எழுத்தாளர், இலக்கியமறியா பொதுவாசகர்களுக்கு மட்டும் உரியவர். அவருடைய எழுத்து இலக்கியத்தின் அடிப்படை இயல்புகள் என்று கருதப்படும் மொழியமைதி, வடிவ ஒருமை, அந்தரங்கநேர்மை, நுண்மடிப்புகள் கொண்டது அல்ல. செயற்கையாக செய்யப்பட்டவை அவை.”

மிகுதியை அறிய..

மொத்த தமிழ் பேசும் சனத்தொகையில் இலக்கியம் அறிந்த வாசகர்கள், பொதுவாசகர்கள் பரம்பல் பற்றி முதலில் கூறுங்கள். அதன் சதவிகிதம் என்ன?

எழுந்தமானமாக தமிழ் பேசும் நூறு பேரை அண்மித்து அவர்களிடம் நீங்கள் குறிப்பிடும் நபர் பெயரையும், வைரமுத்து பெயரையும் குறிப்பிட்டு இருவரையும் யார் என கூறுமாறு கேட்டால்.. பெரும்பாலானோர் எவரை அடையாளம் காட்டுவார்கள்?

வைரமுத்துவின் வரிகள் தமிழ் அதிகம் எழுத, வாசிக்க தெரியாத புதிய தலைமுறை குழந்தைகளுக்குகூட பரீட்சயமானவை. நீங்கள் குறிப்பிடும் இலக்கிய கர்த்தாக்களின் படைப்புக்கள் எத்தனைபேருக்கு பரீட்சயம்?

சாதாரண பொது சனத்தை சேரமுடியாத படைப்புக்கள் ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தினர் மாத்திரம் நுகர்பவை.

நீங்கள் விரும்பியோ விரும்பாமலோ தமிழை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதில் சினிமா ஊடகத்தின் பங்கு அளப்பரியது. சினிமா படைப்பிலக்கியத்தில் வைரமுத்து ஏற்கனவே அங்கீகாரம் பெற்றுவிட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்

அறிஞர் அண்ணாவிலிருந்து  கருணாநிதி எம்ஜிஆர் கண்ணதாசன் வாலி என தமிழகத்தின் உச்சத்திலிருந்த நடிகர்கள் கவிஞர்கள் அரசியல்வாதிகள் என பெரும்பாலானோர்  பல பெண்களுடன் கூடி குலாவியவர்கள்தான்.

அவர்களுக்கும் வைரமுத்துவிற்கும் இடையில் உள்ள வேறுபாடு, அவர்கள் தமது சல்லாபங்களை மறைத்ததில்லை, மறுத்ததில்லை . ஆனால் வைரமுத்து மறுக்கிறார் மறைக்கிறார் என்பதே சர்ச்சைகளுக்கு மூல காரணம்.

வைரமுத்துவின் பண்ணைவீட்டுக்கு நடிகைகள் அடிக்கடி விசிட் செய்வது பல ஆண்டுகளுக்கு முன்னரே பத்திரிகைகளில் அரசல் புரசலாக வந்ததுண்டு அதில் முக்கியமான ராய்’ல் முடியும் ஒரு நடிகையின் பெயர் நீண்டகாலமாகவே அடிபட்டது.

இந்த சர்ச்சைகளுக்கு முன்னர் ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்த படங்களில்  கச்சேரியில் தொடர்ந்து சின்மயி  வாய்ப்புபெற வைரமுத்துவே காரணம் என்று அழுத்தமாக சொல்கிறார் பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன், அவர் சொல்வதில் பொய் இருந்தால் டிவிட்டரில் முகம் தெரியாதவர்களின் கருத்துக்கெல்லாம் மறுப்பு கருத்துக்கள் சொல்லும் சின்மயி ஏன் அதை மறுக்கவில்லை?

வைரமுத்து தன்னை பாலியல்ரீதியில் அணுகினார் என்று சொன்ன காலபகுதிக்கு சிலவருசங்களுக்கு பிறகும் தனது திருமணத்திற்கு அழைத்து வாயெல்லாம் பல்லாக மீண்டும் மீண்டும் அவர் பாதத்தை தொட்டு வணங்குவதை பார்க்கும் எவரும்  சின்மயின் கற்புக்கு களங்கம் விளைவிக்க பார்த்த ஒருவரருக்கு எதுக்கு இவ்வளவு கெளரவம் கொடுத்தார் என்று கேட்க மாட்டார்களா?

இந்த வீடியோவில் 2:15 லிருந்து 2:19 வரை பார்க்கும் எவரும் சின்மயி உண்மை பேசகூடிய ஒருவர் என்பதை ஏற்பார்களா?

ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் மொத்ததில் துறைரீதியில் ரகசிய நெருக்கங்களை பேணியவர்கள் வெளியே சொல்லப்பட முடியாத ஒரு விசயத்தில் முரண்பாடு வந்ததும் வேறு காரணங்களை கூறி பழசை எல்லாம் கிண்டியெடுத்து யோக்கியர்களாக பார்க்கிறார்கள் என்பதே உண்மை.

தமிழர் மண்மீட்புபற்றியெல்லாம் அடிக்கடி கவிதை வடிக்கும் வைரமுத்து அவுஸ்திரேலியாவிற்கு ஒருமுறை  போனது வானொலி செவ்வியில் தமிழ்நேயர் ஒருவர் இறுதி யுத்ததின்போது கருணாநிதி நடத்திய நாடகம்பற்றி கேட்டபோது எல்லாவற்றிகும் தமிழால் வித்தக பதில் சொல்லி விளையாடும் பழக்கமுள்ள வைரமுத்து , அந்த கேள்விக்கு மட்டும் பதில் சொல்ல முடியாமல் இதற்கு பதிலளிக்க விரும்பவில்லை என்று மறுத்துவிட்டார்.

ஆக சூழ்நிலைக்கேற்றவாறு பெண்ணையும் ,மண்ணையும் தொட்டுவிளையாடும் இவர் போன்றவர்களின் அசிங்கமான மறுபக்கத்தை பார்க்காமலே தவிர்த்துவிட்டு ,

ஒரு படைப்பாளியாக பாடலாசிரியராக கவிஞராக பார்த்தால் வைரமுத்துவும் தன் பங்கிற்கு தமிழுக்கு அழகூட்டியிருக்கிறார் என்பது மறுக்கமுடியாத ஒன்று.

இது அவர் பெற்ற விருதுகளை வைத்து கூறும் ஒன்றல்ல , ஏனெனில் காசு கொடுத்தும் அரசியல் செல்வாக்காலும் விருதுகள் பெறுகிறார்கள் என்று ஒரு கருத்து உண்டு.

ஆனால் தன்னோட மொழியை தன் இனம் ரசிக்க ரசிக்க வைரமுத்து கையாளாமல்   போயிருந்தால் நான்கு தசாப்தத்துக்கும் மேலாக ஒரு கவிஞன்/படைப்பாளி  தமிழ் திரையுலகில் உச்சத்தில் இருக்கவே முடியாது.

சாதனைகளை பணம் செல்வாக்கால் வாங்க வாய்ப்புண்டு ஆனால் சந்ததியின் ரசனையை திறமை என்ற ஒன்றை தவிர வேறு எதனாலும் வாங்க வாய்ப்பேயில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, valavan said:

தமிழர் மண்மீட்புபற்றியெல்லாம் அடிக்கடி கவிதை வடிக்கும் வைரமுத்து அவுஸ்திரேலியாவிற்கு ஒருமுறை  போனது வானொலி செவ்வியில் தமிழ்நேயர் ஒருவர் இறுதி யுத்ததின்போது கருணாநிதி நடத்திய நாடகம்பற்றி கேட்டபோது எல்லாவற்றிகும் தமிழால் வித்தக பதில் சொல்லி விளையாடும் பழக்கமுள்ள வைரமுத்து , அந்த கேள்விக்கு மட்டும் பதில் சொல்ல முடியாமல் இதற்கு பதிலளிக்க விரும்பவில்லை என்று மறுத்துவிட்டார்.

இன்றுவரை பதில் இல்லை, கருநாநிதியை தொடர்ந்தும் தமிழின தலைவர் என்கிறார். தனது 2009 கள்ள மெளனத்திற்கு மன்னிப்பு கூட இல்லை.

ஆனால் இன்னும் இரெண்டு கவிதையை “முள்ளிவாய்க்கால் போனேன்” “ தமிழ் ஈழக்காற்றே”  என உருட்டி விட்டால் - ஈழத்தமிழர் தன்னை மீளவும் ஏற்றுக்கொள்வார்கள் என நம்புகிறார்.

எமது இளிச்சவாய்தனத்தின் மீது பலருக்கு அத்தனை நம்பிக்கை😡

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, valavan said:

இந்த வீடியோவில் 2:15 லிருந்து 2:19 வரை பார்க்கும் எவரும் சின்மயி உண்மை பேசகூடிய ஒருவர் என்பதை ஏற்பார்களா?

இல்லை

தனக்கு பாலியல்ரீதியில் துன்பம் கொடுத்தவரை திருமணத்திற்கே மற்றவர்கள் அழைக்க மாட்டார்கள் சின்மயி அழைத்து வாயெல்லாம் பல்லாக காலை  தொட்டு வணங்குவது என்பது 🤦‍♂️

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

இன்றுவரை பதில் இல்லை, கருநாநிதியை தொடர்ந்தும் தமிழின தலைவர் என்கிறார். தனது 2009 கள்ள மெளனத்திற்கு மன்னிப்பு கூட இல்லை.

ஆனால் இன்னும் இரெண்டு கவிதையை “முள்ளிவாய்க்கால் போனேன்” “ தமிழ் ஈழக்காற்றே”  என உருட்டி விட்டால் - ஈழத்தமிழர் தன்னை மீளவும் ஏற்றுக்கொள்வார்கள் என நம்புகிறார்.

எமது இளிச்சவாய்தனத்தின் மீது பலருக்கு அத்தனை நம்பிக்கை😡

தமிழ் ஈழக்காற்றே பாடல் தான் தமிழினத்தின் ஒட்டுமொத்த துயரையும் சொல்லுதாம் என வைரமுத்துவுக்கு பலரும் குடை பிடிக்கினம். 

ஆனால் எங்கள் கலைஞர்கள் எங்கள் துயரை எத்தனையோ வடிவில் பாடி எழுதிய எதையும் ஈழக்காற்றே பாடலுக்கு பிடில் வாசிப்போர் திரும்பியும் பார்ப்பதில்லை. 

வைரமுத்துவுக்கு சண் குழுமம் கொடுக்கும் விளம்பரம் தான் பலரையும் கவர்கிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

எழுந்தமானமாக தமிழ் பேசும் நூறு பேரை அண்மித்து அவர்களிடம் நீங்கள் குறிப்பிடும் நபர் பெயரையும், வைரமுத்து பெயரையும் குறிப்பிட்டு இருவரையும் யார் என கூறுமாறு கேட்டால்.. பெரும்பாலானோர் எவரை அடையாளம் காட்டுவார்கள்?

இதை வேறு இடத்தில் விவாதிக்கலாம். ஜனரஞ்சமாக வணிக நோக்கத்திற்காக எழுதுவதையும், நவீன இலக்கியத்தையும் ஒன்றாக குழப்பிக்கொள்கின்றீர்கள். இது தங்க நகையையும் கில்ட் நகையையும் ஒன்று என்று சொல்வது போலத்தான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, shanthy said:

தமிழ் ஈழக்காற்றே பாடல் தான் தமிழினத்தின் ஒட்டுமொத்த துயரையும் சொல்லுதாம் என வைரமுத்துவுக்கு பலரும் குடை பிடிக்கினம். 

ஆனால் எங்கள் கலைஞர்கள் எங்கள் துயரை எத்தனையோ வடிவில் பாடி எழுதிய எதையும் ஈழக்காற்றே பாடலுக்கு பிடில் வாசிப்போர் திரும்பியும் பார்ப்பதில்லை. 

வைரமுத்துவுக்கு சண் குழுமம் கொடுக்கும் விளம்பரம் தான் பலரையும் கவர்கிறது. 

வணக்கம் சாந்தி அக்கா!
இதை நீங்கள் பார்ப்பனியத்திற்கும்- திராவிடத்திற்குமான பிரச்சனையாக ஏன் பார்க்கக்கூடாது?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

வணக்கம் சாந்தி அக்கா!
இதை நீங்கள் பார்ப்பனியத்திற்கும்- திராவிடத்திற்குமான பிரச்சனையாக ஏன் பார்க்கக்கூடாது?

என்ன பிரச்சினையாகவும் இருந்திட்டு போகட்டும். ஆனால் வைரமுத்து வந்து எழுதித்தான் ஈழத்தின் துயர் கலை(ரை) யும் என்பது தான் சகிக்க முடியவில்லை. 

சின்மயி ஓர் பிராமணப்பெண் என்பது தான் இப்போது பலருக்கு பிரச்சனையே தவிர வேறு இல்லை. 

Edited by shanthy

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.