Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழில் வாள்வெட்டில் துண்டாடப்பட்ட கை வெற்றிகரமாக பொருத்தப்பட்டது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம் கோண்டாவில் செல்வபுரம் பகுதியில் நேற்றிரவு வாள்வெட்டுக்கு இலக்காகி ஒருவரின் துண்டாடப்பட்ட கை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மருத்துவ வல்லுநர்கள் , மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவ சேவையாளர்களின் கூட்டு முயற்சியினால் மீண்டும் பொருத்தப்பட்டது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சத்திரசிகிச்சை கூடத்தில் நேற்றிரவு 10.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட சத்திரசிகிச்சை இன்று அதிகாலை 4 மணிக்கு வெற்றிகரமாக நிறைவடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது . 

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒட்டுறுப்பு சத்திரசிகிச்சை ( Plastic Surgery ) வல்லுநர் இளஞ்செழிய பல்லவன் தலைமையில் நரம்பியல் சத்திரசிகிச்சை வல்லுநர் பொன்னம்பலம் ஆதித்தன் , மயக்க மருந்து மருத்துவ வல்லுநர் மற்றும் மருத்துவர்கள் தாதியர்கள் என கூட்டு சேவையினால் கை துண்டாடப்பட்டவருக்கு வெற்றிகரமாக சத்திரசிகிச்சை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

51.jpg

இதேவேளை, யாழ்ப்பாணம் - கோண்டாவில், செல்வபுரம் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் 8 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஸ்டுடியோ ஒன்றினை செயற்படுத்தி வந்த இரு குழுக்கள் இரவு தங்கியிருந்தபோது பிறிதொரு குழுவினர் நேற்று இரவு 9.40 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் வந்து தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த சம்பவத்தின் போது 6 பேர்  மோட்டார் சைக்கிளில் வந்து வாள் மற்றும் கூரிய ஆயுதங்களால் வீட்டைத் தாக்கியும் குறித்த ஸ்டூடியோ அமைந்திருக்கும் பகுதியை தீமூட்டி எரித்து சேதப்படுத்தியுள்ளனர்.

இதன்போது கார் மற்றும் முச்சக்கரவண்டி என்பன கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த சம்பவத்தில் இளைஞர் ஒருவரின் கை துண்டாடப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

அத்துடன் சிறு காயங்களுக்கு உள்ளான ஒருவர் வைத்தியசாலையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதுடன் ஏழுபேரும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

யாழில் வாள்வெட்டில் துண்டாடப்பட்ட கை வெற்றிகரமாக பொருத்தப்பட்டது | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

அதிரடி படை இன்று அதிரடியாக யாழில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்....

ஸ்டுடியோ வைத்திருந்தோருக்கு வாள்வெட்டு என்றால் கொஞ்சம் சந்தேகமா இருக்கு 

  • கருத்துக்கள உறவுகள்

மருத்துவர் இளஞ்செழிய பல்லவனுக்கும் எனது நண்பர் நரம்பியல் சத்திரசிகிச்சை வல்லுநர் ஆதித்தனுக்கும் பாராட்டுக்கள்.

 

ஒரு முகநூல் பதிவின் பிரதி..

கொண்டாடப்பட வேண்டிய யாழ் போதனா மருத்துவமனை பிளாஸ்டிக் சத்திர சிகிற்சை மருத்துவர் இளஞ்செழிய பல்லவன்

canadatamilJuly 1, 2021
img_1570.jpg?w=576

முல்லைத்தீவின் மிகவும் பின்தங்கிய கிராமம் ஒன்றிலிருந்து குப்பி விளக்கின் வெளிச்சத்தில் கற்று தனது கடின உழைப்பினால் மருத்துவத் துறைக்கு தெரிவு செய்யப்பட்டு யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் மருத்துவத்தினைக் கற்றவர்.

முல்லைத்தீவில் போர் உக்கிரமான வேளையில் வைத்தியர்கள் பலர் யாழைவிட்டும் நம்நாட்டைவிட்டும் வெளியேறிக்கொண்டிருந்த வேளையில் முல்லைத்தீவுக்கு கேட்டு இடம்மாற்றம் பெற்றுச் சென்றவர்.

போர் காலத்தில் மக்களுக்கு சிறப்பாக சேவையாற்றிய இவர் அக்காலத்தில் எரிகாயங்களுடன் மருத்துவமனைகளுக்கு கொண்டுவரப்பட்டவர்கள் போர் முடிந்தும் எரிகாயத்தால் கைகள் குறண்டிய நிலையிலும் முகங்கள் தோல்கள் சுருங்கிய நிலையிலும் அங்கு சிரமப்பட்டு வருவதை அவதானித்து அவர்களுக்கு பிளாஸ்டிக் சிகிற்சையின் மூலம் பழையபடி அவர்களை வாழவைக்கலாமென்ற நோக்கில் பிளாஸ்டிக் சத்திர சிகிற்சையினை கற்று மீண்டும் யாழில் தனது மருத்துவப் பணியைத் தொடர்ந்து கொண்டிருப்பவர்.

போர்காலத்தில் எரிகாயங்களுடன் வந்து தன்னிடம் சிகிற்சை பெற்றவர்களைத் தேடிப்பிடித்து அவர்களுக்கு பிளாஸ்டிக் சிகிற்சை அளித்து அவர்களின் வாழ்க்கையை பிரகாசிக்கச் செய்தவர்.
(போர் காரணமான எரிகாயத்தால் கைகள் குறண்டிய நிலையில் மீன் வியாபாரம் செய்த ஒருவரை தனது பிளாஸ்டிக் சத்திர மூலம் பழையவாறு ஆக்கியவர்)

அமெரிக்கா உள்ளிட்ட மேற்கைத்தைய நாடுகளிலில் இருந்த பல பிரபல்யமான மருத்துவமனைகளில் கிடைத்த வேலைவாய்ப்பை உதறித் தள்ளிவிட்டு தொடர்ந்தும் யாழ்ப்பாண மருத்துவ மனையிலேயே பணியாற்றுபவர்.

2019 ஆகஸ்ட் மாதம் வரை யாழ்ப்பாண மருத்துவமனையில் இவருடைய துறைக்கு என்று வாட்டு ஒன்றை ஒதுக்கிக் கொடுக்காமல் இவருடைய நோயாளிகளை எல்லா வாட்டுகளிலும் வைத்திருந்ததால் நாள் தோறும் காலை 7 மணிக்கு வாட்டு பார்க்கத் தொடங்கி 11/12 மணிவரை எல்லா வாட்டுகளுக்கும் நடந்து நடந்து தனது நோயாளிகளைப் பார்வையிட்டவர். அதற்கு பிறகே சத்திர சிகிற்சையினை மேற்கொள்ளுவார்.

அண்மையில் கிளிநொச்சியில் துண்டாடப்பட்ட கையை எட்டு மணித்தியால சத்திரசிகிச்சை மூலம் பொருத்திய பெருமை இவரை சாரும் அதுமட்டுமல்லாமல் நேற்றைய தினம் (ஜூன்30) கோண்டாவிலில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் துண்டாடப்பட்ட கையையும் பொருத்தி வெற்றி கண்டவர்.

இவர் யாழில் பிறக்காததாலோ என்னவோ யாழ் போதனா மருத்துவமனையில் இவருக்கு நிகழ்ந்த புறக்கணிப்புக்கள்/பாகுபாடுகள் ஏராளம். அதன் உச்சக்கட்டமாக எந்தவித முன்னறிவித்தலோ கோரிக்கையோ இன்றி கொழும்புக்கு இடம்மாறம் வழங்கப்பட்டாலும் போராடி மீண்டும் யாழ் மருத்துவமனைக்கே பணியாற்றத் திரும்பியவர்.

  • பல முன்னணி வைத்தியர்களால் 14 வருடங்களாக முயன்றும் சுகமாக்க முடியாது என கைவிடப்பட்ட எனது தாயரின் நோயினை குணமாக்கியவர். இவரை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்த மருத்துவர் கோபி சங்கர் அவர்களையும் இந்நேரத்தில் நினைவில் கொள்கிறேன்.

மருத்துவர் இளஞ்செழிய பல்லவன்!

கொண்டாடப்பட வேண்டிய தமிழ்ச் சமூகத்தின் சொத்து!
Kathiravel Elancheliyapallavan

 

https://canadatamil.ca/2021/07/01/கொண்டாடப்பட-வேண்டிய-யாழ்/

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

 

 

img_1570.jpg?w=576

 

 

 

இவர் யாழில் பிறக்காததாலோ என்னவோ யாழ் போதனா மருத்துவமனையில் இவருக்கு நிகழ்ந்த புறக்கணிப்புக்கள்/பாகுபாடுகள் ஏராளம்.

மருத்துவர் இளஞ்செழிய பல்லவன்!

கொண்டாடப்பட வேண்டிய தமிழ்ச் சமூகத்தின் சொத்து!
Kathiravel Elancheliyapallavan

 

https://canadatamil.ca/2021/07/01/கொண்டாடப்பட-வேண்டிய-யாழ்/

ஒரு மருத்துவர் என்பவர் வெள்ளைக்காரனோ சிங்களவனோ தமிழனோ என்றெல்லாம் பார்க்கப்படுவதில்லை , அவர் கடவுளுக்கு மிக அருகில் வைத்தே ஒவ்வொரு நோயாளியாலும் அவரது உறவினர்களாலும் பார்க்கப்படுவார்கள்.

உலகில் ஜனாதிபதி பிரதமர் பெரும் நடிகன் உட்பட எந்த பதவியில் உள்ளவரையும் அவர் இல்லாத இடத்தில் அவன் இவன் என்றே சொல்லி பழகுவது சராசரி மனித இயல்பு,

ஆனால் மருத்துவர்களை மட்டுமே அவர் இல்லாத இடத்தில்கூட பெரும்பாலும் அவர் இவர் , சொன்னாராம், சொல்லியிருக்கிறாராம் என்று மரியாதையாக அழைப்பது நம்மில் பெரும் பாலானோரின்  இயல்பு, அதுக்கு காரணம் ஆண்டவனே தூக்க நினைச்ச ஒருவனை தமது உயிரைக்கொடுத்து  உயிரை பிழைக்க வைப்பவர்கள் என்பதனால் வந்த மரியாதை,

மருத்துவர் இளஞ்செழிய பல்லவன்!...

இவ்வளவு மிகபெரும் திறமை வாய்ந்த ஒருவரை பற்றி எம்மில் பலர் இப்போதுதான் முதல் தடவையா கேள்வி படுகிறோம்,

அதற்கு காரணம் என்ன? அந்த மேதை தன்னை விளம்பரபடுத்திக்கொள்ளாமல் தன்னலமற்ற சேவையில் கண்ணும் கருத்துமாக இருந்திருக்கிறார் என்று அர்த்தம்.

அப்பேற்பட்ட மனிதனை உங்கள் முகநூல் பக்க பளபளப்புக்காக உங்களை விளம்பரபடுத்திக்கொள்ள அவர் பெயரை பாவிக்கிறீர்களே , நீங்க எல்லாம் எந்த ஊரில் இருந்து வருகிறீர்கள் ராஜாக்களா?

சுயநலமற்று பணியாற்றும் மருத்துவர்கள் எங்கு பிறந்தார்கள் என்று யாருமே பார்ப்பதில்லை, ஒருகாலம் பிரெஞ்சு மருத்துவர்கள் எந்த ராணுவ நெருக்கடிக்கும் அஞ்சாமல் யாழ் மண்ணில் சேவை புரிந்தார்கள், அவர்கள் விடைபெற்று செல்லும்போது மருத்துவர்கள் தவிர்ந்த எந்த பொதுமகனும் அவருக்கு வாழ்த்து சொல்ல போகவில்லை, அதற்காக அவர்கள் கவலைபட்டும் இருக்க மாட்டார்கள்.

மருத்துவர்களை மருத்துவராக வாழ விடுங்கள்,

உங்கள் சமூக ஊடக விளம்பரங்களுக்கு வேறு ஏதாவது கருப்பொருளை தேடுங்கள்.

 

  • கருத்துக்கள உறவுகள்

பலர் புலமைப் பரிசில சித்தி அடைந்வுடனோ அல்வது உயர் தரம் சித்தி அடைந்தவுடநோ சொல்வது பின் தங்கிய மக்களுக்கு சேவை செய்ப்போறன் என்டு.பின்னர் அவர்களை நாட்டிலேயே காண முடியாது.இப்படியபன சமுகத்தில் இவர்கள போன்றவர்கள் துதிக்கப் பட வேண்டியவர்கள்

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, சுவைப்பிரியன் said:

பலர் புலமைப் பரிசில சித்தி அடைந்வுடனோ அல்வது உயர் தரம் சித்தி அடைந்தவுடநோ சொல்வது பின் தங்கிய மக்களுக்கு சேவை செய்ப்போறன் என்டு.பின்னர் அவர்களை நாட்டிலேயே காண முடியாது.இப்படியபன சமுகத்தில் இவர்கள போன்றவர்கள் துதிக்கப் பட வேண்டியவர்கள்

எனது நண்பரும் பிரித்தானியாவில் மேற்படிப்புக்கும், பயிற்சிக்கும் வந்து இரண்டு வருடங்கள் இருந்தவர். கொழும்பில் வேலை செய்யாமல் யாழ்ப்பாணத்தில் மக்களுக்கு சேவை செய்யவதே நோக்கம் என்று சொல்லித்தான் சென்றார்.

  • கருத்துக்கள உறவுகள்

கை திருப்பி பொருத்தினது மகிழ்ச்சி.

மீண்டும், பிரச்சனை படாமல் இருந்தால், சிறப்பு.😰

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, Nathamuni said:

கை திருப்பி பொருத்தினது மகிழ்ச்சி.

மீண்டும், பிரச்சனை படாமல் இருந்தால், சிறப்பு.😰

ஒருதடவை கொடுக்கப்பட்ட சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொள்ளாவிட்டால் நிரந்தரமாக இழப்போடு வருந்தவும் வேண்டிவரும். 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, கிருபன் said:

இவர் யாழில் பிறக்காததாலோ என்னவோ யாழ் போதனா மருத்துவமனையில் இவருக்கு நிகழ்ந்த புறக்கணிப்புக்கள்/பாகுபாடுகள் ஏராளம். அதன் உச்சக்கட்டமாக எந்தவித முன்னறிவித்தலோ கோரிக்கையோ இன்றி கொழும்புக்கு இடம்மாறம் வழங்கப்பட்டாலும் போராடி மீண்டும் யாழ் மருத்துவமனைக்கே பணியாற்றத் திரும்பியவர்.

யாழில் பிறந்த மருத்துவர்கள் எல்லாம் தனியாக வார்ட் வைச்சு சின்ன ஸ்கூட்டரில் போய்தான் நோயாளிகளை கவனிக்கிறார்கள்....சொந்த ஹெலியில் தான் வீட்டுக்கு போய் வாராங்கள்

8 hours ago, கிருபன் said:

2019 ஆகஸ்ட் மாதம் வரை யாழ்ப்பாண மருத்துவமனையில் இவருடைய துறைக்கு என்று வாட்டு ஒன்றை ஒதுக்கிக் கொடுக்காமல் இவருடைய நோயாளிகளை எல்லா வாட்டுகளிலும் வைத்திருந்ததால் நாள் தோறும் காலை 7 மணிக்கு வாட்டு பார்க்கத் தொடங்கி 11/12 மணிவரை எல்லா வாட்டுகளுக்கும் நடந்து நடந்து தனது நோயாளிகளைப் பார்வையிட்டவர். அதற்கு பிறகே சத்திர சிகிற்சையினை மேற்கொள்ளுவார்.

மாகாணசபைளுக்கு அதிகாரம் குறைத்து மாவட்டங்களுக்கு இனி அதிகாரம் என்ற மத்திய அரசின் கொள்கைக்கு ,அவர்களின் கொள்கை பரப்பு செயலாளர்கள் இனி இப்படி கட்டுரைகளை எழுதுவார்கள் ...வன்னி மாவட்டம் என்று சொல்லாம் முல்லைதீவு மாவட்டம் ,வவுனியா ,மன்னார் என குறுகிய பிரதேசங்களாக மாற்றி தமிழ் இனத்தின் நில பரம்பலை ஏனைய இனங்களை குடியேற்ற  இந்த முயற்சி .....

யாழ் போதான வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவர இந்த முயற்சியோ தெரியவில்லை.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.