Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அடியவர்கள் வெளியே -ஆலயத்தினுள் சென்று சுவாமி காவிய இராணுவத்தினர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, கிருபன் said:

ஆம். ஒருவரும் மேலாடை அணியக்கூடாது என்ற கட்டுப்பாடு சாதியத்தை இறுக்கமாகக் கடைபிடிக்கும் மரபில் இருந்து வந்ததுதான்.

நீங்கள் யாழ் நகரப் பகுதியில் வசித்திருந்தால் தெரிந்திருக்காது. ஆனால் வடமராட்சி பிரதேசத்தில் உள்ள பல கோயில்களுக்கு சின்ன வயதில் போன அனுபவம் (அப்பா ஒரு சைவபக்தர்), குறிப்பாக சிவா சின்னப்பொடி குறிப்பிட்ட வல்லிபுரக்கோவிலில் எப்படி “பார்த்து” உள்ளே விடுவார்கள் என்பதை நேரடியாகவே கண்டிருக்கின்றேன்.

சாதியத்தின் அடிப்படையில், கோவிலுக்குள் விடுவதில்லை என்பதனை ஏற்றுக் கொள்கிறேன், அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

ஆனால், அதுக்கும் மேலாடைக்கும் தொடர்பு இல்லை என்பதே எனது கருத்து. மேலே ஒரு உறவு சொன்னது போல, தமிழர்கள் மத்தியில் மேலாடை அணியும் வழக்கம் இருக்கவில்லை. அது ஐரோப்பியர் காலத்தின் பின்னர் வந்தது. 

அதையே தான், நிழலிக்கு சொன்னேன்.

1495ல் வந்த முதல் ஐரோப்பியர் வாஸ்கோட காமாவை சந்தித்த (தமிழ்) சேர சமூரிய மன்னன் அரியணையில் வெறும் மேலுடன் வீற்று இருந்தார் என்றே அவரது குறிப்புகளில் உள்ளன.

1280px-Vasco_da_Gama_perante_o_Samorim_de_Calecute.png

Edited by Nathamuni

  • Replies 110
  • Views 7.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, கிருபன் said:

யாழ் களத்தில் உறுப்பினராக இருந்த சிவா சின்னபொடி “நினைவழியா வடுக்கள்” என்ற நூல் எழுதியிருந்தார். அதில் தெளிவாக மேலாடை போடாமல் கோயிலுக்கு உள்ளே போவதற்கான காரணம் சொல்லப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்ட மக்கள் கடினமாக வேலை செய்யபவர்கள். ஏறுபட்டி,  இயனக்கூடு, தளைநார் கட்டி மரம் ஏறுபவர்கள் உடலில் சிராய்ப்புக்கள் எப்பவும் இருக்கும். யாரென்று விசாரிக்காமல் மேலுடம்பைப் பார்த்தே தாழ்த்தப்பட்டவர்களை அடையாளம் காணவே மேலாடை அணிவது யாழில் உள்ள கோவில்களில் தடுக்கப்பட்டது. அதை மரபு என்று இன்றும் தொடர்கின்றார்கள்.

நீங்கள் ஒரு தரவுக்காக அல்லது சாட்சியாக இதனை குறிப்பிட்டால்அது தவறான சுட்டுதலாக  இருக்கும்

காரணம் அந்தந்த  கிராமங்களில் வாழ்பவர்கள்   ஒவ்வொருவரையும்

ஒவ்வொருவரும் அறிந்த காலப்பகுதி  அது

அந்த  நேரத்தில் மேலாடையை  களட்டித்தான்  ஆட்களை  அறிய வேண்டும் என்ற நிலை  இருந்திருக்க  வாய்ப்பில்லை  என்றே  நினைக்கின்றேன்

உதாரணத்துக்கு எனது  ஊரில்  எல்லோரையம் எல்லோரும் அறிவர்

அப்படி  இல்லாது விட்டாலும் வட்டாரத்தை சொன்னாலே போதும்???

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

ஆனால், அதுக்கும் மேலாடைக்கும் தொடர்பு இல்லை என்பதே எனது கருத்து. மேலே ஒரு உறவு சொன்னது போல, தமிழர்கள். மேலாடை அணியும் வழக்கம் இருக்கவில்லை. அது ஐரோப்பியர் காலத்தின் பின்னர் வந்தது. 

மேலாடை என்றால் சால்வை, உத்தரீயம் என்பவையும் அடங்கும்.

ஏன் மேலாடை அணியக்கூடாது என்பதற்கு போலி ஆன்மீகக் காரணங்களும் உள்ளன. சாம்பிளுக்கு ஒன்று..

“ஆலய விக்கிரகங்கள் கருங்கல்லாலேயே வடிவமைக்கப்படுகிறது. கருங்கல்லுக்கு ஒலி,ஒளி அலைகளை எளிதில் தன்பால் ஈர்த்து, தேக்கிவைத்து வெளிப்படுத்தும் ஆற்றல் உண்டு (🤔🤔🤔). எனவே தான் மூலமூர்த்தங்கள் கருங்கற்களில் ஆகம,சிற்ப சாஸ்திர முறைப்படி வடிவமைக்கப்படுகின்றன. "ஓம்" என்ற பிரணவத்தோடு மந்திரங்களைச் சொல்லி, பலவகை அபிஷேகங்களை செய்யும்போது, மின்னூட்டக்கதிர்கள் வெளிப்படுகின்றன(🧐🧐🧐🧐). அம்மின்னூட்டக் கதிர்கள் நம்மீது படும்போது உடம்புக்கு ஆரோக்யத்தையும், மனதுக்கு
அமைதியையும் தருவதாக அறிவியலாளர்கள் கூட ஒப்புக்கொண்டுள்ளனர். (🥸🥸🥸🥸)
அபிஷேகங்களால் வெளிப்படும் மின்னூட்டக் கதிர்களைத் தேக்கி வைத்து வெளிப்படுத்தும்போது அவை நம் உடம்பின்மீது படவேண்டும். நாள்தோறும் 4,6 காலங்கள் எனத் தொடர்ந்து அபிஷேகங்கள் செய்யப்படுவதால் அந்த அருட்கதிர்கள் தொடர்ந்து வெளிப்பட்டுத் தரிசிக்கச் செல்கின்ற நம் உடம்பில் பட்டு உடம்புக்கு நலத்தையும் மனதுக்கு அமைதியையும் தொடர்ந்து
தருகின்றன. இதற்காகவே அபிஷேகங்கள் பலவாக நாள்தோறும் செய்யப்படுகின்றன.

இவ் அருட்கதிர்கள்-மின்னூட்டக்கதிர்கள் நம் உடம்பின் மீது படவேண்டும் என்பதற்காகவே கோயிலுக்குள் செல்லும்போது ஆண்கள் மேற் சட்டையின்றி செல்லவேண்டும் என்று நம் முன்னோர்கள் விதித்துள்ளனர்(🤩🤩🤩🤩). பெண்களுக்கு அவர்களின் உடலமைப்பு கருதி இதிலிருந்து விலக்களித்தனர்(☹️☹️☹️☹️). இஃது எல்லா கோயில்களுக்கும் பொருந்தும்.”

படுபாவியள் பெண்களுக்கும் அருட்கதிர்களை பாய விட்டிருந்தால், நான் கோயிலே கதியேன்று கிடந்திருப்பேனே!😜😜🤪🤪

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, விசுகு said:

நீங்கள் ஒரு தரவுக்காக அல்லது சாட்சியாக இதனை குறிப்பிட்டால்அது தவறான சுட்டுதலாக  இருக்கும்

காரணம் அந்தந்த  கிராமங்களில் வாழ்பவர்கள்   ஒவ்வொருவரையும்

ஒவ்வொருவரும் அறிந்த காலப்பகுதி  அது

அந்த  நேரத்தில் மேலாடையை  களட்டித்தான்  ஆட்களை  அறிய வேண்டும் என்ற நிலை  இருந்திருக்க  வாய்ப்பில்லை  என்றே  நினைக்கின்றேன்

உதாரணத்துக்கு எனது  ஊரில்  எல்லோரையம் எல்லோரும் அறிவர்

அப்படி  இல்லாது விட்டாலும் வட்டாரத்தை சொன்னாலே போதும்???

சிவா சின்னப்பொடியர் மக்கள் மத்தியில் இல்லாத ஒரு பழக்கத்துக்கு பெரு விளக்கம் கொடுத்துள்ளார் போன்று தெரிகிறது.

இன்னுமொரு படமும் உள்ளது, இணைக்க விரும்பவில்லை. தென்பகுதியில், போர்த்துக்கேயர் வந்த போது இருந்த நிலையை படமாக கீறி ஒரு போர்த்துக்கேயர் போட்டிருந்தார்.

அங்கே பெண்கள் கூட, மேலாடை இல்லாமல், இருப்பதாக படம் உள்ளது. 

4 minutes ago, கிருபன் said:

மேலாடை என்றால் சால்வை, உத்தரீயம் என்பவையும் அடங்கும்.

*****

படுபாவியள் பெண்களுக்கும் அருட்கதிர்களை பாய விட்டிருந்தால், நான் கோயிலே கதியேன்று கிடந்திருப்பேனே!😜😜🤪🤪

no comments!!!!

நிழலி, குறித்து முன்னர் சொல்லி இருக்கிறேன்.

விசயம் இருந்தால் நிண்டு களமாடுவார்.... இல்லாவிடில் பிறகு வருவேன் என்பது போல போய் விடுவார். அலம்பறை பண்ணார். 😜😜 👍

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, விசுகு said:

நீங்கள் ஒரு தரவுக்காக அல்லது சாட்சியாக இதனை குறிப்பிட்டால்அது தவறான சுட்டுதலாக  இருக்கும்

ஊர்க்கோவில் என்றால் எல்லோருக்கும் எல்லோரையும் தெரியும். உள்ளே அனுமதி இல்லாதவர்கள் வரவே மாட்டார்கள். ஆனால் பெரிய கோயில்களுக்கு, உதாரணம் வல்லிபுரக்கோவில், சாதாரண காலத்திலும், திருவிழாக் காலங்களிலும் பல பகுதிகளிலும் இருந்து வருவார்கள். அவர்களில் தாழ்த்தப்பட்டவர்களை எளிதில் அடையாளம் காண மேலாடை இல்லை என்பதை கட்டாயம் ஆக்கினார்கள். ஆனால் காரணங்களை ஆன்மீகத்தோடு தொடுத்துச் சொல்லும்போது சிறிய ஊர்க்கோவில்களும் கடைப்பிடிக்கின்றார்கள்.

சேர்ட் போன்ற மேலாடை பிற்காலத்தில்  வந்தபோது, அதை தாழ்த்தப்பட்ட மக்கள் அணியத் தடைவிதித்ததும், மேல் சாதியினர் நாகரீகத்தை பறை சாற்ற எல்லா இடமும் அணிந்திருந்தும் ஏன் கோவிலுக்கு மட்டும் அணியக்கூடாது என்று “மரபை” தொடர்கின்றார்கள்? இது சுத்தம், சுகாதாரத்திற்கும் எதிராக இருந்தும் அதற்கு அருட்கதிர் விஞ்ஞான விளக்கம் கொடுக்கின்றார்கள்!😂

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, கிருபன் said:

யாழ் நகரப் பகுதியில் வசித்திருந்தால் தெரிந்திருக்காது.

மானிப்பாய் வீதி, 5லாம்பு சந்தி, கொட்டடி, நாவந்துறை இவற்றால் எல்லையிடபட்ட பகுதியில் இருக்கும் இந்து கோவில்களில் என்ன நடைமுறை என்று எனக்கு விளக்குவீர்களா?

தெளிவடையத்தான் கேட்கிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Nathamuni said:

நிழலி, குறித்து முன்னர் சொல்லி இருக்கிறேன்.

விசயம் இருந்தால் நிண்டு களமாடுவார்.... இல்லாவிடில் பிறகு வருவேன் என்பது போல போய் விடுவார். அலம்பறை பண்ணார். 😜😜 👍

அதாவது நிழலியும், நாதமுனியும் புத்திசீவிகள்😃அப்படியே இருக்கட்டும்.

நமக்கு தெரிந்ததைத்தானே நாம எழுதலாம்😃

2 minutes ago, goshan_che said:

மானிப்பாய் வீதி, 5லாம்பு சந்தி, கொட்டடி, நாவந்துறை இவற்றால் எல்லையிடபட்ட பகுதியில் இருக்கும் இந்து கோவில்களில் என்ன நடைமுறை என்று எனக்கு விளக்குவீர்களா?

தெளிவடையத்தான் கேட்கிறேன்.

சாரி. பாஸ். எனக்கு நீங்கள் சொன்ன இடங்கள் எல்லாம் கூகிள் மாப்பில்தான் தேடினால்தான் தெரியும். தெரிந்ததெல்லாம் வடமராட்சி மட்டும்தான். யாழ்ப்பாண ரவுண் கூட எட்டிப் பார்க்காமல் தன்னிறைவாக இருந்துவிட்டோம்😎

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, கிருபன் said:

ஊர்க்கோவில் என்றால் எல்லோருக்கும் எல்லோரையும் தெரியும். உள்ளே அனுமதி இல்லாதவர்கள் வரவே மாட்டார்கள். ஆனால் பெரிய கோயில்களுக்கு, உதாரணம் வல்லிபுரக்கோவில், சாதாரண காலத்திலும், திருவிழாக் காலங்களிலும் பல பகுதிகளிலும் இருந்து வருவார்கள். அவர்களில் தாழ்த்தப்பட்டவர்களை எளிதில் அடையாளம் காண மேலாடை இல்லை என்பதை கட்டாயம் ஆக்கினார்கள். ஆனால் காரணங்களை ஆன்மீகத்தோடு தொடுத்துச் சொல்லும்போது சிறிய ஊர்க்கோவில்களும் கடைப்பிடிக்கின்றார்கள்.

சேர்ட் போன்ற மேலாடை பிற்காலத்தில்  வந்தபோது, அதை தாழ்த்தப்பட்ட மக்கள் அணியத் தடைவிதித்ததும், மேல் சாதியினர் நாகரீகத்தை பறை சாற்ற எல்லா இடமும் அணிந்திருந்தும் ஏன் கோவிலுக்கு மட்டும் அணியக்கூடாது என்று “மரபை” தொடர்கின்றார்கள்? இது சுத்தம், சுகாதாரத்திற்கும் எதிராக இருந்தும் அதற்கு அருட்கதிர் விஞ்ஞான விளக்கம் கொடுக்கின்றார்கள்!😂

நீங்கள், மீண்டும், மீண்டும், சாதியம் என்ற ஒரு விடயத்தினை, மக்களிடம் வழக்கமே இல்லாத ஒரு விடயத்துடன் இணைக்க முனைகிறீர்கள் என்பதே எனது கருத்து.

பெண்களே மேலாடை இல்லாத நிலையில், ஆண்கள், சால்வை போட்டு இருப்பார்கள் என்பது சரியானது அல்ல.

பெண்களின் மார்புக்கச்சையே ஐரோப்பியர் அறிமுகம். ஐரோப்பியர் காலத்தின் பின்னரே மேலாடை பழக்கம் வந்தது. பிரித்தானியருக்கு முன்னான 300 வருட ஐரோப்பியர் ஆட்சியில் இலங்கை தீவில் உண்டாகி இருந்த இந்த மாறுதல் காரணமாகவே, 18 மைல் தூரத்தில் இருந்த இலங்கை, இந்தியாவுடன் இணைத்து ஆளப்படவில்லை. 1400 மைல் தொலைவில் இருந்த, அந்தமான், நிக்கோபார் இந்தியாவுடன் சேர்த்து ஆளப்பட்டது.

பிரித்தானியார் காலத்தில், தமிழகத்தில், முலை வரி வழக்கம் இருந்தது. ஆகவே மேலாடை வழக்கம் இல்லை. (மேலாடை போட்டால் வரி)

ஆகவே, இருக்காத ஒரு விடயத்தினை இருந்ததாக சொல்லி, அதனை சாதியத்துடன் தொடர்பு படுத்துவது தவறானது என்பது, அடியேன் கருத்து.

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Nathamuni said:

சிவா சின்னப்பொடியர் மக்கள் மத்தியில் இல்லாத ஒரு பழக்கத்துக்கு பெரு விளக்கம் கொடுத்துள்ளார் போன்று தெரிகிறது.

இல்லாத பழக்கம் இல்லை. தடை செய்யப்பட்ட வழக்கம்.

மேலாடை அணியாமல் இருந்த சமூகம், ஏன் மேலாடை புழக்கத்திற்கு வந்தபோது அதை கோயிலுக்கு மட்டும் தடை செய்தது என்ற கேள்வி உங்களுக்கு இன்னமும் வரவில்லை.  வரும்போது விளக்கம் கிடைக்கும்.

👆🏿

2 minutes ago, Nathamuni said:

ஆகவே, இருக்காத ஒரு விடயத்தினை இருந்ததாக சொல்லி, அதனை சாதியத்துடன் தொடர்பு படுத்துவது தவறானது என்பது, அடியேன் கருத்து.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, கிருபன் said:

அதாவது நிழலியும், நாதமுனியும் புத்திசீவிகள்😃அப்படியே இருக்கட்டும்.

நமக்கு தெரிந்ததைத்தானே நாம எழுதலாம்😃

இல்லை கிருபன் அய்யா... உங்கள் லெவலே வேறை...

நிழலியர் சத்தத்தையே காணவில்லை.... என்று ஒரு தூண்டில் போட்டேன். அவ்வளவுதான்....  😜

5 minutes ago, கிருபன் said:

இல்லாத பழக்கம் இல்லை. தடை செய்யப்பட்ட வழக்கம்.

வழக்கம் இருந்தால் தானே, தடை செய்ய முடியும்.... லாஜிக் உதைக்குதே....

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

இருந்தால் தானே, தடை செய்ய முடியும்.... லாஜிக் உதைக்குதே....

மேலாடையை ஐரோப்பியர் அறிமுகப்படுத்தியபோது அதை நாகரீகமாகக் கருதி தங்களைக் கனவான்களாகக் காட்ட, வேலை செய்யும் இடங்கள், கல்விக்கூடங்கள் எங்கும் உடுத்தியவர்கள் கோயிலுக்கும் உடுத்திக்கொண்டு போய் இருப்பார்கள்தானே. அப்படி போகும்போது தடுக்காமல் இருந்திருந்தால் இப்போது எல்லோரும் மேலாடையுடன் போயிருப்பார்களே. ஏன் அந்த மாறுதல் வரவில்லை? 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, கிருபன் said:

மேலாடையை ஐரோப்பியர் அறிமுகப்படுத்தியபோது அதை நாகரீகமாகக் கருதி தங்களைக் கனவான்களாகக் காட்ட, வேலை செய்யும் இடங்கள், கல்விக்கூடங்கள் எங்கும் உடுத்தியவர்கள் கோயிலுக்கும் உடுத்திக்கொண்டு போய் இருப்பார்கள்தானே. அப்படி போகும்போது தடுக்காமல் இருந்திருந்தால் இப்போது எல்லோரும் மேலாடையுடன் போயிருப்பார்களே. ஏன் அந்த மாறுதல் வரவில்லை? 

குழப்புகிறீர்கள் என்று நினைக்கிறேன்.

விடயம், ஐரோப்பியர் காலத்துக்கு முன்னர், இருந்த சாதியமும், மேலாடை அணித்தலுமாக இருந்தது....

இப்போது அதனை கடந்து குழப்புகிறோம், இல்லையா? 🤗

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

விடயம், ஐரோப்பியர் காலத்துக்கு முன்னர், இருந்த சாதியமும், மேலாடை அணித்தலுமாக இருந்தது....

ஆமாம். இப்போது சாதியம் இல்லை. மேலாடையும் இல்லை😜

கொரோனா முடிய இரண்டுபேரும் யாழ்ப்பாணம் போய் மேலாடையுடன் கோயிலுக்குள் போக நல்லூர்க்கோவிலுக்கு முன்னால் போராட்டம் நடாத்துவோம்😃

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, goshan_che said:

மானிப்பாய் வீதி, 5லாம்பு சந்தி, கொட்டடி, நாவந்துறை இவற்றால் எல்லையிடபட்ட பகுதியில் இருக்கும் இந்து கோவில்களில் என்ன நடைமுறை என்று எனக்கு விளக்குவீர்களா?

தெளிவடையத்தான் கேட்கிறேன்.

நான் சொன்ன பகுதியை தெரியாதா கிருபன். என்னப்பா நீங்கள். 

தெற்கு எல்லை பொம்மைவெளி 🤣

இப்ப விளங்கி இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, கிருபன் said:

ஆமாம். இப்போது சாதியம் இல்லை. மேலாடையும் இல்லை😜

கொரோனா முடிய இரண்டுபேரும் யாழ்ப்பாணம் போய் மேலாடையுடன் கோயிலுக்குள் போக நல்லூர்க்கோவிலுக்கு முன்னால் போராட்டம் நடாத்துவோம்😃

அப்படி சொல்லுங்கோ... நல்லூர் கோவில் வாசலில், இப்போதும் கூட, சேட்டினை கழட்டுங்கோ என்பார்கள்.... சாதி கேட்பதில்லை... அதுக்காக, வேலைக்கு ஆள் வைத்திருக்க மாட்டார்கள். சக பக்தர்களே சொல்வார்கள்.

ஆட்டோவில் போனால், சேர்ட்டை கழட்டி உங்க விட்டுட்டு போங்கோ என்பார் ஆட்டோக்காரர்.

அது தெய்வ குத்தம் என்ற படியால், நான் போராட மாட்டேன்... 😜

பொருளாதார நிலைமை கூடுவதால், சாதியம் நாளடைவில் இல்லாமல் போகும் என்றே நினைக்கிறேன். புலம் பெயர் நாடுகளில், இன்னும் இரு தலைமுறையின் பின்னர் இல்லாது போய் விடும்.

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

நல்லூர் கோவில் வாசலில், இப்போதும் கூட, சேட்டினை கழட்டுங்கோ என்பார்கள்.... சாதி கேட்பதில்லை...

நல்லூரில் ஏன் சேர்ட்டைக் கழட்டக் கேட்கின்றார்கள் என்பதற்கு பழைய மரபு என்பதைத் தவிர வேறு ஏதாவது விளக்கம் இருக்கா? நல்லவேளை முருகன் கோமணத்துடன் நிற்கும்போது அடியவர்கள் அதற்கு மேல் போடக்கூடாது என்று சட்டம் வைக்கவில்லை🤪 எதற்கும் ஆறுமுக நாவலரின் சைவ வினாவிடையை ஒரு தடவை சரி பார்க்கின்றேன்😃

சாதி பார்த்து உள்ளே அனுமதிக்கும் கோவில்களில்கூட சாதியை யாரும் கேட்பதில்லை. நேரடியாக கேட்காமல் கண்டுபிடிக்கத்தான் மேலாடை அணியாமல் வரவேண்டும் என்று சட்டம் வைத்துள்ளனர். இந்த அனுகூலத்தை கைவிட ஆசாரவாதிகளுக்கும், நுணுக்கமாக சாதியத்தை கடத்துபவர்களுக்கும் ஒருபோதும் மனம் வராது.

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, கிருபன் said:

மீண்டும் சொல்கிறேன்... அது ஈழத்தமிழர் கலாசார வழக்கம்.

அதுக்கும் சாதியத்துக்கும் தொடர்பே இல்லை. இன்றும் கூட, நல்லூர் கோவிலினுள் செல்லும் அனைவருமே மேலாடை அணிவதில்லை. யாருமே கோருவதில்லை.

உல்லாசப்பயணிகள், சிங்களவர் எல்லோருமே. 

இந்தாள் சேட்டு போடவில்லை, ஏன் எண்டு நினைக்கிறியள்? சாதியம்?

large.Temple.jpg.bd67ed3c4da23ff10b373bf74feb631a.jpg

கேரள அச்சன்மார் (அண்ணர்மார்).... 1K devotees to be allowed into Kerala's Guruvayur temple from September 10-  The New Indian Express

இப்பதான் பார்த்தேன்.... நேற்று முழு நிலவு, வானில்.... 😁

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, கிருபன் said:

நல்லூரில் ஏன் சேர்ட்டைக் கழட்டக் கேட்கின்றார்கள் என்பதற்கு பழைய மரபு என்பதைத் தவிர வேறு ஏதாவது விளக்கம் இருக்கா? நல்லவேளை முருகன் கோமணத்துடன் நிற்கும்போது அடியவர்கள் அதற்கு மேல் போடக்கூடாது என்று சட்டம் வைக்கவில்லை🤪 எதற்கும் ஆறுமுக நாவலரின் சைவ வினாவிடையை ஒரு தடவை சரி பார்க்கின்றேன்😃

சாதி பார்த்து உள்ளே அனுமதிக்கும் கோவில்களில்கூட சாதியை யாரும் கேட்பதில்லை. நேரடியாக கேட்காமல் கண்டுபிடிக்கத்தான் மேலாடை அணியாமல் வரவேண்டும் என்று சட்டம் வைத்துள்ளனர். இந்த அனுகூலத்தை கைவிட ஆசாரவாதிகளுக்கும், நுணுக்கமாக சாதியத்தை கடத்துபவர்களுக்கும் ஒருபோதும் மனம் வராது.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு  கிருபன் ஜி,

ஒரு தடவை பெரியாரும் அம்பேத்கரும் சந்தித்து கொண்டார்களாம். அப்போ அம்பேத்கர் பெளத்தத்தை தழுவும் படி பெரியாருக்கு கூற அவர் சொன்னாராம், இந்த மதத்தை விட்டு வெளியேறிய மறு நிமிடம் இதில் உள்ள குறைகளை விமர்சிக்கும் தகுதியை இழக்கிறேன். ஆகவே மாற முடியாது என்று.

ஒரு மதத்தில் உள்ள பிற்போக்கான கூறுகளை விமர்சிக்க அந்த மதம் சார்ந்தவர்களாக், இடம் சார்ந்தவர்களக இருக்க வேண்டும். அப்போதுதான் அதில் உள்ள பிழைகள் விளங்கும்.

2009 க்கு பிறகு சுற்றுலாவில் நல்லூருக்கு போய் - ஆட்டோகாரனிடம் தலவரலாறு படித்தவர்களிடம் எல்லாம் நீங்கள் விவாதிப்பது நேர மினெக்கேடு.

இது தம்மை தமிழர்களாக முன்னிறுத்த போடப்படும் போலி ஆசாரவாதி வேடம்.

பிற்சேர்க்கை

Lunar calendar எனும் நிலவு ஓட்டத்தை இஸ்லாமியர்கள் பின் பற்றுவார்கள். இப்போதான் உறைத்தது 😎

Edited by goshan_che

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

18 minutes ago, Nathamuni said:

மீண்டும் சொல்கிறேன்... அது ஈழத்தமிழர் கலாசார வழக்கம்.

அதுக்கும் சாதியத்துக்கும் தொடர்பே இல்லை. இன்றும் கூட, நல்லூர் கோவிலினுள் செல்லும் அனைவருமே மேலாடை அணிவதில்லை. யாருமே கோருவதில்லை.

இதுதான் உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, Nathamuni said:

இப்பதான் பார்த்தேன்.... நேற்று முழு நிலவு, வானில்.... 

முழுநிலவை சிங்களவரும் கொண்டாடுகிறார்களே.
முன்னர் பாடசாலை விடுமுறையும் விட்டதாக ஞாபகம்.

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, குமாரசாமி said:

இதுதான் உண்மை.

அண்ணை,

இப்போ நல்லூரில் இருக்கும் நடைமுறை இதுதான். எங்கள் ஊரிலும் இப்படி ஒரு நடைமுறைதான் இருக்கிறது.

அத்தோடு சேர்ட் வர முதலே - சால்வையை போட்ட படி கோவிலுக்குள் வர கூடாது என்ற நடை முறையும் இருந்திருக்கலாம். 

ஆகவே மேலாடை இல்லாமல் உள்ளே வரக்கூடாது என்பது தொன்று தொட்டு வரும் மரபு.

ஆனால் இந்த மரபு ஏன் வந்தது ? இங்கேதான் சாதியம் காரணமாக இருக்கலாம் என்கிறார் கிருபன்.

மானிப்பாயில் இருக்கும் சந்தைக்கு பெயர் ரவிக்கை சந்தை. முதன் முதலில் தாழ்தபட்ட பெண்கள் ரவிக்கை அணிந்து வர அனுமதிக்கபட்ட சந்தை என்பதால்.

அதே போல், உயர் சாதிகாரரை கண்டதும், தலையில், தோளில் கட்டிய துண்டை இறக்கும் நிலையும் இருந்தது.

ஆகவே மேலாடைக்கும் சாதியத்துக்கும் உள்ள தொடர்பு பொய்யல்ல.

இப்போ குறிப்பாக நல்லூர் போன்ற தெற்கில், வெளிநாட்டில் இருந்தெல்லாம் ஆட்கள் வரும் கோவில்களில் இது ஒரு வழமையான நடைமுறைதான். 

இப்போ மகிந்தவை சேர்ட் கழட்ட வைக்க சாதி காரணம் இல்லை. 

ஆனால் இந்த நடைமுறை ஆதியில் வர சாதி காரணமா?

எனக்கு பதில் தெரியவில்லை. ஆனால் கிருபனின் கேள்வியின் நியாயம் விளங்குகிறது.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

அதே போல், உயர் சாதிகாரரை கண்டதும், தலையில், தோளில் கட்டிய துண்டை இறக்கும் நிலையும் இருந்தது.

நீண்ட காலத்துக்கு முன்பு எமது ஊரில் இருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஈழப்பிரியன் said:

முழுநிலவை சிங்களவரும் கொண்டாடுகிறார்களே.
முன்னர் பாடசாலை விடுமுறையும் விட்டதாக ஞாபகம்.

அது புத்தர் ஞானம் அடைந்தது பெளர்ணமியில் என்பதால். 

ஆனால் முஸ்லீம்களின் முழு வாழ்க்கையுமே நிலவை வைத்துத்தான்.

அடிகடி நிலவின் நிலைகளையும் செக் பண்ணி அதன்படி சமய அனுஸ்டானக்களை செய்வார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ஈழப்பிரியன் said:

நீண்ட காலத்துக்கு முன்பு எமது ஊரில் இருந்தது.

உண்மைதான். 80/90 களின் போதே ஒரு மூக்கொழுகும் சிறுவனாக எனக்கு சிலது என் பெற்றாரின் பெற்றாரால் ( ஒரு பகுதி) சொல்லப்பட்டிருக்கிறது.

யார் வளவுக்குள் வரலாம், யார் கிணற்றில் தண்ணி அள்ளலாம், யார் சமயலறை வரை வரலாம். எப்படி, எங்கே வைத்து தேனீர் குடிக்கலாம். எத்தனையாவது பந்தியில் யார் உட்காரலாம்.  இப்படி வாழ்வின் அத்தனை அம்சங்களிலும் இது இருந்தது.

மேலே விசுகு அண்ணா சொன்னது போல, குறிச்சி, வட்டாரம் தெருப்பெயர்…நாரந்தனையில் வடக்கா, தெற்கா என கேட்பார்கள்.

இங்கே வெளிநாட்டில், எவ்விடம் தம்பி? யாழ்பாணம். ஓம் எல்லாரும் யாழ்பாணம்தான், யாழ்பாணத்தில் எவ்விடம்? ஊர் பேரை சொன்னால் - கோவிலுக்கு இடமோ, வலமோ? இப்படி உங்களை சில குறியீடுகள் மூலம் சாதி அறிவது யாழில் எப்போதும் நடப்பதுதான்.

இந்த பிண்ணனியில் மேலாடை விடயத்தையும் பார்க்லாமோ?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

நல்லவேளை முருகன் கோமணத்துடன் நிற்கும்போது அடியவர்கள் அதற்கு மேல் போடக்கூடாது என்று சட்டம் வைக்கவில்லை🤪

உங்கள் நேரத்துக்கு மிக்க நன்றி, 🙏

சும்மா விசயமே இல்லாமல், திரியை கடத்தி, உருட்டிக்கொண்டு அலம்பறை பண்ணாமல், நிதானத்துடன் யாரும் பேசினால் பேசலாம்.

பச்சை... சா...சா... நேரம் முடிந்து விட்டது.... வெளியால போகவேணும்... சந்திப்போம்... 👍

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.