Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முதன்முதலில் தமிழீழ மக்கள் முன் தோன்றி உரையாற்றிய தேசியத்தலைவரும், தீர்க்கதரிசனமும் -காணொளி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முதன்முதலில் தமிழீழ மக்கள் முன் தோன்றி உரையாற்றிய தேசியத்தலைவரும், தீர்க்கதரிசனமும் -காணொளி

breaking

சுதுமலைப் பிரகடனம் 

04.08.1987 அன்று தமிழீழ தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் முதன்முதலில் தமிழீழ மக்கள் முன் தோன்றி உரையாற்றிய வரலாற்றுமுக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு இந்நாளில் நிகழ்ந்தது. இந்திய -இலங்கை ஒப்பந்தம் எமது தேசிய இனப்பிரச்சனைக்கு ஓரு நிரந்தர தீர்வை ஏற்படுத்தித் தராது என்பதைத் தீர்க்கதரிசனமாகக் கூறினார்.

https://www.thaarakam.com/news/19acf90e-3187-4249-8f11-e16ade6badc8

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

04.08.1987 தலைவரின் வரலாற்று சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம்.

 

எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே!

 

இன்று எமது விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒரு மாபெரும் திருப்பம் ஏற்பட்டிருக்கிறது. திடீரென எமக்கு அதிர்ச்சியூட்டுவது போல, எமது சக்திக்கு அப்பாற்பட்டது போல, இந்தத் திருப்பம் ஏற்பட்டிருக்கிறது. இதன் விளைவுகள் எமக்கு சாதகமாக அமையுமா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். திடீரென மிகவும் அவசரமாக, எமது மக்களையோ, எமது மக்களின் பிரதிநிதிகளாகிய எம்மையோ கலந்தாலோசிக்காமல், இந்தியாவும் இலங்கையும் செய்து கொண்ட ஒப்பந்தம் இப்பொழுது அவசரஅவசரமாக அமுலாக்கப்பட்டுவருகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள்.

 நான் டெல்லி செல்லும்வரை இந்தஒப்பந்தம் பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது, பாரதப்பிரதமர் என்னைச் சந்திக்க விரும்புவதாகச் சொல்லி என்னை டெல்லிக்கு அவசரமாக அழைத்துச் சென்றார்கள். அங்கு சென்றதும் இந்த ஒப்பந்தம் எமக்குக் காண்பிக்கப்பட்டது. இந்த ஒப் பந்தத்தில் பல சிக்கல்கள் இருந்தன, பல கேள்விக்குறிகள் இருந்தன. இந்த ஒப்பந்தத்தால் எமது மக்களின் பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு ஏற்படுமா என்பது பற்றி எமக்கு சந்தேகம் எழுந்தது. ஆகவே இந்த ஒப்பந்தத்தை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை இந்திய அரசுக்குத் தெட்டத்தெளிவாக விளக்கினோம்.

 ஆனால், நாம் ஏற்றுக்கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாது போனாலும் இந்த ஒப்பந்தத்தை அமுலாக்கியே தீருவோமென இந்திய அரசுகங்கணம் கட்டி நின்றது.

இந்திய அரசின் நிலைப்பாடு குறித்து நாம் ஆச்சரியப்படவில்லை. இந்த ஒப்பந்தம் தமிழர் பிரச்சினையை மட்டும் தொட்டு நிற்கவில்லை. இது பிரதானமாக இந்திய - இலங்கை உறவு பற்றியது. இந்திய வல்லாதிக்க வியூகத்தின் கீழ் இலங்கையைக் கட்டுப்படுத்தும் விதிகளும் இதில் அடங்கியிருக்கின்றன. இலங்கையில் அந்நிய நாசகார சக்திகள் காலூன்றாமல் தடுக்கவும் இது வழிவகுக்கிறது. ஆகவேதான் இந்திய அரசு இந்த ஒப்பந்தத்தைச் செய்து கொள்வதில் அதிக அக்கறை காட்டியது. ஆனால், அதே சமயம், ஈழத்தமிழரின் அரசியல் தலைவிதியை நிர்ணயிப்பதாகவும் இந்த ஒப்பந்தம் அமைகிறது. ஆகவேதான், எமது மக்களைக்கலந்தாலோசிக்காது, எமது கருத்துக்களைக் கேளாது இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டதை நாம் கடுமையாக ஆட்சேபித்தோம். ஆனால் நாம் ஆட்சேபித்ததில் அர்த்தமில்லை . எமது அரசியல் தலை விதியை எமது வல்லமைக்கு அப்பாற்பட்ட ஒரு மாபெரும் வல்லரசு நிச்சயிக்க முடிவு செய்திருக்கும் பொழுது நாம் என்ன செய்வது?

 இந்த ஒப்பந்தம் நேரடியாக எமது இயக்கத்தைப் பாதிக்கிறது; எமது அரசியல் இலட்சியத்தைப் பாதிக்கிறது; எமது போராட்ட வடிவத்தைப் பாதிக்கிறது; எமது ஆயுதப் போராட்டத்திற்கு ஆப்புவைப்பதாகவும் அமைகிறது. பதினைந்து வருடங்களாக, இரத்தம்சிந்தி, தியாகம் புரிந்து, சாதனைகள் ஈட்டி எத்தனையோ உயிர்ப்பலி கொடுத்து கட்டி எழுப்பப்பட்ட ஒரு போராட்ட வடிவம் ஒரு சில தினங்களில் கலைக்கப்படுவதென்றால் அதை நாம் ஜீரணிக்க முடியாமல் இருக்கிறது. திடீரென கால அவகாசமின்றி எமது போராளிகளின் ஒப்புதலின்றி, எமது மக்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதமின்றி இந்த ஒப்பந்தம் எம்மை நிராயுதபாணிகளாக்குகிறது. ஆகவே, நாம் ஆயுதங்களை ஒப்படைக்க மறுத்தோம்.

 இந்தச் சூழ்நிலையில் பாரதப்பிரதமர் ராஜீவ்காந்தி அவர்கள் என்னை அழைத்துப்பேசினார். அவரிடம் எமது பிரச்சினைகளை மனந்திறந்து பேசினேன். சிங்கள இனவாத அரசில் எமக்குத் துளிகூட நம்பிக்கை இல்லையென்பதையும் இந்த ஒப்பந்தத்தை அவர்கள் நிறைவேற்றப் போவதில்லை என்பதையும் இந்தியப் பிரதமரிடம் எடுத்துரைத்தேன். எமது மக்களின் பாதுகாப்புப்பிரச்சினை பற்றியும் அதற்கான உத்தரவாதங்கள் பற்றியும் அவரிடம் பேசினேன். பாரதப்பிரதமர் எமக்குசில வாக்குறுதிகளை அளித்தார். எமது மக்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளித்தார். பாரதப் பிரதமரின் நேர்மையில் எமக்கு நம்பிக்கை இருக்கிறது. அவரது உறுதிமொழிகளில் நம்பிக்கை இருக்கிறது. சிங்கள இன வாத அரசு மீண்டும் தமிழர் இன அழிப்பு நடவடிக்கையில் இறங்க இந்தியா அனுமதிக்காது என நாம் நம்புகிறோம். இந்த நம்பிக்கையில் தான் நாம் இந்திய சமாதானப்படையிடம் ஆயுதங்களை ஒப்படைக்க முடிவு செய்தோம்.

 நாம் எமது மக்களின் பாதுகாப்பிற்காக எத்தனை அளப்பரிய தியாகங்களைப் புரிந்தோம் என்பதை நான் இங்கு விளக்கிக்கூறத் தேவையில்லை . எமது இலட்சியப் பற்றும், தியாக உணர்வும் எத்தன்மை வாய்ந்தது என்பதை எமது மக்களாகிய நீங்கள் நன்கு அறிவீர்கள். உங்களது பாதுகாப்பிற்காக, உங்களது விடுதலைக்காக, உங்களது விமோசனத்திற்காக நாங்கள் ஏந்திய ஆயுதங்களை இந்திய அரசிடம் ஒப்படைக்கிறோம். நாம் இந்த ஆயுதங்களை ஒப்படைக்கும் கணத்திலிருந்து, எமது மக்களாகிய உங்களின் பாதுகாப்புப் பொறுப்பையும் இந்தியாவிடம் ஒப் படைக்கிறோம். ஈழத் தமிழரின் ஒரே பாதுகாப்பு சாதனமாக இருந்துவந்த இந்த ஆயுதங்களை இந்திய அரசு எம்மிடத்திலிருந்து பெற்றுக் கொள்வதிலிருந்து மக்களின் பாதுகாப்பு என்ற பெரும் பொறுப்பையும் ஏற்றுக்கொள்கிறது.

 

 

yy2SVu7E0SpWNU4mFmuZ.jpg

 

ஆயுதக் கையளிப்பு என்பது இந்தப் பொறுப்பு மாற்றத்தைத்தான் குறிக்கிறது. நாம் ஆயுதங்களைக் கையளிக்காது போனால் இந்திய இராணுவத்துடன் மோதும் துர்ப்பாக்கிய சூழ் நிலை ஏற்படும். இதை நாம் விரும்பவில்லை. இந்தியாவை நாம் நேசிக்கிறோம். இந்திய மக்களை நாம் நேசிக்கிறோம். இந்திய வீரனுக்கு எதிராக நாம் ஆயுதங்களை நீட்டத் தயாராக இல்லை . எமது எதிரியிட மிருந்து எம்மைப் பாதுகாக்கும் பொறுப்பை இந்திய இராணுவ வீரர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்.

 நாம் ஆயுதங்களை அவர்களிடம் கையளிப் பதிலிருந்து ஈழத் தமிழன் ஒவ்வொருவனதும் உயிருக்கும் பாதுகாப்பிற்கும் இந்திய அரசுதான் பொறுப்பாக இருக்க வேண்டும் என்பதை நான் இங்கு இடித்துக்கூற விரும்புகிறேன். இந்தியாவின் இந்த முயற்சிக்கு நாம் ஒத்துழைப்பதைத் தவிர எமக்கு வேறு வழியில்லை. இந்தச்சந்தர்ப்பத்தை நாம் அவர்களுக்கு வழங்குவோம். ஆனால் இந்த ஒப்பந்தத்தால் தமிழரின் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படுமென நான் நினைக்கவில்லை  சிங்கள இனவாத பூதம் இந்த ஒப்பந்தத்தை விழுங்கி விடும் காலம் வெகுதூரத்தில் இல்லை .தமிழீழத் தனியரசே தமிழீழ மக்களின் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை அளிக்கும் என்பதில் எனக்கு அசையாத நம்பிக்கையுண்டு. தமிழீழ இலட்சியத்திற்காகவே நான் தொடர்ந்து போராடுவேன் என் பதையும் நான் இங்கு திட்டவட்டமாக உங்களுக்கு எடுத்துக்கூற விரும்புகிறேன். போராட்ட வடிவங்கள் மாறலாம். ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை. எமது இலட்சியம் வெற்றி பெறுவதானால் எமது மக்களாகிய உங்களின் ஏகோபித்த ஆதரவு என்றும் எமக்கு இருக்கவேண்டும்.

 தமிழீழ மக்களின் நலன் கருதி இடைக்கால அரசில் பங்குபற்ற அல்லது தேர்தலில் போட்டியிட வேண்டிய சூழ்நிலை எமது இயக்கத்திற்கு ஏற்படலாம். ஆனால் நான் எந்தக் காலகட்டத்திலும் தேர்தலில் பங்கு பற்றப் போவதில்லை. முதலமைச்சர் பதவியையும் ஏற்கப்போவதில்லை. இதை நான் மிகவும் உறுதியாகச் சொல்லவிரும்புகிறேன்.

 

 

2HwoSgNOaMaxBjffbraL.jpg

 

 

https://www.thaarakam.com/news/146b15cf-6e0c-4e45-abfd-b6f862e2c1d4

 

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

ராஜீவ்காந்தி ஏன் கொல்லப்பட்டார் என்பதற்கான பதில் இப்பேச்சில் இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
On 4/8/2021 at 00:17, விசுகு said:

ராஜீவ்காந்தி ஏன் கொல்லப்பட்டார் என்பதற்கான பதில் இப்பேச்சில் இருக்கிறது.

ராஜீவ்காந்தியை யார் கொன்றது?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கற்பகதரு said:

ராஜீவ்காந்தியை யார் கொன்றது?

என்ன ராஜீவ்காந்தி செத்திட்டாரா?? 

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, விசுகு said:

என்ன ராஜீவ்காந்தி செத்திட்டாரா?? 

எந்த ராஜீவ்காந்தி பற்றி கேட்கிறீர்கள்? எப்படியெல்லாம் பொதுமக்களை ஏமாற்றியிருப்பார்கள் என்பதற்கு இதுவொன்று போதுமே!

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கற்பகதரு said:

எந்த ராஜீவ்காந்தி பற்றி கேட்கிறீர்கள்? எப்படியெல்லாம் பொதுமக்களை ஏமாற்றியிருப்பார்கள் என்பதற்கு இதுவொன்று போதுமே!

செயலுக்கு முன்னுதாரணமாக இருந்தவர்கள் மீதே ஏமாற்ற குற்றச்சாட்டு??

***

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, கற்பகதரு said:

ராஜீவ்காந்தியை யார் கொன்றது?

சுப்பிரமணியன் சுவாமி

samayam-tamil.jpg

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, குமாரசாமி said:

சுப்பிரமணியன் சுவாமி

samayam-tamil.jpg

அண்ணா

அந்த நேரத்தில் அவர் புலிகளின் அதிதீவிர ஆதரவாளர். புலிகள் செய்திருந்தால் அவருக்கும் அதில் பங்குண்டு. 

ஒரு விடயத்தை செய்து விட்டு பின்னர் அது நான் இல்லை என்கின்றவர்களுக்கு தமிழில் நல்ல சொல் உண்டு. ஆனால் வெட்டப்படும் சொற்களை பயன்படுத்தாது ......??

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

செயலுக்கு முன்னுதாரணமாக இருந்தவர்கள் மீதே ஏமாற்ற குற்றச்சாட்டு??

***

நீங்களா? அப்படியா? உங்களைப்பற்றி மற்றவர்கள் அப்படிச்சொன்னால் நம்பலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

 

58 minutes ago, கற்பகதரு said:

நீங்களா? அப்படியா? உங்களைப்பற்றி மற்றவர்கள் அப்படிச்சொன்னால் நம்பலாம்.

முதலில் நீங்கள்  தொடங்கியது  பொதுக்கேள்வி

அதை  மாற்றி  இப்போ  எனது  தனிப்பட்ட  செயலைக்கேட்கிறீர்கள்

பரவாயில்லை 

பிரான்சில் தாயக அமைப்புக்களுடன் தொடர்பிருந்தால் ..?

எனது  செயல்களை  அவர்களிடம் கேட்டு  உறுதிப்படுத்திக்கொள்ளலாம்

எனது  ஊர்  சார்ந்த செயல்களை  ஊர் அமைப்புடன்  தொடர்பு  கொண்டு கேட்டு  உறுதிப்படுத்தலாம்

எனது  குடும்பம்  சார்ந்தும்  என்னால்  செய்யக்கூடிய செயல்கள்  அனைத்தும் செய்து எந்த  குறையும்  விட்டதில்லை. வேண்டுமானால்  அவர்களிடமும் கேட்டு உறுதிப்படுத்தலாம்

ஏன்  யாழும்  எனது  குடும்பம் தான்  இங்கேயும்  எனது    செயல்கள்  சார்ந்து கேட்டு  உறுதிப்படுத்தலாம்

நான்  சொன்னால் நம்பவா  போகிறீர்கள்??

நித்திரையாக  கிடந்தால் எழுப்பலாம்??

Edited by விசுகு
பிழை திருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கற்பகதரு said:

ராஜீவ்காந்தியை யார் கொன்றது?

அதானே பிறரால் கொல்லப்படும் அளவிற்கு ராஜீவ்காந்தி என்ன செய்தார் என்று நீங்கள் சொல்ல முடியுமா?

 

2 hours ago, கற்பகதரு said:

நீங்களா? அப்படியா? உங்களைப்பற்றி மற்றவர்கள் அப்படிச்சொன்னால் நம்பலாம்.

விசுகு அண்ணா தான் சார்ந்த சமூகத்திற்கு இனத்திற்கு  உதவ தன்னால் இயன்ற அளவு செயல்வடிவம் கொடுத்திருக்கிறார் என்பதற்கு யாழ்களத்திலேயே ஆதாரங்கள் உண்டு.

நீங்கள் ஏதாவது இனம் சார்ந்து சமூகம் சார்ந்து செயல்பட்டிருக்கிறீர்கள் என்பதற்கான ஆதாரம் ஏதாவது பகிரமுடியுமா?

அவர் செய்தார் என்பதற்காக நீங்கள் செய்யவேண்டும் என்பது அவசியமில்லை,

ஆனால் பொதுவெளியில் எந்தவித ஆதாரமும் இன்றி அவர் செயல்வடிவில் ஏதும்  செய்யவில்லை மற்றவர்கள் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று நீங்கள் சொன்னால் நீங்கள்  செயல்வடிவானவர் என்பதற்காக ஆதாரம் காண்பிக்கவேண்டியது அவசியம்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

நித்திரையாக  கிடந்தால் எழுப்பலாம்??

உங்களையா? சாத்தியமா?

1 hour ago, valavan said:

விசுகு அண்ணா தான் சார்ந்த சமூகத்திற்கு இனத்திற்கு  உதவ தன்னால் இயன்ற அளவு செயல்வடிவம் கொடுத்திருக்கிறார் என்பதற்கு யாழ்களத்திலேயே ஆதாரங்கள் உண்டு.

அவரின் பங்காளியா? சோளியன் குடுமி சும்மா ஆடாதே?🤑

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, கற்பகதரு said:

எந்த ராஜீவ்காந்தி பற்றி கேட்கிறீர்கள்? எப்படியெல்லாம் பொதுமக்களை ஏமாற்றியிருப்பார்கள் என்பதற்கு இதுவொன்று போதுமே!

யார் ஏமாற்றினார்கள் ?

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, valavan said:

விசுகு அண்ணா தான் சார்ந்த சமூகத்திற்கு இனத்திற்கு  உதவ தன்னால் இயன்ற அளவு செயல்வடிவம் கொடுத்திருக்கிறார் என்பதற்கு யாழ்களத்திலேயே ஆதாரங்கள் உண்டு.

நீங்கள் ஏதாவது இனம் சார்ந்து சமூகம் சார்ந்து செயல்பட்டிருக்கிறீர்கள் என்பதற்கான ஆதாரம் ஏதாவது பகிரமுடியுமா?

அவர் செய்தார் என்பதற்காக நீங்கள் செய்யவேண்டும் என்பது அவசியமில்லை,

ஆனால் பொதுவெளியில் எந்தவித ஆதாரமும் இன்றி அவர் செயல்வடிவில் ஏதும்  செய்யவில்லை மற்றவர்கள் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று நீங்கள் சொன்னால் நீங்கள்  செயல்வடிவானவர் என்பதற்காக ஆதாரம் காண்பிக்கவேண்டியது அவசியம்.

********* கருத்துக்களுக்கு பதிலெழுதி உங்கள் தரத்தினை குறைத்துக்கொள்ளாதீர்கள் வலவன்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பெருமாள் said:

யார் ஏமாற்றினார்கள் ?

ஏழுமணி  நேரமாகி விட்டது ஆதரமற்று கருத்துக்கள் யாழில்  எழுதும் கற்பகத்தரு இனியும் விடைதருவாரா ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.