Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தொற்றாளர் தொகை திட்டமிட்டுக் குறைப்பு. பின்னணியில் பெரும் புள்ளிகள். அம்பலப்படுத்திய அரச பங்காளி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

3 hours ago, nedukkalapoovan said:

The vaccines produced by AstraZeneca and J&J both rely on adenoviruses, which carry the DNA encoding a coronavirus protein called spike into human cells. The cells’ protein machinery then uses the DNA to make the spike protein, and the body develops an immune response against it.

At present, researchers don’t know what component of these vaccines could be causing the unwanted immune response against platelet factor 4. “It could be caused by the vectors, it could be caused by the spike protein, it could be caused by a contaminant present in the vector,” says viral immunologist Hildegund Ertl at the Wistar Institute in Philadelphia, Pennsylvania.

இந்த இணைப்பை வழங்கும் போது.. உங்கள் முதற் கருத்தில்.. வலுவாக இருந்த தியரி.. இப்ப எடுகோள் ஆகி.. வலுவில்லாத.. இருக்கலாம்.. போகலாம்.. என்ற நிலைக்கு இறங்கி வந்ததெப்படி.

அப்பவே அந்த திரியில் இணையவனை கேட்டோம்.. எது சிறந்த கருத்தென்று.. அவரும் பதில் சொல்லவில்லை. இந்த கட்டுரையை நீங்கள் இங்கு பகிர முன்னர்.. எப்பவோ வாசித்தும் விட்டேன். 😃🤣

ஓம், கட்டாயம், வாசித்திருப்பீர்கள் என்று தெரியும்! (நெடுக்கரா கொக்கா🤣)

வலுவான தியரி என்று நான் குறிப்பிட்டது, இந்த எடுகோளைத் தான் - இனி hypothesis உம் therory  உம் ஒன்றா என்று முட்டையில் உரோமம் புடுங்க ஆரம்பிக்கலாம்! விஞ்ஞான பரிபாசையில் இரண்டும் ஒன்றில்லை என்பதை ஏற்றுக் கொள்கிறேன்.

VITT என்பது என்ற ஏற்கனவே பல ஆண்டுகளாகத் தெரிந்த HITT குருதியுறைவு நோய் நிலையை ஒத்ததே. ஹெபாரின் இன் negative charge காரணமாக நிகழ்வது போலவே, அடினோவைரசின் டி.என்.ஏ யின் negative charge காரணமாகவும் நிகழலாம். இதே காரணத்தினால் ஜே. அன்ட் ஜேயிலும் , பாதுகாப்புப் பிரச்சினைகள் வெளியே வராத ஸ்புட்னிக்கிலும் கூட குருதியுறைவு பின்விளைவாக இருக்கிறது!

இது தவறான தகவலா? 🤔

"மேலே யாருக்கு என்ன தடுப்பூசி அவசியமென்று தெளிவாகச் சொல்லப் பட்டிருக்கிறது.." என்று இணையவன் சொன்னது , அந்தத் திரியின் மூல இணைப்பில் இருந்த பேட்டியில் மருத்துவர் சொல்லியிருந்ததை! மீளப் போய் பேட்டியின் இறுதிப் பகுதியைப் பாருங்கள், விளங்கும்!

இணையவன் என்னையோ வேறு யாரையுமோ சிலாகித்ததாக எனக்குத் தெரியவில்லை!

Edited by Justin
கீழ் பந்தி சேர்ப்பு

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, MEERA said:

தொற்றாளர்கள்,

மனைவியின் சிறியதாயார் கனடாவிலிருந்து சிறீலங்காவிற்கு கடந்த மே மாதம் திரும்பியிருந்தார். விமானநிலையத்தில் PCR பரிசோதனை பொசிரிவ். அப்படியிருந்தும் திருமலை நகர் பகுதி விடுதியில் 10 நாட்கள் + 4/5 நாட்கள் வீட்டில்.

இப்படி பல சம்பவங்கள் உண்டு…

நன்றி 🙏

உங்களுக்கு மட்டும் தெரிந்த இந்த ஒரு சம்பவத்தை வைத்துக் கொண்டு என்ன சொல்ல முடியும்? வெளிநாட்டுப் பயணியாக நடத்தியிருக்கிறார்கள். சிலருக்கு தொற்று இருந்திருக்கிறது, பலருக்கு சாதாரண தனிமைப் படுத்தல் என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஏதோ, கொரனாத் தொற்று இருக்கும் தென்பகுதியில் இருக்க வேண்டிய ஆட்களை வடக்கிற்கு பார்சல் செய்த மாதிரியல்லவா இங்கே குத்தி முறிந்தனர்?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

போனவருடம் பரவல் இலங்கையில் நடந்தபோது நாங்க பிழையான தகவலை சொல்கிறார்கள் என்று சொல்ல வரிந்துகட்டிக்கொண்டு அப்படி நடக்க சான்ஸ் இல்லை அப்படி இப்படி கோத்தா அரசுக்கு சார்பாக கதைகளை அவிட்டு விட்டார் அவர் எழுதியது இப்பவும் இருக்கு .

பிழையான தகவலையும் தேவையற்ற உசுப்பேத்தலும் புலிகளை அழித்த எமக்கு கொர்னோவை அழிப்பது பெரிய வேலைகிடையாது பிளஸ் புத்த பிரான் கைவிடார் மந்திரித்த தண்ணீர் இப்படியானது உருட்டல் சுருட்டலுக்கும் சிங்களவர் மயங்கி சுகாதர திணைக்களம் கரடியாக  கத்தியும் யாரும் காது  கொடுத்து  கேட்கவில்லை விளைவு இன்றுள்ள நிலைமை மேலும் மேலும் தப்பு பண்ணுகிறார்கள் குறைத்து காட்டுவதன் மூலம் அஜாக்கிரதை உணர்வே மேலும் வளரும் என்பதை உணர மறுக்கிறார்கள் .

திரும்பவும் முதல்ல இருந்தா பெருமாளே?

அலை 1,2 இல்,  அந்த நேரம் நீங்களும், நாதமும் சொன்ன பொய்த்தகவல்கள் எவையும் வேறு ஆதாரங்களால்  நிறுவப் படவில்லை! மக்கள் ஆயிரக் கணக்கில், ஏன் நூற்றுக் கணக்கில் கூட டெய்லி சாகவில்லை. இதை நான் அப்போது உறுதி செய்தது யாழ் பல்கலை சமுதாய மருத்துவ பீட தலைவர் டொக்டர் சுரேந்திரகுமாரிடம்! அவர் கோவிட் செயலணியின் ஒருங்கிணைப்பாளர்!

இதே உறுதியை கோசானும் தந்திருந்தார்!

இப்ப என்ன புதிசா ஏதோ நீங்கள் சொன்னது நடந்தது மாதிரி புதுக் கதை விடுறியள்? 🤣. இப்போது இருக்கும் நிலையின் மூலம், புது வருடக் கொண்டாட்டமும் அதனோடு வந்த டெல்ராவும். 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Justin said:

"மேலே யாருக்கு என்ன தடுப்பூசி அவசியமென்று தெளிவாகச் சொல்லப் பட்டிருக்கிறது.." என்று இணையவன் சொன்னது , அந்தத் திரியின் மூல இணைப்பில் இருந்த பேட்டியில் மருத்துவர் சொல்லியிருந்ததை! மீளப் போய் பேட்டியின் இறுதிப் பகுதியைப் பாருங்கள், விளங்கும்!

இணையவன் என்னையோ வேறு யாரையுமோ சிலாகித்ததாக எனக்குத் தெரியவில்லை!

இணையவன் அண்ணாவை யாரையும் சிலாகிக்கச் சொல்லவில்லை. எது நல்ல கருத்தென்று இனங்காட்டச் சொன்னது.. எந்த அடிப்படையில்.. யாருக்கு என்ன தடுப்பூசி அவசியமென்பதை அவர் தீர்மானித்தார் என்று இனங்காட்டவும்.. அது உண்மையில் அந்த அவசியத்தை விஞ்ஞான ரிதியாக.. மருத்துவ ரீதியாகச் சொல்கிறதா என்பதை இனங்காட்டவுமே.

எதுக்கு நீங்களா.. அதற்கு இன்னொரு திரிப்பை கொடுக்கனும்...??! 

7 hours ago, Justin said:

ஓம், கட்டாயம், வாசித்திருப்பீர்கள் என்று தெரியும்! (நெடுக்கரா கொக்கா🤣)

வலுவான தியரி என்று நான் குறிப்பிட்டது, இந்த எடுகோளைத் தான் - இனி hypothesis உம் therory  உம் ஒன்றா என்று முட்டையில் உரோமம் புடுங்க ஆரம்பிக்கலாம்! விஞ்ஞான பரிபாசையில் இரண்டும் ஒன்றில்லை என்பதை ஏற்றுக் கொள்கிறேன்.

ஏன் இது தான்.. அது.. அது தான் இது.. அப்புறம் ஒன்றில்லை.. இந்தக் குழப்பம். தவறான கருத்தை பதிந்தீர்கள் என்பது மட்டுமல்ல.. கொடுத்தது.. தவறான விளக்கமும் கூட.  

சில வக்சீன்கள் எடுப்பதால்.. ஒரு சிலரில் ஏற்படும் குருதி உறைதலுக்கு இன்னும் சரியான காரணங்களை ஆராய்ச்சியாளர்கள்.. முழுமையாகக் கண்டறியவில்லை. 

அதேவேளை.. சினோபாம் உட்பட்ட சீன வக்சீன்களின்.. பக்க விளைவுகள் குறித்தும்.. முழுத் தகவல்கள் இல்லை. ஆனால்.. இவை 18-60 வயதிருக்கே உலக சுகாதார நிறுவனத்தின் தற்காலிக அனுமதியின்.. கீழ்.. பரிந்துரைக்கப்பட்டிருக்கின்றன.  அதற்கு கீழும்.. மேலும் போடும் போது ரிஸ்க் பற்றி அறிவுறுத்தவும் கண்காணிக்கவும் கோரப்பட்டிருக்கிறது. ஆனால்.. இது எதுவுமே சொறீலங்காவில் நடைமுறையில் இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

புதிய சுகாதாரதுறை அமைச்சர் இனி உண்மையை கூறுவார் பாருங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Justin said:

திரும்பவும் முதல்ல இருந்தா பெருமாளே?

அலை 1,2 இல்,  அந்த நேரம் நீங்களும், நாதமும் சொன்ன பொய்த்தகவல்கள் எவையும் வேறு ஆதாரங்களால்  நிறுவப் படவில்லை! மக்கள் ஆயிரக் கணக்கில், ஏன் நூற்றுக் கணக்கில் கூட டெய்லி சாகவில்லை. இதை நான் அப்போது உறுதி செய்தது யாழ் பல்கலை சமுதாய மருத்துவ பீட தலைவர் டொக்டர் சுரேந்திரகுமாரிடம்! அவர் கோவிட் செயலணியின் ஒருங்கிணைப்பாளர்!

இதே உறுதியை கோசானும் தந்திருந்தார்!

இப்ப என்ன புதிசா ஏதோ நீங்கள் சொன்னது நடந்தது மாதிரி புதுக் கதை விடுறியள்? 🤣. இப்போது இருக்கும் நிலையின் மூலம், புது வருடக் கொண்டாட்டமும் அதனோடு வந்த டெல்ராவும். 

முதலில் எழுதியதை படித்து இருந்தால் இப்படி கருத்துக்கள் வந்திருக்காது உங்களிடம் இருந்து .

  • கருத்துக்கள உறவுகள்
On 15/8/2021 at 05:02, goshan_che said:

இலங்கை மீதான கடுப்பில், இலங்கைக்கு சேறடிப்பதாக நினைத்து எமக்கு நாமே ஆப்படிக்க்கும் போக்கு அதிகரிப்பதாக படுகிறது.

நான் எழுதியது இந்தக்கருத்துக்கு, ஏதோ இலங்கை அரசு புனிதன் என்பது போலவும் நாங்கள் சேறடிப்பது போலவும் கோஷான் எழுதியது மிகவும் தவறானது. இந்த மக்கள் மரணத்தின் விளிம்பு வரை போய் தப்பியவர்கள், மரணத்தின் மேல் நடந்து மரத்துப் போனவர்கள். நம்பிக்கையிழந்து, விரக்தியிலும், வலியிலும் வாழ்பவர்களே ஏராளம். பலவகையிலும்  மக்களை துரத்தி, துரதியடித்த அரசும் இராணுவமும், எங்களை திட்டம் போட்டு அழித்தவர்கள் காப்பாற்றுவார்கள் என்று நம்புவது கடினம். இவர்களிடம் நம்பிக்கையிழந்து, நாங்கள் ஏமாற்றப்படுகிறோம், எதிர்த்துக் கேட்க முடியாத கையறு நிலையில் உள்ளோம் என்பதால் எதையும் அவநம்பிக்கையோடே நோக்குகிறார்கள். எங்களின் உறவுகளை நினைவு கூர நீதிமன்றத்தில் தடை வாங்கியவர்கள், வெளிநாட்டினருக்கு  தாராளமாக திறந்து விட்டனர். தென்பகுதி அரசியல் வாதிகள் தடையில்லாமல் வந்து போனார்கள். இவர்கள் மேல் நம்பிக்கை வருமா? பழிவாங்கப்படுகிறோம் எனும் உணர்வு வராதா? இந்த ஆண்டு தொடக்கத்தில் ஒரு வயதானவர் ஐந்து வருடங்களுக்கு மேல் நோயுற்று இருந்து இறந்தார். உறவுகள் வந்து சேரமுதல் எறும்பு மணம் பிடித்து வருவதுபோல் இராணுவம் வந்து அவசரமாக அந்த உடலை வற்புறுத்தி எடுக்க வைத்தனர். அவ்வாறே விபத்தில் இறந்த ஒருவரது உடலை கொரோனா கண்டுபிடித்ததாக அறிவித்து அவசரமாக உறவினரை பார்க்க விடாது தடுத்தனர். மக்கள் கண்முன்னே நடந்த இந்த மாதிரியான செயல்கள் இவர்கள் மேல் இருந்த சந்தேகம், வெறுப்பு அதிகரிக்க காரணமாயிற்று. மாற்றான்தாய்  போல் இவர்கள் நம்மை நடத்துவது இது ஒன்றும் புதிதில்லை. எங்கோ ஒரு மூலையில் நடந்ததை மணந்து தேடிப்பிடித்து தடுத்தவர்களால் அன்னதான நிகழ்வை தடுக்க முடியவில்லையா? வெளிநாட்டில் உள்ள இராணுவத்தோடு நம் நாட்டு இராணுவத்தை ஒப்பிட்டு இலங்கைக்கு வக்காலத்து வாங்காதீர்கள். இந்த இராணுவம் தமிழரை அலைக்கழிக்கவென்றே எப்போதும்  அலைகிறவர்கள். அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கப்படவேண்டும். அவர்கள் காயங்கள் ஆற்றப்படவேண்டும். மக்கள் புத்திசாலிகள் அவர்கள் புலம்பெயர்ந்தோர் சொற்படி நடக்கமாட்டார்கள் என்று நான் சொல்லவில்லை, இங்கு பலமுறை பலரால் பிரஷ்தாபிக்கப்பட்டாயிற்று. இப்போ ஏதோ புதிதாய் இங்கு கருத்து பரிமாறுவதார்த்தான் மக்கள் ஊசியை புறக்கணிக்கப் போகிறார்கள் என்று அழுகிறார்கள். வெளிநாட்டிலுள்ளவர்கள் போல் விரும்பிய ஊசியை தெரிவு செய்யும் நிலையிலேயா நம்மக்கள் இருக்கிறார்கள்?  இங்கு ஊசியின் சாதக, பாதக, சொந்த அனுபவங்களை பகிர்வதன் மூலம் தெரிவு உள்ளவர்கள் சரியானதை தெரிவு செய்ய உதவியாக இருக்கும். இதனால் நம் மக்கள் ஊசியே போட மாட்டார்கள் என்று சிந்தித்தால் இங்கு எந்த செய்தியையும் பகிர முடியாதல்லவா?  

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, nedukkalapoovan said:

சில வக்சீன்கள் எடுப்பதால்.. ஒரு சிலரில் ஏற்படும் குருதி உறைதலுக்கு இன்னும் சரியான காரணங்களை ஆராய்ச்சியாளர்கள்.. முழுமையாகக் கண்டறியவில்லை. 

மேலைநாடுகளில் தடுப்பூசி போடும்போது அஸ்பரேட் செய்வதில்லையாமே? ஒருவேளை இந்த தடுப்பூசி தவறுதலாக ரத்த நாளங்களில் ஏற்றப்படும்போது குருதியுறைதல் ஏற்பட வாய்ப்புண்டா?

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, nedukkalapoovan said:

இணையவன் அண்ணாவை யாரையும் சிலாகிக்கச் சொல்லவில்லை. எது நல்ல கருத்தென்று இனங்காட்டச் சொன்னது.. எந்த அடிப்படையில்.. யாருக்கு என்ன தடுப்பூசி அவசியமென்பதை அவர் தீர்மானித்தார் என்று இனங்காட்டவும்.. அது உண்மையில் அந்த அவசியத்தை விஞ்ஞான ரிதியாக.. மருத்துவ ரீதியாகச் சொல்கிறதா என்பதை இனங்காட்டவுமே.

எதுக்கு நீங்களா.. அதற்கு இன்னொரு திரிப்பை கொடுக்கனும்...??! 

ஏன் இது தான்.. அது.. அது தான் இது.. அப்புறம் ஒன்றில்லை.. இந்தக் குழப்பம். தவறான கருத்தை பதிந்தீர்கள் என்பது மட்டுமல்ல.. கொடுத்தது.. தவறான விளக்கமும் கூட.  

சில வக்சீன்கள் எடுப்பதால்.. ஒரு சிலரில் ஏற்படும் குருதி உறைதலுக்கு இன்னும் சரியான காரணங்களை ஆராய்ச்சியாளர்கள்.. முழுமையாகக் கண்டறியவில்லை. 

அதேவேளை.. சினோபாம் உட்பட்ட சீன வக்சீன்களின்.. பக்க விளைவுகள் குறித்தும்.. முழுத் தகவல்கள் இல்லை. ஆனால்.. இவை 18-60 வயதிருக்கே உலக சுகாதார நிறுவனத்தின் தற்காலிக அனுமதியின்.. கீழ்.. பரிந்துரைக்கப்பட்டிருக்கின்றன.  அதற்கு கீழும்.. மேலும் போடும் போது ரிஸ்க் பற்றி அறிவுறுத்தவும் கண்காணிக்கவும் கோரப்பட்டிருக்கிறது. ஆனால்.. இது எதுவுமே சொறீலங்காவில் நடைமுறையில் இல்லை. 

நெடுக்கர், சரியான காரணங்களை இனங்காணுவதற்கு முதல் சில mechanistic and clinical அவதானிப்புகளை வைத்துக் கொண்டு இது தான் காரணமாக இருக்கலாம் என்று கருத்து வெளியிடுவது சாதாரணமான நடைமுறை! விஞ்ஞானத்தை வாழ் நாள் தொழிலாக செய்கிரவர்களுக்கு இது விளங்கலாம், தியரிக்காக படித்தவர்களுக்கு இந்த நடைமுறையை விளக்கிப் புரிய வைப்பது கடினம் என்பதை ஏற்றுக் கொள்கிறேன்! - என் கருத்துக்கு அடிப்படையான இன்னும் சில சஞ்சிகை வெளியீடுகளை நான் மேற் கோள் காட்ட வில்லை! ஏனெனில், பின்னர் "அது நான் எனக்கு ஏற்கனவே தெரியுமே?" ஜோக் வருமே என்பதால்!🤣

இணையவனோ, எந்த மட்டுகளோ சிறந்த கருத்து அடையாளம் காட்டும் அளவுக்கு அங்கே நடந்தது வினா விடைப் போட்டியல்ல! ஒரு பொது நல விவகாரத்தில்  வேறு வகையான அபிப்பிராயம் இருப்போரின் பரிமாற்றம். இதை "என்னுடைய பப்படம் தான் பெரிசா இருக்கு!" என்ற ஈகோ பிரச்சினையாக நீங்கள் மாற்றியதால் அந்த சிறு பிள்ளைத் தனமான எதிர்பார்ப்பு! 😎

4 hours ago, பெருமாள் said:

முதலில் எழுதியதை படித்து இருந்தால் இப்படி கருத்துக்கள் வந்திருக்காது உங்களிடம் இருந்து .

பெருமாள், உங்கள் cryptic கருத்துகள் இப்போது மருதரின் கருத்துகள் போல இருக்கின்றன. என்னிடமிருந்து பதில் வேண்டுமென்றால் என்ன சொல்கிறீர்கள் என்று தெளிவாக முழு வாக்கியங்களில் எழுதுங்கள்!-இல்லையேல் என்னை மறைமுகமாகச் சுட்டிப் பதில் எழுதாமல் தவிருங்கள்!  

அலை 1, 2 இல் நீங்கள் பரப்பியது ஆதாரங்கள் இல்லாத பொய்கள், அதன் அடிப்படை சிறி லங்கா மீதான காழ்ப்புணர்வு!

இப்போது நீங்கள் சொன்னது நடந்து விட்டது என்று காட்டும் தோற்றமே உங்களுக்கு உலகின் கோவிட் நிலை பற்றி எதுவும் தெரியவில்லை எனக் காட்டுகிறது: டெல்ராவின் வரவு எல்லாவற்றையும் மாற்றி விட்டது! இதொன்றும் நீங்கள் முன்னறிவித்து உண்மையாகி விட்ட நிகழ்வல்ல!

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Eppothum Thamizhan said:

மேலைநாடுகளில் தடுப்பூசி போடும்போது அஸ்பரேட் செய்வதில்லையாமே? ஒருவேளை இந்த தடுப்பூசி தவறுதலாக ரத்த நாளங்களில் ஏற்றப்படும்போது குருதியுறைதல் ஏற்பட வாய்ப்புண்டா?

இந்த இடத்தில் குழப்பம் தரும் நோக்கில் நான் குதியுறைதல் பற்றிப் பேச வரவில்லை. AZ தடுப்புசியின் அந்த குருதியுறைதல் மிக அரிதாக ஒரு மில்லியனில் 4 பேரில் நடக்கும். இது 50 வயதுக்குட்பட்டோரில் மட்டுமே அவதானிக்கப் பட்டிருக்கிறது (சராசரி வயது 37). இதைப் பற்றி நான் தடுப்பூசி போட்டுக் கொண்டோரின் அனுபவங்கள் திரியில் எழுதியிருக்கிறேன்.

ஆனால், சுருக்கமாக: வக்சீன்கள் இரத்த நாளத்தினுள் செல்வதால் உடனே வருவதல்ல இந்தக் குருதியுறைவு. உடலினுள் சென்று, 5 அல்லது ஆறு நாட்கள் ஒரு நிர்ப்பீடனப் பொறிமுறை மூலமே இது வருகிறது. மேலும், இதை உடனே கண்டறிய ஆய்வு கூட ரெஸ்ற் இருக்கிறது - குணமாக்கும் மருந்துகளும் இருக்கின்றன.

Edited by Justin
link added

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, Justin said:

அலை 1, 2 இல் நீங்கள் பரப்பியது ஆதாரங்கள் இல்லாத பொய்கள், அதன் அடிப்படை சிறி லங்கா மீதான காழ்ப்புணர்வு!

திரிக்கு திரி நான் பொய் பரப்பியது என்று எழுதுகிறீர்கள் உங்களுக்கு மற்றவர்களை  மட்டம் தட்டுவது இனிப்பான விடயம் அந்த பொல்லாத பொய்தான்  என்ன என்று விளக்கமாக எழுதலாமே ?

என்னை மட்டும் மட்டம் தட்டவில்லை யாழையும் சேர்த்தே இங்கு ஒரு பொய் சொன்னால் அது அவியுமா ? கத்தியுடன் 24 மணிநேரமும் திரியும் மட்டுக்களை  அவமானப்படுத்துவது போல் உள்ளது உங்களது கருத்து .

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

நல்ல முயற்சி: மட்டுக்களைக் கோர்த்து விட்டால் எனக்கு ஆப்பு என்ற நினைப்புப் போல!

அலை 1,2 இல் அதிகரித்த இறப்புக்களை சிறிலங்கா மறைப்பதாக நீங்கள் சொன்னதையே பொய் என்றேன்! -எத்தனை தடவைகள் இதை மேலே எழுதி விட்டேன் ஐயா👆?

சிறிலங்கா கோவிட் நிலை தொடர்பாக பல  பொய்களுக்கு நீங்கள் ஆதாரம் இன்றியே ஆதரவு கொடுத்ததும் நடந்தது: தென்பகுதித் தொற்றாளர்களை வடக்கிற்கு அழைத்துச் சென்றதாகப் பரப்பியதும் அவற்றுள் ஒன்று (மேலே புரளிக்கு "சம்பவம் கேள்விப்பட்டேன்.." என்பதைத் தவிர வேறெதுவும் ஆதாரம் தரமுடியாத மீரா stand-up comedian ஆக வேசத்தை மாற்றி விட்டார், கவனித்தீர்களா?)

எனவே, சாராம்சமாக: காழ்ப்புணர்வை மட்டும் வைத்துக் கொண்டு பெருந்தொற்றுக் காலத்தில் உறுதியாகாத தகவல்களைப் பரப்பாதீர்கள். அவற்றினால் சிங்களவருக்கு ஒரு உரோமமும் உதிராது, ஆனால், வட கிழக்கு தமிழருக்கு உயிராபத்து சாத்தியம்!

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, satan said:

நான் எழுதியது இந்தக்கருத்துக்கு, ஏதோ இலங்கை அரசு புனிதன் என்பது போலவும் நாங்கள் சேறடிப்பது போலவும் கோஷான் எழுதியது மிகவும் தவறானது. இந்த மக்கள் மரணத்தின் விளிம்பு வரை போய் தப்பியவர்கள், மரணத்தின் மேல் நடந்து மரத்துப் போனவர்கள். நம்பிக்கையிழந்து, விரக்தியிலும், வலியிலும் வாழ்பவர்களே ஏராளம். பலவகையிலும்  மக்களை துரத்தி, துரதியடித்த அரசும் இராணுவமும், எங்களை திட்டம் போட்டு அழித்தவர்கள் காப்பாற்றுவார்கள் என்று நம்புவது கடினம். இவர்களிடம் நம்பிக்கையிழந்து, நாங்கள் ஏமாற்றப்படுகிறோம், எதிர்த்துக் கேட்க முடியாத கையறு நிலையில் உள்ளோம் என்பதால் எதையும் அவநம்பிக்கையோடே நோக்குகிறார்கள். எங்களின் உறவுகளை நினைவு கூர நீதிமன்றத்தில் தடை வாங்கியவர்கள், வெளிநாட்டினருக்கு  தாராளமாக திறந்து விட்டனர். தென்பகுதி அரசியல் வாதிகள் தடையில்லாமல் வந்து போனார்கள். இவர்கள் மேல் நம்பிக்கை வருமா? பழிவாங்கப்படுகிறோம் எனும் உணர்வு வராதா? இந்த ஆண்டு தொடக்கத்தில் ஒரு வயதானவர் ஐந்து வருடங்களுக்கு மேல் நோயுற்று இருந்து இறந்தார். உறவுகள் வந்து சேரமுதல் எறும்பு மணம் பிடித்து வருவதுபோல் இராணுவம் வந்து அவசரமாக அந்த உடலை வற்புறுத்தி எடுக்க வைத்தனர். அவ்வாறே விபத்தில் இறந்த ஒருவரது உடலை கொரோனா கண்டுபிடித்ததாக அறிவித்து அவசரமாக உறவினரை பார்க்க விடாது தடுத்தனர். மக்கள் கண்முன்னே நடந்த இந்த மாதிரியான செயல்கள் இவர்கள் மேல் இருந்த சந்தேகம், வெறுப்பு அதிகரிக்க காரணமாயிற்று. மாற்றான்தாய்  போல் இவர்கள் நம்மை நடத்துவது இது ஒன்றும் புதிதில்லை. எங்கோ ஒரு மூலையில் நடந்ததை மணந்து தேடிப்பிடித்து தடுத்தவர்களால் அன்னதான நிகழ்வை தடுக்க முடியவில்லையா? வெளிநாட்டில் உள்ள இராணுவத்தோடு நம் நாட்டு இராணுவத்தை ஒப்பிட்டு இலங்கைக்கு வக்காலத்து வாங்காதீர்கள். இந்த இராணுவம் தமிழரை அலைக்கழிக்கவென்றே எப்போதும்  அலைகிறவர்கள். அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கப்படவேண்டும். அவர்கள் காயங்கள் ஆற்றப்படவேண்டும். மக்கள் புத்திசாலிகள் அவர்கள் புலம்பெயர்ந்தோர் சொற்படி நடக்கமாட்டார்கள் என்று நான் சொல்லவில்லை, இங்கு பலமுறை பலரால் பிரஷ்தாபிக்கப்பட்டாயிற்று. இப்போ ஏதோ புதிதாய் இங்கு கருத்து பரிமாறுவதார்த்தான் மக்கள் ஊசியை புறக்கணிக்கப் போகிறார்கள் என்று அழுகிறார்கள். வெளிநாட்டிலுள்ளவர்கள் போல் விரும்பிய ஊசியை தெரிவு செய்யும் நிலையிலேயா நம்மக்கள் இருக்கிறார்கள்?  இங்கு ஊசியின் சாதக, பாதக, சொந்த அனுபவங்களை பகிர்வதன் மூலம் தெரிவு உள்ளவர்கள் சரியானதை தெரிவு செய்ய உதவியாக இருக்கும். இதனால் நம் மக்கள் ஊசியே போட மாட்டார்கள் என்று சிந்தித்தால் இங்கு எந்த செய்தியையும் பகிர முடியாதல்லவா?  

நீங்கள் சொல்வதில் எனக்கு மாற்று கருத்து இல்லை. 

இலங்கை அரசு புனிதம், நீங்கள்தான் சேறடிப்பதாக நான் சொல்லவில்லை.

உங்களை போலவே அதே இனவாத அரசின் கீழ் வாழ்ந்து, இன ஒடுக்கல், உயிர் ஆபத்தை எதிர் கொண்டவந்தான் நானும்.

உங்கள் கருத்தை நீங்கள் சொல்வதில் தவறேதும் இல்லை. 

ஆனால் பெருந்தொற்று சமயத்தில் எமது முதல் இலக்கு மக்கள் என்பதாக இருக்க வேண்டும்.  

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள அரசின் எல்லா கோர முகத்தையும் கண்டவர்கள் மக்கள். எம்மை எப்படியெப்படியெல்லாம் அழிக்கலாமோ அத்தனையையும் கையாண்டவன் அவன். நாங்கள் வாழ விரும்பி இந்த ஊசியை போடுகிறானோ என்று சந்தேகப்படுவோரும் உண்டு, ஊசியைப்போட்டு காப்பாற்றிவிட்டு வேறொரு வழியில் கொல்லுவான் என்போரும் உண்டு, சாகிறது என்று முடிவாகிப்போச்சு ஊசியைப் போடுவிட்டு சாவோம் என்போரும் உண்டு, இல்லை சாகமுதல் சுதந்திரமாய் அனுபவிக்க முடிந்ததை அனுபவித்து விட்டு சாவோம் என்றிருப்போரும் உண்டு. நான் யாரையும் ஊக்கப்படுத்தவில்லை, அதே நேரம் யாரையும் தடுக்கவுமில்லை. போன உயிர் திரும்பி வராது, சந்தர்ப்பத்தை நழுவ விட வேண்டாம் என்று மட்டும் சொல்வேன். ஆனா நம்ம அரசியற் தலைவர்கள் இந்த மக்களுக்கு ஒரு ஆற்றுப்படுத்தலை ஏற்படுத்திக்க கொடுக்க வேண்டும். இளைஞரை அழைத்து அவர்களுக்கு உளவள ஆலோசனை வழங்கி, பொறுப்புள்ளவர்களாக உருவாக்க ஏதாவது அமைப்புகளை உருவாக்கலாம். வெறும் வாக்குக்காக மட்டும் பாவிப்பது அந்த மக்களுக்கு செய்யும் துரோகம்.  நம்ம சமுதாயம் உயர, சிந்திக்க வழிவகுக்காது. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.