Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடையை நீடிக்க பிரித்தானியா தீர்மானம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடையை தொடர்ந்து நீடிப்பதற்கு பிரித்தானியாவின் உள்துறை அமைச்சு தீர்மானித்துள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது.

No description available.

பிரித்தானியாவில் 2000 ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ், மேன்முறையீட்டு ஆணைக்குழுவின் தீர்மானத்தின் பின்னர் பிரித்தானியாவின் உள்துறை அமைச்சின் செயலாளரினால் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்மூலம் ஐரோப்பிய வலய நாடுகள் உள்ளிட்ட உலகளாவிய ரீதியில் 30 நாடுகளுக்கும் மேல் தமிழீழ விடுதலைபுலிகள் அமைப்பிற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடையை நீடிக்க பிரித்தானியா தீர்மானம் | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்+

இல்லாத இயக்கத்திற்கு ஏனடாப்பா தடை? எல்லாம் பூகோள அரசியல்.
 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐக்கிய இராச்சியத்தின் புலிகள் அமைப்பு மீதான தடையை வரவேற்கும் இலங்கை.

(செய்திப்பிரிவு)

ஐக்கிய இராச்சியத்தின் 2000 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் தமிழீழ விடுதலைப் புலிகள் (எல்.ரீ.ரீ.ஈ) ஒரு பயங்கரவாத அமைப்பாக தடை செய்யப்படுவதற்கு ஐக்கிய இராச்சிய உள்துறைச் செயலாளர் தீர்மானித்திருக்கின்றமை குறித்து இலங்கை அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

தடைசெய்யப்பட்ட அமைப்புக்களின் மேன்முறையீட்டு ஆணைக்குழுவின் தீர்ப்பைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட  உள்துறைச் செயலாளரின் தீர்மானமானது, ஐக்கிய இராச்சியத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தடையை நீக்குமாறு கோரிக்கை விடுத்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பொன்றின் விண்ணப்பத்தை நிராகரிக்கின்றது.

எனவே, ஐரோப்பிய ஒன்றியப் பிராந்தியம் உட்பட உலகெங்கிலும் உள்ள ஏனைய 30 க்கும் மேற்பட்ட நாடுகளைப்  போலவே, தமிழீழ விடுதலைப் புலிகள் ஐக்கிய இராச்சியத்திலும் ஒரு தடைசெய்யப்பட்ட அமைப்பாக விளங்குகின்றது.

பொதுமக்கள் மற்றும் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களை இலக்கு வைத்த கொடூரங்கள்  மற்றும் அட்டூழியங்கள், உலகளாவிய மற்றும் பிராந்தியப் பாதுகாப்பை பாதிக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் ஏனைய குற்றச் செயல்களில் ஈடுபடுதல் ஆகியவற்றின் காரணமாக இந்த நாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு ஆரம்பத்தில் தடை செய்யப்பட்டது.

உலகளாவிய ரீதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தடையை தொடர்ந்தும் தக்கவைத்துக்கொள்வதானது, சர்வதேச வலையமைப்பின் மூலம் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதியுதவியளித்தல், வன்முறைத் தீவிரவாதத்தை நோக்கி இளைஞர்களை தீவிரப்படுத்துதல், இன ஒற்றுமையை சீர்குலைத்தல் மற்றும் அவர்கள் செயற்படும் ஒவ்வொரு  நாட்டிலும் ஒருங்கிணைந்த வாழ்க்கையை சீர்குலைத்தல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடும் குறித்த அமைப்பின் எஞ்சிய நபர்களால் தொடர்ந்தும் ஏற்படுத்தப்படும் அச்சுறுத்தலை எதிர்ப்பதனை அங்கீகரிப்பதாகும்.

பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய போராட்டத்தில் ஐக்கிய இராச்சியம் மற்றும் அனைத்து அரசாங்கங்களுடனான கூட்டுறவை இலங்கை அரசாங்கம் பாராட்டுவதுடன், குடிமக்களின் உயிருக்கு அச்சுறுத்தலையும்,  உலகளாவிய மற்றும் பிராந்திய அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு ஆபத்தையும் விளைவிக்கும் பயங்கரவாதம் மற்றும் வன்முறைத் தீவிரவாதத்தைத் தணிப்பதற்கான அனைத்து முயற்சிகளிலும் ஐக்கிய இராச்சியத்துடன் இணைந்து பணியாற்றுவதற்கு உறுதிபூண்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐக்கிய இராச்சியத்தின் புலிகள் அமைப்பு மீதான தடையை வரவேற்கும் இலங்கை | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

எந்த வகையிலும் பிரித்தானிய நலன்களுக்கு எதிராக செயற்படாத இயக்கம் மீது தடை. அதுவும் தற்போது செயலில் இல்லாத இயக்கம்.

ஆனால்.. பிரித்தானியா உட்பட.. மேற்குலக நலன்களுக்கு எதிராக செயற்பட்ட தலிபான்களோடு.. ஹட்டாரில் பேச்சு. 

நல்ல வேடிக்கையான உலகமப்பா. 

நமக்குள் ஒற்றுமையும் இல்லை.. இருந்த பலத்தை பாதுகாக்கவும் தெரியல்லை. அதுதான்.. வாறவன் போறவன் எல்லாம் எங்களை பதம்பார்க்கிறான். 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, நன்னிச் சோழன் said:

இல்லாத இயக்கத்திற்கு ஏனடாப்பா தடை? எல்லாம் பூகோள அரசியல்.
 

30 வருடங்களுக்கு மேலாக சிறிலங்கா அரசு புலிகளை வைத்து தானே வருமானம் ஈட்டியது.

புலிகளை அழித்து விட்டோம் என மார்தட்டியவர்கள் தான் தான் புலித்தடை வேண்டும் என்கிறார்கள். விடுதலைப்புலிகள் அழிந்து விட்டார்கள் என கொண்டாடிய தமிழர்கள் தான் பத்து வருடங்கள் சென்ற பின்னரும் புலிவன்ம கட்டுரைகள் எழுதி கொண்டிருக்கின்றார்கள்.

இதிலிருந்து என்ன தெரிகின்றது???? அவர்களுக்கு புலி இருந்தாலும் பணம் வேண்டும்.புலி செத்தாலும் பணம் வேண்டும்

மக்கள் நலனும் மண்ணாங்கட்டியும்.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, பிழம்பு said:

வன்முறைத் தீவிரவாதத்தை நோக்கி இளைஞர்களை தீவிரப்படுத்துதல், இன ஒற்றுமையை சீர்குலைத்தல் 

58 minutes ago, குமாரசாமி said:

விடுதலைப்புலிகள் அழிந்து விட்டார்கள் என கொண்டாடிய தமிழர்கள் தான் பத்து வருடங்கள் சென்ற பின்னரும் புலிவன்ம கட்டுரைகள் எழுதி கொண்டிருக்கின்றார்கள்.

 

இந்தச்  சொல் தொடர் சிங்கள அரசுக்கும், தமிழ் அரசியல் தலைவர்களுக்கும் ரொம்பப் பொருந்துகிறது ஆனால் அவர்களுக்கு வரவேற்பும், பாராட்டும். யாரை நோவது? கதிரையில் இருப்பவர்கள் அப்படிப்பட்டவர்கள்.  தங்களை நிஞாயப்படுத்த உண்மையைகூட்டிலேற்றவேண்டுமே! தாலிபான்களாடு பேச்சுவார்த்தை, தாங்களே அழித்துவிடடோம் என்ற இயக்கத்துக்கு தடை. இது அவர்களது இயலாத்தன்மை

சாமியார்! நீங்கள் எத்தனைதடவை, எவ்வளவுதான் எழுதினாலும் இவர்கள் மாறப்போவதில்லையென பிடிவாதம் பிடித்தவர்கள். எங்கள் வலி அவர்களுக்கு வேடிக்கையும், எசமான் விசுவாசமும் சேர்ந்து தடுக்கிறது. இங்கு பலர் விதண்டாவாதம் செய்து இப்போ மாற்றிக்கொண்டிருக்கிறார்கள், சிலர் நடித்துக்கொண்டிருக்கிறார்கள், அவர்களுக்கும் அடி விழும்போது தானாக தெரிந்து கொள்வார்கள். நாமும் இவர்களோடு விதண்டாவாதம் புரிவதால் நமது நேர, சக்தி  விரயம். தெரியாதவர்கள் ஒரு சொல்லில் தேடல் ஆரம்பித்து தெரிந்து கொள்வார்கள். அவர்களுக்காக எழுதுவோம் பகிருவோம் மாற்ற முடியாததை ஏற்றுக்கொள்வோம்.

  • கருத்துக்கள உறவுகள்+
1 hour ago, குமாரசாமி said:

30 வருடங்களுக்கு மேலாக சிறிலங்கா அரசு புலிகளை வைத்து தானே வருமானம் ஈட்டியது.

புலிகளை அழித்து விட்டோம் என மார்தட்டியவர்கள் தான் தான் புலித்தடை வேண்டும் என்கிறார்கள். விடுதலைப்புலிகள் அழிந்து விட்டார்கள் என கொண்டாடிய தமிழர்கள் தான் பத்து வருடங்கள் சென்ற பின்னரும் புலிவன்ம கட்டுரைகள் எழுதி கொண்டிருக்கின்றார்கள்.

இதிலிருந்து என்ன தெரிகின்றது???? அவர்களுக்கு புலி இருந்தாலும் பணம் வேண்டும்.புலி செத்தாலும் பணம் வேண்டும்

மக்கள் நலனும் மண்ணாங்கட்டியும்.

 

எல்லாரும் தந்தன் தேவைக்கு எங்களைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறாங்கள்... 

இந்த உலகத்திலேயே ஈழத்தமிழனை மாதிரி ஒரு கேவலமான இனம் இருந்ததில்லை. தன் இனத்தை அழிக்க தானே குழி தோண்டிய ஓர் இனம்! தூ...

இன்னமும் சிலதுகள் தோண்டிக்கொண்டுதான் இருக்குதுகள். மொத்தமா அழிக்கிற மாதிரி தோண்டினால் ஒரே உச்சலில் எல்லாரும் போயிடலாம்.😥

 

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, நன்னிச் சோழன் said:

இன்னமும் சிலதுகள் தோண்டிக்கொண்டுதான் இருக்குதுகள்

கொப்பில இருந்துகொண்டு அதே கொப்பை தறிக்கிற கூட்டமப்பா இது. 

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, நன்னிச் சோழன் said:

அவனுகளைப் பிடித்தே தொங்கிக் கொண்டிருக்கிறீங்களே?

உலக வரை படத்தில் புள்ளி போன்றது இலங்கை, அதில் தமிழர் எத்தனை சதவீதம்? அவர்களில் புலிகள் எத்தனை? அதை அழிக்க புறப்பட்ட சிங்கள கூலிப்படை எத்தனை வீதம்? முடியலை, இன்றும் ஒவ்வொரு நாட்டுக்கும் புலிகளை அழிக்க ஆயுதபலம், ஆட்பலம், ஆலோசனை, கடன் என்று உதவி புரிந்ததற்கு நன்றி சொல்லி முடியல, இதுக்குள்ள முஸ்லீம்கள்: எங்களின் உதவி இல்லாமலிருந்திருந்தால் புலிகளை வென்றிருக்க முடியாது என்று புலம்புகிறார்கள், இருந்தும் புலிகளில் இருந்து ஒருவன் வெளியேறி துரோகம் இளைத்தபடியாலேயே முப்பது வருடங்களாக வெற்றிகொள்ளமுடியாததை, உலகநாடுகளே முடியாது என்று சொன்னதை, ஆசிய வல்லரசால் முடியாததை முடித்துவைத்தார்கள். இவ்வளவுக்கும் நாடு கடனில மூழ்கி கரையேற முடியாமல் தத்தளிக்குது. அவர்களின் வீரத்தை, தியாகத்தை ஏற்றுக்கொள்ள  முடியாதவர்கள் அவர்களில்  குறைபிடித்து  தீரர் என்று தம்மைத் தாமே தட்டி மகிழ்கிறார்கள். அவர்களால் முடிந்தது அவ்வளவுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

1980 களில் தமிழர்களின் போராட்டத்தினை நசுக்க இங்கிலாந்து நாட்டின் உதவியுடன் உருவாக்கப்பட்ட ஒரு நாசகாரப் படைதான் சிங்களக் காவல்த்துறையின் விசேட அதிரடிப்படை. வடமாகாணத்தவர்களுக்கு இவர்கள்பற்றி அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் கிழக்கில் வாழ்பவர்களுக்கும், குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் வாழும் தமிழர்களுக்கு அதிரடிப்படையென்றால் யாரென்று நன்றாகவே தெரியும், ராணுவம் எமது பகுதியில் நிலைநிறுத்தப்பட்டால் எவ்வளவு நல்லது என்று ஏங்கும் அளவிற்கு இந்த அதிரடிப்படையினர் கொடூரமானவர்கள். கிளர்ச்சியடக்கும் படைப்பிரிவு என்கிற பெயரில் அப்பாவிகளைக் கொன்று, மக்களை அச்சத்தில் தொடர்ச்சியாக வைத்திருப்பதன் மூலம் அவர்களின் போராட்ட உணர்வினை மழுங்கடிக்கலாம் என்று இங்கிலாந்தின் ராணுவ ஆலோசகர்களால் உருவாக்கப்கட்டுப் பயிற்றப்பட்டதே இந்தப்படை. இங்கிலாந்து ராணுவத்தில் வட அயர்லாந்து கிளர்ச்சியடக்கும் சிறப்புப் படைகளில் பணியாற்றிய பல முன்னாள் அதிகாரிகள் கீனி மீனி எனும் நாசகாரக் கூலிப்படையினரை உருவாக்கி இலங்கை ராணுவத்திற்குத் தமிழர்களைக் கொல்ல உதவியவர்கள். பல சந்தர்ப்பங்களில் இலங்கை ராணுவத்தின் உலங்குவானூர்திகளைச் செலுத்தியும், தேடியழிக்கும் நடவடிக்கைகளில் நேரடியாகப் பங்குபற்றியும் திட்டமிடல்களை வழங்கியும் தமிழர் இனவழிப்பில் நேரடியாகப் பங்காற்றியவர்கள் இந்த இங்கிலாந்து ராணுவத்தினர். 

இந்த இங்கிலாந்து கூலிப்படைகள் இலங்கை மற்றும் நிக்கராகுவா ஆகிய நாடுகளில் ஆடிய நரவேட்டைகள் போர்க்குற்றங்களாக ஆதாரத்துடன் வெளிக்கொணரப்பட்டிருக்கின்றன. ஆனால், இதுபற்றி இங்கிலாந்து அரசோ அல்லது எந்தவொரு மனிதவுரிமை அமைப்போ வாய்திறக்கவில்லை. இதைவிட 2009 காலப்பகுதியின் இங்கிலாந்தின் பிரதமர் பிறவுனோ, டேவிட் மில்லிபாண்ட் எனும்  இங்கிலாந்தின் வெளியுறவுச் செயலாளரோ அல்லது அக்காலத்தின் இங்கிலாந்தின் பாதுகாப்பு அமைச்சரான லியாம் பொக்ஸோ தமிழ் இனவழிப்பினைத் தடுக்கவோ அல்லது அதுபற்றிப் பேசவோ,  இலங்கையரசின் இனவழிப்பை இறுதிவரை கண்டிக்கவோ விரும்பவில்லை. மேலும், இங்கிலாந்துப் பாதுகாப்பு அமைச்சரின் செயலாளர் இலங்கை அரசுக்கு ராணுவ உபகரணங்களைக் கொள்வனவு செய்துகொடுக்கும் கைங்கரியத்திலும் ஈடுபட்டிருந்தவர். மேலும் ஜோன் ஹோம்ஸ் எனும் ஐ நா வின் இங்லிலாந்து அதிகாரிகூட தமிழர்கள் அதிகளவில் கொல்லப்படுவதை ஐ நா வெளியிடக்கூடாது, அது இலங்கையின் ராணுவ முயற்சிகளைப் பாதிக்கும், ஆகவே அடக்கி வாசியுங்கள் என்று மனிதவுரிமை ஆணையாளர் நவிப்பிள்ளைக்கு நேரடியாக அழுத்தம் கொடுத்தவர். இவர்கள் எல்லோருமே தாம் செய்வதும், இலங்கை செய்வதும் என்னவென்று தெரிந்தே அன்று செய்தார்கள். இன்றும் அப்படித்தான்.

போர்க்குற்றவாளிகளுக்கு ஆதரவும், ஆலோசனையும், ஆயுதமும் , பயிற்சியும் வழங்கிய இங்கிலாந்து பிரபுக்கள் இன்றுவரை அவர்களைக் காத்தே வருகிறார்கள். ஆனால் 12 வருடங்களுக்கு முன்னர் அழிக்கப்பட்ட ஒரு விடுதலை இயக்கத்திற்கு இன்னமும் தடை விதிக்கிறார்கள். 

இனிமேல் இங்கு சிலர் வந்து "பார்த்தீர்களா? உங்களை இன்னமும் அவர்கள் பயங்கரவாதிகள் என்றே நினைக்கிறார்கள். நீங்கள் உரிமைபற்றிப் பேசுவதே இதற்குக் காரணம். நீங்கள் மேற்குலகை விமர்சிப்பதே இதற்குக் காரணம். ஆகவே வாயை மூடிக்கொண்டு உங்கள் அடையாலத்தினை இழந்து, சிங்களவராக மாறுங்கள், அதன்பிறகு எந்தப் பிரச்சினையும் உங்களுக்கு இருக்காது" என்று அறிவுரை கூறுவார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
21 hours ago, நன்னிச் சோழன் said:

 

எல்லாரும் தந்தன் தேவைக்கு எங்களைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறாங்கள்... 

இந்த உலகத்திலேயே ஈழத்தமிழனை மாதிரி ஒரு கேவலமான இனம் இருந்ததில்லை. தன் இனத்தை அழிக்க தானே குழி தோண்டிய ஓர் இனம்! தூ...

இன்னமும் சிலதுகள் தோண்டிக்கொண்டுதான் இருக்குதுகள். மொத்தமா அழிக்கிற மாதிரி தோண்டினால் ஒரே உச்சலில் எல்லாரும் போயிடலாம்.😥

 

முற்றிலும் உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்

மற்றைய நாடுகளுக்குள் அடாவடியாக புகுந்து, வளங்களை கொள்ளையடித்து, நிர்வாகங்களை குலைத்து, அடிபணிய மறுத்தவர்களை கொலைசெய்த ,அராஜகத்தை அறிமுகப்டுத்திய நாடு சொன்னால் சரியாதானிருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்+
On 4/9/2021 at 01:11, satan said:

உலக வரை படத்தில் புள்ளி போன்றது இலங்கை, அதில் தமிழர் எத்தனை சதவீதம்? அவர்களில் புலிகள் எத்தனை? அதை அழிக்க புறப்பட்ட சிங்கள கூலிப்படை எத்தனை வீதம்? முடியலை, இன்றும் ஒவ்வொரு நாட்டுக்கும் புலிகளை அழிக்க ஆயுதபலம், ஆட்பலம், ஆலோசனை, கடன் என்று உதவி புரிந்ததற்கு நன்றி சொல்லி முடியல, இதுக்குள்ள முஸ்லீம்கள்: எங்களின் உதவி இல்லாமலிருந்திருந்தால் புலிகளை வென்றிருக்க முடியாது என்று புலம்புகிறார்கள், இருந்தும் புலிகளில் இருந்து ஒருவன் வெளியேறி துரோகம் இளைத்தபடியாலேயே முப்பது வருடங்களாக வெற்றிகொள்ளமுடியாததை, உலகநாடுகளே முடியாது என்று சொன்னதை, ஆசிய வல்லரசால் முடியாததை முடித்துவைத்தார்கள். இவ்வளவுக்கும் நாடு கடனில மூழ்கி கரையேற முடியாமல் தத்தளிக்குது. அவர்களின் வீரத்தை, தியாகத்தை ஏற்றுக்கொள்ள  முடியாதவர்கள் அவர்களில்  குறைபிடித்து  தீரர் என்று தம்மைத் தாமே தட்டி மகிழ்கிறார்கள். அவர்களால் முடிந்தது அவ்வளவுதான்.

அதுதான் ஈழத்தமிழனின் சிறப்புக் கூற்று. திருந்தாத உயிரினங்கள். அவர்களின் பிள்ளைகளாவது நல்லதாக( மண் பற்று) வாழ்ந்தால் நன்று... இல்லையேல் குலத்தளவே ஆகுமாம் குணம் என்பதற்கு இலக்கணமாக வாழ்வார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இதே போன்றதொரு நிலை வெளிநாட்டில் முக்கியமாய் இங்கிலாந்தில் இங்கிலாந்து மக்களுக்கு எதிராக நடக்காத அமைப்புக்கு  முஸ்லீமுக்கு  ஏற்பட்டால் என்ன நடக்கும் ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.